என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஜேம்ஸ் எர்ச்கின் இயக்கத்தில் சச்சின் நடித்து உருவாகியுள்ள ‘சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை கீழே பார்க்கலாம்.
    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு, ‘டோனி த அன்டோல்டு ஸ்டோரி’ என்ற பெயரில் படமாகி  சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.  வெளிநாடுகளிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல அபார சாதனைகளை நிகழ்த்தி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த  கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகியுள்ளது. இந்த படத்துக்கு ‘சச்சின்:  ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் திரைக்கு வர உள்ளது. இதில் சச்சின் தெண்டுல்கரே அவரது கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

    ஜேம்ஸ் எர்ச்கின் டைரக்டு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை வரும் மே 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
    முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களுடன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
    முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு பல்வேறு தரப்பினரும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று நடிகர்கள் தியாகு, ராமராஜன் நேரில்
    சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.

    இந்நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். அப்போது அவருடன் ஜல்லில்க்கட்டுக்காக போராடிய மாணவர்களும் உடன் இருந்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், “ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள், இளைஞர்கள் மெரினா மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒன்று கூடி போராட்டங்களை நடத்தினர். இருப்பினும் சட்ட ரீதியான ஜல்லிக்கட்டுக்கான உரிமையை முதல்வர் பன்னீர் செல்வம் மேற்கொண்டார்” என்று தெரிவித்தார்.

    மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை மாணவர்களுடன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்ததையும் சுட்டிக் காட்டினார்.

    பன்னீர் செல்வத்துக்கு பல்வேறு தரப்பினரும் நாளுக்குள் நாள் தங்களது ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    மிருகங்களை மையமாக வைத்து பல வெற்றிப் படங்களை எடுத்துக் குவித்தவர், சாண்டோ சின்னப்பத்தேவர். அவரது தயாரிப்பில் எடுக்கப்பட்ட "தாயில்லாக் குழந்தை'' படத்தில் நிஜமாகவே முரட்டுக்காளைகளுடன் மோதினார், விஜயகுமார்.
    மிருகங்களை மையமாக வைத்து பல வெற்றிப் படங்களை எடுத்துக் குவித்தவர், சாண்டோ சின்னப்பத்தேவர். அவரது தயாரிப்பில் எடுக்கப்பட்ட "தாயில்லாக் குழந்தை'' படத்தில் நிஜமாகவே முரட்டுக்காளைகளுடன் மோதினார், விஜயகுமார்.

    பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த காளைச் சண்டையில் உயிரைப் பணயம் வைத்து காளைகளை அடக்கினார்.

    இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "சிங்கம், புலி, கரடி, யானை போன்ற மிருகங்களை வைத்து மட்டுமல்ல, சாதுவான ஆட்டைக்கூட வைத்துக்கூட படம்  எடுத்தவர் சின்னப்பத் தேவர். இந்தப் பின்னணியில் அமைந்த படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்களே.

    இவரது "தாயில்லாக் குழந்தை'' படத்தில் என்னை ஹீரோவாக `புக்' பண்ணும்போதே, "விஜயகுமார்! நீங்க பெரிய வீரர்னு கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்துல 2 காளை மாடுகளோட நீங்க மோத வேண்டியிருக்கும். அதுக்கு இப்பவே உங்களை தயார்படுத்திக்குங்க, என்றார்.

    நான் கிராமத்தில் வளர்ந்தவன். எனவே, தேவர் இப்படிச்சொன்னபோது எனக்குள் ஒரு துளி பயம் கூட ஏற்படவில்லை.

    "தாயில்லாக் குழந்தை'' படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில்தான், காளைகளை அடக்கும் காட்சியை படமாக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். 2 காளைகள் வந்தன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைகளைப்போல திடகாத்திரமாக, பெரிய திமிலுடன் பார்க்கவே கம்பீரத்துடன் காணப்பட்டன.

    காளையுடன் நான் மோதுகிற இடத்தைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது.

    முதலில் ஒரு மாட்டுடன் மோதவேண்டும். அந்த மாடும் வந்தது. நான் நின்றிருந்த பகுதியில் விடப்பட்டது. என்னிடம் வந்த தேவர், "விஜயகுமார்! 2 இடத்தில் 2 கேமரா இருக்கு. டைரக்டர் சொன்னதும் கேமரா  ஓடத்தொடங்கும்.  `நீயா... மாடா...'ன்னு பார்த்துக்க'' என்றார், தேவர்.

    ஏற்கனவே கிராமத்து காளைகளுடன் கொஞ்சம் விளையாடிய அனுபவம் இருந்ததால், கேமரா ஓடத்தொடங்கியதும் நான் எந்தவித பதட்டமும் இல்லாமல் காளையை நெருங்கினேன்.

    என்னிடம் பிடிகொடுக்காத அந்த காளை, ஒரு கட்டத்தில் நான் கொஞ்சமும் எதிர்பார்த்திராத நேரத்தில் தனது கொம்பால் எனது தொடையில் குத்தித் தள்ளியது. தொடையில் இருந்து ரத்தம் வரத்தொடங்க, காளையை அடக்கியே தீரவேண்டிய வேகம் எனக்குள். இப்போது இந்த வீரத்தை அதிகப்படுத்துவது போல, "விஜயகுமார்! விடாதே! காளையை அடக்கு'' என்று கத்தினார், தேவர்.

    தேவரின் அந்த வார்த்தைக்கும் பலம் இருந்திருக்க வேண்டும். ரத்தம் சொட்டச்சொட்ட, காளையின் கொம்பை பிடித்த நான், அடுத்த சில நிமிட போராட்டத்தில் அந்தக் காளையை மண்டியிட வைத்தேன். அன்று மதியமே இன்னொரு மாட்டையும் அடக்கியாக வேண்டும். ஏற்கனவே ஒரு வீரக்காளையை அடக்க முடிந்த தெம்புடன் இதை அணுகியதால் மிக சுலபமாய் அந்தக் காளையையும் மடக்கிவிட்டேன்.

    பொதுமக்கள் ஆரவாரம் செய்தார்கள். விசில், கரகோஷ சத்தம் காதைத் துளைத்தது.

    காளைகளை அடக்கும் காட்சி முடிந்ததும் சந்தோஷ மிகுதியால் ஓடிவந்து என்னை ஆரத் தழுவிக் கொண்டு வாழ்த்து சொன்னார், தேவர். "நான் எதிர்பார்த்ததை விடவும் காட்சி நல்லா வந்திருக்கு'' என்றார்.

    சில நாட்களில் வாகினி ஸ்டூடியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேவர், படத்தில் நான் வீரத்துடன் காளைகளுடன் மோதியதை சொன்னார். அதோடு நில்லாமல், "எனக்குத் தெரிந்து சண்டைக் காட்சியில் `டூப்' போடாமல் செய்பவர்கள் இரண்டே இரண்டு நடிகர்கள்தான். வடநாட்டில் தர்மேந்திரா, தென்னாட்டில் விஜயகுமார்'' என்றார். தேவரின் இந்த வெளிப்படையான பாராட்டில் காளை குத்தியதில் ஏற்பட்டிருந்த வலி கூட மறந்து போயிற்று.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    "குற்றப்பத்திரிகை'' படத்தில் நடித்த நேரத்தில் பெரிய விபத்தில் இருந்து உயிர் தப்பியிருக்கிறார், விஜயகுமார். இந்த விபத்தில்

    4 நாட்கள் `கோமா' நிலையில் இருந்து கண் விழித்திருக்கிறார்.

    அதுபற்றி அவர் கூறுகிறார்:-

    "டைரக்டர் ஆர்.கே.செல்வமணியின் குற்றப்பத்திரிகை படத்தில் எனக்கும் முக்கிய கேரக்டர். அப்போதிருந்த அரசியல் பின்னணியில் பரபரப்பான படமாக எதிர்பார்க்கப்பட்டது அந்தப்படம். என் சம்பந்தப்பட்ட காட்சிகளை தர்மபுரியில் படமாக்கினார்கள்.

    என் இளைய மகள் ஸ்ரீதேவிக்கு அப்போது 5 வயது இருக்கும். சினிமா படப்பிடிப்புக்கு நான் எப்போது புறப்பட்டாலும், "அப்பா! காரில் இரவுப் பயணம் மட்டும் செல்ல வேண்டாம்'' என்று கூறுவாள். அப்பா மீதான அதிகபட்ச பாசமாக அதை எடுத்துக் கொள்வேன்.

    தர்மபுரியில் முடிந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து கோபிசெட்டிப்பாளையம் போக வேண்டியிருந்தது. மறுநாள் அங்கே படப்பிடிப்பு. இரவு படப்பிடிப்பு முடிந்து 11 மணிக்குத்தான் கார் வந்தது. எனக்கு அப்போது மகள் ஸ்ரீதேவியின் `ராத்திரி கார் பயணம் வேண்டாம்' என்ற வார்த்தைகள் காதுக்குள் வந்து போயின.

    லாரி மோதல்

    ஆனாலும் கம்பெனியின் அவசரம் கருதி காரில் புறப்பட்டு விட்டேன். கார் வேலூரில் இருந்து புறப்பட்டு கோபிசெட்டிப்பாளையம் போய்க் கொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டி 2 மணி அளவில் நான் கொஞ்சம் கண்ணயர்ந்த நேரம் கார் எதிரில் வந்த லாரி மீது மோதி, மூன்று குட்டிக்கரணம் அடித்தது. காரில் இருந்து நான் தூக்கியெறியப்பட்டது தெரிந்தது. மரணத்தை ருசிபார்க்க நேர்ந்த அனுபவமும் அப்போது

    கிடைத்தது.என் இதயத்துடிப்பு படிப்படியாக குறைவது எனக்குத் தெரிகிறது. `நோ' என்று அலறுகிறேன். மறுபடி துடிப்பு ஏறுகிறது.

    மீண்டும் இறங்கத் தொடங்கும்போது `நோ' என்று அலறுவேன். இப்படி ஜீவ மரணப் போராட்டத்திலும் மகள் ஸ்ரீதேவி சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போகின்றன...

    அப்புறம் என்ன நடந்தது என்று தெரியாது. பெங்களூரில் உள்ள மணிபால் ஆஸ்பத்திரியில் 4 நாட்கள் கழித்து கண் விழித்தேன். விலா எலும்புகள் உடைந்திருந்தன என்றார்கள். தொடையின் ஒரு பக்கம் கிழிந்து தையல் போட்டிருந்தார்கள். ஆஸ்பத்திரியில் என்னைப் பார்த்தவர்கள் `மறுபிறவி' என்றார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகு நான் காரில் இரவுப் பயணத்தை அது எத்தனை அவசரமானாலும் மேற்கொள்வதில்லை.

    இந்த விபத்து சமயத்தில் டைரக்டர் பி.வாசுவின் வால்டர் வெற்றிவேல் படத்திலும், மலையாளத்தில் மம்முட்டியுடன் `ஆயிரம் பரா' என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். "நான் குணமாகி வர மாதக் கணக்கில் ஆகலாம். எனவே, என் கேரக்டரில் வேறு நடிகரைப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி அனுப்பியும், அவர்கள் எனக்காக காத்திருப்பதாக சொல்லி விட்டார்கள். நான் திருப்பிக் கொடுத்த அட்வான்சையும் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். நெகிழ்ந்து போனேன்.'' 
    நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொருத்தாரே பூமியாள்வர் என்று கமல் ஹாசன் டுவிட் செய்துள்ளார்.
    நடிகர் கமல் ஹாசன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ‘‘நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொருத்தாரே பூமியாள்வர்’’ என்று கூறியுள்ளார்.

    தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவிக் கொண்டிக்கும் நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள்.

    இந்நிலையில் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் கருத்து தீர்ப்புடன் தொடர்புடையதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    தனுஷ் தம்பி தற்போது ராகவா லாரன்ஸ் கைவிட்ட இடத்தை பிடித்துள்ளார். அவர் யார்? என்ன விபரம்? என்பதை அறிந்துகொள்ள கீழே வாருங்கள்.
    ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி வெளியாவதாக இருந்தது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை கேட்ட வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், படத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, திட்டமிட்டபடி படம் வெளிவருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்நிலையில், அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்காக தற்போது ‘ரம்’ படத்தை வெளியிடவிருக்கின்றனர். ‘ரம்’ படத்தின் கதாநாயகனாக ‘வேலையில்ளலா பட்டதாரி’ படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ஹிரிஷிகேஷ் நடித்துள்ளார். மியா ஜார்ஜ், சஞ்சிதா ஷெட்டி என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். விவேக், நரேன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை சாய் பரத் என்பவர் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படத்தோடு வருகிற பிப்ரவரி 17-ந் தேதி ரகுமான் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பகடி ஆட்டம்’, ராணா டகுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காஸி’, பரத் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘என்னோடு விளையாடு’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. 
    சினிமாவின் முக்கிய கலைஞர்களான ‘லைட்மேன்’களின் நிஜ-நிழல் வாழ்க்கையை சொல்லும் படமாக உருவாகியுள்ள ‘லைட்மேன்’ படத்தின் விமர்சனத்தை கீழே விரிவாக பார்ப்போம்.
    கார்த்திக் நாகராஜன் கிராமத்து கூத்து கலைஞர். இவர் சினிமா ஆசையால் சென்னை வருகிறார். கூடவே தன்னுடைய மனைவியையும் அழைத்து வருகிறார். ஆனால் நடிக்க எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, ஒரு நடிகையின் மேக்கப் மேனின் உதவியை நாடுகிறார். அவர் மூலம் சினிமாவில் லைட்மேன் ஆக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது.

    இந்த வேலை கடினமாக இருக்கவே, அவரை மதுப்பழக்கம் தொற்றிக் கொண்டு, அவரது பாதையை மாற்றிவிடுகிறது. இப்படியாக உண்மையிலேயே ‘லைட்மேன்’களாக இருப்பவர்களின் வாழ்க்கையை அவர்களே சொல்வதும் படமாக்கப்பட்டிருகிறது.

    திரைஉலகில் லைட்மேன்களின் பங்கு என்ன? திரை உலகத்துக்கு வெளிச்சம் தரும் இவர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்து இருப்பது ஏன்? என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்வது மீதிக்கதை.

    நாயகன் கார்த்திக் நாகராஜன் கூத்து நடிகராக வரும் போது, பேசும் நீண்ட வசனங்களும், தமிழ் உச்சரிப்பும் அருமை. லைட்மேன் பாத்திரமாகவே மாறி ரசிகர்களை ஒன்ற வைக்கிறார். அவரது மனைவியாக வரும் ஜெனிபர், லைட்மேன்கள் வாசகன், கோவிந்த சுவாமிநாதன் உள்பட அனைவரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்கள்.

    இயக்குனர் வெங்கடேஷ் குமார்ஜியின் வசனம் ‘லைட்மேன்’ படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறது. பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்த இவரது படைப்பும் குருவின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. கதையுடன், லைட்மேன்களின் வாழ்க்கை, வலி, வேதனைகளையும் அவர்களிடமே கேட்டு படத்துடன் இணைத்திருப்பது புதிய யுக்தி.

    பல நடிகர்-நடிகைகளுக்கு ஏணியாக இருக்கும் ‘லைட்மேன்கள்’ பற்றி இதுவரை வெளிச்சத்துக்கு வராத உண்மைகளை, சோக வாழ்க்கையை இயக்குனர் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். ராகுல் ஒளிப்பதிவு நெகிழ வைக்கும் யதார்த்தம். டோனி பிரிட்டோவின் இசையை ரசிக்கலாம். காட்சிகளுக்கும் பலம் சேர்க்கிறது.

    லைட்மேன்களின் இருண்ட வாழ்க்கையை தனிகதையாக உருவாக்கி அதில் கொஞ்சம் சினிமா அம்சங்களையும் சேர்த்து இருந்தால், படம் ரசிகர்களையும் தன் வெளிச்சத்தால் கவர்ந்து இருக்கும். என்றாலும், இயக்குனர் சொல்ல நினைத்ததை லைட்மேன்களின் கதையுடன் அனுபவத்தையும் கலந்து சொல்லி அவரது நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

    மொத்தத்தில் ‘லைட்மேன்’  திரை கலைஞர்களுக்கு வெளிச்சம்.
    போக்கிரி, ஜில்லா, தெறி ஸ்டைலில் விஜய் மீண்டும் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்ன ஸ்டைல் என்பதை கீழே பார்ப்போம்.
    விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, விஜய் போக்கிரி, ஜில்லா, தெறி ஆகிய படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய 100-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. 
    ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இப்படத்தை சாய் ரமணி இயக்கியுள்ளார். சத்யராஜ், நிக்கி கல்ராணி, கோவை சரளா, சதீஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை தயாரித்துள்ளார். வேந்தர் மூவிஸ் மற்றும் சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறது.

    இப்படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி வெளியாவதாக இருந்தது. இந்நிலையில், இந்த படத்துக்கு எதிராக சினிமா பைனாசியர் போத்ரா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு படத்தை வெளியிட தடை வாங்கியிருந்தார். அந்த தடையை உடைப்பதற்காக வேந்தர் மூவிஸ் நிறுவனமும், சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனமும் கடுமையாக முயன்று வருகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் இப்படத்தின் தடையை திரும்ப பெறவேண்டும் என்று நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், அன்றைய நீதிபதி அதை ஏற்கவில்லை. எனவே, இன்று வேறு ஒரு நீதிபதியிடம் அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அவர் அந்த வழக்கின் தன்மையை பார்த்துவிட்டு இது ஒன்றும் அவரச வழக்கு கிடையாது. இதை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்று கூறிவிட்டார். எனவே, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் வருகிற 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லாதது போன்றே தோன்றுகிறது. விரைவில், இதுகுறித்த பாசிட்டிவான செய்தி வெளிவரும் என நம்பலாம்.
    இந்தி பட உலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் ரூ. 2 கோடி வீட்டை பரிசாக கொடுத்துள்ளார். யாருக்கு கொடுத்தார் என்பதை கீழே பார்க்கலாம்.
    இந்தி பட உலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவரை மிகவும் கவர்ந்தவர் யோகா குரு சூர்ய நாராயண் சிங். கங்கனா  ரனாவத் நடிக்க வரும் முன்பு அவரது 18-வது வயதில் மும்பையில் உள்ள ஜுஹூ கடற்கரைக்கு சென்றார். அப்போது, அங்கு யோகா  செய்து கொண்டிருந்த சூர்ய நாராயண்சிங்கை பார்த்து வியப்பு அடைந்தார்.

    பின்னர் அவரை சந்தித்து தனக்கு யோகா கற்றுத்தரும்படி கங்கனா கேட்க, அதில் இருந்து அவருக்கு சூர்ய நாராயண் சிங் யோகா குரு  ஆனார். இன்று வரை அவருடைய ஆலோசனைப்படி தான் கங்கனா ரனாவத் யோகா செய்து உடலை கட்டுக் கோப்பாக வைத்து  இருக்கிறார். இந்தி பட உலகின் பிரபலமாகவும் இருக்கிறார். இந்த நிலையில், அவருடைய யோகா குரு மும்பையில் யோகா மையம்  ஒன்றை தொடங்க திட்டமிட்டார். இதை அறிந்த கங்கனா ரனாவத் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள தனது இரண்டு படுக்கை அறை  கொண்ட வீட்டை சூர்ய நாராயண்சிங்குக்கு அன்பளிப்பாக கொடுத்து அவரை யோகா மையம் தொடங்கும்படி கூறி இருக்கிறார். இந்த  வீட்டின் மதிப்பு ரூ. 2 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

    ‘யோகா குருவுக்கு குருதட்சணையாக இந்த வீட்டை கொடுத்து இருக்கிறேன்’ என்று கங்கனா ரனாவத் தெரிவித்து இருக்கிறார்.  இதுமட்டுமல்ல, அந்த வீட்டை யோகா மையமாக மாற்றி அமைக்க தேவையானவற்றையும் செய்து வருகிறார். இத்துடன் விடவில்லை.  தனக்கு தெரிந்தவர்களிடம் சூர்ய நாராயண்சிங்கிடம் யோகா கற்கும்படியும் கங்கனா ரனாவத் கூறி வருகிறார். இவரது குரு பக்தியை  அறிந்த இந்தி பட உலகம் பிரமித்து நிற்கிறது.
    தீபிகா படுகோனேவின் முதல் ஹாலிவுட் படமான `டிரிபிள் எக்ஸ் ரிட்டன் ஆப்த சேன்டர் கேஜ்' படம் ரூ.1000 கோடி வசூலை குவித்துள்ளது.
    தமிழில் வெளியாகும் படங்கள் வசூலில் ரூ.100 கோடியை தொட்டுவிட்டால் சாதனை என்று அறிவிப்பது வழக்கம். இந்தியிலும் முன்பு  சாதனையாக கருதப்பட்ட ரூ.100 கோடி வசூல் இப்போது ரூ.300 கோடி தான் சாதனை என்று மாறி விட்டது.

    இந்த நிலையில் இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்த முதல்ஹாலிவுட் படமான ‘டிரிபிள் எக்ஸ் ரிட்டன் ஆப்த சேன்டர் கேஜ்’  உலகம் முழுவதும் ரூ.1000 கோடி வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ரூ.550 கோடி செலவில் தயாரான இந்த படத்தின் வசூல் கடந்த ஞாயிறு வரைரூ.1000 கோடி.தொடர்ந்து இந்த படம்  ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தி பிரபல ஹீரோக்களையும் மிஞ்சும் அளவு தீபிகா படுகோனே, ரூ.1000 கோடி வசூல் பட பட்டியலில்  சேர்ந்து இருப்பது தான் இந்தி பட உலகில் இப்போது பரபரப்பாக பேசப்படும் செய்தி.
    பாகுபலி படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு புதிய படத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    ‘பாகுபலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கு உலகில் பிரபாஸ் பிரபலமாக இருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்களால் இவர் அறியப்பட காரணமாக இருந்த படம் ‘பாகுபலி’ என்றால் அது மிகையாகாது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார்.

    ‘பாகுபலி’ படம் வெளிவந்த பிறகு அதன் இரண்டாம் பாகம் எடுக்க கொஞ்சம் காலதாமதம் ஆனபோது, அதில் நடித்த பல நடிகர்கள் வேறு வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்கள். ஆனால், பிரபாஸ் மட்டும் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இரண்டாம் பாகத்திற்காக தயாராகிக் கொண்டு இருந்தார்.

    தற்போது ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த சமயத்தில், பிரபாஸ் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாகுபலியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரூ.150 கோடி மெகா பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறதாம்.

    மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது. சுஜீத் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே, கடந்த 2014-ஆம் ஆண்டு பிரபாஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘ரன் ராஜா ரன்’ என்ற படத்தை இயக்கியவர். இப்படத்தில் பிரபாஸ் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

    யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. சங்கர் எசன் லாய் இசையமைக்கிறார்கள். ஒளிப்பதிவை மதி கவனிக்க, சாபு சிரில் ஆர்ட் பணியை மேற்கொள்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், பிரபாஸின் பெரியப்பாவும், தெலுங்கு உலகில் ‘ரேபெல் ஸ்டார்’ என்றழைக்கப்படும் கிருஷ்ணம் ராஜு கலந்துகொண்டு படத்தை தொடங்கி வைத்தார்.
     
    பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘பாகுபலி-2’ வருகிற ஏப்ரல் 28-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
    நயன்தாரா, விஜய், அஜித்தின் வில்லனுடன் ஜி.வி.பிரகாஷ் மோத உள்ளார். எங்கே மோத உள்ளார் என்பதை கீழே பாரக்கலாம்.
    இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகனாக அவதாரம் எடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது பல படங்களில்  நடித்து வருகிறார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள `புரூஸ் லீ' படம் பொங்கலில் திரைக்கு  வரவிருந்தது. அதேநேரத்தில் விஜய் நடித்த `பைரவா' படமும் திரைக்கு வந்ததால் பொங்கல் ரேஸில் இருந்த `புரூஸ் லீ', `புரியாத புதிர்'  உள்ளிட்ட படங்கள் பின்வாங்கியது.

    அதனைத்தொடர்ந்து, `புரூஸ் லீ' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம்  தயாரித்துள்ள இப்படத்தில் ஜி.வி-க்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தா நடித்துள்ளார். மேலும் பால சரவணன், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த்,  ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மார்ச் 3-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

    அதேநாளில், அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்-மகிமா நம்பியார் நடித்துள்ள `குற்றம் 23' படமும், தாஸ் ராமசாமி இயக்கத்தில்  நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள `டோரா' படமும், வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள `அட்டு' என்ற படமும்  மார்ச் 3-ஆம் தேதியே ரிலீசாக உள்ளது.

    மேலும் விஜய், அஜித் படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் நடிப்பில் உருவாகியுள்ள `கமாண்டோ 2' தமிழிலில் டப்  செய்யப்பட்டு அதே நாளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×