என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நட்பின் காரணமாக நடிகர் சந்தானத்திற்கு, சிம்பு செய்ய உள்ள காரியம் குறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    ‘தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பிறகு சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஆனந்த் பால்கி  என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மராத்தி நடிகை வைபவி ஷாண்டில்யா நடித்துள்ளார்.  பி.கே.வர்மா ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செல்வக்குமார் தயாரித்து உள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தின் டீசரை சிம்பு பிறந்தநாளான, பிப்ரவரி 3-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.  திரையுலகில் சந்தானத்தை அறிமுகப்படுத்தியவர் சிம்பு என்பது அனைவரும் அறிந்ததே. அதையும் தாண்டி சிம்பு-சந்தானம்  இடையே நல்ல நட்பும் இருந்து வருகிறது.

    இந்நிலையில் பிப்ரவரி 3-ம் தேதி `சர்வர் சுந்தரம்' படத்தின் டீசரை சிம்புவே  வெளியிடுவதாக சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது இருவருக்கும் இடையேயான நட்பை அடுத்த  நிலைக்கு கொண்டு செல்வதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    மேலும் சந்தானம் நடிக்கும் மற்றொரு படமான `சக்க போடு போடு ராஜா' படத்திற்கு சிம்பு இசையமைத்து வருவது  குறிப்பிடத்தக்கது.
    விஜய் ஆண்டனி நடிக்கும் `எமன்' படத்தின் கதை குறித்து மனம் திறந்த இயக்குநரின் பேட்டியை கீழே பார்க்கலாம்.
    விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக  விஜய் ஆண்டனி தற்போது ‘எமன்’ படத்தில் நடித்து வருகிறார். `நான்' படத்திற்கு பின்னர் ஜீவா சங்கர் மீண்டும் விஜய்  ஆண்டனியை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்து வருகிறார். மேலும் முக்கிய  கதாபாத்திரத்தில் தியாகராஜன், சங்கிலி முருகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில்,  `எமன்' படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை ஜீவா சங்கர் பகிர்ந்துள்ளார்.

    `எமன்' முழுக்க முழுக்க அரசியல் சாயலில் எடுக்கப்படும் கதை. இப்படத்தில் அரசியல்வாதியாக மிரட்டும் தியாகராஜனால்  பாதிக்கப்படும் விஜய் ஆண்டனி, அவரது வழியிலேயே அரசியலில் நுழைந்து, தியாகராஜனின் செல்வாக்கை அடியோடு அழிப்பது  குறித்த வித்தியாசமான கதை. பொதுவாகவே அரசியல் கதைகள் என்றாலே, பொதுமக்கள் அரசியலை எப்படி பார்க்கிறார்கள்  என்று என்ற சாயலில் இருக்கும். ஆனால் `எமன்' முற்றிலும் மாறாக அரசியல்வாதிகள், அரசியலை எப்படி பார்க்கிறார்கள் என்ற  புதிய சாயலில் இருக்கும் என்று ஜீவா சங்கர் கூறுகிறார்.
    பட அதிபர்களுக்கு, முழு ஒத்துழைப்பு கொடுப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இதன் காரணமாக, சிலர் மனம் மகிழ்ந்து, பேசிய தொகைக்கு அதிகமாக சம்பளம் கொடுத்து, மூர்த்தியை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது உண்டு.
    பட அதிபர்களுக்கு, முழு ஒத்துழைப்பு கொடுப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இதன் காரணமாக, சிலர் மனம் மகிழ்ந்து, பேசிய தொகைக்கு அதிகமாக சம்பளம் கொடுத்து, மூர்த்தியை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது உண்டு.

    வசனம் பேசிக்கொண்டிருக்கும் போதே இடைச் செருகலாக புதிய வார்த்தைகள் எதையாவது கோர்த்து விடுவார், மூர்த்தி. நாளடைவில் ரசிகர்கள் அதை ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். ஒவ்வொரு படத்தில் மூர்த்தியைப் பார்க்கும்போதும், இந்தப் படத்தில் அதுமாதிரி புதுசாக என்ன சொல்லப்போகிறார் என்று எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

    இதுபற்றி மூர்த்தி கூறுகிறார்:-

    "சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் "சுமதி என் சுந்தரி'' படத்தில் சகோதரி ஜெயலலிதா ஒரு சினிமா நடிகையாகவே வருவார். படத்தில் அவருக்கு நான் செகரட்டரி.

    இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, வசனத்தில் புதிதாக எதையாவது சேர்த்து புதுமை செய்யலாம் என்று தோன்றியது. அதற்கான முதல் அடி மட்டும் எடுத்து வைத்தேன். நான் சரியாகச் செய்யவில்லையோ அல்லது ரசிகர்களிடம் என் புதுமுயற்சி சேரவில்லையோ, அந்தப் படத்தில் நான் காட்டிய வித்தியாசம் எடுபடாமல் போய்விட்டது.

    டைரக்டர் மகேந்திரனின் "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்தில் அடுத்த முயற்சியைத் தொடங்கினேன். அப்போது தோன்றிய `தம்ரி' என்ற வார்த்தையை மேனரிசத்துடன் செய்தேன். இந்த சவுண்டு `டெவலப்' ஆகி, அதுமுதல் என் புதிய படங்களிலும் அது மாதிரி ஏதாவது செய்தால்தான் ஆயிற்று என்கிற அளவுக்கு என்னைக் கொண்டுபோய் விட்டது.

    ஒருகட்டத்தில் இதை விட்டுவிட முடிவுசெய்தேன். ஆனால் படத்தின் டைரக்டர்கள் விடவில்லை. "மூர்த்தி சார்! வழக்கமான உங்கள் ஸ்டைல் வார்த்தைகள் வர்ற மாதிரியும் பேசிடுங்க'' என்பார்கள். கடைசியில் ரசிகர்கள் விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பமும் என்று இருந்துவிட்டேன்.''

    இவ்வாறு கூறினார், மூர்த்தி.

    மூர்த்திக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருந்தாலும் அவரது மகன் மனோ நடிகர் அர்ஜ×னின் தீவிர ரசிகர். தீவிர சைவரான மூர்த்தி, மகனை மட்டும் இது விஷயத்தில் கட்டுப்படுத்தவில்லை. விளைவு, சென்னையில் உள்ள சைனீஷ் ஓட்டல் ஒன்றில் மனோ நிரந்தர வாடிக்கையாளர். இங்குதான் நடிகர் அர்ஜ×னை சந்தித்திருக்கிறார் மனோ. சாப்பாட்டு வேளை, அவர்களின் நட்பு வேளையும் ஆயிற்று. அர்ஜ×னின் அதிரடி ஆக்ஷன் படங்கள் பார்த்ததில் அர்ஜ×னின் தீவிர ரசிகர் என்ற வட்டத்திலும் மனோ நெருங்கியிருந்தார்.

    இதுபற்றி மூர்த்தி கூறியதாவது:-

    "பி.எஸ்.வி. பிக்சர்சின் ஒரு படத்தில் அர்ஜ×னுடன் நானும் நடித்தேன். அப்போது ஏற்பட்ட நட்பில் அர்ஜ×ன் எங்கள் வீட்டுக்கும் வருவார். என் மகனின் பழக்கவழக்கங்கள், அணுகுமுறை என அத்தனையும் அவருக்கு தெரியவர, மனோ மீது அதிகப்படியான அன்பு செலுத்தினார். தனது நண்பர்களிடம், "பிள்ளை வளர்த்தால் மூர்த்தி சார் மாதிரி வளர்க்கணும்'' என்று சொல்கிற அளவுக்கு மனோவின் நட்பும், நடவடிக்கையும் அவருக்கு பிடித்துப்போயிருக்கிறது.

    மகன் திருமணத்துக்கு வந்து வாழ்த்தினார். மகன் மூலம் இறுகிய எங்கள் நட்பு, தொழிலிலும் எங்களை இணைத்தது. அவர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சமீபத்திய `வேதம்' படத்தில்கூட எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.''

    இவ்வாறு சொன்னார், மூர்த்தி.

    சினிமாவில் "பிரிக்க முடியாதது எதுவோ?'' என்று சிவபெருமான் - தருமி திருவிளையாடல் பாணியில் கேட்டால் - "நடிகர்களும் சம்பளப் பாக்கியும்'' என்று சொல்லலாம். இந்த பாக்கியை அடுத்தடுத்த படங்களில் கொடுத்து சரி செய்து விடும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். சம்பளம் பாக்கி வரவேண்டியிருக்கிறது என்பதை சொல்லாமலே மோப்பம் பிடித்து தேடி வந்து `பாக்கியை' கொடுக்கும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

    மூர்த்திக்கும் இப்படி இரண்டொரு `இன்ப அதிர்ச்சி' இருக்கவே இருக்கிறது. அது பற்றி கூறுகிறார்:-

    டைரக்டர் பாசில் தயாரிப்பாளராகவும் மாறி உருவாக்கிய படம், `அரங்கேற்றவேளை.' இந்தப் படத்தில் நடிக்க பாசிலின் சகோதரர்தான் எனக்கு சம்பளம் பேசினார். சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாய் வரவேண்டியிருந்தது. டப்பிங் பேசப்போனபோது, பாக்கி பணத்தை கொடுத்துவிட்டார்கள்.

    நான் டப்பிங் பேசி முடித்து டப்பிங் தியேட்டரில் இருந்து புறப்பட்ட நேரத்தில், டைரக்டரும் தயாரிப்பாளருமான பாசில் என்னை அழைப்பதாக பாசிலின் உதவியாளர் சொன்னார். அவரை சந்தித்தேன். "படத்தில் எனக்கு நல்லவிதமாக ஒத்துழைச்சீங்க. அதுக்கு என்னோட சின்ன அன்பளிப்பு'' என்று கூறிய பாசில், சட்டென என் கையில் 5 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டார். சரியாக ஐயாயிரம். எனக்கு இன்ப அதிர்ச்சி. எனக்கு வரவேண்டிய பாக்கியாக இருந்த 5 ஆயிரத்தை கொடுத்திருந்தால், நான் வாங்கிக்கொள்ள முடியாது. கொஞ்சம் முன்னாடிதான் பாக்கி தொகையை வாங்கியிருக்கிறேன். எனவே நான் பதறியபடி, "என்ன சார் நீங்க? எனக்கு சம்பள பாக்கி கிடையாது. டப்பிங்குக்கு வந்ததுமே தரவேண்டியிருந்த 5 ஆயிரத்தையும் கொடுத்து விட்டார்கள்'' என்று சொல்லி பணத்தை அவரிடம் திரும்பவும் கொடுக்க முயன்றேன்.

    ஆனால் பாசிலோ பிடிவாதமாக, "நோ! நோ! இது நானாக உங்களுக்கு கொடுக்கிறேன் சார். படத்தில் உங்கள் ஈடுபாடு பார்த்து பிடித்து நானாகக் கொடுக்கிற இந்த அன்பளிப்பை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று சொல்லிவிட்டார்.

    இவர் மாதிரியே டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவன் தயாரிப்பாளராக இருந்த "ஏணிப்படிகள்'' படத்திலும் நடந்தது. சிவகுமார் - ஷோபா நடித்த அந்தப் படத்தை டைரக்டர் பி.மாதவன் இயக்கினார். படம் ரிலீசாகப் போகிற சமயத்தில் என்னை வரச்சொல்லி சேதுமாதவன் சந்தித்தார். "நம்ம படம் ரிலீசாகப் போகுது. உங்களுக்கு எங்க தயாரிப்பு நிர்வாகி ஏதாவது பாக்கி வைத்திருக்கிறாரா?'' என்று

    கேட்டார்.எனக்கு 3 ஆயிரம் மட்டும் வரவேண்டியிருந்தது. அதைச் சொன்னேன். "இருக்கட்டும் சார்! அப்புறமா வாங்கிக்கறேன்''

    என்றேன்.ஆனால் சேதுமாதவன் விடவில்லை. "உங்கள் விஷயம் என் காதுக்கு வரவில்லை. அதனால்தான் கேட்டு தெரிந்து கொண்டேன். பாக்கி தொகை 3 ஆயிரத்தையும் நீங்கள் பெற்றுக்கொண்டால்தான் படத்தின் தயாரிப்பாளரான எனக்கு சந்தோஷம்'' என்றார். அவரது பெருந்தன்மைக்கு தலைவணங்கி பணத்தை பெற்றுக்கொண்டேன்.

    டைரக்டர் ராம.நாராயணன் இயக்க வந்த புதிதில் `சிவப்பு மல்லி' என்ற படத்துக்கு என்னை அழைத்திருந்தார்கள். சின்ன பட்ஜெட் படம் என கேள்விப் பட்டிருந்ததால் சம்பளத்தை கம்மியாக கேட்டேன். படம் முடிந்த பிறகு ராம.நாராயணன் என்னை அழைத்துப் பேசினார். "ஒரு தயாரிப்பு நிறுவனம் நன்றாக இருக்கணும் என்கிற மனசு உங்களுக்கு இருக்கு. அடுத்து நான் டைரக்ட் பண்ற படங்களில் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு. படத்துக்கு படம் உங்கள் சம்பளமும் அதிகமாகும் என்றார். ராம.நாராயணன் இயக்கிய படங்களில் நான் அதிகமாக நடித்த பின்னணியும் இதுதான்.''

    இவ்வாறு மூர்த்தி கூறினார்.

    ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி ஐயர், ஷிவதா ஐயர் நடித்துள்ள `அதே கண்கள்' படத்தின் விமர்சனத்தை காணலாம்.
    நாயகன் கலையரசன் கண்பார்வையற்றவர். 15 வயது இருக்கும் போது ஏற்படும் காய்ச்சலில் பார்வை இழக்கிறார். கண்பார்வையற்ற கலையரசன் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். கலையின் தோழியாக வரும் ஜனனி ஐயர் ஒருகட்டத்தில் கலை மீது காதல் கொள்கிறார். எனினும் தனது காதலை கலையிடம் வெளிப்படுத்தாமல் தனுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்.

    இது ஒருபுறம் இருக்க, கலைக்கு ஷிவதா நாயரின் நட்பு கிடைக்கிறது. பின்னர் இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில் தனக்கு உள்ள கடன் பிரச்சனை குறித்து கலையிடம் தெரிவிக்கிறார் ஷிவதா.

    அப்போது, ஷிவதாவின் கடனை அடைப்பதாக கூறும் கலை தனது காதலையும் வெளிப்படுத்துகிறார். அதன்பிறகு, விபத்தில் சிக்கும் கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். 3 வாரங்களாக சிகிச்சை பெற்று வரும் கலைக்கு கண்பார்வையும் கிடைக்கிறது.

    பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் கலை ஷிவதாவை தேடுகிறார். ஷிவதா குறித்த தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், ஜனனி ஐயருடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்தநேரத்தில் கலையை பார்க்க வரும் ஷிவதாவின் தந்தை அவளை கடன் கொடுத்தவர்கள் கடத்தி வைத்திருப்பதாக கூறுகிறார்.

    பின்னர் ஷிவதாவை காப்பாற்ற செல்லும் இடத்தில் ஷிவதாவின் தந்தை கொலை செய்யப்பட்டு, கொலைப்பழி சுமத்தப்படும் நிலைக்கு தள்ளப்படும் கலை வீட்டிலேயே தஞ்சமடைகிறார். அப்போது ஒருநாள் டிவியில் ஷிவதாவின் தந்தை விபத்தில் இறந்ததாக வரும் செய்தியை பார்க்கும் கலை, இந்த சம்பவம் குறித்த அறிந்துகொள்வதற்கு களத்தில் இறங்குகிறார். அவருக்கு துணைாக போலீஸ் அதிகாரியாக பாலசரவணன் வருகிறார்.

    இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பர்களை கண்டுபிடித்து கலை ஷிவதாவை காப்பாற்றுகிறாரா, ஜனனி ஐயருடன் திருமணம் செய்கிறாரா என்பது படத்தின் சுவாரஸ்யமான த்ரில் கதை.

    கலையரசன் தனக்குரிய கதாபாத்திரத்தில் தேவைக்கேற்ப துல்லியமாக நடித்துள்ளார். குறிப்பாக கண்பார்வையற்றவராக குறைவான நேரங்களே வந்தாலும், அந்த காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டப்படும்படி உள்ளது.

    ஜனனி ஐயர் தனக்குரிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்க்கிறது.

    தனித்துவமான படங்களை தேர்தெடுத்து நடிக்கும் ஷிவதா நாயர் இப்படத்திலும் தனக்குரிய கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளார். முதல் பாதியில் காதல் காட்சிகளில் புன்சிரிப்புடன் வரும் ஷிவதா, இரண்டாவது பாதியில் மிரட்டியுள்ளார். அழகான சொர்ணாக்காவாக அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

    கதைக்கு தேவையான இடத்தில் வரும் பாலசரவணன் அவரது நடிப்பிலும், காமெடியிலும் எப்போதும் போல கலக்கியிருக்கிறார்.

    இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் தேவையில்லாத காட்சிகளை திணிக்காமல் கதைக்கு தேவையான காட்சிகளை மட்டுமே படமாக்கியிருப்பது சிறப்பு. குறிப்பாக ஷிவதாவின் கதாபாத்திரத்திரத்தை மிரட்டலாக கொடுத்திருப்பது மிகச்சிறப்பு.

    ஜிப்ரான் இசையில் பாடல்கள் காதிற்கு இனிமையான உள்ளது. படத்தின் பின்னணி இசை, குறிப்பாக ஷிவதா வரும் காட்சிகளில் பாடலோடு வரும் பின்னணி இசை அனைவரையும் கவரும்படி இருக்கிறது.

    படத்தின் ஒளிப்பதிவளர் ரவிவர்மன் நீலமேகம் காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.

    மொத்தத்தில், அதே கண்கள் ரசிக்க வைக்கிறது. 
    தனுஷ் படத்தில் நடித்த பருல் யாதவ் வாக்கிங் சென்ற போது நாய்கள் கடித்து குதறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த முழு செய்தியை கீழே பார்க்கலாம்.
    மும்பையைச் சேர்ந்தவர் நடிகை பருல்யாதவ். இவர், தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான டைரக்டர் கஸ்தூரிராஜாவின் `டிரீம்ஸ்' என்ற படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடித்து உள்ளார். மேலும் `புலன் விசாரணை-2' படத்திலும் கதாநாயகியாக நடித்தவர்.

    இதேபோல மலையாளத்தில் புல்லட், கிருத்தியம், பிளாக் டாலியா என்பது உள்பட பல படங்களிலும், கன்னடம் மற்றும் பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். மாடலிங்கிலும் ஈடுபட்டு வரும் இவர் டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார்.

    நடிகை பருல்யாதவுக்கு நாய்கள் மீது அதிக பிரியம் என்பதால் அவர், மும்பை ஜோகேஸ்வரியில் உள்ள தனது வீட்டில் சில நாய்களை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவர், தனது வளர்ப்பு நாயுடன் அந்த பகுதியில் வாக்கிங் சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த சில தெருநாய்கள் நடிகை பருல்யாதவின் நாயை பார்த்து குரைத்துள்ளன. அந்த நாய்களிடம் இருந்து தனது நாயை காப்பாற்றுவதற்காக அவர், அவைகளை விரட்டினார்.

    இதனால் அந்த தெரு நாய்கள் நடிகை பருல்யாதவ் மீது பாய்ந்து அவரை கடித்து குதறின. ஒரே நேரத்தில் 6 நாய்களின் தாக்குதலுக்கு உள்ளான அவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தவர்கள் அங்கு ஓடிச்சென்று நாய்களை விரட்டி அவரை காப்பாற்றினார்கள். நாய்கள் கடித்து குதறியதில் நடிகை பருல்யாதவ்வின் முகம், கழுத்து, கை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

    அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள்.
    ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் பி.செந்தில் வேல், விஜய சங்கர் இணைந்து தயாரிக்கும் ‘அய்யனார் வீதி’ படத்தின் முன்னோட்டம் குறித்து பார்க்கலாம்.
    ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் பி.செந்தில் வேல், விஜய சங்கர் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘அய்யனார் வீதி’.

    இதில் முக்கிய கதாபாத் திரத்தில் கே.பாக்யராஜ், பொன்வண்ணன் நடித்துள்ளனர். கதா நாயகனாக யுவன், கதாநாயகி களாக சாராஷெட்டி, சிஞ்சுமோகன் அறிமுகமாகிறார்கள். இவர் களுடன் சிங்கம்புலி, முத்துக்காளை உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    “இந்தியாவில் இன்னும் பண்பாட்டுச் சூழல் கெட்டுப் போகாமல் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் முக்கிய இடம் தமிழகத்திற்கு தான் உண்டு. புரையோடிப்போன வன்மங்கள் எதுவுமின்றி அன்பு...பாசம்...  நட்பு...வீரம்...அளவான கோபம்... இவை அனைத்தும் இன்னும் நம்மை பாதுகாக்கும் கவசகுண்டலங்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் படம் ‘அய்யனார் வீதி’” என்றார்.

    யு.கே.முரளி இசை அமைத்துள்ளார்.

    இந்த படத்தின் டீசர் வெளியீடு சென்னை எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்தது. ‘அய்யனார் வீதி’ படத்தின் டீசரை நடிகர் ராதாரவி வெளியிட நடிகர் ரித்திஷ் பெற்றுக் கொண்டார்.

    இசை வெளியீட்டு விழா நாளை நடக்கிறது. இசை தகட்டை கே.பாக்யராஜ் வெளியிட ஆர்.கே.சுரேஷ் பெற்றுக்கொள்கிறார்.

    கதை-பாஸ்கரன், திரைக்கதை, வசனம், இயக்கம்-ஜிப்ஸி என்.ராஜ்குமார்.
    பாகுபலி-2 படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் டிரெய்லரை பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகிவரும் படம் ‘பாகுபலி-2’. ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    சுமார் 613 நாட்கள் நடந்த பாகுபலி படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் குடியரசு தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முழுமையாக முடியாததால் படத்தின் டிரெய்லரை பிப்ரவரியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு டிரெய்லர் வெளியாகாத நிலையில், படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த போஸ்டரில் பிரபாஸ், அனுஷ்கா வில் நீட்டி விடுமாறு போஸ்டர் வெளியாகியுள்ளது.

    மார்ச் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இரட்டை இயக்குனர்களின் ‘உல்லாச உலகம்’ படத்தின் முன்னோட்டம் குறித்து கீழே பார்க்கலாம்.
    அன்னை வள்ளி கிரியே‌ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் மாருதி பிலிம்ஸ் இண்டர்நே‌ஷனல் என்.முத்துக்குமாருடன் இணைந்து தமிழ், இந்தியில் தயாரிக்கும் படம் ‘உல்லாச உலகம்’.

    இன்றைய எக்ஸ்பிரஸ் வேகத்தில் வாழ்க்கையை கடக்கும் இளைய தலைமுறையிடம் திருக்குறளை முழுமையாக படிக்கும் ஆர்வம் இருப்பது அரிதானது.

    நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், இன்றைய இளைஞர்கள், இளம் பெண்களுக்கு ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுகிறது. அதுவே அவர்களின் சீரழிவுக்கும் காரணமாகிறது. இதை மையக்கருவாக வைத்து இது உருவாகிறது.

    இந்த படத்தை தி.மனோராமச்சந்திரன், தி.ஆறுமுகம் என்ற இரட்டையர்கள் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார்கள். மேலும் என்.முத்துக்குமாருடன் இணைந்து தயாரிக்கிறார்கள்.

    இதில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள்.

    இந்த படத்தின் கதைக்களம் திருக்குறள் தான். ஒரே கட்டணத்தில் ஒரே தலைப்பில் குறிப்பிட்ட நேரத்திற்குள் மூன்று கதைகளை உள்ளடக்கி உருவாக்கப்படும் படம் ‘ உல்லாச உலகம்’.

    சாமுவேல் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு-சந்திரன் சாமி, சண்டை பயிற்சி-ஆக்‌ஷன் பிரகாஷ், நடனம்-சஞ்சீவ கண்ணா.

    எம்.ஜி.ஆர். பிறந்தநாளான ஜனவரி 17- ந்தேதி ‘உல்லாச உலகம்’ படப்பிடிப்பு தொடங்கியது.

    இது கேரளா, உத்திரபிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் வளர இருக்கிறது.
    இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் `டோரா' படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். இதுகுறித்த செய்தியை பார்க்கலாம்.
    இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகி வரும் படம் `டோரா'. தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் இப்படத்தை சற்குணம், ஹிதேஷ் ஜபாக் தயாரித்து வருகின்றனர்.

    விவேக்-மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்தில் அனிருத் "ரா ரா ரா" என்ற ஒரு பாடலை பாடியுள்ளார். தீயசக்திகளை எதிர்த்து நிற்கும் நயன்தாராவுக்கு பொருத்தமாக அனிருத் குரலில் இப்பாடல் சிறப்பாக அமைந்துள்ளதாக இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக விவேக்-மெர்வின் இசையில் `வடகறி' படத்தில் "லோ ஆன லைஃப்" என்ற பாடலையும், `புகழ்' படத்தில் "நாங்க பொடியன்" என்ற பாடலையும் அனிருத் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    'டோரா'  படம்தவிர நயன்தாரா 'கொலையுதிர் காலம்', 'இமைக்கா நொடிகள்',  `அறம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள `சி3' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனது. இந்நிலையில் `போகன்' படம் முன்னதாக ரிலீஸ் ஆக உள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    சூர்யா நடிப்பில் தற்போது ‘சி-3’ படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ள நிலையில் படம் தொடர்ந்து பலமுறை தள்ளிப்போகிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான தேதியை படக்குழு பலமுறை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பிரதமர் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, ஜல்லிக்கட்டு பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் படத்தை வெளியிட படக்குழு தயங்கி வந்தது. மேலும் குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், பிப்ரவரி 3-ம் தேதிக்கு மீண்டும் தள்ளிப்போனது. இந்நிலையில், தற்போது பிப்ரவரி 9-ம் தேதி படம் வெளியாகும் என்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

    சூர்யாவின் `சி-3' படம் தள்ளிப்போனதால், லக்ஷமன் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்சாமி நடித்துள்ள `போகன்' படத்தை பிப்ரவரி 2-ம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முன்னதாக `போகன்' பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய் -பிரணிதா நடித்துள்ள ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படமும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஜாக்கி சான், சோணு சூட் இணைந்து நடித்துள்ள `குங் பூ யோகா' படம் பிப்ரவரி 3-ம் தேதி 4 மொழிகளில் வெளியாக உள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    அதிரடி மன்னன் ஜாக்கி சான், சோணு சூட் நடித்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள `குங்பூ யோகா' படம் பிப்ரவரி 3-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சீனாவின் பிரபல இயக்குநர் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் திஷா படானி மற்றும் தமிழில் ‘அனேகன்’ படத்தில் நடித்த அமைரா தஸ்துர், மற்றும் ஆரிஃப் ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    நாதன் வாங், கோமெல்-ஷிவான் இசையமைத்துள்ள இப்படத்தை பார்பி டங் தயாரித்து வெளியிடுகிறார்.

    முன்னதாக இப்படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக ஜாக்கி சான் உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியா வந்தனர். மும்பை விமான நிலையத்திற்கு நேரில் சென்று சோணு சூட் ஜாக்கி சானை வரவேற்றார். பின்னர் இருவரும் கபில் ஷர்மா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்கி சான் பாலிவுட்டில் முழு காதல் கதையில் நடிக்க விரும்புதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், `குங் பூ யோகா' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `காற்று வெளியிடை' படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
    மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதி ராவ் நடித்து வருகிறார். மேலும், டெல்லி கணேஷ், ஆர்.ஜே.பாலாஜி, ருக்மிணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை மணிரத்னம் தனது சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலமாக தயாரித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் `காற்று வெளியிடை' படத்தின் சிங்கிள் ட்ராக் வரும் பிப்ரவரி 3-ல் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், `காற்று வெளியிடை' தெலுங்கு படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் படத்தை `செலியா' என்ற பெயரில் படக்குழு வெளியிடுகிறது. முன்னதாக இப்படத்திற்கு `டூயட்' என பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் இப்படத்தை தில் ராஜு வெளியிடுகிறார்.

    ×