என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழிப் போராட்டத்தை தொடங்கிய சிம்பு மற்றும் அவரது நண்பர்கள், சிம்பு வீட்டு வாசலிலேயே உறங்கி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் தலைமை ஏதுமின்றி போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இளைஞர்களின் தொடர் ஒத்துழைப்பால் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு கமல், ரஜினி, விஜய், லாரன்ஸ், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, விஷால், தனுஷ்,
    ஜி.வி.பிரகாஷ் உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திரை உலகம் சார்பில் ஆதரவு தெரிவிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் இயக்குனர்கள் கவுதமன், அமீர், நடிகர்கள் ஆர்யா, ஆரி, இசை அமைப்பாளர்கள் யுவன்சங்கர்ராஜா, ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் பங்கேற்றனர். சேலத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் நடிகர், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டார்.

    இந்நிலையில், சிம்பு தனது வீட்டின் முன்பு அறவழியில் போராட்டத்தை நேற்று தொடங்கினார். சிம்புவுடன், மகத், ஆதிக் ரவிச்சந்திரன், விஜய் வசந்த், `ராஜதந்திரம்' பட புகழ் வீரபாகு உட்பட பலரும் போராட்டத்தில்கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின் உச்சகட்டமாக சிம்பு மற்றும் அவரது சகாக்கள் இரவு முழுவதும் அவரது வீட்டு வாசலிலேயே படுத்து உறங்கி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
    சொகுசு கார் இறக்குமதி வழக்கில் முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான சுஷ்மிதா சென் சென்னை கோர்ட்டில் ஆஜர் ஆனார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான சுஷ்மிதா சென் கடந்த 2005-ல் மும்பையை வியாபாரி ஒருவர் மூலமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம் புதிய ‘லேண்ட்-க்ரூஸர்’ கார் ஒன்றை ரூ.55 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.

    ஆனால் அந்தக்கார் 2004 மாடல் என சென்னை துறைமுகத்தில் போலியாக கணக்கு காட்டி இறக்குமதி செய்தது மட்டுமல்லாமல், வரிஏய்ப்பு செய்திருப்பதையும் சுங்க இலாகா துறையினர் கண்டு பிடித்தனர். இதுதொடர்பாக காரை இறக்குமதி செய்து விற்பனை செய்ததாக, மும்பையைச் சேர்ந்த ஹரன் சோக்சே மற்றும் வாசு பண்டாரி தமலா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான 2-வது பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு சுங்க இலாகா தரப்பு சாட்சியமாக நடிகை சுஷ்மிதா சென், நீதிபதி ஜாகீர் உசேன் முன்பாக ஆஜரானார்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சுஷ்மிதா சென்னிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றனர். அதையேற்று நீதிபதி விசாரணையை பிப்ரவரி 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வரும் 20-ம் தேதி திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. தமிழர்களின் மரபுசார்ந்த விளையாட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் என பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டத்தில் ஈடுபடுள்ள இளைஞர்களுக்கு தமிழகமெங்கும் பொதுமக்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில், பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், ரஜினி, விஜய், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி, சிம்பு, சிவகாரத்திகேயன், தனுஷ், இயக்குநர் அமீர், விக்ரமன், நடிகர் மன்சூர் அலிகான் பாரதிராஜா, தங்கர்பச்சான் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    மேலும், நடிகர்சங்கம் சார்பில் வரும் 20-ம் தேதி(வெள்ளிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 20-ம் தேதி திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஜல்லிக்கட்டுக்காக உணர்ச்சிபூர்வமாக போராடும் மாணவர்கள், இளைஞர்களுக்கு உணவு வழங்குவதற்கும், மருத்துவ செலவுக்கும் ரூ.1 கோடி செலவு செய்ய தயாராக இருப்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
    ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ் மெரினாவில் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றார். அவர்களுடன் சேர்ந்து அமர்ந்தார்.

    அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய ராகவா லாரன்ஸ், ‘தமிழகத்தின் கலாசாரத்தை மீட்பதற்காக ஒற்றுமையுடன் போராடும் மாணவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். உணர்ச்சிபூர்வமாக போராடும் மாணவர்கள், இளைஞர்களுக்கு உணவு வழங்குவதற்கும், மருத்துவ செலவுக்கும் ரூ.1 கோடி செலவு செய்ய தயாராக இருக்கிறேன். என்னுடைய சொத்துகள் முழுவதையும் செலவு செய்வதற்கு தயாராக இருக்கிறேன்’ என்றார்.
    முன்னணி நடிகர் நடிகைகள் என பலரும் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அஜித் நடிகர் சங்கம் சார்பில் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கப்போவதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தமிழகமெங்கும் பொதுமக்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில்,  பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. தமிழர்களின் மரபுசார்ந்த விளையாட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் என பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு  ஆதரவும் பெருகி வருகிறது.

    மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், ரஜினி, விஜய், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி, சிம்பு, சிவகாரத்திகேயன், தனுஷ், இயக்குநர் அமீர், விக்ரமன், நடிகர் மன்சூர் அலிகான் பாரதிராஜா, தங்கர்பச்சான் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    முன்னணி நடிகர் நடிகைகள் என பலரும் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நடிகர் அஜித் ஜல்லிக்கட்டு குறித்து எந்தவித தகவலும் அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், நடிகர்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அஜித் பங்கேற்கப் போவதாக தகவல் வந்துள்ளது. அஜித் தற்போது `தல57' படப்பிடிப்பிற்காக பல்கேரியாவில் உள்ளார்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் 20-ம் தேதி நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    `சி-3' படம் ரிலீசாவதை முன்னிட்டு கேரளா சென்ற சூர்யாவை சந்தித்த விஜய் ரசிகர் அவரை நெகிழச் செய்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் `சி-3' படம் ஜனவரி 26-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்காக பட புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக சூர்யா தமிழகம் மற்றும் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    கேரளாவில் படத் தயாரிப்பாளர்கள் போராட்டத்தால் சி-3 படம் ரிலீசாவதில் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், படம் ரீலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கேரளா சென்ற சூர்யா, படம் ரிலீசாக உள்ள திரையரங்குகளை பார்வையிட்டார்.

    அப்போது, சூர்யாவை காண திரளான ரசிகர்கள் கூடியிருந்தனர். தமிழகத்தை போல கேரளாவிலும் விஜய், சூர்யாவுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்பது தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில், மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் ஒருவர், சூர்யாவிடம் நான் விஜய்யின் தீவிர ரசிகன். எனக்காக இந்த புகைப்படத் தொகுப்பை விஜய் அண்ணாவிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சூர்யா அந்த புகைப்படத்தொகுப்பை பெற்றுக்கொண்டு, விஜய்யிடம் கண்டிப்பாக இதனை கொடுப்பதாக உறுதியளித்தார். இந்தசம்பவம் அங்கு கூடியிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தமிழகத்தில் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவும், பீட்டாவுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.
    சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.

    இதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் அ.முத்தையன் கூறியதாவது:-

    "1950-ம் ஆண்டில் என் அண்ணன் "மந்திரிகுமாரி''க்கு பாட்டு எழுதியதில் இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார்.

    அந்தக் காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

    கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

    கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை.

    1963-ல் இருந்து 1967 வரை என் அண்ணன் சென்னை வீட்டை காலி செய்து விட்டு எங்கள் ஊருக்கே வந்துவிட்டார்கள்.

    1967-ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு, குணம் அடைந்தவுடன், பலரும் அவரை நடிக்க அழைத்தனர். ஆனால், தேவர் படத்தில் நடிப்பதற்குத்தான் எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். "பாடல்களை மருதகாசியை வைத்தே எழுதுங்கள்'' என்று தேவரிடம் சொல்லிவிட்டார்.

    அதைத்தொடர்ந்து, மருதகாசிக்கு தேவர் கடிதம் எழுதினார். "நான் அடுத்து எடுக்கப்போகும் படத்தின் பெயர் "மறுபிறவி.'' எம்.ஜி.ஆர். எடுத்திருப்பதும் மறுபிறவி. பட உலகைத் துறந்துவிட்ட உங்களுக்கும் மறுபிறவி. அதாவது 4 ஆண்டுகளுக்குப்பின் மறுபிரவேசம் செய்கிறீர்கள். உடனே புறப்பட்டு சென்னைக்கு வாருங்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதன்படி கவிஞர் உடனே புறப்பட்டுச் சென்று, சென்னையில் எம்.ஜி.ஆரையும், தேவரையும் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவோடு, என் அண்ணன் மருதகாசியின் திரையுலக மறுபிரவேசம் நிகழ்ந்தது.

    "மறுபிறவி'' படம், ஒரு பாடலோடு நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக, "தேர்த்திருவிழா'' படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அண்ணன் மருதகாசியே எழுதினார்.

    தேவருக்கு பெரும்பொருளை அள்ளித் தந்தது, அந்தப்படம். பாதிப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் கிராமப் பகுதியில் அமைந்த கொள்ளிடம் கரையில்தான் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார்.

    எம்.ஜி.ஆர். என் அண்ணனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவியிருக்கிறார். ஒவ்வொரு மகன் திருமணத்திற்கும் உதவியிருக்கிறார்.''

    இவ்வாறு பேராசிரியர் முத்தையன் கூறினார்.

    மருதகாசிக்கு கவிஞர் கா.மு.ஷெரீப் நெருங்கிய நண்பர். ஆரம்பத்தில் மருதகாசியும், கா.மு.ஷெரீப்பும் இணைந்து, பல பாடல்களை எழுதினார்கள். பிறகு தனித்தனியாக எழுதினார்கள்.

    தமிழரசு கழகத்தின் முக்கிய பிரமுகராகவும், பேச்சாளராகவும் கா.மு.ஷெரீப் விளங்கினார். கட்சிப்பணி காரணமாக, அவர் அதிக பாடல்களை எழுதவில்லை. பாடல்கள் எண்ணிக்கை குறைவு என்றாலும், கருத்தாழம் மிக்க பாடல்கள்.

    புலவர் ஏ.கே.வேலனும், மருதகாசியும் சம காலத்தவர்கள். இருவரும் தேவி நாடக சபையில் ஒன்றாக பணியாற்றினார்கள்.

    ஏ.கே.வேலன் வசன கர்த்தாவாக உயர்ந்து, அருணாசலம் ஸ்டூடியோவை உருவாக்கி "தை பிறந்தால் வழி பிறக்கும்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். அதற்கு, "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்'' என்ற பாடலை மருதகாசி எழுதினார்.

    அதன் பிறகு, ஏ.கே.வேலன் தயாரித்த பல்வேறு படங்களுக்கும் ஏராளமான பாடல்களை மருதகாசி எழுதினார். "பொன்னித்திருநாள்'' என்ற படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுதினார்.

    உடுமலை நாராயணகவியை தன் குருவாக நினைத்தவர், மருதகாசி. "என்னுடைய 2 ஆயிரம் பாடல்கள், கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது'' என்று மனந்திறந்து பாராட்டுவார்.

    அத்தகைய உடுமலை நாராயணகவி, மருதகாசி மீது அளவற்ற பாசமும், அன்பும் வைத்திருந்தார். அவருக்கு வந்த வாய்ப்புகள் பலவற்றை அவர் ஏற்க மறுத்த சந்தர்ப்பங்களில், "இதற்கு பொருத்தமானவர் மருதகாசிதான். அவரை எழுதச் சொல்லுங்கள்'' என்று கூறியிருக்கிறார்.

    குறிப்பாக, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிரமாண்டமாகத் தயாரித்த "தசாவதாரம்'' படத்துக்கு பாடல் எழுத முதலில் அழைக்கப்பட்டவர் உடுமலை நாராயணகவிதான். அவர், "மருதகாசிதான் இதற்கு நன்றாக எழுதக்கூடியவர். அவரைக் கூப்பிடுங்கள்'' என்று கூறிவிட்டார்.

    இதன் காரணமாக "தசாவதாரம்'' படத்துக்கு எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், நடிகர் சிம்பு தனது வீட்டின் முன்பு அறவழியில் போராட்டத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள்  தலைமை ஏதுமின்றி போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இளைஞர்களின் தொடர் ஒத்துழைப்பால் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு கமல், ரஜினி, விஜய், லாரன்ஸ், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, விஷால், தனுஷ், ஜி.வி.பிரகாஷ் உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திரை உலகம் சார்பில் ஆதரவு தெரிவிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் இயக்குனர்கள் கவுதமன், அமீர், நடிகர்கள் ஆர்யா, ஆரி, இசை அமைப்பாளர்கள் யுவன்சங்கர்ராஜா, ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் பங்கேற்றனர். சேலத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் நடிகர், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டார்.

    இந்நிலையில், சிம்பு தனது வீட்டின் முன்பு அறவழியில் போராட்டத்தை தொடங்கியுள்ளார். சிம்புவுடன், ஆதிக் ரவிச்சந்திரன், விஜய் வசந்த், ராஜதந்திரம் புகழ் வீரபாகு உட்பட பலரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    கமல், பிரபு நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `வெற்றி விழா' படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மீண்டும் திரைக்கு வருகிறது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    சமீபகாலமாக சிவாஜி, எம்.ஜி.ஆர்., நடித்த பழைய படங்கள் தற்போது டிஜிட்டலில் மாற்றப்பட்டு மீண்டும் ரிலீசாகி வருத் நிலையில், கமல், பிரபு நடிப்பில் கடந்த 1989-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `வெற்றி விழா' படமும் டிஜிட்டலில் மாற்றப்பட்டு மீண்டும் ரிலீசாக உள்ளது. இப்படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் ஹவுஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரிலீசாக உள்ள இந்தபடத்தை பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார்.

    முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்ட `பாட்ஷா' படம் பொங்கல் ரிலீசாக ஜனவரி 10-ம் தேதி மீண்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
    `மகளிர் மட்டும்' படத்தில் புல்லட் ஓட்டும் பெண்ணாக வலம் வரும் ஜோதிகாவின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    `குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா அடுத்ததாக ஜோதிகாவை வைத்து `மகளிர் மட்டும்' என்ற படத்தை இயக்கி வருகிறார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயிண்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

    திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்ட ஜோதிகா, `36 வயதினிலே' படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். அதனைத்தொடர்ந்து தற்போது, `மகளிர் மட்டும்' படத்தில் நடித்து வருகிறார். பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் பெண்ணுரிமை பற்றி பேசும் ஜோதிகா, இந்த படத்தில் புல்லட் ஓட்டும் பெண்ணாக நடித்துள்ளார்.

    படம் முழுவதும் புல்லட்டில் வலம் வரும் ஜோதிகா, இதற்காக ஒருவாரம் சூர்யாவிடம் புல்லட் ஓட்ட பழகியுள்ளார். இதன்பின்னரே  இப்படத்தில் ஜோதிகா நடிக்கத் தொடங்கியுள்ளார். இதனிடையே, இப்படத்தில் ஜோதிகா புல்லட் ஓட்டிக்கொண்டு வரும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    முன்னதாக நாசர், நடிகை ரேவதி, ஊர்வசி நடிப்பில் `மகளிர் மட்டும்' படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    சிபிராஜ் விதிமுறைகளுடன் கூடிய ஜல்லிக்கட்டை நடத்த முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இளைஞர்களின் இந்த எழுச்சி போராட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது நடிகர் சிபிராஜும் தனது ஆதரவு கருத்தை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, நமது நாட்டில் விலங்குகள் நல வாரியமும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் விலங்குகளை வதைப்பதை பல கஷ்டங்களையும் தாண்டி தடுத்து வருகின்றனர். உதாரணத்திற்கு 90-களில் படப்பிடிப்பின்போது நிறைய மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அடிபட்டது, சில நேரங்களில் இறப்பும் நடந்துள்ளது.

    ஆனால், தற்போது விலங்குகள் நலவாரியத்தின் கடுமையான விதிகளாலும், வழிமுறைகளாலும் இது பெருமளவுக்கு குறைந்து போயுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படாதவாறு விதிமுறைகளுடன் நடத்த முயற்சிகள் எடுக்கவேண்டுமே தவிர, பாரம்பரியமான அந்த விளையாட்டுக்கே தடை கொடுப்பது சரியான தீர்வல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் முதன்முதலாக படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடிப்பில் வெளியான `பைரவா' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் பிசியாக உள்ளார். இதனைதொடர்ந்து தமிழில் `சண்டக்கோழி-2' படத்திலும், தெலுங்கில் 3 படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

    கேரளாவை பூர்வீகமாக கொண்டுள்ள கீர்த்தி சுரேஷின் அம்மாவும் நடிகையுமான மேனகா, ரஜினிக்கு ஜோடியாக `நெற்றிக்கண்' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் தந்தையும், தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் தனது மகளை பின்பற்றி படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மலையாளத்தில் அருண் கோபி இயக்கத்தில் திலீப் நடித்து வரும் `ராம்லீலா' படத்தில் சுரேஷ்குமார் அரசியல்வாதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
    ×