என் மலர்
மாணவர்களை சமாதானம் செய்யச்சென்ற நடிகர் இமான் அண்ணாச்சி மீது போலீஸ் தடியடி நடத்தியதில் காயமானார். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
மாணவர்களை சமாதானம் செய்ய முயன்ற நடிகர் இமான் அண்ணாச்சிக்கும் போலீஸ் தடியடி விழுந்தது. இது குறித்து அவர் கூறியதாவது:-
மாணவர்களும் இளைஞர்களும் அறவழியில் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் மீண்டும் கடலில் இறங்கி மாணவர்கள் பேராடுவதாக கேள்விப்பட்டதும் அவர்களிடம் பேசி சமாதானம் செய்வதற்காக நானும் சில நண்பர்களுடன் நேற்று மெரீனாவுக்கு சென்றேன். இது பற்றி அங்கு நின்ற போலீசாரிடம் சொன்னேன்.
அப்போது அங்குவந்த ஒரு போலீஸ்காரர் கண் மூடித்தனமாக எங்கள் மீது தாக்குதல் நடத்தினார். எனது கையில் தடியடி விழுந்தது. என்னை காப்பாற்ற முயன்ற அலெக்ஸ் என்ற இளைஞரின் தலையில் கடுமையாக போலீசார் தாக்கியதில் அவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. காலில் எலும்பு முறிந்தது.
நல்ல போலீசார் இருக்கிறார்கள். என்றாலும் இது போன்ற தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது. இது குறித்து மேல் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இமான் அண்ணாச்சி கூறினார்.

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கி உருவாகியுள்ள `சி-3' படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
சூர்யா நடிப்பில் தற்போது ‘எஸ்-3’ படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ள நிலையில்இ படம் தொடர்ந்து பலமுறை தள்ளிப்போகிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான தேதியை படக்குழு பலமுறை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முன்னதாக இப்படம், குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என அறிவித்திருந்த பட நிறுவனம் தற்போது அதனை ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக போராடி வந்தனர். போராட்டங்கள் முடிவுக்கு வந்தாலும் இயல்பு நிலை திரும்பாததால் படம் வெளியிடுவதை தள்ளிவைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிக்கை வெளியிட்டது. மேலும், படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, ஜல்லிக்கட்டு பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் படத்தை வெளியிட படக்குழு தயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் `விஜய் 61' படத்தில் காமெடியனான சத்யன் நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
‘பைரவா’ படத்தையடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் அவரது 61-வது படத்தில் நடிக்கிறார். அட்லி இயக்கும் இதில் முறுக்கு மீசை தாடியுடன் நடிக்க இருக்கிறார். இதற்காக விஜய் தாடி மீசை வளர்த்து வருகிறார். அவருக்காக படக்குழுவினர் காத்து இருக்கிறார்கள். மார்ச் மாதம் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லி இயக்கிய முதல்படமான ‘ராஜா ராணி’யில் நயன்தாரா, நஸ்ரியா முக்கிய வேடங்களில் நடித்தனர். அடுத்து விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் சமந்தா, எமிஜாக்சன் ஆகியோரை அட்லி நடிக்க வைத்தார்.
அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 61-வது படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட 3 நடிகைகள் நடிக்க உள்ளனர். `நான் ஈ', `பாகுபலி', `பஜ்ரங்கி பைஜான்' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜேந்திர பிரசாத் இப்படத்திற்கும் திரைக்கதை எழுதுவது குறிப்பிடத்தக்கது.
விஜய் - அட்லி மீண்டும் இணைவதால் பெரிதாக எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் காமெடியனாக வடிவேலு நடிப்பதாக தகவல்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சத்யன் - விஜயுடன் இணைய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, `சச்சின்', `அழகிய தமிழ்மகன்', `வேட்டைக்காரன்', `நண்பன்', `துப்பாக்கி' `புலி' உள்ளிட்ட படங்களில் சத்யன், விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் அட்லி இயக்கிய `ராஜா ராணி' படத்திலும் சத்யன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக தனது 25-வது படத்தில் தீவிர ரஜினி ரசிகையாக நிக்கி கல்ராணி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.
ஆதி-நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள `மரகத நாணயம்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது நிக்கி - விக்ரம் பிரபுவுடன் இணைந்து `நெருப்புடா' படத்தில் நடித்து வருகிறார். அசோக் குமார் இயக்கும் இப்படத்தை சீன் ரோல்டன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், நிக்கி தனது அடுத்த படத்தில் மீண்டும் விக்ரம் பிரபுவுடன் இணைய உள்ளார். நிக்கியின் 25-வது படமான அந்த படத்திற்கு `பக்கா' என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. முற்றிலம் பொழுதுபோக்கு படமாக எடுக்கப்பட உள்ள இப்படத்தில் நிக்கி சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகையாக நடிக்க உள்ளாராம்.

`மொட்ட சிவா கெட்ட சிவா', `மரகத நாணம்', `கி', `ஹரஹர மகாதேவகி' உள்ளிட்ட பல படங்கள் நிக்கியின் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு மலையாள படத்திலும் நிக்கி நடித்து வருகிறார்.

குஜராத் மாநிலத்தில் ஷாரூக்கானை பார்த்த குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அகமதாபாத்:
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ராயீஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதிக்கு சென்றிருந்தார்.
அப்போது ராஜ்தானி விரைவு ரெயில் வண்டியில் சென்ற வந்த ஷாரூக்கானை காண ரசிகர்கள் குவிந்து இருந்தனர். நேற்று அதனால் ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்ப்பட்டது.
இரவு 10.30 மணிக்கு ரெயிலானது ரெயில் நிலையத்திற்கு வந்தது. சுமார் 10 நிமிடம் அங்கு ரெயில் நின்றிருந்தது. அந்த நேரத்தில் தான் ஷாரூக்கானை காண ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.
போலீசார் தரப்பில் கூறுகயில், “ரெயில் புறப்பட்ட பிறகு கூட அதனை பின் தொடர்ந்து ரசிகர்கள் ஓடினர். அதனால் ஒருவர் மீது ஒருவர் கீழே சரிந்து விழுந்தனர். கூட்டத்தை கலைக்க லேசான தடியடியும் நடத்தப்பட்டது” என்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தால் விஜய்யின் `பைரவா' படத்தின் வசூல் சற்றே குறைந்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பைரவா’ படம் பொங்கல் வெளியீடாக கடந்த 12-ந் தேதி வெளியானது. கிட்டத்தட்ட 55 நாடுகளில் பிரம்மாண்டமாக வெளிவந்த இப்படம் ரிலீசான தேதியில் மட்டும் ரூ.16 கோடிக்கும் மேல் வசூலித்தாக கூறப்பட்டது. அன்றைய தேதியில் சென்னையில் மட்டும் ரூ.92 லட்சம் வரை வசூல் செய்தததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ‘பைரவா’ வெளியாகிய முதல் வாரத்தில் நல்ல வசூலைப் பெற்றிருந்த நிலையில், 2-வது வாரத்தில் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தால் சென்னையில் ரூ.70 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. மேலும் சென்னையில் கடந்த 20 முதல் 22-ம் தேதி வரை 23 திரைகளில் `பைரவா' 280 முறை திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் `பைரவா' வசூல் சற்று குறைந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை சென்னையில் மட்டும் `பைரவா' படம் ரூ.5.7 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய `துருவங்கள் பதினாறு' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரையரங்களில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்படத்தக்கது.

தனக்கு ஜோதிடர் சொன்ன ஜோதிடம் பலித்ததால், ஜோதிடக் கலையைக் கற்றுத் தேர்ந்தார், வெண்ணிற ஆடை மூர்த்தி. "நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆவீர்கள்'' என்று ரஜினிகாந்துக்கு ஜோதிடம் சொன்னார்.

நாடகங்களில் நடித்த அனுபவத்தில் "வெண்ணிற ஆடை'' மூர்த்தியும் ஒரு நாடகம் உருவாக்கினார். "லட்சுமி கல்யாண வைபோகமே'' என்ற அந்த நாடகத்தில் பழமை மாறாத ஒரு கிராமத்தை கண்முன் நிறுத்தினார். இந்த நாடகம் சிங்கப்பூர், இலங்கை என வெளிநாடுகளிலும் நடந்தது.
இந்த நாடகம் நூறாவது நாளாக மேடையேறியபோது, டைரக்டர் கே.பாலசந்தர், கவிஞர் வைரமுத்து போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவுக்காக 2 கதைகள் எழுதினார். "மாலை சூடவா'' என்ற கதை, கமலஹாசன் நடிக்க, சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் படமானது.
"ருசி'' என்ற பெயரில் எழுதிய இன்னொரு கதையில் மோகன் நடிக்க, "அன்னக்கிளி'' டைரக்டர்கள் தேவராஜ் - மோகனில் ஒருவரான மோகன் இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கும் வசனமும் எழுதினார், வெண்ணிற ஆடை மூர்த்தி.
இந்த காலகட்டத்தில் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையும் மூர்த்திக்கு பெரிய அளவில் வந்துவிட்டது. ஜோதிடம் தொடர்பாக புத்தகங்களை கருத்தூன்றி படித்து, அதில் தன்னை மெருகேற்றிக் கொண்டார். தனக்கு நடிக்கும் வாய்ப்பு தேடிவரும் என்று சொன்ன ஜோதிடர் `பண்டிட்' கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை அடிக்கடி சந்தித்து, ஜோதிடம் தொடர்பான புதுப்புது விவரங்களை தெரிந்து கொண்டார். இந்த முயற்சியில் ஜோதிடம் தொடர்பான 2 கட்டுரைகளை ஜோதிடர் ஆசிரியராக இருந்த பத்திரிகையிலேயே எழுதினார். ஒருநாள் அந்த ஜோதிடரே இவரிடம், "உனக்கு ஜோதிடம் நன்றாக வருகிறது. அதிலும் உன்னை வளர்த்துக்கொள்'' என்றிருக்கிறார்.
வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஜோதிடமும் அத்துப்படியான நேரத்தில் ரஜினியின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்தார். அப்போது ரஜினியின் சினிமா எதிர்காலம் பற்றி தெளிவாக சொன்னார். அதுபற்றி வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது:-
"ரஜினியுடன் நான் "முள்ளும் மலரும்'' படத்தில் சேர்ந்து நடித்தேன். நீண்ட இடைவெளிக்குப்பிறகு, "சிகப்பு சூரியன்'' படத்தில் நடித்தோம். அப்போது அவர் நடிப்பில் வளர்ந்து வந்த நேரம். ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினி தனது ஜாதகத்தை என்னிடம் காட்டினார். அதைப்பார்த்த நான், "நடிப்பில் பெரும் புகழ் உங்களை வந்து சேரும். பெரிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வந்துடுவீங்க'' என்றேன். ரஜினி சிரித்துக்கொண்டார். அடுத்தடுத்து அவர் நடிப்பில் வந்த படங்கள் பெரிய அளவில் வசூலைத்தர, ஜோதிடம் சொன்னது போலவே சூப்பர் ஸ்டாராகி விட்டார்.
அதுமாதிரி நடிகர் திலகம் சிவாஜியுடனும் எனக்கு ஒரு ஜோதிட அனுபவம் உண்டு. சிவாஜி சார் நடித்த "அஞ்சல் பெட்டி-520'' படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது என்னிடம் பிரியமாக பேசுவார். "யோவ்! காமெடியன்! இங்கே வாய்யா'' என்றுதான் அழைப்பார்.
நான் ஜோதிடக் கலையை கற்றுத் தேர்ந்த நேரத்தில் ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்த்தேன்.
"வணக்கம் சார்! நல்லா இருக்கீங்களா?'' என்று கேட்டேன்.
"உனக்கு ஜோசியம் தெரியுமாமே'' என்று கேட்டார், சிவாஜி.
"தெரியும் சார்'' என்றேன்.
"உன் ஜோசியம் எனக்கு என்னய்யா சொல்லுது?'' - கேட்டார் சிவாஜி.
நான் அவரிடம் ஜாலியாக, "ஜோசியம் பார்த்தால் எல்லாரும் பணம் கொடுப்பாங்க. நீங்க என்ன கொடுப்பீங்க?'' என்று கேட்டேன்.
"என்னடா நீ! வம்பு பிடிச்ச ஆளா இருப்பே போலிருக்கே'' என்று சிரித்த சிவாஜியிடம், "இல்ல சார்! உங்களுக்கு பார்த்து சொல்றதைவிட பெரிய பாக்கியம் என்ன இருக்கிறது?'' என்று சொன்னவன், அவர் ஜாதகத்தை வரவழைத்து அப்போதே பார்த்தேன்.
நான் அவரிடம், "அரசியலில் உங்களுக்கு ஒரு பதவி வர இருக்கிறது'' என்றேன்.
நான் சொன்னதை நம்பவில்லை என்பதை அவரது கண்கள் காட்டிக் கொடுத்தன.
ஆனால் ஜோதிடம் பொய்யாகவில்லை. சில நாட்களிலேயே ராஜ்யசபா எம்.பி.யாக சிவாஜியை நியமித்து அறிவிப்பு
வந்தது.''
இவ்வாறு மூர்த்தி கூறினார்.
சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்ற ஏக்கம் மூர்த்திக்கு இருந்தது. எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை'' படத்தில் அப்படியொரு வாய்ப்பும் வந்தது. ஆனால் துரதிருஷ்டம்! கதையுடன் ஒட்டவில்லை என்று கூறி வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த காமெடிக் காட்சிகளையே நீக்கி விட்டார்கள்!
இதுபற்றி மூர்த்தி கூறியதாவது:-
"எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டேன். ஆனாலும் செட்டில் அவர் நடித்த நாட்களில் எனக்கு ஷூட்டிங் இருக்காது. எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்து
2 நாட்களுக்குப் பிறகே என்னை அழைத்தார்கள். டி.எஸ்.பாலையா, ஜெயலலிதா நடித்த காட்சியில் நானும் நடித்தேன். நான் நடித்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை என்பது படம் ரிலீசான பிறகே எனக்குத் தெரியும்.
அவர் படத்தில் நான் இல்லையே தவிர, நான் நடித்த நாடகம் ஒன்றில் என் நடிப்பை மனதார பாராட்டிய வள்ளல் அவர். மேஜர் சுந்தர்ராஜன் நடத்திய "தீர்ப்பு'' என்ற நாடகம் நூறாவது நாள் கண்டது. நூறாவது நாள் விழாவுக்கு எம்.ஜி.ஆர். வந்திருந்தார். முழு நாடகத்தையும் பார்த்து ரசித்தார். அவர் பேசும்போது, "மேஜர் சுந்தர்ராஜன் நன்றாக நடிப்பார் என்பது எனக்குத் தெரியும். இந்த நாடகத்தில் `ராமு' என்ற கேரக்டரில் நடித்தவரின் நடிப்பை நான் இதுவரை பார்த்ததில்லை. அருமையாக நடிக்கிறார். என் தாயின் ஆசியோடு சொல்கிறேன். அவர் நல்லா வருவார்'' என்றார்.
நாடகத்தில் `ராமு'வாக நடித்தது நான்தான். அவரின் மனப்பூர்வ பாராட்டு எனக்கு `ஆசி'யாக அமைந்தது. நடிப்பில் எனக்கு வளர்ச்சியாகவும் அமைந்தது.
எம்.ஜி.ஆர். அவர்களின் பாராட்டுக்கு இணையான பாராட்டு நான் நடிக்க வரும் முன்பே எனக்கு கிடைத்து விட்டது. அப்போது என்னைப் பாராட்டியவர் நகைச்சுவை மாமேதை `கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன்.
அப்போது நான் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி விழாவில் நாங்கள் "ஐம்பதும் அறுபதும்'' என்ற பெயரில் ஒரு காமெடி நாடகம் போட்டோம். கல்லூரி விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம் தம்பதிகள் வந்திருந்தார்கள். எங்கள் நாடகத்தை பார்த்த தம்பதியர் இருவருமே பாராட்டினார்கள். மதுரம் அம்மா பேசும்போது, என்னை சுட்டிக்காட்டி, "இந்தப் பையன் ரொம்ப நல்லா `ஆக்ட்' பண்றான்'' என்றார். கலைவாணர் என்னை அழைத்து, "நல்லா படிப்பா. படிப்பை பூர்த்தி பண்ணிட்டு அப்புறமா சினிமாவுக்கு வா'' என்று கூறினார்.
நான் சினிமா பற்றி சிந்திக்காத அந்தக் காலத்தில், என்னை நடிக்க வரச்சொல்லி வாழ்த்திய கலைவாணரின் ஆசியும் எனக்கு கிடைத்திருப்பதாகவே கருதுகிறேன்.''
இவ்வாறு கூறினார், வெண்ணிற ஆடை மூர்த்தி.

தமிழகத்தில் தற்போது சட்டம் - ஒழுங்கு நிலை சரி இல்லாததால், குடியரசு தினத்தன்று வெளியாக இருந்த ‘சி-3’ திரைப்படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது ‘எஸ்-3’ படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம், இந்த மாதம் குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக போராடி வந்தனர்.
போராட்டங்கள் முடிவுக்கு வந்தாலும் இயல்பு நிலை திரும்பாததால் படம் வெளியிடுவதை தள்ளி வைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது அறவழிப்போராட்டத்தை உடனே அமைதியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என நடிகர் ரஜினி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
மெரினா கடற்கரையை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மறுத்து வருவதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு என போலீசார் இன்று எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில் மெரினாவில் உள்ள ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னைவாசிகளும் இன்று போராட்டக் களத்தில் குதித்தனர்.
இதனால் சென்னையில் பேருந்து மற்றும் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் மெரினா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்து, போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் தங்களது அறவழிப்போராட்டத்தை உடனே அமைதியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என நடிகர் ரஜினி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சில சமூக விரோத சக்திகள், இளைஞர்களின் போராட்டத்திற்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்கின்றனர்..ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பாதுகாப்பாக இருந்த காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது.
இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன். மத்திய மாநில அரசுகள் உறுதி கூறிய பின்பு, அதற்கு கௌரவம் கொடுத்து அமைதி காப்பது தான் கண்ணியமான செயலாகும். எனவே, மாணவர்கள் தங்களது அறவழிப்போராட்டத்தை உடனே அமைதியாக முடிவுக்குக்கொண்டு வரவேண்டும்" என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்திற்காக முறுக்கு மீசை தாடியுடன் புதிய கெட்டப்பில் விஜய் நடிக்க உள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
‘பைரவா’ படத்தையடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் அவரது 61-வது படத்தில் நடிக்கிறார். அட்லி இயக்கும் இதில் முறுக்கு மீசை தாடியுடன் நடிக்க இருக்கிறார். இதற்காக விஜய் தாடி மீசை வளர்த்து வருகிறார். அவருக்காக படக்குழுவினர் காத்து இருக்கிறார்கள். மார்ச் மாதம் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லி இயக்கிய முதல்படமான ‘ராஜா ராணி’யில் நயன்தாரா, நஸ்ரியா முக்கிய வேடங்களில் நடித்தனர். அடுத்து விஜய் நடித்த ‘தெறி’
படத்தில் சமந்தா, எமிஜாக்சன் ஆகியோரை அட்லி நடிக்க வைத்தார். அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 61-வது படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். சமந்தாவையும் நடிக்க வைக்கிறார். இதிலும் அட்லியின் மற்ற படங்களைப் போல 2 நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள்.

`குங்பூ யோகா' படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக நடிகர் ஜாக்கி சான் இந்தியா வந்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
`குங்பூ யோகா' படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக நடிகர் ஜாக்கி சான் இந்தியா வந்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் மும்பை விமான நிலையம் வந்த அவரை சோனு சூட் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.
அவர்கள் இருவரும் கபில் ஷர்மா நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் பின்னர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும்
கூறப்படுகிறது. `குங்பூ யோகா' படத்தை சீனாவின் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ளது
குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபியான சோனு சூட், தமிழில் வெளியான ‘அனேகன்’ படத்தில் கதாநாயகியாக தோன்றிய அமிரா தஸ்துர் ஜாக்கி சானுடன் இணைந்து ‘குங்பூ யோகா’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு வேண்டி நடத்திய அறவழிப் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. மாணவர்கள் வீடு திரும்புங்கள் என்று ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை காணலாம்.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் அறவழிப் போராட்டத்தை தொடங்கினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வந்தது. பொதுமக்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை கொண்டு வருவதாக முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். இந்நிலையில், நிரந்தர தீர்வு வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்த வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை போராக்காரர்களை போலீசார் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கடலை நோக்கி படையெடுத்தனர். போலீசார் எங்களை வெளியேற்ற நினைத்தால் கடலில் இறங்கி தற்கொலை செய்து விடுவதாகவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் ஒருசிலர் போலீசாருடன் கல்வீச்சு, தள்ளுமுள்ளு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து நடிகர் லாரன்ஸ் போராட்டத்தில் வெற்றி பெற்று விட்டோம். தற்போது நாம் கொண்டாட வேண்டிய தருணம். போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் ஆர்ஜே பாலாஜியும் போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி கூறியதாவது,
அறவழியில் போராட்டத்தை தொடங்கிய நாம் வெற்றி பெற்றுவிட்டோம். யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். போராட்டத்தை கைவிடுங்கள். நமது போராட்டத்தின் போது நமக்கு உறுதுணையாக, கண்ணியமாக நம்முடனேயே இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்.
அறவழியில் தொடங்கி பாரட்டுக்களை பெற்ற நமது போராட்டத்தை வன்முறையில் ஈடுபட்டு இறுதியில் கெட்டபெயரை வாங்க வேண்டாம். இந்த போராட்டம் மாபெரும் வெற்றி என்பதைதாண்டி கேவலமான போராட்டம் என்ற கலங்கத்துடன் முடிய வேண்டாம். எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் வீடு திரும்பிங்கள். போராட்டம் முடிந்தது என்று கூறியுள்ளார்.