என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஹாலிவுட் ஹீரோ வின் டீசலுடன் கற்பனையில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றேன் என தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    ஹாலிவுட் ஹீரோவின் டீசலுடன் இந்த நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள படம் ‘டிரிபிஸ்எக்ஸ் ரிட்டன் ஆப் சாண்டர்’. இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில்மும்பையில் நடந்தது. இதில் படத்தின் நாயகன் வின்டீசல், டைரக்டர் கேருசோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் இவருடைய ஹாலிவுட் பட நாயகன் வின்டீசல் பற்றி பேசிய தீபிகா படுகோனே வேண்டியவர்களை புகழ்வதற்கு எல்லையே கிடையாது என்று சொல்லும்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார் அவற்றில் சில...

    “படத்தில் எனக்கும் வின்டீசலுக்கும் உள்ள பொருத்தம் ‘சூப்பர்’. இரண்டு பேரும் அந்த அளவு இணைந்து நடித்திருக்கிறீர்கள் என்று பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.

    உண்மைதான், நெருப்பு இல்லாமல் புகையாது. எனது கற்பனையில் வின்டீசலுடன் எனக்கு அருமையான ‘கெமிஸ்ட்ரி’ இருக்கிறது. நாங்கள் குடும்பம் நடத்தி குழந்தைகளும் பெற்று விட்டோம். இது எல்லாம் என் கற்பனையில் தான்.

    ‘டிரிபிள் எக்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு என்னை தேர்வு செய்ததை கடைசி வரை என்னிடம் சொல்லவில்லை. இந்த படத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நள்ளிரவு 45 நிமிடம் போட்டோ ஷூட் நடத்தி அதை உறுதி செய்தார்கள்” என்றார்.

    இந்த விழாவுக்கு திறந்த மனதுடன் கவர்ச்சி உடை அணிந்து வந்த தீபிகா, ஹாலிவுட் நடிகருடன் கற்பனையில் குழந்தையும் பெற்று விட்டேன்’ என்று பேசி இருப்பது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை தீபிகா படுகோனே காதலிக்கிறார் என்று பேசப்படும் நிலையில், இன்னொரு நடிகர் பற்றி இப்படியெல்லாம் பேச முடியுமா என்று மூக்கில் விரல்வைக்கிறார்கள். புகழ்வதற்கும் ஒரு எல்லை இல்லையா, என்று பேசிக்கொள்கிறார்கள்.

    ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களிடம் சமுத்திகரனி மற்றொரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்கள் எழுச்சிமிகு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களுடன் சென்று தனது முழு ஆதரவை தெரிவித்தார். தற்போது அவரது டுவிட்டர் பக்கத்தில் போராட்டக்காரர்களுக்கு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார். அதாவது, ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்கள் ஜல்லிக்கட்டோடு உங்கள் போராட்டத்தை நிறுத்திவிடாதீர்கள்.

    விவசாயம், விவசாயிகளின் நலன் பற்றிய போராட்டத்தையும் கையிலெடுங்கள். இந்த போராட்டத்தில் களமிறங்கியுள்ள அனைத்து இளைஞர்களுக்காகவும் தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    புதுமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    புதுமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. “ 21 வயதே ஆன இந்த இயக்குனர் படத்தில் முதலில் நடிக்க தயங்கினேன்” என்று இந்த படத்தின் நாயகன் ரகுமான் கூறி இருந்தார்.

    இப்போது அந்த இயக்குனரை நம்பிய ரகுமானுக்கும் பாராட்டுகள் குவிகின்றன. இதற்கு காரணமான இளம் இயக்குனர் கார்த்திக் நரேனை திரைஉலகில் பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, மூத்த டைரக்டர்களும் சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகிறார்க்ள.

    ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இது வரை யாரும் சொல்லாத திரைக்கதையில் சொன்னது,கார்த்திக்நரேனுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் ‘துருவங்கள் பதினாறு’ படம் இந்தியிலும், தெலுங்கிலும் ‘ரீமேக்‘ ஆக இருக்கிறது. முன்னணி நிறுவனங்கள் இந்த படத்தின் ரீமேக் உரிமம் கேட்டு அணுகி உள்ளன. இது குறித்து கூறிய கார்த்திக் நரேன்...

    “ துருவங்கள் பதினாறு படத்தின் தெலுங்கு, இந்தி ரீமேக், உரிமை கேட்டு சில நிறுவனங்கள் அணுகி இருக்கின்றன. அதையும் சிலர் என்னையே இயக்கச் சொல்கிறார்கள். இதற்கான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. நான் இப்போது அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டேன். அதற்கான நடிகர், நடிகைகள் தேர்வில் இருக்கிறேன். ஜூலை மாதம் புதிய படம் தொடங்கும்” என்றார்.

    விரைவில் ‘துருவங்கள் பதினாறு’ இந்தி, தெலுங்கு ‘ரீமேக்‘ தொடர்பான ஒப்பந்தங்க்ள கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழந்தைக்கு லாரன்ஸ் பெயர் வைத்தார். இதுகுறித்த முழுசெய்தியை கீழே பார்க்கலாம்.
    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் 4 வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து இளைஞர்களுடன் போராடி வருகிறார்.

    மணவர்களுக்கு தேவையான மொபைல் டாய்லெட், குளுகோஸ், செல்போன் சார்ஜர் போன்ற பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த ஒரு கைக்குழந்தைக்கு `தமிழ் அரசன்' என்று பெயர் வைத்தார்.

    ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சி-3’ படம் வருகிற 26-ந்தேதி ‘ரிலீஸ்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘சி-3’ நிகழ்ச்சிகளை சூர்யா ரத்து செய்துள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சி-3’ படம் வருகிற 26-ந்தேதி ‘ரிலீஸ்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை விளம்பரம் செய்யும் வகையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சூர்யா, ஹரி கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரிப்பதாக சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

    இதை கிண்டல் செய்த பீட்டா அமைப்பு, சூர்யா தனது ‘சி.3’ படத்துக்கு விளம்பரம் தேடவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் என்று கூறி இருந்தது.

    தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் இளைஞர்கள்- மாண வர்கள் போராட்டமாக உருவெடுத் துள்ளது. இதற்கு தமிழ் திரை உலகினர் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நெல்லை, மதுரையில் சூர்யா கலந்து கொள்ள ஏற்பாடு செய்து இருந்த ‘சி-3’ பட விளம்பர நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது.

    ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை சூர்யா ரத்து செய்துள்ளார். இதை சூர்யா ரசிகர்கள் வரவேற்று பெருமையாக பேசி வருகிறார்கள்.
    விளம்பரம் தேடும் நடிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று விஜய் சேதுபதியை எதிர்த்து திண்டுக்கல்லில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காந்திகிராம பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக் கழகம் நுழைவு வாசலில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது அங்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

    விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு

    அவர் பேசிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த சில மாணவர்கள், நடிகர்கள் யாரும் இங்கு வந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டாம். உடனே திரும்பி போங்கள் என்று கோ‌ஷம் போட்டனர்.

    மாணவர்கள் கூறியதாவது:- காந்தி கிராம பல்கலைக்கழகம் அருகே கருப்பன் என்ற சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சிங்கம் புலி ஆகியோர் நடித்து வருகின்றனர். நாங்கள் போராட்டம் செய்த போது மாணவர்கள் சிலர் கருப்பன் என்ற சினிமா ஜல்லிக்கட்டு சம்மந்தமான கதை என்பதால் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து பேச சொல்லலாம் என்று அவரிடம் கேட்டனர்.

    ஆனால், படப்பிடிப்பு இருக்கிறது வர வாய்பில்லை என்று கூறிவிட்டு படப்பிடிப்பு முடிந்த பின்னர் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார். தற்போது படப்பிடிப்பு குழுவினர் எங்களிடம் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து வருகிறோம் என்றனர் சரி என்றோம்.

    ஆனால் பின்னர் படப்பிடிப்பு இருக்கிறது. அதனால் படப்பிடிப்பின் இடைவேளையின் போது வந்து கலந்து கொள்வதாக விஜய் சேதுபதி
    கூறுவதாக கூறி சென்றனர். அதே போல் படப்பிடிப்பு முடிந்து சாப்பிட்டுவிட்டு வந்துள்ளார்கள்.

    விளம்பரம் தேட வேண்டாம்

    உண்மையிலேயே ஜல்லிக்கட்டுக்கும், அதற்காக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தருபவராக இருந்திருந்தால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு எங்களுக்கு ஆதரவு தந்திருக்க வேண்டும். விளம்பரத்திற்காக மட்டுமே வரும் நடிகர்கள் எங்களது போராட்டத்திற்கு தேவையில்லை என்று கூறினர். மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் போட்டதால் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சிங்கம்புலி மற்றும் அவரது குழுவினர் 5 நிமிடத்தில் அங்கிருந்து புறப்பட்டு வெள்ளோட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றனர்.

    மாணவர்கள் நடிகர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது
    ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடக்கும் நடிகர் சங்க போராட்டத்தில் அஜித், த்ரிஷா பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்
    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

    இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வணிகர்கள், தொழிற்சங்கங்கள், ஆசிரியர்கள், லாரி உரிமையாளர்கள், கடையடைப்பு போராட்டம் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். முன்னதாக ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிம்பு, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    மேலும், ஜல்லிக்கட்டுக்காக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் நாசர், கார்த்தி, பொன்வண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் `தல 57' படத்திற்காக பிசியாக இருந்த அஜித், பல்கேரியாவில் இருந்து சென்னை திரும்பி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்க போராட்டத்தில் மனைவி ஷாலினியுடன் பங்கேற்றுள்ளார். மேலும் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக கூறிய நடிகை த்ரிஷாவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டார்.
    தன்னை பீட்டா அமைப்பு சிறப்பித்ததை அவமானமாக கருதுகிறேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டா அமைப்பை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

    இந்நிலையில், நடிகர் தனுஷ் தான் பீட்டா அமைப்பில் இல்லை என்று திட்டட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

    மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகத்தில் காளையும் மனிதனும் இணைந்தே உழைத்ததை அறிய முடிகிறது. இதை உணர்ந்துதான் இந்திய அரசு முத்திரையில் காளையை இடம்பெற செய்திருக்கிறது. உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஆடு, மாடுகளை கால்நடைச்செல்வம் என்றழைத்தது. மாடு போல் உழைப்பான் தமிழன். மாட்டுக்காகவும் உழைப்பான் தமிழன்.

    எந்த அரசியல் தலைவவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல், கொடி இல்லாமல், சாதி, மத வேறுபாடு இல்லாமல் தமிழ்நாட்டு மக்கள் என்ற ஒரே உணர்வோடு மிகவும் கண்ணியமாகவும் கட்டுக்கோப்போடும் நடத்தும் அறவழிப் போராட்டத்தை பார்த்து வியந்து தலைவணங்குகிறேன். முன்பு பீட்டா அமைப்பு சைவ உணவு சாப்பிடுகிறவன் என்ற முறையில் என்னை சிறப்பித்தது. இப்போது அதை பெரும் அவமானமாக கருதுகிறேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன். நானோ எனது குடும்பத்தாரோ யாரும் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
    ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் போராட்டம் சென்னை தி.நகரில் தொடங்கியது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

    இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வணிகர்கள், தொழிற்சங்கங்கள், ஆசிரியர்கள், லாரி உரிமையாளர்கள், கடையடைப்பு போராட்டம் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். முன்னதாக ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிம்பு, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    மேலும், ஜல்லிக்கட்டுக்காக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் நாசர், கார்த்தி, பொன்வண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். ரஜினி கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் போராட்டம் வெற்றி பெறும் என்று தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை பார்க்கலாம்.
    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

    மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வணிகர்கள், தொழிற்சங்கங்கள், ஆசிரியர்கள், லாரி உரிமையாளர்கள், கடையடைப்பு போராட்டம் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். முன்னதாக ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிம்பு, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த அவர் தெரிவித்துள்ளதாவது,

    ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம், அதனை நடத்த தமிழர்கள் துணிச்சலாக போராட வேண்டும். சரியான நேரத்தில் ஒன்றிணைந்துள்ள தமிழக இளைஞர்களின் அறவழிப் போராட்டம் பாராட்டுக்குரியது. மேலும் இந்த போராட்டம் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள், இளைஞர்களின் குரல்கள் கண்டிப்பாக நல்ல நிலையை எட்டும். நானும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மகேஷ் பாபு சென்னையில் பிறந்து, லொயோலா கல்லூரியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கவிஞர் மருதகாசியின் திரை இசைப் பாடல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.
    கவிஞர் மருதகாசியின் திரை இசைப் பாடல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

    சொந்தப்படம் எடுத்ததால் சொத்துக்களை இழந்த மருதகாசி, எம்.ஜி.ஆரால் திரை உலகுக்கு மறுபிரவேசம் செய்தார். தன்னம்பிக்கையுடன், குடும்பத்தாருடன் மீண்டும் சென்னையில் குடியேறினார்.

    தேவர் படங்களுக்கு பாட்டு எழுதினார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த "தசாவதாரம்'', "காஞ்சி காமாட்சி'', "நாயக்கரின் மகள்'' ஆகிய படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.

    மறுபிரவேசத்தில், டப்பிங் படங்கள் உள்பட சுமார் 100 படங்களுக்கு பாடல் எழுதினார்.

    இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த "தாய் மீது சத்தியம்.''

    இதில் இடம் பெற்ற "நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு'' என்ற பாடல் மருதகாசி எழுதியதாகும்.

    பொதுவாக, பட உலகில் ஒரு முறை தோற்றவர்கள் மீண்டும் தலை தூக்குவது மிகவும் கடினம். மருதகாசி அயராது உழைத்து, இழந்தவற்றை மீண்டும் பெற்றார். பழைய புகழோடு, 1989-ம் ஆண்டு, நவம்பர் 29-ந்தேதி காலமானார்.

    அப்போது அவருக்கு வயது 69.

    மருதகாசிக்கு 6 மகன்கள். 3 மகள்கள்.

    மூத்த மகன் இளங்கோவன் விவசாயத்தை கவனிக்கிறார். இரண்டாவது மகன் ராமதாஸ் "பி.ஏ'' பட்டதாரி. குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூன்றாவது மகன் பொன்முடி, ஓவியர்.

    4-வது மகன் மதிவாணன் "மெட்ரோ வாட்டர்'' நிறுவனத்திலும், அடுத்தவர் கிருஷ்ணமூர்த்தி இந்துஸ்தான் டெலிபிரிண்டர் நிறுவனத்திலும் வேலை பார்க்கிறார்கள்.

    6-வது மகன் மருதபரணி, தந்தையின் திரை உலக வாரிசாக விளங்குகிறார். பிற மொழிப் படங்களை தமிழில் மொழி மாற்றம் ("டப்பிங்'') செய்து வருகிறார். இவர் மனைவி உமா பரணி திரைப்படங்களுக்கு, பின்னணியில் குரல் கொடுக்கிறார்.

    மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும், கடந்த மே மாதம் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 லட்சத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

    மருதகாசியுடன் நெருங்கிப் பழகியவரான பட அதிபர் ஏ.கே.வேலன் கூறியதாவது:-

    "வியாபார நோக்கமின்றி, கலை நோக்குடன் சினிமாவுக்கு பாடல்களை எழுதியவர் மருதகாசி. கற்பனை வளம் மிகுந்தவர்.

    அவர் எழுத்திலே தமிழ் மரபு இருக்கும்; தமிழின் தரம் இருக்கும்; புதிய பார்வையும் இருக்கும்.

    என்னுடைய "தை பிறந்தால் வழி பிறக்கும்'' படத்துக்கு அவர் எழுதிய "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்'' என்ற பாடல், ஒவ்வொரு பொங்கல் நாள் அன்றும், தொலைக்காட்சியிலும், வானொலியிலும் ஒலிக்கிறது.''

    இவ்வாறு ஏ.கே.வேலன் கூறினார்.

    கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:-

    "கவிஞர் மருதகாசி என்ற பெயர், கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்த் திரைப்படத் துறையில் கோலோச்சிய பெயர்.

    இன்றைய புதிய விளைச்சல்களுக்கு எல்லாம், முன்னோடியாய் இருந்த நாடறிந்த நாற்றங்கால்.

    அவருடைய பாடல்கள், காற்றையும், காலத்தையும் வென்று, இன்றும் அன்றலர்ந்த மலர்களைப் போல நின்று நிலவுகின்றன.

    கவிஞர் மருதகாசி அவர்கள், திரை உலகில் ஒரு சகாப்தம் படைத்தவர்.

    கால் சட்டை போட்ட பருவம் முதல் இன்று வரை இவரது திரை இசைப் பாடல்களில் எனக்கொரு சுக மயக்கம் உண்டு. மருதகாசியின் பெயர், காற்றைப் போல காலம் எல்லாம் நிலைத்து நிற்கும்.''

    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
    திருமணமான இயக்குனர் ஒருவருடன் நடிகை ஒருவர் நெருக்கமாக இருந்து வருகிறாராம். அந்த நடிகை யார்? அந்த இயக்குனர் யார் என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற குளிர்பானத்தின் பெயரை தனது படத்தின் தலைப்பாக வைத்து எடுத்த இயக்குனரும், பெண் கடவுளின் பெயரை வைத்து அதே இயக்குனர் இயக்கிய படத்தில் நடித்த நடிகையும் கடந்த சில மாதங்களாகவே நெருக்கமான உறவில் இருந்து வருகிறார்களாம்.

    இருவரும் தற்போது பொது இடங்களில் ஒன்றாக சேர்ந்தே ஊர் சுற்றுகிறார்களாம். இயக்குனர் இதுவரை நல்ல படங்களாக கொடுத்திருப்பதால், தற்போது அந்த நடிகை ஒப்பந்தமாகும் படங்களுக்கெல்லாம் இயக்குனர்தான் கதை கேட்கிறாராம். இயக்குனர் கதை ஓகே சொன்னபிறகுதான் அந்த நடிகை அந்த கதையில் நடிக்க ஓகே சொல்கிறாராம்.

    சமீபத்தில்கூட ஒரு படத்தில் நடிக்க நடிகை ஒப்பந்தமாகி பிறகு சில காரணங்களை சொல்லிவிட்டு அந்த படத்தைவிட்டு வெளியே வந்துவிட்டாராம். இதற்கு தனது நெருங்கிய காதலரான இயக்குனர் அந்த படத்தில் நடிக்கவேண்டாம் என்று நடிகையிடம் சொன்னதே காரணம் என்றே சொல்லப்படுகிறது. 
    ×