என் மலர்
அரசு வேலைக்கு காத்திருக்காமல் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பாரக்கலாம்.
நாகை மாவட்டம் பூம்புகாரில் வெளிநாடு வாழ் வலைதள இளைஞர்கள் அமைப்பு சார்பில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தி தமிழர்களின் பண்டைய வீரவிளையாட்டான ஜல்லிக் கட்டை மீட்டதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது தமிழகத்தில் வறட்சி, புயல் உள்ளிட்ட இடர்பாடுகளால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக போராடியது போல், விவசாயிகள் நலனுக்காக இளைஞர்கள் போராட முன்வர வேண்டும்.
ஆண்டுதோறும் மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து அரிசி, பருப்பு, உளுந்து, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. இதனால் நம் நாட்டில் விளையும் உணவுப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத வறட்சியால் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். விவசாயம் பாதிக்கப் பட்டதால் இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்காதது வருத்தம் அளிக்கிறது. விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் ஆறுகள், ஏரிகளை தூர்வார வேண்டும். வருங்காலங்களில் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். வருங்காலத்தில் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் விவசாய சங்கங்கள் தனித்தனியாக இயங்குவதால்தான் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை. விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் சுமார் 1.25 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்துள்ளனர். இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்காமல் விவசாயத்தில் அதிக அளவில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படமான 'கனவு வாரியம்' படத்தின் முன்னோட்டத்தை பார்க்கலாம்.
தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு டிசிகாப் சினிமாஸ் தயாரிப்பில் உருவான ஜனரஞ்சகமான திரைப்படம் 'கனவு வாரியம்', திரைக்கு வரும் முன்பே 7 சர்வதேச விருதுகளையும், 9 நாடுகளில் இருந்து 15 சர்வதேச அங்கீகாரங்களையும், கௌரவங்களையும் வென்றுள்ளது. உலகப் புகழ்ப் பெற்ற 2 சர்வதேச 'ரெமி' விருதுகளை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் 'கனவு வாரியம்'.
இந்தியா முழுவதும் வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் 'கனவு வாரியம்' என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் அருண்சிதம்பரம் 'கனவு வாரியம்' திரைப்படத்திற்குகதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்து உள்ளார். அருண் சிதம்பரம் மறைந்த மக்களின் ஜனாதிபதி மேதகு அப்துல்கலாம் அவர்களால் பெரிதும் பாராட்டப்பெற்றவர்.
'கனவு வாரியம்' திரைப்படத்தில் ஜியா (அறிமுக கதாநாயகி), இளவரசு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பிளாக் பாண்டி, யோக் ஜெப்பி, செந்தி குமாரி உட்பட பலர்நடித்துள்ளனர். இசை - ஷியாம் பெஞ்சமின், ஒளிப்பதிவு - எஸ்.செல்வகுமார், படத்தொகுப்பு – காகின்.
'ஆணழகன்' டாக்டர் அ.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் அவர்களும் இணைந்து 'டிசிகாப் சினிமாஸ்' பேனரில் 'கனவு வாரியம்' திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

பிரபல நடிகை ஒருவர் தனது வருங்கால கணவருக்கு விலையுயர்ந்த பரிசு பொருள் ஒன்றை கொடுத்துள்ளாராம். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
சமத்தான நடிகையும் தெலுங்கில் முன்னணி நடிகரான ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவது ஊரறிந்த விஷயமே. இவர்கள் இருவருக்கும் விரைவில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடக்கவிருப்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் தங்களது படங்களில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது சந்திப்பு நடத்தி தங்களது காதலை இன்னும் பலப்படுத்தி வருகின்றார்களாம்.
அப்படி நடைபெற்ற சமீபத்திய சந்திப்பு ரொம்பவும் பிரம்மாண்டமாய் அமைந்து போயிருக்கிறதாம். காரணம், தனது வருங்கால கணவருக்கு நடிகை 27 லட்ச ரூபாய் செலவில் விலையுயர்ந்த பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளாராம். இதற்கான சாலை வரி மட்டும் ரூ.4.5 லட்சமாம். இவ்வளவு விலையில் தனது காதலி கொடுத்த பரிசை பார்த்து அந்த நடிகர் ரொம்பவும் வியந்து போனாராம்.
தனக்கு இவ்வளவு விலையில் பரிசு கொடுத்த நடிகைக்கு, இதைவிட விலையுயர்ந்த பரிசு ஒன்றை கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம். ஆகையால், நடிகையை அசத்தும் அளவிலான பொருள் அதிக விலையில் இருக்கிறதா? என்று உலகம் முழுக்க தேடப் போகிறாராம். அவர் கொடுக்கப்போகும் பரிசு என்னவென்பதை அறிய திரையுலகமே ஆவலாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தலைமை இல்லாததே போலீஸ் நடவடிக்கைக்கு காரணமானதாக ராகவாலாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழு செய்தியை கீழே பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் அமைதியாக நடந்தது. ஜல்லிக் கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் போராட்டம் முடிவடையும் நிலையில் போலீசாருடன் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வன்முறை சம்பவங்கள் நடந்தன.
மெரினாவில் நடந்த மாணவர்கள் போராட்டத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவு அளித்து வந்தார். நடந்த சம்பவம் குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டம் பற்றிய விவரங்களை மாணவர்கள் கேட்டனர். கவர்னர் கையெழுத்து இல்லாமல் ஒரு அறிவிப்பு நகல் கொண்டு வரப்பட்டது. அதுபற்றி சரியான விளக்கம் அளிக்க யாரும் இல்லை.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரிய கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினார்கள். அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று ஒலி பெருக்கி மூலம் அறிவிக்க தொடங்கினார்கள்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜல்லிக்கட்டு சட்டம் பற்றி விவரத்தை வக்கீல் மூலம் அறிய 2 மணி நேரம் அவகாசம் கேட்டனர். ஆனால் போலீசார் அதை ஏற்காமல் அங்கு இருந்தவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள்.
அந்த நேரத்தில் நான் அங்கு இல்லை. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். இதுபற்றி தகவல் எனக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது என்னை சந்தித்தவர்களிடம் போராட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம். இதை கொண்டாடுவோம் என்று கூறினேன்.
இதற்காக 500 கிலோ கேக் வாங்கவும் என்னை சந்தித்தவர்கள் ஏற்பாடு செய்தனர். அதற்குள் போலீசார் அதிரடி நடவடிக்கையாக போராட்டகாரர்களை அப்புறப்படுத்துவதில் கெடுபிடி காட்டினார்கள். இதனால் பிரச்சினை ஏற்பட்டது.
உடனே நான் மெரினாவுக்கு வந்து 2 மணி நேரம் அவகாசம் தாருங்கள் மாணவர்களிடம் பேசி சமாதானம் செய்கிறேன் என்று போலீசாரிடம் கெஞ்சி கேட்டேன். போலீஸ் அதிகாரிகள் அனுமதித்தனர். நான் அங்கு சென்று நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று சொன்னேன். பலர் அதை ஏற்றுவெளியேறினார்கள்.
ஆனால் ஒரு சிலர் வெளியே செல்லாமல் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினார்கள். சிலர் தனிததமிழ்நாடு என்று கோஷம் எழுப்பினார்கள். அவர்கள் மாணவர்கள் அல்ல என்பதை புரிந்து கொண்டேன். போராட்டத்தை வழிநடத்த தலைமை இல்லாததால் பிரச்சனை ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் போலீசார் அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர். போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும் நிலை உருவானது.

படத்தில் கதை இல்லாமல் பட விழாவுக்கு நடிகை வருவதன் மூலம், படத்தை ஓடவைக்க முடியாது என்று கூறிய நயன்தாரா தெரிவித்த முழுவிவரத்தை கீழே பார்க்கலாம்.
புதிய படத்தின் அறிமுக விழா, விளம்பர நிகழ்ச்சிகளில் அதில் நடித்த நடிகர்-நடிகைகள் பங்கேற்பது வழக்கம். ஆனால் நயன்தாரா அவர் நடித்த படங்களுக்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. இதை காரணம் காட்டி தெலுங்கு படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு சிறிது காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஒரு விழாவில் பேசிய விவேக் “பட விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு நயன்தாரா அளித்த பதில்...
“நான் பட விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்று குற்றச்சாட்டு கூறுகிறார்கள். படத்தில் நடிக்க என்னிடம் கதை சொல்ல வரும்போதே, நான் பட விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை தயாரிப்பாளரிடம் சொல்லி விடுகிறேன். எனக்கென்று ஒரு கொள்கை வைத்து இருக்கிறேன்.
தொலைக்காட்சிகளில் அமர்ந்து படம்பற்றிய ஒரே விஷயத்தை எல்லோரிடமும் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இன்று எல்லாமே மாறி விட்டது. டிஜிட்டல் மயம் ஆகிவிட்டது. வித்தியாசமான விளம்பர யுத்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. ‘தனி ஒருவன்’, ‘மாயா’ போன்ற படங்களை நான் விளம்பரப்படுத்தி இருக்கிறேன். சிறிய படங்களுக்கும் நான் கட்டாயம் விளம்பரம் செய்தே ஆக வேண்டிய நேரங்களிலும் என்னால் முடிந்தவற்றை செய்கிறேன்.
நடிகர், நடிகைகள் விளம்பரம் செய்வதால் ஒரு மோசமான படத்தை ஓட வைத்து விட முடியாது. படத்தின் விளம்பரத்தை விட அதன் கதை நன்றாக இருந்தால்தான் அது ஓடும். மோசமான படத்தை 100 நாள் விளம்பரம் செய்தாலும் தோல்விதான் கிடைக்கும்.
படவிழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளுக்கு கடைசி பகுதி சம்பளத்தை குறைத்து விடலாம் என்பது போன்று விவேக் சார் என்னைப்பற்றி சொல்லி இருக்கிறார். என்னுடைய சம்பளத்தை பலமுறை விட்டுக்கொடுத்திருக்கிறேன். சில படங்களுக்கு என் சம்பளத்தை குறைத்து இருக்கிறேன்”.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் பிரம்மாண்ட கூட்டணி அமைவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
பரதன் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் `பைரவா' படம் பொங்கலுக்கு வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், விஜய் தனது 61-வது படத்தில் அட்லியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட 3 முன்னணி கதாநாயகிகள் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். எடிட்டராக ஆண்டனி ரூபனும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணும் அட்லியுடன் இணைகின்றனர்.
காமெடியனாக வடிவேலு, சத்யன் விஜய்யுடன் இணைய உள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதால் பிரம்மாண்ட கூட்டணி அமையும் என்பதில் சந்தேகமில்லை. முன்னதாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த `தெறி' படமும் வரவேற்பை பெற்றதால் `விஜய் 61' படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி 2-ல் துவங்க உள்ளதாகவும் படக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பலாம் என்று இளைஞர்களுக்கு கவிஞர் கபிலன் வைரமுத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் வெற்றியடைந்துள்ளதையடுத்து, இளைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக அவர்களுக்கு மேலும் ஆலோசனைகளை கூறும்விதமாகவும் கவிஞர் கபிலன் வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தை பிறந்தால் வழி பிறக்கும். இங்கே புரட்சி பிறந்திருக்கிறது. இதற்கு கருபொருளாகவும் எரிபொருளாகவும் இருந்த இளைஞர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
பல்வேறு விவாதங்கள் நிகழும் இந்நேரத்தில் ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
இந்த விழிப்புணர்ச்சிக்கு சமூக வலைத்தளங்கள் மையமாக இருந்திருக்கின்றன. Social media என்று சொல்லப்பட்டாலும், ஓர் ஊடகமாகப் பதிவானால் அதற்குரிய கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என எண்ணி ஃபேஸ்புக் – டுவிட்டர் போன்ற தளங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களாகத்தான் இயங்குகின்றன. அவர்களின் இந்த சாமர்த்தியத்தை உலக சமூகங்கள் தங்களின் தன்னெழுச்சிக்காக பயன்படுத்துவதில் மகிழ்ச்சி.
ஆனால் இந்த நிறுவனம் எதுவும் அறத்தின் அடிப்படையிலோ அல்லது நல்லிணக்க நோக்கத்தோடு அமைக்கப்படவில்லை. வணிகமும் ஆதிக்கமும் இவர்களின் இரு கண்கள்.
இதே நிறுவனங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்படலாம். அது நடப்பதற்குள் நாம் தன்னிச்சையாக இயங்குவதற்கு நாமே ஒரு தளத்தை உருவாக்குதல் அவசியம். சீனாவின் sino weibo என்ற தளம் மிகச் சிறந்த உதாரணம்.
மாற்றத்திற்கு தலைமை தாங்க நினைப்பவர்கள் தொழில்நுட்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும். உலகமெலாம் மென்பொருள் வல்லமைக்கு பெயர் பெற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு குழு அமைத்து நமக்கான ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
தான் சார்ந்த சமூகத்தின் பண்புகளைப் பாதுகாக்க நினைப்பதும் அதன் பெருமைகளைப் பாடுவதும் மனித இயல்பு. அதை ஒடுக்க நினைப்பதுதான் இறையாண்மைக்கு எதிரான செயல். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் தமிழர்களின் அடையாளம் புத்துணர்ச்சி பெறுவதன் மூலம் இந்தியம் என்ற தத்துவமும் மேம்படுகிறது. தமிழர்களைப் புரிந்துகொள்ளாத சில அரசியல் சக்திகள் இந்தியாவைப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிச்சைக்காரன் படத்தின் நாயகி சாத்னா டைட்டஸ் தனது காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த சாத்னா டைட்டஸுக்கு இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சில படங்களில் கமிட்டாகி நடிக்கவும் ஆரம்பித்தார்.
இந்நிலையில், பிச்சைக்காரன் படத்தை வெளியிட்ட கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கார்த்தி என்பவரை சாத்னா டைட்டஸ் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளிவந்தது. இதையடுத்து, சாத்னாவின் தாயார் தனது மகளை ஏமாற்றி, ஆசை வார்த்தைகள் கூறி கார்த்தி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக போலீசில் புகார் கொடுத்தார்.
ஆனால், போலீசார் விசாரணையில் கார்த்திக்கை தான் மனப்பூர்வமாக காதலித்துதான் திருமணம் செய்துகொண்டதாக சாத்னா கூறினார். மேலும், இருவீட்டார் சம்மதத்துடன் கார்த்திக்கை மணந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், இருவீட்டார் தரப்பிலும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
அதன்படி, வருகிற பிப்ரவரி 6-ந் தேதி இவர்களது திருமணம் சேலத்தில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் கார்த்திக்-சாத்னா டைட்டஸ் ஆகியோரின் குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10-ந் தேதி சென்னை வடபழனியில் அமைந்துள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெறும் திருமண வரவேற்பில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு தினத்தில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க `2.0' படக்குழு முடிவு செய்துள்ளது. அது என்ன வகையான விருந்து என்பதை கீழே பாரக்கலாம்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தற்போது `எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான `2.0' படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்து வருகிறார்.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ஜனவரி 30-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. அதற்காக மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான செட்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் `2.0' படத்தின் டீசரை தமிழ் புத்தாண்டு அன்று(ஏப்ரல் 14)-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. +
படத்தை தீபாவளி விருந்தாக அக்டோபர் 19-ம் தேதி வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

தீக்கிரையான நடுக்குப்பம் மீன் மார்க்கெட்டை புணரமைக்கும் பணிக்கு 10 லட்சம் அளிப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அவசர சட்டம் கொண்டுவந்த பிறகும், நிரந்தர சட்டம் வேண்டி போராட்டம் தொடர்ந்தது.
அப்போது திருவல்லிக்கேனி, நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள நடுக்குப்பம் மீன் மார்க்கெட் தீக்கிரையானது. அங்கு மீன் வியாபாரம் செய்து பிழைத்து வந்த மக்கள் தங்களது எதிர்கால வாழ்வாதாரத்தை இழந்து கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களது துயரநிலையை பற்றி அறிய வந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், தீக்கிரையான நடுக்குப்பம் மீன் மார்க்கெட்டை புணரமைக்கும் பணிக்கு 10 லட்சம் ரூபாய் உதவி செய்வதாக நேற்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ செய்தியை காண..,
https://www.facebook.com/offllawrence/videos/1078602422252125/

நடிகை அனுஷ்காவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இதனால் அவர் சம்பாதித்த பணத்தை ஓட்டல் தொழிலில் முதலீடு செய்து சொந்தமாக புதிய ஓட்டல்கள் திறக்க முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.
நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு பட உலகில் 12 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அருந்ததியில் மந்திரவாதியை பந்தாடிய ஆக்ரோஷமும், பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் ராணியாக வந்து வாள் வீசியதும், இஞ்சி இடுப்பழகி படத்தில் 20 கிலோ எடை கூடி குண்டு பெண்ணாக வந்ததும் இவரது நடிப்பு திறமையை பறைசாற்றுவதாக அமைந்தன.
வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், லிங்கா, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்கள் அனுஷ்கா நடிப்பில் வந்து ரசிகர்களை கவர்ந்தன. இவருக்கு தற்போது 36 வயது ஆவதால் பட வாய்ப்புகள் குறைகின்றன. பாகுபலி இரண்டாம் பாகம், ஓம்நமோ வெங்கடேசாய, சி-3, பாக்மதி ஆகிய 4 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. இந்த படங்களிலும் அவர் நடித்து முடித்து விட்டார். சி-3 படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து மற்ற படங்களும் வெளியாக இருக்கின்றன.
வேறு புதிய படங்கள் எதிலும் அனுஷ்கா ஒப்பந்தமாகவில்லை. வயது முதிர்ச்சியால் இளம் கதாநாயகர்கள் ஜோடி சேர தயங்குவதும் புதிய கதாநாயகிகள் வரத்து அதிகரித்து இருப்பதும் அனுஷ்கா மார்க்கெட்டில் சரிவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அனுஷ்காவுக்கு விரைவில் திருமணத்தை முடித்து விட குடும்பத்தினர் ஆர்வம் காட்டுகிறார்கள். மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அனுஷ்கா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா வாய்ப்பு இல்லாததால் ஓட்டல் தொழிலில் ஈடுபட அனுஷ்கா திட்டமிட்டு இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது. சம்பாதித்த பணத்தை ஓட்டல் தொழிலில் முதலீடு செய்ய இருக்கிறார் என்கின்றனர்.
ஐதராபாத்திலும், சென்னையிலும் ஓட்டல்கள் திறக்க முடிவு செய்து இருக்கிறார். ஏற்கனவே பல நடிகைகள் ரியல் எஸ்டேட், நகைக்கடை, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது என்று இதர தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் தொகுப்பு நூல் கேரளாவில் நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
கவிஞர் வைரமுத்து எழுதிய ‘வைரமுத்து சிறுகதைகள்’ என்ற நூல் 3 மாதங்களில் 9 பதிப்புகள் கண்டதாகும். அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சிறுகதைகள் ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மாத்ருபூமி பதிப்பித்திருக்கும் இந்த நூலை ஞானபீடம் பரிசுபெற்ற புகழ்மிக்க மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் நாளை (சனிக்கிழமை) கேரளாவில் வெளியிடுகிறார். நூலின் முதற்படியை கேரள சாகித்ய அகாடமியின் செயலாளர் மோகனன் பெற்றுக்கொள்கிறார். கே.எஸ்.வெங்கிடாசலம் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.
மலையாள இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தச்சன் திருவிழா கோழிக்கோட்டை அடுத்த திரூரில் கொண்டாடப்படுகிறது. துஞ்சன் திருவிழா என்று ஒவ்வொரு ஆண்டும் 4 நாட்கள் நடைபெறும் அந்தக் கலை இலக்கியத் திருவிழாவில் அகில இந்திய அறிஞர்களும், எழுத்தாளர்களும் கலந்துகொள்கிறார்கள். டெல்லி சாகித்ய அகாடமியுடன் இணைந்து துஞ்சன் அறக்கட்டளை இவ்விழாவை நடத்துகிறது.
இந்த ஆண்டு துஞ்சன் இலக்கியத் திருவிழாவைக் கவிஞர் வைரமுத்து தொடங்கிவைக்கிறார். இந்திய இலக்கியத்தில் பன்முகப் பண்பாடு என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார். ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது சிறுகதைகள் நூல் அதே மேடையில் வெளியிடப்படுகிறது.
இந்த விழாவில் டெல்லி சாகித்ய அகாடமியின் செயலாளர் கே.சீனிவாச ராவ், சாகித்ய அகாடமியின் மண்டலச் செயலாளர் எஸ்.பி.மகாலிங்கேஸ்வர், கேரளப் பண்பாட்டுத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன், பாராளுமன்ற உறுப்பினர் இ.டி.முகமது பஷீர், மலப்புரம் மாவட்ட கலெக்டர் அமித் மீனா மற்றும் மலையாளம், தமிழ், இந்தி, ஒடியா, வங்காளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளின் எழுத்தாளர்களும் பங்குபெறுகிறார்கள்.
மேற்கண்ட தகவல் கவிஞர் வைரமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.