என் மலர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள `விஜய் 61' படத்தில் அவர் ஏற்கவுள்ள கதாபாத்திரம் குறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய், அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் கதாநாயகிகளாக ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வைகைப்புயல் வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒரு பகுதி 80-களில் நடப்பது போன்று எடுக்கப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தயாராகி வரும் இப்படத்தில், ஒரு கதாபாத்திரத்தில் விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக அட்லி இயக்கிய `தெறி' படத்தில் விஜய் ஸ்டைலிஷ் போலீசாக நடித்திருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், `விஜய் 61' படத்திலும் விஜய் போலீஸ் கெட்டப்பில் நடிப்பதாக வந்துள்ள தகவலால் இப்படத்திலும் விஜய் ரசிகர்களுக்கு பிரம்மாண்ட விருந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு முன்னதாக விஜய் `போக்கிரி', `ஜில்லா', `தெறி' படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரிக்கிறது.

பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என 5 முதல்வர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றவர், நடிகர் விஜயகுமார்.

காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் சென்னையில் நாடகங்களில் நடித்து வந்த விஜயகுமார் அவரை சந்தித்து அவரது அன்பை பெற்றார்.
அதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-
"அப்போது சிவாஜி மன்றத்தில் செயலாளர் பொறுப்பில் இருந்த பல்ராம் எனது நண்பர். எனவே நாடகத்தில் நடித்தபடி சினிமா வாய்ப்புக்காக முயன்று கொண்டிருந்த அந்த நாட்களில் பல்ராமுடன் சேர்ந்து சென்னை திருமலைப்பிள்ளை ரோட்டில் உள்ள பெருந்தலைவர் வீட்டுக்குப்போவது வழக்கம். தன்னை சந்திக்க வருபவர்களை அவர் சந்திப்பதே தனி அழகு. "வாங்க! என்ன விஷயம்ண்ணேன்?'' என்பார். வந்தவர்கள் கேட்கும் கோரிக்கையில் நியாயம் இருந்தால் உடனே "இதுபற்றி அதிகாரிகளிடம் பேசுகிறேன்'' என்பார். முகஸ்துதியை அறவே விரும்பாதவர். யாராவது வந்த விஷயத்தை விட்டு விட்டு, புகழாரத்தை தொடங்கினால் "விஷயத்துக்கு வாங்கண்ணேன்'' என்று கூறி விடுவார்.
ஒருமுறை தென்மாவட்ட ஊரில் இருந்து வந்த ஒருவர் பெருந்தலைவரிடம், "நீங்கள் எங்கள் இல்லத் திருமணத்துக்கு வந்தாக வேண்டும்'' என்று அடம் பிடித்தார். பெருந்தலைவர் சொல்லிப் பார்த்தார். வந்தவர் கேட்பதாக இல்லை. தலைவருக்கு அப்போது கோபம் வந்துவிட்டது. "ஒரு முதல்-அமைச்சருக்கு வேறு வேலையே இல்லைன்னு நினைச்சீராங்காணும்?'' என்று ஒரு போடு போட்டார். வந்தவர் ஓடியே போய்விட்டார். அவர் போன பிறகு எங்களிடம், "உண்மையை சொல்லணும்ணேன். வரேன்னு சொல்லிட்டுத்தான் போகாம இருந்துடக் கூடாதுண்ணேன்'' என்றார்.
அந்த நேரத்தில் மூத்த தலைவர்கள் பதவி விலகி கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை நேருவிடம் கொடுத்ததுடன், முதல் ஆளாக முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, கட்சிப்பணியில் இறங்கினார். இதனாலும் எனக்கு அவர் மீது அபரிமித மரியாதை.
ஆரம்பத்தில், சிவாஜி மன்றத்தில் இருந்து வருபவனாக எண்ணிக் கொண்டாலும், போகப்போக என் நடிக்கும் ஆர்வத்தையும் தெரிந்து கொண்டார். "எதைச் செய்தாலும் அதை சரியா செய்யணும்ணேன்'' என்பார். நான் சினிமாவுக்கு வந்த பிறகு, அவர் சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொண்டேன்.
என் உறவினர் பிரம்மநாயகம் மூலமாகத்தான் அண்ணாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்காக நடிக்க சிபாரிசு செய்தவர் என்ற முறையில் அன்றே டாக்டர் கலைஞர் மீது எனக்கு மரியாதை உண்டு.
நான் நடிகனான பிறகு, என் மீது தனி அக்கறை கொண்டிருந்தவர் அண்ணன் எம்.ஜி.ஆர். தனியாக கட்சி ஆரம்பித்த அவர், ஆட்சி அரியணையில் ஏறிய
2 வாரம் கழித்து அவரது தோட்டத்துக்கு போயிருந்தேன். என்னுடன் காலை டிபன் முடித்தவர், "முதல்-அமைச்சர் பதவி என்பது எத்தனை பெரிய பொறுப்பு தெரியுமா? வேலையும் அதிகம். அதே நேரத்தில், பவரும் அதிகம்'' என்றார்.
இப்படிச் சொன்னதோடு நின்றுவிடாமல், தனது பிரத்தியேக அறை ஒன்றை திறக்கச் செய்தார். அந்த அறை முழுக்க பைல்கள் நிரம்பியிருந்தன. "இத்தனை பைல்களையும் நான் இரவு பகலாக படித்துப் பார்த்து கையெழுத்து போடவேண்டும். எல்லாமே என்னை இந்த ஆட்சி பீடத்தில் அமர வைத்த மக்களின் நல்வாழ்வு சம்பந்தப்பட்டவை. எனவே, நிதானமாக படித்துப் பார்த்து அதற்கான துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் பெற்ற பிறகே ஓ.கே. செய்கிறேன்'' என்றார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு சில நாள் கழித்து சிவாஜி சாரை பார்க்க அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சிவாஜி சார் வீட்டுக்கு போவதுண்டு. அதுமாதிரி அன்றும் போனபோது, சிவாஜி சார் முகத்தில் விவரிக்க முடியாத ஒரு சோகம்.
"அண்ணே! ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?'' என்று கேட்டேன்.
"வேறொன்றுமில்ல விஜயா! நம்ம சாந்தியின் (சிவாஜியின் மகள்) நாகப்பட்டின வீட்டில் ஒருத்தன் வாடகைக்கு இருந்தான். அவனோட நடவடிக்கை பிடிக்காமல் வீட்டை காலி பண்ணச் சொன்னப்போ, பேருக்கு இரண்டொரு தலையணை, பாயை மட்டும் வெச்சிட்டு வீட்டை பூட்டிவிட்டு, சாவியுடன் போய்விட்டான். இப்போது, கேஸ் போடுவேன்னு சொல்லி டென்ஷன் பண்றானாம்'' என்றார், சிவாஜி.
"அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கிட்ட இதுபற்றி எதுவும் சொன்னீங்களா?'' என்று கேட்டேன்.
"அண்ணன் இப்ப முதல்-அமைச்சர். எவ்வளவோ வேலை இருக்கும். அவரை எதுக்கு தொந்தரவு பண்ணணும்?'' என்றார்.
"இல்லண்ணே! இதையெல்லாம் உரிமையோட அவர்கிட்ட சொல்லலாம்'' என்றேன். அதோடு நில்லாமல் நானே எம்.ஜி.ஆர். அண்ணனின் பர்சனல் போனில் அவருடன் தொடர்பு கொண்டேன். அவரே போனை எடுத்துப் பேசினார். சிவாஜி சாரின் கவலையை சொன்னேன்.
என்னிடம் முழு விஷயமும் கேட்டுத் தெரிந்து கொண்டவர், "தம்பி (சிவாஜி) பக்கத்துல இருக்காரா?'' என்றார். "ஆமாண்ணே'' என்றேன். கொடுக்கச் சொன்னார். "ஏன் தம்பி! இவ்வளவு நடந்திருக்கு. என்கிட்ட சொல்றதுக்கென்ன?'' என்றவர், "சரி! ஒரு 20 நிமிஷத்தில திரும்பவும் போன்ல வரேன்'' என்று சொல்லி வைத்து விட்டார்.
சரியாக 15 நிமிடத்தில் மறுபடியும் அண்ணனே பேசினார். "அந்த வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு, புது பூட்டு போட்டு பூட்டியாகிவிட்டது. இனி பிரச்சினை இருக்காது'' என்றார். சிவாஜி சாரும் மனமுருக நன்றி சொன்னார்.
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
நடிகை ஒருவர் தனது கணவரை கழட்டிவிட்டு நண்பருடன் எல்லை மீறி நடந்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
பட்டதாரி நடிகை, இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். யார் கண் பட்டதோ, இந்த காதல் ஜோடியின் காதல் திருமணம் ஒரு வருடம் முடிவதற்குள்ளேயே கசந்து போனது. இந்நிலையில், இருவரும் தற்போது பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
கணவருடனான பிரிவுக்கு பிறகு பட்டதாரி நடிகை தற்போது சுதந்திரமாக வலம் வருகிறாராம். எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாததால் வெளிநாடுகளுக்கு சென்று தனது நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறாராம். அப்படி ஒரு ஆண் நண்பருடன் இவர் எல்லை மீறி நடந்துகொண்டதுபோல் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆண் நண்பரின் கன்னத்தில் நடிகை முத்தம் கொடுப்பதுபோன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சினிமாவில் நடிகர்களுடன் நெருங்கி நடிக்கும் நடிகைகளுக்கு இது பெரிய விஷயம் இல்லையென்றாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வாறு நடிகை எல்லை மீறி, எல்லோருக்கும் வெளிப்படையாக தெரியும்படி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

‘ரிங்ஸ்’ என்ற பெயரில் திரில்லர் படமாக ஏற்கெனவே வெளிவந்த இரண்டு பாகங்களை தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகம் வெளிவந்திருக்கிறது. இந்த படம் எப்படி திரில்லராக இருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
ரிங்ஸ் என்ற வீடியோவை பார்த்தவர்கள் அடுத்த 7 நாட்களுக்குள் இறந்துவிடுகிறார்கள். அந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு இது ஒரு சாபமாக ஆகிவிடுகிறது. இந்த சாபத்தில் இருந்து அவர்கள் விடுபடவேண்டுமென்றால், அந்த வீடியோவை பார்த்தவர் ஒரு காப்பி எடுத்து, அதை இன்னொருவரை பார்க்க வைக்க வேண்டும். இதுதான் படத்தின் கதைக்கரு.
படத்தோட நாயகன் ஜானி காலெக்கியும், ஏமி தெக்கார்டியனும் நெருங்கிய காதலர்கள். இந்நிலையில், ஒருநாள் ஜானி படிப்பதற்காக ஏமியை பிரிந்து வெளியூர் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கு சென்ற நிலையிலும், தினமும் தனது காதலியிடம் ஜானி வீடியோ மூலம் பேசிக் கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில், ஜானி படிக்கும் ஊரில் ஒரு பேராசிரியர் இருக்கிறார். அவருக்கு ரிங்ஸ் சம்பந்தமான வீடியோ ஒன்று கிடைக்கிறது. அந்த வீடியோவால் அவர் பாதிக்கப்படுகிறார். அதிலிருந்து அவர் தப்பிப்பதற்காக ஒவ்வொரு காப்பியாக எடுத்து வெளியிட்டு வருகிறார். இதில் ஜானியும் சிக்கிவிடுகிறார். இதன்பின்னர், தன்னுடன் தொடர்பில்லாமல் இருக்கும் ஜானியை தேடி ஏமி வருகிறாள்.
இறுதியில், அவள் தனது காதலனை கண்டுபிடித்தாளா? தனது காதலனை பிடித்திருக்கும் சாபத்திலிருந்து அவனை மீட்டாளா? என்பதே மீதிக்கதை.
ஏற்கெனவே, இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் இந்த பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஓரளவுக்கு திருப்திப்படுத்தியிருக்கிறது. படத்தில் பெரும்பாலான காட்சிகள் திரில்லை கொடுக்காவிட்டாலும், ஒன்றிரண்டு காட்சிகள் கண்டிப்பாக திரில்லை கொடுத்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
தனது காதலனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்குவதற்காக ஹீரோயின் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு டுவிஸ்டுகள் அவிழ்க்கப்படும். அந்த காட்சிகள் எல்லாம் ரொம்பவும் சுவாரஸ்யமாகவும், திரில்லாகவும் இருக்கும். படத்தின் கதாநாயகன், கதாநாயகியை பொறுத்தவரை ரெண்டு பேரும் ரொம்பவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் பேயை பார்த்து நடுங்கும்போது நமக்கும் பயம் வருகிறது.
மேலும், இந்த படத்தில் கிராபிக்ஸ் பணிகள் ரொம்பவும் கவனிக்கப்பட வேண்டியவை. பேய் வரும் காட்சிகள் கிராபிக்ஸில் உருவாக்கியிருந்தாலும், அதை மிகவும் நேர்த்தியாக செய்திருப்பது சிறப்பு. டிவியில் இருந்து பேய் வரும் காட்சிகளில் எல்லாம் நம்மை உண்மையிலேயே நடுநடுங்க வைத்திருக்கிறார்கள்.
ஷாரோயின் மியரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரொம்பவும் தத்ரூபமாக படமாகியிருக்கின்றன. ஒவ்வொரு இடத்தில் இவருடைய ஒளிப்பதிவு கிராபிக்ஸையும் தாண்டி படமாகியிருப்பது சிறப்பு. மாத்தேவ் மார்கேசன் பின்னணி இசை படத்திற்கு மேலும் திரில்லிங்கை கொடுத்திருக்கிறது. படத்தில் இருக்கும் சிறிய பொருளில் வரும் சத்தத்தை வைத்தே நமக்கு திரில் கொடுக்கும் வித்தையை கற்று வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘ரிங்ஸ்’ பயமுறுத்துகிறது.

பாகுபலிக்காக தனது உடலை வருத்திக் கொண்ட ராணா, தற்போது காஸி படத்துக்காகவும் உடலை வருத்திக் கொண்ட சம்பவம் வெளிவந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
ராணா நடிப்பில் வருகிற பிப் 17-ந் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘காஸி’. இப்படம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டு, தற்போத தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவரவிருக்கிறது. இப்படம் 1971-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பலான பி.என்.எஸ்.காஸி இந்திய ராணுவத்தால் மூழ்கடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது.
இப்படத்தில் ராணாவுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருக்கிறார். மேலும், கே.கே.மேனன், அதுல் குல்கர்னி, ரகுல் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை சங்கல்ப் இயக்கியுள்ளார். மறைந்த பாலிவுட் நடிகர் ஓம் பூரி நடித்த கடைசி படமும் இதுதான். மதி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ராணா கப்பற்படை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த வேடத்திற்காக ராணா, ரொம்பவும் கஷ்டப்பட்டதாக ஒரு செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் தொடங்கிய சமயத்தில் ராணா, பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார். அந்த பாகத்தில் இவர் கரடு முரடாக தெரியவேண்டும் என்பதற்காக, தனது உடல் எடையை அதிகரித்து, ரொம்பவும் கட்டுமஸ்தான உடற்கட்டுக்கு கொண்டு வந்தார். அந்த உடற்கட்டுடன் இவர் எடுத்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரொம்பவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில், காஸி படத்தில் ராணா டகுபதியின் தோற்றம் அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, ராணா இப்படத்தில் தனது தோற்றத்தை குறைப்பதற்காக சுமார் 2 மாதங்கள் சைவ உணவு மட்டுமே எடுத்துக் கொண்டாராம். அதுமட்டுமில்லாமல், முழு நேரமும் ஜிம்மே கதியென்று கிடந்து தனது உடல் எடையை குறைத்துள்ளார். மேலும், இப்படம் முழுக்க முழுக்க கடலுக்குள்ளேயே படமாக்க வேண்டியிருந்ததால், ஆழ்கடல் நீச்சலை பிரத்யேகமாக கற்று இப்படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறுகின்றனர்.
ராணாவின் இந்த முயற்சி அவருக்கு நிச்சயம் கைகொடுக்கும் என்று பல்வேறு தரப்பிலும் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும், அது ரசிகர்களை எந்தளவுக்கு சென்றடையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நட்சத்திர பேச்சாளரும், நடிகருமான மனோபாலா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
தமிழகத்தில் ஆட்சியமைப்பது யார் என்பதில் குழப்ப நிலை நீடிக்கும் நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் படையெடுத்த வண்ணம் இருக்கும் நிலையில், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களான ராமராஜன், தியாகு ஆகியோரும் தங்களது ஆதரவை ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மற்றொரு நட்சத்திர பேச்சாளரான மனோபாலாவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவை நேரில் சென்று தெரிவித்தார். அப்போது அவர் பேசும்போது, ஒரு தியானம் கலைந்தது. தமிழகம் நிமிர்ந்தது. என்னைக்கு அண்ணன் வாயைத்திறக்கப் போகிறார் என்று காத்திருந்தேன். அம்மாவின் சமாதியில் தியானத்தில் இருந்து அவர் எப்போது கலைந்து எழுந்தாரோ, அன்று இரவே தமிழகம் முழுவதும் விழித்துக் கொண்டது.
மாண்புமிகு அம்மாவின் புகழை பரப்புவதற்காக ஒவ்வொரு தொகுதியிலும், அவரது திட்டங்களை சொல்லி பிரச்சாரம் செய்துள்ளோம். இப்போதுள்ள சூழ்நிலையில் என்ன முடிவு எடுக்கவேண்டுமோ? அதை யோசித்து சரியான முடிவை எடுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
இங்கே, வந்தது சிலபேர்தான் என்றாலும், வராதவர்களின் எண்ணங்கள் எல்லாம் இங்கே வரவேண்டும் என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் இன்றைய முதல்வராக மட்டுமில்லாமல் நாளையும் அவர் முதல்வராக ஆவது உறுதி. அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த தமிழகம் காலரை தூக்கிவிட்டு நடக்கலாம் என்றார்.

ஏழு வருடங்களுக்குப் பிறகு துபாயில் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
கடந்த 1998-ம் ஆண்டு அமீரகத்தில் ஏ.ஆர்.ரகுமான் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார். தற்போது ஏழு வருடங்களுக்குப் பிறகு ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி வரும் மார்ச் 17-ஆம் தேதி ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளப் பண்பலை 99.6 மற்றும் மலையாள நாளிதழ் மாத்ருபூமி செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு நிகழ்வு பிப்ரவரி 8-ஆம் தேதி 'தூசிட் தானி' என்ற ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து நடைபெற்றது.
ஆஸ்கார் வெற்றி நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், 1998-ஆம் வருடத்தில் அமீரகத்தில் தான் நிகழ்த்திய தனது முதல் இசை நிகழ்ச்சியைப் பல துபாய் வாசிகள் இன்னும் நினைவில் வைத்துக் கொண்டு ‘நான் உங்களது முதல் துபாய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியும் அப்படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஏ.ஆர்.ரகுமான் முதல் டிக்கெட்டை வெளியிட அதனை மலபார் கோல்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாம்லால் பெற்றுக் கொண்டார். மார்ச் 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இசை சாதனையாளர் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் அவர் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பிரபலமான பாடல்களை மிகப்பெரிய இசைக்குழுவினருடன் ஏ.ஆர்.ரகுமானோடு இணைந்து பிரபல பின்னணி பாடகர்கள் பாடகியர்கள் பாடவுள்ளனர்.
இசைப்புயலின் இசை வெள்ளத்தில் மூழ்க டிக்கெட்டுகளை http://platinumlist.net வாங்கலாம். மேலும் விபரங்களுக்கு 04-4562240 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

நடிகர் சங்கத்தின் நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு நடிகர் சங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், சங்கத்தில் உறுப்பினர்களான துணை நடிகர்களுக்கு வேலை வழங்கவில்லை என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்க உறுப்பினர்கள் வாராகி, சங்கையா தலைமையில் சங்க உறுப்பினர்கள் சிலர் சென்னையில் அமைந்துள்ள நடிகர் சங்க அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடிகர் சங்கம் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவர் மீதும் பொய்யான தகவல்களை பரப்புவதாக புகார் அளிக்கப்பட்டது. மேலும், அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கவும் செய்தனர்.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர், தற்போது வாராகி, சங்கையா ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகவும், தங்களை மறுபடியும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளும்படி இன்று நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷாலிடம் கோரிக்கை மனு வைத்துள்ளனர்.
அதன்படி, அவர்கள் அனைவரும் மீண்டும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வாராகி, சங்கையா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் 22 உறுப்பினர்கள் நடிகர் சங்கத்தின் மீதும், நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மீதும் பொய்யான, அவதூறான குற்றச்சாட்டுக்களைப் பரப்பினார்கள். நடிகர் சங்கத்தின் முன்னால் வந்து நின்று கோஷமிட்டார்கள். அவர்களிடம் பொய்யான கையெழுத்து வாங்கி நீதிமன்றத்தில் வழக்கை வாராகி தொடர்ந்துள்ளார்.
அதை அறிந்த அவர்கள் நாங்கள் இதை செய்யவில்லை. எங்களிடம் அவர்கள் தவறாக கையெழுத்து வாங்கியுள்ளார்கள். நாங்கள் நிர்வாகிகளுக்கும், நிர்வாகத்திற்கும் எதிராக அவர்களுடைய தூண்டுதலின் பேரில் தான் சத்தம் போட்டோம். நாங்கள் நிர்வாகிகள் மீதோ, அல்லது நிர்வாகத்தின் மீதேது எந்தவித வழக்கும் கொடுக்கவில்லை. எங்களை மன்னித்தும் திரும்பவும் நடிகர் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளும்படி நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரிடம் கடிதத்தை அவர்கள் கொடுத்தனர்.
அதுகுறித்து இன்று நடந்த நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் விவாதித்து அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வாராகி அவர்கள் தூண்டுதலால் தொடரப்பட்ட பொய்யான வழக்கிலிருந்து அவர்களை விடுவிக்குமாறு கையொப்பமிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு: அம்பிகா, ஜெயந்தி, மல்லிகா, மலர்கொடி, தேவி, உஷா, சந்தியா, ராஜாமணி.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற பார்த்திபன், அங்கு கவலையுடன் நின்று சில விஷயங்களை யோசித்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களை கண்டு பார்த்திபன் மிகுந்த வேதனையடைந்துள்ளார். இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முதன்முறையாக சென்ற பார்த்திபன், அங்கு நின்றுகொண்டு சில விஷயங்களை பற்றி யோசித்துள்ளார். தன்னுடைய யோசனையில் உதித்த விஷயங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
முதன்முறையாக மறைந்த முதல்வர் சமாதிக்கு சென்றேன். தியானிக்க அல்ல.... ஜீரணிக்க!
மரணத்தின் மர்மம், மூன்றெழுத்துக்காரரின் 75 நாள் மௌனத்தின் மர்மம், அரசியல் அதர்மங்கள், ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள், ரிமோட்டாய் கோடிகள், நடப்பவை நடந்தவை விளங்காமல் கலங்கரை விளக்கத்திலிருந்து நடந்து சென்றேன்.
கட்சிகளின் கல்மிஷங்கள் இல்லாத எம்.ஜி.ஆரின் விசுவாசிகள், அதிமுக தொண்டர்கள், அறியா பொது ஜனங்கள் அணையா தீபங்களாய் அங்கே ஒளியூட்டல்! அம்மா என்றழைக்கப்பட்டவரின் ஆன்மா என்ன நினைக்கும்? எனக்கும் அவருக்குமான சில சந்திப்புகளும் சம்பாஷைனைகளும் வந்து போயின நினைவில்!
நம்பிக்கை துரோகமும், துரோகிகளின் நம்பிக்கையும் எதுவுமே சகிக்கல! திருமதி சசிகலாவோ, திருமிகு.ஓ.பி.பன்னீர்செல்வமோ ஆட்சியமைப்பது சட்ட பூர்வமேயாகையால் சட்டு புட்டுன்னு சட்டசபைக்கு வந்து மக்கள் பணி பாருங்கள்! எம்மக்கள் திருந்திவிட்டார்கள்! மறு தேர்தலை சந்திக்க வாருங்கள்! நோட்டுக்காக அல்ல, நாட்டுக்காகவே ஓட்டு!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெங்கட்G.சாமி இயக்கத்தில் `கண்டேன் காதல் கொண்டேன்' படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
கிரியேட்டிவ் டீம்ஸ் ப்ரெசென்ட்ஸ் E.R ஆனந்தன் தயாரித்திருக்கும் திரைப்படம் "கண்டேன் காதல் கொண்டேன் ". இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் வெங்கட்G.சாமி. இத்திரைப்படத்தில் சன்மியூசிக் புகழ் பாலா கதாநாயகனாகவும், அஷ்வினி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் மயில்சாமி, "பத்திரகாளி" ராஜசேகர், "சூதுகவ்வும்" ராதா,கே.ஸ் பழனி, கிங்ஸ் A.மோகன் , கிச்சா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நாகா, ஒளிப்பதிவு செய்கிறார் சுரேஷ் தேவன்.
இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது,
கதைப்படி நாயகன்,நாயகி இருவரும் பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றனர்.இருவரும் சிறிது காலம் தனியாக சேர்ந்து வாழலாம்,இத்தைகைய வாழ்க்கை பிடித்தால் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொண்டு வாழலாம் என்று முடிவெடுக்கின்றனர். இதற்காக ஊரை விட்டு வெளியேறி தனியாக நவீன கால முறைப்படி வாழ்கின்றனர்.ஆனால் பின்னர்தான் தெரியவருகின்றது இவர்கள் இருவரும் வெவ்வேறு மனநிலை கொண்டவர்கள் என்று.
அதே நேரம் இவர்களின் காதலால் இவர்களின் குடும்பங்களிலும் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் இவர்கள் இருவருக்கும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வீடு திரும்புகின்றனர், வீட்டிலும் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்களா? பின்னர் அவர்களின் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கின்றது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்லியிருக்கின்றோம், இத்திரைப்படம் விரைவில் திரைக்குவரவிருக்கிறது.
நடிகர், நடிகைகள்: பாலா, அஷ்வினி, மயில் சாமி, "பத்திரகாளி" ராஜசேகர், "சூதுகவ்வும்" ராதா, கே.ஸ் பழனி, கிங்ஸ் A.மோகன், கிச்சா மற்றும் பலர்
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் - கிரியேட்டிவ் டீம்ஸ்
தயாரிப்பாளர் - E R ஆனந்தன்
இயக்குனர் - வெங்கட் G சாமி
ஒளிப்பதிவாளர் - சுரேஷ் தேவன்
இசை - நாகா
எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ்
ஆர்ட் - ஷிவா யாதவ்
வரிகள் - மோகனராஜன் /சாரதி /வெங்கட்.G
நடனம் - தீனா /பாப்பி
PRODUCTION EXCUTIVE - சாம் V.ஞானராஜ்
DI - PRISM AND PIXL

நடிகர் விஜயகுமார் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'', "மணிப்பூர் மாமியார்'' என்று 2 படங்களில் ஜெயலலிதாவுடன் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே பாதியில் நின்றுவிட்டன.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் விஜயகுமார், அன்றைய முன்னணி ஹீரோயின்கள் அனைவருடனும் இணைந்து நடித்தார்.
அப்போது படங்களில் நடிப்பதில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த ஜெயலலிதா, 2 படங்களில் நடிக்க வந்த அழைப்பை ஏற்றார். 2 படத்திலுமே அவருக்கு விஜயகுமார் ஜோடியாக நடித்தார். துரதிருஷ்டவசமாக அந்தப் படங்கள் திரையை எட்டிப் பார்க்காமலே போய்விட்டன.
அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-
"நான் மிகவும் மதிக்கும் ஒரு கலைஞராக மேடம் ஜெயலலிதா இருந்தார். அப்போது அவர் சில காலம் நடிப்புலகை விட்டு ஒதுங்கியிருந்தார். பிரபல எழுத்தாளர் மகரிஷியின் `நதியைத் தேடி வந்த கடல்' நாவலை படமாக்க முடிவு செய்தனர். இதில் சரத்பாபு நாயகன். ஜெயலலிதா நாயகி.
இதே நேரத்தில் டைரக்டர் பாலகிருஷ்ணன் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'' என்ற படத்தை இயக்க இருந்தார். இந்தப் படத்தில் ஹீரோவாக என்னை ஒப்பந்தம் செய்தார். படத்தில் எனக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிப்பார் என்றார்கள். இதற்கு முன் அவருடன் நான் எந்த படத்திலும் சேர்ந்து நடித்ததில்லை.
இதே நேரத்தில் டைரக்டர் வி.சி.குகநாதன் "மணிப்பூர் மாமியார்'' என்றொரு படம் இயக்க வந்தார். இதிலும் நானும் மேடம் ஜெயலலிதாவும்தான் ஜோடி.
மேடத்தை நான் செட்டில் பார்க்கும்போதே, அவரது பண்பையும், அறிவாற்றலையும் புரிந்து கொண்டேன்.
அவருக்கான காட்சி முடிந்ததும் நாற்காலியில் அமர்ந்து ஏதாவது படித்துக் கொண்டிருப்பார். சென்னையில் உள்ள முருகாலயா ஸ்டூடியோவில் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'' படப்பிடிப்பு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. இந்த 10 நாட்களிலும் எதையும் அளந்து பேசும் அவரது பண்பும், விஷயங்களை அறிவுபூர்வமாக விவாதிக்கும் ஆற்றலும் என்னை பெரிதும் வியக்க வைத்தன.
அது 1978-ம் வருடம். அந்த நாட்களில் சிங்கப்பூர் போவதென்பது ரொம்பவும் அபூர்வ விஷயம். போகிறோம் என்று தெரிந்தாலே நட்பு வட்டமும், உறவினர்களும் `எனக்கு அது வாங்கி வாருங்கள், இது வாங்கி வாருங்கள்' என்று பெரிய லிஸ்ட்டை கொடுத்து விடுவார்கள்.
"மாற்றான் தோட்டத்து மல்லிகை'' படப்பிடிப்பு நடந்த நேரத்தில் நான் சிங்கப்பூருக்கு போய்வர இருந்தேன். படப்பிடிப்பில் இருந்த பலரும் அவரவருக்கு தேவையான லிஸ்ட்டை கொடுத்தார்கள். மேடம் மட்டும் எதுவும் சொல்லவில்லை. நானாக அவரிடம் போய், "மேடம்! சிங்கப்பூரில் உங்களுக்கு ஏதாவது வாங்கிவர வேண்டுமானால் சொல்லுங்கள்'' என்று கேட்டேன். அவரோ, "கேட்டதற்கு நன்றி. எதுவும் வேண்டாம்'' என்று ஒற்றை வரியில் முடித்து விட்டார்.
என்றாலும் நான் விடவில்லை. "எல்லாரும் லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் விரும்பியதை வாங்கி வருவது எனக்கு சிரமமான காரியம் அல்ல. உங்களுக்கு ஏதாவது வாங்கிவர வேண்டுமானால் தயங்காமல் சொல்லுங்கள் மேடம்'' என்றேன்.
நான் இப்படி வேண்டி விரும்பி கேட்ட பிறகே அவர், "சிங்கப்பூரில் `கிட்காட்' சாக்லெட் கிடைத்தால் வாங்கி வாருங்கள்'' என்றார்.
சிங்கப்பூரில் போன வேலையை முடித்து விட்டு ஷாப்பிங் செய்தால், மேடம் கேட்ட `கிட்காட்' சாக்லெட் மட்டும் `கிடைப்பேனா' என்கிற மாதிரி என்னை அலையவைத்தது. கடைசியில் அலைந்து திரிந்து தேடியதில், ஒரு ஷாப்பிங் மார்க்கெட்டில் அந்த சாக்லெட் கிடைத்தே விட்டது.
இருந்ததில் பெரிய பாக்ஸாக வாங்கிக் கொண்டு விமானத்தில் வந்தேன். சென்னை வந்ததும் மேடத்தின் வீட்டுக்கு அந்த சாக்லெட் பாக்சை கொடுத்தனுப்பினேன். கிடைத்த சில நிமிடங்களில் டெலிபோனில் எனக்கு நன்றி சொன்னார்.
மாற்றான் தோட்டத்து மல்லிகை 10 ஆயிரம் அடியிலும், மணிப்பூர் மாமியார் 9 ஆயிரம் அடியுடனும் நின்று போயின. இது, இன்றளவும் எனக்கு வருத்தம் தரும் விஷயம்.
இந்த சமயத்தில்தான், எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று ஜெயலலிதா மேடம் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார்.''
இவ்வாறு கூறினார், விஜயகுமார்.

சிங்கம்-3 படத்தின் ஒரு சில காட்சிகளை ‘லைவ்’ ஆக பேஸ்புக்கில் வெளியிட்ட இணைய தளம் முடக்கப்பட்டது. அது குறித்த செய்தியை பார்ப்போம்...
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம்‘சி-3’. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் இந்த படத்தை இணைய தளத்தில் வெளியாகாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. கோர்ட்டும் இந்த படத்தை இணையத்தில் வெளியிட தடைவிதித்துள்ளது. சூர்யா அவரது ரசிகர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வேண்டுகோளில், ‘சி-3’படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் என்று நம்புகிறேன். உங்கள் அன்பு ஆசீர்வாதத்துக்கு நன்றி.
அனைவரும் தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பாருங்கள் என்று எனது பணிவான வேண்டுகோளை வைக்கிறேன்’ என்று தெரிவித்து இருந்தார்.
இயக்குனர் ஹரியும், “ எல்லோரும் இதை தியேட்டரில் பாருங்கள். யாராவது இணையதளத்தில் வெளியிட்டு எங்கள் கடினமான உழைப்பை வீணாக்கி விடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடப்படுவதை கடுமையாக சாடி இருந்தார்.
தமிழ்நாட்டில் இந்த படம் வெளியான 300-க்கும் அதிகமான தியேட்டர்களில் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளம் ‘சி-3’ படத்தை நேரடியாக வெளியிடப் போவதாக பகிரங்கமாக சவால் விட்டது. படம் திரைக்கு வந்ததும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்தின் ஒரு சில காட்சிகளை ‘லைவ்’ ஆக பேஸ்புக்கில் வெளியிட்டது. ஆனால் அது உடனடியாக முடக்கப்பட்டது. வேறு இணைய தளங்களில் வந்தாலும் முடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர திருச்சியில் ‘சி-3’ படத்தை செல்போனில் பதிவு செய்த 8 பேர் பிடிப்பட்டனர்.