என் மலர்
'ஏகே 57' படத்தில் ஆபத்தான ஸ்டன்ட்களில் டூப் இல்லாமல் அஜித் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்த தகவலை பார்க்கலாம்.
'வீரம்', 'வேதாளம்' படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் 'ஏகே 57' படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது அஜித்-சிவா கூட்டணி பல்கேரியாவில் படத்தை எடுத்து வருவதாக தகவல் வந்துள்ளது.
நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் 'ஏகே 57' படத்தில், ஆபத்தான ஸ்டன்ட்களை டூப் ஏதுமின்றி அஜித்தே செய்வது வருகிறாராம். குறிப்பாக தனது ரசிகர்களை கவரும் வகையில், ஒரு முக்கிய காட்சியில் சுமார் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்து அஜித் அசத்தியதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் அஜித் நடித்துள்ள படங்களிலேயே 'ஏகே 57' படமே அதிக பொருட்செலவில் சுமார் ரூ.100 கோடியை தாண்டி உருவாக்கப்பட்டு வருவதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, வழக்கம்போல 'ஏகே 57' படத்திலும் அஜித்திற்கு ஒரு மாஸ் தொடக்கம் அமையும் என்பதில் சந்தேகமில்லை. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'ஏகே 57' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'ஏகே 57' படத்தின் பர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நடைபெறும் உலக திரைப்பட விழாவில் பஞ்சு அருணாசலம் ஆவண படம் இன்று திரையிடப்படுகிறது. இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.
சென்னை: திருஅருள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திரைக் கதாசிரியரும், டைரக்டரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் பற்றிய ஆவணபடத்தை தயாரித்துள்ளது.
`தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி` என்ற தலைப்பில் இது தயாராகி இருக்கிறது. அவரது ஆவணபடம், சென்னை உலகத் திரைப்பட விழாவில் இன்று ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படுகிறது. கோவாவில் 27.11.16 அன்று நடைபெற்ற உலகப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் இது முதன் முறையாகத் திரையிடப்பட்டு வரவேற்பு பெற்றது.
இந்த ஆவணப்படத்தை கோ.தனஞ்ஜெயன் இயக்கியுள்ளார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லலிதா ஜெயானந்த் - எஸ்.உமா மகேஸ்வரி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
பஞ்சு அருணாசலம் 45 திரைப்படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். 90 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இவற்றில் 70 படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 50 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தவை. இது மட்டுமல்ல 150 திரைப்படங்களில் 300 பாடல்களுக்கு மேல் எழுதியவர். மேலும் 45 படங்களை தயாரித்தவர்.
1958-இல் `கவியரசு` கண்ணதாசனின் உதவியாளராகத் தனது திரைப்பணியை தொடங்கிய பஞ்சுஅருணாசலம், கடந்த 47 வருடங்களில் சாதனைகள் பல படைத்தவர். இளைய ராஜாவை சினிமாவுக்கு 1976-இல் தனது தயாரிப்பான ‘அன்னக்கிளி’ யில் அறிமுகம் செய்தது இவரது மகத்தான சாதனைகளில் ஒன்று.
இந்த ஆவணப் படத்தில், பஞ்சுஅருணாசலம் கடந்து வந்த பாதை, குடும்பம், அவரது திரைப்படப் பிரவேசம், சந்தித்த தோல்விகள், வெற்றிகள், சாதனைகள், என அனைத்து விஷயங்களும் உள்ளன. 95 நிமிடங்கள் ஓடும் இதில், சாதனையாளர்கள் பலர், பஞ்சுவுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை உணர்வு பூர்வமாக விவரிக்கின்றனர். அவரது திரைப்படங்கள் பலவற்றிலிருந்து காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
பஞ்சுஅருணாசலத்தின் திரைப்படங்களைப் போல, இந்த ஆவணப்படத்தில், 35 பெரிய சாதனையாளர்கள் அவரது படங்கள் பற்றியும், தங்களது வாழ்க்கையில் பஞ்சுவின் பங்களிப்பு பற்றியும் பேசுகிறார்கள். இதில் ரஜினிகாந்த், பாரதிராஜா, மகேந்திரன், வி.சி.குகநாதன், சிங்கிதம் சீனிவாசராவ், பி.லெனின், கங்கை அமரன், `முக்தா` வி.சீனிவாசன், ஆர்.சுந்தர்ராஜன், சுந்தர் சி., ஏ.வெங்கடேஷ், சத்யராஜ், பிரபு, குஷ்பு சுந்தர், ராதிகா உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

வெளி இடங்களில் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க கற்றுக்கொடுத்து மகன்களை வளர்க்குமாறு நாட்டிலுள்ள பெற்றோருக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூர், டெல்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சில வாலிபர்கள் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்களிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், ஆபாச சைகைகள் காட்டியதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, சர்வதேச அளவில் அவப்பெயரையும், இந்தியப் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான பட்டிமன்றத்துக்கு வித்திட்டுள்ளது.
இந்நிலையில், மும்பையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம், இச்சம்பவம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ‘இதுபோன்ற செயல்பாடுகள் முற்றிலும் தவறானது. என்னைப் பொருத்தவரையில் எல்லாப் பெண்களும் மரியாதைக்குரியவர்கள் தான். பெண்களுக்கு உரிய மரியாதையை அளித்து அவர்களிடம் எப்படி பழக வேண்டும்? என்பதை தங்கள் மகன்களுக்கு ஒவ்வொரு தாயும், தந்தையும் சிறுவயதில் இருந்தே கற்றுத்தந்து வளர்க்க வேண்டும்’ என்று கூறினார்.
‘பெண்கள் எப்போதுமே என் இதயத்துக்கு மிக நெருக்கமாக இருந்து வந்துள்ளார்கள். எனது மகள், எனது தாயார் மற்றும் நான் சந்தித்த எல்லாப் பெண்களுமே என் இதயத்துக்கு மிக நெருக்கமாக இருந்து வந்துள்ளார்கள்.
பெண்கள் இல்லாவிட்டால், நாம் இங்கிருக்க முடியாது. இல்லத்தரசிகள், பணிக்கு செல்லும் பெண்கள் உள்பட உலகில் வாழும் எல்லா பெண்களுக்கும் உரிய மதிப்பும், மரியாதையும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
இந்த பூமியில் மிக மரியாதைக்குரியவர்களாக பெண்களை மதிக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்தி தீரவேண்டியதற்கான காலம் வெகு சமீபத்தில் நெருங்கி விட்டதாகவே நான் நினைக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.
இந்த மோசமான சம்பவத்திற்கு ஏற்கனவே பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் பல்வேறு நடிகர்- நடிகையர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமீர்கான் நடிப்பில் வெளியான 'தங்கல்' திரைப்படம் இந்தியா முழுவதும் சுமார் ரூ.330 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் 'தங்கல்'. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாக இப்படத்தில் அமீர்கானின் நடிப்பும், படத்தின் திரைக்கதையும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டுப்படுகிறது. படம் வெளியாகிய முதல் 16 நாட்களில் 'தங்கல்' இந்தியாவில் மட்டும் ரூ.330 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் சல்மான்கான் நடிப்பில் வெளியான 'சுல்தான்', 'பஜ்ரங் ஜி பைஜான்' அமீர்கான் நடிப்பில் வெளியான 'பிகே' ஆகிய படங்கள் 300 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இந்திய அளவில் பாக்ஸ்ஆபீசில் அமீர்கானின் 'தங்கல்', 'பிகே', 'தூம் 3' முதல் மூன்று இடங்களையும், சல்மான்கானின் 'பஜ்ரங் ஜி பைஜான்', 'சுல்தான்', 4, 5-வது இடத்திலும் உள்ளது.

சூர்யா, கார்த்தி இணைந்து நடத்தும் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி கோயம்புத்தூரில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்த தகலை கீழே காணலாம்.
சூர்யா, கார்த்தி இணைந்து நடத்தும் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி கோயம்புத்தூரில் 3 நாட்கள் நடைபெறுகிறது. தன்னிகரில்லா நடிகர் சிவகுமாரின் 75–வது பிறந்தநாளை சென்னையில், அவர் வரைந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி விழா நடத்தி சூர்யா மற்றும் கார்த்தி தந்தையின் வாழ்த்துகளை பெற்றனர். இந்த கண்காட்சியை பல்லாயிரகணக்கான பொதுமக்களும், சினிமா மற்றும் பிரபலங்களும் கண்டுகளித்தனர்.
இதனைதொடர்ந்து, வரும் 14,15,16 தேதிகளில் கோயம்புத்தூர் மக்கள் கண்டுகளிக்கும் விதமாக அங்கும் கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சி 14–ம் தேதி மாலை 5 மணி முதல் 8 மணி வரையும், 15,16 தேதிகளில் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணிவரையும் நடைபெறுகிறது.
சூர்யா, கார்த்தி இணைந்து நடத்தும், சிவகுமாரின் சித்திரச்சோலை ஓவியகண்காட்சியில் தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை சிவகுமார் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி நடைபெறும் இடம்:
G.D. அரங்கம்,
எண்: 734 பிரசிடன்ட் ஹால்,
அவினாசி ரோடு,
கோயம்புத்தூர்

தண்ணீர் பிரச்சனையை மையமாகக் கொண்டு தயாராகி வரும் நயன்தாராவின் 'அறம்'. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
மீஞ்சூர் கோபி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படம் 'அறம்'. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா 'அறம்' படத்தில் கலெக்டராக நடிக்கிறார்.
இப்படத்தில், உலகின் முக்கியப் பிரச்சனையாக கருதப்படும் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசப்படுவதாக தெரிகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க முக்கிய வேடங்களில் 'காக்கா முட்டை' புகழ் விக்னேஷ், ரமேஷ், வேல.ராமமூர்த்தி, ராமதாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
முன்னதாக 'அறம்' படத்தின் பர்ஸ்ட் லுக் நயன்தாரா பிறந்தநாளில் வெளியானது. இதுதவிர நயன்தாரா 'கொலையுதிர் காலம்', 'இமைக்கா நொடிகள்', 'டோரா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
'என்னை நோக்கி பாயும் தோட்டா' படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் கவுதம் மேனன் அடுத்ததாக, 'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரமை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. 'துருவ நட்சத்திரம்' குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் அப்படத்தில் விக்ரம் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில், கவுதம் மேனன் - 'பிரேமம்' புகழ் நிவின் பாலியுடன் புதிய படத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக கவுதம், நிவினிடம் கதை கூறியதாகவும், இதில் நிவின் பாலி இருவேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், நிவினுக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்க கவுதம் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தில் விக்ரமை வில்லனாக நடிக்கவைக்க முயற்சி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு பின்னர் கவுதம், விக்ரமுடன் இணைந்து 'துருவ நட்சத்திரம்' படத்தை இயக்க உள்ளாரா? அல்லது விக்ரம்-நிவின் பாலி கூட்டணியில் புதிய படத்தை இயக்க உள்ளாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் விஜயகுமாரி. பள்ளியில் படிக்கும்போது, சினிமா என்றாலே அவருக்கு எட்டிக்காய் கசப்பு! அப்படிப்பட்டவர் சினிமாவில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

விஜயகுமாரியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம். தந்தை ராமசாமி கவுண்டர். தாயார் தங்கலட்சுமி அம்மாள்.
விஜயகுமாரிக்கு ஒரு அக்காள், ஒரு தங்கை.
விஜயகுமாரி மிகவும் அமைதியானவர். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். பள்ளிக்கூடத்தில் நடைபெறும் விளையாட்டுப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி எதிலும் கலந்து கொள்வதில்லை. தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருப்பார்.
ஒரு சமயம், விஜயகுமாரியை பள்ளி ஆசிரியை அழைத்து, "இந்த வருடம் பள்ளி ஆண்டு விழாவில் நீ கட்டாயம் நடனம் ஆடவேண்டும். தட்டிக் கழிக்க எந்தக் காரணமும் சொல்லக்கூடாது'' என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.
ஆட மறுத்தால், ஆசிரியை தன்னை நிச்சயம் பெயிலாக்கி விடுவார் என்று விஜயகுமாரி பயந்தார். என்றாலும், எந்த நடனத்தை எப்படி ஆடுவது என்று புரியவில்லை. இதுபற்றி ஆசிரியையிடம் கூற, "வேதாள உலகம்'' படத்தில் பத்மினி ஆடிய "வாசமுள்ள பூப்பறிப்பேனே'' என்ற நடனத்தை ஆட பயிற்சி அளித்தார்கள்.
பள்ளி ஆண்டு விழாவில் பயந்து கொண்டேதான் ஆடினார், விஜயகுமாரி. ஆனால் நடனம் சிறப்பாக இருந்ததாகக் கூறி, பரிசும் வழங்கினார்கள்!
ஒரு வாரம் கழிந்தது. விஜயகுமாரியை ஆசிரியை அழைத்தார். "நீ அழகாக இருக்கிறாய். ஆகவே சினிமாவில் நடிக்க முயற்சி செய். சிறந்த நடிகையாக வருவாய்'' என்றார்.
அவர் மீது விஜயகுமாரிக்கு ரொம்பகோபம். காரணம், அவருக்கு சினிமா என்றாலே பிடிக்காது! அம்மா சினிமாவுக்கு அழைத்துப் போனால், அழுதுகொண்டே போவார். படம் பார்க்கும்போது, தூங்கி விடுவார்!
ஆனால் ஆசிரியை விட்டபாடில்லை. `சினிமாவில் நடி. வாழ்க்கையில் முன்னேறலாம்' என்று உபதேசித்தபடி இருந்தார்.
இதனால் மெல்ல மெல்ல, விஜயகுமாரி மனதில் சினிமா ஆசை துளிர்விட ஆரம்பித்தது.
ஒரு நாள் தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, "அப்பா! நான் சினிமாவில் நடிக்க வேண்டும்!'' என்று தந்தையிடம் கூறினார். அவ்வளவுதான். அப்பா `பளார்' என்று விட்ட அறையில், விஜயகுமாரியின் கன்னம் வீங்கிவிட்டது!
"உன்னை பள்ளியில் ஆடவிட்டதே தவறு. சினிமா கேட்கிறதா, சினிமா! இனிமேல் நீ பள்ளிக்குப் போகவேண்டாம்!'' என்று கோபத்துடன்
கூறினார்.அன்று விஜயகுமாரி சாப்பிடவில்லை. அழுதுகொண்டே இருந்தார். காய்ச்சல் வேறு வந்துவிட்டது.
அதை பார்த்துவிட்டு அவர் அம்மாவும் அழ ஆரம்பித்துவிட்டார்.
அந்தக் காலத்தில் சில குடும்பங்களில் யாருக்காவது உடல் நலம் இல்லை என்றால், டாக்டரைக் கூப்பிடுவதற்குப் பதில் ஜோதிடரைக் கூப்பிடுவார்கள்!
விஜயகுமாரியின் அப்பா ஒரு ஜோதிடரை அழைத்தார். விஜயகுமாரியின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்து, "சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள்'' என்ன செய்யலாம் என்று ஜாதகத்தைப் பார்த்து சொல்லுங்கள்'' என்றார்.
ஜாதகத்தை ஆராய்ந்த ஜோசியர், "உங்கள் மகள் நிச்சயமாக சினிமாவில் நடிப்பாள். பேரும் புகழும் பெறுவாள்'' என்று அடித்துச்
சொன்னார்.ஏவி.எம். விளம்பரம்
அந்த சமயத்தில் பத்திரிகைகளில் ஏவி.எம். நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று பிரசுரமாகியிருந்தது. "புது முகங்கள் தேவை. போட்டோவுடன் விண்ணப்பிக்கவும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த விளம்பரத்தை, பெற்றோரிடம் காண்பித்தார், விஜயகுமாரி.
அப்பா, அம்மா இருவரும் கலந்து பேசி, மகள் விருப்பத்துக்கு தடை போடவேண்டாம் என்று முடிவு செய்தார்கள். விஜயகுமாரியை போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று சில படங்கள் எடுத்து, ஏவி.எம். நிறுவனத்துக்கு தபாலில் அனுப்பி வைத்தார்கள்.
இதன் பிறகு நடந்தது பற்றி விஜயகுமாரி கூறுகிறார்:-
"நான் தீவிர அம்மன் பக்தை. எங்கள் ஊர் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வனபத்திரகாளி அம்மனையும், எங்கள் குல தெய்வம் முருகனையும் தினம் தினம் வேண்டிக் கொண்டிருந்தேன், ஏவி.எம். ஸ்டூடியோவில் இருந்து கடிதம் வரவேண்டும் என்று! எப்போதும் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் தபால் காரரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.
ஒருநாள் ஏவி.எம்.மிலிருந்து கடிதம் வந்தது. அதில் எங்களை ஏவி.எம்.மிற்கு வரும்படி அழைத்திருந்தார்கள். எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
நானும், என் பெற்றோரும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றோம். அங்கிருந்து ஏவி.எம். ஸ்டூடியோவிற்கு சென்றோம்.
அங்கு மானேஜர் வாசுமேனன் அவர்களைப் போய்ப் பார்த்தோம். வாசுமேனன் என்னைப் பார்த்ததும், "போட்டோவில் பெரிய பெண் போல் தெரிகிறாய். நேரில் சின்னப் பெண்ணாக இருக்கிறாயே!'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
பிறகு, "உனக்கு டான்ஸ் ஆடத்தெரியுமா?'' என்று கேட்டார். எனக்கு தெரிந்த அந்த ஒரே நடனம் - பள்ளியில் ஆடியதுதான். அந்த நடனத்தை நானே பாடிக்கொண்டு ஆடினேன்.
"சரி. ஊருக்குப் போங்கள். நாங்கள் மறுபடியும் கடிதம் போடுகிறோம்'' என்று வாசுமேனன் கூறினார்.
எங்களுக்கு ஒரே குழப்பம். `என்ன நடக்குமோ' என்ற கவலையுடன் ஊருக்குத் திரும்பினோம். எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று என் பெற்றோர்கள் நினைத்தனர். "இனிமேல் ஏவி.எம்.மிலிருந்து கூப்பிட மாட்டார்கள். நீ பள்ளிக்குப் போய் படி. ஒருவேளை ஏவி.எம்.மிலிருந்து கடிதம் வந்தால் நாம் போவோம்'' என்று சமாதானம் சொல்வது போல சொல்லி, என்னை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.''
இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.

'பாகுபலி-2' படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த 'பாகுபலி-2' படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நேற்று முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் இப்படம் தொடர்பாக தனது உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து பிரபாஸ் '' 'பாகுபலி' படத்திற்காக வேலை செய்யத் தொடங்கி 5 ஆண்டுகள் முடிந்து விட்டது. படக்குழுவினர் அனைவரும் தற்போது எனது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஆகிவிட்டனர்.
இந்த பிரமாண்ட படைப்பில் என்னை இணைத்த ராஜமௌலி, ஷோபு, பிரசாத் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடன் நடித்த நடிக, நடிகையர் அனைவருக்கும் இந்த தருணத்தில் எனது நன்றிகள். இத்தனை வருடங்கள் எனக்கு ஆதரவளித்து என்மீது பாசம் காட்டிய எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களது அன்பு இல்லாமல் இது நடந்திருக்காது. ஜெய் மகிஷ்மதி" என்று தெரிவித்திருக்கிறார்.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பாகுபலி-2' திரைப்படம் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

கிறிஸ் பிராட், ஜெனிஃபர் லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'பாசஞ்சர்ஸ்' திரைப்படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்...
ஹோம்ஸ்டெட் என்ற நிறுவனம் 'தி குளோனி வேர்ல்ட் ஆப் ஹோம்ஸ்டெட்' என்ற உலகத்தை உருவாக்குகின்றனர். இந்த உலகத்திற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என ஹோம்ஸ்டெட் நிறுவனம் கூறுகிறது. இதனைத் தொடர்ந்து கதாநாயகன் கிறிஸ் பிராட், கதாநாயகி ஜெனிஃபர் லாரன்ஸ் உட்பட கம்பெனியின் 258 ஊழியர்களுடன், 5000 பயணிகள் விண்கலமொன்றில் அந்த உலகத்துக்கு பயணம் செய்கின்றனர்.
அந்த உலகத்துக்கு பயணம் செய்ய 120 ஆண்டுகள் ஆகுமென்பதால் விண்கலத்தில் பயணம் செய்யும் அனைவரும், விண்வெளித் தூக்கத்துக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். (இந்த விண்வெளித் தூக்கத்தால் 120 ஆண்டுகள் பயணம் செய்தாலும் தூங்கி அடுத்த நாள் எழுந்தது போல இருக்கும்). பயணத்தின் இடையில் கதாநாயகன் கிறிஸ் பிராட்டுக்கு திடீரென விழிப்பு வந்துவிடுகிறது.
விண்கலத்தில் இருக்கும் கணினி நாம் செல்ல வேண்டிய இடம் வந்துவிட்டது. பயணத்துக்கான ஆயத்தங்களை செய்து கொள்ளுங்கள் எனக் கூறுகிறது. இதனை நம்பி கிறிஸ் பிராட்டும் தனது வேலைகளைத் தொடர்கிறார். ஆனால் விண்கலத்தில் பயணிக்கும் மற்ற யாரும் தங்களது உறக்கத்தில் இருந்து விழிக்கவில்லை. இதனால் கிறிஸ் பிராட்டுக்கு சந்தேகம் வந்து இதற்கான காரணத்தை ஆராய்கிறார். அப்போது 90 ஆண்டுகளுக்கு முன்பே தான் எழுந்துவிட்ட உண்மை அவருக்குத் தெரிகிறது.
90 ஆண்டுகள் தனியாக என்ன செய்வது எனத் தெரியாமல் கிறிஸ் பிராட் தவிக்கிறார். தனது வாழ்க்கை வீணாகி விட்டதே என சோகமாகிறார். தனிமையில் தவிக்கும்போது சில நேரங்களில் கதாநாயகி ஜெனிபர் லோபஸை எழுப்பலாமா? என யோசிக்கிறார். இப்படியே ஒரு வருடம் செல்கிறது. தனிமையில் தவிக்கும் கிறிஸ் பிராட் ஒரு கட்டத்தில் துணிந்து கதாநாயகி ஜெனிபர் லோபஸை எழுப்பி விடுகிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கின்றனர். இதற்கிடையில் ஜெனிபர் லோபஸ்-கிறிஸ் பிராட் இடையே காதல் மலர்கிறது.
இறுதியில் விண்கலத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அந்த உலகத்துக்கு சென்றனரா? தன்னை உறக்கத்தில் இருந்து எழுப்பியது யார் என்ற உண்மை நாயகி ஜெனிபருக்குத் தெரிந்ததா? தான் எழுந்ததற்கான காரணத்தை கதாநாயகன் கிறிஸ் பிராட் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
குறைவான கதாபாத்திரங்கள் என்றாலும் இயக்குனர் மோர்டென் டில்டம் கதையை ரசிகர்களுக்கு போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். கிறிஸ் பிராட், ஜெனிபர் லோபஸ் இருவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர். ரோட்ரிகோ பிரிட்டோவின் ஒளிப்பதிவும், தாமஸ் நியுமேன் இசையும் படத்திற்கு பக்கபலம்.
மொத்தத்தில் இந்த 'பாசஞ்சர்ஸ்' பயணம் இனிதானது...

நம்மிடமிருந்து இந்தியப் பெண்களை யார் பாதுகாப்பார்கள்? என நடிகர் சித்தார்த் ஆவேசப்பட்டிருக்கிறார். அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
புத்தாண்டு தினத்தன்று பெங்களூரில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடைபெற்றன. டெல்லியிலும் இதுபோல பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றன. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
இதுபற்றி பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர், ''பெண்கள் மேற்கத்திய பாணியில் அரைகுறை ஆடைகள் அணிவதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன'' என்று கருத்துத் தெரிவித்தார். இந்தக் கருத்து நாடு முழுவதும் பலத்த விவாதங்களை எழுப்பியது.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "நம்மிடமிருந்து இந்தியப் பெண்களை யார் பாதுகாப்பார்கள்? இந்த உலகத்தில் மிக மோசமான இழிவான ஆண்கள் மத்தியில் நாம் இருக்கிறோம். இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
ஒரு பெண் என்ன உடை அணிய வேண்டும்? என நீங்கள் தீர்மானிக்காதீர்கள். பெண் மீதான ஆடைகள் குறித்து கருத்து சொல்வதை நிறுத்துங்கள். பெண்கள் மீதான பாலியல் வன்முறை, கற்பழிப்பு ஆகியவை இங்கு நியாயப்படுத்தப்படுகின்றன. நீங்கள் ஒரு விஷயத்தைப் பார்ப்பதால் அது உங்களுக்கு சொந்தமாகி விடாது. உங்கள் பார்வையை மாற்றுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
சித்தார்த்தின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது.

தி.மு.க. செயல்தலைவர் பதவி வழங்கி இருப்பது என் தந்தையின் உழைப்புக்கு கிடைத்த உன்னத பரிசு என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘‘பொதுவாக என் மனசு தங்கம்’’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், நகைச்சுவை நடிகர் சூரி உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.
சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
ஓய்வின் போது உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேள்வி:- மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- எனது தந்தை மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அவருடைய உழைப்புக்கு கிடைத்த உன்னத பரிசு.
கேள்வி:- நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் நீங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் யாருக்கு ஆதரவு அளிப்பீர்கள்?
பதில்:- என்னுடைய படங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கமோ, நடிகர் சங்கமோ இதுவரை எந்த உதவியும் செய்தது கிடையாது. இதனால் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.
கேள்வி:- ஜல்லிக்கட்டு பிரச்சனையில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்:- அரசியல் ரீதியாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகிறது. எனது தந்தை தலைமையிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் இதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. இருப்பினும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
கேள்வி:- பொதுவாக எம்மனசு தங்கம் படம் குறித்து?
பதில்:- நான் முதன் முதலாக வேறு தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். நானும் சூரியும் ஏற்கனவே 'சரவணன் இருக்க பயமேன்' என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தோம். அதன் பின்னர் இந்த படத்தில் மீண்டும் ஒன்றாக நடிக்கிறோம். தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த படத்தில் நடிகர் பார்த்திபன் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார். முதன்முதலாக அவருடன் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய நடிப்பில் வழக்கமாக இருக்கும் நக்கல் இந்த படத்திலும் நிறையவே எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.