என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    `இது வேதாளம் சொல்லும் கதை' படத்தில், வில்லனாக நடிக்கும் ஹாலிவுட் ஸ்டண்ட் நடிகர் தமிழ் பெண்ணை மணக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அது யார் என்பதை கீழே பார்க்கலாம்.
    `இது வேதாளம் சொல்லும் கதை' படத்தில், வில்லனாக நடிக்கும் ஹாலிவுட் ஸ்டண்ட் நடிகர் தமிழ் பெண்ணை மணக்க  விரும்புவதாக தெரிவித்துள்ளார். அது யார் என்பதை கீழே பார்க்கலாம்.

    ‘ஹாரி பார்ட்டர்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணிபுரிந்தவர் கிரேக் பியூரிட்ஜ். இவர் தமிழில்  தயாராகும் ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தில், வில்லனாக நடிக்கிறார். தொடர்ந்து தமிழ் படங்களில் வில்லனாக நடிக்க  விரும்பும் இவர், “எனக்கு தமிழ் நாடு மிகவும் பிடித்து விட்டது.

    தமிழர்களின் கலாசாரமும், பாசமும் என்னை கவர்ந்து விட்டது. ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்ள  விரும்புகிறேன்” என்றார்.
    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா மலையாள படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்க்கலாம்.
    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொள்ள தமன்னா கேரளா சென்றார். அப்போது அவர் அளித்த பேட்டி...

    “எனக்கு பிடித்த மலையாள நடிகர் மம்முட்டி. அவர் இத்தனை ஆண்டுகள் திரை உலகில் இருந்தாலும், இன்றுவரை இளம்  ரசிகர்களை கவர்ந்து தன்னிடம் வைத்து இருக்கிறார். இது எனக்கு வியப்பை தருகிறது. மலைப்பாக இருக்கிறது.

    65 வயதானாலும் மம்முட்டி இன்னும் இளமையாக இருக்கிறார். அவரை நேரில் பார்த்தால், ‘உங்களால் மட்டும் எப்படி சார்  இன்னும் இளமையாக இருக்க முடிகிறது’ என்று நிச்சயம் கேட்பேன். எனக்கு துல்கர்சல்மான், நிவின் பாலி ஆகியோரையும்  மிகவும் பிடிக்கும். விரைவில் மலையாள படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.” என்று தெரிவித்தார்.
    சசிகலா தண்டனை குறித்து சினிமா பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யார், யார் என்ன தெரிவித்திருக்கிறார்கள் என்பதை கீழே பார்க்கலாம்.
    சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அத்துடன் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 3 பேருக்கும் 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.

    இந்த தீர்ப்பு குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்தனர். அதனை கீழே பார்க்கலாம்.

    நடிகர் கமலஹாசன்: பழைய பாட்டுத்தான் இருந்தாலும்... என்று குறிப்பிட்டு "தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்.."

    நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் : சட்டம் என் கையில்" என பணம் மார்தட்டிக்கொள்ளவிடாமல், சட்டம் சத்தியத்தின் பக்கமே என போராடிய நீதியின் ஆச்சாரியார்களுக்கு வணக்கமும் நன்றியும்.

    வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ்: இது முடிவு இல்லை. தூய்மையின் தொடக்கமே... இன்னும் போக பல மைல்கள் உள்ளன.

    நடிகர் அரவிந்த்சாமி: தற்போதைய காபந்து முதல்வராகிய ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் அலுவலகத்துக்கு செல்வதை பார்க்க ஆவலாக உள்ளது. அவரை முன்மொழிந்து பின்பற்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது பணியை தொடங்க வேண்டும்.

    நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்: கடவுள் இருக்கிறார்!!

    நடிகை கவுதமி: ஊழல் வழக்கில் சசிகலா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அம்மாவின் மரணம் குறித்து தகலை அவர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இரு வழக்குகளுக்கும் ஒரே தண்டனை வழங்கக்கூடாது.

    இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்: ஓ.பி.எஸ் என்றால் ஓ.பன்னீர் செல்வம் என்று நினைத்தாயா ஆப்ரேஷன் சசிகலா.

    இசையமைப்பாளர் சீன் ரோல்டன்: ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான். கை விடமாட்டான். கெட்டவங்களுக்கு நிறைய குடுப்பான். ஆனா, கைவிட்டுடுவான் - ரஜினிகாந்த்.

    இயக்குநர் சீனு ராமசாமி: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

    காமெடி நடிகர் பால சரவணன்: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... மீண்டும் தர்மம் வெல்லும்... இன்று தர்மம் வென்றது.. கொடியவர்கள் தண்டிக்கபட்டார்கள்... நன்றி இறைவா...

    நடிகர் சித்தார்த்: தமிழ்நாட்டுக்கு "மினிமம்" "மினிமம்-சின்னமா" நீதி கிடைத்தது.

    நடிகை குஷ்பு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைந்துவிட்டது.

    நடிகர் அருள்நிதி: 3 பேர் உள்ளே.... 125  பேர் வெளியே.... பத்தரையுடன் முடிந்தது ஏழரை.

    நடிகை ராதிகா சரத்குமார்: மெகா சீரியல்களுக்கு இது மிகப்பெரிய போட்டி.

    இவ்வாறு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.
    காதலர் தினத்தையொட்டி புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் படத்தின் தலைப்பை வித்தியாசமாக வைத்துள்ளார்கள். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    காதலர் தினத்தை இன்று உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். இன்றைய தினத்தில் காதலன் ஒவ்வொருவரும் தனது காதலிக்கு விருப்பமான பொருளை பரிசாக கொடுப்பது வழக்கம். அதேபோல், காதலியும் தன்னுடைய காதலனுக்கு விருப்பமான பொருளை பரிசாக கொடுப்பார்கள்.

    இந்த வழக்கம் காலகாலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது காதலர் தினத்தில் காதலியை கார்த்திகேயன் தொலைத்துள்ளதாக கூறப்படுவது செய்தி அல்ல. அது புதுமுகங்கள் நடிப்பில் உருவாகிவரும் படத்தின் தலைப்புதான். ‘கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும்’ தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை பாலா என்பவர் இயக்கியுள்ளார்.

    டுவிங்கிள் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மாரியப்பன், ராஜகோபால் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இறங்கியுள்ளனர். காதலர் தினத்தையொட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர். விரைவில், இப்படம் குறித்த முழு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வரும் ஸ்ருதிஹாசன் தமிழிலில் பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன படம் என்பதை கீழே பார்க்கலாம்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், தெலுங்கு, இந்தி திரைப்பட உலகிலும் பல படங்களில்  ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் சூர்யா - ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான `சி3' படம் நல்ல வரவேற்பை  பெற்றுள்ள நிலையில், தமிழில் வெளியான `வீரம்' படத்தின் ரீமேக்கான `கட்டமராயுடு' படத்தில் பவண் கல்யான்  ஜோடியாக ஸ்ருதி நடித்து வருகிறார்.

    மேலும் `போகன் ஹேரி தெரி' என்ற பாலிவுட் படத்திலும், 3 மொழிகளில் உருவாகி வரும் `சாபாஷ்  நாயுடு' படத்தில் தந்தை கமலுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள `சங்கமித்ரா' படத்தில்  ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. வரலாற்றுக் கதையில் உருவாகவுள்ள இப்படத்தை தேனாண்டாள்  பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.

    முன்னதாக ஆர்யா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, சோனாக்‌ஷி சின்ஹாவை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்ததாக கூறப்பட்ட நிலையில், ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்ய  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    உலகின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் எடுக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2017 பிற்பாதியில் தொடங்க உள்ளது.  ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க  உள்ளார். `பஜ்ரோ மஸ்தானி' பட புகழ் சுதீப் சட்டர்ஜி  இப்படத்திற்கு ஒளிப்பதிவு  செய்ய உள்ளார்.
    கிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள 'பண்டிகை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியை என்னவென்பதை கீழே பார்க்கலாம்.
    கிருஷ்ணா - ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் 'பண்டிகை'. 'டி டைம் டாக்கீஸ்' சார்பில்  விஜயலக்ஷமி தயாரித்து இருக்கும் 'பண்டிகை' படத்தை, பெரோஸ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் 'நெகட்டிவ் உரிமையை'  வாங்கி இருக்கும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ், 'பண்டிகை' படத்தை வருகின்ற மார்ச் 9-ஆம் தேதி வெளியிட முடிவு  செய்துள்ளார்.

    மேலும் இப்படத்தில் சரவணன், நிதின் சத்யா, கருணாஸ், ப்ளாக் பாண்டி, சபரிஷ், மதுசூதனன் என ஒரு பட்டாளமே நடித்துள்ளது.  ஆர்.எச்.விக்ரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    "கை ஓங்கினால் தான், தான் நினைத்தது கிடைக்கும் என்று எண்ணும் ஒரு கோபமான அனாதை இளைஞன் (கிருஷ்ணா), ஒரு  கட்டத்தில் தான் எண்ணியது தவறு என்பதை உணர்ந்து கொள்கிறான். இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும்  போது, அவன் தன் காதலிக்காக (ஆனந்தி) நிழல் உலக தாதாக்கள் நடத்தும் ஒரு சண்டையில் கலந்து கொள்ள நேரிடுகிறது.  அதில் இருந்து எப்படி அவன் வெளியே வருகிறான் என்பது தான் 'பண்டிகை' படத்தின் கதை.
    சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தின் தலைப்பை ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ‘மாவீரன் கிட்டு’ படத்தை தொடர்ந்து சுசீந்திரன், தான் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் இரண்டாம் பாகத்தில் வசனம் எழுதி வருகிறார். இதற்கிடையில், சத்தமே இல்லாமல் ஒரு படத்தையும் இயக்கிக் கொண்டு வருகிறார். இப்படத்தை  அன்னை பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரித்துள்ளார்.

    இப்படத்தில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹீரோயினாக தெலுங்கு நடிகை மெஹரீன் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து, மதன் கார்க்கி ஆகியோர் இணைந்து பாடல்களை எழுதுகின்றனர்.

    லட்சுமண் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கெனவே, ‘வெண்ணிலா கபடிகுழு’ படத்தில் சுசீந்திரனுடன் இணைந்து பணியாற்றிவர். குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அதிரடி படமாக உருவாகி வரும் இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, இப்படத்திற்கு ‘அறம் செய்து பழகு’ என்று தலைப்பிட்டுள்ளனர். இந்த தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது. வருகிற ஜுன் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    அரசியல் சர்ச்சை கருத்து வெளியிட்டதால் அரவிந்த்சாமிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலை கீழே பார்க்கலாம்.
    தமிழக அரசியல் நிலவரம் குறித்து நடிகர் அரவிந்தசாமி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். எம்.எல்.ஏ.க்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆலோசனைகள் சொல்லியும் கருத்து வெளியிடுகிறார்.

    கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சசிகலா சென்று இருந்த நிலையில், “நினைவுபடுத்துகிறேன். அவரவர் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களிடம் சொல்லுங்கள். எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்காக பணியாற்றுபவர்” என்று டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார்.

    கூவத்தூரில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்கும்போது, “தனியார் விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பாக காவல் துறையினர் இருக்கலாம். ஆனால் பத்திரிகையாளர்களையும், பொதுமக்களையும் தடுப்பவர்கள் யார்? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.

    “இப்படி அரசியல் கருத்து வெளியிட்டு வருகிறீர்களே.., எதிர்பாராத வகையில் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை மிரட்ட வாய்ப்பு உள்ளதே” என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதில் அளித்த அரவிந்தசாமி, “அதுபற்றி எனக்கு தெரியும். ஆனால் நான் சட்டபூர்வமாகவே கேள்வி எழுப்புகிறேன். இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லவில்லை. 46 வயதாகி விட்டது. என் மூளையில் என்ன தோன்றுகிறதோ அதை பேசுகிற நேரம் இது” என்று கூறியுள்ளார்.
    ‘2.0’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ரஜினிகாந்த் மீண்டும் இதில் பங்கேற்று நடித்து வருகிறார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து 2010-ம் ஆண்டு வெளிவந்து வசூல் குவித்த ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழ் பட உலக வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது. ரூ.300 கோடி செலவில் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இதில் நாயகியாக எமிஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்குகிறார்.

    இதன் முதல் கட்ட படப்பிடிப்பை 2015-ம் ஆண்டு சென்னையில் தொடங்கி இரண்டு வருடங்களாக பல்வேறு இடங்களில் நடத்தி முடித்தார்கள். இடையில் சிறிது இடைவெளி எடுத்து ‘கபாலி’ படத்தையும் ரஜினிகாந்த் முடித்து விட்டார். இந்த நிலையில் கடந்த வருடம் இறுதியில் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அமெரிக்காவில் சிலமாதங்கள் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது.

    ஆனாலும் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் மற்ற நடிகர்-நடிகைகளை வைத்து ஷங்கர் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வந்தார். அக்‌ஷய்குமாரின் மிரட்டலான வில்லத்தன காட்சிகள் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் படமாக்கப்பட்டன. 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் சென்னை நகரையே அரங்காக அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். தினமும் அந்த படப்பிடிப்பு அரங்குக்கு சென்று தன்னுடைய காட்சிகளில் நடித்து விட்டு வந்தார். அதன்பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சிறிது இடைவெளி விட்டு ஓய்வில் இருந்தார்.

    இந்த நிலையில், தற்போது ‘2.0’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கி உள்ளனர். இதில் ரஜினிகாந்த் மீண்டும் பங்கேற்று நடித்து வருகிறார். பலத்த பாதுகாப்புடன் இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது. எந்திர மனிதர்களின் சாகச காட்சிகள், அதிரடி சண்டை காட்சிகள் இங்கு படமாகி வருவதாக கூறப்படுகிறது. 2.0 படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் மும்பையில் விழா நடத்தி ஏற்கனவே வெளியிடப்பட்டது.

    வருகிற தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரைலரை ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
    “நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான். திருமணம் எப்போது? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை” என்று நடிகர் ஜெய் கூறியுள்ளார். இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
    நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும், ‘எங்கேயும் எப்போதும்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். இப்போது, ‘பலூன்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்தபோது, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக பரவலாக பேசப்பட்டது. இதை இருவருமே மறுக்கவில்லை.

    இந்த நிலையில் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக வெளியில் சுற்றுவதாகவும், இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகரித்த நிலையில், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி நடிகர் ஜெய்யிடம் நிருபர் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    “நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பும், புரிதலும் இருந்து வருகிறது. ‘எங்கேயும் எப்போதும்’ படப்பிடிப்பின்போதே இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். எனக்கு அஞ்சலியை பிடித்து இருக்கிறது. அஞ்சலிக்கு என்னை பிடித்து இருக்கிறது.

    அஞ்சலி, மிக மென்மையானவர். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அவர் என்னை அடிக்கடி அடித்துக்கொண்டே இருப்பார். நிஜ வாழ்க்கையில் அவர் அதற்கு நேர்மாறான சுபாவம் கொண்டவர். அந்த மென்மையான சுபாவம்தான் என்னை கவர்ந்தது. அவர் எப்போதாவது வருத்தமாகவோ கோபமாகவோ இருந்தால், தமாஷ் செய்து அவரை நான் சிரிக்க வைத்து விடுவேன். அஞ்சலிக்கு என்னிடம் பிடித்ததே இதுதான்.

    நாங்கள் நல்ல நண்பர்கள் ஆனபின், அஞ்சலி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கிறார். அஞ்சலியின் குணம் எங்க அப்பாவுக்கு பிடித்து இருக்கிறது. அஞ்சலிக்கு நன்றாக சமைக்க வரும். ஐதராபாத் நெய் சோறும், சிக்கன் மசாலாவும் அவருடைய ‘ஸ்பெஷல்.’ அப்பாவுக்கு ருசியாக சமைத்து கொடுக்கிறார்.

    எனக்கு மூன்று அக்காள் இருக்கிறார்கள். அவர்களின் நெருங்கிய சினேகிதி ஆகி விட்டார், அஞ்சலி. நாங்கள் இருவரும் நெருங்கி பழகுவது அக்கா மூன்று பேருக்கும் தெரியும்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காதலர் தினத்தையொட்டி, அஞ்சலிக்கு வாழ்த்து சொல்ல இருக்கிறேன். நான் சென்னையிலும், அஞ்சலி ஐதராபாத்திலும் இருக்கிறோம். அஞ்சலி சென்னையில் இருந்தால் அவருக்கு வாழ்த்து சொல்வதுடன், அவரை கவர்கிற மாதிரி ஒரு பரிசும் கொடுத்து இருப்பேன்.

    எங்கள் திருமணம் எப்போது? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. என்னை விட வயதில் மூத்தவர்களான சிம்பு, ஆர்யா, விஷால் ஆகிய மூன்று பேரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர்கள் மூன்று பேருக்கும் திருமணம் முடிவானதும், எங்கள் திருமணம் நிச்சயிக்கப்படும்.”

    இவ்வாறு ஜெய் கூறினார்.
    ஜெய் நடிக்கும் 'பலூன்' படத்தின் போஸ்டர்களை ஐந்து முன்னணி கதாநாயகர்கள் வெளியிடுகின்றனர். முழுதகவலை கீழே பார்க்கலாம்.
    ஒரு படத்தின்  விளம்பர பணிகளில், தமிழ் கதாநாயகர்கள் அனைவரும்  ஒருத்தருக்கு ஒருத்தர் நட்பின் அடிப்படையில்   உதவியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது  ஜெய் - அஞ்சலி - ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில்  நடித்திருக்கும் 'பலூன்' திரைப்படத்தின் ஐந்து போஸ்டர்களை, தமிழ் திரையுலகை சார்ந்த ஐந்து முன்னணி நட்சத்திர  கதாநாயகர்கள் வெளியிட இருப்பது மேலும் சிறப்பு.  

    '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்'  தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த  'பலூன்' படத்தை சினிஷ்  இயக்கி இருக்கிறார்.

    யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி இருக்கும் 'பலூன்'  படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது  குறிப்பிடத்தக்கது.

    `பலூன்' படத்தின் முதல் போஸ்டரை பிப்ரவரி 15-ஆம் தேதியும், இரண்டாம் போஸ்டரை பிப்ரவரி 16-ஆம் தேதியும், மூன்றாம்  போஸ்டரை 17-ஆம் தேதியும், நான்காம் போஸ்டரை 18-ஆம் தேதியும், இறுதியாக படத்தின் டீசரை பற்றிய ஐந்தாம் போஸ்டரை  பிப்ரவரி 19-ஆம் தேதி அன்றும் வெளியிட உள்ளனர். இந்த ஐந்து போஸ்டர்களையும், தமிழ் திரையுலகை சார்ந்த ஐந்து முன்னணி  நட்சத்திரங்கள் வெளியிடுகின்றனர். இதன்மூலம் நிச்சயமாக எங்களின் 'பலூன்' மேலும் மேலும் உயர பறக்கும் என்று படத்தின்  இயக்குநர் சினிஷ் தெரிவித்துள்ளார்.
    அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘றெக்கை’ படங்களை தயாரித்த காமன்மேன் புரொடக்‌ஷன்ஸ் பி.கணேஷ், இயக்குனர் ரதீந்த்ரன் பிரசாத்  இணைந்து தயாரிக்கும் படம் ‘இது வேதாளம் சொல்லும் கதை’.

    இந்த படத்தில், அஸ்வின் ககமனு, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகன்- நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் குருசோமசுந்தரம்,  ஹாலிவுட் நடிகர் கிரபுரிட்ஜ்,லெஸ்ஸி திரிபாதி, அக்னீஸ்வர் அன்பு, கனிகா குப்தா ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இசை- ஜிப்ரான், ஒளிப்பதிவு-ராபர்டோ சாசாரா,சண்டை பயிற்சி-கிரபுரிட்ஜ்,அசோக், படத்தொகுப்பு-ஆனந்த் கேரளாடின்,  கலை-ராஜ்குமார் கிப்சன், தயாரிப்பு- பி.கணேஷ்,ரதீந்த்ரன் பிரசாத், எழுத்து, இயக்கம்-ரதீந்த்ரன் பிரசாத்.

    “அனை வருக்கும் பரிட்சையமான புராண கதையை அடிப் படையாக கொண்டு ‘இது வேதாளம் சொல்லும் கதை’  எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹாலிவுட் நடிகரும் குத்துச்சண்டை வீரருமான கிரபுரிட்ஜ் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். படத்தின்  சண்டை காட்சிகளையும் வடிவமைத்து இருக்கிறார்.

    இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்ட் சேஸாரா ஒளிப்பதிவு செய்கிறார். பாங்காங்கை சேர்ந்த ஒரு நிறுவனம் விஷுவல் எபக்ட்ஸ்  பண்ணுறாங்க. தாய்லாந்தை சேர்ந்த பாப்சந்த் ருக்ரந்சரித் இந்த படத்தின் அனிமே‌ஷன் பகுதிகளை கவனிக்கிறார்.

    முதல் கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதாராபாத்தில் நடக்கிறது.வித்தியாசமான கதை களத்  துடன் இந்த படம் உருவாகிறது” என்றார்.
    ×