என் மலர்
ராணா டகுபதி நடிப்பில் உருவாகியுள்ள காஸி படம் போர்க்களத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ராணா டகுபதி - டாப்ஸி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காஸி’ படம் உலகம் முழுவதும் வருகிற பிப் 17-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களை தெரிவித்தனர். அப்போது, நடிகர் ராணா டகுபதி கூறும்போது, என்னுடைய சிறுவயது காலங்களில் கேள்விபட்ட காஸி போர் தான் இப்படத்தின் கதை. ‘ப்ளூ ஃபிஸ்’ என்ற புத்தகத்தை எழுதிய இயக்குனர் சங்கல்ப் முதலில் இதை ஒரு குறும்படமாக இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இப்படம் முழுநீள திரைபடமாக தற்போது வெளிவந்துள்ளது.
இப்படமானது விசாகபட்டினத்தில் 71 நாட்கள் நடந்த யாரும் அறிந்திராத கடலுக்கடியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. போர்களத்தில் நமக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இப்படம் பெருமை சேர்க்கும். ஒரு நீர்மூழ்கி கப்பலில் கடலுக்கடியில் வாழும் கடற்படை வீரர்களின் வாழ்க்கையையும், அவர்களின் ஒழுக்கத்தையும் இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம்.
இப்படத்தின் இயக்குனர் சங்கல்ப் பேசுகையில், என்னுடைய முதல் படமே ஒரு சொல்லபடாத உண்மை சம்பவத்தை சொல்வதில் பெருமை கொள்கிறேன். இப்படத்தை நான் இயக்கியதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் என கூறினார்.
இசையமைப்பாளார் கே பேசுகையில், இந்திய திரையுலக வரலாற்றில் இப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு முக்கிய திரைப்படம். முற்றிலும் புதிய களத்தை கொண்டது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனித்தன்மை கொண்ட இப்படம், என் சினிமா வாழ்க்கையில் என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் என கூறினார்.

சுரேஷ் எஸ் குமார் இயக்க உள்ள புதிய படத்தில் டப்மாஷ் புகழ் மிர்னாலினி அறிமுகமாக உள்ளார். அது என்ன படம் என்பதை கீழே பார்க்கலாம்.
இயக்குநர் சசி மற்றும் இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் எஸ் குமார் இயக்கவுள்ள படம் 'நகல்'. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்த 'நகல்' படத்தில் நடிப்பதற்கு சில முன்னணி கதாநாயகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், டப்மாஷ் புகழ் மிர்னாலினி ரவி இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை 'கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ்' சார்பில் மணிகண்டன் சிவதாஸ் தயாரிக்க இருக்கிறார்.
மிர்னாலினி ரவி தனது தனித்துவமான டப்மாஷ்கள் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. டப்மாஷில் அவரது முகபாவமும், அவரது ஒவ்வொரு அசைவுமே ரசிகர்களுக்கு மிர்னாலினி மீதான ஈர்ப்பு அதிகரிக்க காரணம். இந்நிலையில், அவர் `நகல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதால் சிறிய வீடியோவில் மட்டுமே பார்த்த ரசித்த அவரது ரசிகர்கள், இனி வெள்ளித்திரையில் காணலாம்.
நகல் படம் குறித்து இயக்குநர் சுரேஷ்குமார் தெரிவித்ததாவது,
"ஒரு முற்றிலும் தனித்துவமான கதை களத்தோடு தான் நான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அப்படி இருந்து நான் உருவாக்கி இருக்கும் கதை தான் இந்த 'நகல்'. ஒரு பெண்ணின் அமானுஷிய அனுபவங்களை மையமாக கொண்டு தான் எங்களின் 'நகல்' படத்தின் கதை நகரும். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருப்பதால், 'நகல்' படத்தின் கதையை எழுதுவதற்கு சற்று சவாலாகவே இருந்தது.
தனித்துவமான முயற்சியில் முழுக்க முழுக்க திகில் அனுபவங்களை கொடுக்கும் ஒரு திரைப்படமாக 'நகல்' இருந்தாலும், ரசிகர்களை உற்சாகப்படுத்த கூடிய எல்லா சிறப்பம்சங்களையும் இந்த கதையில் உள்ளடக்கி இருக்கின்றேன்.
ஒளிப்பதிவாளர் - பிரசன்னா, இசையமைப்பாளர் - ஆண்டனி ஜார்ஜ், படத்தொகுப்பாளர் - லோகேஷ், கலை இயக்குநர் - ரூபெர்ட், ஸ்டண்ட் மாஸ்டர் - சக்தி சரவணன் மற்றும் டிசைனர் - ஜோசப் ஜாக்சன் என பல திறமை வாய்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த 'நகல்' படத்தில் பணியாற்ற இருக்கின்றனர்.

‘சொப்பன சுந்தரி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மனிஷா யாதவ் தனது காதலரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இப்படத்திற்கு பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய பேர் சொல்லும் படங்களில் நடித்தாலும், மனிஷா யாதவ்வுக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடிப் போனார். அதைத் தொடர்ந்து எந்த படவாய்ப்புகளும் இல்லாததால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த மனிஷா யாதவ், தற்போது தனது காதலரை கரம் பிடித்திருக்கிறார்.
7 வருடங்களாக காதலித்த தனது காதலரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்தேறியுள்ளது. ஆனால், திரையுலக பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் இந்த திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். திரையுலகில் மனிஷா யாதவ்வுக்கு நெருக்கமான சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போதைய சூழல் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என டைரக்டர் அமீர் தெரிவித்தார்.

மதுரையில் டைரக்டர் அமீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பதவிக்காக சண்டை நடந்து வருவதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது. சசிகலாவுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்றால், அவர்கள் ஏன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்? அவர்களின் தொலைபேசிகளும் அணைத்து வைக்கப்பட்டு உள்ளது.
மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்செயலால் வாக்களித்த மக்களை இவர்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள்.
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவர்னரை சந்தித்தபோது, தன்னை ராஜினாமா செய்யுமாறு சசிகலா தரப்பினர் கட்டாயப்படுத்தியதாக ஏன் தெரிவிக்கவில்லை. தற்போதுள்ள அரசியல் சூழல் கடந்த 20 ஆண்டுகள் இல்லாத தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கவண் படத்துக்காக டி.ராஜேந்தர் தனது முழு அர்ப்பணிப்பையும் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘கவண். இதில், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டின், பாண்டியராஜன், விக்ராந்த், அயன் ஆகாஷ், போஸ் வெங்கட், நண்டு ஜகன், பவர் ஸ்டார் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
‘கவண்’ என்ற சொல் உண்டிக் கோலை குறிக்கும். உண்டிக்கோலில் சிறிய கல்லை வைத்து பெரிய பருந்தை வீழ்த்துவதுபோல், இந்த படத்தில் சாதாரண மனிதரான விஜய் சேதுபதி, ஒரு பெரிய விஷயத்தை வீழ்த்த நினைக்கிறார். அதை அவர் எப்படி வீழ்த்துகிறார் என்பதையே திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இப்படத்தில் டி.ராஜேந்தர் பேசும் அடுக்கு மொழி வசனமும் அடங்காத நடிப்பும் ரசிகர்களுக்கு முக்கிய விருந்தாக இருக்கப் போகிறது. மேலும், இந்த படத்திற்காக இவர் கொடுத்த அர்ப்பணிப்பு பலரையும் வியக்க வைத்துள்ளது. இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் வண்ணம் நிறைய விஷயங்களை இந்த படத்தில் அவர் மேற்கொண்டு இருக்கிறார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றி பெற்றதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்றவர்களை வெற்றி விழா கொண்டாட ராகவா லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் ராகவாலாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு தடையை நீக்கியதை அடுத்து, அந்த சந்தோசத்தை வெற்றி விழாவாக மாணவர்கள், இளைஞர்களுடன் கொண்டாட எல்லோருக்கும் ஆசை தான்.
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிகட்டை நேரில் பார்க்க ஊர் மக்களின் அழைப்பை ஏற்று, மெரினாவில் கூடிய மாணவர்கள் இளைஞர்கள் 300 பேருடன் செல்வதாக முடிவு செய்தோம்.
பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் திருவிழா என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாங்களே 40 பேராக குறைத்துக் கொண்டு அலங்காநல்லூர் சென்றோம்.
அலங்காநல்லூரில் இடப் பற்றாக்குறை காரணமாக என்னை மட்டும் அனுமதித்தனர் மற்றவர்களை பிறகு அனுப்புகிறோம் என்று கூறியவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்கு ஊர் மக்கள் மீது எந்த தவறும் இல்லை. ஊர்மக்களின் அளவு கடந்த அன்பிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
இம்மாபெரும் ஜல்லிகட்டு நிகழ்ச்சியை காண முடியவில்லை என்று பல மாணவர்களும் இளைஞர்களும் வருத்தப்பட்டார்கள். கண்கலங்கியும் விட்டார்கள். அதனால் நானும் அவர்களுடன் இணைந்து அங்கிருந்து சென்று விட்டேன்.
மாணவர்களும், இளைஞர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களது வருத்தத்தை போக்க இச்ஜல்லிகட்டு வெற்றியை வரும் பிப்ரவரி 18-ம் நாள் அன்று கொண்டாடலாம் என்று கூறினேன் அவர்களும் சம்மதித்தனர். அப்போது அவர்கள் முகம் மெரினாவில் எழுந்த அலைபேசியின் வெளிச் சத்தைபோல் ஒளிர்ந்தது.
அதனால் இத்திருநாளை வெற்றி விழாவாக எல்லோரும் இணைந்து கொண்டாடுவோம் என நாம் முடிவெடுப்போம்.
நமது சந்தோசக்களம் மெரினாதான் என்றாலும் இன்றைய சூழலில் மெரினா சரியான இடமாக இருக்காது என்பதாலும் மாணவர்கள், இளைஞர்களுடன் கேக் வெட்டி ஏதாவது ஒரு இடத்தில் ஒன்று கூடி கொண்டாட உள்ளோம்.
மற்ற அனைவரையும் இணைப்பது என்பது சிரமம் என்பதால் உலகத்தமிழர்கள் அனைவரும் இருந்த இடத்திலேயே கொண்டாடுங்கள்.
கூலித் தொழிலாளி முதல் தகவல் தொழில்நுட்ப நண்பர்கள் என ஜல்லிகட்டுக்காக குரலெழுப்பிய அனைவரும் இதை வெற்றியாக கொண்டாடுவோம்.
நினைத்ததை சாதித்தோம், சாதித்ததை வரலாறாக மாற்ற கொண்டாடுவோம்.
வருகிற 18-ந்தேதி மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் உலகத்தமிழர்கள் அனைவரும் மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ, உங்கள் அலை பேசியில் டார்ச் அடித்தோ அல்லது மெழுகுவர்த்தி ஏந்தியோ அமைதியாக கொண்டாடுவோம்.
மெரினாவில் பிரகாசித்த வெளிச்சம் மீண்டும் வரும் பிப்ரவரி 18-ஆம் நாள் அன்று மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும். இதை நமது கலாச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாக...
உலகில் எந்த நாட்டிலிருந்தாலும் பிப்ரவரி 18 மாலை 7 மணி கொண்டாட்டதை மறவாதீர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்காக இயக்குனர் கிருத்திகா உதயநிதி மியூசிக் வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
'வணக்கம் சென்னை' படத்தின் வெற்றிக்கு பிறகு, தற்போது சமூதாயத்தில் திருநங்கைகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை மையமாக கொண்டு, 'சதையை மீறி' என்னும் மியூசிக் வீடியோவை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி . கிருத்திகா உதயநிதி இயக்கி, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்த 'சதையை மீறி' மியூசிக் வீடியோவை தயாரிப்பதில் பக்கபலமாய் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விவேக் வேல்முருகனின் வரிகளில் தோன்றி இருக்கும் இந்த 'சதையை மீறி' மியூசிக் வீடியோவில் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவாளராகவும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. இந்த மியூசிக் வீடியோவை நேற்று முன்தினம் இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டார்.
"நம் சமூதாயத்தில் பல ஆண்டு காலமாக வெளிச்சத்திற்கு வராத மிக முக்கியமான பிரச்சனை இது. அவர்கள் நம்மிடம் இருந்து கேட்பது அன்பு ஒன்றை மட்டும் தான். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் புறக்கணிப்பு என்பது மிகப்பெரிய தண்டனையாக இருக்கும்.
அத்தகைய தண்டனையை அனுபவித்து வரும் அவர்களுக்கு நாம் ஏன் நம்முடைய அன்பை பகிர்ந்து கொள்ள கூடாது? 12 திருநங்கைகளின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த 'சதையை மீறி' பாடல், நாம் அனைவரும் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்க உதவும்" என்று கூறுகிறார் கிருத்திகா உதயநிதி.

இளம்பருவ காதல் கதையை மையமாக வைத்து உருவாக உள்ள ‘இடி மின்னல் புயல் காதல்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
வெள்ளைப் பன்றிக்குட்டியை முக்கிய கதாப்பாத்திரமாக்கி அதிநவீன தொழில்நுட்பத்துடன், அமெரிக்க தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து 3-டியில் தயாராகும் படம் ‘ஜெட்லி’.
இந்த படத்தை தயாரிக்கும் சிவாஜி சினிமாஸ் பட நிறுவனம் அடுத்து ‘இடி மின்னல் புயல் காதல்’ என்ற படத்தை தயாரிக்கிறது.
இதில், திராவிடன் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். நாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு- துலீப்குமார். பல படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த இவர் ‘ஜெட்லி’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
இசை-சி.சத்யா, எடிட்டிங்-பால்ராஜ், ஸ்டண்ட் -நரேன், கலை-குருராஜ், தயாரிப்பு - ஜெகன்சாய்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- யோகேந்திரன் மகேஷ் என்ற புதியவர். இவர் இயக்குனர் ஹரியிடம் பல படங்களுக்கு உதவியாளராக இருந்தவர். சிவசண்முகத்திடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
“இளம்பருவ காதல் கதையை யதார்த்தமான திரைக்கதை உத்திகளால் குடும்ப பொழுது போக்குப் படமாக உருவாக்குகிறோம்” என்றார்.

பிரபல கன்னட நடிகை நிவேதிதாவுக்கு கோவா கடற்கரையில் சிலர் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
பிரபல கன்னட நடிகை நிவேதிதா. இவர் தமிழில் போர்க்களம், கதை, மார்க்கண்டேயன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். நிவேதிதாவுக்கும் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் கோவாவுக்கு செல்ல முடிவு எடுத்தனர். காதலரால் உடனடியாக புறப்பட முடியாத நிலை ஏற்பட்டதால் இரண்டு நாட்கள் கழித்து வரும்படி அவரிடம் கூறிவிட்டு நிவேதிதா தனியாக கோவா சென்றார்.
அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். இரவு 9 மணிக்கு கடற்கரையை சுற்றி பார்க்க கிளம்பினார். கடற்கரையில் தனியாக நடந்து சென்ற நிவேதிதாவை குடிபோதையில் இருந்த சில ஆசாமிகள் நோட்டம் விட்டனர். அவர்கள் பின்தொடர்ந்து சென்று கையை பிடித்து இழுத்து செக்ஸ் தொல்லை கொடுத்தனர். ஆபாசமாக பேசியும் கேலி செய்தார்கள்.
அவர்கள் பிடியில் இருந்து தப்பி ஓடிய நிவேதிதா அருகில் இருந்த சிறிய ஓட்டலுக்குள் நுழைந்தார். அங்கும் சிலர் குடிபோதையில் தங்கள் அருகில் வந்து உட்காருமாறு அழைத்து தொல்லை கொடுத்தார்கள். அவர்களிடம் இருந்தும் நிவேதிதா தப்பி ஓடினார். காதலருக்கு போன் செய்து வரவழைத்து உடனேயே கோவாவில் இருந்து கிளம்பி விட்டார். பெங்களூரு திரும்பிய அவர் கோவாவில் மோசமான அனுபவங்களை சந்தித்தேன் என்று மிரட்சியோடு கூறினார்.

“என் மனதுக்கு பிடித்தவரை சந்தித்து விட்டேன்” என்று நடிகை அஞ்சலி கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை கீழே விரிவாக பார்க்கலாம்.
நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி:- சித்தி தகராறு உள்ளிட்ட குடும்ப சச்சரவுகளில் இருந்து மீண்டு விட்டீர்களா?
பதில்:- எந்த வீட்டில் பிரச்சினை இல்லை. சிறுசிறு சண்டை, கருத்து மோதல்கள் எல்லா குடும்பத்திலுமே இருக்கிறது. ஆனால் அவை நிரந்தரம் இல்லை. நடந்ததை நினைத்து வருத்தப்படாமல் வாழ்க்கையை நகர்த்துவதில்தான் சந்தோஷம் இருக்கிறது. நான் இப்போது பழைய விஷயங்களை மறந்து விட்டு உற்சாகமாக இருக்கிறேன்.
கேள்வி:- நீங்கள் ஒருவரிடம் இருந்து கார் பரிசாக பெற்றதாக கிசுகிசுக்கள் வந்துள்ளதே?
பதில்:- இதை கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய காரை பரிசாக வாங்கினேன் என்று பேசுவது அபத்தம். கார் வாங்க கூட வசதி இல்லாமலா இருக்கிறேன். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் படத்தில் ஒரு பாடலுக்கு 48 மணிநேரம் இரவு பகலாக கஷ்டப்பட்டு நடனம் ஆடினேன். சித்ராங்கதம் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் கடும் குளிரில் நடந்தபோது அதிலும் மிகவும் சிரமப்பட்டு நடித்தேன். இப்படி ஒவ்வொரு படத்திலும் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் இருந்துதான் கார் வாங்கி இருக்கிறேன். அதை பரிசு என்று பேசுவது வேதனையாக இருக்கிறது.
கேள்வி:- கதாநாயகிகள் 10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நீடிக்க முடியாது என்பதை உணர்ந்து சம்பாதித்த பணத்தை நகை வியாபாரம், ரியல் எஸ்டேட் என்று முதலீடு செய்கிறார்கள் நீங்கள் எப்படி?
பதில்:- நான் சினிமாவில் அறிமுகமானபோது இவ்வளவு நாட்கள் எனது மார்க்கெட் நிலைத்து இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டமும் கடின உழைப்பும் எனக்கு வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுத்தருகிறது. எனது படங்கள் தோல்வி அடையும்போது வியாபாரத்தில் முதலீடு செய்வேன்.
கேள்வி:- உங்கள் திருமணம் எப்போது?
பதில்:- அதுபற்றி இன்னும் சிந்திக்கவில்லை. நேரம் வரும்போது நடக்கும்.
கேள்வி:- உங்கள் மனதுக்கு பிடித்தவர் எப்படி இருக்க வேண்டும்?
பதில்:- எனக்கு கணவராக வருகிறவருக்கு நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். கவுரவமானவராகவும், நாகரிகமானவராகவும், அழகானவராகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட என்னை வாழ்க்கை முழுவதும் ராணி மாதிரி வைத்துக்கொள்பவரை திருமணம் செய்து கொள்வேன்
கேள்வி:- நீங்கள் சொன்ன இந்த லட்சணம் உள்ள இளைஞரை சந்தித்து விட்டீர்களா?
பதில்:- சந்தித்து விட்டேன். ஆனால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு இன்னும் வரவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள `கவண்' படத்தில் பாரதியார் பாட்டு ஒன்று இடம்பெற்றுள்ளது. அது என்ன பாடல் என்பதை கீழே பார்க்கலாம்.
கே.வி.ஆனந்த்-விஜய் சேதுபதி முதன்முறையாக இணையும் படம் `கவண்'. கடந்த ஆண்டு தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் சேதுபதி `கவண்' படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
அவரது அடுக்குமொழி வசனமும் அடங்காத நடிப்பும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையப்போகிறது. குறிப்பாக விஜய் சேதுபதி - டி.ஆர் இருவரும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் அரங்கை அதிரவைக்கும் என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் நடிகர் பாண்டியராஜன், விக்ராந்த், அயன் ஆகாஷ், நண்டு ஜெகன், பவர் ஸ்டார், போஸ் வெங்கட் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசையில் ஹேப்பி நியூஇயர் பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், மற்ற பாடல்கள் இன்று அதிகாலை வெளியாகியுள்ளது. இதில் மகாகவி பாரதியாரின் "பாயும் ஒளி நீ எனக்கு" என்ற ஒருபாடலும் அடங்கும். இப்பாடலின் காட்சிகள் அதிகபொருட்செலவில் வண்ணமயமாக படமாக்கப்பட்டிருக்கிறதாம்.
இப்படத்தை கல்பாத்தி எஸ்.அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டைன்மண்ட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படத்தை மார்ச் 24 அல்லது 31 தேதிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. அபிமானியாக இருந்த டைரக்டரும், நடிகருமான டைரக்டர் பாக்யராஜ் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வேண்டுகோள் விடுத்து கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.
அ.தி.மு.க. அபிமானியாக இருந்த டைரக்டரும், நடிகருமான டைரக்டர் பாக்யராஜ் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வேண்டுகோள் விடுத்து கருத்து வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட கருத்து வருமாறு:-
எம்.எல்.ஏ.க்கள் நமக்கு ஒரு ஆள் ‘சீட்’ (எம்.எல்.ஏ.) வாங்கி கொடுக்கிறாங்க? அல்லது ஒரு குடும்பம் சீட் வாங்கி தருகிறது என்று சொன்னால் அந்த குடும்பத்துக்கு கடைசிவரை விசுவாசமாக இருக்கணும் என்று நினைக்கிறார்கள் என்றால் தப்பே இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஓட்டு போட்ட எத்தனையோ குடும்பங்கள் இருக்கிறது. அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம் தானே. எனவே ஆங்காங்கே ஒழிந்து கொண்டு, மறைந்து கொண்டு நான் சுதந்திரமாக தான் இருக்கிறேன் என்று சொல்வதைவிட்டு விடுங்கள். தொகுதிக்கு சென்று மக்கள் கருத்தை கேட்டு அதன்படி முடிவு எடுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.