என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    அஜித்தின் `தல 57' படம் ரம்ஜான் ரிலீசாக திரைக்கு வர உள்ளநிலையில், அஜித்துக்கு போட்டியாக சல்மான் கான் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `தல 57'. மேலும்  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன், பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் நடித்து  வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்து  வரும் `தல 57' படத்தை ரம்ஜான் வெளியீடாக ஜுன் 23-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், சல்மான் கானின் `டியூப் லைட்' படத்தை ரம்ஜானை முன்னிட்டு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி  வரும் படத்தையும் அதே நாளில் வெளியிட முருகதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக முதல்வரை சந்தித்த லாரன்ஸ் மற்றும் மாணவர்கள் முன்வைத்த 3 கோரிக்கைகள் என்னவென்பதை கீழே பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக நீடித்த  போராட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அவசர சட்டம்  கொண்டுவந்த பிறகும், நிரந்தர சட்டம் வேண்டி போராட்டம் தொடர்ந்தது.

    அப்போது திருவல்லிக்கேனி, நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. அதனால்  மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் காயமடைந்தனர். மேலும் சிலரை  போலீசார் கைது செய்தனர்.

    இந்த மாணவர்கள் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தொடக்கம் முதலே அவர் மெரினாவில்  மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது அனைவரும் அறிந்ததே.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் சிலருடன் லாரன்ஸ், முதல்வர் பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்தார்.  இதில் முதல்வருடனான சந்திப்பில் 3 கோரிக்கைகளை முன்வைத்ததாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

    மாணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளாவது,

    * போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து மாணவர்கள், இளைஞர்களை விடுதலை செய்ய வலியுறுத்தல்
    * போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீஸ் நடத்திய தடியடியில் காயமடைந்தவர்களுக்கு முறைான மருத்துவ சேவை வழங்க  வலியுறுத்தல்
    * கடைசியாக அமைதியாக நடந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களின் அறவழிப் போராட்டத்தின் வெற்றியை  கொண்டாட தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
    இளம் நடிகர், நடிகைகளுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ராதிகா குறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
    90-களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து பலரின் மனதை கொள்ளையடித்த  நடிகைகளுள் ஒருவர் ராதிகா சரத்குமார். இவரது அர்பணிப்பும், சவாலான நடிப்பும் இவருக்கு பல முக்கிய விருதுகளை பெற்றுத்  தந்துள்ளது. மேலும் ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு என்று தான் சொல்ல வேண்டும்.

    தற்போது ராதிகா உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் `இப்படை வெல்லும்' படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினின் அம்மாவாக வரும் ராதிகா, பேருந்து ஓட்டுநராகவும் நடித்துள்ளார். பேருந்து ஓட்டுநராக  வரும் காட்சிகளில் ஓட்டுநர் இருக்கையில் நீங்கள் அமர்ந்தால் போதும். மற்ற காட்சிகளை கிராபிக்ஸ் செய்து கொள்ளலாம்  என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதனை மறுத்த ராதிகா, பேருந்து ஓட்ட 10 நாட்கள் பயிற்சி எடுத்து கொண்டார். பின்னர்  படப்பிடிப்பில் கலந்து கொண்டு பேருந்தையும் ஓட்டி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியதுடன், அனைவரது  பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இது மற்ற இளம் நடிகை, நடிகைகளுக்கு ஒரு உதாரணம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    இப்படத்தை `தூங்கா நகரம்' புகழ் இயக்குநர் கவுரவ் நாராயண் இயக்கி வருகிறார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும்  இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட  பலரும் நடித்து வருகின்றனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
    தமிழ்ப்பட உலகில் கதாநாயகனாக அடியெடுத்து வைத்து, நடிப்பின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர் விஜயகுமார். 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இன்றும் புகழுடன் நடிப்பைத் தொடருகிறார்.
    தமிழ்ப்பட உலகில் கதாநாயகனாக அடியெடுத்து வைத்து, நடிப்பின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர் விஜயகுமார். 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இன்றும் புகழுடன் நடிப்பைத் தொடருகிறார்.

    டைரக்டர் பி.மாதவன், "பொண்ணுக்குத் தங்கமனசு'' என்ற படத்தில் கதாநாயகனாக விஜயகுமாரை அறிமுகப்படுத்தினார்.

    நடிகர் கமலஹாசன் ஹீரோவாக வளரத்தொடங்கியிருந்த காலகட்டத்தில் விஜயகுமாரும் ஹீரோவாக நடித்தார். இதே நேரம் நடிகர் ரஜினி, வில்லனாக தன் திரையுலகப் பிரவேசத்தைத் தொடங்கியிருந்தார்.

    இந்த வகையில் ரஜினி, கமல் இருவருடனும் சம கேரக்டர்களில் நடித்த அனுபவமும் விஜயகுமாருக்கு உண்டு. பின்னாளில் இதே ஹீரோக்களுக்கு தன்னை `அப்பா'வாக மாற்றிக்கொண்ட அனுபவமும் இவருக்கு உண்டு.

    சினிமாவில் பல அவதாரம் எடுத்தாலும் சினிமாவில் நடிக்க விஜயகுமார் பல அவதாரங்கள் எடுக்க வேண்டியிருந்தது.

    வருவார்; முயற்சிப்பார்; திரும்பிப் போவார்; மறுபடி வருவார்; போராடுவார்; திரும்பிப் போவார். - இப்படி போராடி, மூன்றாவது முறையாகத்தான் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.

    விவசாய குடும்பத்தைச் சேர்ந்த விஜயகுமாருக்கு சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த நாட்டுச்சாலை கிராமம்.

    அப்பா எம்.என்.ரெங்கசாமி. அம்மா சின்னம்மாள். அப்பா ஊரில் 2 ரைஸ்மில்களுடன் வசதியாக வாழ்ந்தவர்.

    விஜயகுமாருக்கு, அது நிஜப்பெயரல்ல; பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் `பஞ்சாட்சரம்.' சினிமாவுக்கு வரவிரும்பி இவருக்கு இவராகவே வைத்துக் கொண்ட பெயர் "சிவகுமார்.''

    அப்போது ஏற்கனவே சினிமாவில் ஒரு சிவகுமார் நடிக்கத் தொடங்கியிருந்ததால், டைரக்டர் பி.மாதவன் இவருக்கு விஜயகுமார் என்ற பெயரைச் சூட்டினார்.

    தனது கலையுலகப் பிரவேசம் பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அப்பா 1918-ல் சென்னை வந்து தம்புசெட்டித் தெருவில் அரிசிக்கடை வைத்தார். 2 வருஷம் அங்கே தொழில் செய்த பிறகு சிங்கப்பூருக்கு போயிருக்கிறார். அப்போது சிங்கப்பூருக்கு சென்னையில் இருந்து `தர்ம கப்பல்' போகுமாம். அதாவது, அந்த கப்பலில் சிங்கப்பூருக்கு இலவசமாகவே போகலாம். அப்போது சிங்கப்பூரில் `டிரெய்னேஜ் காண்ட்ராக்ட்' எடுத்திருந்தவர்கள் வேலையின் பொருட்டும் இப்படி இலவச கப்பலில் ஆட்களை அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.

    சிங்கப்பூரில் சம்பாதித்த பணத்தில்தான் ஊரில் 2 ரைஸ்மில்களை தொடங்கியிருக்கிறார் அப்பா. தினமும் எங்கள் ரைஸ்மில்லில் இருந்து கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு 100 மூட்டை அரிசி போகும். எங்க குடும்பம் தவிர, வேலையாட்கள் எல்லாம் சேர்த்தால் தினமும் 20 பேருக்கு எங்கள் வீட்டில்தான் சாப்பாடு.

    நாங்கள் சகோதரர்கள் மொத்தம் ஐந்து பேர். பெரிய அண்ணன் ராமச்சந்திரன் சென்னைக்குப்போய் அங்குள்ள காசினோ தியேட்டர் அருகில் ஒரு பெட்டிக்கடை வைத்திருந்தார். அடுத்த 2 அண்ணன்கள் சிங்கப்பூர் போய் விட்டார்கள். அடுத்தது நான். எனக்கு ஒரு தம்பி. நானும் தம்பியும் படித்துக் கொண்டிருந்தோம்.

    அது 1962-ம் வருஷம். அப்போதெல்லாம் என் பொழுதுபோக்கே சினிமாவாகத்தான் இருந்தது. எங்கள் ஊரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் ராஜாமணி, நீலா, முருகையா என்ற தியேட்டர்கள் இருந்தன. படம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இரவில் ரைஸ்மில்லில் தங்கிவிடுவதாக வீட்டில் சொல்லி விடுவேன். படம் போடுகிற நேரத்துக்கு கொஞ்சம் முன்னதாக கட்டிலில் தலையணையை ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி வைத்து, போர்வையை போர்த்திவிட்டு சைக்கிளில் பறந்து விடுவேன்.

    சினிமாவில் எனக்கு எம்.ஜி.ஆர். படம், சிவாஜி படம் என்ற பேதம் எதுவும் கிடையாது. யார் நடித்த படம்  என்றாலும் பார்த்து விடுவேன். இப்படி வீட்டுக்குத் தெரியாமல் ரைஸ்மில்லில் படுத்திருப்பதாக `பேர் பண்ணிக்கொண்டு' படம் பார்க்கப்போனது ஒருநாள் அப்பாவுக்குத் தெரிந்து போயிற்று.

    ஒருநாள் இரவு ஏதோ விஷயமாக என்னைப் பார்க்க ரைஸ்மில்லுக்கு வந்திருக்கிறார், அப்பா. அப்போது என் குட்டு உடைந்து விட்டது! காலையில் எழுந்ததும் அப்பா செய்த முதல் காரியம், வீட்டுத் தூணில் என்னைக் கட்டிப்போட்டதுதான்! "உன்னை டாக்டராகவோ, என்ஜினீயராகவோ பார்க்க ஆசைப்பட்டதுக்கு இப்படி சினிமா பார்த்து படிப்பை தொலைச்சு, என் கனவை கலைச்சிட்டியே'' என்று வேதனைப்பட்டார் அப்பா.

    இதன் பிறகு என்னை அவர் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினார்.

    பள்ளிக்கூடத்தில் ரொம்ப கண்டிப்போடு பாடம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கும்பகோணத்தில் "வீரபாண்டிய கட்டபொம்மன்'' நாடகம் நடத்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வருவதாக ஊர் முழுக்க மைக்செட் கட்டிய வண்டிகளில் விளம்பரம் செய்தார்கள்.

    எங்கள் ஊரில் இருந்து, கும்பகோணத்துக்கு 40 மைல். ஆனாலும் சிவாஜியை பார்க்கும் ஆவலில் 30 நண்பர்கள் ஆளுக்கொரு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு பறந்தோம். கும்பகோணத்தில் நாடகம் நடக்கவிருந்த இடத்துக்கு அருகே, ஒரு புளிய மரத்தின் அடியில் சைக்கிள்களை போட்டுவிட்டு மரங்களில் ஏறிக்கொண்டோம்.

    40 ஆயிரம் பேராவது வந்திருப்பார்கள். கும்பகோணம் மகாமகத்துக்குத்தான் இப்படி கூட்டம் கூடும் என்றார்கள்.

    எனக்கு எப்படியாவது சிவாஜியை பார்த்தால் போதும் என்ற நிலை. மரத்தின் உச்சியில் இருந்து பார்த்தால் கீழே நிற்பவர்களின் முகங்கள் மிகச் சிறிதாகத் தெரிந்தன.

    அந்த நேரத்தில், சிவாஜியின் குரல் `மைக்'கில் கேட்டது. சிவாஜியை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் கூட்டத்தினர் முண்டியடித்துக் கொண்டு முன்னேற, கூட்டத்தில் கலாட்டா ஏற்பட்டது. அதைக் கட்டுப்படுத்த, இரும்புத்தொப்பி போலீசார் வந்தார்கள். கூட்டத்தினரை இருபுறமாக பிரித்து, அவர்கள் ஏற்படுத்திய பாதையில் சிவாஜி நடந்து வந்தார். "நடிகர் திலகம் வாழ்க'' என்ற கோஷம் விண்ணை முட்டி எதிரொலித்தது. நான் மரத்தில் இருந்தபடி, வைத்தகண் வாங்காமல் பிரமிப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

    அப்போதுதான் எனக்குள் மின்னல் மாதிரி ஒரு எண்ணம். சினிமாவில் நடித்ததால்தானே சிவாஜிக்கு இப்படியொரு புகழ்; அவரைப் பார்க்க இவ்வளவு பெரிய கூட்டம்! இவ்வளவு சக்தி வாய்ந்த சினிமாவில் நடிக்க, நாமும் ஏன் முயற்சிக்கக் கூடாது?- இப்படி நான் நினைத்தபோது எனக்கு 16 வயதுதான்! சென்னைக்கு போனால் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விடுமா என்ற தயக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை! சிவாஜியை பார்த்த இரண்டு நாளில், சென்னைக்கு ரெயில் ஏறிவிட்டேன்!

    அப்போது, எங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு ரெயில் கட்டணம் 7 ரூபாய்தான். வீட்டில் சொல்லாமல் புறப்பட்டாலும் சென்னையில் கடை வைத்திருக்கிற அண்ணனைப் பார்த்து, சினிமாவில் நடிக்கும் ஆசையை சொல்லி விட முடிவு செய்திருந்தேன்.

    சென்னைக்கு, என் முதல் ரெயில் பயணம் இவ்வாறாகத் தொடங்கியது.'' - இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    காதலித்து மணந்துகொண்ட நடிகையை பிரிவதற்கு பல காரணங்களை கூறிய இயக்குனர் ஒருவர் தற்போது புதிய காரணத்தை கூறியுள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    பட்டதாரி நடிகையும், சென்னை பட்டணத்து இயக்குனரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். யார் கண் பட்டதோ? இவர்கள் காதல் திருமணம் ஒரு வருடம் முடிவதற்குள்ளேயே முறிந்துபோனது. இந்த மண முறிவுக்கு நடிகை இயக்குனரின் பெற்றோரை மதிக்காமல் தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதுதான் காரணம் என்று அப்போது கூறப்பட்டது.

    ஆனால், இவர்களின் பிரிவுக்கு தற்போது இயக்குனரே ஒரு காரணம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி பார்த்தால், இயக்குனர் தன்னுடைய பெற்றோர்களால்தான் என்னுடைய காதல் மனைவியை பிரிந்துவிட்டேன் என்று மனதார அழுது புலம்பியுள்ளாராம்.

    மேலும், தற்போது பெற்றோருடன் வசிக்காமல் அவர் தனிமையில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. இனிமேல் தன்னுடைய பெயருக்கு முன்னால் அப்பாவின் பெயரை இன்ஷியலாக போடமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில், நடிகையும் தனது காதல் கணவரை பிரிந்ததற்கு ரொம்பவும் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இவர்களின் தனிமை கூடிய விரைவில் இவர்களை சேர்த்துவிடும் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

    அம்மா இரங்கல் பாடல் புகழ் கவிஞர் அஸ்மினும், தாஜ்நூரும் இணையும் கரிச்சான் குருவி படம் குறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    'வானே இடிந்ததம்மா' என்ற அம்மா இரங்கல் பாடல் மூலம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஈழத்து கவிஞர் அஸ்மின். இவர் விஜய்  ஆண்டனியின் 'நான்' திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பேயில்லை' பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்  ஜிப்ரான் இசையில் 'அமரகாவியம்' படத்தில் அஸ்மின் எழுதிய 'தாகம் தீர கானல் நீரை’ பாடலுக்காக 9-ஆவது 'எடிசன்' திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியர் விருதினை பெற்றவர்.

    'காதல்' சுகுமாரின் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கடந்த வருடம் வெளிவந்த 'சும்மாவே ஆடுவோம்' திரைப்படத்தில் அஸ்மின் எழுதிய 'முத்து முத்து கருவாயா' பாடல் அஸ்மினுக்கு மிப்பெரிய வெற்றிப்பாடலாக அமைந்தது. கவிஞர் அஸ்மின் பாடல் எழுதி மிக விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம்தான் 'கரிச்சான் குருவி''.

    பிரபு தேவா நடித்த ‘ராசையா’, விவேக் நடித்த 'நான்தான் பாலா' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் ராஜமாணிக்கம்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். ‘வம்சம்’ ,’எத்தன்’,  ‘ஸ்ரோபரி’  போன்ற படங்களுக்கு இசையமைத்த தாஜ்நூர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இவர் ஆஸ்கார் நாயகனிடம் பல ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்தவர்.

    'இந்த படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 'ஏஞ் சண்டாளனே' எனத்தொடங்கும் பாடலை கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார். ஏனைய பாடல்களை அமரர் நா.முத்துக்குமார், தனிக்கொடி, தமயந்தி, மீனாட்சி சுந்தரம், கலீல் ஆகியோர் எழுதியுள்ளனர். இதில் அஸ்மின் எழுதிய ‘சண்டாளனே’ பாடல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாடலென்பதால் இசை வெளியீட்டுக்கு முன்பாகவே இந்த பாடலினை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இந்தப் பாடலை வேல்முருகன் மற்றும் ஆழா ஆகியோர் பாடியுள்ளனர்.

    இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் சரவணன் அறிமுகமாகின்றார்.நாயகியாக 'டூரிங்ஸ் டாக்கிஷ்' படத்தில் நடித்த சுனு லட்சுமி நடித்துள்ளார். அவர்களோடு 'நண்டு' ஜெகன், கோவை சரளா, செண்ட்டராயன், டி.பி கஜேந்திரன், ஆர்.வி உதயகுமார், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஜெரால்ட், என்.இளங்கோ, உமா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீடு மிக விரைவில் நடைபெறவுள்ளது. 
    ஜெயம் ரவியும், அரவிந்த் சாமியும் என்னுடைய ஆசான்கள் என்று நடிகர் வருண் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    ‘தனி ஒருவன்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்கு பிறகு ‘ஜெயம் ரவி - அரவிந்த்சாமி இணைந்து நடித்திருக்கும் படம் ‘போகன்’. இப்படத்தை ‘ரோமியோ ஜுலியட்’ படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கி இருக்கிறார். ஹன்சிகா மொத்வானி கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், நிறைய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் வருண் இப்படத்தில் காவல் துறை அதிகாரி வேடத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா மொத்வானி என்ற தலைசிறந்த கூட்டணியுடன உருவாகியுள்ள இப்படத்தில் என்னுடைய பங்கும் இருப்பது அளவு கடந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. வளர்ந்து வரும் நடிகருக்கு இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்? ஆரம்பத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி ஆகியோருடன் சேர்ந்து நடிப்பதில் கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால், அவர்கள் எனக்கு அளித்த சுதந்திரமும், உற்சாகமும் நாளடைவில் என்னை பதட்ட நிலையில் இருந்து வெளிக்கொண்டு வந்துவிட்டது. நான் நடித்த காட்சிகள் சிறப்பாக அமைவதற்கு அவர்கள் இருவரும் என்னுடன் இருந்து வழிநடத்தியது மட்டுமில்லாமல், எனக்கு சிறந்ததொரு ஆசானாகவும் இருந்து என்னை ஊக்குவித்தனர்.

    இயக்குனர் லட்சுமண் என்னுடைய கதாபாத்திரத்திற்காக ஒரு தனித்துவமான நடை பழக்கத்தை எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். அதற்கான காரணத்தை ‘போகன்’ படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். தொடர்ந்து ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகிறேன். வருகிற பிப்ரவரி 2-ந் தேதி என்னுடைய கலைப் பயணத்தில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என பெரிதும் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இப்படத்தை சாய் ரமணி என்பவர் இயக்கியிருக்கிறார். லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருக்கிறார்.

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் லாரன்ஸ் போலீஸ் கெட்டப்பில் நடித்து அசத்தியிருக்கிறார். அந்த டிரைலரில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் எல்லாம் கண்டிப்பாக படத்திற்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது வருகிற பிப்ரவரி 17-ந் தேதி இப்படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதற்கு முன்னதாக பிப்ரவரி 5-ந் தேதி இப்படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர். 
    தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு சூர்யாதான் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சி3’ படம் வருகிற பிப்ரவரி 9-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. சூர்யா - ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் மூன்றாவது பாகமாக வெளிவரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

    இந்நிலையில், இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, தமிழ், தெலுங்கு சினிமாவில் ரஜினிக்கு அடுத்த வியாபாரம் என்றால் அது சூர்யாவுக்குத்தான்.  ‘சிங்கம் 3’ படம் வெளியாவதற்கு முன்பே ரூ 100 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகி அதை நிரூபித்துள்ளது. தமிழ், தெலுங்கில் ரஜினி சாருக்கு அடுத்து சூர்யாதான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று பேசினார்.

    தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள 'சி3' படத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர்,  ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.
    `சங்கமித்ரா' படத்திற்காக உடல்எடையை அதிகரிக்கும் ஆர்யா குறித்த ஸ்வாரஸ்யமான தகவலை கீழே காணலாம்.
    `மஞ்சப்பை' இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள `கடம்பன்' படம் திரைக்கு வர உள்ளது. முழுக்க முழுக்க  காடுகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் காட்டுவாசியாக நடித்துள்ள ஆர்யா இப்படத்திற்காக 91 கிலோ வரை உடல்  எடையை அதிகரித்தார்.

    `கடம்பன்' படத்தை தொடர்ந்து ஆர்யா அமீர் நடிப்பில் `சந்தனத்தேவன்' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில்,  ஜல்லிக்கட்டை மையாக வைத்து எடுக்கப்படவுள்ள `சந்தனத்தேவன்' படத்திற்காக ஆர்யா தனது உடல் எடையை குறைத்து  வருகிறார்.

    பின்னர், சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள `சங்கமித்ரா' படத்தில் நடிக்க உள்ள ஆர்யா இப்படத்திற்காக  மீண்டும் உடல் எடையை அதிகரிக்க உள்ளாராம். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்க உள்ள  இப்படத்திற்காக ஆர்யா மீண்டும் உடல் எடையை அதிகரிக்க உள்ளாராம். அதாவது `கடம்பன்' படத்தில் இருப்பதைவிட உடல்  எடையை மேலும் அதிகரித்து ஹல்க் தோற்றத்திற்கு மாறச் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் சுந்தர்.சி. இப்படத்திற்கான  படப்பிடிப்பு 2017 பிற்பாதியில் தொடங்க உள்ளது.

    மேலும் இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து ஜெயம் ரவியும் நடிக்க உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க  உள்ளார். `பஜ்ரோ மஸ்தானி' பட புகழ் சுதீப் சட்டர்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
    தமிழர்களின் பாரம்பரிய கலைகளை சினிமாவில் புகுத்தவேண்டும் என்று ஈரோட்டில் நடிகர் ராம்ஜி கூறினார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    திரைப்பட நடிகரும், நடன இயக்குனருமான ராம்ஜி ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் கல்லூரி படிப்பை முடித்தவுடன் சினிமா துறைக்கு வந்துவிட்டேன். தற்போது 25 ஆண்டுகள் ஆகிறது. 30 படங்களில் நடன இயக்குனராகவும், 400-க்கும் மேற்பட்ட படங்களில் உதவி நடன இயக்குனராகவும் பணி புரிந்து உள்ளேன். ‘வீரபாண்டி கோட்டையிலே, வெள்ளிக்கிழமை 13-ந் தேதி, நதி கரையினிலே, வட்டாரம்‘ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். ஏராளமான டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளேன்.

    நடிகர் அஜித்குமார் நடித்த காதல் கோட்டை படத்தில் வரும், ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ என்ற பாடலில் நடனம் ஆடியது எனக்கு திருப்பு முனையாக அமைந்தது. நடிகர்கள் சிவாஜி, ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களை பார்த்து நான் நடிக்க கற்றுக்கொண்டேன். மக்கள் மனதில் நிலைத்திருக்கக்கூடிய எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக உள்ளேன். தற்போது டி.வி. தொடர்களில் மட்டும் நடித்து வருகிறேன்.

    எதிர்காலத்தில் சினிமா படம் இயக்க முடிவு செய்துள்ளேன். அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். அரசியலில் ஈடுபாடு இல்லை. தற்போது நிறைய சினிமா தியேட்டர்கள் வந்துவிட்டன. 100 நாட்கள் ஓடி எடுக்கவேண்டிய வசூலை 10 நாட்களிலேயே எடுத்து விடுகிறார்கள். நல்ல படமாக இருந்தால் கண்டிப்பாக பொதுமக்கள் தியேட்டருக்கு செல்வார்கள்.

    தமிழர்களின் பாரம்பரிய கலைகள் மறைந்து வருகின்றன. அதை சினிமாவில் புகுத்தி புத்துணர்ச்சி அளிக்கவேண்டும். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் அதை கண்டிப்பாக செய்வேன். தமிழ் கலாச்சாரத்துக்கு தகுந்த கதைகளை எழுதவேண்டும் என்று விரும்புகிறேன்.

    ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது நான் பெங்களூரில் டி.வி. தொடரில் நடித்துக்கொண்டு இருந்தேன். எனினும் மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் நான் ஒருநாள் மட்டும் கலந்து கொண்டேன். இதை பெருமையாக கருதுகிறேன்.

    இவ்வாறு நடிகர் ராம்ஜி கூறினார்.
    சமுதாய கருத்துள்ள படங்களுக்கு கண்டிப்பாக வரிவிலக்கு கொடுக்கவேண்டும் என்று இயக்குனர் அறிவழகன் கோரிக்கை வைத்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்சி தயாரித்திருக்கும் ‘நிசப்தம்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த நடிகர் ‘டத்தோ’ ராதாரவி, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இயக்குநர்கள் மீரா கதிரவன், மிஷ்கின், கிருத்திகா உதயநிதி, அறிவழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

    இவர்களுடன் படத்தின் நாயகன் அஜய், நாயகி அபிநயா, முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பேபி சாதன்யா, பழனி, பாடகர் தாமஸ் ஆண்ட்ரூஸ் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவினருடன் அறிமுக இயக்குநர் மைக்கேல் அருண் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


    இப்படத்தில் பணியாற்றிய மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மேலும் இந்த விழாவில் பார்வையற்றவர்கள் இருவர் கௌரவிக்கப்பட்டனர்.

    பின்னர் இயக்குநர் அறிவழகன் பேசும்போது, இது ரொம்ப ஆழமான படம். அதே நேரத்தில் சமூகத்திற்குத் தேவையான படம் என்று நினைக்கிறேன். இன்றைக்கு ஒரு தயாரிப்பாளரைப் பார்த்து கதை சொல்லப்போனால் இந்த படத்துக்கு யூ சர்டிபிகேட் கிடைக்குமா? இல்லை என்றால் யூ ஏ கிடைக்குமா? என்று தான் முதலில் கேட்கிறார்கள்.

    படம் முடிந்து சென்சாருக்கு போய் யூ சர்ட்டிபிகேட் கொடுத்திட்டாங்க என்றால் அங்கேயே படத்தின் வெற்றியை முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால் ஆடியன்சு தான் ஒரு படத்தை சக்ஸஸ் பண்ணப் போகிறார்கள். இந்த நேரத்தில் நான் வைக்கிற வேண்டுகோள் என்னவென்றால், ‘யூ’ வோ ‘யூஏ’ வோ என்ன சர்ட்டிபிகேட் வேண்டுமென்றாலும் கொடுங்கள். ஆனால் ‘நிசப்தம்’ மாதிரி சமூக விழிப்போடு சமுதாயத்துக்குத் தேவைப்படுகிற துணிச்சலான சப்ஜெக்ட்டுக்கு நிச்சயமாக யூ சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அத்தோடு வரி விலக்கும் கொடுக்க வேண்டும்.

    ஏனென்றால் அப்போதுதான் மைக்கேல் அருண் மாதிரியான இளம் திறமைசாலி இயக்குநர்கள் தொடர்ச்சியாக நல்ல படமாக எடுக்க முடியும். இந்த கோரிக்கையை இந்த மேடையில் உங்கள் ஆதரவோடு முன்வைக்கிறேன்.‘ என்று பேசினார்.
    ×