என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    காமெடி நடிகர் யோகி பாபு நடிகை கயல் ஆனந்தியை காதலிப்பதாக ஒரு செய்தி கோலிவுட்டில் பரவுகிறது. அது உண்மையா? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஒரு நடிகர் திரையில் தோன்றும் ரசிகனின் கைதட்டலும், விசில் சப்தமும் அங்கு காதை பிளக்கிற அளவுக்கு கேட்கிறதென்றால் அது ஹீரோக்களின் வருகையின்போதுதான். இந்த பட்டியலில் தற்போது சில காமெடி நடிகர்களும் அடங்கியுள்ளார்கள். நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோர் இந்த பட்டியலில் முன்னணி வகிக்கிறார்கள்.

    இதில் யோகி பாபுவின் தோற்றம், அவருடைய பாடி லாங்குவேஜ், அவர் பேசும் பாஷை என அனைத்துமே ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்திருக்கிறார். இப்போதெல்லாம் இவர் ஒரு படத்தில் வருகிறாரென்றால், ஹீரோக்களைவிட இவரைத்தான் ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்க்கிறார்கள். அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இவரது காமெடி வரவேற்பை பெற்று வருகிறது.

    தற்போது இவரது கைவசம் இருபதுக்கும் மேற்பட்ட படங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். தினமும் இவரிடம் யாராவது ஒருவர் கதை சொல்லிக்கொண்டே இருக்கிறார்களாம். தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், இந்த புத்தாண்டில் வித்தியாசமாக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று யோகி பாபு சபதம் எடுத்திருக்கிறாராம்.

    அந்த வரிசையில் தற்போது கே.பி.ஜெகந்நாத் என்பவர் இயக்கும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’  படத்தில் வித்தியாசமான ரொமான்ஸ் செய்யும் வேடத்தில் நடிக்கிறாராம் யோகி பாபு. கே.பி.ஜெகந்நாத் விஜய்யை வைத்து ‘புதிய கீதை’ என்ற படத்தை இயக்கியவர். இப்படத்தின் நாயகியான ‘கயல்’ ஆனந்தியை இவர் ஒருதலையாய் காதலிக்கிற மாதிரியான காட்சிகள் நிறைய வருகிறதாம்.

    ஏற்கெனவே, ‘ரெமோ’ படத்தில் பெண் வேடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனை சுற்றி சுற்றி ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் யோகி பாபு கலக்கியிருந்தார். அதேபோல், இந்த படத்தில் நிஜ ஹீரோயினை மடக்க அவரை சுற்றி சுற்றி ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் எல்லாம் அனைவருக்கும் சிரிப்பை வரவழைக்குமாம். இந்த படம் அவர் இதுவரை செய்த கதாபாத்திரங்களிலேயே புதிதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். 
    டுவிட்டரில் அவதூறாக பேசிய சுப்பிரமணியசாமிக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். இகுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
    நடிகர் கமல்ஹாசன் ஆரம்ப முதலே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

    சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதை தனது டுவிட்டரில் விமர்சித்த சுப்பிரமணியசாமி ஜல்லிக்கட்டை ஆதரித்த கமல் பற்றி ‘பொறுக்கிஸ்’ என்று மோசமான வார்த்தையை பதிவு செய்து இருந்தார். இதற்கு கமல் பதிலடி கொடுத்தார்.

    தென்இந்திய ஒளிப்பதிவாளர் சங்க தமிழ் இணையதள தொடக்க விழாவில் பேசிய கமல் ஹாசன், “யாரோ தமிழ் பொறுக்கின்னாங்க. நான் தமிழ் பொறுக்கிதான். இங்க பொறுக்கினவன். எங்க பொறுக்கணும்னு தெரிஞ்ச பொறுக்கி. டெல்லியில் பொறுக்க மாட்டேன். என்னை திடீர் என்று அரசியல் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். இது அரசியல் அல்ல. தன்மானம்” என்று காட்டமாக பதில் அளித்தார்.

    நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த கமல், “போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அப்புறப்படுத்தும் வேலையை போலீசார் செய்யாமல் இருந்திருந்தாலே பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. எதையும் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒழுங்குபடுத்தினாலே போதும்.

    முதல்-அமைச்சர் மக்களை சந்தித்திருக்க வேண்டும். அலங்காநல்லூரில் இருந்து திரும்பி வந்தது அவமானம் அல்ல. அது சரிதான். இங்கேயே சந்தித்து இருக்கலாம் என்று எனது கருத்தை சொன்னேன். சட்டசபை நடந்தபின் சந்திக்க இருப்பதாக சொன்னார். அதற்குள் எல்லாம் நடந்து விட்டது” என்று கூறினார்.

    கமல் பேட்டியை வைத்து அவரை மீண்டும் சீண்டும் வகையில் சுப்பிரமணியசாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்து இருந்தார்.

    அதில், “எப்படி சினிமாகாரர் கமல்ஹாசன், போராட்டக்காரர்களை முதல்-அமைச்சர் சந்திக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக கூறுகிறார். மதுரையில் என்ன நடந்தது? என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு உடனே டுவிட்டரில் பதில் சொன்ன கமல்ஹாசன், “ஹாய்சாமி... நான் தமிழ் வாலா. முதல்வர் மக்களை சந்திக்க வேண்டும். காந்தியும், ஜூலியசீசரும் கூட மக்களிடம் பணிவாகத்தான் இருந்தார்கள். அப்படி இருக்கும் போது முதல்- அமைச்சர் ஏன் மக்களை சந்திக்க கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.

    அதை தொடர்ந்து, டுவிட்டரில் மற்றொரு கருத்தை பதிவு செய்த கமல், ‘சுவாமியின் அவதூறுகளுக்கு பதில் சொல்வது இல்லை என்று முடிவு எடுத்துவிட்டேன். தமிழ் பொறுக்கிகள் இதை கையில் எடுக்கட்டும். உங்களுடன் (தமிழர்கள்) காமராஜர், அண்ணா, ராஜாஜி, என் தந்தை உள்பட பலரும் இருக்கிறார்கள். மோதி மிதித்து விடுபாப்பா’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அதை தொடர்ந்து, மீண்டும் டுவிட்டரில் ‘அமைதி ஒரு பூடகமான சொல். அது பேசாதிருப்பதா? செயலற்றிருப்பதா? தமிழில் எதை எழுதினாலும் அது நாட்டுக்கே பொருந்தும். உலகுக்கும். ‘வெல் தமிழா’ என்று கமல் குறிப்பிட்டு இருக்கிறார்.

    சுப்பிரமணியசாமிக்கு கமல் கொடுத்த பதிலடியை, இணையதளத்தில் ஏராளமானோர் வரவேற்றுள்ளனர். சுப்பிரமணியசாமிக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்தும் வருகிறார்கள்.
    விஜய் தனது 62-வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
    பரதன் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் `பைரவா' படம் பொங்கலுக்கு வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், விஜய் தனது 61-வது படத்தில் அட்லியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட 3 முன்னணி கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. `துப்பாக்கி', `புலி' படத்தை தொடர்ந்து காமெடியனாக சத்யன் இணைந்துள்ளார்.

    அட்லி படத்திற்கு பின்னர், விஜய் தனது 62-வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. மேலும் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும், கத்தி படத்தை தயாரித்த லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் `விஜய் 62' படத்தை தயாரிக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக `விஜய் 62' படத்தை தனுஷ் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது.

    முருகதாஸ் - விஜய் கூட்டணி `துப்பாக்கி', `கத்தி' உள்ளிட்ட இரு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    ஆஸ்கர் 2017-க்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை கீழே பார்ப்போம்.
    2017-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தேர்வாகியுள்ள படங்களில் வெற்றிபெற்ற படம் மற்றும் கலைஞர்களை வரும் பிப்ரவரி 26-ந் தேதி அறிவிக்கவுள்ளனர். தற்போது தேர்வாகியுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் கீழே வருமாறு:-

    சிறந்த சினிமா (Best picture)

    அரைவல் (Arrival)
    பென்சஸ் (Fences)
    ஹாக்சாவ் ரிட்ஜ் (Hacksaw Ridge)
    ஹெல் ஆர் ஹை வாட்டர் (Hell or High Water)
    கிட்டன் பிகர்ஸ் (Hidden Figures)
    லா லா லேண்ட் (La La Land)
    லயன் (Lion)
    மான்செஸ்டர் பை த சீ (Manchester by the Sea)
    மூன் லைட் (Moonlight)

    சிறந்த நடிகை (Best actress)

    இஷபெல்லி ஹப்பெர்ட் (எல்லி) - Isabelle Huppert (Elle)
    ருத் நீக்கா (லவ்விங்) - Ruth Negga (Loving)
    நாதலி போர்ட்மேன் (ஜாக்கி) - Natalie Portman (Jackie)
    எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்) - Emma Stone (La La Land)
    மேரி ஸ்டிரீப் (புளோரன்ஸ் பாஸ்டர் ஜென்கின்ஸ்) -  Meryl Streep (Florence Foster Jenkins)

    சிறந்த நடிகர் (Best actor)

    கேசி அப்லெக் (மான்செஸ்டர் பை தை சீ - Casey Affleck (Manchester by the Sea)
    ஆண்ட்ரூ கார்பீல்டு (ஹாக்சாவ் ரிட்ஜ்) - Andrew Garfield (Hacksaw Ridge)
    ரியான் காஸ்லிங் (லா லா லேண்ட்) - Ryan Gosling (La La Land)
    விகோ மார்டென்சென் (கேப்டன் பேண்டாஸ்டிக்) - Viggo Mortensen (Captain Fantastic)
    டென்சல் வாசிங்டன் (பென்சஸ்) - Denzel Washington (Fences)

    சிறந்த துணை நடிகை (Best supporting actress)

    வியோலா டேவிஸ் (பென்சஸ்) - Viola Davis (Fences)
    நயோமி ஹாரிஸ் (மூன் லைட்) - Naomie Harris (Moonlight)
    நீக்கோல் ஹிட்மேன் (லயன்) - Nicole Kidman (Lion)
    அக்தவியா ஸ்பென்சர் (கிட்டன் பிகர்ஸ்) - Octavia Spencer (Hidden Figures)
    மிச்செல்லி வில்லியம்ஸ் (மான்செஸ்டர் பை த சீ) - Michelle Williams (Manchester by the Sea)

    சிறந்த துணை நடிகர் (Best supporting actor)

    மகர்செல்லா அலி (மூன் லைட்) - Mahershala Ali (Moonlight)
    ஜெப் பிரிட்ஜஸ் (ஹெல் ஆர் ஹை வாட்டர்) - Jeff Bridges (Hell or High Water)
    லுகஸ் ஹெட்சஸ் (மான்செஸ்டர் பை த சீ) - Lucas Hedges (Manchester by the Sea)
    தேவ் பட்டேல் (லயன்) - Dev Patel (Lion)
    மைக்கேல் ஷன்னான் (நாக்டர்னல் அனிமல்ஸ்) - Michael Shannon (Nocturnal Animals)

    சிறந்த இயக்குனர் (Best director)

    டேனிஸ் வில்லென்யுவே (அரைவல்) - Denis Villeneuve (Arrival)
    மெல் ஜிப்சன் (ஹாக்சாவ் ரிட்ஜ்) - Mel Gibson (Hacksaw Ridge)
    டேமியன் சாஷெல்லி (லா லா லேண்ட்) - Damien Chazelle (La La Land)
    கென்னத் லோனர்கன் (மான்செஸ்டர் பை த சீ) - Kenneth Lonergan (Manchester by the Sea)
    பேரி ஜென்கின்ஸ் (மூன் லைட்) - Barry Jenkins (Moonlight)

    சிறந்த திரைக்கதை தழுவல் (Best adapted screenplay)

    எரிக் ஹெய்செரர் (அரைவல்) - Eric Heisserer (Arrival)
    ஆகஸ்ட் வில்சன் (பென்சஸ்) - August Wilson (Fences)
    அலிசன் ஸ்க்ரோடெர் & தெரோன் மெல்பி (கிட்டன் பிகர்ஸ்) - Allison Schroeder and Theodore Melfi (Hidden Figures)
    லூக் டேவிஸ் (லயன்) - Luke Davies (Lion)
    பேரி ஜென்கின்ஸ் & ஆவ்லின் மெக்கிரானி (மூன் லைட்) - Barry Jenkins and Alvin McCraney (Moonlight)

    சிறந்த திரைக்கதை (Best original screenplay)

    டெய்லர் ஷேரிடான் (ஹெல் ஆர் ஹை வாட்டர்) - Taylor Sheridan (Hell or High Water)
    டேமியன் சாஷெல்லி (லா லா லேண்ட்) - Damien Chazelle (La La Land)
    யார்கோஸ் லாந்திமோஸ் & எப்திமிஸ் பிலிப்போ (தி லாப்ஸ்டர்) - Yorgos Lanthimos and Efthimis Filippou (The Lobster)
    கென்னத் லோனர்கன் (மான்செஸ்டர் பை த சீ) - Kenneth Lonergan (Manchester by the Sea)
    மைக் மில்ஸ் (20th செஞ்சுரி உமன்) - Mike Mills (20th Century Women)

    சிறந்த அனிமேட்டட் சினிமா (Best animated feature)

    குபோ அன்ட் டூ ஸ்டிரிங்ஸ் - Kubo and the Two Strings
    மௌனா - Moana
    மை லைப் அஸ் ஏ சுஷானி - My Life as a Zucchini
    தி ரெட் டர்டில் - The Red Turtle
    ஷுதோபியா - Zootopia

    சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் (Best foreign language film)

    ஏ மேன் கால்டு ஓவே (சுவீடன்) - A Man Called Ove (Sweden)
    லேண்ட் ஆப் மைன் (டென்மார்க்) - Land of Mine (Denmark)
    தி சேல்ஸ்மேன் (ஈரான்) - The Salesman (Iran)
    டன்னா (ஆஸ்திரேலியா) - Tanna (Australia)
    டோனி எர்ட்மேன் (ஜெர்மனி) - Toni Erdmann (Germany)

    சிறந்த ஆவண திரைப்படம் (Best documentary feature)

    பயர் அட் சீ - Fire At Sea
    ஐ ஆம் நாட் யுவர் நீக்ரோ - I Am Not Your Negro
    லைப், அனிமேட்டட் - Life, Animated
    ஓஜே - மேட் இன் அமெரிக்கா - OJ: Made in America
    13th -  13th

    சிறந்த பாடல் (Best original song)

    La La Land - Audition by Justin Hurwitz, Benj Pasek and Justin Paul   
    La La Land - City of Stars by Justin Hurwitz, Benj Pasek and Justin Paul
    Moana - How Far I'll Go by Lin-Manuel Miranda
    Trolls - Can't Stop the Feeling by Justin Timberlake, Max Martin and Karl Johan Schuster
    Jim: The James Foley Story - The Empty Chair by J Ralph and Sting

    சிறந்த இசை (Best original score)

    மைக்க லெவி (ஜாக்கி) - Jackie by Mica Levi
    ஜஸ்டின் ஹர்விட்ஸ் (லா லா லேண்ட்) - La La Land by Justin Hurwitz
    டஸ்டின் ஓ காலோரன் & கௌஸ்கா (லயன்) - Lion by Dustin O'Halloran and Hauschka
    நிக்கோலஸ் பிரைட்டல் (மூன் லைட்) - Moonlight by Nicholas Britell
    தாமஸ் நியூட்டன் (பாசஞ்சர்ஸ்) - Passengers by Thomas Newton

    சிறந்த ஒளிப்பதிவு (Best cinematography)

    அரைவல் - Arrival
    லா லா லேண்ட் - La La Land
    லயன் - Lion
    மூன் லைட் - Moonlight
    சைலன்ஸ - Silence

    சிறந்த ஆடை வடிவமைப்பு (Best costume design)

    அலைட் - Allied
    பேண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் & வேர் டு பைன்ட் தெம் - Fantastic Beasts and Where to Find Them
    புளோரன்ஸ் பாஸ்டர் ஜென்கின்ஸ் - Florence Foster Jenkins
    ஜாக்கி - Jackie
    லா லா லேண்ட் - La La Land

    சிறந்த மேக்கப் & சிகையலங்காரம் (Best make-up and hairstyling)

    ஏ மேன் கால்டு ஓவே - A Man Called Ove
    ஸ்டார் டிரெக் பியான்ட் - Star Trek Beyond
    சூசைட் ஸ்குவாட் - Suicide Squad

    சிறந்த சண்டைக்காட்சி (Best live action short)

    என்னிமிஸ் இன்டெரியர்ஸ் - Ennemis Interieurs
    லா பெம்மி எட் லி டிஜிவி - La Femme et le TGV
    சைலண்ட் நைட்ஸ் - Silent Nights
    சிங் - Sing
    டைம் கோட் - Timecode

    சிறந்த இசை எடிட்டிங் (Best sound editing)

    அரைவல் - Arrival
    டீப் வாட்டர் அரிசான் - Deepwater Horizon
    ஹாக்சாவ் ரிட்ஜ் - Hacksaw Ridge
    லா லா லேண்ட் - La La Land
    சுல்லி - Sully

    சிறந்த சவுண்ட் மிக்சிங் (Best sound mixing)

    அரைவல் - Arrival
    ஹாக் சாவ் ரிட்ஜ் - Hacksaw Ridge
    லா லா லேண்ட் - La La Land
    ரப் ஒன் : ஏ ஸ்டார் வாஸ் ஸ்டோரி - Rogue One: A Star Wars Story
    13 ஹவர்ஸ் : தி சீக்ரெட் சோல்ஜர்ஸ் ஆப் பென்காசி -  13 Hours: The Secret Soldiers of Benghazi

    சிறந்த ஆவண குறும்படம் (Best documentary short)

    4.1 மைல்ஸ் - 4.1 Miles
    எக்ஸ்டிரிமிஸ் - Extremis
    ஜோ வயலின் -  Joe's Violin
    வாதனி: மை ஹோம்லேண்ட் - Watani: My Homeland
    தி ஒயிட் ஹெல்மெட்ஸ் - The White Helmets

    சிறந்த புரொடக்ஷன் டிசைன் (Best production design)

    அரைவல் - Arrival
    பேண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் & வேர் டு பைன்ட் தெம் - Fantastic Beasts and Where to Find Them
    ஹெய்ல், ஹெய்சர் - Hail, Caesar!
    லா லா லேண்ட் - La La Land
    பாசஞ்சர்ஸ் - Passengers

    சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் (Best visual effects)

    டீப் வாட்டர் அரிசோன் - Deepwater Horizon
    டாக்டர் ஸ்ட்ராஞ்ச் - Doctor Strange
    தி ஜங்கிள் புக் - The Jungle Book
    குபோ & தி டூ ஸ்டிரிங்ஸ் - Kubo and the Two Strings
    ரப் ஒன் : ஏ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி - Rogue One: A Star Wars Story

    சிறந்த அனிமேட்டட் குறும்படம் (Best animated short)

    பிளைண்ட் வைஷா - Blind Vaysha
    பாரோவ்டு டைம் - Borrowed Time
    பியர் சைடர் & சிகரெட்ஸ் - Pear Cider and Cigarettes
    பியர்ல் - Pearl
    பைபர் - Piper

    சிறந்த சினிமா எடிட்டிட் (Best film editing)

    அரைவல் - Arrival
    ஹாக்சாவ் ரிட்ஜ் - Hacksaw Ridge
    ஹெல் ஆர் ஹை வாட்டர் - Hell or High Water
    லா லா லேண்ட் - La La Land
    மூன் லைட் - Moonlight
    `கருப்பன்` படத்திலிருந்து லட்சுமி மேனன் விலகியதால் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடிக்க உள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவரும் விஜய் சேதுபதி தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன்  தேர்வு செய்து வருகிறார். கடந்த வருடம் இவரது நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகி சாதனை படைத்தன. அதேபோல இந்த  வருடக் கணக்கை தனது 'புரியாத புதிர்' படத்தின் மூலம் தொடங்கவிருக்கிறார்.

    இந்நிலையில் `விக்ரம் - வேதா' படத்தில் ஒருபகுதியை முடித்த விஜய் சேதுபதி, தற்போது, 'ரேணிகுண்டா' இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கும் 'கருப்பன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கொம்பு மீசையுடன் வரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கவிருந்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து காயத்திற்காக சிகிச்சை பெற்று வரும் லட்சுமி மேனன் குணமாகி படப்பிடிப்புக்கு திரும்ப ஒரு சில மாதங்கள் ஆகும் என்பதால் படத்திலிருந்து லட்சுமி மேனன் விலகினார். இதனையடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரனை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

    சமீபத்தில் திரைக்கு வந்த `பலே வெள்ளையத் தேவா' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தன்யா தமிழில் அறிமுகமானார்.
    அஜித் நடிக்கும் `தல 57' படத்தின் பாடல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    யோகி பி என்று அழைக்கப்படும் யோகேஸ்வரன் வீரசிங்கம் மலேசிய தமிழ் ஹிப் ஹாப் பாடகர். இவர் அஜித் நடித்து வரும் `தல 57' படத்தின் பாடல் குறித்த புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

    இவர் தமிழில் விஜய்யின் `குருவி' படத்திலும், தனுஷ் நடித்த `பொல்லாதவன்` படத்திலும் ஹிப் ஹாப் பாடல்களை பாடியுள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ் இசையில் "எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்" என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது அனிருத் இசையில் `தல 57' படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளதாக சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரே தெரிவித்தார்.

    யோகி பி அளித்த தகவல் வருமாறு,

    `தல 57' படத்தின் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் அனிருத் தான் தெரிவிக்க வேண்டும். எனினும் தான் பாடியது ஒரு தனித்துவமான பாடல் என்றும், அதில் ஹிப் ஹாப், இடிஎம் மற்றும் பல இசைகளை கலந்து ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்தளிக்கும் என்றும் யோகி தெரிவித்தார். எனவே பாடல் வெளியாகும் வரை நாம் பொறுத்திருக்க தான் வேண்டும் என்றார்.

    முன்னதாக அனிருத் கூறுகையில், படத்தின் பாடல்கள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்றும், ஜேம்ஸ் பாண்ட் படங்களை நினைவுபடுத்தும் வகையில் இசையமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    'வீரம்', 'வேதாளம்' படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் 'தல 57' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். வில்லனாக விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

    மேலும் இப்படத்தை ரம்ஜான் வெளியீடாக ஜுன் 23-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படம் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக பிரணிதா நடித்துள்ளார். ‘சகுனி’ படத்துப்பிறகு பிரணிதா மீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இதுதவிர ‘ஜெமினி கணேசனும்  சுருளிராஜனும்’ படத்திலும் பிரணிதா நடித்து வருகிறார்.

    ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தில் ஜெய்யுடன் கருணாகரன், காளி வெங்கட், ராஜேந்திரன், தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எனவே இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த சாயலில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இப்படத்தை வன்சன் மூவிசின் சான் சுதர்சன் தயாரித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாக உள்ளது. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `சி-3' படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தால் அஜித் நடித்து வரும் `தல 57' படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
    'வீரம்', 'வேதாளம்' படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் 'தல 57' படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் வரை பல்கேரியாவில் நடைபெற்றது.

    இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அஜித் சென்னை வந்தார். இந்நிலையில் `தல 57' படத்தின் அடுத்தகட்ட படிப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

    படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கிய நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. குடியரசு தினத்திற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழு தெரிவி்த்துள்ளது. `தல 57' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் விவேக் ஓபராயின் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும், அஜித் விரைவில் இணைய உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

    சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'தல 57' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர்.

    மேலும் இப்படத்தை ரம்ஜான் வெளியீடாக ஜுன் 23-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    குஜராத்தில் ஷாரூக்கான காண வந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
    பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ராயீஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதிக்கு நேற்று முன் தினம் சென்றிருந்தார்.

    அப்போது ராஜ்தானி விரைவு ரெயில் வண்டியில் சென்ற வந்த ஷாரூக்கானை காண ரசிகர்கள் குவிந்து இருந்தனர். அதனால் ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்ப்பட்டது.

    இரவு 10.30 மணிக்கு ரெயிலானது ரெயில் நிலையத்திற்கு வந்தது. சுமார் 10 நிமிடம் அங்கு ரெயில் நின்றிருந்தது. அந்த நேரத்தில் தான் ஷாரூக்கானை காண ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

    இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் உத்தரவிட்டுள்ளனர். வதோதரா ரெயில்வே எஸ்.பி ஷரத் சிங்கால் இதனை தெரிவித்தார்.

    இந்த விசாரனை ரெயில்வே பிளாட் பார்மில் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக என்பது குறித்து முக்கியமாக விசாரணை செய்யும்.

    பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.
    பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.

    காமெடியில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த மூர்த்தி, 1965-ம் ஆண்டில் நடிகை மணிமாலாவை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தார். நடிகர் -நடிகை என்ற முறையில் `ஹலோ' சொல்லிக் கொண்டார்கள். அடுத்தடுத்த சந்திப்புகள் யதார்த்தமாய் அமைய, நட்பு ஆனது.

    5 ஆண்டுகள் தொடர்ந்த இந்த நட்பு, திருமணத்தில் முடிந்தது. 1970-ம் ஆண்டில் மணிமாலாவை கரம் பற்றினார், மூர்த்தி.

    இதுபற்றி வெண்ணிற ஆடை மூர்த்தி இப்படிச் சொன்னார்:

    "பலரையும் பார்க்கிறோம். பேசுகிறோம். சிலர்தான் மனதில் நிற்கிறார்கள்.

    மணிமாலா அப்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தும் எந்தவித பந்தாவும் இன்றி இருந்தார். அவரிடம் பழக ஆரம்பித்த பின்பு ஒருநாள், "இப்படி அன்பும் பண்பும் அமையப்பெற்ற பெண் வாழ்க்கைத் துணையானால் எதிர்காலம் சிறப்பாக இருக்குமே'' என்று தோன்றியது. ஆனாலும் உடனே அதை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்குள் எந்தவித `ஈகோ'வும் இருந்ததில்லை. அதனால் "நாம் வாழ்வில் இணைந்தால் நன்றாக இருக்கும்'' என்று நான்தான் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.

    மணிமாலா தரப்பிலும் என் மாதிரியான எண்ண ஓட்டம் இருந்ததால், பழக ஆரம்பித்த 5-வது வருடத்தில் எங்கள் திருமணம் இரு குடும்பத்தின் பரிபூரண சம்மதத்துடன் நடந்தது.

    திருமணத்துக்கு முன்னதாக, எங்கள் நட்பை காதல் வரை வலுப்படுத்த ஒரு சம்பவம் நடந்தது. மதுரையில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள். நடிகர்கள் ஜெமினிகணேஷ், ஸ்ரீராம் வந்தார்கள். நடிகைகளில் மணிமாலா வந்திருந்தார். நானும் கிரிக்கெட் குழுவில் இடம் பெற்றிருந்தேன். அந்த நட்சத்திர டூரில் நாங்கள் மனம் விட்டுப் பேசுவோம்.

    நாங்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதால் மற்றவர்கள் எங்கள் உரையாடலில் கலந்து கொள்ளமாட்டார்கள். இப்படியாக வளர்ந்த நட்பும் அன்பும் காதலாகி, எங்களை நட்சத்திர தம்பதிகளாகவும் ஆக்கியது.

    திருமணத்துக்குப் பிறகு மணிமாலா படங்களில் நடிக்காமல் குடும்பத்தை மட்டுமே நிர்வகித்து வந்தார். எங்களுக்கு `மனோ' என்று ஒரே மகன். என்ஜினீயரிங் முடித்த மனோ இப்போது திருமணமாகி, குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் பணியில் இருக்கிறான். மனோ மூலம் எங்களுக்கு ஒரு பேரக்குழந்தையும் உண்டு.

    மனோவின் மனைவி சபிதா, கம்ப்ïட்டர் என்ஜினீயர். அதோடு பரத நாட்டியமும் தெரிந்தவர். நடனப்பள்ளி நடத்திக்கொண்டு வேலையையும் தொடர்கிறார்.

    மகன் மனோவைப் பொறுத்தமட்டில் எனது நல்ல நண்பன். அப்பா -மகன் மாதிரி இல்லாமல் நண்பர்களாக அத்தனை விஷயங்களையும் பரிமாறிக்கொள்வோம். நான் கிழித்த கோட்டை இப்பவும் கூட மனோ தாண்டமாட்டான். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கிறபோது கூட, ஒரு சின்ன தப்புகூட அவனைப்பற்றி வந்தது கிடையாது. அதனால் அவனை நான் கண்டிக்கிறதுக்கான வாய்ப்பு கடைசி வரைக்கும் வந்தது கிடையாது. கேட்க ஆச்சரியமாக இருக்கும்.

    கோபத்துக்காக அவன் மேல் என் விரல்கூட பட்டது இல்லை. படிக்கிற சமயங்களில் வீட்டுக்கு வர தாமதமானால்கூட, உடனே போன் பண்ணி `இப்ப இந்த இடத்துல இருக்கிறேன். இவ்வளவு நேரத்தில் வந்துடுவேன்' என்று சொல்லிவிடுவான். இதனால் அவன் பத்தின ஒரு சின்ன டென்ஷன்கூட எனக்கும், மணிமாலாவுக்கும் ஒருபோதும் இருந்ததில்லை.

    மனோ அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதால், வருஷத்தில் 3 மாதம் அவனோட தங்கி விட்டு வருவோம். சமீபத்தில் இப்படி போயிருந்தப்ப என்னிடம், "அப்பா! அடுத்த ஜென்மத்திலும் நான் உனக்கே பையனா பொறக்கணும்ப்பா'' என்றான். எனக்கு மனசு நெகிழ்ந்து விட்டது. "அடுத்த ஜென்மம்னு மட்டுமில்லப்பா... எல்லா ஜென்மத்திலும் நாங்களே உனக்கு பெற்றோரா அமையணும்'' என்றேன். நான் இப்படிச் சொன்னபோது, அவனும் கண் கலங்கிவிட்டான்.

    திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த மணிமாலாவை, டைரக்டர் கே.பாலசந்தர் "சிந்து பைரவி'' படத்தில் நடிக்க அழைத்தார். அந்த அழைப்பை தட்ட முடியாமல் மணிமாலா நடிச்சாங்க. படத்தில் சுஹாசினிக்கு அம்மாவா வர்ற கேரக்டர். அதுல நடிச்சதுக்கு அப்புறமா பாலசந்தரின் "சஹானா'' சீரியலிலும் நடிச்சாங்க. இப்ப நடிச்சது போதும் என்கிற மன நிறைவோட, என்னோட கலைப்பணிக்கு உதவியா இருக்கிறாங்க.''

    இவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.

    மற்ற நகைச்சுவை நடிகர்களை விடவும், மூர்த்திக்கு ஒரு நடிப்புச் சிறப்பு உண்டு. தமிழ் சினிமாவில் காமெடியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கோலோச்சிக் கொண்டிருந்த நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சோ, சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என அத்தனை பேருடனும் வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி நடிப்பைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.

    வைஜயந்தி மாலா நடித்த "வாழ்க்கை''யில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் சேர்ந்து "எல்லைக்கோடு'' படத்தில் காமெடி செய்திருக்கிறார்.

    நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன் என மூன்று பரிமாணங்களிலும் வெளிப்பட்டவர். அவருடனும் "சமையல்காரன்'' படத்தில் நடித்தார், மூர்த்தி.

    டைரக்டர் ஸ்ரீதர் டைரக்டராக இருந்த காலகட்டத்தில் `சித்ராலயா' என்ற சினிமா பத்திரிகையையும் நடத்தி வந்தார். மூர்த்தியிடம் நகைச்சுவை ஆற்றலுடன் இணைந்திருந்த எழுத்தாற்றலையும் ஸ்ரீதர் தெரிந்து கொண்டார். இதனால் சித்ராலயா பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியபடி நடிப்பை தொடர்ந்தார், மூர்த்தி.

    3 வருடத்திற்கு பிறகு அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து சினிமாவில் முழு நேர நடிகரானார், மூர்த்தி.

    வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடி வசனங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கிறது என்று திரையுலகில் ஒரு கருத்து நிலவியது. அதுபற்றி அவர் கூறியதாவது:-

    "தமிழ் செழிப்பான மொழி. ஒரு வார்த்தையில் ஏழெட்டு அர்த்தம்கூட வரும். ஏற்றி, இறக்கிச் சொல்லும்போது ஒரு அர்த்தம் வந்தால், நிறுத்தி நிதானமாகச் சொல்லும்போது இன்னொரு அர்த்தம் வரும். ஒரு வீட்டு புரோக்கரிடம் ஒருத்தர் வாடகைக்கு வீடு கேட்கிறார்.

    "எப்படி பார்க்கிறது? பட்ஜெட் சொல்லுங்க'' என்கிறார், புரோக்கர். `சின்ன வீடா' இருந்தாக்கூட பரவாயில்லை என்கிறார், வீடு கேட்டவர். அவர் "சின்னவீடு'' என்பதை தனது பட்ஜெட் அடிப்படையில் சொன்னார். இதுவே `சின்னவீடு' என்ற வேறு அர்த்தமும் கொண்டு வருகிறதில்லையா?

    அதுமாதிரிதான் என் ஜோக்கிலும் நானாக எதையாவது பேசப்போக, அதுவாக வேறொரு அர்த்தமும் வந்து உட்கார்ந்து கொள்கிறது. ஜன்னல் வழியாக வானத்தை எட்டிப் பார்த்தால் அதில் அழகான நிலவையும், நட்சத்திரங்களையும் காணமுடியும். கீழே எட்டிப்பார்த்தால் ரோட்டில் போகிற பன்றிகள், பூச்சிகள் கூட கண்ணில் பட்டுத் தொலைக்கும். நாம் பார்க்கும் பார்வையில்தான் வித்தியாசம் எல்லாமே.''

    இவ்வாறு கூறினார், வெண்ணிற ஆடை மூர்த்தி. 
    பிரபல இசையமைப்பாளர் ஒருவர் ஆபாச வீடியோவில் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    கொலவெறியுடன் சினிமாவுக்குள் நுழைந்த இளம் இசையமைப்பாளரின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்தாலும், அவரைச் சுற்றி அவ்வப்போது சர்ச்சையான விஷயங்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆரம்பத்தில் உயரமான நடிகையுடன் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தபடி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

    அதன்பிறகு, வம்பு நடிகருடன் சேர்ந்து ஆபாச பாடலுக்கு இசையமைத்து அதன்மூலம் பெண்களின் வசை வார்த்தைகளுக்கு ஆளானார். இப்போது, ஒரு பெண்ணுடன் அந்த இசையமைப்பாளர் படுக்கையறையில் உல்லாசமாக இருப்பதுபோன்ற வீடியோ ஒன்றை வெளியாகி அவருக்கு மேலும் தலைவலியை கொடுத்துள்ளது.

    இந்த இளம் இசையமைப்பாளர் தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தனது இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். அங்குதான் இவர் இந்த படுக்கையறை கச்சேரியையும் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இவருடன் உல்லாசமாக இருக்கும் அந்த பெண் இவரது ரசிகை என்றும் கூறப்படுகிறது.

    இது ஒருபுறமிக்க, அந்த வீடியோவில் உள்ளது இசையமைப்பாளரே கிடையாது என்று ஒருபக்கம் செய்தி பரவிக்கொண்டு இருக்கிறது. இது வேண்டுமென்றே வேறு யாரோ கிளப்பிவிட்ட வீண் வதந்தி என்றும் ஒருசாரார் பேசுகின்றனர். 
    இலியானா பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இலியானா. இவர் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில், இலியானாவுக்கு கடந்த சில வருடங்களாக எந்த சினிமா வாய்ப்பும் இல்லை. எனவே, தனது காதலருடன் நாடு நாடாக பயணம் சென்று பொழுதை கழித்து வருகிறார்.

    இவரது காதலர் புகைப்படக் கலைஞர் என்பதால் அவ்வப்போது கிளாமர் உடைகளை இவர் அணிந்துகொண்டு அதை புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் இவரது பிறந்தநாளின்போது நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையுடன் குளிப்பதுபோன்ற ஒரு வீடியோவை பதிவு செய்து வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.


    இந்நிலையில், தற்போது இலியானா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தனது நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் முழு நிர்வாணத்துடன் குளியல் தொட்டியில் படுத்துக் கொண்டிருப்பதுபோல் அந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை தனது காதலர் எடுத்ததாகவும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி மீண்டும் அவரை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. 
    ×