என் மலர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜன.20-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்த போராடத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக இன்று சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து நடிகர் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறும்போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் ஒரு உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது. அவர்களுக்கு பின்னால் இருந்து எங்களின் ஆதரவை தெரிவிப்போம்.
வருகிற ஜனவரி 20-ந் தேதி நடிகர் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்துகொள்வார்கள். இந்த போராட்டம் அறவழியில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் மற்றும் உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

பாலியல் குற்றத்தை தடுக்க யுரேகா இயக்கத்தில் உருவாகியுள்ள `சிவப்பு எனக்கு பிடிக்கும்' படம் வரும் 20-ம் தேதி ரிலீசாகிறது. இதுகுறித்த ருசீகர தகவலை கீழே பார்க்கலாம்.
`மதுரை சம்பவம்' படத்திற்கு பிறகு இயக்குநர் யுரேகா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `சிவப்பு எனக்கு பிடிக்கும்'. பாலியல் குற்றங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், `போராளி' பட புகழ் சாண்ட்ரா எமி நடித்துள்ளார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்போரேஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அமிஷ் யுவானி இசையமைத்துள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாது, வடமாநிலங்களிலிருந்தும் வேலைதேடி சென்னைக்கு வரும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் தங்களது உணர்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். இதனை தடுக்க பாலியல் கல்வியை ஊக்குவித்து ஆபாசங்களின்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் ஐடி நிறுவன பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் நடந்து வருகிறது. இதுபோன்ற குற்றசெயல்களை தடுக்க, சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தணிக்கைகுழு பாராட்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற குற்ற செயல்களை தடுக்க சென்னையில் சிவப்பு விளக்குப் பகுதியை உருவாக்குவது போன்ற காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி 20-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் இயக்குநர் யுரேகாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்.

தன்னுடைய பட விளம்பரத்துக்காகவே சூர்யா ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாக பீட்டா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
ஜல்லிக்கட்டு தேவை என்பதற்கு தமிழகத்தில் ஆதரவும், போராட்டங்களும் பெருகிவரும் நிலையில், ஜல்லிக்கட்டை எதிர்த்த பீட்டா அமைப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் பீட்டாவை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அவர்களில் சூர்யாவும் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும்விதமாக பீட்டா அமைப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் சூர்யா மற்றும் இதர நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இவ்வளவு காலதாமதாக குரல் கொடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசியது தற்செயலாக நடந்தது கிடையாது. அவருடைய சி3 படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவ்வாறு பேசியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டால் சில காளைகளும், சில மனிதர்களும் இறந்து போயுள்ளார்கள். அரசாங்கம் இந்த விஷயத்தை தடைசெய்தும் அதை நடத்துவதே மிகப்பெரிய தவறு. அப்படியிருந்தும், அதற்கு ஆதரவாக பேசுவது அதைவிட கேவலமானது என்று கூறியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள `போகன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
ஜெயம் ரவி - ஹன்சிகா மூன்றாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘போகன்’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில், படம் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான `மிருதன்' படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி நடித்துள்ள `போகன்' படத்தை வருகிற பிப்ரவரி 9-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்தை ‘ரோமியோ ஜுலியட்’ படத்தை இயக்கிய லக்ஷமண் இயக்கியுள்ளார்.
‘போகன்’ படத்தில் அரவிந்தசாமி, வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

சற்குணம் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் புதிய படம் தமிழ், இந்தி என இருமொழிகளிலும் தயாராக உள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
நடிகர் மாதவனை வைத்து இயக்குனர் சற்குணம் கதை, வசனம் எழுதி இயக்கும் படம் உருவாகிறது. இந்தபடத்தை சற்குணம் சினிமாஸ், ஏ.நந்தகுமார் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படம் தமிழ், இந்தியில் தயாராக இருக்கிறது. இதில் வரும் பறவைகள், விலங்குகள் குழந்தைகளை கவரும் விதமாக காட்சி அமைக்கப்படயிருக்கிறது. பெரும்பாலான காட்சிகளை தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் படமாக்க இருக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார். நடிகர், நடிகையர், டெக்னிசியர்கள் தேர்வு நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருக்கும் விஷயங்களை கீழே விரிவாக பார்ப்போம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் இளைஞர்களுக்கு பல்வேறு சினிமா துறையினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் தனது ஆதரவை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
இளைய தலைமுறையின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம். இநத தருணத்தில் பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தை சேர்ந்தவள் என்னும் பெருமை என்னை தலைநிமிர வைக்கிறது. இளைய தலைமுறையின் இந்த போராட்டம் அமைதியான முறையிலே நடப்பது நம்மை பெருமைப்பட வைக்கிறது.
நான் தமிழ்நாட்டில் பிறந்திருக்காவிட்டாலும் எனக்கு ஒரு அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் பெற்று தந்தது இந்த தமிழ் மண்ணும், தமிழ் மக்களும்தான். இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தில் அவர்களோடு நான் உறுதுணையாக நிற்பேன் என்பதை உறுதியாக சொல்லி கொள்கிறேன். அவர்களுடன் என்னுடைய குரலும் இணைந்து நம் கலாச்சாரத்துக்கு எதிரான அந்த அந்நிய நாட்டு நிறுவனத்துக்கு நம் பலத்தை காட்டும் என நம்புகிறேன்.
அவர்களின் பொய்யான வாதத்தை உண்மை என்று நம்பிய நமது நீதி மற்றும் அரசு துறைகளுக்கும் நம் குரல் கேட்கும் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எடுத்து இருக்கும் இந்த உணர்ச்சிகரமான நடவடிக்கை நிச்சயமாக தமிழக கலாச்சாரத்தின் பெருமையை உலகமெங்கும் ஒலிக்க செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொண்டு, தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று தொடர்ந்து இந்த இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஒரு சராசரி குடிமகளாக நான் அவர்களின் ஒற்றுமைக்கும், தைரியத்திற்கும் தலை வணங்குகிறேன். இவர்களின் இந்த முயற்சி, தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டை, எந்தவித காலதாமதமும் இன்றி மீண்டும் தமிழகத்தில் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நாடெங்கும் ஜல்லிக்கட்டு முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதராக திரைஉலகினரின் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக லாரன்ஸ், சிவகார்திகேயன் என பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் களம் இறங்கி உள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, விஷால், தனுஷ் உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திரை உலகம் சார்பில் ஆதரவு தெரிவிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் இயக்குனர்கள் கவுதமன், அமீர், நடிகர்கள் ஆர்யா, ஆரி, இசை அமைப்பாளர்கள் யுவன்சங்கர்ராஜா, ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் பங்கேற்றனர். சேலத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் நடிகர், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டார்.
சென்னையில் பங்கேற்பு
சென்னை மெரீனா கடற்கரையிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று தொடங்கி விடிய விடிய நடந்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலான நடிகர்கள் நேரடியாக கலந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் ரசிகர்களிடம் இருந்து வந்தது. இந்த நிலையில் நடிகர்களும் நேரில் வந்து ஆதரவு தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
சென்னை மெரீனாவில் நடைபெறும் போராட்டத்தில் நடிகர்கள் ராகவாலாரன்ஸ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரில் பங்கேற்றனர். மன்சூர் அலிகான் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவர்களும் இளைஞர்களுடன் தரையில் உட்கார்ந்து கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
அண்ணா நகர் கந்தசாமி கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் லிவிங்ஸ்டன் கலந்து கொண்டார். இது போல் மற்ற நடிகர்- நடிகைகளும் போராட்டத்துக்கு நேரில் வந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, முக்கிய நடிகர், நடிகைகள், கலை உலகினர் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்த போராட்டத்தின் போது, சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தினார்கள். பலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேற்கத்திய கலாச்சார விளையாட்டுக்கள் நம் மக்களின் பொழுது போக்குக்கு மட்டுமே சிறந்தது. ஆனால் நம் ஜல்லிக்கட்டு என்பது ஆண்மைக்கும், வீரத்துக்கும் உரியதானது. ஆண்டு முழுவதும் தங்களது செல்ல குழந்தைகளாக கருதப்படும் காளைகளை ஜல்லிக்கட்டிற்காக மூன்றே நாள் தான் விளையாட வைக்கிறார்கள்.
ஆனால் நாள் முழுவதும் எத்தனை லட்சம் உயிர்கள் நம் உணவுக்காகவும், உடைகளுக்காகவும், தோலுக்காகவும் கொல்லப்படுகிறது. ஜல்லிக்கட்டிற்காக மூன்றே நாட்கள் பயன்படுத்தப்படும் காளைகள் வதை செய்யப்படுகிறது என்றால், உணவுக்காகவும், தோலுக்காகவும், உடைக்காகவும் கொல்லப்படும் விலங்குகள் என்ன தாங்களாகவே தங்கள் தலையை நீட்டி கொல்லப்படுவதை வரவேற்கின்றனவா?
வீர விளையாட்டுக்கு மிருகவதை என்று பெயராம். வியாபாரத்திற்கு அன்னிய செலாவனி என்று பெயராம். கடந்த சில நாட்களாக சகோதரர், சகோதரிகள் ரோட்டில் நின்று போராடுகிறார்கள். அதற்காக அடித்து உதைத்து துன்புறுத்துவதா? மாடுகளை துன்புறுத்துகிறோம் என்று தடை செய்து விட்டு மனிதர்களை அடித்து துரத்தி துன்புறுத்துவது என்ன நியாயம்? தமிழன் போராடுவது எதற்காக? தாங்கள் வீரன் என சொல்லப்படுவதற்காக... ஜல்லிக்கட்டு வேண்டி போராடுபவர்களை முடக்கி கோழைகளாக்க வேண்டாம்.
தயவு செய்து மாநில அரசும், மத்திய அரசும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கம்பீரத்துக்கும், அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப் புற மாடுகள், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் போல் அன்புகாட்டி அவற்றை வளர்த்து வருகிறார்கள்.
ஸ்பெயினில் மாடு பிடிப்பதென்பது, விளையாட்டின் இறுதியில், மாட்டின் முதுகில் கத்திகளைச்சொருகி, அந்த மாடு கீழே விழுந்து இறந்த பின், அதை எடுத்துச் சென்று உணவாக்குவது. தமிழ்நாட்டில் மாட்டை அப்படி யாராவது கொல்வதைப் பார்த்திருக்கிறீர்களா?
லட்சக்கணக்கான மாடுகளை, ஈவு இரக்கமின்றி கொன்று, அதன் இறைச்சிகளை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில், இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது, ‘கோமாதா நம் குல மாதா’என்று பசுவைக் கும்பிடும் பா.ஜ.க.அரசுக்கு தெரியாதா? பசு வதைத் தடைச்சட்டம் இதற்குப் பொருந்தாதா? சீறும் சிங்கங்களாக தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுச்சியுடன் போராடுகிறார்கள்... மக்கள் நலனுக்காகவே சட்டம். நீதிமன்றம் இதைப் புரிந்து கொண்டு ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க
வேண்டும். இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களுக்கு ராகவா லாரன்ஸ் தனது ஆதரவை கொடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்தை வெளியிட்டு வரும் நிலையில், நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது ஆதரவை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
மேற்கத்திய கலாச்சார விளையாட்டுக்கள் நம் மக்களின் பொழுதுபோக்குக்கு மட்டுமே சிறந்தது. ஆனால் நம் ஜல்லிக்கட்டு என்பது ஆண்மைக்கும், வீரத்துக்கும் உரியதானது.
சுமார் 5000-ம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் வீர விளையாட்டாக கொண்டாடப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு தடையா? ஆச்சர்யம் தான். ஆண்டு முழுவதும் தங்களது செல்ல குழந்தைகளாக கருதப்படும் காளைகளை ஜல்லிக்கட்டிற்காக மூன்றே நாள் தான் விளையாட வைக்கிறார்கள். ஆனால் நாள் முழுவதும் எத்தனை லட்சம் உயிர்கள் நம் உணவுக்காகவும், உடைகளுக்காகவும், தோலுக்காகவும் கொல்லப்படுகிறது.
ஜல்லிக்கட்டிற்காக மூன்றே நாட்கள் பயன்படுத்தப்படும் காளைகள் வதை செய்யப்படுகிறது என்றால், உணவுக்காகவும், தோலுக்காகவும், உடைக்காகவும் கொல்லப்படும் விலங்குகள் என்ன தாங்களாகவே தங்கள் தலையை நீட்டி கொல்லப்படுவதை வரவேற்கின்றனவா ?
வீர விளையாட்டுக்கு மிருக வதை என்று பெயராம். வியாபாரத்திற்கு அன்னிய செலாவனி என்று பெயராம். கடந்த சில நாட்களாக சகோதரர், சகோதரிகள் ரோட்டில் நின்று போராடுகிறார்கள் எதற்காக? நமக்கு பிடித்த விளையாட்டை விளையாட விடுங்கள் என்று.. அதற்காக அடித்து உதைத்து துன்புறுத்துவதா? மாடுகளை துன்புறுத்துகிறோம் என்று தடை செய்து விட்டு மனிதர்களை அடித்து துரத்தி துன்புறுத்துவது என்ன நியாயம்?
தமிழன் போராடுவது எதற்காக? தாங்கள் வீரன் என சொல்லப்படுவதற்காக. ஜல்லிக்கட்டு வேண்டி போராடுபவர்களை முடக்கி கோழைகளாக்க வேண்டாம். தயவு செய்து மாநில அரசும், மத்திய அரசும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் அருள்நிதி தலைமையில் 500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நடிகர்-நடிகைகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அருள்நிதி தலைமையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டிரஸ்ட்புரம் மைதானத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்தக்கோரி இளைஞர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஷால் இன்று பத்திரிகையாளர் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, நான் என்றுமே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளன்தான். ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய பீட்டா அமைப்பில் நான் உறுப்பினரே கிடையாது. யாரோ ஒருவர் அப்படியொரு தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு எனது பெயரை களங்கப்படுத்திவிட்டார்.
ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் நடத்தக்கூடிய இந்த போராட்டம் மிகப்பெரியது. ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற அவர்களது போராட்டம் கண்டிப்பாக வெற்றியடையும். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மத்திய அரசு முன்வரவேண்டும். இதற்காக நான் தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன். அவரை சந்திக்கவும் அனுமதி கேட்டுள்ளேன். விரைவில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடந்த தீரும். விரைவில், நடிகர் சங்கம் மூலமாகவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து, நடிகர் சங்கத்தில் விவாதித்து அதன்பிறகு போராட்டத்தில் களமிறங்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

அனுமதி காலாவதியான துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் அவரை விடுதலை செய்து ஜோத்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றிருந்தார்.
அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்து 10-4-2006 அன்று தீர்ப்பளித்தது.
தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 2007-ம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் நடிகர் சல்மான்கானின் 5 ஆண்டு கால ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.
இதனால் அவர் ஜோத்பூர் போலீசாரிடம் சரண் அடைந்தார். 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் 6 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது.
பின்னர், ஜாமினில் விடுதலையான நடிகர் சல்மான்கான், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 9 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் சல்மான் கானை விடுதலை செய்து உத்தரவிட்டது.
சல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இதே மான் வேட்டை சம்பவத்தில் அனுமதி காலாவதியான துப்பாக்கியை வைத்திருந்ததாக ஜோத்பூர் மாவட்ட கோர்ட்டில் வனத்துறையினர் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் வாதப் பிரதிவாதங்கள் கடந்த 9-ம் தேதி நிறைவடைந்தது.
இதையடுத்து, இவ்வழக்கில் வரும் 18-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் தல்பட் சிங் ராஜ்புரோஹித் அறிவித்திருந்தார். தீர்ப்பு வெளியாகும்போது சல்மான் கான் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதாலும், சல்மான் கான் ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பிலும், கோர்ட் வளாகத்தை சுற்றிலும் ஏராளமான ஊடக நிருபர்களும், பொதுமக்களும் குவிந்தனர். இதனால் அப்பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இன்று காலை 11 மணியளவில் சல்மான் கான் அவரது சகோதரி அல்விரா கான் ஆகியோர் கோர்ட் வளாகத்தை வந்தடைந்தனர். பின்னர், இவ்வழக்கில் சல்மான் கானை விடுதலை செய்து ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
சல்மான் கான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசு தரப்பு வக்கீல்கள் தவறியதால் இந்த வழக்கில் இருந்து சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதாக அவரது வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்ப்புக்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக தீர்ப்பின் நகல் கிடைத்தப்பின்னர் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என சல்மான் கானுக்கு எதிராக இவ்வழக்கை தொடர்ந்த விஷ்னோயி சமாஜ் இயக்கத்தின் வழக்கறிஞர் நிரூபர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் நமது ஒற்றுமையின் அடையாளம் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகமெங்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அமைதிப் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். சென்னை மெரீனாவிலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களின் ஆதரவை நேரில் சென்று தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று நடிகரும், சமூக ஆர்வலருமான ஆர்.ஜே.பாலாஜி, போராட்டத்தில் குதித்துள்ள இளைஞர்களை சந்தித்து தனது முழு ஆதரவை தெரிவித்தார். அப்போது, மாணவர்களிடையே அவர் பேசும்போது, ஒட்டுமொத்த தமிழ்நாடும் அவரவர் இருக்கும் இடங்களில் இந்தளவுக்கு அமைதியாக ஒரு போராட்டத்தை நடத்த முடியாது. யாரையும் அடிக்கவில்லை, பஸ் கண்ணாடியை உடைக்கவில்லை, யாரும் குடித்துவிட்டு இங்கு கலாட்டா பண்ணவில்லை. இருக்கிற ஒவ்வொரு இளைஞர்களும் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோட அடையாளம் என்றால், இப்போது நடந்து கொண்டிருக்கிற போராட்டம் நம்முடைய எல்லோருடைய ஒற்றுமையின் அடையாளம். இந்த ஒற்றுமை ஜல்லிக்கட்டை நடத்திவிட்டு அதோடு சென்றுவிடுவது கிடையாது. விவசாயி தற்கொலை என்றாலும் இதே கூட்டம்தான் வந்து போராடப் போகிறது. கல்லூரியில் கட்டணம் அதிகம் வசூலித்தாலும் அதற்காக இந்த கூடடம் வந்து போராடவிருக்கிறது.
இனிமேல் எங்களை யாரும் ஏமாற்ற முடியாது. எங்களை ஏமாற்ற நினைத்தால் நாங்கள் போராடுவதற்கு ரோட்டிற்கு வருவோம். எங்களால மற்றவங்களை காப்பற்றுவதற்காக ரோட்டில் வந்து போராட முடியும். எங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கும் எங்களால் போராடமுடியும். அதனுடைய வெளிப்பாடுதான் இது.
நான் தமிழன் என்பதில் எனக்கு ரொம்ப பெருமை. அதேபோல், இந்தியன் என்பதிலும் பெருமை கொள்கிறேன். ஆனால், என்னுடைய தமிழ் என்கிற அடையாளத்தை அழிக்க நினைப்பதற்கு நான் ஒருபோதும் துணை நிற்க மாட்டேன் என்று பேசி முடித்தார்.