என் மலர்tooltip icon

    சினிமா

    மெரினா: ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் நடிகர் கார்த்தியும் இன்று இணைந்தார்
    X

    மெரினா: ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் நடிகர் கார்த்தியும் இன்று இணைந்தார்

    சென்னை மெரினா கடற்கரையில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நடிகர் விஜயைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று ஐந்தாவது நாளாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு இரவு, பகலாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

    பேரெழுச்சியுடன் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தை  ஆதரிக்கும் வகையில் நடிகர் விஜய் இன்று அதிகாலை மெரினா கடற்கரைக்கு சென்று போரட்டத்தில் கலந்து கொண்டார். 

    அவரைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியும் இன்று காலை நேரில் சென்று போரட்டத்தில் பங்கேற்று வருகிறார். முகத்தில் கர்சீப் கட்டியபடி, போராட்டக்களத்தில் கார்த்தி அமர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாக பரவி வருகின்றன.
    Next Story
    ×