என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் ஷாரூக்கானை பார்க்க குவிந்த ரசிகர்கள்: கூட்ட நெரிசலில் ஒருவர் பலி
    X

    குஜராத்தில் ஷாரூக்கானை பார்க்க குவிந்த ரசிகர்கள்: கூட்ட நெரிசலில் ஒருவர் பலி

    குஜராத் மாநிலத்தில் ஷாரூக்கானை பார்த்த குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    அகமதாபாத்:

    பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ராயீஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதிக்கு சென்றிருந்தார்.

    அப்போது ராஜ்தானி விரைவு ரெயில் வண்டியில் சென்ற வந்த ஷாரூக்கானை காண ரசிகர்கள் குவிந்து இருந்தனர். நேற்று  அதனால் ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்ப்பட்டது. 

    இரவு 10.30 மணிக்கு ரெயிலானது ரெயில் நிலையத்திற்கு வந்தது. சுமார் 10 நிமிடம் அங்கு ரெயில் நின்றிருந்தது. அந்த நேரத்தில் தான் ஷாரூக்கானை காண ரசிகர்கள் திரண்டு இருந்தனர். 

    இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். 

    போலீசார் தரப்பில் கூறுகயில், “ரெயில் புறப்பட்ட பிறகு கூட அதனை பின் தொடர்ந்து ரசிகர்கள் ஓடினர். அதனால் ஒருவர் மீது ஒருவர் கீழே சரிந்து விழுந்தனர். கூட்டத்தை கலைக்க லேசான தடியடியும் நடத்தப்பட்டது” என்றனர்.

    Next Story
    ×