என் மலர்
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மார்ச் 5-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரனை தேர்தல் அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. அவர் சென்னையிலுள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நேற்று தயாரிப்பாளர்களை சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் தேர்தல் அதிகாரி ராஜேஷ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மார்ச் 5-ந்தேதி தேர்தல் நடத்தப்படும்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
தலைவர் பதவிக்கு ஒருவரும், 2 துணை தலைவர்களும், 2 செயலாளர்களும், ஒரு பொருளாளரும், 21 செயற்குழு உறுப்பினர்களும் இந்த தேர்தலில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை (27-ந்தேதி) முதல் பிப்ரவரி 3-ந்தேதி வரை சங்க அலுவலகத்தில் வழங்கப்படும்.
வேட்பு மனுக்களை வருகிற 30-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந் தேதி வரை தாக்கல் செய்யலாம். 4-ந் தேதி மாலை மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். பிப்ரவரி 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். இறுதி வேட்பாளர்கள் பட்டியல் பிப்ரவரி 8-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்.
வேட்பாளர்கள் கட்டணமாக தலைவர் பதவிக்கு ரூ.1 லட்சமும், துணைத்தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் பதவிக்கு ரூ.50 ஆயிரமும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் நீக்கத்துக்கு கோர்ட்டில் தடை வாங்கி வந்தால் ஓட்டு போடுவதற்கோ அல்லது தேர்தலில் நிற்பதற்கோ அனுமதிக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலூர் தம்பதியர் தன்னை மகன் என உரிமை கோரும் வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் நான் அவர்களுடைய மகன் கலைச்செல்வன் என்றும், வயதான அந்த தம்பதியருக்கு நான் மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு தொகையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நான் அவர்களுடைய மகன் என்பதற்கான எவ்வித ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இருப்பினும் மேலூர் கோர்ட்டு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
நான் 1983-ம் ஆண்டு சென்னையில் உள்ள எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிறந்தேன். தற்போது சினிமாவில் நடிகனாக உள்ளேன். கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தாக்கல் செய்துள்ள வழக்கால் எனது பெற்றோர் சங்கடங்களை சந்தித்து வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, என்னை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
எனவே இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிப்பதோடு, வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக, கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

பெரிய நடிகராக இருந்தும் பந்தா இல்லாதவர் சிரஞ்சீவி. அவர் என் மனதில் இடம் பிடித்து விட்டார் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
நடிகை காஜல் அகர்வால் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-
“என் சினிமா வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. நடிக்க வந்து 10 வருடங்கள் ஆன பிறகும் படங்கள் குறையவில்லை. படப்பிடிப்புகளுக்காக ஓய்வில்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். என்னை சந்திப்பவர்கள் உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள்.
யாரையாவது காதலிக்கிறீர்களா? என்று கேட்டால் பரவாயில்லை. ஆனால் திருமணம் பற்றியே பேசுகிறார்கள். எனக்கு திருமணம் குறித்து சிந்திக்கவே நேரம் இல்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. திருமணத்துக்கும் தயாராகவில்லை. அதற்கு நேரம் அமையவேண்டும். பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் இருக்கிறேன்.
ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது பற்றியும் கேள்வி எழுப்புகிறார்கள். அப்படி ஆடுவதில் தவறு இல்லை. எனக்கு நடனம் ஆடுவது மிகவும் பிடிக்கும். பெரிய கதாநாயகர்கள் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தால் மறுக்க மாட்டேன். தற்போது தெலுங்கில் ராணாவுடனும் தமிழில் விஜய், அஜித்குமார் ஆகியோருடனும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன்.
இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்துமே நல்ல கதைகளாகவும் கதாபாத்திரங்களாகவும் அமைந்தன. இனிமேலும் எனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிப்பேன்.
சிரஞ்சீவி படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். அவருடைய குடும்பத்தை சேர்ந்த ராம் சரண், பவன்கல்யாண், அல்லுஅர்ஜூன் ஆகியோருடன் ஏற்கனவே நடித்து இருக்கிறேன்.
சிரஞ்சீவி நன்றாக நடனம் ஆடக்கூடியவர். அவருடன் இணைந்து ஆடுவது பெரிய சவாலாக இருந்தது. எனக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் சிரஞ்சீவி என்பேன். அந்த அளவுக்கு எனது மனதில் பதிந்து விட்டார். பெரிய நடிகராக இருந்தும் பந்தா இல்லாமல் எல்லோருடனும் சகஜமாக பழகக்கூடியவர்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் சமுதாயத்தையும், மாணவர் சமுதாயத்தையும் தலைவணங்கி நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று நடிகர் சத்யராஜ் பேட்டியளித்துள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இப்படி ஒரு எழுச்சியை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த எழுச்சி என்பது பிரெஞ்சு புரட்சி என்று சொல்வது போல், இது ஜல்லிக்கட்டுக்கான புரட்சி என்று சொன்னால் சரியாக இருக்கும். உலகத்திலேயே இப்படி ஒரு புரட்சி நடந்தது இல்லை. இவ்வளவு கட்டுக்கோப்பாக பல லட்சம் மாணவர்கள் ஒன்று திரண்டு வந்து போராடி உள்ளனர். இந்த இளைஞர் சமுதாயத்தையும், மாணவர் சமுதாயத்தையும் தலைவணங்கி நான் ஏற்றுக்கொள்கிறேன்.
எங்களுக்கு மாணவர்கள் பாடமாக உள்ளனர். இனி அவர்களைத்தான் நாங்கள் பின்பற்றி செல்ல வேண்டும். இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஓரிரு அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்யும். அது தவிர்க்கமுடியாத ஒன்று. அதே நேரம் மாணவர்கள் தரப்பில் இருந்தும், இளைஞர்கள் தரப்பில் இருந்தும் எந்த வன்முறையும் ஏற்படவில்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தில், வெளியில் இருந்து எந்த விதமான சக்தி அவர்களை குழப்பிவிட்டது என்பதை எப்படி கூறமுடியும். இதுதொடர்பாக வழக்கு இருப்பதால் இதுகுறித்து மேற்கொண்டு கருத்துகள் கூற முடியாது.
இவ்வாறு நடிகர் சத்யராஜ் கூறினார்.

வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரியே டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரியே டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், இருவரும் ஜோதிடம் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு, இருவருக்குமே ஜோதிடத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கையும் இருந்தது.
அதே நேரத்தில், படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் பம்பரமாய் சுழலும் கோபாலகிருஷ்ணனை `அவரா இவர்!' என்கிற ரீதியில் ஆச்சரியப்பார்வை பார்ப்பார், மூர்த்தி.
அதுபற்றி கூறுகிறார்:
"படப்பிடிப்பு என்று வந்துவிட்டால், டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் வேகம் பார்க்க பிரமிப்பாக இருக்கும். பெரும்பாலும் அவர் மனதில் உருவாகிற கதைகளையே திரைக்கதையாக்குவதால் படத்தின் கேரக்டர்கள் அத்தனையும் அவருக்கு அத்துப்படியாகி விடும்.
படப்பிடிப்புக்கு முன் ஒத்திகையின்போது கேரக்டர்களின் வசனங்களை கோர்வையாக சொல்லிக்கொண்டு வருவார். அப்போது புதிது புதிதாக வசனங்களை சேர்ப்பார். இதன் பிறகு அந்த வசனங்களை முன்னும் பின்னுமாக சேர்ப்பார். இப்போது வசனங்கள் இன்னும் அழுத்தமாக அமைந்து விடும். ஆனாலும் படத்தில் நடிப்பவர்கள்தான் வசனச் சுமைகளால் திணறிப்போவார்கள்.
தான் எதிர்பார்த்த மாதிரி காட்சி அமைந்து விட்டால் `டக்'கென்று உற்சாகமாக முதுகில் தட்டிக்கொடுப்பார். கொஞ்சம் வலிக்கிற அளவுக்கு இந்த `தட்டல்' இருக்கும்.
டைரக்டர் ராமண்ணா: கோபம் இருக்கிற இடத்தில்தான் குணமும் இருக்கும் என்கிற பழமொழியை பொய்யாக்கியவர் இவர். ஆளும் அழகு. குணமும் அருமை. அப்படியிருந்தும் இவரிடம் கோபமே குடிகொண்டதில்லை என்பது நான் அறிந்த உண்மை.
படப்பிடிப்பு நேரத்தில் ஒரு டைரக்டர் எவ்வளவு டென்ஷனாக இருப்பார்? ஆனால் இவரோ `டென்ஷன்' என்றால் என்ன என்று நம்மிடமே கேட்பார். அத்தனை அமைதி. `அணுகுண்டு போட்டாலும் அசர மாட்டார்' என்று ஊரில் யாரையாவது சொல்வார்கள். அந்த ஒப்பீடு இவருக்கும் அப்படியே பொருந்தும்.
ஒரு சமயம் இவரது படப்பிடிப்பில் முக்கியமான நடிகர் வரவில்லை. அவர் வரவில்லை என்று இவரிடம் சொல்லப்பட்டதும், "அப்படியானால் இப்போது அவர் தேவைப்படாத காட்சிகளை படமாக்குவோம்'' என்று சாதாரணமாக கூறிவிட்டு அதற்கான வேலைகளை முடுக்கி விட்டார். இவர் இயக்கத்தில் குப்பத்து ராஜா, நீச்சல் குளம் உள்பட 5 படங்களில் காமெடி டிராக்கில் நடித்திருக்கிறேன்.
ஸ்ரீதர்: என்னைக் கண்டுபிடித்தவர் என்பதால் எப்போதும் இவர் மீது மரியாதை அதிகம். இவர் இயக்கத்தில் வெண்ணிற ஆடை தவிர சிவந்த மண், அவளுக்கென்றோர் மனம், குளிர்கால மேகங்கள், நானும் ஒரு தொழிலாளி என 4 படங்களில் நடித்திருக்கிறேன்.
வித்தியாசமான சிந்தனையாளர் `வசன' சினிமாவை `காட்சி' சினிமாவாக்கி, தமிழ் சினிமாவை புதிய தளத்திற்குள் கொண்டு சென்றவர். புது நடிகர் - நடிகைகளை நடிக்க வைப்பது என்பது எவ்வளவு சிரமமான காரியம்! இருந்தாலும் தான் எதிர்பார்க்கிற நடிப்பையும் வாங்கிவிட்டு, அவர்களையும் புகழேணியில் ஏற்றி விடுவதென்பது இவர் மாதிரியான பிறவிக் கலைஞர்களுக்கே சாத்தியம்.
டி.ராஜேந்தர்: `ராகம் தேடும் பல்லவி' படத்தில் நடிக்கிறப்பதான் டைரக்டர் டி.ராஜேந்தர் எனக்கு அறிமுகம். அந்தப் படத்தில்கூட தயாரிப்பு நிர்வாகிதான் என்னை நடிக்க ஒப்பந்தம் செய்தார். `ஒருதலைராகம்' படம் மூலமாகத்தான் இவர் சினிமாவுக்கு வந்தார். அந்தப்படத்தை இவரே டைரக்ட் செய்தார்னு நினைத்து, அவரிடம் இந்தப்பட செட்டில் வாழ்த்து சொன்னேன். அந்தப் படத்துக்கு நான் டைரக்டர் இல்லை என்று வாழ்த்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இவர்கிட்ட நான் ஆச்சரியப்பட்ட விஷயம், எப்பவுமே வசனத்தை எழுதி வெச்சு சொல்லித்தரமாட்டார். நடிக்கிறபோதுதான் மளமளன்னு வாயாலே வசனத்தை சொல்லித் தருவார். ஒரு சீன்ல நடிக்கிறப்ப இவர் கொடுத்திருந்த வசனத்துடன் ஒரு வரி சேர்த்து பேசிட்டேன். கரெக்டா கண்டுபிடித்தவர், "இது என் வசனத்தில் இல்லியே!'' என்றார். பதிலுக்கு நான், "காட்சியில் பேசறப்ப என்னையறியாம அந்த வசனமும் சேர்ந்து வந்துட்டுது. வேணாம்னா அந்த வசனத்தை நீக்கிடுங்க சார்'' என்றேன். "இருக்கட்டும்'' என்று அனுமதித்தார்.
அடுத்த சீன்லயும் அவர் தராத ஒரு வசனம் என்னிடம் வந்துவிழ, அதுக்கும் எதுவுமே சொல்லலை. பிறகு நானா வசனம் ஏதாவது சேர்த்து சொன்னால் சிரிக்க ஆரம்பிச்சிடுவார். இவர் நாக்கில் சரசுவதி இருக்கிறாள். இவரிடம் பழகிய பிறகுதான், என் மாதிரியே இவரும் ஜாதக நம்பிக்கை உள்ளவர்னு தெரிஞ்சது. அப்ப தொடங்கி இப்ப வரை அதாவது "ராகம் தேடும் பல்லவி'' தொடங்கி, லேட்டஸ்டா அவர் டைரக்ட் செய்த "வீராசாமி'' வரை அவரோட படத்துல தொடர்ந்து நான் இருக்கிறேன் என்றால், அதுக்கு என் மீதான அவரோட அன்புதான்
ராமசுந்தரம்: நான் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ. படித்தபோது என்னுடன் படித்தவர் ராமசுந்தரம். கல்லூரிக் காலத்திலேயே இவர் என் நல்ல நண்பர். சேலத்தில் புகழ் பெற்ற சினிமாக் கம்பெனியான மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தின் மகன் இவர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் இவர் திரைப்படத் துறைக்குள் வந்துவிட்டார். நான்கு கில்லாடிகள், சி.ஐ.டி. சகுந்தலா என 2 படங்களை இயக்கவும் செய்தார். பழைய நட்பை மறக்காமல் இந்த 2 படத்திலும் என்னை நடிக்க வைத்தார். இரண்டுமே வெற்றிப் படங்களாயின. சி.ஐ.டி. சங்கர் படத்தில் நடிகை சகுந்தலா நாயகியாக நடித்ததால் அவருடன் `சி.ஐ.டி' என்ற பெயர் ஒட்டிக்கொண்டது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து ராமசுந்தரம், "வல்லவன் ஒருவன்'', "ஜஸ்டிஸ் விஸ்வநாத்'' என மேலும் 2 படங்களை இயக்கினார். இவையும் வெற்றிப்படமே. உடல் நலக்குறைவு காரணமாக தொடர்ந்து அவர் படங்களை இயக்கவில்லை.
ராம.நாராயணன்: டைரக்டர் ராம.நாராயணன் என் மீது தனி அக்கறை கொண்டவர். அவரது இயக்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். டென்ஷன் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தும் இயக்குனர். இவரது இயக்கத்தில் "நாகபாலம்மா'' என்ற தெலுங்குப் படத்திலும் நடித்திருக்கிறேன். "குறைந்த பட்ஜெட், குறுகிய நாட்கள் படப்பிடிப்பு, வெற்றிப்படம்'' என்ற இவரது `பார்முலா' தமிழ் சினிமாவில் ரொம்பவே பிரபலம்.
கலைமணி: டைரக்டர் கலைமணி தமிழ் சினிமாவில் சிறந்த எழுத்தாளர் என்று தெரியும். `மனைவி சொல்லே மந்திரம்' படம் மூலம் சிறந்த தயாரிப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தினார். இந்தப் படத்தில் நடிக்க தயாரிப்பாளர் தரப்பில் தயாரிப்பு நிர்வாகி என்னை
அணுகினார்."சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார். எழுத்தாளர் படம் எடுக்கிறார் என்றதும் சாதாரண சம்பளம் கேட்டேன். இதுபற்றிய தகவல் கலைமணிக்கு தெரியவந்ததும், எப்படி இவ்வளவு கம்மியா சம்பளம் கேட்டீங்க?'' என்று உரிமையுடன் கோபித்துக்கொண்டார். நியாயமான சம்பளம் தருவேன் என்றவர், அவரே எனக்கு சம்பளம் நிர்ணயித்தார். இவர் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த `ஏழை ஜாதி'' படத்திலும் நான் நடித்தேன். அப்போது பட உலகில் எதிர்பாராத விதமாய் ஸ்டிரைக் வந்துவிட்டது. ஸ்டிரைக் இன்று முடியும். நாளை முடியும் என்று எதிர்பார்த்து நாட்களை நகர்த்தினால், ஸ்டிரைக் மட்டும் முடிவுக்கு வருவதாக இல்லை. இருந்தாலும் அவ்வப்போது கலைமணி சாருக்கு போன் செய்து, "எப்ப சார் ஸ்டிரைக் முடியும்?'' என்று கேட்டுக்கொண்டிருப்பேன்.
இப்படி பட உலகம் ஸ்தம்பித்துப்போன ஒரு நாளில் திடீரென கலைமணி சார் எங்கள் வீட்டுக்கு வந்தார். "ஷூட்டிங் தள்ளிப்போச்சுல்ல. ஒரு மாசமா படப்பிடிப்பு எதுவும் நடக்கலை. அதுதான் உங்களை பார்த்துட்டுப் போகலாம் என்று வந்தேன்'' என்று சொன்னவர், கொஞ்சமும் எதிர்பாராமல் ஆயிரம் ரூபாயை எடுத்து என் கைகளுக்குள் வைத்துவிட்டார். "தப்பா நினைக்கக் கூடாது. எவ்வளவோ செலவு இருக்கும். தற்சமயத்துக்கு வெச்சுக்குங்க'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
எனக்கு நிஜமாகவே அதிர்ச்சி. படப்பிடிப்பு நின்று போன நிலையில் அவருக்கே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். அப்படியிருந்தும் படத்தில் நடிக்கிற கலைஞர்கள் பற்றிய சிந்தனையும் அவர் மனதில் ஓடியிருக்கிறதே... உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறதே! எத்தனை பெரிய மனசு. படத்தில் பணியாற்றிய மற்ற கலைஞர்களுக்கும் அவர் இது மாதிரி அவசரத் தேவைக்கு உதவியதாக பின்னாளில் அறிந்தேன்.
டைரக்டர் மனோபாலா இயக்கிய பல படங்களில் நான் இருப்பேன். நடிகர் அர்ஜன் தயாரித்த 3 படங்களிலும் என்னை நடிக்க வைத்திருக்கிறார்.

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மதனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.
சென்னை:
மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வேந்தர் மூவிஸ் மதன், கடந்த மே மாதம் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார். இவரை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து வந்தனர்.
டெல்லி, பீகார், மத்தியப் பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முகாமிட்டு தொடர்ந்து தேடி வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் திருப்பூர் வந்த மதனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மதன் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் உத்தரவாத தொகையாக ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிபந்தனை ஜாமீனை எதிர்த்து மதன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

ஹிருத்திக் ரோஷன் - யாமி கவுதம் நடிப்பில் இந்தியில் வெளிவந்த ‘காபில்’ என்ற படம் ‘பலம்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. இந்த படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
நாயகன் ஹிருத்திக் ரோஷன் பார்வையற்றவர். இருந்தும், இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். காதால் கேட்டு, அந்த கதாபாத்திரத்து ஏற்ப டப்பிங் கொடுக்கும் திறமை பெற்றவர். இவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடைபெறும்போது, கண் தெரியாத யாமி கவுதமின் அறிமுகம் கிடைக்கிறது. தனக்கு கண் தெரியாத சூழலில் கண் தெரியாத ஒருவரை எப்படி திருமணம் செய்துகொள்வது என்று யாமி கவுதம் யோசிக்கிறார்.
ஆனால், ஹிருத்திக் ரோஷன் அவளிடம் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவருடைய திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அரசியல் பிரமுகர் ஒருவரின் தம்பியால் இவர்கள் குடும்பத்துக்குள் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
அந்த அரசியல் பிரமுகரின் தம்பி இவர்கள் இருவருக்கும் கண் தெரியாது என்பதை அறிந்துகொண்டு, ஒருநாள் ஹிருத்திக் ரோஷன் வீட்டில் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து யாமி கவுதமை பலாத்காரம் செய்துவிடுகிறார். இதுகுறித்து அறிந்த ஹிருத்திக் ரோஷன் போலீஸ் நிலையத்தை நாடுகிறார். போலீசோ அரசியல் புள்ளியின் தம்பி இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளாமல், அதற்குண்டான ஆதாரங்களையெல்லாம் அழித்துவிடுகிறார்கள்.
இதனால், மனமுடைந்த ஹிருத்திக் ரோஷன் வீட்டில் ரொம்பவும் மவுனமாகவே இருக்கிறார். தன்னை இரண்டு பேர் கற்பழித்துவிட்டார்கள் என்பதால்தான் ஹிருத்திக் ரோஷன் அதுபோல் இருப்பதாக நினைக்கும் யாமி கவுதம், அவனிடமிருந்து பிரிந்து செல்வதாக கூறுகிறாள். அதற்கும் ஹிருத்திக் ரோஷன் அமைதியாகவே இருக்கிறார்.
மறுநாள், ஹிருத்திக் ரோஷன் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது யாமி கவுதம் வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்துகிடக்கிறாள். அவள் ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்று யோசிக்கும் ஹிருத்திக் ரோஷனுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் தகவல்கள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இறுதியில், அவள் எதற்காக தற்கொலை செய்துகொண்டாள்? தனது மனைவியை பலாத்காரம் செய்தவர்களை ஹிருத்திக் ரோஷன் கண் தெரியாத சூழ்நிலையில் எப்படி பழிவாங்கினார்? என்பதே மீதிக்கதை.
ஹிருத்திக் ரோஷன்தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. அவருடைய சினிமா பயணத்தில் இந்த படத்தில்தான் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. படத்தின் ஆரம்பத்தில் ஹிருத்திக் பயங்கரமான டான்ஸ் ஒன்றை ஆடியிருப்பார். கண் தெரியாத ஒருவரால் கவனம் சிதறாமல் சிறப்பாக ஆடமுடியும் என்பதை இந்த பாடலில் ஆடி நிரூபித்திருப்பார் ஹிருத்திக். அந்த பாடலில் இவருடைய ஆட்டத்தை பார்க்கும்போது நமக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்தமுறை ஹிருத்திக் ரோஷனுக்கு ஹிட் படம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தோடு இந்த படம் வெளிவந்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு இருப்பதால், ரசிகர்கள் தனது ஹீரோவை மாஸாக பார்க்கத்தான் எண்ணுவார்கள். ஆனால், ஹிருத்திக் அதையெல்லாம் உடைத்தெறிந்து எந்தவித அலட்டலும் இல்லாமல், ஒரு எதார்த்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருப்பது துணிச்சலான காரியம்தான். அவருடைய துணிச்சல் கண்டிப்பாக கைகொடுத்திருக்கிறது எனலாம்.
யாமி கவுதம் கண் தெரியாதவராக வந்தாலும் பார்க்க அழகாகவே இருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் இவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஹிருத்திக்-யாமி கவுதம் இருவருக்குமுண்டான காதல் காட்சிகளும் அழகாக இருக்கிறது. மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் சஞ்சய் குப்தா, ஹிருத்திக் ரோஷனுடன் முதன்முதலாக கைகோர்த்திருக்கிறார். இந்திய சினிமாவுக்கு அதரபழசான பழிவாங்கும் கதை என்றாலும், அதை எப்படி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார் என்பது பெரிய ஆவலாக இருந்தது. அந்த ஆவலை பூர்த்தி செய்திருக்கிறார். சஞ்சய் குப்தா, கொரியன் படங்களை தழுவியே பெரும்பாலான படங்களை எடுத்திருக்கிறார். அதேபோல் இந்த படத்தையும் ரொம்பவும் திரில்லிங்காகவே கொண்டு போயிருக்கிறார். பழிவாங்கும் கதைகளுக்கு உண்டான வழக்கமான காட்சியமைப்புகளே இருப்பதால், தொடர்ந்து ரசிக்கமுடியவில்லை. முதல் பாதி ரொம்பவும் மெதுவாக நகர்ந்தாலும், பிற்பாதி கொஞ்சம் விறுவிறுப்படைகிறது.
ராஜேஷ் ரோஷன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பழைய கிளாசிக் பாடல்களை ரீமேக் செய்திருப்பது பெரிதாக எடுபடவில்லை. படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளும் நம்பும்படியாக இல்லை. சுதீப் சாட்டர்ஜியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘பலம்’ நிறைவு.

படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் மான் வேட்டையாடியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சல்மான் கான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து ஜோத்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கன்கானி என்ற கிராமத்துக்கு சென்றிருந்தார்.
அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்து 10-4-2006 அன்று தீர்ப்பளித்தது.
தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 2007-ம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் நடிகர் சல்மான்கானின் 5 ஆண்டு கால ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.
இதனால் அவர் ஜோத்பூர் போலீசாரிடம் சரண் அடைந்தார். 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் 6 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. பின்னர், சிறையில் இருந்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் இன்று (25-ம் தேதி) நேரில் ஆஜராகும்படி ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சல்மான் கான் உள்ளிட்டவர்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, கண்காணிக்க வேண்டி இருப்பதால் இன்று ஜோத்பூர் நகருக்கு வரும் சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர்.
இதேபோல், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சல்மான் கான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்கள் இந்த வழக்கின் விசாரணையின்போது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் சார்பில் இன்றைய விசாரணையின்போது ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, இவ்வழக்கின் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்த மாஜிஸ்திரேட் ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் தல்பத் சிங் ராஜ்புரோஹித், அடுத்தகட்ட விசாரணையின்போது நடிகர் சல்மான் கான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டுள்ளார்.

அமீர் இயக்கவுள்ள ‘சந்தனத்தேவன்’ படத்துக்கு வில்லன் ரெடியாகிவிட்டார். அவர் யார்? என்பதை தெரிந்துகொள்ளே கீழே வாருங்கள்.
அமீர் சமீபத்தில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி ‘சந்தனத்தேவன்’ என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார். இந்த படத்தில் ஆர்யாவும், அவருடைய தம்பி சத்யாவும் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்திற்கு நடிக்க சுலீல் குமார் என்பவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் ‘காளை’, ‘தகராறு’, ‘குங்கமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ ஆகிய படங்களிலி முக்கியமான வேடத்தில் நடித்தவர்.
இந்த படத்தில் நடிப்பது குறித்து சுலீல் குமார் கூறும்போது, அமீர் சாருடைய ‘பருத்திவீரன்’ படம் ரிலீசாகும் சமயத்தில்தான் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். அவருடைய படத்தில் நடிக்கவேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறியுள்ளது. அவருடைய படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இப்படம் மதுரை - தேனி ஏரியாவை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. எனவே, என்னுடைய தோற்றத்தை முரட்டுத்தனமாகவும், அதேநேரத்தில் மதுரைக்கார பையன் போலவும் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல், நீண்ட தாடியும் வைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒருவாரத்திற்குள் இந்த படத்துக்கான கெட்டப் எனக்கு வந்துவிடும் என்று நினைக்கிறேன்.
பிப்ரவரியில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கப்போவதாக கூறியுள்ளனர். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் படம் முழுக்க இருக்கும் என்றும், எனக்கு மிகவும் முக்கியத்துவமான கதாபாத்திரமாக இருக்கும் என்றார்.

நலிவடைந்த விவசாயிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது முழு ஆதரவை தெரிவித்திருந்தார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ‘கொம்பு வச்ச சிங்கமடா’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டிருந்தார். அந்த பாடல் மூலம் கிடைக்கும் வருமானத்தை நலிவடைந்த விவசாயிகளுக்கு கொடுக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தனது கவனத்தை விவசாயிகளின் பிரச்சினைகள் பக்கம் திருப்பியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். தற்போது விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சூழல் தமிழகத்தில் அரங்கேறி வரும் நிலையில், அவர்களை காப்பாற்றும் நோக்கத்தில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்க ஜி.வி.பிரகாஷ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தொண்டு நிறுவனத்தின் முதல் முதலீடாக அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முழு சம்பளத்தையும் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். இதற்கான பணிகளில் தற்போது ஜி.வி.பிரகாஷ் முழு வீச்சில் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொண்டு நிறுவனம் தொடங்குவதற்கு பல வழிமுறைகள் இருப்பதால், அவை அனைத்தும் முடிந்தவுடன் முறைப்படியாக அதை அறிவிக்க ஜி.வி.பிரகாஷ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் தனது படத்தி்ல் செய்த சமூக விழிப்புணர்வு குறித்த கதையில், சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ரெமோ’ படம் வசூல் சாதனை படைத்த நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார்.
இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சினேகா, தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னை தி.நகரில் உள்ள சேரி பகுதியில் எடுத்து முடித்துள்ள படக்குழு, 2வது கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளது.
முன்னதாக, `தனி ஒருவன்' படத்தில் மருத்துவமனையில் நடக்கும் குற்றங்கள் உள்ளிட்ட சமூக விழிப்புணர்வு குறித்த முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் இந்த படத்திலும் சமூக விழிப்புணர்வு குறித்த தகவலை மோகன் ராஜா முயற்சி செய்துள்ளாராம். முன்னதாக விஜய்யின் `மதுர' படத்தில் உணவுக் கலப்படம் குறித்த சமூக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் ஜோதிகாவின் `36 வயதினிலே' படத்தில் உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு தெரிவித்திருந்த நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து மோகன் ராஜா இயக்கும் படத்மும் உணவுக் கலப்படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு தினத்தில் சிம்பு, தனுஷ் படங்கள் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார். முதன்முறையாக 3 வேடத்தில் நடிக்கும் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா நடித்து வருகின்றனர். மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சிம்பு எழுதி பாடிய 'டிரெண்ட் சாங்'கை படக்குழு வெளியிட்டது. சமூக வலைதளங்களில் டிரெண்ட்டான இந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.
இந்நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை தொடங்கிய படக்குழு `ஏஏஏ' படத்தை தமிழ் புத்தாண்டில் (ஏப்ரல் 14) ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நாளிலேயே தனுஷ் தனது படத்தையும் வெளியிட முயற்சி செய்து வருகிறாராம். ராஜ்கிரன் நடிப்பில் `பவர் பாண்டி' படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். இப்படத்தையும் தமிழ் புத்தாண்டு தினத்திலேயே வெளியிட தனுஷ் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.