என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    கவிஞர் மருதகாசியின் திரை இசைப் பாடல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.
    கவிஞர் மருதகாசியின் திரை இசைப் பாடல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

    சொந்தப்படம் எடுத்ததால் சொத்துக்களை இழந்த மருதகாசி, எம்.ஜி.ஆரால் திரை உலகுக்கு மறுபிரவேசம் செய்தார். தன்னம்பிக்கையுடன், குடும்பத்தாருடன் மீண்டும் சென்னையில் குடியேறினார்.

    தேவர் படங்களுக்கு பாட்டு எழுதினார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த "தசாவதாரம்'', "காஞ்சி காமாட்சி'', "நாயக்கரின் மகள்'' ஆகிய படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.

    மறுபிரவேசத்தில், டப்பிங் படங்கள் உள்பட சுமார் 100 படங்களுக்கு பாடல் எழுதினார்.

    இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த "தாய் மீது சத்தியம்.''

    இதில் இடம் பெற்ற "நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு'' என்ற பாடல் மருதகாசி எழுதியதாகும்.

    பொதுவாக, பட உலகில் ஒரு முறை தோற்றவர்கள் மீண்டும் தலை தூக்குவது மிகவும் கடினம். மருதகாசி அயராது உழைத்து, இழந்தவற்றை மீண்டும் பெற்றார். பழைய புகழோடு, 1989-ம் ஆண்டு, நவம்பர் 29-ந்தேதி காலமானார்.

    அப்போது அவருக்கு வயது 69.

    மருதகாசிக்கு 6 மகன்கள். 3 மகள்கள்.

    மூத்த மகன் இளங்கோவன் விவசாயத்தை கவனிக்கிறார். இரண்டாவது மகன் ராமதாஸ் "பி.ஏ'' பட்டதாரி. குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூன்றாவது மகன் பொன்முடி, ஓவியர்.

    4-வது மகன் மதிவாணன் "மெட்ரோ வாட்டர்'' நிறுவனத்திலும், அடுத்தவர் கிருஷ்ணமூர்த்தி இந்துஸ்தான் டெலிபிரிண்டர் நிறுவனத்திலும் வேலை பார்க்கிறார்கள்.

    6-வது மகன் மருதபரணி, தந்தையின் திரை உலக வாரிசாக விளங்குகிறார். பிற மொழிப் படங்களை தமிழில் மொழி மாற்றம் ("டப்பிங்'') செய்து வருகிறார். இவர் மனைவி உமா பரணி திரைப்படங்களுக்கு, பின்னணியில் குரல் கொடுக்கிறார்.

    மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும், கடந்த மே மாதம் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 லட்சத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

    மருதகாசியுடன் நெருங்கிப் பழகியவரான பட அதிபர் ஏ.கே.வேலன் கூறியதாவது:-

    "வியாபார நோக்கமின்றி, கலை நோக்குடன் சினிமாவுக்கு பாடல்களை எழுதியவர் மருதகாசி. கற்பனை வளம் மிகுந்தவர்.

    அவர் எழுத்திலே தமிழ் மரபு இருக்கும்; தமிழின் தரம் இருக்கும்; புதிய பார்வையும் இருக்கும்.

    என்னுடைய "தை பிறந்தால் வழி பிறக்கும்'' படத்துக்கு அவர் எழுதிய "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்'' என்ற பாடல், ஒவ்வொரு பொங்கல் நாள் அன்றும், தொலைக்காட்சியிலும், வானொலியிலும் ஒலிக்கிறது.''

    இவ்வாறு ஏ.கே.வேலன் கூறினார்.

    கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:-

    "கவிஞர் மருதகாசி என்ற பெயர், கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்த் திரைப்படத் துறையில் கோலோச்சிய பெயர்.

    இன்றைய புதிய விளைச்சல்களுக்கு எல்லாம், முன்னோடியாய் இருந்த நாடறிந்த நாற்றங்கால்.

    அவருடைய பாடல்கள், காற்றையும், காலத்தையும் வென்று, இன்றும் அன்றலர்ந்த மலர்களைப் போல நின்று நிலவுகின்றன.

    கவிஞர் மருதகாசி அவர்கள், திரை உலகில் ஒரு சகாப்தம் படைத்தவர்.

    கால் சட்டை போட்ட பருவம் முதல் இன்று வரை இவரது திரை இசைப் பாடல்களில் எனக்கொரு சுக மயக்கம் உண்டு. மருதகாசியின் பெயர், காற்றைப் போல காலம் எல்லாம் நிலைத்து நிற்கும்.''

    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
    திருமணமான இயக்குனர் ஒருவருடன் நடிகை ஒருவர் நெருக்கமாக இருந்து வருகிறாராம். அந்த நடிகை யார்? அந்த இயக்குனர் யார் என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற குளிர்பானத்தின் பெயரை தனது படத்தின் தலைப்பாக வைத்து எடுத்த இயக்குனரும், பெண் கடவுளின் பெயரை வைத்து அதே இயக்குனர் இயக்கிய படத்தில் நடித்த நடிகையும் கடந்த சில மாதங்களாகவே நெருக்கமான உறவில் இருந்து வருகிறார்களாம்.

    இருவரும் தற்போது பொது இடங்களில் ஒன்றாக சேர்ந்தே ஊர் சுற்றுகிறார்களாம். இயக்குனர் இதுவரை நல்ல படங்களாக கொடுத்திருப்பதால், தற்போது அந்த நடிகை ஒப்பந்தமாகும் படங்களுக்கெல்லாம் இயக்குனர்தான் கதை கேட்கிறாராம். இயக்குனர் கதை ஓகே சொன்னபிறகுதான் அந்த நடிகை அந்த கதையில் நடிக்க ஓகே சொல்கிறாராம்.

    சமீபத்தில்கூட ஒரு படத்தில் நடிக்க நடிகை ஒப்பந்தமாகி பிறகு சில காரணங்களை சொல்லிவிட்டு அந்த படத்தைவிட்டு வெளியே வந்துவிட்டாராம். இதற்கு தனது நெருங்கிய காதலரான இயக்குனர் அந்த படத்தில் நடிக்கவேண்டாம் என்று நடிகையிடம் சொன்னதே காரணம் என்றே சொல்லப்படுகிறது. 
    ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடக்க ராணுவம் களமிறங்கப்போவதாக வெளிவந்த செய்திக்கு சிம்பு யோசனை கூறியுள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு அறவழியில் போராட்டம் நடத்தவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகிறார். அவரும், தனது வீட்டின் முன்பு அறவழியில் அமைதியான போராட்டத்தை நடத்தினார். அவரைப்போலவே லட்சக்கணக்கான இளைஞர்களும் - மாணவர்களும் சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், போராட்டக்காரர்களை அடக்குவதற்காக சென்னை மெரீனாவில் ராணுவத்தை குவிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து, சிம்பு ஒரு விஷயத்தை போராட்டக்காரர்களிடையே பகிர்ந்தார். அப்போது அவர் பேசும்போது, போராட்டக்காரர்களை அடக்குவதற்காக மெரீனாவில் ராணுவத்தை குவிக்கப்போவதாக சொல்கிறார்கள். உடனே, என்னுடைய நண்பர்கள் எனக்கு ஒரு யோசனையை சொன்னார்கள்.

    அதாவது, தேசியக் கொடியை உங்கள் உடம்பில் போர்த்திக் கொள்ளுங்கள். அப்போது ராணுவம் எப்படி நம்மீது கை வைப்பார்கள் என்று பார்ப்போம். தேசிய கொடி நம் மேல் இருந்தால் அவர்களால் அடிக்க முடியுமா? அதனால், உடனடியாக போராட்டக்காரர்களுக்கு தேசியக் கொடி கிடைக்கும்படி செய்யுங்கள். எங்கெங்கு தேசிய கொடி கிடைக்குமோ? அங்கு சென்று அவர்களை தட்டியெழுப்பி வாங்கி, போராட்டக்காரர்களிடம் ஒப்படையுங்கள் என்றார். இதை உடனடியாக சமூக வலைத்தளங்களில் சேர்க்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்து வரும் இளைஞர்கள்-மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பின்னால் இருந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    திரையுலக பிரபலங்கள் பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை மவுன-உண்ணாவிரத போராட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தின் உணர்வுக்காக நாளை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார். 
    சிம்பு அறப்போராட்டத்தை கைவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கான காரணமும் என்னவென்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துவரும் நிலையில், நடிகர் சிம்பு நேற்று தனது வீட்டின் முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டத்தை தொடங்கினார். சிம்புவுடன், மகத், ஆதிக் ரவிச்சந்திரன், விஜய் வசந்த், ‘ராஜதந்திரம்’ பட புகழ் வீரபாகு உட்பட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நேற்று இரவு முழுவதும் சிம்பு மற்றும் அவரது போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள் அனைவரும் அவரது வீட்டு வாசலிலேயே படுத்து உறங்கினர். இந்நிலையில், சிம்பு இந்த போராட்டத்தை தற்போது கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து விசாரிக்கையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மீடியாக்களின் கவனம் முழுவதும் ஒட்டுமொத்தமாக மெரீனாவில் இதற்காக போராடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீதுதான் இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவே அவர் இந்த அறப்போராட்டத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு பின்னால் இருந்து அவர் முழு ஆதரவு கொடுக்கப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்துவதற்கு நடிகர் பார்த்திபன் புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

    இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்துவதற்கு புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறும் யோசனையாவது, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும் பொது கிராம சபையில் சிறப்பு தீர்மானம் (ஒரு சட்டம்) இயற்றினால் அது உச்சநீதிமன்றத்தினால் ஒன்றும் செய்ய இயலாது.

    மாடு பிடி விளையாட்டுக்காக கிராம சபை கூட்டி தீர்மானித்தால் மத்திய-மாநில அரசு சட்டங்களால் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். இதை சட்டம் அறிந்தோர் சரிபார்த்து சொல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பார்த்திபனின் இந்த யோசனை சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இவருடைய இந்த யோசனையால் மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த முடியுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 
    நாகார்ஜுனா கலக்கும் ‘சோக்காலி மைனர்’ படத்தின் முன்னோட்டம் குறித்து கீழே பார்க்கலாம்.
    தேவிபரணிகா வழங்கும் ஓம்கார பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘சோக்காலி மைனர்’. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்று இப்போது தமிழில் வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அவருடன் ரம்யாகிருஷ்ணன், அனுஷ்கா, லாவண்யா திரிபாதி, நாசர், பிரமானந்தம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இது நகைச்சுவை கதையம்சம் கொண்ட படம். உல்லாச வாழ்க்கையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு நாகார்ஜுன் சீக்கிரமே எமலோகம் செல்கிறார். அங்கு உள்ள பெண்களையும் மயக்கி தன் வசமாக்குகிறார். இதனால் எமதர்மனுக்கு பெரும் தொல்லையாகிறது.

    எனவே, நாகார்ஜுனாவை எமலோகத்தில் இருந்து எப்படியாவது அனுப்பி விட எமர்தமன் முடிவு செய்கிறார். பூலோகத்தில் உள்ள மனைவி அவரை அழைப்பதாகவும் கூறுகிறார். இதை கேட்ட நாகார்ஜுனா, “ஐயோ... நான் போக மாட்டேன்.. போனால் மனைவி என்னை, அடித்து உதைத்து துவைத்து விடுவாள்” என்று அடம் பிடிக்கிறார்.

    இதனால் எமதர்மன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி தவிக்கிறார். அடுத்து என்ன நடக்கும்? என்பது மீதி கதை. இது போன்ற கலகலப்பான காட்சிகள் கொண்ட படம் ‘சோக்காலி மைனர்’ என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    ஒளிப்பதிவு- பி.எஸ்.வினோத், ஆர்.சித்தார்த், இசை- அனுரூபன்ஸ், ஜான்பீட்டர், பாடல்கள்- குமார் கணேஷ், வசனம்- மைக்கேல் யாகப்பன், நடனம்-ராஜீவ் சுந்தரம், பாபாபாஸ்கர், நிக்ஸன், தயாரிப்பு- கெளபாய் எம்.நிரஞ்சன்குமார் யாதவ், இயக்கம் - கல்யாண கிருஷ்ண குருசாலா.
    கலாச்சாரத்தை மீறாத காதல் கதை ‘விடல பசங்க’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    ‘லோட்டஸ் டிஜிட்டல்ஸ் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் லட்சுமிபுரம் அ.லட்சுமணன் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் ‘விடல பசங்க’. இதில், சாம்ராஜ்-திவ்யா, ருத்வா-பிரியங்கா, சரவணன்-வனிதா நாயகன், நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கோவை செந்தில், அசோக்ராஜன், சின்ராசு, கிளிமூக்கு ராமச்சந்திரன், ஹேமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

    காதலுக்கு ஒரு கொள்கை வைத்து கலாச்சாரத்தை மீறாமல் கண்ணியமான காதலை மையப்படுத்தி கிராமத்து பின்னணியில் சுவைபட இந்த படம் உருவாகியிருக்கிறது. விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 40 அழகிய கிராமங்களில் ஐம்பது நாட்கள் படமாக்கப்பட்டது. இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

    பிப்ரவரி மாதத்தில் ‘விடல பசங்க’ படத்தின் பாடல்கள், இசை, திரைப்பட முன்னோட்டம், பட அறிமுக விழா நடைபெறுகிறது.

    அ.லட்சுமணன்- க.ஜெயமுருகன் என்ற இரட்டையர்கள் இந்த படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு-செஞ்சி குபேந்திரன், இசை, படத்தொகுப்பு-குட்லக் ரவி, பாடல்கள் க.ஜெயமுருகன்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகர் கார்த்தி, சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்துக்கு ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    மெரினாவில் கடந்த 3 நாட்களாக நடைபெறும் போராட்டத்தில் திரையுலக பிரமுகர்களும் கலந்து கொண்டு வருகிறார்கள். நேற்று நடிகர்கள் ராகவா லாரன்ஸ், மன்சூர் அலி கான் ஆகியோர் வந்திருந்தனர். இன்றும் அவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் நடிகர் கார்த்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மெரினாவில் நடக்கும் போராட்டத்தில் இன்று பங்கேற்றார். நடிகர் உதயா, டைரக்டர் கவுதமன் ஆகியோரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நடிகர் கார்த்தி வந்த போது போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் கை தட்டியும், கூச்சலிட்டும் ஆரவாரம் செய்தனர். இதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் கலந்து கொள்ள வருவது யாராக இருந்தாலும் சரி இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டனர். அதன் பின்னரே அங்கு அமைதி நிலவியது.

    பின்னர் பகல் 11.45 மணியளவில் சத்யராஜ் அங்கு வந்து மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றார்.

    பின்னர் சத்யராஜ் நிருபர் களிடம் கூறியதாவது:-

    தலைமை தாங்குவதற்கு எந்தவித அமைப்போ தலைவர்களோ இல்லாமல் சமூக ஊடகங்கள் வாயிலாக மாணவர்கள் திரண்டது பிரமிக்க வைக்கிறது. அவர்களின் இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    `பிரேமம்' படம் மூலம் சினிமாவிற்கு வந்த சாய்பல்லவி ரீமேக் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    ‘பிரேமம்’ என்னும் மலையாளப் படத்தின் மூலம் மலர் டீச்சர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

    ஏற்கெனவே மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருந்த சாய் பல்லவி, மலையாள ரீமேக் மூலம் தமிழில் தனது முதல் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு துல்கர் சல்மான்-பார்வதி நடிப்பில் வெளியாகி மல்லுவுட்டில் நல்ல வரவேற்பை பெற்ற படம் `சார்லி'. இதன் மறுபதிப்பில் மாதவன் நடிப்பதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், இந்த படத்தில் பார்வதியின் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் `கவலை வேண்டாம்' படத்திற்கு இசையமைத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    கேரள முதல்வரின் எளிமையை தமிழகத்தில் எதிர்பார்க்க முடியாது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியை கீழே பார்க்கலாம்.
    நடிகர் சூர்யா நடித்த சிங்கம்-3 சினிமா வருகிற 26-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் கேரளாவில் அதிக தியேட்டர்களில் தமிழிலேயே திரையிடப்படுகிறது.

    இதையொட்டி நடிகர் சூர்யா, அந்த படத்தின் டைரக் டர் ஹரி ஆகியோர் கேரளா சென்று சிங்கம்-3 படத்தை பற்றி அறிமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். கொச்சியில் இருந்து நடிகர் சூர்யா விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு சென்றார். அதே விமானத்தில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனும் பயணம் செய்தார்.

    அவர் சாதாரண வகுப்பில் பயணம் செய்ததை பார்த்து அவரது எளிமையை வியந்த நடிகர் சூர்யா அவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பினராய் விஜயனும் சிரித்துக் கொண்டே சூரியாவுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதுபற்றி திருவனந்த புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் சூர்யா கூறியதாவது:-

    திருவனந்தபுரத்திற்கு நான் விமானத்தில் வந்த போது கேரள முதல்-மந்திரி பினராய்விஜயனை சந்தித்தது என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக உள்ளது. அவர் மிக எளிமையாக, சாதாரண வகுப்பில் பயணம் செய்ததையும், மற்ற பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கும் வரை காத்திருந்து கடைசியாக இறங்கியதையும் என்னால் நம்ப முடியவில்லை. கேரள முதல்வரின் இந்த எளிமையை தமிழகத்தில் எதிர்பார்க்க முடியாது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த பினராய் விஜயனும், எதிர்கட்சி தலைவர்களும் ஒன்றாக வந்து சென்றதும் கேரள மக்களின் அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்து வதாக இருந்தது.

    கேரளாவில் தமிழ் படங்கள் மொழி மாற்றம் செய்யப்படாமல் வெளியிடப்படுகிறது. கேரள ரசிகர்களும் அதை ரசித்து பார்க்கிறார்கள்.
    தமிழ் படங்களுக்கு கேரள மக்கள் கொடுக்கும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களின் வரவேற்பு என்னை நெகிழச் செய்தது.

    தமிழ்நாட்டில் ஜல்லிக் கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்வில் ஒரு மாணவர் காப்பி அடித்தார் என்பதற்காக தேர்வு முறையையே ரத்து செய்வது போல இது உள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் போராட்டம் எழுச்சி மிக்கதாக உள்ளது. அவர்கள் தாமாகவே வந்து போராட்டம் நடத்துவது பெருமையாக உள்ளது. இந்த போராட்டத்தில் உண்மை உள்ளது. ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    தற்போது எங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றியே பேசப்படும் அளவுக்கு ஆதரவு பெருகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் சூர்யாவை பார்ப்பதற்காக ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் திரண்டு இருந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். இதைப்போல சூர்யா தங்கி இருந்த ஓட்டல் முன்பும் ரசிகர்கள் திரண்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    ஓட்டலின் நுழைவுவாயில் கண்ணாடிகளும் ரசிகர்களின் தள்ளுமுள்ளு காரணமாக உடைந்து விழுந்தது. இதனால் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கட்டுப்படுத்தினார்கள்.
    மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வரை போராட்டம் ஓயக்கூடாது என்று திண்டுக்கல்லில் நடிகர் விஜய்சேதுபதி ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.
    ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வரை போராட்டம் ஓயக்கூடாது என்று மாணவர்களை சந்தித்து நடிகர் விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்தார்.

    ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இங்கு ஏராளமானவர்கள் பீட்டா அமைப்புக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுக்கு எதிராகவும் கோசம் போட்டுக் கொண்டு இருந்தனர்.

    அப்போது ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி வந்தார். அவர் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டாக சங்க காலத்திலேயே அடையாளம் காட்டப்பட்டது ஜல்லிக்கட்டு. இந்த வீர விளையாட்டுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் பொங்கல் விழா களை இழந்து உள்ளது. இந்த தடை தமிழ் இனத்துக்கே செய்யும் துரோகம் ஆகும். தற்போது மாணவர்கள் ஒருங்கிணைந்து பாரம்பரியத்தை காக்க போராடுவது பாராட்டுக்குரியது.

    ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்கும் வரை நமது போராட்டம் ஓயக்கூடாது. உங்களது போராட்டத்துக்கு நான் எப்போதும் துணை நிற்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

    திண்டுக்கல் அருகே ஆத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கருப்பன் பட சூட்டிங் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற விஜய்சேதுபதி திடீரென மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
    ×