என் மலர்
தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வரும் கமல் மாணவர்களின் கூட்டத்தை பார்த்து கண்கலங்குவதாக கூறியுள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொடக்கம் முதலே ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து வருகிறார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கவேண்டி
வலியுறுத்தி வந்த கமல் தற்போது ஜல்லிக்கட்டுக்கு வேண்டி அறவழியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு தனது ஆதரவையும், பாராட்டுகளையும் தெரிவித்த அவர், தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்தி சில டுவிட்டுகளையும் போட்டு வருகிறார்.
முன்னதாக நடிகை த்ரிஷாவிக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராடிய போது, "அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்'' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், 'ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல்' என்று பதிவுசெய்திருந்தார்.
இந்நிலையில், ''நான் TV செய்தியை பார்ப்பது உங்களைப் பார்க்கத்தான். பனித்த கண்களுடன் நான் பார்ப்பது மாணவர் கூட்டமல்ல நவ நல்லாசிரியர் கூட்டம். வணங்குகிறேன்'' என்று கூறி கண்கலங்குவதாக தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சூர்யாவுக்கு எதிராக கருத்து வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூர்யா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டுக்கு தேவை என்பதற்கு தமிழகத்தில் ஆதரவும், போராட்டங்களும் பெருகிவரும் நிலையில், ஜல்லிக்கட்டை எதிர்த்த பீட்டா அமைப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் பீட்டாவை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அவர்களில் சூர்யாவும் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து, சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக பீட்டா அமைப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், நடிகர் சூர்யா மற்றும் இதர நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இவ்வளவு காலதாமதாக குரல் கொடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசியது தற்செயலாக நடந்தது கிடையாது. அவருடைய `சி3' படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவ்வாறு பேசியுள்ளார் என்றும் தெரிவித்திருந்தது.
சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டால் சில காளைகளும், சில மனிதர்களும் இறந்து போயுள்ளார்கள். அரசாங்கம் இந்த விஷயத்தை தடைசெய்தும் அதை நடத்துவதே மிகப்பெரிய தவறு. அப்படியிருந்தும், அதற்கு ஆதரவாக பேசுவது அதைவிட கேவலமானது என்றும் கூறியிருந்தது. இந்நிலையில், பீட்டா அமைப்புக்கு நடிகர் சூர்யா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சூர்யா அனுப்பிய வக்கீல் நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது,
* தான் ஜல்லிக்கட்டுக்கு அவ்வப்போது ஆதரவு தெரிவித்து வந்ததாகவும், `சி3' படத்திற்கு விளம்பரம் தேடி ஆதரவு தெரிவிக்கவில்லை.
* முன்னதாக சூர்யா நடித்த `சிங்கம்' முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சூர்யா ஏன் `சி3' படத்திற்கு விளம்பரம் தேடப்போகிறார்.
* பீட்டா அளித்த பேட்டி சூர்யாவை தனிப்பட்ட முறையில் தாக்குவது போன்றுள்ளது. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளகியுள்ளார். மேலும் பீட்டாவின் இந்த பேட்டியால் தொடர்ந்து அவருக்கு போனில் தொடர் அழைப்புகள் வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
* பீட்டாவின் இத்தகைய பேட்டியால் சூர்யாவின் பேருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது, எனவே இத்தகைய தவறான கருத்துக்கு மன்னிப்பு கேட்டு ஒருவாரத்திற்குள் பதில் அறிக்கை வெளியிடவும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று ஐந்தாவது நாளாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு இரவு, பகலாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் இன்று அதிகாலை மெரினா கடற்கரைக்கு சென்று போரட்டத்தில் கலந்து கொண்டார். தன்னை அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தில் கர்சீப் கட்டியபடி அதிகாலை 2 மணியளவில் மெரினா கடற்கரைக்கு வந்த விஜய், சிறிது நேரம் போராட்டக் களத்தில் இருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் விஜய் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது கருத்தை வீடியோ மூலம் பதிவு செய்திருந்தார். இதனால், நேற்று நடிகர் சங்கம் சார்பாக நடந்த மெளனப்போரட்டத்தில் விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை.
மெரினா போராட்டத்துக்கு நேரில் விஜய் ஆதரவு தெரிவித்ததால், பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் இல்லை. இது, தமிழனின் பாரம்பரியம், கலாசாரம் என்று டைரக்டர் பி.வாசு கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
டைரக்டர் பி.வாசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா” என்கிற வீர வாக்கியத்தில்தான் எங்கள் வாழ்க்கையே இருக்கிறது என்று மீண்டும் உலகத்துக்கு நிரூபித்து இருக்கிறார்கள், தமிழ் இளைஞர்கள்.
தமிழ்நாட்டில் மாடு வளர்க்கிற ஒவ்வொரு வீட்டிலும் பசுவை கோமாதா என்கிற தாயாகவும், காளையை சிவனாக தந்தையாகவும்தான் வணங்கி பாதுகாப்பார்கள். அந்த குடும்பத்தின் மொத்த பாசத்தையும் கொட்டி வளர்ப்பார்கள். இவர்கள் மிருகமாகவே பார்க்காதபோது, அதை எப்படி கொடுமைப்படுத்துவார்கள்?
எப்படி திருக்குறளுக்கு முப்பால் இருக்கிறதோ, அதே மாதிரி தமிழனுக்கும் இருக்கிறது. அது தமிழ் பால், தாய்ப்பால், பசும்பால். இந்த மூன்றையும் எங்கேயும் எப்போதும் தமிழர்கள் விட்டுத்தர மாட்டார்கள்.
கேக் இல்லாமல் கிறிஸ்துமஸ் இல்லை. பிரியாணி இல்லாமல் ரம்ஜான் இல்லை. அதேபோல் ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் இல்லை. இது, தமிழனின் பாரம்பரியம், கலாசாரம். அதை யாரும் பரிசோதிக்காமல், தமிழனை மனிதனாக வாழ விடுங்கள்.”
மேற்கண்டவாறு பி.வாசு கூறியிருக்கிறார்.

ரூ.49 லட்சம் மின் திருட்டில் ஈடுபட்டதாக நடிகை ரதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரதி. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர். மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்து ஒர்லி பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் மின்வினியோகம் செய்யும் நிறுவனமான ‘பெஸ்ட்’ கழக அதிகாரிகள் நடிகை ரதியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அவரது வீட்டில் உள்ள மின் மீட்டரை ஓடவிடாமல் செய்து நூதன முறையில் மின்திருட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் ரதியின் வீட்டில் ரூ.48 லட்சத்து 97 ஆயிரத்திற்கு மின் திருட்டு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
பெஸ்ட் கழகத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த அதிரடி சோதனை குறித்து பெஸ்ட் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சந்தேகம் ஏற்பட்டால் யார் வீட்டில் வேண்டுமானாலும் சோதனை நடத்த எங்களுக்கு கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. நடிகை ரதியின் வீட்டில் உள்ள மின் மீட்டரில் ஏதோ பிரச்சினை இருப்பதாக உணர்ந்தோம். எனவே அங்கு போலீசார் உதவியுடன் சென்று சோதனை நடத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக சென்ற இயக்குனர் தங்கர்பச்சான் தனது மகனை காணாமல் சிறிது நேரம் பரிதவித்தார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
இயக்குனர் தங்கர்பச்சான் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக நேற்று மெரினா கடற்கரைக்கு காரில் வந்தார். காரை அவருடைய மகன் விஜித்பச்சான் (வயது 24) ஓட்டி வந்தார். விவேகானந்தர் இல்லம் முன்பு காரில் இருந்து தங்கர்பச்சான் இறங்கிவிட்டார். அவருடைய மகன் விஜித்பச்சான் காரை பார்க்கிங் செய்துவிட்டு வருவதாக கூறி சென்றார்.
இந்தநிலையில் இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தங்கர்பச்சான் வெளியே வந்து, மகனுக்காக காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதையடுத்து அவர் எங்கே இருக்கிறார்? என்பதை அறிவதற்காக செல்போனில் தொடர்புகொண்டார். ஆனால் பலமுறை தொடர்புகொண்டும் விஜித்பச்சானின் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை.
அங்கு ‘மைக்’ மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம், ‘தன்னுடைய மகன் விஜித்பச்சானை காணவில்லை என்ற விவரத்தை கூறினார். இதையடுத்து தங்கர்பச்சான் மகன் விஜித்பச்சான் எங்கிருந்தாலும் விவேகானந்தர் இல்லம் முன்பு வரும்படி மைக் மூலம் தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டது.
தங்கர்பச்சானும் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்துகொண்டே இருந்தார். அதற்கு பலனாக விஜித்பச்சானின் செல்போன் இணைப்பு கிடைத்தது. அப்போது தான் இருக்கும் இடத்தை அவர் கூறினார். இதையடுத்து தங்கர்பச்சான் தனது மகனை பார்க்க சென்றார்.

தடைசெய்யப்பட்ட ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற வேண்டும் லட்சக்கணக்கான தமிழர்கள் போராடிவரும் நிலையில் இந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நோன்பு இருந்தார்.
சென்னை:
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்து வரும் இளைஞர்கள்-மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பின்னால் இருந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
திரையுலக பிரபலங்கள் பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை மவுன-உண்ணாவிரத போராட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.
இதையடுத்து, சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலையில் இருந்து மகன் அமீன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் குடும்பத்தாருடன் காலையில் இருந்து நோன்பு என்னும் உண்ணாநிலையை கடைபிடித்த ஏ.ஆர்.ரஹ்மான், நோன்புக்கு இடையில் ‘ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘தமிழா, தமிழா கண்கள் கலங்காதே - விடியும், விடியும் உள்ளம் மயங்காதே’ பாடலின் சில வரிகளை தனது குரலில் பாடி டுவிட்டரில் வெளியிட்டார்.
மாலை 6.14 மணியளவில் ஜி.வி.பிரகாஷ், மகன் அமீன் ஆகியோருடன் மாலை தண்ணீர் அருந்தி நோன்பை நிறைவு செய்த காட்சியையும் அவர் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
https://www.facebook.com/rahman360/videos/10154842071543815/

தமிழ்த்திரை உலகில், நகைச்சுவை நடிகர்களில் நீண்ட காலமாக வெற்றிநடை போடுகிறவர் `வெண்ணிற ஆடை' மூர்த்தி. 42 ஆண்டுகளில் 810 படங்களில் நடித்து முடித்துவிட்டு, 1000-வது படத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

மூர்த்தி, எடுத்த எடுப்பிலேயே நடிக்க வந்துவிடவில்லை. வக்கீல் வேலைக்கு படித்தார். கோர்ட்டில் தனது கட்சிக்காரர்களுக்காக `யுவர் ஆனர்' என்று ஆரம்பித்திருக்க வேண்டிய இவரது `சட்ட' வாழ்க்கை, சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு கலைத்துறைக்குள் பயணிக்க நேர்ந்தது முற்றிலும் எதிர்பாராத விஷயம்.
சொந்த ஊர் சிதம்பரம். அப்பா கே.ஆர்.நடராஜன் கடலூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கிரிமினல் வக்கீலாக இருந்தார். அப்பா, தன் வழியில் மகன் மூர்த்தியையும் வக்கீலாக்கிப் பார்க்க விரும்பியிருக்கிறார்.
தனக்கென்று வேறு எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையில், மூர்த்தியும் வக்கீலுக்கு படித்து பாஸ் செய்தார்.
அப்பாவிடமே ஜுனியராக சேர்ந்திருந்தால் கடலூர் மாவட்டத்துக்கு இன்னொரு பிரபல கிரிமினல் வக்கீல் கிடைத்திருப்பார். ஆனால் மூர்த்தி சட்டப்படிப்பை முடித்த நேரத்தில் அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமல் போக, வேறொரு சீனியரிடம் ஜுனியராக பிராக்டிஸ் செய்ய மூர்த்தியின் மனம் ஒப்பவில்லை. இதனால் அப்போது சர்வதேச அளவில் வியாபித்திருந்த "ரெமிங்டன்'' டைப்ரைட்டர் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதி வேலைக்குப் போனார். ஒரு வருடம் இந்தப் பணி தொடர்ந்திருக்கிறது.
பிறகு எப்படி மூர்த்தி நடிகரானார்? இந்த வகையில் அவரை நடிப்பு பக்கம் திருப்பியதே ஜாதகம்தான்.
அதுபற்றி மூர்த்தி கூறுகிறார்: "ரெமிங்டன் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதி வேலையில் ஊர் ஊராக சுற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்படி `நாளொரு பயணம்; பொழுதொரு ஊர்' என்ற நிலை எனக்கு ஒத்துவரவில்லை. அதனால் அந்த வேலையை விட்டு விட்டு, சுமார் 6 மாதம் சும்மா இருந்தேன்.
அப்போது நான் சென்னையில் "ஒய்.எம்.சி.ஏ'' விடுதியில் தங்கியிருந்தேன். ஒருநாள் சாப்பிட்டு முடித்துவிட்டு கடைத்தெரு வழியாக வரும்போது ஜோதிடம் பற்றிய ஒரு ஆங்கிலப் புத்தகம் என் கண்ணில் பட்டது. வாங்கி படித்தேன்.
அதில் ஜோதிடரிடம் ஒருவர் "எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?'' என்று கேட்டிருந்தார். பதிலுக்கு அந்த ஜோதிடர் "வருகிற ஜுலை மாதம் 10-ந்தேதிக்குள் திருமணம் நடந்தே தீரும்'' என்று எழுதியிருந்தார்.
எனக்கு ஆச்சரியம். இத்தனை தெளிவாக தேதி வாரியாக ஒருவரின் வாழ்க்கை நிலையை தீர்மானிக்க ஜோதிடத்தால் முடியுமா? இந்தக் கேள்வியை அந்த ஜோதிடரிடம் நேரில் சென்று கேட்டு விடுவது என்று முடிவு செய்து, அந்தப் பத்திரிகையில் அவர் கொடுத்திருந்த போன் நம்பரில் தொடர்பு கொண்டேன். "உங்களை சந்திக்க வேண்டும்'' என்றேன். "சைதாப்பேட்டையில் இருக்கிறேன். மதியம் வாருங்கள்'' என்றார்.
போனேன். சாதாரண ஓட்டு வீட்டில் இருந்தார். அறை முழுக்க ஜோதிட புத்தகங்கள். பார்த்த மாத்திரத்தில் மரியாதை தரும்
தோற்றம்.என்னைப் பார்த்ததும், "நீங்கதான் போன் பண்ணினீங்களா?'' என்று கேட்டார். பேச்சு சகஜமாக வளரத் தொடங்கிய நேரத்தில், "ஒருத்தருக்கு கல்யாணம் எப்போ நடக்கும்? வேலை எப்ப கிடைக்கும்? இதெல்லாம் ஜோதிடம் எப்படி முடிவு செய்ய முடியும்? நீங்கள் இதில் இன்னும் ஒருபடி மேலே போய் "இந்த தேதிக்குள் நடக்கும் என்று சொல்வதெல்லாம் சரிதானா?'' என்று கேட்டேன்.
என் கேள்வியை புரிந்து கொண்டவர் என்னிடம், "தம்பி! ஜோதிடம் என்பது மேஜிக் விஷயம் அல்ல. அது கணிதம். சரியாக குறித்தோமானால் நேரம் தப்பாது'' என்றார்.
"அப்படியானால், எதிர்காலத்தில் நான் என்னவாக வருவேன் என்பதை சொல்ல முடியுமா, உங்களால்?'' என்று கேட்டேன்.
"உன் ராசி, லக்னத்தை சொல்லு'' என்றார்.
நானும் "கன்யா ராசி; துலாம் லக்னம்'' என்று சொன்னேன்.
குறித்துக் கொண்டவர், என் பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றையும் கேட்டுக்கொண்டார். பிறகு ஏதேதோ கணக்கு மாதிரி எழுதினார். `என்ன சொல்லப் போகிறாரோ' என்ற ஆர்வத்தில் இருந்த என்னிடம், "தம்பி! உங்களுக்கு `மேக்கப்' வாழ்க்கைதான் அமையும். சினிமாவில் நடிப்பீங்க. ஜனங்களை சிரிக்க வைப்பீங்க. ஆனால் அதுல நம்பர் ஒன்ல வரமாட்டீங்க. நம்பர் டூ-திரிக்குள் இருப்பீங்க. வயதாகி குச்சி ஊன்றும் காலம் வரை நடிப்பில் உங்கள் இடம் நிரந்தரமாக இருக்கும்'' என்றார்.
நான் நடிப்பேனா? எனக்கு அதிர்ச்சியாக இருந்தது! பள்ளியிலும், கல்லூரியிலும் நாடகத்தில் நடித்த அனுபவம் மட்டுமே இருக்கிறது. அப்புறமாய் அதைக்கூட மறந்தாச்சு. பிறகு எப்படி நடிக்க வாய்ப்பு? அதுவும் சினிமாவில்?
இந்த மாதிரி கேள்விகள் எனக்குள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருந்த நேரத்தில்கூட அவரை விடவில்லை. "நீங்கள் சொன்னதை எனக்கு எழுதித்தர வேண்டும். அதுவும் எவ்வளவு நாளைக்குள் இது நடக்கும் என்று எழுதித் தரவேண்டும்'' என்றேன்.
"ஏன், என் மேல் நம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டார் ஜோதிடர்.
"நீங்கள் சொன்ன தேதிக்குள் நடிகனாகி விட்டால் உங்களை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டுமே. அதற்குத்தான் தேதி கேட்டேன்'' என்றேன்.
நான் ஜோதிடரை சந்தித்தது 1964-ம் ஆண்டு பிப்ரவரியில்.
அவர் என்னிடம் "வருகிற அக்டோபர் 30-ந்தேதிக்குள் நடிகனாகி விடுவாய்'' என்று எழுதி கையெழுத்து போட்டு தந்தார். அவர் சொன்னதை விடவும் 7 நாளுக்கு முன்பே அதாவது அக்டோபர் 23-ந்தேதியே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துவிட்டது. டைரக்டர் ஸ்ரீதரின் `வெண்ணிற ஆடை' படம்தான் என் ஜோதிடத்தை மெய்யாக்கி என்னையும் நடிகனாக்கி விட்டது. ஒரு 7 நாள் தள்ளிப் போயிருந்தால் சினிமா உலகம் தப்பிச்சிருக்கும்!''
நகைச்சுவையாகவே சொன்னார், வெண்ணிற ஆடை மூர்த்தி.
மூர்த்திக்கு ஸ்ரீதர் சினிமா வாய்ப்பு அளித்தது எப்படி?
மூர்த்தி, ஜோதிடரை சந்தித்த சில நாட்களுக்குப்பிறகு, ஸ்ரீதரின் உதவியாளராக இருந்த என்.சி.சக்ரவர்த்தியை தற்செயலாக சந்தித்திருக்கிறார். அப்போது அவர் ஸ்ரீதரின் உதவியாளர் என்று தெரிந்ததும், "டைரக்டர் ஸ்ரீதரிடம் ஒருநாள் என்னை அறிமுகப்படுத்தி வையுங்கள்'' என்று
கேட்டார்.`அதற்கென்ன' என்று சர்வசாதாரணமாக சொன்ன சக்ரவர்த்தி, அடுத்த சந்திப்பிலேயே மூர்த்தியை ஸ்ரீதர் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்.
நடிக்க வேண்டும் என்று நினைத்ததுமே டைரக்டர் ஸ்ரீதரின் பட வாய்ப்பு கிடைத்து விடும் போலிருக்கிறதே என்று மூர்த்திக்கும் ஆச்சரியம்.
"இப்போது நான் எடுப்பது முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம். உங்களுக்கு எந்த மாதிரி நடிப்பு வரும்?'' என்று ஸ்ரீதர் கேட்டார்.
"எனக்கு காமெடி நல்லா வரும்னு நினைக்கிறேன்'' என்றார் மூர்த்தி.
"நீங்கள் வக்கீலுக்கு படித்திருக்கிறீர்கள். உங்கள் முகத்தில்கூட `படித்தவர்' என்ற களை தெரியுது. நீங்கள் எப்படி நடிப்பில் சிரிக்க வைக்க முடியும்?'' என்று கேட்டார், ஸ்ரீதர்.
தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று மூர்த்திக்கு புரிந்து விட்டது. "பரவாயில்லை சார்! எனக்கு வாய்ப்பு தருவதாக இருந்தால் உங்க மானேஜர் மூலமாக எனக்கு தெரியப்படுத்துங்கள்'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
அப்போதுதான் எதிர்பாராத திருப்புமுனை ஏற்பட்டது. அதை மூர்த்தியே சொல்கிறார்:
"நடிக்க வாய்ப்பு இல்லை, ஆனால் முகத்தில் நல்ல `களை' இருக்கிறது என்று ஸ்ரீதர் சார் சொன்னது என் மனதில் ஆழப்பதிந்து விட்டது. எனவே, அவரிடம் விடைபெற்று வாசல் வரை வந்தபோது மறுபடியும் அவர் பக்கமாக திரும்பினேன். "சார்! `ஒருத்தருக்கு நல்ல முகம் அமைஞ்சா அதுவே அதிர்ஷ்டமாகவும் ஆகிவிடும்' என்பது ஆங்கிலப் பழமொழி. ஆனால், என் விஷயத்தில் மட்டும் இந்தப் பழமொழி பொய்யாகி விட்டது. பரவாயில்லை சார். நான் வருகிறேன்'' என்று அறைக் கதவை திறந்தேன்.
நான் சொன்னது ஸ்ரீதர் சாரை பாதித்து விட்டது போலும். எனக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கச் சொன்னார். எனக்கு மீசை வைத்து மேக்கப் போட்டு, படம் எடுத்தார்கள். அப்போது நான் `திருதிரு'வென விழித்ததில், எனக்குள் இருந்த காமெடி நடிகனை கண்டு கொண்டார், ஸ்ரீதர். ஸ்ரீதர் சாரின் `வெண்ணிற ஆடை' படம் மூலம் காமெடி நடிகன் ஆனேன். சாதாரண மூர்த்தி `வெண்ணிற ஆடை' மூர்த்தி ஆனது
இப்படித்தான்.''இவ்வாறு "வெண்ணிற ஆடை'' மூர்த்தி கூறினார்.

உடல்நலக் குறைவிலும் மெரினாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்று வந்த நடிகர் லாரன்ஸ் மருத்துவமனையில்ம அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் கடந்த 17-ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களாக இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்த 18-ம் தேதி காலை ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெறும் மெரினாவுக்கு வந்தார்.
கழுத்தில் பெல்ட் கட்டியபடி வந்த லாரன்ஸ், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுடன் இணைந்து மவுன போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் உடல்நிலை பாதிப்பிலும் நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்த மூன்று தினங்களாக பங்கெடுத்து வந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவியாக தனது பங்கிற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கழுத்து வலி அதிகரித்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்ற இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாணும் தமிழகத்தில் இளைஞர்கள் ஏற்று நடத்தி வரும் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, "ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை ஆகியவற்றை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது, திராவிட கலாச்சாரம் மற்றும் அதன் ஒருமைப்பாடு மீது நடத்தும் தாக்குதல். தென்னிந்தியாவில் இப்படித்தான் இது பார்க்கப்படுகிறது. பொள்ளாச்சியில் நான் படப்பிடிப்பில் இருக்கும்போது மக்கள் இதனால் காயப்பட்டிருப்பதை நான் கவனித்தேன்.
ஆந்திராவிலும் அவர்களது கலாச்சார நிகழ்வு தடைசெய்யப்பட்டிருப்பதில் வருத்தமளிப்பதை நான் சில அரசியல் கூட்டங்களில் கேட்டறிந்துள்ளேன். மிருகங்கள் வதை செய்யப்படுவதாகவே ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் சண்டை ஆகியவற்றை தடை செய்ததாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த கண்டிப்பான போக்கை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாட்டிறைச்சி பற்றி கணக்கெடுக்க வேண்டும்.
உலகிலேயே அதிக அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வது இந்தியா தான். 2.4 மில்லியன் டன் மாட்டிறைச்சி மற்றும் கன்றுகள் இறைச்சியை 2015-ஆம் ஆண்டு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. அதே நேரத்தில் பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் 2 மற்றும் 1.5 டன் மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 5 பில்லியன் டாலர் வர்த்தகம் உள்ளது. இதில் ஒவ்வொரு வருடமும் 14 சதவிதம் வளர்ச்சி இருக்கிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அத்தகைய மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனத்தை வைத்திருப்பது இந்துக்கள், முஸ்லிம்கள் அல்ல.
2.4 மில்லியன் டன் இறைச்சிக்கு எத்தனை பசு, கன்று, எருமைகள் வெட்டப்பட்டிருக்கும் என நினைத்துப் பாருங்கள். நம் கண்ணில் படவில்லை என்பதால் மட்டும் இந்த மாதிரியான விஷயங்கள் மிருக வதை என்று எப்படி பேசப்படாமல் இருக்கிறது? இறைச்சிக்காக வெட்டப்படும் மிருகங்களை ஒப்பிடும்போது இதில் காயப்படும் மிருகங்களின் எண்ணிக்கை ஒன்றுமே இல்லை என்கிற போது, ஏன் மிருக வதை ஜல்லிக்கட்டுக்கு மட்டும் பொருந்த வேண்டும்?.
இதே மிருக வதை சேவல் சண்டையை தடை செய்யவும் சொல்லப்பட்டது. இந்த விளையாட்டுக்கு மத ரீதியில் முக்கியத்துவம் இருக்கிறது. கயசூரா என்ற அரக்கனை கொலை செய்ய சேவல் வடிவில் வந்த சிவபெருமான் குக்குடேஸ்வரர் என்றழைக்கப்பட்டார். சேவல் சண்டை ஆந்திராவின் கலாச்சார அடையாளம். மிருக வதை சட்டத்தை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய அரசு விரும்பினால், இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிப் பண்ணைகளையும் தடை செய்ய வேண்டும்.
ஏதாவது ஒரு புள்ளியில் இந்த அறநெறி உணர்த்தும் மூடத்தனத்துக்கு நாம் எல்லை வகுக்க வேண்டும். இல்லையென்றால் நமது தேசத்தின் ஒருமைப்பாடை காப்பது மிகக் கடினம். ஜனசேனா கட்சி, ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் சண்டை மீதிருக்கும் தடையை உடனடியாக நீக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் பார்த்திபன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என போராட்டக்களத்தில் இறங்கியுள்ள இளைஞர்கள், மாணவர்களுக்கு உறுதுணையாக நடிகர்கள் பலரும் களத்தில் இறங்கியுள்ள நிலையில், நடிகர் பார்த்திபன் ஜல்லிக்கட்டுக்கான தனது ஆதரவை புதுமையான முறையில் வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஜல்லிக்கட்டுக்கு உள்நாட்டு சதியா, வெளிநாட்டு சதியா என்று தெரியாத நிலையில், நம்முடைய நியாயமான உணர்வை வெளிப்படுத்துவதற்கு இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறோம். நான் தற்போது நடிகர் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறேன்.
நான் இரண்டு மூன்று நாட்களாக மெரீனாவில் நடந்துவரும் போராட்டத்தில் கலந்துகொண்டேன். அங்கு சென்று பார்த்தபோது அந்த இளைஞர்களுடைய உணர்வலைகளின் வெப்பம் ரொம்பவும் பெரிதாக இருந்தது. நம்முடைய நாட்டுக்குள்ளேயே நம்முடைய உரிமையை பெறுவதற்கு இவ்வளவு பெரிய போராட்டமா? இது எனக்கு மிகப்பெரிய துக்கமாக இருக்கிறது.
இதை வெளிப்படுத்த என்னுடைய வீட்டு வாசலில் கருப்பு கொடியை ஏற்றி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். நாளை முதல் இந்த போராட்டத்தை தொடங்கவிருக்கிறேன். இது என்னுடைய துக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய தன்மை. இது இந்திய இறையாண்மைக்கு எதிரான விஷயமும் இல்லை. ஜல்லிக்கட்டுக்கு உடனடியாக தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி நான் இருக்கும் அறவழியிலான போராட்டம் என்று கூறினார்.

ஹாலிவுட் ஹீரோ வின் டீசலுடன் கற்பனையில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றேன் என தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
ஹாலிவுட் ஹீரோவின் டீசலுடன் இந்த நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள படம் ‘டிரிபிஸ்எக்ஸ் ரிட்டன் ஆப் சாண்டர்’. இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில்மும்பையில் நடந்தது. இதில் படத்தின் நாயகன் வின்டீசல், டைரக்டர் கேருசோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இவருடைய ஹாலிவுட் பட நாயகன் வின்டீசல் பற்றி பேசிய தீபிகா படுகோனே வேண்டியவர்களை புகழ்வதற்கு எல்லையே கிடையாது என்று சொல்லும்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார் அவற்றில் சில...
“படத்தில் எனக்கும் வின்டீசலுக்கும் உள்ள பொருத்தம் ‘சூப்பர்’. இரண்டு பேரும் அந்த அளவு இணைந்து நடித்திருக்கிறீர்கள் என்று பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.
உண்மைதான், நெருப்பு இல்லாமல் புகையாது. எனது கற்பனையில் வின்டீசலுடன் எனக்கு அருமையான ‘கெமிஸ்ட்ரி’ இருக்கிறது. நாங்கள் குடும்பம் நடத்தி குழந்தைகளும் பெற்று விட்டோம். இது எல்லாம் என் கற்பனையில் தான்.
‘டிரிபிள் எக்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு என்னை தேர்வு செய்ததை கடைசி வரை என்னிடம் சொல்லவில்லை. இந்த படத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நள்ளிரவு 45 நிமிடம் போட்டோ ஷூட் நடத்தி அதை உறுதி செய்தார்கள்” என்றார்.
இந்த விழாவுக்கு திறந்த மனதுடன் கவர்ச்சி உடை அணிந்து வந்த தீபிகா, ஹாலிவுட் நடிகருடன் கற்பனையில் குழந்தையும் பெற்று விட்டேன்’ என்று பேசி இருப்பது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை தீபிகா படுகோனே காதலிக்கிறார் என்று பேசப்படும் நிலையில், இன்னொரு நடிகர் பற்றி இப்படியெல்லாம் பேச முடியுமா என்று மூக்கில் விரல்வைக்கிறார்கள். புகழ்வதற்கும் ஒரு எல்லை இல்லையா, என்று பேசிக்கொள்கிறார்கள்.