என் மலர்
செய்திகள்

தீக்கிரையான நடுக்குப்பம் மீன் மார்க்கெட்: புணரமைப்பு பணிக்கு ராகவா லாரன்ஸ் 10 லட்சம் உதவி
தீக்கிரையான நடுக்குப்பம் மீன் மார்க்கெட்டை புணரமைக்கும் பணிக்கு 10 லட்சம் அளிப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அவசர சட்டம் கொண்டுவந்த பிறகும், நிரந்தர சட்டம் வேண்டி போராட்டம் தொடர்ந்தது.
அப்போது திருவல்லிக்கேனி, நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள நடுக்குப்பம் மீன் மார்க்கெட் தீக்கிரையானது. அங்கு மீன் வியாபாரம் செய்து பிழைத்து வந்த மக்கள் தங்களது எதிர்கால வாழ்வாதாரத்தை இழந்து கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களது துயரநிலையை பற்றி அறிய வந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், தீக்கிரையான நடுக்குப்பம் மீன் மார்க்கெட்டை புணரமைக்கும் பணிக்கு 10 லட்சம் ரூபாய் உதவி செய்வதாக நேற்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ செய்தியை காண..,
https://www.facebook.com/offllawrence/videos/1078602422252125/

Next Story