என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    இலியானா பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இலியானா. இவர் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில், இலியானாவுக்கு கடந்த சில வருடங்களாக எந்த சினிமா வாய்ப்பும் இல்லை. எனவே, தனது காதலருடன் நாடு நாடாக பயணம் சென்று பொழுதை கழித்து வருகிறார்.

    இவரது காதலர் புகைப்படக் கலைஞர் என்பதால் அவ்வப்போது கிளாமர் உடைகளை இவர் அணிந்துகொண்டு அதை புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் இவரது பிறந்தநாளின்போது நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையுடன் குளிப்பதுபோன்ற ஒரு வீடியோவை பதிவு செய்து வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.


    இந்நிலையில், தற்போது இலியானா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தனது நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் முழு நிர்வாணத்துடன் குளியல் தொட்டியில் படுத்துக் கொண்டிருப்பதுபோல் அந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை தனது காதலர் எடுத்ததாகவும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி மீண்டும் அவரை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. 
    2012-ஆம் ஆண்டு தெலுங்கில் ‘6’ என்ற பெயரில் ஜெகபதி பாபு நடித்து வெளிவந்த படமே தற்போது ‘சூரக்கோட்டை மர்மம்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. இந்த படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றால், சூரக்கோட்டை என்ற குக்கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் 12 மணி நேரம்தான் ஒருநாள் கணக்கு. அவர்கள் காலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தால் மாலை 6 மணிக்குள் அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிடவேண்டும். அப்படி யாராவது 6 மணிக்கு மேல் வெளியே சுற்றித் திரிந்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள்.

    இப்படியான மர்மங்கள் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்தவர்தான் நாயகன் ஜெகபதி பாபு. இவர் ஐ.ஏ.எஸ். படிப்பு முடித்துவிட்டு அந்த ஊருக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க நினைக்கிறார். ஆனால், இவர் படித்து முடித்தவுடன் எதிர்பாராதவிதமாக இறந்துபோகிறார்.

    நிறைவேறாத ஆசைகளுடன் இவர் இறந்துபோன பிறகுதான் அந்த ஊரில் மாலை 6 மணிக்கு மேல் இறக்கின்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கிறது. இதனால் கிராம மக்களின் சந்தேகம் இவர்கூடவே வலம் வரும் நாயகி காயத்ரி ஐயர் மேல் விழுகிறது. உண்மையில், இந்த சம்பவங்களுக்கெல்லாம் யார் காரணம்? ஜெகபதிபாபு உண்மையில் இறந்துவிட்டாரா? என்பதை பிற்பாதியில் விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள்.

    படத்தின் நாயகன் ஜெகபதி பாபுதான் படத்தில் இவரது முகத்தை வெறும் 15 நிமிடங்கள்தான் பார்க்க முடிகிறது. மற்றபடி, இவரது முகத்தை பார்க்கமுடியவில்லை. அதனால், இவரை நம்பி போனவர்களுக்கு படத்தில் மிகப்பெரிய ஏமாற்றம்தான். நாயகி காயத்ரி ஐயர் படத்தின் முக்கால் பாகம் நிறைந்திருக்கிறார். கதைப்படி இவர் கிராமத்து பெண். ஆனால், படம் முழுக்க கிளாமர் உடையிலேயே இயக்குனர் வலம்வர வைத்திருப்பது ஏனோ தெரியவில்லை.

    வில்லனாக வரும் பள்ளிரெட்டி புருதிராஜ் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் பலவீனமானவர் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மற்றபடி, படத்தில் நடித்திருப்பவர்கள் யாரும் மனதில் நிற்கவில்லை. ரொம்பவும் சிறிய பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகாந்த் லிங்காத். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு இந்த படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா? என்றால் சந்தேகமே. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கிறது.

    ரவி வர்மாவின் இசையிலும் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. லேகா ரத்னகுமாரின் பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம். பிரபா கரணின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.

    மொத்தத்தில் ‘சூரக்கோட்டை மர்மம்’ புரியவில்லை.

    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக பேசியதாக கூறப்படுவது என்னை பழிவாங்குவதற்காக யாரோ செய்யும் முயற்சி என்று விஷால் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு போராடி உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்தது. இதனால், தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. ஆனால், இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடைபெற முடியாத சூழ்நிலை எழுந்தபோது மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் களமிறங்கினர்.

    அதேநேரத்தில், ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய பீட்டா அமைப்பில் இருந்த நடிகர், நடிகைகளையும் கடுமையாக விமர்சித்தனர். இந்த வரிசையில் நடிகர் விஷாலும் பீட்டா உறுப்பினர் என்று சொல்லப்பட்டதால், அவரின் மீது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்தனர். அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கூட உருவாக்கப்பட்டது.

    விஷால், தான் ஒரு பீட்டா உறுப்பினர் இல்லை என்று சொல்லியும், அவரை சமூக வலைத்தளத்தில் எதிர்த்துக்கொண்டே இருந்தனர். அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் மூலம் மௌன போராட்டம் நடத்தியபோதும், அவருக்கு எதிர்ப்புகள் வந்தன. இதனால், அவர் டுவிட்டரை விட்டு ஓடக்கூடிய நிலைமையும் ஏற்பட்டது.

    இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் அடித்தது சரி என்று சகாயம் ஐஏஎஸ் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து, மீண்டும் சமூகவலைத்தளத்தில் விஷால் குறித்து அவதூறான கருத்துக்களை பேசத் தொடங்கினர்.

    இதையறிந்த விஷால் உடனே ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் போராட்டம் குறித்து நான் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. இது வெறும் வதந்திதான். என்னை பழிவாங்குவதற்கு இது நேரமில்லை, வேறு விஷயத்தில் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாணவர்களின் போராட்டம் வெற்றி அடைந்துள்ள இந்த சமயத்தில் என்னை பற்றி தவறான தகவல்கள் வருவது வருத்தம் அளிக்கிறது என்று பேசியிருக்கிறார்.
    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக பேசியதாக கூறப்படுவது என்னை பழிவாங்குவதற்காக யாரோ செய்யும் முயற்சி என்று விஷால் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு போராடி உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்தது. இதனால், தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. ஆனால், இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடைபெற முடியாத சூழ்நிலை எழுந்தபோது மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் களமிறங்கினர்.

    அதேநேரத்தில், ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய பீட்டா அமைப்பில் இருந்த நடிகர், நடிகைகளையும் கடுமையாக விமர்சித்தனர். இந்த வரிசையில் நடிகர் விஷாலும் பீட்டா உறுப்பினர் என்று சொல்லப்பட்டதால், அவரின் மீது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்தனர். அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கூட உருவாக்கப்பட்டது.

    விஷால், தான் ஒரு பீட்டா உறுப்பினர் இல்லை என்று சொல்லியும், அவரை சமூக வலைத்தளத்தில் எதிர்த்துக்கொண்டே இருந்தனர். அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் மூலம் மௌன போராட்டம் நடத்தியபோதும், அவருக்கு எதிர்ப்புகள் வந்தன. இதனால், அவர் டுவிட்டரை விட்டு ஓடக்கூடிய நிலைமையும் ஏற்பட்டது.

    இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் அடித்தது சரி என்று சகாயம் ஐஏஎஸ் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து, மீண்டும் சமூகவலைத்தளத்தில் விஷால் குறித்து அவதூறான கருத்துக்களை பேசத் தொடங்கினர்.

    இதையறிந்த விஷால் உடனே ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் போராட்டம் குறித்து நான் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. இது வெறும் வதந்திதான். என்னை பழிவாங்குவதற்கு இது நேரமில்லை, வேறு விஷயத்தில் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாணவர்களின் போராட்டம் வெற்றி அடைந்துள்ள இந்த சமயத்தில் என்னை பற்றி தவறான தகவல்கள் வருவது வருத்தம் அளிக்கிறது என்று பேசியிருக்கிறார்.
    மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளதாக நடிகை சிருஷ்டி டாங்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    தமிழ் பட உலகில் வளர்ந்து வரும் நாயகி சிருஷ்டி டாங்கே. ‘தர்மதுரை’ படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘அச்சமின்றி’. படத்திலும் இவரது நடிப்புக்கு நல்லவரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது மோகன்லால் நடிக்கும் ‘1971- பிகைண்ட்த பார்டர்’ படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து சிருஷ்டி டாங்கேவிடம் கேட்ட போது...

    “நான் கடுமையாக போராடி வெற்றி பெற்றிருக்கிறேன். நான்கு படங்கள் வெற்றி பெற்று நானும் இந்த ரேசில் சேர்ந்திருக்கிறேன். ரொம்ப சந்தோ‌ஷமாக இருக்கிறது. இந்த வருடம் குறைந்தது 10 படங்களாவது எனக்கு ரிலீஸ் ஆகும் வாய்ப்பு இருக்கிறது.

    இப்போது நான் இன்னும் சந்தோ‌ஷமாக இருக்கிறேன். காரணம் மோகன்லால் நடிக்கிற படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனக்கு பெருமை மேஜர்ரவி டைரக்‌ஷன் என்று சொன்னாலே உடம் பெல்லாம் சிலிர்க்குது.

    மோகன்லால் படதில் நடிக்க ஒப்பந்தமான உடனேயே எப்போது அவருடன் நடிப்போம் என்று துடிச்சிட்டு இருந்தேன். நடிக்க ஆரம்பித்த உடனேயே ஜாம்பாவானுடன் நடித்த பெருமை எனக்கு.

    ‘1971-பிகைண்ட் திபார்டர்’ என்ற இந்தப் படம் எனக்கு மலையாளத்தில் முதல் படம். அல்லு சிரிஷுடன் ஜோடியாக நடிக்கிறேன். ராணுவம் சம்மந்தப் பட்ட கதை இது. நான் தமிழ் பேசும் தமிழ் பெண்ணாக நடிக்கிறேன்.

    இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகிறது.

    2017- எனக்கு நம்பிக்கை கொடுக்கும் ஆண்டாக அமையும்” என்றார்.
    காமெடி நடிகர் சத்யன் தற்போது தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
    பல்வேறு படங்களில் விதம் விதமாக நடித்து கலகலப்பூட்டி வருபவர் சத்யன். இப்போது குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடிக்கிறார். இதுபற்றி கேட்டபோது...

    “நான் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பெரிய படங்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக் கிறேன்.

    சமீபகாலமாக சிறிய படங்களில் நடித்தால் அதில் பல படங்கள் திரைக்கே வருவது இல்லை. இதனால் எனது உழைப்பு வீணாகி விடுகிறது. எனவே தான் சிறிய படங்களை நான் ஏற்க இயலவில்லை.

    தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் முழுக்க முழுக்க சூர்யாவுடன் வரும் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறேன். விஜய்யின் 61-வது படத்தில் அவருடைய நண்பனாக நடிக்கிறேன்.

    இப்போது விஜய், சூர்யா படங்களில் மட்டும்தான் நடித்து வருகிறேன். இது போன்ற பெரிய நடிகர்கள், பெரிய டைரக்டர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.
    கவர்ச்சியான வேடங்களில் நடிக்கவே இயக்குநர்கள் அழைப்பதாக நடிகை சுனைனா தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    மும்பை வரவு சுனைனா. இவர் ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசில்லாமணி’, ‘பாண்டி ஒலி பெருக்கி நிலையம்’ உள்ளிட்ட படங்களில் குடும்பங்காக கவர்ச்சியாக நடித்திருக்கிறார். ‘வம்சம்’, ‘நீர்பறவை’ படங்களில் நடித்தார். ஜீவா நடித்த ‘கவலை வேண்டாம்’ படத்தில் 2-வது கதாநாயகியாக வந்தார்.

    தற்போது சமுத்திரக்கனி இயக்கி நடித்து வரும் ‘தொண்டன்’ படத்தில் சமுத்திரகனி ஜோடியாக சுனைனா நடிக்கிறார். வேறு சில புதிய படங்களிலும் நடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது பற்றி கூறிய சுனைனா...

    “இப்போது இயக்குனர்கள் எல்லாம் கவர்ச்சியான வேடங்களில் நடிக்கத்தான் அழைக்கிறார்கள். இனி அழுத்தமான வேடங்களில் நடிக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. சமுத்திரக்கனி சாருடன் நல்ல வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது போன்ற நல்ல பாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்” என்றார்.
    சத்யராஜ் - வடிவேலு மீண்டும் இணைந்து புதிய காமெடி படத்தில் நடிக்க உள்ளனர். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
    தமிழ் சினிமாவில் சத்யராஜுடன் கவுண்டமணி போட்ட லூட்டிகளுக்கு அளவே இல்லை. அதே போல், வடிவேலு-சத்யராஜ் இணைந்து நடித்த படங்களும் மக்களால் ரசித்து பார்க்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி ஆகியுள்ள வடிவேலு, சத்யராஜுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

    மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'கட்டப்பனயிலே ரித்விக் ரோஷன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் சத்யராஜ் - வடிவேலு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய நதிர்ஷாவே தமிழிலும் இயக்கவுள்ளாராம்.

    இந்த படத்தை பிரபல மலையாள நடிகர் திலீப் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    `6'2'. `அசத்தல்', `சவுண்ட் பார்ட்டி', `கோவை பிரதர்ஸ்', `லூட்டி', `பெரிய மனுஷன்', `இங்கிலீஷ்காரன்', `மண்ணின் மைந்தன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் சத்யராஜ்-வடிவேலு காமெடி கூட்டணி கலக்கியிருந்தது. இந்நிலையில் மீண்டும் இக்ககூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்களுக்கு காமெடி ட்ரீட் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ஜல்லிக்கட்டு உள்ளிட்ட எதையும் தடை செய்ய நினைப்பவர்களுக்கு கமல் யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டம் அமைதியாக நடந்தது. இது என்னை மிகவும் கவர்ந்தது. அதில் வன்முறை எதுவும் நடைபெறவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நேற்று அப்புறப்படுத்தும் வேலையை போலீஸ் செய்யாமல் இருந்திருந்தாலே இவ்வளவு பாதிப்பு நடந்தி ருக்காது.

    இந்த போராட்டத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டவர்கள் சோர்வடையவே இல்லை. ஏனென்றால் அவர்கள் ஒரு உணர்வுபூர்வமான வி‌ஷயத்துக்கு ஒன்றாக வந்தனர். ஒரு கொண்டாட்டத்துக்கு அவர்கள் ஒற்றுமையுடன் வந்தனர். காந்தியின் கனவு நனவாகிய நிகழ்வு இது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாட்டுக்கு எதிரிகள் அல்ல. அவர்களை மோசமாக சித்தரிக்க வேண்டாம். பெண்களும் பாதுகாப்பாக இருந்தனர். இந்த உண்மையை யாரும் மறைக்க முடியாது.

    வன்முறை சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் மீது கட்சி சாயம் பூசப்படுகிறது. இதை ஏற்க முடியாது. சென்னையில் நிகழ்ந்த வன்முறை அதிர்ச்சி அளிக்கிறது.

    இது தமிழ் கலாச்சாரத்தின் மீதான ஊடுருவல். இதை அனுமதிக்க முடியாது. ஜல்லிக்கட்டு மீது இரட்டை நிலை கடைபிடிக்கப்படுகிறது.

    காவலர்களே வாகனத்துக்கு தீ வைப்பது போன்ற வீடியோவை பார்த்தேன். இது அதிர்ச்சியளிக்கிறது. அதற்கான விளக்கம் அளிக்கப்படும் என்று நம்புகிறேன்.

    வன்முறையில் ஈடுபட்டவர்கள் உண்மையான போலீஸ்காரர்களாக இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அதிருப்தியின் அடையாளமே போராட்டம்.

    மாடு முட்டி இறப்பவர்களைவிட வாகன விபத்தில் இறப்பவர்கள்தான் அதிகம்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
    `குங்பூ யோகா' படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக இந்தியா வந்துள்ள ஜாக்கி சான் தனக்கு காதல் படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக கூறினார். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
    `குங்பூ யோகா' படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக இந்தியா வந்துள்ளார் நடிகர் ஜாக்கி சான். நேற்று காலை மும்பை வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நடிகர் சோனு சூட் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அதன்பின்னர் ஜாக்கி சான் கபில் ஷர்மா நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அப்போது ஜாக்கி சான் பேசியதாவது,

    அதிரடி படங்களில் நடித்து எனக்கு சலித்துவிட்டது. எனவே முழு காதல் படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறினார்.

    அதுவும் பாலிவுட்டில் காதல் படத்தில் நடிக்க ஆசை என்றார். இதற்காக பாலிவுட் இயக்குநர்கள் யாராவது தகுந்த காதல் கதையுடன் என்னை தொடர்பு கொள்ளும் என்றும் வேண்டுகோள் விடுத்த ஜாக்கி சான், நான் காதல் செய்ய வேண்டும், ரொமான்ஸ் பாட்டுக்கு நடனமாட வேண்டும் என்றார். பாலிவுட்டில் காதல் படத்தில் நடித்தில் நடிக்க நான் கடுமையான முயற்சிகளை செய்து வருகிறேன். ஆனால் எனக்கு ஏற்ற திரைக்கமை இதுவரை அமையவில்லை.

    எனினும் 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டிற்கு வந்துள்ளேன். எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது என்றார்.

    ஜாக்கி சான், சோணு சூட் நடிப்பில் உருவாகியுள்ள `குங்பூ யோகா' படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தை சீனாவின் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ளார். மேலும் தமிழில் வெளியான ‘அனேகன்’ படத்தின் கதாநாயகி அமிரா தஸ்துர் ஜாக்கி சானுடன் இணைந்து ‘குங்பூ யோகா’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    மாணவர்களை சமாதானம் செய்யச்சென்ற நடிகர் இமான் அண்ணாச்சி மீது போலீஸ் தடியடி நடத்தியதில் காயமானார். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
    மாணவர்களை சமாதானம் செய்ய முயன்ற நடிகர் இமான் அண்ணாச்சிக்கும் போலீஸ் தடியடி விழுந்தது. இது குறித்து அவர் கூறியதாவது:-

    மாணவர்களும் இளைஞர்களும் அறவழியில் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் மீண்டும் கடலில் இறங்கி மாணவர்கள் பேராடுவதாக கேள்விப்பட்டதும் அவர்களிடம் பேசி சமாதானம் செய்வதற்காக நானும் சில நண்பர்களுடன் நேற்று மெரீனாவுக்கு சென்றேன். இது பற்றி அங்கு நின்ற போலீசாரிடம் சொன்னேன்.

    அப்போது அங்குவந்த ஒரு போலீஸ்காரர் கண் மூடித்தனமாக எங்கள் மீது தாக்குதல் நடத்தினார். எனது கையில் தடியடி விழுந்தது. என்னை காப்பாற்ற முயன்ற அலெக்ஸ் என்ற இளைஞரின் தலையில் கடுமையாக போலீசார் தாக்கியதில் அவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. காலில் எலும்பு முறிந்தது.

    நல்ல போலீசார் இருக்கிறார்கள். என்றாலும் இது போன்ற தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது. இது குறித்து மேல் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு இமான் அண்ணாச்சி கூறினார்.
    சூர்யா நடிப்பில் ஹரி இயக்கி உருவாகியுள்ள `சி-3' படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
    சூர்யா நடிப்பில் தற்போது ‘எஸ்-3’ படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ள நிலையில்இ படம் தொடர்ந்து பலமுறை தள்ளிப்போகிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான தேதியை படக்குழு பலமுறை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    முன்னதாக இப்படம், குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என அறிவித்திருந்த பட நிறுவனம் தற்போது அதனை ஒத்திவைத்துள்ளது.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக போராடி வந்தனர். போராட்டங்கள் முடிவுக்கு வந்தாலும் இயல்பு நிலை திரும்பாததால் படம் வெளியிடுவதை தள்ளிவைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிக்கை வெளியிட்டது. மேலும், படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

    பிரதமர் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, ஜல்லிக்கட்டு பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் படத்தை வெளியிட படக்குழு தயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
    ×