என் மலர்
சமுதாய கருத்துள்ள படங்களுக்கு கண்டிப்பாக வரிவிலக்கு கொடுக்கவேண்டும் என்று இயக்குனர் அறிவழகன் கோரிக்கை வைத்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்சி தயாரித்திருக்கும் ‘நிசப்தம்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த நடிகர் ‘டத்தோ’ ராதாரவி, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இயக்குநர்கள் மீரா கதிரவன், மிஷ்கின், கிருத்திகா உதயநிதி, அறிவழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் படத்தின் நாயகன் அஜய், நாயகி அபிநயா, முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பேபி சாதன்யா, பழனி, பாடகர் தாமஸ் ஆண்ட்ரூஸ் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவினருடன் அறிமுக இயக்குநர் மைக்கேல் அருண் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இப்படத்தில் பணியாற்றிய மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மேலும் இந்த விழாவில் பார்வையற்றவர்கள் இருவர் கௌரவிக்கப்பட்டனர்.
பின்னர் இயக்குநர் அறிவழகன் பேசும்போது, இது ரொம்ப ஆழமான படம். அதே நேரத்தில் சமூகத்திற்குத் தேவையான படம் என்று நினைக்கிறேன். இன்றைக்கு ஒரு தயாரிப்பாளரைப் பார்த்து கதை சொல்லப்போனால் இந்த படத்துக்கு யூ சர்டிபிகேட் கிடைக்குமா? இல்லை என்றால் யூ ஏ கிடைக்குமா? என்று தான் முதலில் கேட்கிறார்கள்.
படம் முடிந்து சென்சாருக்கு போய் யூ சர்ட்டிபிகேட் கொடுத்திட்டாங்க என்றால் அங்கேயே படத்தின் வெற்றியை முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால் ஆடியன்சு தான் ஒரு படத்தை சக்ஸஸ் பண்ணப் போகிறார்கள். இந்த நேரத்தில் நான் வைக்கிற வேண்டுகோள் என்னவென்றால், ‘யூ’ வோ ‘யூஏ’ வோ என்ன சர்ட்டிபிகேட் வேண்டுமென்றாலும் கொடுங்கள். ஆனால் ‘நிசப்தம்’ மாதிரி சமூக விழிப்போடு சமுதாயத்துக்குத் தேவைப்படுகிற துணிச்சலான சப்ஜெக்ட்டுக்கு நிச்சயமாக யூ சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அத்தோடு வரி விலக்கும் கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் அப்போதுதான் மைக்கேல் அருண் மாதிரியான இளம் திறமைசாலி இயக்குநர்கள் தொடர்ச்சியாக நல்ல படமாக எடுக்க முடியும். இந்த கோரிக்கையை இந்த மேடையில் உங்கள் ஆதரவோடு முன்வைக்கிறேன்.‘ என்று பேசினார்.

நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகை என்றால் அது நயன்தாராதான். ‘அறம்’, ‘டோரா’ ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட நயன்தாரா அடுத்ததாக இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இதில், கொலையுதிர் காலம் படத்திற்கான படப்பிடிப்பு நேற்று லண்டனில் தொடங்கியுள்ளது.
இப்படத்தை ‘பில்லா2’, ‘உன்னைப்போல் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கி சக்ரி டோலட்டி இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன், படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் வாசு பாக்னானியுடன் இணைந்து தயாரிக்கவும் செய்துள்ளார்.
இப்படம் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் கூறும்போது, தரமான படங்களை தயாரிக்கும் நிறுவனமாக என் பட நிறுவனம் இருக்கவேண்டும் என்பது என் கனவு. என் நண்பரும், இயக்குனருமான சக்ரி டோலட்டி இந்த படத்தின் திரைக்கதை ஆங்கில படங்களுக்கு இணையாக அமைத்து இருக்கிறார்.
நாயகி நயன்தாரா இந்த கதைக்கு பொருத்தமாக இருககிறார். மேலும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் வாசு பாக்னானியுடன் இணைந்து இந்த படத்தை தயாரிப்பதில் எனக்கு மிகப்பெரிய பெருமை என்று கூறினார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாக உள்ள `பாகுபலி 2' படம் படைத்துள்ள புதிய சாதனை குறித்து கீழே பார்க்கலாம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘பாகுபலி’. இரண்டு பாகமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மிகவும் பிரம்மாண்டமாகவும், அதே நேரத்தில் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்தது. இதனால், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மொழிகளுக்குமான இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் நிறுவனம் ஒன்று ரூ.51 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினி படம் அல்லாத வேறொரு படம் அதிக விலை கொடுத்து வாங்கப்படுவது இதுவே முதல்முறை.
முன்னதாக `பாகுபலி' படத்தின் முதல் பாகம் ரூ.45 கோடிக்கு விலைபோனது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை ஏப்ரல் 28-ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ள `ரெசிடெண்ட் ஈவில்' படத்தின் கடைசி பாகத்தில் தமிழ் பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் 'ரெசிடெண்ட் ஈவில்'. அதனைத் தொடர்ந்து 'ரெசிடெண்ட் ஈவில்' படத்தின் 5 பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் 6வது பாகம் 'ரெசிடெண்ட் ஈவில்: கடைசி பாகம்' வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரைகளில் வெளியாகிறது. அநியாயத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம் இந்த பாகத்துடன் முடிவடைகிறது. இப்படத்தை பால் டபிள்யூ.எஸ். ஆன்டர்சன் இயக்கியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகை மில்லா ஜோவோவிச் நடிப்பில் ஆக்ஷன் ட்ரீட்டாக வெளிவர உள்ள இந்த படத்திற்கு விளம்பர பாடல் ஒன்று தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த பாடலை சுனிதா சாரதி பாடியுள்ளார். சந்தோஷ் தயாநிதி ‘கட்டபாவ காணோம்’ ‘இனிமே இப்படிதான்’ படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு வன்முறைக்காக எல்லா போலீசாரையும் குற்றம் சொல்லக்கூடாது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
சூர்யா நடித்துள்ள ‘சிங்கம்’ படத்தின் 3-ம் பாகமான ‘சி-3’ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா, சுருதிஹாசன் நடித்து உள்ளனர். ஹரி டைரக்டு செய்துள்ளார். கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து உள்ளார். இந்த படம் குறித்து நடிகர் சூர்யா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகின்றன. இதுவரை 35 படங்களில் நடித்துவிட்டேன். ஒரே இயக்குனருடன் 4 அல்லது 5 படங்களில் பணியாற்றுவது அரிது. ஆனால் டைரக்டர் ஹரியுடன் அது நடந்திருக்கிறது.
சினிமாவில் அறிமுகமானபோது துரைசிங்கம் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்றோ, எனக்காக அந்த கதாபாத்திரம் உருவாக்கப்படும் என்றோ நினைத்து பார்க்கவில்லை.
‘சிங்கம்’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. எனவே தான் இப்போது அதன் 3-ம் பாகத்தையும் உருவாக்கி உள்ளோம். இது முந்தைய படங்களை விட சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்துக்காக 120 நாட்கள் நடித்தேன். எல்லோரும் கடுமையாக உழைத்தார்கள். 300 பேரை வைத்து டைரக்டர் ஹரி வேலை வாங்கினார்.
ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பாக இசையமைத்து உள்ளார். 200 இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இவ்வாறு நடிகர் சூர்யா கூறினார்.
இதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவிடம், “ஜல்லிக்கட்டு விவகாரத்தில் போலீசார் மீது மாணவர்கள் கோபமாக இருக்கும் இந்த நேரத்தில் போலீஸ் கதையம்சத்தில் ‘சி-3’ படம் வெளியாகிறதே?”, என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில்அளித்த சூர்யா, “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சில இடங்களில் வருத்தப்படும்படியான அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. சில போலீசார் தவறு செய்தார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த போலீஸ் துறையையே குற்றம் சொல்ல முடியாது. திருச்சியில் போலீஸ் அதிகாரி மயில்வாகனன் அமைதியான முறையில் மாணவர்கள் போராட்டத்தை தீர்த்து வைத்திருக்கிறார். இதுபோன்ற போலீஸ் அதிகாரிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறோம். இருட்டறையில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றினாலே ஒட்டுமொத்த இருட்டையும் அது நீக்கும். வாழ்க்கையில் சிறந்த முன்மாதிரியாக இருப்பவர்களை பின்பற்றுவது நல்லது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த போலீஸ் அதிகாரியை இந்த படத்தின் கதை பிரதிபலிக்கும்”, என்றார்.

கேரளாவில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் கொண்ட நூல் மலையாளத்தில் வெளியிடப்பட்டது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகேயுள்ள திரூரில் மலையாள இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படும் எழுத்தச்சன் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் ‘சிறிது நேரம் மனிதானாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் நூலை மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் வெளியிட்டார். அவரிடம் இருந்து முதல் பிரதியை கேரள சாகித்ய அகாடமியின் செயலாளர் மோகனன் பெற்றுக்கொண்டார்.
4 நாட்கள் நடைபெறும் இந்த விழாவைத் தொடங்கி வைத்து கவிஞர் வைரமுத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாற்றுப் புகழ்மிக்க இந்த எழுத்தச்சன் திருவிழாவைத் தொடங்கிவைக்கும் தகுதி எனக்கு உண்டு என்று நான் நினைக்கவில்லை. ஆனால், மலையாளப் படைப்பாளிகளின் தீவிரக் காதலன் என்ற தகுதி எனக்கிருக்கிறது. இந்த மலையாள மண்ணைக் கடவுளின் தேசம் என்று உலகம் கொண்டாடுகிறது. ஆனால் கடவுள் தூதர்களின் தேசம் என்று நான் இதைக் கொண்டாடுகிறேன். கவிஞர்களும், எழுத்தாளர்களும் தான் கடவுளின் தூதுவர்கள். இயற்கை மறைப்பதை மனிதனுக்குச் சொல்ல வந்தவர்கள் அவர்களே. மனிதன் மறைப்பதைக் கலையில் சொல்லவந்தவர்களும் அவர்களே.
மனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானதென்று சிலவற்றை முன்னிலைப்படுத்துகிறார்கள். தீ, இரும்பு, சக்கரம், நீராவிப்பொறி, மின்சாரம், கணிப்பொறி என்று நீளும் அந்தப் பட்டியல் மிக முக்கியமான ஒன்றை மறந்துவிடுகிறது. அதுதான் மொழி. மனிதக் கண்டுபிடிப்புகளுள் மிக முக்கியமானது மொழிதான்.
ஒரு புதிய கலவையோடு மலையாள மொழியை வளர்த்தெடுத்தவர் எழுத்தச்சன் என்று அறிய முடிகிறது. எழுத்துக்களை ஒழுங்குசெய்த விஞ்ஞானியும் அவர்தான். இலக்கியத்தைச் செழுமைசெய்த கலைஞானியும் அவர்தான். இந்திய இலக்கியத்தின் பன்முகப் பண்பாடு என்ற தலைப்புக்குள் போகும்போது இந்திய மொழிகளின் எண்ணிக்கை என்னைத் திகைக்க வைக்கிறது. ஐரோப்பியக் கண்டத்தைவிடப் பெரியதான இந்தியாவில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டவை மட்டும் 22. இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 1652. இத்தனை மொழிகள் கொண்ட தேசம் ஒரு குடையின்கீழ் இருப்பதுதான் நமது பெருமை.
வேற்றுமை என்பது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. இந்த பூமியும், பிரபஞ்சமும் வேற்றுமைகளால் ஆனது. வேற்றுமைதான் அழகு. வேற்றுமைதான் இயக்கம்; வேற்றுமை தான் சக்தி; வேற்றுமை தான் கலாசாரம். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற வேற்றுமைதான் பூமி. ஆண்-பெண் என்ற வேற்றுமைதான் விருத்தி. பொருள்களின் வேற்றுமைதான் விஞ்ஞானம். ஜனனம் - மரணம் என்ற வேற்றுமைதான் வாழ்வு. இந்த வேற்றுமைகளில் ஒருமை காண்பதுதான் கலை இலக்கியம்.
இலக்கியம் என்பது வாழ்வின் தொடர்ச்சி. அன்று வனாந்தரத்தில் சகுந்தலை வடித்த கண்ணீரைத்தான் அசாம் காட்டில் ஒருத்தி வேறு கண்களால் இன்று அழுதுகொண்டிருக்கிறாள். கவுரவர் சபையில் உரியப்பட்ட திரவுபதி துகில்தான் டெல்லியின் வேறொரு பெண்ணின் தேகத்தில் இருந்து உரியப்படுகிறது. மலையாளக் கடற்கரையில் அலையோடு விம்மிய கருத்தம்மையின் விசும்பல்தான் வங்காள விரிகுடாவில் இன்று வேறொரு பெண்ணின் தொண்டையில் இருந்து வெளிப்படுகிறது. இமயத்தில் வில்பொறித்த சேரன் செங்குட்டுவனின் தீரமும், கடாரத்தை வென்றெடுத்த ராஜராஜனின் வீரமும்தான் இன்று தமிழ் மக்களை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறது.
ஆட்களும் நாட்களுமே மாறிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்கிறது. தண்ணீரில் விழுந்த நிழல்போல வாழ்வின் நிழல் கலை இலக்கியத்தின் மீது சத்தமில்லாமல் விழுந்துகொண்டிருக்கிறது. இதே மேடையில் என் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு வருவதை நான் பெரும் பெருமையாகக் கருதுகிறேன். மொழிபெயர்ப்பை ஒரு கலையாகச் செய்திருக்கும் கே.எஸ்.வெங்கிடாசலத்துக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் பெரிதும் நேசிக்கும் எம்.டி.வாசுதேவன் நாயர் அதை வெளியிடுகிறார் என்பது தமிழுக்குக் கிடைத்த மலையாளப் பெருமை.
இந்த நேரத்தில் இந்தியாவின் மத்திய அரசுக்கு ஒரு வார்த்தை. பன்முகப் பண்பாடு என்பது இந்தியாவைக் கண்ணுக்குத் தெரியாமல் கட்டி வைத்திருக்கும் ஒரு தங்கச் சங்கிலி. அது வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கென்று ஒரு தனி அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அதில் இந்தியாவின் சிறந்த படைப்பாளிகளுக்குப் பாரத ரத்னா விருது போல ‘பாஷா ரத்னா’ என்ற விருது வழங்கப்பட வேண்டும். மலையாள மண்ணுக்கு நன்றி என்ற வைரத்தையும் அன்பென்ற முத்தையும் கொண்டு வந்தேன். இரண்டையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

“ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்” என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
ஜல்லிக்கட்டு மீது இருந்த தடை நீங்கியிருக்கிறது. இந்த அறவழிப் போராட்டத்திற்கு துணை நின்ற படித்த இளைஞர்களுக்கும், பண்பட்ட மாணவர்களுக்கும் பாரம்பரியத்தை காக்கத் துடித்த உண்மைத் தமிழ் உணர்வாளர்களுக்கும், பொங்கி எழுந்த பொதுமக்களுக்கும், போராடிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் நன்றி.
இந்த அறவழிப்போராட்டத்தை கண்டு டெல்லிக்கு ஓடிச்சென்று பிரதமர் மோடியை சந்தித்து பின் அவசர சட்டத்தை இயற்றி சட்டசபையில் ஒப்புதல் பெற்று, ஜல்லிக்கட்டு மீது இருந்த தடையை நீக்க வழிவகுத்த முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசுக்கும், அதற்கு பக்கபலமாக நின்று ஒத்துழைத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் நன்றி.
ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அ.தி.மு.க.வில் இருந்த அத்தனை பேருக்கும் மத்தியில், பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் ஆவதற்கு ஆண்டவரே கொடுத்தார் வாய்ப்பு. இப்போது அம்மா இல்லாத நேரத்திலும் அவருக்கே வாய்ப்பா? என்று சிலருக்கு வந்திருக்கிறது அங்கலாய்ப்பு. அதனால் தானோ இந்த அறப்போராட்டத்தின் முடிவிலே முதல்வருக்கு சின்ன சிராய்ப்பு. சிலர் அவருக்கு வரவழைக்க நினைத்திருக்கிறார்கள் கெட்ட பேரு. அதனால்தான் இடையில் புகுந்து இழுக்க நினைத்திருக்கிறார்கள் தேரு.
இல்லையென்றால் இந்த அறவழிப்போராட்டம் ஆறு நாளும் அமைதியாகத்தானே போய்க் கொண்டிருந்தது. ஏழாவது நாள் எங்கிருந்து வந்தது இந்த தடாலடி மாற்றம், காவல்துறையின் அடாவடி சீற்றம். திரைக்கதையை மாற்றியது யார்? திரை மறைவில் நின்று சூழ்ச்சியை செய்தது யார்? சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே, தன் கையால் வன்முறையை கட்டவிழ்க்கும் காட்சிகள் எங்கிருந்து வந்தது? இளைஞன் ஒருவனை கீழே பிடித்து தள்ளும் காட்சி, வாகனங்களை கீழே தள்ளி நொறுக்கும் காட்சி, ஆட்டோவிற்கு தீ வைக்கும் காட்சி, குடிசைக்கு தீவைப்பது போன்ற காட்சி.
இது என்ன சினிமாவா? இல்லை நிஜமா? இல்லை திறம்பட செயல்பட முடியாத ஒரு ஆட்சியா? இது மக்கள் கேட்கும் கேள்வி. புயல்தான் கொள்ளுமாம் மையம், இப்பொழுது தமிழக அரசுக்குள்ளே புகுந்திருக்கிறதோ ஒரு புது அதிகார மையம், என்பதே பலரது ஐயம். உண்மையிலேயே இதற்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும். அறப்போராட்டத்திற்குள்ளே நுழைந்து தீ வைப்பதற்கு புகுந்த தீய சக்திகள் யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.
சரித்திரம் படைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்றாலும் கேள்வி கேட்க நாதியில்லை, அப்படியே கேள்வி கேட்டாலும் நீதி இல்லை. இதுவரை தமிழக அரசு அம்மாவின் சாவில் இருக்கும் மர்மம் குறித்து வெள்ளை அறிக்கையும் கொடுக்கவில்லை.”
இவ்வாறு அறிக்கையில் டி.ராஜேந்தர் குறிப்பிட்டு உள்ளார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தில் சாய்பல்லவிக்கு பதிலாக `பாகுபலி 2' நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது யார் என்பதை கீழே பார்க்கலாம்.
விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். கவுதம் மேனன் - விக்ரம் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. `துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அனு இம்மாணுவேல் நடித்து வருகிறார்.
`துருவ நட்சத்திரம்' படத்திற்கு பிறகு `வாலு' பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். அப்படத்தில் சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக இருந்தது. இந்நிலையில், மலையாள படமான சார்லி ரீமேக்கில் மாதவனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்க உள்ளார். எனவே விக்ரம் படத்தில் இருந்து சாய் பல்லவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து விக்ரமுக்கு ஜோடியாக `பாகுபலி 2' நடிகை தமன்னாவை நடிக்கவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. `பாகுபலி 2' படத்திற்கு பிறகு தமன்னா தற்போது `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
‘பாணா காத்தாடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சமந்தா. ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘அஞ்சான்’, ‘கத்தி’, ‘10 எண்றதுக்குள்ள’, ‘தங்க மகன்’, ‘தெறி’, ‘24’ ஆகியவை சமந்தா நடித்த முக்கிய படங்கள்.
தெலுங்கில் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவுடன், சமந்தா ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. நட்சத்திர ஓட்டல்களில் ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் 2 மாதங்களுக்கு முன்பு இந்த காதலை சமந்தா உறுதிபடுத்தினார்.

“நாக சைதன்யாவும், நானும் காதலிப்பது உண்மை தான். எங்கள் காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். விரைவில் நாங்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளோம். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். கணவர் குடும்பத்தினருக்கு அவமதிப்பு ஏற்படாத வகையில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பேன்”, என்று சமந்தா கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து சமந்தா-நாக சைதன்யா திருமண ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டனர். நாக சைதன்யாவின் தம்பியும், தெலுங்கு நடிகருமான அகிலுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த ஷ்ரேயா பூபாலுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. எனவே அடுத்து சமந்தா-நாக சைதன்யா நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யாவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இதனை தெரிவித்து உள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசியமாக இந்த திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். திருமண தேதியை ஓரிரு நாட்களில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபுதேவா தனது அடுத்த படத்தில் தேசிய விருது வென்ற இயக்குநருடன் இணைப்போவதாக கூறப்படுகிறது. அந்த இயக்குநர் யார் என்பதை கீழே பார்க்கலாம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பிரபுதேவா நடித்து வெளிவந்த ‘தேவி’ படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இதையடுத்து, பிரபுதேவா தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், `தேவி' படத்தில் நடித்த தமன்னாவுடன் தனது அடுத்த படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும் இந்த வரிசையில் புதுமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கத்தில் நகைச்சுவை கலந்த கதையான `யங் மங் சங்' படத்திலும் பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார்.
ஒருசில படங்களை தனது பிரபுதேவா ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்தும் வருகிறார். அதன்படி, பிரியதர்சன் இயக்கத்தில் பல விருதுகளை வென்ற `சில நேரங்களில்' படத்தையும் விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில் `வினோதன்' படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் `பிசி'யாக இருந்த நேரத்திலும், ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் மூர்த்தி நடித்தார். அவர் பங்கு கொண்ட "மீண்டும் மீண்டும் சிரிப்பு'' தொடர், ஐந்தாண்டுகள் ஒளிபரப்பு ஆயிற்று.

இப்போது சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும், பெரிய திரையிலும் ஜொலித்தவர்கள். இவர்களில் சிலர், சின்னத்திரை உதயமான நேரத்தில் அதைப்பற்றி வெளிப்படையாக கிண்டல் செய்தவர்கள், பெரிய திரையில் தொடர்ந்து நீடிக்க முடியாத நேரத்தில், சின்னத்திரைக்கு வந்து, "இதுதான் அதிக அளவில் மக்களை சென்றடைகிறது'' என்று முழங்கவும் செய்தார்கள்.
ஆனால், தொடக்கம் முதலே சின்னத்திரையின் சக்தியைப் புரிந்து கொண்டு நல்ல புகழோடு இருந்த நேரத்திலேயே சின்னத்திரையிலும் தனது படைப்பு மூலமாக புகழ் பெற்றவர் டைரக்டர் கே.பாலசந்தர். நடிகர்களில் "வெண்ணிற ஆடை'' மூர்த்தி.
சென்னை டெலிவிஷனின் ஆரம்ப காலத்தில், எஸ்.வி.ரமணனின் `தினேஷ் - கணேஷ்' தொடராக ஒளிபரப்பானது. இதில் காமெடி செய்தார், மூர்த்தி.
மூர்த்தியிடம் எழுத்தாற்றலும் இருந்ததால் அவரே கதை, வசனம் எழுதி, "ஜுலை-7'' என்ற திகில் சீரியலை இயக்கினார். சன் டி.வி.யில் 13 வாரங்கள் ஒளிபரப்பான இந்த சீரியல், மூர்த்தியின் இயக்கும் திறனுக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்தது.
தொடர்ந்து `ஜிஇசி' டி.வி.யில் "கேரி ஆன் கிட்டு'' என்ற நகைச்சுவை தொடரை இயக்கி நடித்தார்.
இப்படி திகில், காமெடி இரண்டிலும் தன்னை வெளிப்படுத்திய மூர்த்திக்கு, அடுத்து வந்த சின்னத்திரை வாய்ப்பு முற்றிலும் அவரே எதிர்பாராதது. ஜோதிடத்தில் அவரது ஆற்றலை அறிந்த ஜெயா டிவி, ஜோதிட நிகழ்ச்சியை வழங்க அழைத்தது.
ஜோதிடம், வாஸ்து தொடர்பான இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து 13 வாரம் வழங்கினார், மூர்த்தி. இதில்கூட வெறும் ஜோதிடத்தை கூறுவதுடன் நில்லாமல், இடையிடையே புராணக்கதைகளையும் சுவாரஸ்யமாக கலந்து டி.வி. ரசிகர்களை கவர்ந்தார்.
தொடர்ந்து பல சீரியல்களில் நடிப்பைத் தொடர்ந்தவருக்கு, தேடி வந்த `ஜாக்பாட்' அதிர்ஷ்டம்தான் "மீண்டும் மீண்டும் சிரிப்பு'' நிகழ்ச்சி. இது "சன் டிவி''யில் ஒளிபரப்பாகி, மூர்த்தியின் நகைச்சுவை கீர்த்தியை பிரபலப்படுத்தியது.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
"ஐந்தாண்டுகளாக ரசிகர்களின் உணர்வோடு கலந்து போன ஒரு நிகழ்ச்சியாக, மீண்டும் மீண்டும் சிரிப்பு'' நிகழ்ச்சி அமைந்து விட்டது. ஒரு எபிசோடில் நகைச்சுவைப் பின்னணியில் ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு நல்ல மெசேஜ் வருகிற மாதிரி முடிக்க வேண்டும்.
தொடக்கத்தில் இது பெரிய சவாலாகவே தெரிந்தது. என்றாலும் போகப்போக பழகிவிட்டது. நான் தொடர்ந்து 210 எபிசோடுகளை உருவாக்கினேன். நடப்பு விஷயங்களை நன்கு தெரிந்து வைத்திருப்பதால், அந்தப் பின்னணியில் காட்சிகளை உருவாக்குவது சிரமமாக இல்லை. இதற்குப் பிறகு ராதாகிருஷ்ணன் கைகொடுத்தார். அவர் 350 எபிசோடுகள் வரை உருவாக்கினார். சமீபத்தில் இந்த தொடர் சன் டிவி.யில் நிறைவு பெற்றது.
நான் டி.வி.யிலும் நிகழ்ச்சிகள் வழங்கியதை பாராட்டி விருது கொடுத்தார்கள். தமிழ்நாடு சினிமா கலைமன்றம் முதன் முதலாக எனக்கு `நகைச்சுவை களஞ்சியம்' விருது கொடுத்து பாராட்டியது. இந்த பாராட்டு தந்த உற்சாகத்தில் சின்னத்திரைக்குள் இன்னும் தீவிரமானேன்.
இந்த வகையில் தூர்தர்ஷனில் கதை வசனம் எழுதி, 5 சீரியல்களை இயக்கியிருக்கிறேன். தனியார் டி.வி.யில் 24 சீரியல்களில்
நடித்திருக்கிறேன்.1992-ல் தமிழக அரசின் "கலைமாமணி'' விருது கிடைத்து, என் கலைப் பொறுப்பை அதிகமாக்கியது.''
இவ்வாறு மூர்த்தி கூறினார்.
கலைவாணர் விருது, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருது ஆகியவற்றோடு தெலுங்கின் பிரபல விருதான பிரகாசம் விருதையும் பெற்றவர், மூர்த்தி.
சென்சார் போர்டு உறுப்பினராக 2 ஆண்டுகள், பட்ஜெட் படங்களை தீர்மானிக்கும் குழுவில் 2 ஆண்டுகள் சிறந்த படங் களை தேர்வு செய்யும் குழுவில் 2 ஆண்டுகள் என மத்திய, மாநில அரசுகளின் கவுரவப் பொறுப்புகளிலும் நீடித்திருக்கிறார்.
நடிப்பில் தன்னை பல கோணங்களில் வெளிப்படுத்திய மூர்த்தி, நாணயங்களை சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். இந்திய நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள் 3 ஆயிரத்துக்கு மேல் இவர் கலெக்ஷனில் உள்ளன.
பேசி சிரிக்க வைத்தவர் எழுதியும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். "வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஜோக்ஸ் டயரி'' பாகம்-1, பாகம்-2 என்ற பெயரில் 2 புத்தகங்களாக வெளிவந்திருக்கிறது. "சூப்பர் மார்க்கெட்'' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.
`குட், பேட், அக்ளி' என்ற ஆங்கிலப் புத்தகம் வெளிவரும் தறுவாயில் இருக்கிறது.
அமெரிக்காவில் இயங்கி வரும் "வடஅமெரிக்க தமிழ்ச்சங்க கூட்டணி'', நடிகர் நாகேஷையும், மூர்த்தியையும் அழைத்து கவுரவித்திருக்கிறது.
வெளிநாடுகளில் "நட்சத்திர இரவு'' கலை நிகழ்ச்சிகளுக்கு `பிள்ளையார் சுழி' போட்டவரும் இவரே. அன்றைய பிரபலம் மோகன் - அமலா ஆகியோரை பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்றார். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ராஜசுலோசனா, சி.ஐ.டி.சகுந்தலா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்று வந்தார்.
தென்னாப்பிரிக்காவிலும் தொடர்ந்து சிங்கப்பூரிலும் இந்த கலைக்குழுவினர் 30 நாட்களில் 26 மேடை நிகழ்ச்சிகள் நடத்தி அங்குள்ள தமிழர்களை பரவசப்படுத்தினார்கள்.
"நம் நாட்டில் மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் மக்களை ஜோதிட மோகம் பிடித்து ஆட்டுகிறது'' என்கிறார், மூர்த்தி. அதற்கு உதாரணமாக அமெரிக்க சம்பவம் ஒன்றை சொன்னார்:
"நம் நாட்டில் தாயத்தில் தொடங்கி நவரத்ன கற்கள் வரை ஜோதிட நம்பிக்கைக்கு ஆதாரங்களாக இருப்பது போல அமெரிக்காவிலும் இருக்கவே செய்கிறது. அங்கும் ஜோதிட நிலையங்கள் உள்ளன. பிரபல ஜோதிடர்கள் இதை நடத்துகிறார்கள்.
சான்பிரான்சிஸ்கோவில் என் மகன் இருக்கும் பகுதியில்கூட "சைக்கிக் ஐ'' என்ற பெரிய ஜோதிட நிலையம் இயங்கி வருகிறது. ஒருநாள் என் மகன் மனு என்னிடம், "அப்பா! நீங்கள் பெரிய ஜோதிட நிபுணர் ஆயிற்றே! இங்குள்ள ஒரு ஜோதிடரை சந்தித்தால் என்ன?'' என்று கேட்டான். எனக்கும் அது சரியாகப்பட்டதால் சம்மதம் சொன்னேன். மகனே சந்திக்கும் நேரத்தை உறுதிப்படுத்தினான்.
நான் ஜோதிட நிலையத்துக்குள் போய் அதன் தலைவரை சந்திக்க போனபோது, அங்கிருந்தவர் தலைவர் அல்ல; தலைவி! கொஞ்சமே கொஞ்சமான வெளிச்சத்தில் அந்த ஜோதிட பெண்மணி அமர்ந்திருந்தார். என்னை சந்தித்ததும் எழுந்து கைகுலுக்கி வரவேற்றார். உடனே நான் அவரிடம், "மேடம்! நீங்கள் சிம்ம ராசிதானே?'' என்று கேட்டேன்.
அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். "சரிதான்! எப்படிச் சொன்னீர்கள்?'' என்று வியப்பை கண்களில் வெளிப்படுத்தினார்.
நான் அவரிடம், "இது என் ஜோதிட குருநாதர் பண்டிட் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெளிப்படுத்திய `உத்தி.' ஒருவரை நாம் சந்திக்கும் நேரத்தை வைத்தே அவரது ராசியை கணக்கிட்டு விடலாம். அந்த அடிப்படையில்தான் உங்கள் ராசியை கணக்கிட்டேன்'' என்றேன். நான் விடைபெறும் வரை அவர் அந்த ஆச்சரியத்தில் இருந்து விடுபடவே இல்லை.
அந்த நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வந்தது. புஷ்சை எதிர்த்து அல்கோரி போட்டியிட்டார். நவம்பரில் தேர்தல். நான் ஜோதிடக் கணித அடிப்படையில் கணக்கிட்டு, "புஷ்தான் ஜனாதிபதியாவார்'' என்று என் மகனிடம் எழுதிக் கொடுத்தேன்.
தேர்தலில் புஷ் வென்று, ஜனாதிபதியானார். ஆச்சரியப்பட்ட என் மகன், "அப்பா! இதை இங்குள்ள ஏதேனும் ஒரு `நெட்' மூலமாக வெளிப்படுத்தியிருந்தால் உங்கள் சரியான கணிப்புக்காக ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றிருப்பீர்கள்'' என்றான்.
நான் அவனிடம் "இருக்கலாம். அதன் பிறகு தேர்தலில் நிற்கும் உலகத் தலைவர்கள் என்னை வேலை பார்க்க விடமாட்டார்களே! ஏற்கனவே கலைத்துறை மூலம் உலகம் முழுக்க உள்ள கலா ரசிகர்களுக்கு தெரிந்தவனாக, அவர்களால் கொண்டாடப்படுகிறவனாக இருக்கிறேனே! அந்த சந்தோஷம், அந்தப் புகழ் மட்டுமே போதும் என்றேன்.''
புன்னகை முகமாய் சொல்லி முடித்தார், வெண்ணிற ஆடை மூர்த்தி.

பாகுபலி 2-வின் கிராபிக்ஸ் பணிகள் 33 ஸ்டுடியோக்களில் பிரம்மாண்டமாக நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘பாகுபலி’. இரண்டு பாகமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மிகவும் பிரம்மாண்டமாகவும், அதே நேரத்தில் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்தது. இதனால், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அதன்ஊடே இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளும் நடைபெற்றுக் கொண்டே வருகின்றது. முதல் பாகத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை அமைத்த ஆர்.சி.கமலக்கண்ணனே இந்த பாகத்திலும் பொறுப்பேற்றிருக்கிறார்.
அவருடைய தலைமையில் 33 ஸ்டுடியோக்களில் இரண்டாம் பாகத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாக அவரே தெரிவித்துள்ளார். மேலும், 15 மாதத்திற்கு முன்பே இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை தொடங்கிவிட்டதாகவும் அவரே தெரிவித்துள்ளார். இந்த வருடம் ஏப்ரல் 28-ந் தேதி இப்படம் வெளிவரவிருக்கிறது. அதற்கு முன்னதாக, பிப்ரவரி மாதத்தில் இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.