என் மலர்
டிஜிட்டலில் மாற்றம் செய்யப்பட்ட பாட்ஷா படம் தற்போது ஜப்பானிலும் ரிலீசாகப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ரஜினி நடிப்பில் சூப்பர், டூப்பர் ஹிட்டான பாட்ஷா படம் சமீபத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியானது. கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகும் டிஜிட்டலில் மாற்றப்பட்டு வெளிவந்த இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், ரஜினிக்கு ஜப்பானிலும் ரசிகர்கள் அதிகளவில் இருப்பதால் இப்படத்தை ஜப்பானிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரஜினியின் புதுப்படங்கள் எப்போது வெளியானாலும், ஜப்பானிலும் வெளியிடப்படும். அதேபோல், டிஜிட்டலில் மாற்றப்பட்ட ‘பாட்ஷா’ படமும் தற்போது வெளியாகவிருக்கிறது.
வருகிற பிப்ரவரி 25-ந் தேதி ஜப்பானில் இப்படம் திரையிடப்படவிருக்கிறது. இப்படத்தில் நக்மா, ரகுவரன், தேவன், ஜனகராஜ், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். டான், ஆட்டோ டிரைவர் என இரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ், கதகளி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த கேத்ரீன் தெரசா, பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா தமிழில் நடித்து வெளிவந்த ‘தேவி’ படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இதையடுத்து, பிரபுதேவா தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வரிசையில் தற்போது புதுமுக இயக்குனர் அர்ஜுன் சொன்ன நகைச்சுவையான கதை பிடித்துப்போக அவரது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அர்ஜுன் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது இவர் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் கதாநாயகியாக கேத்ரீன் தெரசா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்திற்கு ‘யங் மங் சங்’ என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மீனவர்களை விடுவிக்கவேண்டும். இல்லையென்றால் தன்னையும் கைது செய்யவேண்டும் என்று சிம்பு ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து நடத்திய அமைதிப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தாலும், இந்த போராட்டம் கடைசியில் வன்முறையில் முடிந்தது அனைவருக்கும் பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிம்பு, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனாவில் கடந்த 6 நாட்களுக்கும் மேலாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அமைதி முறையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் முடிவில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. பொதுவாக ஒருவரால் அரசியல் சட்டங்களை புரிந்துகொள்ள முடியாது. இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டவுடன் யாராவது ஒரு அரசு பிரதிநிதி மாணவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் சட்டத்தின் சாராம்சம் குறித்து பேசி, அவர்களிடம் விளக்கியிருக்கலாம்.
போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு காவல்துறை அவகாசம் அளித்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. இந்த போராட்டம் தனிப்பட்ட ஒருவரை முன்னிலைப்படுத்தி தொடங்கிய போராட்டம் கிடையாது. ஜாதி, மதம் என்பதையும் தாண்டி தமிழர்கள் என்ற உணர்வுடன் தொடங்கிய போராட்டம். இந்த போராட்டத்திற்கு மதசாயம் பூசக்கூடாது.
மாணவர்களின் இந்த போராட்டத்தின் வெற்றி கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இந்த வெற்றியை கொண்டாடுவதா? கோபப்படுவதா? என்று தெரியாமல், எந்தவித அர்த்தமும் இல்லாமல் முடிந்தது வருத்தம் அளிக்கிறது. வன்முறையில் மாணவர்கள் ஈடுபட்டதாக கூறுவது முற்றிலும் தவறு.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கத்தான் மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர். ஆனால், அவர்களை கைது செய்தது எந்தவிதத்தில் நியாயம்? மீனவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை. அரசுக்கு நான் மூன்று கோரிக்கைகளை வைக்கிறேன்.
அதாவது, வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்களை விடுதலை செய்யமுடியாது என்றால், அவர்களின் போராட்டத்திற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன். அதனால், என்னையும் கைது செய்யுங்கள். மேலும், கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். மற்றொன்று, இந்த போராட்டத்தின் வெற்றியை கொண்டாட அரசு ஒருநாள் ஒதுக்கித் தரவேண்டும். கைதானவர்களை விடுவிக்கவில்லையெனில், அவர்களுக்காக அஹிம்சை வழியில் நான் போராடுவேன்.
மேலும் அவர், வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மெரினாவில் 144 தடை உத்தரவு போடப்படுவதற்கு அவசியம் என்ன? என்பது உள்ளிட்ட அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளையும் முன் வைத்தார்.

தல 57 படத்தின் தலைப்பு குறித்து ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளிவருகிறது. இதனால், ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்த படத்தின் தலைப்பு என்னாவாக இருக்கும் என்பதை அறிய கீழே வாருங்கள்..
அஜித் தற்போது நடித்து வரும் ‘தல 57’ படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில், அப்படத்திற்கு இதுதான் தலைப்பு என்று சமூக வலைத்தளத்தில் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொருவராக புதுபுது வதந்திகளை கிளப்பி வருகின்றனர்.
அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய ஆங்கிலத்தில் V வரும்படியான படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளதால், அஜித் நடிக்கும் இந்த படத்திற்கும் ஆங்கிலத்தில் V வரும்படியான தலைப்புதான் வைக்கப்படும் என்று ஒரு செய்தி பரவியது.
இதையடுத்து, இப்படத்திற்கு ‘வதம்’ அல்லது ‘விவேகம்’ இந்த தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய படக்குழுவினர் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியானது. இதில், ‘விவேகம்’ என்ற தலைப்பையே படக்குழுவினர் தங்களின் பரிசீலனையில் முதல் இடத்தில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வருகிற பிப்ரவரி 2-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள் அடிப்படையில், இப்படத்தின் தலைப்பு குறித்த வதந்திகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன், தம்பி ராமையா, விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாய் தயாரித்து வருகிறது.

மீண்டும் தனுஷ் படத்திற்கு இசைமைப்பேன் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
தனுஷ் நடித்த ‘3‘ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதைத் தொடர்ந்து ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய தனுஷ் நடித்த படங்களுக்கும், ‘எதிர்நீச்சல்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய தனுஷ் தயாரித்த படங்களுக்கும் இவரே இசையமைப்பாளராக பணிபுரிந்தார்.
இடையில், தனுஷ் நடிப்பில் வெளிவந்த படங்களுக்கு அனிருத்துக்கு பதிலாக வேறு வேறு இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்யப்பட்டு வந்தனர். தனுஷுக்கும், அனிருத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலேயே தனுஷ் வேறொரு இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தாங்கள் பிரிந்தது தற்காலிகம்தான். நான் மீண்டும் தனுஷ் படத்துக்கு இசையமைப்பேன் என்று அனிருத் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ஒரு இசையமைப்பாளர் ஒரே நடிகரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தால், ரசிகர்களுக்கு அலுப்பு தட்டி விடும். அதை தவிர்ப்பதற்காகவே நானும், தனுஷும் சின்ன இடைவெளி ஏற்படுத்திக் கொண்டோம். மீண்டும் நாங்கள் இணைந்து பணிபுரிவோம் என்றார்.

தீபிகா படுகோனே நடிக்கும் இந்தி படப்பிடிப்பில் சிலர் புகுந்து ரகளை செய்தார்கள். அவர்கள் யார்? ஏன் ரகளை செய்தார்கள்? என்பதை கீழே பார்ப்போம்.
இந்தி பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் தற்போது, ‘பத்மாவதி’ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தீபிகா படுகோனே, சாஹித் கபூர், ரன்வீர்சிங் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கார்னிசேனா என்ற அமைப்பை சேர்ந்த சிலர் இப்படத்தின் படப்பிடிப்பில் புகுந்து இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட படக்குழுவினர் சிலரை அடித்து உதைத்ததாகவும், படப்பிடிப்பு அரங்குகளை அவர்கள் சேதப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து கூறும்போது, சஞ்சய் லீலா பன்சாலி, 1300-ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த வீரப்பெண்மணியான பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருவதாகவும், இந்து மதத்தை சேர்ந்த அவர் முஸ்லீம் மன்னர் ஒருவரை மணந்துகொண்டதாகவும் அதையே பன்சாலி படமாக்கி வருவதாகவும் கருதி, கார்னிசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரபல பாலிவுட் டைரக்டர்கள் ராம்கோபால் வர்மா, மகேஷ்பட், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.சம்பவத்தின்போது தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகிய மூன்று பேரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை. தாக்குதல் சம்பவம் பற்றி இவர்கள் மூன்று பேரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மூன்று பேரும் மவுனமாக இருப்பது ஏன்? என்று படக்குழுவை சேர்ந்த சிலர் கேள்வி விடுத்து இருக்கிறார்கள்.

சினிமாவில் `பிசி'யாக இருந்த நேரத்திலும், ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் மூர்த்தி நடித்தார். அவர் பங்கு கொண்ட "மீண்டும் மீண்டும் சிரிப்பு'' தொடர், ஐந்தாண்டுகள் ஒளிபரப்பு ஆயிற்று.
சினிமாவில் `பிசி'யாக இருந்த நேரத்திலும், ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் மூர்த்தி நடித்தார். அவர் பங்கு கொண்ட "மீண்டும் மீண்டும் சிரிப்பு'' தொடர், ஐந்தாண்டுகள் ஒளிபரப்பு ஆயிற்று.
இப்போது சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும், பெரிய திரையிலும் ஜொலித்தவர்கள். இவர்களில் சிலர், சின்னத்திரை உதயமான நேரத்தில் அதைப்பற்றி வெளிப்படையாக கிண்டல் செய்தவர்கள், பெரிய திரையில் தொடர்ந்து நீடிக்க முடியாத நேரத்தில், சின்னத்திரைக்கு வந்து, "இதுதான் அதிக அளவில் மக்களை சென்றடைகிறது'' என்று முழங்கவும் செய்தார்கள்.
ஆனால், தொடக்கம் முதலே சின்னத்திரையின் சக்தியைப் புரிந்து கொண்டு நல்ல புகழோடு இருந்த நேரத்திலேயே சின்னத்திரையிலும் தனது படைப்பு மூலமாக புகழ் பெற்றவர் டைரக்டர் கே.பாலசந்தர். நடிகர்களில் "வெண்ணிற ஆடை'' மூர்த்தி.
சென்னை டெலிவிஷனின் ஆரம்ப காலத்தில், எஸ்.வி.ரமணனின் `தினேஷ் - கணேஷ்' தொடராக ஒளிபரப்பானது. இதில் காமெடி செய்தார், மூர்த்தி.
மூர்த்தியிடம் எழுத்தாற்றலும் இருந்ததால் அவரே கதை, வசனம் எழுதி, "ஜுலை-7'' என்ற திகில் சீரியலை இயக்கினார். சன் டி.வி.யில் 13 வாரங்கள் ஒளிபரப்பான இந்த சீரியல், மூர்த்தியின் இயக்கும் திறனுக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்தது.
தொடர்ந்து `ஜிஇசி' டி.வி.யில் "கேரி ஆன் கிட்டு'' என்ற நகைச்சுவை தொடரை இயக்கி நடித்தார்.
இப்படி திகில், காமெடி இரண்டிலும் தன்னை வெளிப்படுத்திய மூர்த்திக்கு, அடுத்து வந்த சின்னத்திரை வாய்ப்பு முற்றிலும் அவரே எதிர்பாராதது. ஜோதிடத்தில் அவரது ஆற்றலை அறிந்த ஜெயா டிவி, ஜோதிட நிகழ்ச்சியை வழங்க அழைத்தது.
ஜோதிடம், வாஸ்து தொடர்பான இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து 13 வாரம் வழங்கினார், மூர்த்தி. இதில்கூட வெறும் ஜோதிடத்தை கூறுவதுடன் நில்லாமல், இடையிடையே புராணக்கதைகளையும் சுவாரஸ்யமாக கலந்து டி.வி. ரசிகர்களை கவர்ந்தார்.
தொடர்ந்து பல சீரியல்களில் நடிப்பைத் தொடர்ந்தவருக்கு, தேடி வந்த `ஜாக்பாட்' அதிர்ஷ்டம்தான் "மீண்டும் மீண்டும் சிரிப்பு'' நிகழ்ச்சி. இது "சன் டிவி''யில் ஒளிபரப்பாகி, மூர்த்தியின் நகைச்சுவை கீர்த்தியை பிரபலப்படுத்தியது.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
"ஐந்தாண்டுகளாக ரசிகர்களின் உணர்வோடு கலந்து போன ஒரு நிகழ்ச்சியாக, மீண்டும் மீண்டும் சிரிப்பு'' நிகழ்ச்சி அமைந்து விட்டது. ஒரு எபிசோடில் நகைச்சுவைப் பின்னணியில் ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு நல்ல மெசேஜ் வருகிற மாதிரி முடிக்க வேண்டும்.
தொடக்கத்தில் இது பெரிய சவாலாகவே தெரிந்தது. என்றாலும் போகப்போக பழகிவிட்டது. நான் தொடர்ந்து 210 எபிசோடுகளை உருவாக்கினேன். நடப்பு விஷயங்களை நன்கு தெரிந்து வைத்திருப்பதால், அந்தப் பின்னணியில் காட்சிகளை உருவாக்குவது சிரமமாக இல்லை. இதற்குப் பிறகு ராதாகிருஷ்ணன் கைகொடுத்தார். அவர் 350 எபிசோடுகள் வரை உருவாக்கினார். சமீபத்தில் இந்த தொடர் சன் டிவி.யில் நிறைவு பெற்றது.
நான் டி.வி.யிலும் நிகழ்ச்சிகள் வழங்கியதை பாராட்டி விருது கொடுத்தார்கள். தமிழ்நாடு சினிமா கலைமன்றம் முதன் முதலாக எனக்கு `நகைச்சுவை களஞ்சியம்' விருது கொடுத்து பாராட்டியது. இந்த பாராட்டு தந்த உற்சாகத்தில் சின்னத்திரைக்குள் இன்னும் தீவிரமானேன்.
இந்த வகையில் தூர்தர்ஷனில் கதை வசனம் எழுதி, 5 சீரியல்களை இயக்கியிருக்கிறேன். தனியார் டி.வி.யில் 24 சீரியல்களில்
நடித்திருக்கிறேன்.1992-ல் தமிழக அரசின் "கலைமாமணி'' விருது கிடைத்து, என் கலைப் பொறுப்பை அதிகமாக்கியது.''
இவ்வாறு மூர்த்தி கூறினார்.
கலைவாணர் விருது, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருது ஆகியவற்றோடு தெலுங்கின் பிரபல விருதான பிரகாசம் விருதையும் பெற்றவர், மூர்த்தி.
சென்சார் போர்டு உறுப்பினராக 2 ஆண்டுகள், பட்ஜெட் படங்களை தீர்மானிக்கும் குழுவில் 2 ஆண்டுகள் சிறந்த படங்களை தேர்வு செய்யும் குழுவில் 2 ஆண்டுகள் என மத்திய, மாநில அரசுகளின் கவுரவப் பொறுப்புகளிலும் நீடித்திருக்கிறார்.
நடிப்பில் தன்னை பல கோணங்களில் வெளிப்படுத்திய மூர்த்தி, நாணயங்களை சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். இந்திய நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள் 3 ஆயிரத்துக்கு மேல் இவர் கலெக்ஷனில் உள்ளன.
பேசி சிரிக்க வைத்தவர் எழுதியும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். "வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஜோக்ஸ் டயரி'' பாகம்-1, பாகம்-2 என்ற பெயரில் 2 புத்தகங்களாக வெளிவந்திருக்கிறது. "சூப்பர் மார்க்கெட்'' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.
`குட், பேட், அக்ளி' என்ற ஆங்கிலப் புத்தகம் வெளிவரும் தறுவாயில் இருக்கிறது.
அமெரிக்காவில் இயங்கி வரும் "வடஅமெரிக்க தமிழ்ச்சங்க கூட்டணி'', நடிகர் நாகேஷையும், மூர்த்தியையும் அழைத்து கவுரவித்திருக்கிறது.
வெளிநாடுகளில் "நட்சத்திர இரவு'' கலை நிகழ்ச்சிகளுக்கு `பிள்ளையார் சுழி' போட்டவரும் இவரே. அன்றைய பிரபலம் மோகன் - அமலா ஆகியோரை பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்றார். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ராஜசுலோசனா, சி.ஐ.டி.சகுந்தலா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்று வந்தார்.
தென்னாப்பிரிக்காவிலும் தொடர்ந்து சிங்கப்பூரிலும் இந்த கலைக்குழுவினர் 30 நாட்களில் 26 மேடை நிகழ்ச்சிகள் நடத்தி அங்குள்ள தமிழர்களை பரவசப்படுத்தினார்கள்.
"நம் நாட்டில் மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் மக்களை ஜோதிட மோகம் பிடித்து ஆட்டுகிறது'' என்கிறார், மூர்த்தி. அதற்கு உதாரணமாக அமெரிக்க சம்பவம் ஒன்றை சொன்னார்:
"நம் நாட்டில் தாயத்தில் தொடங்கி நவரத்ன கற்கள் வரை ஜோதிட நம்பிக்கைக்கு ஆதாரங்களாக இருப்பது போல அமெரிக்காவிலும் இருக்கவே செய்கிறது. அங்கும் ஜோதிட நிலையங்கள் உள்ளன. பிரபல ஜோதிடர்கள் இதை நடத்துகிறார்கள்.
சான்பிரான்சிஸ்கோவில் என் மகன் இருக்கும் பகுதியில்கூட "சைக்கிக் ஐ'' என்ற பெரிய ஜோதிட நிலையம் இயங்கி வருகிறது. ஒருநாள் என் மகன் மனு என்னிடம், "அப்பா! நீங்கள் பெரிய ஜோதிட நிபுணர் ஆயிற்றே! இங்குள்ள ஒரு ஜோதிடரை சந்தித்தால் என்ன?'' என்று கேட்டான். எனக்கும் அது சரியாகப்பட்டதால் சம்மதம் சொன்னேன். மகனே சந்திக்கும் நேரத்தை உறுதிப்படுத்தினான்.
நான் ஜோதிட நிலையத்துக்குள் போய் அதன் தலைவரை சந்திக்க போனபோது, அங்கிருந்தவர் தலைவர் அல்ல; தலைவி! கொஞ்சமே கொஞ்சமான வெளிச்சத்தில் அந்த ஜோதிட பெண்மணி அமர்ந்திருந்தார். என்னை சந்தித்ததும் எழுந்து கைகுலுக்கி வரவேற்றார். உடனே நான் அவரிடம், "மேடம்! நீங்கள் சிம்ம ராசிதானே?'' என்று கேட்டேன்.
அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். "சரிதான்! எப்படிச் சொன்னீர்கள்?'' என்று வியப்பை கண்களில் வெளிப்படுத்தினார்.
நான் அவரிடம், "இது என் ஜோதிட குருநாதர் பண்டிட் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெளிப்படுத்திய `உத்தி.' ஒருவரை நாம் சந்திக்கும் நேரத்தை வைத்தே அவரது ராசியை கணக்கிட்டு விடலாம். அந்த அடிப்படையில்தான் உங்கள் ராசியை கணக்கிட்டேன்'' என்றேன். நான் விடைபெறும் வரை அவர் அந்த ஆச்சரியத்தில் இருந்து விடுபடவே இல்லை.
அந்த நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வந்தது. புஷ்சை எதிர்த்து அல்கோரி போட்டியிட்டார். நவம்பரில் தேர்தல். நான் ஜோதிடக் கணித அடிப்படையில் கணக்கிட்டு, "புஷ்தான் ஜனாதிபதியாவார்'' என்று என் மகனிடம் எழுதிக் கொடுத்தேன்.
தேர்தலில் புஷ் வென்று, ஜனாதிபதியானார். ஆச்சரியப்பட்ட என் மகன், "அப்பா! இதை இங்குள்ள ஏதேனும் ஒரு `நெட்' மூலமாக வெளிப்படுத்தியிருந்தால் உங்கள் சரியான கணிப்புக்காக ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றிருப்பீர்கள்'' என்றான்.
நான் அவனிடம் "இருக்கலாம். அதன் பிறகு தேர்தலில் நிற்கும் உலகத் தலைவர்கள் என்னை வேலை பார்க்க விடமாட்டார்களே! ஏற்கனவே கலைத்துறை மூலம் உலகம் முழுக்க உள்ள கலா ரசிகர்களுக்கு தெரிந்தவனாக, அவர்களால் கொண்டாடப்படுகிறவனாக இருக்கிறேனே! அந்த சந்தோஷம், அந்தப் புகழ் மட்டுமே போதும் என்றேன்.''
புன்னகை முகமாய் சொல்லி முடித்தார், வெண்ணிற ஆடை மூர்த்தி.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சூர்யா நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து பீட்டா அமைப்பு மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டுக்கு நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வந்தன.மேலும் ஜல்லிக்கட்டை எதிர்த்த பீட்டா அமைப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் பீட்டாவை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அவர்களில் சூர்யாவும் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து, சூர்யாவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக பீட்டா அமைப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், நடிகர் சூர்யா மற்றும் இதர நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இவ்வளவு காலதாமதாக குரல் கொடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசியது தற்செயலாக நடந்தது கிடையாது. அவருடைய `சி3' படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவ்வாறு பேசியுள்ளார் என்றும் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்கும்படி பீட்டா அமைப்புக்கு நடிகர் சூர்யா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
சூர்யாவின் நோட்டீசுக்கு ஒருவாரத்தில் பதிலளிக்கும் படி அதில் குறிப்பிட்டிருந்த நிலையில், பீட்டா அமைப்பு சூர்யாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
மன்னிப்பு குறித்து பீட்டா அனுப்பிய அறிக்கை,
நோட்டீசில் சூர்யா தெரிவித்திருந்தது அனைத்தும் உண்மையே. நாங்கள் உங்களது எதிரான அனைத்து கருத்துக்களுக்கும் மன்னிப்பு கோருகிறோம். நீங்கள் அகரம் என்ற பெயரில் ஒரு நல்ல அமைப்பு நடத்தி வருவது எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் தவறுதலாத தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

மலையாள படத்தில் மோகன் லாலுடன் இணைந்து விஷால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
மலையாள இயக்குனர் உன்னி கிருஷ்ணன் அடுத்து மோகன்லாலை வைத்து 4-வது படம் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் தென் இந்திய மொழியை சேர்ந்த முக்கிய நடிகர் ஒருவர் நடிப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டது.
இப்போது இதில் விஷால் நடிக்க இருப்பதாகவும், அவரை இந்த மலையாள படத்தில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மோகன்லாலுக்கு இணையான ஒரு இளைஞன் கதாபாத்திரத்தில் விஷால் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இணையதளங்களில் தன்மீது வரும் பொய்யான விமர்சனங்களுக்கு காரணமானர்களை கைது செய்ய போலீசில் காவ்யா மாதவன் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே காணலாம்.
காவ்யா மாதவன் பற்றி முன்பு வித விதமான விமர்சனங்கள் வந்தன. திலீப்பை காவ்யா மாதவன் திருமணம் செய்து கொண்டார். இனி அமைதியாக இருக்கலாம் என்று நினைத்தார்.
சினிமாவில் இருந்தும் ஒதுங்கி விட்டார். என்றாலும், இணைய தளங்களில் காவ்யா மாதவன் பற்றி மோசமான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ஆவேசமான அவர் எர்ணாகுளம் போலீஸ் ஐ.ஜி.யை சந்தித்து தன்னை விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கி கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் காவ்யா மாதவன் உறுதியாக இருக்கிறார்.

இன்று பிறந்த நாள் காணும் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு அவரது தந்தையும், நடிகருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் இன்று தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ஸ்ருதிஹாசனின் பிறந்த நாளுக்காக அவரது தந்தை , நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை பதிவு செய்துள்ளார்.
அதில் “ பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெண்மணி, இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளாய். ஆனால், மறக்காதே இது வெறும் ஆரம்பம் தான். நேசிக்கிறேன் உன்னை” என கமலஹாசன் தனது மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ள ஸ்ருதிஹாசன், அதன் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஜாக்கிஜான் சவாரி செய்த சைக்கிள் ரூ.10 லட்சத்துக்கு ஏலம் போனது குறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
சீனாவின் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ள படம் ‘குங்புயோகா’. இதில் ஜாக்கிஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘அனேகன்’ பட நாயகி அமைராதஸ்தூர் ஜாக்கிஜானுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்தி வில்லன் நடிகர் சோனுசூட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் வருகிறது. ‘குங்பு யோகா’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக மும்பையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜாக்கிஜான் பங்கேற்றுவருகிறார். அவருடன் சோனுசூட்டும் சேர்ந்தே செல்கிறார்.
சமீபத்தில் சோனுசூட்டும், ஜாக்கிஜானும் ஒரே சைக்கிளில் சென்றார்கள். சோனுசூட் சைக்கிளை ஓட்ட, ஜாக்கிஜான் பின்னால் உட்கார்ந்திருந்தார். இந்த தகவல் ரசிகர்களிடம் வேகமாக பரவியது.
இந்த நிலையில் சின்னத்திரை தொகுப்பாளர் கபால் ஷர்மா நடத்திய ஒரு நிகழ்ச்சியில் ஜாக்கிஜான் கலந்து கொண்டார். அப்போது அவர் சவாரி செய்த சைக்கிள் ஏலம் விடப்பட்டது.
இதை ஜாக்கிஜானின் ரசிகர் ஒருவர் ரூ. 10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இந்த சம்பவம் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.