என் மலர்
“விஜய்யை இயக்கும் விருப்பம் இருக்கிறது. நானும் விஜய்யும் சேர்ந்து படம் பண்ண விரும்புகிறோம். இது மட்டுமல்ல மற்ற ஹீரோக்களுடனும் சேர்ந்து பணிபுரிய ஆசை இருக்கிறது. விஜய்யும் நானும் சேர்ந்து பணியாற்றினாலும், சரியான தயாரிப்பாளர் அமைய காத்திருக்க வேண்டியுள்ளது. எங்கள் இருவர் மீதான எதிர்பார்ப்புக்கு ஏற்ப படம் தயாரிப்பவர்களை எதிர்பார்க்க வேண்டியது இருக்கிறது.
நானும் விஜய்யும் சேர்ந்து படம் பண்ணும் போது தயாரிப்பாளர் மட்டுமல்ல, பிற விஷயங்களையும் முக்கியமாக பார்க்க வேண்டியது அவசியம். பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் விஜய்யும் நானும் இணைந்து படம் பண்ணுவோம்” என்றார்.
நடிகை குஷ்புவும் எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“கடத்தப்பட்டது போல் 131 எம்.எல்.ஏக்களும் சொகுசு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். நான் அவர்களை பற்றித்தான் யோசிக்கிறேன். ஜனநாயகத்தில் இத்தகைய எம்.எல்.ஏக்களுக்கு மாண்பு ஏதாவது இருக்கிறதா? சிறையில் இருக்கும் குற்றவாளிகள் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துகிறார்கள். இப்படி அவர்களை நடத்துவதற்கு இந்தப் பெண்ணுக்கு (சசிகலா) என்ன அதிகாரம் இருக்கிறது?
இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
ஆனாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய `கிழக்குச்சீமையிலே' படத்தில் விஜயகுமாரை நடிக்க வைக்க வேண்டிய கட்டாயம் பாரதிராஜாவுக்கு ஏற்பட்டது.
பாரதிராஜாவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி நடிகர் விஜயகுமார் கூறியதாவது:-
``ஜானகி சபதம் படத்தில் அசோசியேட்டாக பணியாற்றிய போதே பாரதிராஜாவின் திறமையை தெரிந்து கொண்டேன். எனக்கும் `வெண்ணிற ஆடை' நிர்மலாவுக்குமான பாடல் காட்சியை எப்படி எப்படி எடுத்தால் சிறப்பாக அமையும் என்று பாரதிராஜா விலாவாரியாக என்னிடம் விவரித்தபோது, ``இவர் சினிமாவில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பார்'' என்பதை உணர்ந்து கொண்டேன்.
படத்தின் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யிடம், பாடல் காட்சி பற்றிய பாரதிராஜாவின் அற்புதமான கற்பனை பற்றி நான் கூறியபோது அவரும் ஆச்சரியப்பட்டார். அப்போது நான் பிஸியாக இருந்த நிலையிலும், ``மறுபடியும் அந்தப் பாடல் காட்சியை எடுப்பதாக இருந்தால் கால்ஷீட் தருகிறேன். அதோடு பாடல் காட்சிக்கு தேவையான பிலிம் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கே.ஆர்.ஜி.யிடம் கூறினேன்.
ஆனால் கே.ஆர்.ஜி., அதற்கு உடன்படவில்லை ``மறுபடியும் படப்பிடிப்பு நடத்த நேரம் இல்லை'' என்று கூறி விட்டார்.
அந்தப் படம் ரிலீசான ஒரு சில மாதங்களில், `16 வயதினிலே' படத்தை பாரதிராஜா இயக்குவதாக செய்திகள் வந்தன. நான் குடும்பத்துடன் தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் குடியிருந்து வந்தேன். பாரதிராஜாவும் அதே எல்லையம்மன் காலனியில்தான் தன் குடும்பத்தை குடி வைத்திருந்தார். நான் படப்பிடிப்புக்கு காரில் புறப்படும்போதோ, இரவில் திரும்பி வரும்போதோ பெரும்பாலும் பாரதி என் பார்வையில் படுவார். ஒரு சில வினாடிகள் நலம் விசாரித்துக் கொள்வோம்.
இப்படி நான் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், ஒருநாள் காலையில் படப்பிடிப்புக்கு புறப்பட்டேன். கார் புறப்பட்டு தெருமுனையைக் கடந்த போது திடீரென காரை கைகாட்டி நிறுத்தச் சொன்னார், பாரதி.
கார் நின்றதும், ``என்ன பாரதி? என்ன விஷயம்?'' என்று கேட்டபடி இறங்கினேன்.
``16 வயதினிலே என்று ஒரு படம் இயக்கியிருக்கிறேன். இன்று மாலை படத்தின் சிறப்புக் காட்சி இருக்கிறது. அவசியம் நீங்கள் வந்து படத்தை பார்த்து கருத்து சொல்ல வேண்டும்'' என்றார், பாரதி.
நான் அவரிடம், ``படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்து விட்டால், நிச்சயம் வந்து விடுவேன். தவிர்க்க முடியாமல் படப்பிடிப்பு நீண்டு போனால் மட்டும் வர முடியாமல் போய் விடும், எனவே, வர முடியாவிட்டால் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்'' என்று சொன்னேன்.
ஆனால், சொல்லி வைத்த மாதிரி அன்றைய படப்பிடிப்பு இரவு 9 மணி வரை நீண்டு விட்டது. இதனால் பாரதிராஜா படத்தின் `பிரிவிï' காட்சிக்கு போக முடியவில்லை.
அதற்குப் பிறகு அந்த விஷயத்தை நான் மறந்து விட்டேன். ஆனால் பாரதிராஜா மறக்காமல் இருந்திருக்கிறார். 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு மறுமலர்ச்சியையும், கதைப்புரட்சியையும் உருவாக்கி, மிகப் பெரிய இயக்குனர் என்ற அந்தஸ்துக்கு வந்து விட்டார். தொடர்ந்து `கிழக்கே போகும் ரெயில்'', ``சிகப்பு ரோஜாக்கள்'', ``நிறம் மாறாத பூக்கள்'' என்று, அவர் இயக்கத்தில் வெளி வந்த எல்லாமே வெற்றிப் படங்களாயின.
நானும் அவர் வளர்ச்சியில் பெருமைப்பட்டேன். நான் பிஸியாக இருந்ததால் அவர் படங்களில் நடிக்க என்னை அழைக்காததை ஒரு விஷயமாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.
இப்படி வருஷங்கள் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் தயாரிப்பாளர் `கலைப்புலி' தாணு சார், பாரதிராஜா இயக்கத்தில் ``கிழக்குச் சீமையிலே'' என்ற படத்தை தயாரிக்கவிருந்தார். அண்ணன் - தங்கையின் பாசப் பிணைப்பு தான் கதையின் முடிச்சு என்பதால் அண்ணன்- தங்கை கேரக்டர்களில் யார் யாரைப் போடலாம் என்று தாணு சார் பாரதிராஜாவிடம் ஆலோசித்திருக்கிறார்.
தங்கை கேரக்டரில் நடிக்க ராதிகா முடிவானார்.
இந்நிலையில், `கலைப்புலி' தாணு சாரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. `கிழக்குச் சீமையிலே' என்று ஒரு படம் தயாரிக்கிறேன், பாரதிராஜா டைரக்டு செய்கிறார். அண்ணன்- தங்கை இடையேயான அளப்பரிய பாசம்தான் கதை. அண்ணன் கேரக்டர் சிவாஜி சார் பண்ணக்கூடிய அளவுக்கு வலுவானது. நீங்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று பாரதிராஜாவிடம் சொன்னேன். அவரோ ``முடியாது. நான் இயக்கும் படங்களில் அவரைப் போடுவதில்லை'' என்று கூறி விட்டார். காரணம் கேட்டேன். அதற்கு அவர், ``நான் முதன்முதலாக இயக்கிய ``16 வயதினிலே' படத்தின் `பிரிவிï' காட்சியை பார்க்க வருந்தி அழைத்தும் வராமல் இருந்து விட்டார். அப்போதே நான் இயக்கும் படங்களில் அவரை நடிக்க வைக்கக்கூடாது என்று தீர்மானித்து விட்டேன்'' என்றார்.
பாரதிராஜா என்ற பெரிய கலைஞனுக்குள் இப்படியொரு குழந்தையா? எனக்குள் அந்த நேரத்தில் ஆச்சரியம் தான் தலைதூக்கியது. ``நானே போய் பாரதியை பார்த்து பேசுகிறேன் சார்!'' என்று தாணுவிடம் கூறி விட்டேன்.
நேராக பாரதிராஜா வீட்டுக்கு போனேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு புரிந்து விட்டது. என்றாலும் இயல்பாக வரவேற்றுப் பேசினார்.
``ஒரு பிஸி நடிகரின் அன்றாட நாட்கள் கூட அவனுக்கு சொந்தமில்லை என்பதை உங்கள் திரைவாழ்விலும் பார்த்திருப்பீர்களே'' என்று பேச்சின் இடையே கூறினேன். பாரதியிடம் நெகிழ்ச்சி தெரிந்தது. `கிழக்குச் சீமையிலே' படத்தில் நான் அண்ணன் ஆனது இப்படித்தான். அண்ணன்- தங்கை பாசத்தை மையமாக கொண்ட அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.''
இவ்வாறு கூறினார், விஜயகுமார்.
பாரதிராஜா விஜயகுமாரை இத்தோடு விட்டு விடவில்லை. அடுத்து அவர் இயக்கிய ``அந்தி மந்தாரை'' படத்திலும் அவரை நடிக்க வைத்தார். சிறந்த படத்துக்கான மத்திய அரசு விருது அப்படத்துக்கு கிடைத்தது. தமிழக அரசு அவருக்கு சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசை வழங்கி கவுரவப்படுத்தியது.
ஆனாலும் விஜயகுமாருக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைக்காததில் பாரதிராஜாவுக்கு ரொம்பவும் வருத்தம்.
அதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-
``மதுரையில் நடந்த படவிழாவில் எனக்கு மத்திய அரசின் விருது கிடைக்காத வேதனையை பாரதிராஜா பகிர்ந்து கொண்டார். ``இந்தப் படத்துக்கு மத்திய அரசு விருது கிடைத்த மாதிரி, படத்தில் அற்புதமாக நடித்த விஜயகுமாருக்கும் விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப் போய் விட்டது. என்றாலும் நிச்சயம் என் வாழ்நாளில் நான் இயக்கி அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தே தீருவேன்'' என்று உணர்ச்சிமயமாய் பேசினார்.
பாரதிராஜா என் நடிப்பு மீது வைத்த இந்த நம்பிக்கையை விடவா எனக்கு விருது பெரிது? அப்போதே தேசிய விருது பெற்றதை விட அதிக சந்தோஷம் அடைந்தேன்''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
இவர் உடல் எடையை ஏற்றி நடித்த அந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு கைகொடுக்கவில்லை. அப்போதைக்கு பெரிய பட்ஜெட்டுடன் உருவாகிவந்த பிரம்மாண்ட படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் நடிகைக்கு அவசர அழைப்பு வந்ததால், தடபுடலாக தனது உடல் எடையை குறைக்கும் முடிவில் களமிறங்கினார்.
அதன்பிறகு, அந்த பிரம்மாண்ட படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், அந்த நடிகை ரொம்பவும் ஒல்லியாக முன்பு இருந்ததுபோல் காட்சியளித்தார். அதைப் பார்த்தது ரசிகர்கள் அனைவருக்கும் திருப்தியை கொடுத்தது. இந்நிலையில், அந்த நடிகை நடித்த படம் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இதில் அந்த நடிகையின் தோற்றம், தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டருக்கு நேருக்கு மாறாக இருக்கிறதாம். உடல் எடையை கூட்டி ஆன்ட்டி நடிகை போல் தோற்றமளித்தவர், தற்போது இந்த படத்தில் ஆன்ட்டிக்கு அக்கா மாதிரியான தோற்றத்தில் இருக்கிறாராம். இவருடைய தோற்றத்தை பார்த்துதான் இந்த படத்தின் இயக்குனரே அவருக்கு சில காட்சிகள் வைத்தாராம்.
இதனால், பிரம்மாண்ட படத்தின் போஸ்டரில் அந்த நடிகையின் புகைப்படத்தை கிராபிக்ஸ் முறையில் மாற்றியிருப்பார்களோ என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இப்படி, ஒவ்வொரு படத்துக்கும் தன்னுடைய தோற்றத்தால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வரும் நடிகை, எப்போது முற்றுப்புள்ளி வைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஒருநாள் ஜோசியர் பிரதாப்பை சந்தித்து, உனக்கு திருமணமே நடக்காது, அப்படி நடந்தாலும் உன் மனைவியோடு நீண்டகாலம் வாழமுடியாது. அதேபோல், உனக்கு குழந்தையும் பிறக்காது, அப்படி பிறந்தாலும் இது உயிரோடு இருக்காது. உன்னால் இந்த வாழ்க்கையை நிம்மதியாகவும் வாழமுடியாது என்று கூறிவிட்டு செல்கிறார்.
இதை பொய்யாக்கி நிரூபிக்க அவர் எடுக்கிற சில முயற்சிகள் சமூகத்தில் பலவித விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்த விளைவுகள் என்னென்ன? ஜோசியத்தை அவர் பொய்யாக்கி காட்டினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் தலைப்பான பிரகாமியம் என்பது 64 கலைகளில் ஒன்றாகும். மற்றொருவரின் மனதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கலையான கூடு விட்டு கூடும் பாயும் வித்தையை இது குறிக்கிறது. தமிழ் சினிமாவுக்கு அரிதான இந்த கதையை இயக்குனர் பிரதாப் தைரியத்துடன் கையிலெடுத்திருக்கிறார். ஆனால், அதை அழகாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்துவதற்கு தவறியிருக்கிறார்.
படத்தின் இயக்குனரும், ஹீரோவும் ஒருவரே. இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இரண்டுமே ரொம்பவும் மிகையாக இருப்பதால் ரசிக்க முடியாமல் போகிறது. இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். இரண்டு பேரின் நடிப்பும் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. படத்தில் அனைவரின் வசனங்கள் உச்சரிப்பும் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. எனவே, அவர்கள் அனைவரையும் கதையோடு ஒன்றி பார்க்க முடியவில்லை.
மொத்தத்தில் ‘பிரகாமியம்’ பிரியமில்லை.
ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி இது...
“தென் இந்திய சினிமாவில் ஹீரோக்களுக்குத்தான் மதிப்பு. அவர்களுக்குத்தான் நட்சத்திர ஓட்டல்களில் ரூம் போட்டு கொடுப்பார்கள். நடிகைகளுக்கு சாதாரண ஓட்டல் ரூம்தான்.
நடிகர்கள் எவ்வளவு தாமதமாக வந்தாலும் எதுவும் கேட்க மாட்டார்கள். ஆனால் நடிகைகள் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அங்கு இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இது மாதிரி நிறைய விஷயங்கள் நடக்கும். இதனால் நான் பாதிப்பு அடைந்திருக்கிறேன்.
‘கபாலி’ படம் தவிர வேறு எந்த படத்திலும் தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு மரியாதை தரவில்லை. ரஜினியும் ‘கபாலி’ பட இயக்குனர் ரஞ்சித்தும் மட்டுமே என்னை மதித்தார்கள். அதற்காக எல்லோரையும் குற்றம் சாட்டவில்லை. நான் நடித்த படங்களில் பணியாற்றிய அனுபவங்களை வைத்தே இதை சொல்கிறேன்”.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இணையதளம் கோர்ட்டு உத்தரவை மீறி இப்படத்தை ஆன்லைனில் வெளியிடுவோம் என்று படக்குழுவுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. இதுகுறித்த அறிந்த நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தனது ஏற்பாட்டின் பேரில் தமிழகமெங்கும் ‘சி3’ படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் 4 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி கண்காணிக்க வைத்தார்.
அப்போது, திருச்சி ரம்பா திரையரங்கில் ‘சி3’ படத்தை செல்போனில் பதிவு செய்து 8 பேரின் செல்போன்களை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கவுதம் மேனனின் கனவுப் படமான ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பார்த்திபனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, இப்படத்தின் வில்லன் வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் பிரித்விராஜிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
‘துருவ நட்சத்திரம்’ படத்தை கவுதம் மேனன் இயக்குவதோடு மட்டுமில்லாமல், அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். தெலுங்கு பட ஹீரோயின் ரீது வர்மா இப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.
இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து சிவாஜியின் பேரனும், நடிகருமான துஷ்யந்த்தின் தயாரிக்கும் புதிய படத்திலும் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். துஷ்யந்த் ஈஷான் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்நிறுவனம் பிரபு, காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளிவந்த ‘மீன்குழம்பும் மண்பானையும்’ என்ற படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை, விஷ்ணு விஷாலே உறுதிப்படுத்தியுள்ளார். இவர்கள் இணையும் இந்த படத்தையும் ‘கதாநாயகன்’ படத்தின் இயக்குனர் முருகானந்தமே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சிமா மோகன் நடிப்பில் சமீபத்தில் சிம்பு நடித்து வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘சத்ரியன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘இப்படை வெல்லும்’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருக்க வேண்டுமா? சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டுமா? என்ற கேள்விகள் மாநிலம் முழுவதும் எதிரொலிக்கின்றன.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கிறார்கள். கட்சியின் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள், மதுசூதனன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், பெரும்பாலான தொண்டர்கள் பன்னீர் செல்வத்தை ஆதரிப்பதாக அந்த தரப்பினர் கூறுகிறார்கள்.
கலை உலகில் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பெரும்பாலான நடிகர்- நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன், பாக்யராஜ், எஸ்.வி.சேகர், மன்சூர்அலிகான், ஆர்யா, சித்தார்த், அருள்நிதி, குஷ்பு, சமுத்திரக்கனி, இசை அமைப்பாளர்கள் கங்கை அமரன், இமான் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இப்போது நடிகர், இயக்குனர் விசு தனது ஆதரவை ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரை ஆதரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வாட்ஸ்- அப் வீடியோவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும். பன்னீர்செல்வம் கவர்னரை சந்திக்க 5 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் ஐந்து என்பதை எதுக்கு சொல்வோம். பஞ்ச பூதங்களுக்கு சொல்வோம். அல்லது பஞ்ச பாண்டவர்களை சொல்வோம். இவை பாசிட்டிவ் ஆனவை.
சசிகலாவுக்கு ஏழரை மணிக்கு கவர்னரை பார்க்க நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள். ஏழரை என்பதை எதற்கு சொல்வோம் என்பது உங்களுக்கு நல்லா தெரியும். என்னடா இப்படி சொல்லு கிறேன் என்று நினைக்கா தீர்கள்.
நான் 6 வருடங்கள் ஜெயா டி.வி.க்காக மக்கள் அரங்கம் நிகழ்ச்சி நடத்தினேன். முதலில் ஒருநாள் மேடம் புரட்சி தலைவியை பார்த்ததோடு சரி. அதற்கு அப்புறம் என்னை ஒரு தடவை கூட பார்க்கவிடவில்லை. அதை என்னால் வெளியே சொல்லவும் முடியவில்லை. அப்போ பன்னீர்செல்வம் என்ன கஷ்டப்பட்டாரோ அதே கஷ்டம்தான் எனக்கு. பார்க்கவே முடியவில்லை.
இத்தனைக்கும் பொது மக்களை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தேன். அப்போ என்ன நடக்குது ஏது நடக்குது என்று சொல்ல வேண்டும். அல்லவா? என்னால் சொல்லவே முடியவில்லை. யார் யாரோ வந்தாங்க. என்னென்னமோ உத்தரவு போட்டாங்க. ஒரு நாள் சொல்வதை மறுநாள் மாற்றி சொல்வான். இப்படித் தான் யாரோ ஒரு குடும்பம் என்னை கட்டுப்படுத்தியது. எனக்கு ஒண்ணுமே புரியல. இப்படி கூட நடக்குமா என்று நீங்க யோசிப்பீங்க.
யோசனை பண்ணி பாருங்க. மேடம் இறந்த போது அந்த பக்கத்தில் யார் நின்னாங்க? யார் யாரோ நின்னாங்க. இதே தான் அங்கேயும் நடந்தது. ஒருவேளை அரசாங்கத்தை அவர்களிடம் ஒப்படைத்தால் அங்கும் யார் யாரோ வருவார்கள் என்ன என்ன வெல்லாமோ செய்வாங்க.
இதை மக்களிடம் ஒன்றும் கேட்க முடியாது. மக்கள் தலையெழுத்து 135 பேரிடம் இருக்கிறது. அவர்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் வாழ்க்கை உங்களிடம் இருக்கிறது. பிளீஸ்... பிளீஸ் கண்டிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரியுங்கள். சசிகலாவை அல்ல.
இவ்வாறு விசு கூறியுள்ளார்.
நடிகர், இயக்குனர் பார்த்திபனும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார். சசிகலா முதல்- அமைச்சராக விரும்புவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘இது ஒரு அரங்கேற்றப்பட்ட நாடகம். இதுபோன்ற அரசியல் விளையாட்டுகளால் தமிழ்நாட்டின் மரியாதை குறைந்து விட்டது என்று கூறி இருக்கிறார்.
நடிகை ஸ்ரேயா, ‘சரியான நேரத்தில் பன்னீர்செல்வம் ஹீரோவாக செயல்பட்டிருக்கிறார்’ என்று கூறியுள்ளார். இயக்குனர் கவுதம் மேனன், ‘நமது மொழியையும், பண்பாட்டையும் காக்கும் தன்மான தலைவர் வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோல் ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், நடிகை ஸ்ருதி தான் கையில் பிடித்து வைத்திருந்த பாம்பு உண்மையான பாம்பு அல்ல என்று கூறினார். இதையடுத்து அந்த புகைப்படத்தை வனத்துறை அதிகாரிகள் கலினாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், நடிகை ஸ்ருதியும், பியர்ல் புரியும் உண்மையான நல்ல பாம்பை கையில் பிடித்து வைத்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. டெலிவிஷன் தொடர் படப்பிடிப்பு ஒன்றுக்கு கொண்டு வரப்பட்ட அந்த நல்ல பாம்பை அவர்கள் பிடித்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து நடிகை ஸ்ருதி, நடிகர் பியர்புரி மற்றும் அந்த டெலிவிஷன் தொடர் தயாரிப்பாளர்களான உட்கர்ஷ் பாலி, நிதின் சோலங்கி ஆகிய 4 பேர் நேற்றுமுன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். வனத்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதல் காட்சியாக இரவு 7 மணி அளவில் திரையிடப்பட்ட ‘சிங்கம்-3’ படத்தை ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தார். முன்னதாக நடிகர் சூர்யா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிங்கம், சிங்கம்-2 படங்கள் வெற்றிகரமாக அமைந்தன. அதேபோல் ‘சிங்கம்-3’ படத்துக்கு தொடர்ச்சியாக சரியான கதை களம் அமைந்ததால் அதே குழுவினரோடு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெற்றிகரமாக வெளியாகி உள்ளது. இதில் உள்ள சண்டை காட்சிகள் அனைவரையும் கவரும்.
இயக்குனர் ஹரி சிறு வயதில் போலீசில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விருப்பப்பட்டார். அந்த ஆசை நிறைவேறாமல் போனதால் அதை தான் இயக்கும் திரைப்படங்களில் காட்டி வருகிறார்.
தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு விவகாரத்தில் போலீசாரை தவறாக சித்தரித்துள்ளனர். ஒரு சிலர் அதுபோல் இருக்கலாம். ஆனால் அனைவரும் பாராட்டும் வகையில் சீருடையை மாற்றி கொண்டு போராட்டத்தில் அமர்ந்த போலீசாரையும் நாம் கண்டுள்ளோம்.
இப்போதுள்ள தமிழக அரசியல் விவகாரங்களை நானும் உங்களை போல் பார்த்துக்கொண்டு வருகிறேன். தமிழ்நாட்டில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
நான் நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை சார்பில் குழு அமைக்கப்பட்டு கருவேல மரங்களை அகற்றி சிறந்த சுற்றுச்சூழலை தமிழகத்தில் ஏற்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறேன். இது விறகாக பலருக்கு பயன்படும் என்பதால் இதில் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
இவ்வாறு நடிகர் சூர்யா கூறினார்.








