என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    “சினிமா ஆசையில் இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்” என்று நடிகை இலியானா கூறியுள்ளார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    நடிகை இலியானா அளித்த பேட்டி வருமாறு:-

    “சினிமா எனது உயிர் போன்று இருக்கிறது. ஆனால் அதிலேயே மூழ்கி விடாதே என்று எனது இதயம் சொல்கிறது. இதயம் சொல்வதைத்தான் நான் கேட்கிறேன். சினிமாவே உலகம் என்று இருக்க மாட்டேன். சினிமா நிறைய பெண்கள் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    சினிமாவில் நடித்து பெரிய கதாநாயகியாக உயர வேண்டும் என்று வெறியோடு வந்த பல இளம் பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை. அந்த பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி, வாழ்க்கையையே தொலைத்து விட்டு நிற்பதை நேரில் பார்த்து இருக்கிறேன். அவர்களை பார்த்து என்னை பக்குவப்படுத்தி உள்ளேன்.

    சினிமாவில் எந்த திட்டமிடுதலும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறேன். பட வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன். இல்லாவிட்டால் கவலைப்பட மாட்டேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய பட உலகில் 7 ஆண்டுகள் நிலைத்து இருந்தேன். அதன் பிறகு இந்திக்கு வந்தேன். தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பது எளிதானது. ஒரு படத்தை மூன்று, நான்கு மாதங்களில் எடுத்து விடுவார்கள். இந்தியில் தொழில் நுட்ப பணிகளுக்கு நிறைய காலம் எடுத்துக்கொள்கிறார்கள்.

    சினிமாவில் நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்ற எதிர்பார்ப்பெல்லாம் எனக்கு இல்லை. அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியாத அளவுக்கு வாழ்க்கை பயணத்தை நகர்த்த வேண்டும். எனக்கு 30 வயது ஆகிறது. வயதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. வயது என்பது வெறும் நம்பர்தான். 23 வயதானவர் போல் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் சொல்லும்போது மகிழ்கிறேன்.

    திருமணம் பற்றி திட்டமிடவில்லை. நேரம் வரும்போது அது நடக்கும். நானும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனது சொந்த வாழ்க்கை பற்றி பேச விரும்பவில்லை. ஆண்ட்ரூ மிகச்சிறந்த மனிதர். என்னையும் சிறந்த பெண்ணாக மாற்றி இருக்கிறார். அவரிடம் உண்மை இருக்கிறது.”

    இவ்வாறு இலியானா கூறினார்.
    இந்தி நடிகர் ஓம்புரி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
    இந்தியில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் ஓம்புரி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் குடும்பத்துடன் அவர் வசித்து வந்தார்.

    படப்பிடிப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய ஓம்புரிக்கு நேற்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.

    நடிகர் ஓம்புரி 1950-ம் ஆண்டு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். ‘காஷிராம் கோட்வால்’ என்ற மராத்தி படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த படம் 1976-ம் ஆண்டு வெளியானது. 1980-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆக்ரோஷ்’ இந்தி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டார்.

    1982-ம் ஆண்டு வெளியான ‘ஆரோகன்,’ 1983-ம் ஆண்டு வெளியான ‘அர்த் சத்யா’ ஆகிய 2 படங்களிலும் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் கிடைத்தன. பாவ்னி பவாய், சட்காட்டி, மிர்ச்சோலாம் தாராவி, நசூர், ராட் உள்ளிட்ட பல படங்கள் ஓம்புரியின் நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்தன.

    அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அக்‌ஷய்குமார், அமீர்கான் ஆகியோருடன் இணைந்து நடித்து இருக்கிறார். கமல்ஹாசன் தனது ‘அவ்வை சண்முகி’ படத்தை இந்தியில் ‘சாச்சி’ என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார். இந்த படத்தில் ஓம்புரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ‘ஹேராம்’ படத்திலும் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார்.

    ஜெயராம் நடித்து தமிழில் சமீபத்தில் வெளியான ‘செண்பக கோட்டை’ படத்தில் சாமியார் கதாபாத்திரத்தில் வந்தார். ‘காந்தி’ ஆங்கில படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மை சன் த பென்டாஸ்டிக், த பரோல் ஆபீசர், ஈஸ்ட் இஸ் ஈஸ்ட் ஆகிய ஆங்கில படங்களிலும் நடித்து இருக்கிறார். சிட்டி ஆப் ஜாய், த ஹோஸ்ட் அன்ட் த டார்க்னஸ் ஆகிய ஹாலிவுட் படங்களில் ஜாக் நிக்கேல்சன், வால் கில்மர், ஜூலியா ராபட்ஸ், டாம் ஹாங்க்ஸ் ஆகியோருடன் நடித்து உலக அளவிலும் பேசப்பட்டார்.

    தற்போது 4 படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். பத்மஸ்ரீ விருது, சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட ஏராளமான விருதுகளையும் பெற்று இருக்கிறார்.

    ஓம்புரி மறைவு இந்தி பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தார்கள். ஓம்புரி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்பட பல தலைவர்களும், அமிதாப் பச்சன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களும் ஓம்புரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஓம்புரி எனது நண்பர் என்பதில் இத்தனை ஆண்டுகாலம் பெருமை கொண்டு இருந்தேன். அவர் மறைந்து விட்டார் என்று எப்படி சொல்ல முடியும்.? அவர் நடித்த கதாபாத்திரங்கள் மூலமாக எப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

    தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    “பஞ்சாபில் பிறந்து இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து 45 வருட காலம் தன் வாழ்க்கையை கலைத்துறைக்கு அர்ப்பணித்தவர் ஓம்புரி. இந்திய படங்களில் மட்டுமல்ல ஆங்கில படங்களிலும் நடித்து நமக்கு பெருமை சேர்த்தவர் ஆவார். நாடக துறை வளர்ச்சிக்கும் அரும் சேவை செய்தவர்.

    பத்மஸ்ரீ, சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளாலும் கவுரவிக்கப்பட்டவர். அவரது மறைவு திரையுலகம் மற்றும் நாடக துறைக்கு மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறோம்.”

    இவ்வாறு இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    பொங்கல் தினத்தில் 'பைரவா' படத்துடன் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படத்தின் டீசரும் வெளியாக உள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    பொங்கல் பண்டிகையில் சிறு பட்ஜெட் மற்றும் அதிக பொருட்செலவில் தயாரான ஆறு அல்லது ஏழு படங்கள் திரைக்கு வரும்   என்று எதிர்பார்க்கப்பட்டது. சிறு பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் அவை திரைக்கு   வருவது தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இறுதியில் 'பைரவா', 'கோடிட்ட இடங்களை நிரப்புக', 'புரியாத புதிர்' ஆகிய 3  படங்கள் மட்டுமே வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஜி.வி.பிரகாஷ்-கிர்த்தி கர்பண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'புரூஸ்லி' படமும் பொங்கல் ரேஸில் இருந்து விலகி பிப்ரவரி  மாதம் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதுதவிர 'ஈட்டி' புகழ் ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் புதிய படத்தின்  பர்ஸ்ட் லுக்கை பொங்கலுக்கு வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்த்திருந்தது.

    இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் - சுரபி  நடிப்பில்  உருவாகி வரும் 'அடங்காதே' படத்தின் டீசர் பொங்கலுக்கு ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகிரீன்  புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ‘அடங்காதே’  படத்தை சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். ஜி.வி.யுடன் முக்கிய கேரக்டரில்  சரத்குமார் நடிக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷ் தற்போது 'அடங்காதே', '4ஜி', 'சர்வம் தாளமயம்' மற்றும் இரண்டு பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார்.  விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பைரவா' பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், ஜி.வி.பிரகாஷும் தனது படத்துடன்  களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
    மதன் கார்க்கி எழுதி டி.இமான் இசையில், இந்தியாவின் முதல் "பாலிண்ட்ரோம் சாங்" தமிழில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த விக்டர் ஜெயராஜ் தற்போது 'வினோதன்' படத்தை இயக்கி   வருகிறார். பிரபு தேவாவின் பிரபுதேவா ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஐசரி கணேசின் மகன் வருண் கதாநாயகனாக   அறிமுகமாகிறார். வருணுக்கு ஜோடியாக 'பரதேசி' புகழ் வேதிகா நடிக்கிறார். மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கை   குறித்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு, மதன் கார்க்கி பாடல்களை எழுத டி.இமான் இசையமைக்கிறார்.

    இப்படத்தில், இமான்-மதன் கார்க்கி இணைந்து ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டுள்ளனர். அதாவது, ஒரு  பாடலை  முழுவதுமாக பாலிண்ட்ரோம் வார்த்தைகளைக் கொண்டு மதன் கார்க்கி எழுதியுள்ளார். உதாரணமாக "MADAM"  "விகடகவி"  "தாத்தா", "பாப்பா", "காக்கா", "மாமா", "குடகு" உள்ளிட்ட பல வார்த்தைகளை பயன்படுத்தி பாட்டு எழுதப்பட்டுள்ளது.

    இந்தியாவிலேயே பாலிண்ட்ரோம் முறையில் பாட்டு வெளியாவது இதுவே முதல் முறை. மேலும் இந்த பாடலையும்  பாலிண்ட்ரோம்  முறையிலேயே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதாவது இன்று "7-1-17" மாலை "7:1:17"  மணியளவில் "டூபாடூ"  இணையதளத்தில் பாடல் வெளியிடப்பட உள்ளது.
    ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், பிறகு பட அதிபராக மாறி, "அன்புள்ள ரஜினிகாந்த்'', "வைதேகி காத்திருந்தாள்'' உள்பட சில படங்களை தயாரித்தார்.
    ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், பிறகு பட அதிபராக மாறி, "அன்புள்ள ரஜினிகாந்த்'', "வைதேகி காத்திருந்தாள்'' உள்பட சில படங்களை தயாரித்தார்.

    தூயவனுக்கு கல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, இரண்டு பெரிய படக் கம்பெனிகள் அவரை அணுகி, "பால்குடம்'' கதையை படமாக்கும் உரிமையைக் கேட்டன. பெரிய தொகை தரவும் முன்வந்தன.

    அதே சமயம், "பால்குடம்'' கதையை படமாக்க வேண்டும் என்ற எண்ணம், அதை நாடகமாக நடத்தி வந்த ஏவி.எம்.ராஜனுக்கும் இருந்தது. எனவே, பெரிய தொகைகளுக்கு ஆசைப்படாமல், தன் கதையை நாடகமாக அரங்கேற்றிய நன்றிக்கு அறிகுறியாக, படமாக்கும் உரிமையை ஏவி.எம்.ராஜனுக்கே தூயவன் தந்தார்.

    பால்குடத்தை ஏவி.எம்.ராஜன் படமாகத் தயாரித்தபோது, வசனம் எழுதும் வாய்ப்பை தூயவனுக்கே வழங்கினார். படத்தில் ஏவி.எம்.ராஜனும், புஷ்பலதாவும் நடித்தனர். இந்தப்படம் 50 நாட்கள் ஓடியது.

    தூயவன் கதை எழுதுவதில் மட்டும் அல்ல, வசனம் எழுதுவதிலும் கெட்டிக்காரர் என்பதை பட உலகத்தினர் தெரிந்து கொண்டனர். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஜெய்சங்கர் - ஜெயபாரதி நடித்த "புதிய வாழ்க்கை'', சிவாஜிகணேசன் நடித்த "மனிதருள் மாணிக்கம்'', "ஜெயலலிதா- முத்துராமன் நடித்த "திக்குத் தெரியாத காட்டில்'' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.

    அந்தக் காலக்கட்டத்தில், ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் பலவற்றில் ஜெய்சங்கர் நடித்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கர் படங்கள் வந்து கொண்டிருந்தன. அவர் படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். "முடிசூடா மன்னன்'', "கல்யாணமாம் கல்யாணம்'', "எங்களுக்கும் காலம் வரும்'', "கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன'' ஆகியவை, அவற்றில் சில.

    தன் படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதுமாறு தூயவனுக்கு சாண்டோ சின்னப்பா தேவர் அழைப்பு அனுப்பினார்.

    அதைத்தொடர்ந்து "கோமாதா என் குலமாதா'', "மாணவன்'', "ஆட்டுக்கார அலமேலு'', "அன்புக்கு நான் அடிமை'', கமலஹாசன் நடித்த "தாயில்லாமல் நான் இல்லை'', ரஜினிகாந்த் நடித்த "தாய் மீது சத்தியம்'', "தாய்வீடு'', "அன்னை ஓர் ஆலயம்'' முதலான படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். இந்தப் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடின.

    முக்தா பிலிம்ஸ், மறைந்த வேணு செட்டியாரின் ஆனந்தி பிலிம்ஸ் ஆகியவற்றுக்காக பல படங்களுக்கு வசனம் எழுதினார். முக்தா சீனிவாசன் டைரக்ஷனில் சிவாஜிகணேசன் நடித்த "தவப்புதல்வன்'' படம் 100 நாட்கள் ஓடி வசன கர்த்தா தூயவனுக்கு புகழ் தேடித்தந்தது. ரஜினிகாந்த் நடித்த "பொல்லாதவன்'' படத்துக்கும் தூயவன் வசனம் எழுதினார்.

    ஜாவர் சீதாராமன் எழுதிய "பணம், பெண், பாசம்'' என்ற கதையை நடிகர் முத்துராமன் படமாகத் தயாரித்தார். அந்தப் படத்துக்கு தூயவன் வசனம் எழுதினார்.

    நடிகர் முத்துராமன், தூயவனின் நெருங்கிய நண்பர். அவர், படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று மரணம் அடைந்தார்.

    இதேபோல், தூயவனுக்கு ஆதரவு அளித்து வந்த சின்னப்பா தேவரும் திடீர் என்று காலமானார். இந்த இரு மரணங்களும், தூயவனை வெகுவாக பாதித்தன.

    இதன் பிறகு, வசனம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு, படத்தயாரிப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

    நண்பர் சக்திவேலுடன் இணைந்து "எஸ்.டி.கம்பைன்ஸ்'' என்ற பட நிறுவனத்தை தொடங்கி, "விடியும் வரை காத்திரு'' என்ற படத்தை தயாரித்தார். இதன் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை கே.பாக்யராஜ் ஏற்றதுடன் கதாநாயகனாகவும்

    நடித்தார்.நகைச்சுவை கலந்த கதாநாயகனாக பாக்யராஜ் முத்திரை பதித்து வந்த காலக்கட்டத்தில், "ஆன்டி ஹீரோ''வாக - அதாவது வில்லன் மாதிரியான கதாபாத்திரத்தில் "விடியும் வரை காத்திரு'' படத்தில் நடித்தார். அதை ரசிகர்கள் ஏற்காததால், படம் சுமாராகவே

    ஓடியது.கார்த்திக் கதாநாயகனாக நடிக்க "கேள்வியும் நானே பதிலும் நானே'' படத்தை தூயவன் தயாரித்தார். இந்தப்படம் சரியாக ஓடவில்லை.

    எம்.ஜி.ஆர். நடிகராக இருந்த காலக்கட்டத்தில் அவருக்காகவே ஒரு கதையைத் தயாரித்து வைத்திருந்தார், தூயவன். அந்தக் கதை எம்.ஜி.ஆருக்கும் பிடித்திருந்தது. அவர் தேர்தலில் வென்று முதல்-அமைச்சர் ஆகிவிட்டதால், அதன் பிறகு நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார்.

    அந்தக் கதையை, ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு மாறுதல்கள் செய்து அவரிடம் சொன்னார் தூயவன். கதை அவருக்கு பிடித்துப்போயிற்று. "படம் எடுங்கள். நான் கால்ஷீட் தருகிறேன்'' என்றார்.

    அந்தப்படம்தான் "அன்புள்ள ரஜினிகாந்த்.'' எஸ்.டி.கம்பைன்ஸ் பேனரில் தூயவனும், துர்க்கா தமிழ்மணியும் தயாரித்தனர். தூயவன் வசனம் எழுதினார். நட்ராஜ் டைரக்ட் செய்தார்.

    1984 ஆகஸ்டு 2-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

    இதுகுறித்து, தூயவன் மனைவி ஜெய்புன்னிசா கூறியதாவது:-

    "ரஜினி சார் நடித்த "தாய்வீடு'', "அன்னை ஓர் ஆலயம்'', "அன்புக்கு நான் அடிமை'', "ரங்கா'' முதலிய படங்களுக்கு என் கணவர் வசனம் எழுதினார். அப்போது இருவரும் நட்புடன் பழகினர். என் கணவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒரு படம் பண்ணிக்கொடுக்க சூப்பர் ஸ்டார் சம்மதித்தார். அப்போது என் கணவர் சொன்ன கதைதான் "அன்புள்ள ரஜினிகாந்த்.''

    கதை ரஜினிக்கு பிடித்து விட்டது. பண விஷயம் பற்றி எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் உடனே கால்ஷீட் கொடுத்தார்.

    படம் தயாரிக்க பணம் வேண்டுமே என்ற கேள்வி எழுந்தபோது, ஜி.வி.சி.ஆர்.நடராஜன் என்ற பைனான்சியரிடம் என் கணவரை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.

    உடனடியாக நடராஜன், பட உரிமையை வாங்கிக்கொண்டு ரூ.25 லட்சம் கொடுத்தார். "கணபதி வேல் முருகன் கம்பைன்ஸ்'' என்ற பேனரில், "அன்புள்ள ரஜினிகாந்த்'' தயாராகியது. ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோருடன், குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்தார். இப்படம் நூறு நாட்கள் ஓடியது.

    சூப்பர் ஸ்டார் ரஜினி சார் செய்த உதவியை எங்கள் குடும்பம் என்றும் மறவாது.''

    இவ்வாறு ஜெய்புன்னிசா கூறினார்.

    ஆர்.சுந்தரராஜன் டைரக்ஷனில் தூயவன் தயாரித்த "வைதேகி காத்திருந்தாள்'' அற்புதமான படம். இதில், அடிதடி இல்லாத குணச்சித்திர வேடத்தில் விஜயகாந்த் வாழ்ந்து காட்டினார்.

    விதவைப் பெண்ணாக நடித்த ரேவதி, "அழகு மலராட...'' நடனக் காட்சியில் மெய்சிலிர்க்கச் செய்தார்.

    1984 அக்டோபர் 23-ந்தேதி வெளியான இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

    விஜயகாந்த் - ராதிகா நடித்த "நானே ராஜா நானே மந்திரி'', கவுண்டமணி கதாநாயகனாக நடித்த "தலையாட்டி பொம்மைகள்'' ஆகிய படங்களும் தூயவன் தயாரித்தவை.

    தூயவன் கடைசியாகத் தயாரித்த படம் "உள்ளம் கவர்ந்த கள்வன்.'' இந்தியில் வெளியான "சிட்சோர்'' படத்தின் உரிமையைப் பெற்று, அக்கதையை தமிழில் தயாரித்தார்.

    படம் முடிவடையும் தருணத்தில், நாகப்பட்டினத்துக்கு சென்றிருந்தபோது, 1987 ஜுலை 11-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு, திடீரெனக் காலமானார்.

    அப்போது அவருக்கு வயது 41 தான்.

    தூயவன்-ஜெய்புன்னிசா தம்பதிகளுக்கு பாபு தூயவன் (இக்பால்) என்ற மகனும், யாஸ்மின் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாபு தூயவன் "பி.காம்'' படித்தபின் திரைப்படக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்.

    டெலிவிஷன் சீரியல்களை தயாரிப்பதில் புகழ் பெற்றவர். "அபர்ணா'' அவர் உருவாக்கிய டெலிவிஷன் சீரியல்களில் ஒன்று.

    ஜெய்புன்னிசா தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார். 
    அறிமுக நடிகர் குரு அரவிந்த், சாமந்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் 'சூரத்தேங்காய்' படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்.
    சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகிறார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும் தான். தானுண்டு தனது வேலையுண்டு என அமைதியாக இருக்கும் குரு அரவிந்த் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்.

    குரு அரவிந்தின் மாமன் மகள் சாமந்தி (கதாநாயகி) அதே ஊரில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். சாமந்திக்கு குரு அரவிந்த் மீது காதல். அவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் நாயகன் குரு அரவிந்த் நாயகியைக் கண்டுகொள்ளாமல் சதாசர்வகாலமும் குடித்துக் கொண்டே இருக்கிறார்.

    அந்த ஊரின் கவுன்சிலர் தனது நான்கு தம்பிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சொத்து அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சிறு வயதில் குரு அரவிந்தின் தந்தையிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் கவுன்சிலர் அவரது தந்தையைக் கொன்று விடுகிறார். இதனை நேரில் பார்க்கும் குரு அரவிந்த் இதன் காரணமாக மிகுந்த அமைதியுடன் தனது வேலைகளைப் பார்த்து வருகிறார்.

    ஒருகட்டத்தில் குரு அரவிந்த்தின் அம்மா குடியை விட்டுவிடும்படி மகனிடம் கெஞ்சுகிறார். அம்மாவின் வார்த்தைகள் குரு அரவிந்தின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குடியை விட்டு விடுகிறார்.

    மேலும், சாமந்தியிடமும் நன்றாகப் பேசி பழகுகிறார். இருவரது வீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சாமந்தியின் பெற்றோர் இடத்தை கவுன்சிலர் தனது தம்பிகளுடன் சேர்ந்து அபகரிக்கப் பார்க்கிறார். இதனால் குரு அரவிந்துக்கும், கவுன்சிலருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.

    இந்த மோதலில் கவுன்சிலர் மற்றும் அவரது தம்பிகளை எதிர்த்து குரு அரவிந்த் வெற்றி பெற்றாரா? சாமந்தியைக் கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் குரு அரவிந்த் நன்றாக நடித்திருக்கிறார். நடனம், ஆக்ஷன் காட்சிகளிலும் நன்றாக செய்திருக்கிறார். துடுக்குத்தனம் நிறைந்த பெண்ணாக நடித்திருக்கும் நாயகி சாமந்தி தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். நாயகன் குரு அரவிந்த்தின் உறவினராக படம் முழுவதும் வரும் துணை நடிகர் ஜெயமணி படத்தில் காமெடி நடிகர் இல்லாத குறையைப் போக்கி படத்தின் கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார்.

    சக்தியின் இசையில் படத்தின் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. குடி தொடர்பாக இளைஞர்களின் வாழ்வு சீரழிவதை இயக்குனர் ஸ்ரீநிவாஸ் நன்றாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால் பெரும்பாலான காட்சிகளில் அழுத்தம் இல்லை. இதனால் படத்தில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுகிறது.

    மொத்தத்தில் 'சூரத்தேங்காய்' பலம் குறைவு.
    நடிகை தமன்னா நடிப்பில் உருவாகவிருக்கும் படமொன்றை இயக்குனர் கவுதம் மேனன் தயாரிக்கவிருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் ஹிட்டடித்த படம் 'பெல்லி சூப்புலு'. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் கவுதம் மேனன் கைப்பற்றியிருக்கிறார்.

    இந்நிலையில் பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் தமன்னா நடிப்பது உறுதியாகியுள்ளது. 'ராஜதந்திரம்' தயாரிப்பாளர் செந்தில் வீராசாமி இப்படத்தை இயக்க, கவுதம் மேனன் தனது ஒன்றாக எண்டெயின்மெண்ட் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

    தற்போது இப்படத்தின் நாயகன் மற்றும் தொழிநுட்பக் குழுவினரை தேர்வு செய்யும் பணியில் படக்குழு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமன்னா தற்போது 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்', 'பாகுபலி-2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர 'குயின்' இந்தி ரீமேக்கில் நடிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
    நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான தனது காதலை காதணி வடிவில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதுகுறித்த விவரத்தை கீழே பார்ப்போம்.
    நயன்தாரா பற்றிய காதல் ‘கிசுகிசு’க்களுக்கு பஞ்சமே இல்லை. என்றாலும் அவர் எதைப்பற்றியும் கவலைப்படுவது இல்லை. படத்தில் நடிப்பதில்தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    ஆனாலும் அவருடைய காதல் பற்றியும் அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் கசிந்து கொண்டுதான் இருக்கிறது. முன்பு நயன்தாரா, பிரபுதேவாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியானபோது காதலர் பெயரை நயன்தாரா கையில் பச்சை குத்திக்கொண்டார் என்ற தகவல் பரவியது. அது பற்றிய படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சமீபத்தில் பழைய காதலர்கள் ஒரு ஓட்டலில் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை இருவரும் உறுதி செய்யவில்லை.

    இந்த நிலையில், பிரபுதேவாவுக்காக கையில் பச்சை குத்திக் கொண்ட நயன்தாரா இப்போது காதில் ‘வி’ வடிவம் உள்ள தங்க கம்மலை அணிந்திருக்கிறார். நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இருவரும் தீவிரமாக காதலிக்கிறார்கள். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். விரைவில் திருமணம்... என்று புதுப்புது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    என்றாலும், இது பற்றி ஆம்...என்றோ... இல்லை...என்றோ இருவரும் வாய் திறக்கவில்லை. இப்போது, விக்னேஷ் சிவனின் பெயரின் முதல் ஆங்கில எழுத்தான ‘வி’ வடிவ காதணியை நயன்தாரா அணிந்திருக்கும் செய்தி நிச்சயம் விக்னேஷ் சிவனை காது குளிர மகிழ வைக்கும் வி‌ஷயம் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
    இனிகோ பிரபாகர் திறமையான நடிகர் என இயக்குனர் சீனு ராமசாமி பாராட்டியிருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    பாரா சரா பிலிம்ஸ் சார்பில் பரீத் தயாரித்து இயக்கும் படம் ‘வீரையன்’. இதில் இனிகோ பிரபாகர், ஷைனி, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடல்களை இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட இயக்குநர்கள் சற்குணம், எஸ்.ஆர்.பிரபாகரன் பெற்றுக் கொண்டனர்.

    விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி பேசும் போது, “இந்த மாதிரியான படங்கள் தான் தமிழ் சினிமாவில் பல புதிய சக்திகள் பிறக்கும் வழியை திறக்கிறது. பல திறமையான கலைஞர்களை வழங்குவதன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சுகிறது.இனிகோ பிரபாகரன், தமிழ் சினிமாவில் இன்று இருக்கக்கூடிய முன்னணி கதாநாயகர்கள் அத்தனை பேருக்கும் நிகரான ஒரு நடிகர். எனக்கும் இனிகோ பிரபாகரனை வைத்து ஒரு படம் இயக்கும் ஆசை இருக்கிறது. கண்டிப்பாக அது நடக்கும்” என்றார்.

    இயக்குனர் சற்குணம், “‘வீரையன்’ பாடல்கள் யதார்த்தமாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் பரீத், மிகுந்த ரசனைக்காரர். இந்த கதையை சொன்னது போலவே எடுத்திருக்கிறார். சொந்தக்காசில் படம் எடுக்கிற தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள் தான் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய மிகப்பெரிய கலைஞர்கள். வீரையன் படத்தின் இயக்குநர் பரீத், படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவரும் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
    நடிகர் விஷால் மீதான சஸ்பெண்டை திரும்பப் பெற முடியாது என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகர் விஷால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு வார பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடு குறித்து சில கருத்துக்களை கூறி விமர்சனம் செய்து இருந்தார்.இதற்கு கண்டனம் தெரிவித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், நடிகர் விஷாலை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு கடந்த 2-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘நடிகர் விஷால் தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்தால், அவரை இடைநீக்கம் செய்த உத்தரவு மறுபரிசீலனை செய்யப்படும்’ என்று கூறினார். இதற்கு விஷால் தரப்பு கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அவரது வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    கடந்த 4-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, விஷால் சார்பில் வருத்தம் தெரிவித்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘வார பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் யாருடைய மனதையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. என் மனதில் பட்ட தனிப்பட்ட கருத்துக்களை மட்டுமே தெரிவித்து இருந்தேன். எனவே, என்னுடைய கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய இந்த மனுவை ஏற்றுக்கொண்டு, ஐகோர்ட்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு 6-ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது அதில் '' மன்னிப்பு கேட்ட பின்னரும் தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் விஷால் மீண்டும் விமர்சித்ததாகவும், அதனால் விஷால் மீதான சஸ்பெண்டை திரும்பப் பெற முடியாது'' என்றும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருந்தது.

    இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் மீதான அடுத்தகட்டயை விசாரணையை வருகின்ற 10-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
    ராம் சரண், பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் 'சூப்பர் போலீஸ்' திரைப்படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்.
    அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனராக இருக்கும் ஹீரோ ராம்சரண் எங்கு அநியாயம் நடந்தாலும் உடனே தட்டிக் கேட்கிறார். இதன் காரணமாக 21 முறை வெவ்வேறு ஊர்களுக்கு ராம்சரண் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். எனினும் டிரான்ஸ்பருக்கு அஞ்சாத ராம்சரண் போராட்டம் நடத்தி போக்குவரத்தைக் தொந்தரவு செய்ததாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வை அடித்து விடுகிறார். இதனால் 22-வது முறையாக மும்பைக்கு ராம்சரண் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்.

    இதற்கிடையில் தந்து தோழியின் திருமணத்திற்காக நியூயார்க்கிலிருந்து ஹீரோயின் பிரியங்கா சோப்ரா மும்பை வருகிறார். திருமணம் முடிந்து தான் தங்கியிருக்கும் அறைக்கு பிரியங்கா சோப்ரா திரும்பும்போது வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் இறங்குகிறார்.

    அங்கு ஒரு கும்பல் பெட்ரோலில் கலப்படம் செய்கிறது. இதனை அந்த வழியாக செல்லும் துணை கலெக்டர் தட்டிக்கேட்க அவரை அந்தக் கும்பல் உயிருடன் எரித்து விடுகிறது. இதனைப் பார்க்கும் பிரியங்கா சோப்ரா போலீசுக்கு போன் செய்து இந்த கொலை நடந்ததாக தெரிவிக்கிறார்.

    இந்த வழக்கு ராம்சரண் கைக்கு வருகிறது. இதுகுறித்து விசாரணை செய்யும் ராம்சரண் கொலை தொடர்பாக பிரியங்கா சோப்ராவை சந்தித்து விளக்கம் கேட்கிறார். ஆரம்பத்தில் ராம்சரண் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பிரியங்கா சோப்ரா, ராம்சரணின் அறிவுரையால் மனம் மாறி தனக்குத் தெரிந்த விவரங்களை ராம்சரணிடம் தெரிவிக்கிறார்.

    இதற்கிடையில் போலீசில் உண்மையை சொன்னதற்காக பிரியங்கா சோப்ராவை அந்த கும்பல் தொந்தரவு செய்கிறது. இதனால் ராம்சரண், பிரியங்கா சோப்ராவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்துக்கொள்கிறார். பின்னர், பிரியங்கா சோப்ரா-ராம்சரண் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.

    ஒரு கட்டத்தில் இது ஒரு சாதாரண வழக்கு இல்லை, ஆயில் மாபியா என்ற மிகப்பெரிய நெட்வொர்க் கும்பல் இந்த வழக்குக்குப் பின்னால் இருக்கிறது என்ற உண்மை ராம்சரணுக்குத் தெரிய வருகிறது. இதனால் ஆயில் மாபியா நெட்வொர்க் குறித்த விவரங்களை ராம்சரண் சேகரிக்க ஆரம்பிக்கிறார்.

    இறுதியில் அந்த ஆயில் மாபியா கும்பலை ராம்சரண் ஒழித்தாரா? பிரியங்கா சோப்ரா-ராம்சரண் இடையிலான காதல் என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கதாநாயகன் ராம்சரண் தனது பாணியில் நடிப்பு, நடனம், ஆக்ஷன் என எதிலும் குறைவைக்கவில்லை. ஏசிபி வேடத்திற்கு ராம்சரண் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கதாநாயகி பிரியங்கா சோப்ரா தனது வழக்கமான நாயகி ரோலை நிறைவாக செய்திருக்கிறார்.

    இயக்குனர் அபூர்வா லாகியா ஒரு ஆக்ஷன் படத்தை விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கிறார். ஆர்.ஜே.குருராஜின் ஒளிப்பதிவில் பாடல்கள், காட்சிகள் அனைத்தும் கலர்புல் ரகம். வழக்கம்போல இல்லாமல் அமர் முஹில், ஆனந்த் ராய் ஆனந்த், சிரந்தன் பத், மீட் புரோஸ் அஞ்சன் என இப்படத்துக்கு நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.

    காட்சிகள், திரைக்கதை ஆகியவற்றில் ஒருசில குறைகள் இருந்தாலும் ராம்சரணின் ஆக்ஷன் காட்சிகளுக்காக இப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

    மொத்தத்தில் 'சூப்பர் போலீஸ்' ஆக்ஷன் மசாலா.
    விழாவில் தனது மருமகள் ஐஸ்வர்யா ராயை நடிகர் அமிதாப்பச்சன் சிரிக்க வைத்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் ஐஸ்வர்யாராய் ரன்பிர் கபூருடன் நெருக்கமாக நடித்தார். இதனால் அமிதாப்பச்சன் அவரது மருமகள் ஐஸ்வர்யாராயுடன் கோபமாக இருக்கிறார் என்று கூறப்பட்டது.

    ஆனால் அதில் அந்த வித உண்மையும் இல்லை என்பதை, சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விழா ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

    அந்த சம்பவம் இது தான்...மும்பையில் சமீபத்தில் ‘ஸ்டார் டஸ்ட்’ விருது வழங்கும் விழா நடந்தது. இதில் அமிதாப்பச்சன், ஜெயாபச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, கரண்ஜோஹர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் ஐஸ்வர்யா ராயும், அமிதாப்பச்சனும் அருகருகே உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். அப்போது அமிதாப்பச்சன் அடித்த ஜோக்கை கேட்ட ஐஸ்வர்யா தன்னை அடக்கிக்கொள்ள முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தார். அமிதாப்பச்சன் தொடர்ந்து ஜோக் அடிக்கவே முகத்தை மூடிக்கொண்டு நீண்ட நேரம் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். அமிதாப்பச்சன் பின் வரிசையில் இருந்த கரன்ஜோஹரையும் பார்த்து ஜோக் அடிக்கவே ஐஸ்வர்யா ராய் சிரிப்பை அடிக்கவே முடியாமல் தவித்தார்.

    சமீபத்தில் கணவர் அபிஷேக்பச்சன், மகள்ஆரத்யா ஆகியோருடன் ஐஸ்வர்யாராய் வெளிநாடு சென்று புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார். இதனால் ஐஸ்வர்யாராயுடன் அமிதாப் குடும்பத்தினர் கோபம் என்ற வதந்தி புஸ்வாணம் ஆகி இருக்கிறது.
    ×