என் மலர்
தமிழக மாணவர்கள் போராட்டம் நாட்டுக்கே எடுத்துக்காட்டு என்று நடிகர் மம்முட்டி பாராட்டியுள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப் புக்கு தடைவிதிக்க கோரியும் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மாண வர்களும்,
இளைஞர்களும் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வன்முறைக்கு துளியும் இடம் அளிக்காமல் கட்டுக் கோப்புடன் அமைதி யாக நடைபெறும் இந்த போராட்டம் ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தை ஈர்த் துள்ளது. தமிழ் மாணவர் களின் இந்த அறவழி போராட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட் டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டரில் “ராட்டை” சின்னமாக்க அறவழிப் போராட்டம் நடந்தது. இன்று மாட்டை சின்னமாக்க அறவழிப் போராட்டம் நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மம்முட்டி தனது டுவிட்டரில், துளிகூட வன்முறை இல்லாமல் நடந்த போராட்டம் நாட்டுக்கே எடுத்துக்காட்டு, தமிழக மாணவர்களின் போராட் டத்தை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் யுரேகா- சாண்ட்ரா எமி இணைந்து நடித்துள்ள சிவப்பு எனக்கு பிடிக்கும் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்க்கலாம்.
சென்னையில் எழுத்தாளராக வரும் யுரேகா புத்தகம் ஒன்றை எழுத முடிவு செய்கிறார். சிவப்பு விளக்கு பகுதியை மையமாகக் கொண்ட ஒரு புத்தகத்தை எழுத நினைக்கும் யுரோகா அதற்காக விலைமாது ஒருவரை நேர்க்காணல் செய்ய விரும்புகிறார்.
இதற்காக சிகப்பு விளக்கு பகுதிக்கு செல்லும் யுரேகா, அங்கு வாழும் பெண்ணாண சாண்ட்ராவிடம், அவரது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை கேட்கிறார். குறிப்பாக சிவப்பு விளக்கு பகுதியில் சாண்ட்ரா சந்தித்த வித்தியாசமான மற்றும் மாறுபட்ட மனிதர்கள் பற்றியும் அவர்களால் சாண்ட்ரா அனுபவித்த கஷ்டங்கள் குறித்தும் கேட்கிறார்.
இதில் தனது வாழ்க்கையில், மறக்க முடியாததாக 5 மனிதர்கள் பற்றி சாண்ட்ரா விவரிக்கிறார். ஒரு இளைஞர், டாக்டர், சாமியார், திருநங்கை, தீவிரவாதி உள்ளிட்ட 5 பேரால் தான் அனுபவித்த கொடுமைகளை விவரிக்கும் சாண்ட்ரா, காவல் அதிகாரியின் மாமூல் தொல்லை குறித்தும் கவலை தெரிவிக்கிறார்.
சென்னையில் தினமும் பல்வேறு வகையான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக பாலியல் தொல்லை, கள்ளத்தொடர்பு,
விபசாரம், கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளே அதிகளவில் பதியப்படுகிறது. இதற்கு தீர்வு காண சென்னையில் சிகப்பு விளக்கு பகுதியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் யுரேகா, அவ்வாறு சிகப்பு விளக்கு பகுதியை உருவாக்குவதன் மூலம் குற்றங்கள் குறையும் என்றும் நம்புகிறார்.
இந்தியாவில் மும்பை உட்பட ஒரு சில மாநிலங்களில் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ளன. அதேபோல் சென்னையில் சிவப்பு விளக்கு பகுதியை அமைக்க வேண்டும் என்று நினைக்கிறார் யுரோகா.
தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள், பெரியவர்கள் என பலர் கல்வி, வேலைவாய்ப்புக்காக சென்னைக்கு வருகின்றனர். அவர்கள் உணர்ச்சி மிகுதியால் செய்யும் தொல்லையால், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க சிவப்பு விளக்கு பகுதியை சென்னையில் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்யும் யுரோகா, இதன்மூலம் ரவுடி, தொழிலதிபர்கள் மூலம் தொல்லைக்குள்ளாகும் விலைமாதுக்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் நம்புவது சிறப்பு.
படத்தில் யுரேகா, சாண்ட்ரா எமியை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், அனைவரும் அவர்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். தணிக்கைக்குழுவில் ஏ சான்றிதழ் பெற்றாலும்,இப்படம் காமம், கவர்ச்சி, பாலியல் உள்ளிட்ட காட்சிகளின்றி அமைந்துள்ளது.
எழுத்தாளராக நடித்துள்ள யுரேகா அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார். எழுத்தாளருக்கு தேவையான கேள்விகளுடனும், கிண்டலுடனும் படத்தில் வலம் வருகிறார்.
அதே போல் சிவப்பு விளக்கு பகுதியில் வரும் பெண்ணாக நடித்துள்ள சாண்ட்ராவும் படம் முழுவதும் கவர்ச்சி, காமம் இன்றி திரையில்
வலம்வருகிறார்.
மேலும், படம் முழுவதும் கவர்ச்சி, காமம், பாலியல் போன்ற காட்சிகள் இல்லாமல் சிறப்பான திரைக்கதையை அமைத்திருப்பது யுரேகாவின் நேர்த்தியான இயக்கத்தை காட்டுகிறது. பாலியல் சம்பந்தமான எந்தவித காட்சிகளின்றியும் யுரேகா படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் சிவப்பு எனக்கு பிடிக்கும் சிவப்பு பகுதி வேண்டி சிவப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட புதுமையான கதை.

அமீர்கான் நடிப்பில் வெளியான 'தங்கல்' திரைப்படம் இந்தியா முழுவதும் ரூ.375 கோடியை வசூலி் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் 'தங்கல்'. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக இப்படத்தில் அமீர்கானின் நடிப்பும், படத்தின் திரைக்கதையும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டுப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியாகி இன்றுடன் ஒருமாதம் ஆகியுள்ள நிலையில், 'தங்கல்' திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.375 கோடிகளை வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் சல்மான்கான் நடிப்பில் வெளியான 'சுல்தான்', 'பஜ்ரங் ஜி பைஜான்' அமீர்கான் நடிப்பில் வெளியான 'பிகே' ஆகிய படங்கள் 300 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இந்திய அளவில் பாக்ஸ்ஆபீசில் அமீர்கானின் 'தங்கல்', 'பிகே', 'தூம் 3' முதல் மூன்று இடங்களையும், சல்மான்கானின் 'பஜ்ரங் ஜி பைஜான்', 'சுல்தான்', 4, 5-வது இடத்திலும் உள்ளது.

‘காதலின் பொன் வீதியில்’ படத்தில் அப்பா முன்பு காதல் காட்சியில் நடிக்க தயங்கியதாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா தெரிவித்முள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
அர்ஜுன் தயாரித்து இயக்கும் படம் ‘காதலின் பொன் வீதியில்’. இது முழு நீள காதல் கதையாக தயாராகி வருகிறது. இதில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். இந்த அனுபவம் பற்றி கூறிய அவர்...
“இது ஒரு காதல் கதை. எனக்கும் எனது ஜோடியாக நடிக்கும் நாயகன் சாந்தனுக்கும் ஒரே அளவிலான வேடம்தான். இதில் நான் நிருபராக நடிக்கிறேன். காதலினால் ஏற்படும் பிரச்சினையை நாயகன் நாயகி இருவரும் எதிர்கொள்கிறோம். முதலில் இந்த படத்தில் அப்பா முன்பு காதல் காட்சிகளில் நடிக்க தயக்கமாக இருந்தது. பின்னர் சரியாகிவிட்டது.
படப்பிடிப்பு தளத்தில் எனக்கு டைரக்டராகத்தான் அப்பா செயல்பட்டார். அதனால் முதலில் என்னிடம் இருந்த தயக்கம் பிறகு மாறிவிட்டது. காதல் காட்சிகளில் நாயகனுடன் இயல்பாக நடித்தேன். எனது குடும்பத்தில் தாத்தா, அப்பா, அம்மா என்று பலர் நடிகர்களாக இருக்கிறார்கள். எனவே, படப்பிடிப்பு சூழ்நிலை புதிது அல்ல. பழக்கப்பட்ட விஷயமாகத்தான் இருந்தது” என்றார்.

மும்பை நகரில் வரும் 30-ம் தேதி நடைபெறும் 65-வது பிரபஞ்ச அழகி போட்டியின் நடுவர்களில் ஒருவராக முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் நியமிக்கப்பட்டுள்ளார்.
2017-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி வரும் 30-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. உலகில் உள்ள பல நாடுகளை சேர்ந்த அழகியர் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் ரோஷ்மிதா ஹரிமூர்த்தி கலந்து கொள்கிறார்.
கடந்த 1994-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று அழகிப் பட்டத்தை தட்டிசென்ற சுஷ்மிதா சென், மும்பையில் நடைபெறவுள்ள பிரபஞ்ச அழகி போட்டியின் நடுவர்களில் ஒருவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
23 ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்று, வெற்றிபெற்று, தற்போது பிரபஞ்ச அழகி போட்டியை இந்தியாவில் நடத்தும் விழாவின் உரிமையாளராக, இந்த தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சியும், பெருமையும் கொள்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷ்மிதா சென்(41) குறிப்பிட்டுள்ளார்.

விவகாரத்து வழக்கில் ஆஜராகாததால் நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
நடிகர் பிரபு நடித்த உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா என்ற விஜயலட்சுமி.
இவருக்கும், இலங்கை தமிழரான இந்திரகுமார் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் கனடாவில் வாழ்ந்தனர்.
இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கணவருடன் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ரம்பா சென்னைக்கு வந்து விட்டார்.
இதையடுத்து சென்னை குடும்பநல கோர்ட்டில் நடிகை ரம்பா ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘தன் கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
தற்போது சினிமாவில் நடிக்காததால் தனக்கு வருமானம் எதுவும் இல்லை. அதனால், மாதந்தோறும் தனக்கு ரூ.1.50 லட்சமும், தன் இரு மகள்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ. 1. லட்சமும், ஆக ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சம் வழங்க கணவர் இந்திரகுமாருக்கு உத்தரவிட வேண்டும்’ என் றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த டிசம்பர் 3-ந்தேதி விசா ரணைக்கு வந்தபோது, ரம்பா மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில், என் னுடைய கணவர் என் னுடன் சேர்ந்து வாழவில்லை. குழந்தைகள் இருவரும் என்னுடைய கட்டுப் பாட்டின் கீழ் தான் உள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். எனவே, இந்த இரு குழந்தைகளின் சட் டப்படியான பாதுகாவலராக என்னை (ரம்பாவை) அறி விக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பூங்குழலி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரம்பாவும், அவரது கணவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்து விட்டு ரம்பா விசாரணைக்கு வராமல் இருந்தால் என்ன அர்த்தம்? கடந்த டிசம்பர் மாதம் நடந்த விசாரணைக்கும் அவர் வரவில்லை. இப்போதும் அவர் வரவில்லை என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
பின்னர் வழக்கு விசாரணையை பிப்ரவரி 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சிகிச்சை பெற சென்ற ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் போராட்டக்களத்திற்கு வந்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மெரீனாவில் மக்களுடன் 4 நாட்களாக இரவு பகலாக லாரன்ஸ் இருந்ததால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
ஒருவாரம் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். ஆனால் “போராட்ட களத்தில் நானும் இருக்க வேண்டும். அந்த மக்கள் முகங்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். உணவு மற்றும் குடிநீர், பெண்களுக்காக கழிப்பறை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போராட்டம் வெற்றி பெற்ற பிறகு வந்து ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி மருத்துவ மனையில் இருந்து மீண்டும் மெரீனாவுக்கு ராகவா லாரன்ஸ் சென்றார்.

நானி-கீர்த்தி சுரேஷ் உருவாகியுள்ள 'நேனு லோக்கல்' படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான 'பைரவா' படம் பொங்கலுக்கு வெளியானது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய், சூர்யாவைத் தொடர்ந்து 'சண்டக்கோழி-2' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பிப்ரவரி மாதம் 'சண்டக்கோழி-2' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள `நேனு லோக்கல்' படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தில் நவீன் சந்திரா, போசனி கிருஷ்ணா முரளி, சச்சின் கேதேக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரிநாத்ராவ் நகீனா இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நடிகர் விஜயைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
சென்னை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று ஐந்தாவது நாளாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு இரவு, பகலாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
பேரெழுச்சியுடன் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் நடிகர் விஜய் இன்று அதிகாலை மெரினா கடற்கரைக்கு சென்று போரட்டத்தில் கலந்து கொண்டார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியும் இன்று காலை நேரில் சென்று போரட்டத்தில் பங்கேற்று வருகிறார். முகத்தில் கர்சீப் கட்டியபடி, போராட்டக்களத்தில் கார்த்தி அமர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாக பரவி வருகின்றன.
20 வருடங்களுக்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் கஜோல், தனுஷுடன் இணைந்து நடித்து வருகிறார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தற்போது இப்படத்தின் 2-வது பாகம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.
`விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நடிகை கஜோல், தனுஷ் சேர்ந்து நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழில் கடைசியாக 20 வருடங்களுக்கு முன் வெளியான 'மின்சார கனவு' படத்தில் கஜோல் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 'சிகரம் தொடு' பட ஹீரோயின் மோனல் கஜ்ஜாரும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வரும் கமல் மாணவர்களின் கூட்டத்தை பார்த்து கண்கலங்குவதாக கூறியுள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொடக்கம் முதலே ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து வருகிறார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கவேண்டி
வலியுறுத்தி வந்த கமல் தற்போது ஜல்லிக்கட்டுக்கு வேண்டி அறவழியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு தனது ஆதரவையும், பாராட்டுகளையும் தெரிவித்த அவர், தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்தி சில டுவிட்டுகளையும் போட்டு வருகிறார்.
முன்னதாக நடிகை த்ரிஷாவிக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராடிய போது, "அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்'' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், 'ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல்' என்று பதிவுசெய்திருந்தார்.
இந்நிலையில், ''நான் TV செய்தியை பார்ப்பது உங்களைப் பார்க்கத்தான். பனித்த கண்களுடன் நான் பார்ப்பது மாணவர் கூட்டமல்ல நவ நல்லாசிரியர் கூட்டம். வணங்குகிறேன்'' என்று கூறி கண்கலங்குவதாக தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சூர்யாவுக்கு எதிராக கருத்து வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூர்யா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டுக்கு தேவை என்பதற்கு தமிழகத்தில் ஆதரவும், போராட்டங்களும் பெருகிவரும் நிலையில், ஜல்லிக்கட்டை எதிர்த்த பீட்டா அமைப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் பீட்டாவை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அவர்களில் சூர்யாவும் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து, சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக பீட்டா அமைப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், நடிகர் சூர்யா மற்றும் இதர நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இவ்வளவு காலதாமதாக குரல் கொடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசியது தற்செயலாக நடந்தது கிடையாது. அவருடைய `சி3' படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவ்வாறு பேசியுள்ளார் என்றும் தெரிவித்திருந்தது.
சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டால் சில காளைகளும், சில மனிதர்களும் இறந்து போயுள்ளார்கள். அரசாங்கம் இந்த விஷயத்தை தடைசெய்தும் அதை நடத்துவதே மிகப்பெரிய தவறு. அப்படியிருந்தும், அதற்கு ஆதரவாக பேசுவது அதைவிட கேவலமானது என்றும் கூறியிருந்தது. இந்நிலையில், பீட்டா அமைப்புக்கு நடிகர் சூர்யா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சூர்யா அனுப்பிய வக்கீல் நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது,
* தான் ஜல்லிக்கட்டுக்கு அவ்வப்போது ஆதரவு தெரிவித்து வந்ததாகவும், `சி3' படத்திற்கு விளம்பரம் தேடி ஆதரவு தெரிவிக்கவில்லை.
* முன்னதாக சூர்யா நடித்த `சிங்கம்' முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சூர்யா ஏன் `சி3' படத்திற்கு விளம்பரம் தேடப்போகிறார்.
* பீட்டா அளித்த பேட்டி சூர்யாவை தனிப்பட்ட முறையில் தாக்குவது போன்றுள்ளது. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளகியுள்ளார். மேலும் பீட்டாவின் இந்த பேட்டியால் தொடர்ந்து அவருக்கு போனில் தொடர் அழைப்புகள் வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
* பீட்டாவின் இத்தகைய பேட்டியால் சூர்யாவின் பேருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது, எனவே இத்தகைய தவறான கருத்துக்கு மன்னிப்பு கேட்டு ஒருவாரத்திற்குள் பதில் அறிக்கை வெளியிடவும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.