என் மலர்
மகேஷ் பாபு - ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் வெளியான இவண் ஒரு துணிச்சல்காரன் படத்தின் விமர்சனத்தை கீழே படிக்கலாம்.
மும்பையில் கல்லூரி மாணவனாக வருகிறார் மகேஷ்பாபு. நடிப்பில் ஆர்வம் இருக்கும் மகேஷ்பாபு கல்லூரி விடுமுறை நாட்களில் சின்ன சின்ன விளம்பரங்களில் மாடலாகவும் நடித்து வருகிறார். மும்பையின் பிரதான பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மகேஷ் பாபு சிறு வயதிலிருந்தே தனது மாமாவான பிரகாஷ்ராஜின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வருகிறார்.
பிரகாஷ்ராஜ் மும்பை புறநகரில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். பிரகாஷ்ராஜ் மீது மிகுந்த அன்பாகவும், பாசமாகவும் இருக்கும் மகேஷ்பாபு கல்லூரி விடுமுறை நாட்களில் தனது வீட்டிற்கு சென்று வருகிறார்.
சுற்றிலும் மலைகளுடன் கூடிய சுற்றுலாப் பகுதியில் இருக்கும் அந்த ஊருக்கு ஐதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து சுற்றுலா வரும் ப்ரீத்தி ஜிந்தா மீது முதல் சந்திப்பிலேயே காதல் கொள்கிறார் மகேஷ்பாபு.
ஆனால் ப்ரீத்தி ஜிந்தாவோ கண்டுகொள்ளாமல் இருக்கிறார். எனினும் ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. பின்னர் இருவருக்கும் இடையேயான காதல் பிரகாஷ் ராஜுக்கு தெரிய வருகிறது. இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் பிரகாஷ்ராஜின் பேச்சை கேட்டு ப்ரீத்தி ஜிந்தாவுடனான காதலை முறித்துக் கொள்கிறார் மகேஷ்பாபு.
அதனைத்தொடர்ந்து அதற்கான காரணத்தை ப்ளாஸ்பேக்காக கூறுகிறார். விவசாயிகளை கொடுமைப்படுத்தும் வில்லனாக வரும் ஜெயப்பிரகாஷிடம் இருந்து விவசாயிகளையும், அவர்களது நிலங்களையும் மீட்கும் போராட்டத்தில் மகேஷ்பாபுவின் தந்தையான கிருஷ்ணமூர்த்தியையும், தாயையும் ஜெயப்பிரகாஷின் ஆட்கள் கொலை செய்கின்றனர். தாய், தந்தையை இழந்துதவிக்கும் மகேஷ்பாபுவை ஜெயப்பரகாஷின் தங்கையின் கணவனான பிரகாஷ் ராஜ் அழைத்துக் கொண்டு மும்பை செல்கிறார்.
அப்போது பிரகாஷ்ராஜுடன் வர மறுக்கும் அவரது மனைவியிடம், தனது மகளை மகேஷ் பாபுவையே திருமணம் செய்ய வைப்பதாக சபதம் செய்ததாகவும் கூறிய பின் மகேஷ் பாபுவுடன் ஐதராபாத் செல்லும் பிரகாஷ்ராஜுக்கு ப்ரீத்தி ஜிந்தாதான் தனது மகள் என்று தெரிய வருகிறது. பின்னர் மகேஷ்பாபு-ப்ரீத்தி ஜிந்தா இருவருக்கும் இடையேயான காதல் மீண்டும் மலர்கிறது.
இந்நிலையில், பிரகாஷ்ராஜின் சபதத்தை நிறைவேற்றி ப்ரீத்தி ஜிந்தாவை மகேஷ்பாபு மணக்கிறாரா, விவசாயிகளை மகேஷ்பாபு காப்பாற்றுகிறாரா என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதி கதை.
தனது முதல் படத்திலேயே மகேஷ்பாபு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மாணவனாக நடிப்பது முதல் காதல், சண்டை காட்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் ப்ரீத்தி ஜிந்தா சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக காதல் காட்சிகளில் அவரது நடிப்பு அனைவரையும் ஈர்க்கிறது.
படத்தில் சிலகாட்சிகளில் வந்தாலும் பிரமானந்தம் மற்றும் எம்.எஸ்.நாராயணாவின் நகைச்சுவைகள் சிரிக்கும்படி உள்ளது.
படத்தின் இயக்குநர் கோவாலமுடி ராகவேந்திர ராவ் சிறப்பாக திரைக்கதையை அமைத்துள்ளார். காதல், சண்டை, காமெடி என அனைத்து காட்சிகளையும் ரசிக்கும் படி அமைத்துள்ளது சிறப்பு.
மணி சர்மாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் அஜயன் வின்சண்ட் படத்தை சிறப்பாக காட்சிபடுத்தியுள்ளார்.
மொத்தத்தில் துணிச்சல்காரன் வென்றான்.

சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் ராணா-டாப்ஸி நடிக்கும் `காஸி' படத்தில் சிரஞ்சீவி, சூர்யா இணையுள்ளது குறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
அறிமுக இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் ராணா-டாப்ஸி இணைந்து நடித்துள்ள படம் `காஸி'. 1971-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் பின்னணியை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராணுவ அதிகாரியாக ராணா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மறைந்த பாலிவுட் பிரபலம் ஓம் பூரியும் நடித்துள்ளார்.
பிவிபி நிறுவனம், மேட்னி என்டர்டெயிண்மண்ட் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் தெலுங்கு, இந்தியில் தயாராகியுள்ளது. மேலும் இப்படம் தமிழிலும் டப் செய்யப்படுகிறது.
இதற்காக இந்தி படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமித்தாப் பச்சன் குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், `காஸி' படத்தின் தெலுங்கு பதிப்பில் முக்கிய கதாபாத்திரத்துக்கு சிரஞ்சீவியும், தமிழ் டப்பிங்கில் சூர்யாவும் குரல் கொடுக்க உள்ளனர்.
மேலும் கடந்த வாரத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தை பிப்ரவரி 17-ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை, தீ வைப்புக்கு போலீசே காரணம் என்று நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ஆங்கில நாழிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டை பொறுத் தவரை காங்கிரஸ் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. ஒருபோதும் ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவாக செயல்பட்டதில்லை.
மிகப்பெரிய ஜனநாயக கட்சியில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது சகஜம்.
பா.ஜனதாவில் கூட மேனகாகாந்தி ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்கிறார். பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு தடைகூடாது என்கிறார்.
ஜெய்ராம் ரமேஷ் காளைகளை காட்சிப்படுத்தப்படாத பட்டியலில் சேர்த்தாலும் 2015 வரை ஜல்லிக்கட்டு நடக்கத்தானே செய்தது.
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக சென்னையில் மாணவர்களும், இளைஞர்களும் மிக அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார்கள். 6 நாட்கள் எந்த விதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென்று 7-வது நாள் காலையில் வன்முறை எப்படி உருவானது?
மாணவர்கள் வன்முறையில் ஈடுபட நினைத்து இருந்தால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லையே. போராட்டம் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே வன்முறையில் ஈடுபட்டிருக்கலாமே.
வன்முறையை தூண்டியது, போலீஸ் நிலையத்துக்கு தீ வைத்தது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடவில்லை. போலீசார் தான் இந்த வன்முறைக்கு காரணம்.
தமிழக அரசியலை பொறுத்தவரை ஜெயலலிதா சாதாரணமான தலைவர் அல்ல. மிகப்பெரிய தலைவர் மக்களால் மதிக்கப்படுபவர், நேசிக்கப்படுபவர்.
சசிகலாவை பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. அதை முக்கியத்துவமாக நினைக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர். தன்னை சுற்றி இருக்கும் கூட்டைவிட்டு வெளியே வர வேண்டும். அவர் மீது நிறைய எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவில்லை. ஆனாலும் 3-வது பெரிய கட்சியாக இருக்கிறோம்.
மக்கள் மனங்களில் இடம்பிடித்து வரும் காலத்தில் உள்ளாட்சி தேர்தலிலும், 2019 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவதற்காக எங்களை நாங்கள் தயார்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

விக்ரம்-கவுதம் மேனன் இணையும் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு நியூயார்க்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். கவுதம் மேனனின் கனவு படமான துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அனு இம்மாணுவேல் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நியூயார்க்கில் நேற்று தொடங்கியது. கவுதம் மேனின் ஒன்ராகா என்டர்டெயின்டமண்ட் மற்றும் மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
விக்ரம் - கவுதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் துருவ நட்சத்திரம் படத்தை குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விக்ரம் தனது அடுத்த படத்தில் வாலு பட இயக்குநர் விஜய் சந்தருடன் பெயரிடாத படத்திலும் ஹரி இயக்கத்தில் சாமி 2 படத்திலும் நடிக்க உள்ளார்.

`துருவங்கள் பதினாறு' படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் வெளியான `துருவங்கள் பதினாறு' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 21 வயதே ஆன இளம் இயக்குநரின் முதல் படமான `துருவங்கள் பதினாறு' முற்றிலும் மாறுபட்ட கதை என்பதால் திரைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் நடிகர் ரகுமானின் கதாபாத்திரமும் அனைவராலும் பேசப்பட்டது.
இந்நிலையில், `துருவங்கள் பதினாறு' படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் `நரகாசுரன்' என்ற படத்தை இயக்க உள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அரவிந்த்சாமியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

“ஆபாச பட நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள். என் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது” என்று நடிகை சன்னிலியோன் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான சன்னிலியோன் இந்தியில் அறிமுகமாகி கவர்ச்சியாக நடித்து வருகிறார். தமிழிலும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இவர் படங்களுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் சுவரொட்டிகளை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்வதும் அவ்வப்போது நடக்கிறது.
போலீசிலும் அடிக்கடி புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. சன்னிலியோனுக்கு கவர்ச்சி நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அவர் ஷாருக்கான் படத்தில் நடித்த சந்தோஷத்தில் இருக்கிறார். இதுகுறித்து சன்னிலியோன் அளித்த பேட்டி வருமாறு:-
“இந்தி படவுலகில் எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரப்பப்பட்டன. ‘இன்னும் 2 மாதங்கள்தான் இங்கு இருப்பார் அதன்பிறகு பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு அவர் நாட்டுக்கே திரும்பி விடுவார்’ என்று பேசினார்கள். நீலப்படத்தில் நடித்து இருக்கிறேன் என்று என்னை பலரும் வெறுப்பாகவே பார்த்தனர். இந்தி பட உலகில் அதிக நாட்கள் நீடிக்க முடியாது என்றும் கூறினார்கள். பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர்கள் என்னிடம் பேசவே தயங்கினார்கள்.
இதனால் மனம் நொந்த நிலையில் இருந்தேன். இந்த நிலையில்தான் ஷாருக்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நான் நடிப்பதற்கு ஷாருக்கான் எதிர்ப்பு சொல்லவில்லை. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினேன். இதன்மூலம் பெரிய நடிகர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறேன்.
பெரிய நடிகர்கள் படங்களில் நான் நடிக்க முடியாது என்று கேலி பேசியவர்களை இப்போது நினைத்து பார்க்கிறேன். அவர்கள் மீது கோபம் வருகிறது. பெரிய கதாநாயகர்கள் என்னை அவர்கள் பக்கம் நெருங்க விடமாட்டார்கள் என்று சொன்னவர்கள் கருத்தை இது பொய்யாக்கி இருக்கிறது. இனிமேல் மற்ற கதாநாயகர்களும் என்னுடன் நடிக்க ஆட்சேபிக்க மாட்டார்கள்.
2 மாதத்தில் நாட்டை விட்டு ஓடிவிடுவேன் என்றார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் 20 ஆண்டுகள் இங்கேதான் இருப்பேன். கடவுள் ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது. எனது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது”.
இவ்வாறு சன்னிலியோன் கூறினார்.

பணத்தை விட ரசிகர்களை சம்பாதிப்பதே முக்கியம் என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
மஞ்சு விஷ்ணு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஹன்சிகா, ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-
“தெலுங்கு படங்களில் ரொம்ப நாட்கள் நடிக்காமல் இருந்தது ஏன்? என்று கேட்கிறார்கள். தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வந்ததால் அங்கு ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருந்தேன். இதனால் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது மஞ்சு விஷ்ணுவுடன் நடிக்கும் தெலுங்கு படம் நல்ல கதை.
வாய்ப்புகள், போட்டி, மார்க்கெட் இவற்றிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒரே நேரத்தில் 5, 6 படங்களில் நடிப்பதிலும் விருப்பம் இல்லை. ஒரு படம் செய்தாலும் அது நல்ல கதையாக இருக்க வேண்டும். நல்ல கதைகளாக இல்லாத படங்களை அதிகமாக இழுத்துப்போட்டு நடிப்பதில் என்ன பயன் இருக்கிறது. நம்பர்-1 கதாநாயகி என்பதை நம்ப மாட்டேன்.
ஒப்பந்தமான படத்தில் முழு ஈடுபாட்டுடன் கடினமாக உழைக்க வேண்டும். மற்றபடி அந்த படம் எப்படி இருக்குமோ? ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா? வசூல் எப்படி இருக்கும் என்றெல்லாம் நினைத்து மனதிற்கு அழுத்தம் கொடுக்க மாட்டேன். அதனால்தான் இத்தனை காலம் சினிமாவில் நீடிக்கிறேன். எனக்கு பேஸ்புக் ரசிகர்கள் 60 லட்சம் பேர் உள்ளனர்.
பணம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட, ரசிகர்களை சம்பாதிப்பதுதான் முக்கியம். இந்த விஷயத்தில் நான் ரசிகர்கள் மனதை முழுமையாக வென்று இருக்கிறேன். பெரிய கதாநாயகன் சிறிய கதாநாயகன் என்றெல்லாம் பார்க்காமல் கதை பிடித்து இருந்தால் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். கதையும் கதாபாத்திரமும் பிடிக்காமல் இருந்தால் பெரிய நடிகர் படமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன். கதைதான் எனக்கு முக்கியம்.
நிறைய கதாநாயகிகள் தங்கள் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கிறார்கள். நீங்கள் அப்படி இல்லையே என்கிறார்கள். நான் எதற்கு அதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டும்? எனக்கு 25 வயதுதான் ஆகிறது. சின்ன பொண்ணு. எனக்கு வயதான பிறகு அதுமாதிரி படங்களில் நடிப்பதுபற்றி யோசிக்கிறேன். சம்பாதித்த பணத்தில் இந்த சமூகத்துக்கு ஏதேனும் திருப்பி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 31 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன்”.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

ஜெய்ப்பூரில் பத்மாவதி படப்பிடிப்பிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜெய்ப்பூர்:
பாஜிராவ் மஸ்தானி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் படம் பத்மாவதி. ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக உருவாகி வரும் இப்படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
ஜெய்ப்பூரில் ‘பத்மாவதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டக்காரர்கள் செட்டிற்குள் நுழைந்து அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலியையும் தாக்கினர்.
செட்டில் ஆர்பாட்டக்காரர்கள் புகுந்து உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் பன்சாலியை அடித்து அவரது முடியை
பிடித்து இழுத்ததாகவும் ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.
இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பன்சாலியின் ‘பத்மாவதி’ என்ற திரைப்படத்தில் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மினியும் அலாவுதின் கில்ஜியும் காதல்வயப்பட்டுள்ளதாக சில காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று ராஜ்புத் கர்னி சேனா
அமைப்பினர் கடும் கண்டனம் எழுப்பி வந்தனர். இப்படிப்பட்ட காட்சிகள் இருந்தால் அதனை நீக்க வேண்டும் என்று பன்சாலியை வலியுறுத்தினர்.
“வரலாற்றை தவறாகக் காட்ட வேண்டாம் என்று நாங்கள் பன்சாலியை எச்சரித்தோம். ஷூட்டிங் நடைபெறுவதை அறிந்து இங்கு வந்து எதிர்ப்பைத் தெரிவித்தோம்” என்று ராஜ்புத் கர்னி சேனாவைச் சேர்ந்த நாராயண் சிங் தெரிவித்தார்.
இந்த ரகளையை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதோடு, இனி ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு இல்லை என்று படக்குழுவினர் முடிவெடுத்ததாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.
சினிமாவில் நடிக்க வரும் முன்னரே மூர்த்திக்கு நடிகர் நாகேஷ் பழக்கமாகியிருந்தார், மூர்த்தி. அப்போது சட்டக் கல்லூரி மாணவர். சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர்.
சினிமாவில் நடிக்க வரும் முன்னரே மூர்த்திக்கு நடிகர் நாகேஷ் பழக்கமாகியிருந்தார், மூர்த்தி. அப்போது சட்டக் கல்லூரி மாணவர். சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர். தி.நகரில் உள்ள `கிளப் அவுசில்' அறை எடுத்து தங்கினார்.
இந்த கிளப் அவுசில் கேரம்போர்டு விளையாட நடிகர்கள் நாகேஷ், ஸ்ரீகாந்த், கவிஞர் வாலி ஆகியோர் வருவதுண்டு. அப்போது இவர்களுடன் ஏற்பட்ட நட்பு, இன்றும் இவர்களை நல்ல நண்பர்களாக வைத்திருக்கிறது.
அதுபற்றி மூர்த்தி கூறுகிறார்:-
"நாகேஷ் சார் அப்போது ரெயில்வேயில் பணியாற்றிய வேலையை விட்டுவிட்டு, நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கிளப் அவுசுக்கு வருவார். அவரும், ஸ்ரீகாந்தும், வாலியும் கேரம் போர்டில் ரொம்பவும் ஆர்வம் காட்டுவார்கள். மாலைப் பொழுது முழுக்க இவர்களுடன்தான் போகும்.
சாதாரணமாக ஆரம்பித்த எங்கள் நட்பை, கேரம் போர்டு நெருக்கமாக்கியது. நாகேஷ் சார் அப்போதே என்னை உரிமையுடன் `வாடா போடா' என்பார். இரவு லேட்டானால் கிளப் அவுசில் உள்ள எனது அறையில் தங்கிச் செல்வார்.
சில வருடங்கள் சந்திக்கவில்லை. நானும் சட்டம் முடித்து சினிமாவுக்கு வந்தேன். மறுபடி நாங்கள் சந்தித்தது முக்தா சீனிவாசனின் `தேன்மழை' படத்தில். இந்தப் படத்தில் நாகேஷ் சார் நடித்தார். நானும் இருந்தேன்.
முதல் நாள் படப்பிடிப்பில் நாகேஷ் சாருக்கு என்னை அறிமுகம் செய்து வைக்க விரும்பிய டைரக்டர் முக்தா சீனிவாசன், என்னை அழைத்துக்கொண்டு நாகேஷ் சாரிடம் சென்றார். நாகேஷ் சாரை நெருங்கியதும், "மூர்த்தி! நாகேஷ் சாரை தெரியுமா? இவர்தான்'' என்று சரளமாக பேசியவர், நாகேஷிடம், "நாகேஷ்! இவர்தான் மூர்த்தி. நம்ம படத்தில் நடிக்கிறார்'' என்றார்.
பார்த்த மாத்திரத்தில் என்னை நாகேஷ் தெரிந்து கொண்டார். பிறகு டைரக்டரிடம் "ஓய்! எனக்கு மூர்த்தியை அறிமுகப்படுத்துகிறீராக்கும்?'' என்று சொல்லிச் சிரித்தவர், எங்கள் `கிளப் அவுஸ்' கால நட்பு பற்றி விலாவாரியாக சொன்னார். டைரக்டர் மட்டுமல்ல, செட்டில் இருந்தவர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.
தமிழ் சினிமாவில் அதுவரை `டான்ஸ்' ஆடத் தெரிந்த நகைச்சுவை நடிகர் என்றால் சந்திரபாபு என்ற நிலைமை இருந்தது. நாகேஷ் நடிக்க வந்த பிறகு, அந்த நிலைமை மாறிற்று. நடனத்திலும் அற்புதமான கோணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தார். அப்போது புகழேணியின் உச்சியில் இருந்த அண்ணன் எம்.ஜி.ஆர்., அண்ணன் சிவாஜி இருவரின் படங்களிலும் இவர்தான் காமெடி என்கிற அளவுக்கு சினிமாவில் மிகப் பெரிய இடம் பிடித்தார்.
அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு 3 கால்ஷீட் கூட கொடுத்தார். ஒரு கால்ஷீட் என்பது 8 மணி நேரம்.
3 கால்ஷீட் என்னும்போது ஒரு நாள் முழுக்க ஓய்வேயில்லாமல் நடித்துக் கொடுக்க வேண்டும். அதாவது, தூங்கப் போகும் நேரத்தில் கூட ஏதாவது ஒரு செட்டில் நடித்துக் கொண்டிருப்பார். அந்த மாதிரி உழைத்து யாரையும் நான் பார்த்ததில்லை. ஷாட் இடைவேளையில் கிடைக்கிற அரை மணி, ஒரு மணி `கேப்'பில் தூங்கினால்தான் உண்டு. அப்படியும்கூட இவரை பார்க்கும் இயக்குனர்கள், `சார்! ஒரு மணி நேரம் வந்துட்டு போனீங்கன்னா உங்க போர்ஷனை முடிச்சிடுவேன்' என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். நடிப்பில் தனி மேனரிசத்தைக் கையாண்டு ரசிகர்களை சிரிக்க வைத்ததற்குப் பின்னணியில் இவரது கடுமையான உழைப்பு உண்டு.
நடிகர் தேங்காய் சீனிவாசன் நகைச்சுவையில் புது ஸ்டைல் மூலம் தன்னை நிலை நிறுத்தியவர். என் மீது ரொம்பவே பிரியம் கொண்டவர். ஒருமுறை என் ஆரோக்கியம் வேண்டி கீழ் திருப்பதியில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு நடந்தே சென்று வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார். இதுபற்றி தெரிய வந்தபோது, நெகிழ்ந்து போனேன். கூப்பிட்டு உரிமையுடன் கண்டித்தபோது, என் கண்டிப்பை கண்டுகொள்ளவே இல்லை. அவருக்கே உரிய சிரிப்புடன் நகர்ந்து போய்விட்டார்.
சினிமாவில் நான் உருவாக்கிய ஸ்டைலை, தேங்காய் சீனிவாசனும் பின்னாளில் செய்தார். ஆனால் அதை அவருக்கே உரிய ஸ்டைலில் செய்தபோது ரசிகர்கள் பெரிய அளவில் ரசித்தார்கள்.
நடிகர் வி.கே.ஆர். சாரை (வி.கே.ராமசாமி) நடிப்புக்கு மட்டுமின்றி அவரது தலைசிறந்த பண்புக்காகவும் நேசித்திருக்கிறேன். தன்னைவிட சிறு வயதுக்காரர்களைக் கூட `வாங்க' என்று மரியாதையுடன் அழைப்பது அவருக்கே உரிய பண்பு.
ஒருமுறை அவருடன் மைசூரில் படப்பிடிப்புக்கு போயிருந்தபோது பழைய கால கதைகளை சுவாரசியத்துடன் அவர் சொன்ன அழகு, இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது. என்போன்ற நகைச்சுவை நடிகர்களில் பலரும் கதைக்குள் நுழைகிறபோதுதான் காமெடி வரும். இவரோ சாதாரணமாய் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட காமெடி இவரிடம் இருந்து அருவியாய் கொட்டும்.
இன்றைக்கு `ஆச்சி' என்ற அடைமொழியுடன் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் `ஆச்சி' மனோரமாவுடன் சில படங்கள் சேர்ந்து நடித்திருக்கிறேன். செட்டில் நடிக்கும்போது இவரது நடிப்பைப் பார்த்தாலே புதியவர்களும் நடிப்பு கற்றுக்கொள்ளலாம்.
ஒரு சீனில் தனது நடிப்பு பிடிக்கவில்லையானால் திரும்பவும் அந்த காட்சியில் நடித்துக் கொடுப்பார். சில காட்சிகளில் இயக்குனரே திருப்தி ஏற்பட்டு, "போதும்'' என்று சொன்னாலும் உடன்படமாட்டார். "எனக்கு ஏதோ ஒண்ணு திருப்தியில்லாமல் தெரிந்தது. என் திருப்திக்கு இன்னொரு `டேக்' எடுத்துடுங்களேன்'' என்று கேட்டு நடித்துக் கொடுப்பார். தொழிலில் இன்றைக்கும் அவருக்கு இருக்கும் இந்த ஈடுபாடுதான் இப்போதும் அவரை ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக்கி இருக்கிறது.
அதுமாதிரி டிரெஸ்ஸிங் சென்ஸ் அதிகம். மேக்கப்பிலும் தனி கவனம் செலுத்துவார். அகில இந்திய அளவில் சிறந்த நடிகைகளாக, தொழில் பக்தியில் தேர்ந்தவர்களாக ஏழெட்டு நடிகையரை பட்டியல் போட்டால் இந்த பட்டியலில் மனோரமாவுக்கும் நிச்சயம் இடம் உண்டு.
மனோரமா தவிர என்னுடன் ஜோடி சேர்ந்து காமெடி செய்தவர்களில் காந்திமதி, கோவை சரளா ஆகியோருக்கும் தமிழ் சினிமா நகைச்சுவைப் பட்டியலில் இடம் உண்டு. காந்திமதியின் தனித்துவ உச்சரிப்பு, அவருக்கே உரியது. கோவை சரளாவிடம் சுறுசுறுப்பு அதிகம். கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் அதிகம்.
சினிமாவில் நான் வியந்து பார்த்த ஒரு நடிகர் எஸ்.வி.ரங்காராவ் அவர்கள். எந்த கேரக்டரானாலும், அதில் இவர் வெளிப்படுகிற விதம் பிரமிப்பாகவே இருக்கும்.
நான் நடிக்க வந்த நேரத்தில் ஒரு படத்திலாவது இவருடன் நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். `சீர்வரிசை' என்ற படத்தில் அப்படியொரு வாய்ப்பு வந்தது. ஆனாலும் என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அந்தப் படத்தில் நடித்த நேரத்தில் மரணம் அவரை அழைத்துக்கொண்டுவிட்டது. பிறகு அவர் கேரக்டரில் டி.கே.பகவதி நடித்தார்.
எஸ்.வி.ரங்காராவ் மாதிரியே கொடுத்த கேரக்டருக்குள் தன்னை மறைத்துக் கொண்டு கேரக்டராகவே மாறிவிடும் இன்னொரு நடிகர் எஸ்.வி.சுப்பையா. பூக்காரி, சமையல்காரன் என 2 படங்களில் சேர்ந்து நடிக்கும்போது, `எப்பேர்ப்பட்ட கலைஞருடன் சேர்ந்து நடிக்கிறோம்' என்ற பிரமிப்பு ஏற்பட்டது.

விஜய்-அட்லி இணையும் படம் 80-களில் நடக்கும் கதை என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா? என்பதை கீழே பார்ப்போம்.
‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், சமந்தா, காஜல் அகர்வால், ஜோதிகா, கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஒருசில காட்சிகளை 80-களில் நடப்பதுபோன்று காட்சிப்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் நடக்கும் காட்சிகளுக்காகத்தான் விஜய் தற்போது தாடி, முறுக்கு மீசையுடன் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது. 80-களில் நடக்கும் காட்சிகளை மதுரையில் படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வான நிலையில், பிப்ரவரி 1-ந் தேதி படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் தொடங்கப் போவதாகவும், அதைத் தொடர்ந்து பின்னி மில் மற்றும் சென்னையில் உள்ள பிரபலமான ஸ்டுடியோவிலும் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள எமன் படம் வருகிற மகா சிவராத்திரியில் வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்
'சைத்தான்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘எமன்’. இப்படத்தை ‘நான்’ பட புகழ் ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் விஜய் ஆண்டனி அரசியல்வாதியாக நடித்துள்ளார். மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனரும், நடிகருமான தியாகராஜனும் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் பாடல்களை வெளியிடவுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அதன்படி, வருகிற மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 24-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாம் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மான் வேட்டையாடியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சல்மான் கான் இன்று ஜோத்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகி 65 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ஜெய்ப்பூர்:
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கன்கானி என்ற கிராமத்துக்கு சென்றிருந்தார்.
அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்து 10-4-2006 அன்று தீர்ப்பளித்தது.
தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 2007-ம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் நடிகர் சல்மான்கானின் 5 ஆண்டு கால ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.
இதனால் அவர் ஜோத்பூர் போலீசாரிடம் சரண் அடைந்தார். 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் 6 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. பின்னர், சிறையில் இருந்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் இன்று (25-ம் தேதி) நேரில் ஆஜராகும்படி ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சல்மான் கான் உள்ளிட்டவர்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, கண்காணிக்க வேண்டி இருப்பதால் இன்று ஜோத்பூர் நகருக்கு வரும் சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, இவ்வழக்கின் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சல்மான் கான் உள்பட இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் இன்று காலை 11.30 மணியளவில் ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜராகினர்.
சல்மான் கான் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த மான் வேட்டை சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் எனது கட்சிக்காரர் படப்பிடிப்பில் நடித்து விட்டு ஓட்டல் அறையில் தங்கியிருந்தார். அவர்மீது வேண்டுமென்றே பொய்யாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
பின்னர், தனியறைக்குள் சுமார் ஒரு மணிநேரம் மாஜிஸ்திரேட் தல்பத்சிங் ராஜ்புரோஹித்தின் 65 கேள்விகளுக்கு பதில் அளித்த சல்மான் அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.