என் மலர்
அ.தி.மு.க.வில் இதே நிலை நீடித்தால், அதிரடி முடிவை எடுப்பேன் என்று நடிகை லதா கூறியிருக்கிறார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
நடிகை லதா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இப்பொழுது அ.தி.மு.க.வில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. எம்.ஜி.ஆர். கட்சியை உருவாக்கும் பொழுது உடனிருந்து அவர் பட்ட கஷ்டங்களை பார்த்தவள் நான்.
ஆனால், இப்பொழுது அவர் பட்ட கஷ்டங்கள் வீணாகிவிடுமோ என்கிற கவலை எனக்கு மேலோங்கி உள்ளது. அவர் கட்சியை உருவாக்கியதே மக்கள் சேவைக்காக மட்டும் தான். அதனை முன்னிறுத்தாமல் செயல்பட்டதன் விளைவே இந்த நிலைமை என்று தோன்றுகிறது.
ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு கட்சியின் கழக பொதுச்செயலாளர் யார் என்ற குழப்பம் நீடித்தாலும், ஆட்சிமுறை என்று வந்தபோது ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி ஓ.பன்னீர்செல்வம் திறம்பட செயல்பட்டு வந்தார்.
திறம்பட ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து, தற்போதைய கழக பொதுச்செயலாளர் முதல்வராக அவசரப்படுவதற்கு என்ன காரணம்?, அதற்கான அவசியம் என்ன?, அந்த அவசரத்தின் விளைவு தான் இன்று ஆட்சியில் இருக்கும் நம் கட்சி உடையக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
மக்களின் பேராதரவுடன் இரண்டாம் முறையும் ஆட்சியில் அமர்ந்த நம் கட்சியினை ஆச்சரியத்துடன் பார்த்த அனைவரும், இன்று கட்சியின் நிலையையும், ஒற்றுமையின்மையும் அதிர்ச்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகம், இந்தியாவைத் தாண்டி உலகமே நம் கட்சியினை கேலிக்கூத்தாக பார்க்கும் நிலையை உருவாக்கிவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சிக்கு வந்த இந்த நிலையை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மூத்த நிர்வாகிகள், முக்கியப் பொறுப்பாளர்களிடம் இருந்த நம்பிக்கையில் தான் அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் மட்டும் வெளியிட்டு வந்தேன்.
இந்த கட்சியைக் காப்பாற்றும் கடமை எனக்கும் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் கட்சிக்கு என் கடமையை செய்யும் பொருட்டு, அதிரடி முடிவினை எடுக்கவும் தயங்க மாட்டேன்.
இவ்வாறு லதா அறிக்கையில் கூறியுள்ளார்.

சுரேஷ் எஸ் குமார் இயக்கத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ள 'நகல்' படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
இயக்குநர் சசி மற்றும் இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் எஸ் குமார் இயக்க இருக்கும் திரைப்படம் 'நகல்'. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்த 'நகல்' படத்தை 'கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ்' சார்பில் மணிகண்டன் சிவதாஸ் தயாரிக்க இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் - பிரசன்னா, இசையமைப்பாளர் - ஆண்டனி ஜார்ஜ், படத்தொகுப்பாளர் - லோகேஷ், கலை இயக்குநர் - ரூபெர்ட், ஸ்டண்ட் மாஸ்டர் - சக்தி சரவணன் மற்றும் டிசைனர் - ஜோசப் ஜாக்சன் என பல திறமை வாய்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த 'நகல்' படத்தில் பணியாற்ற இருக்கின்றனர்.
இந்த ஒற்றை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தற்போது சில முன்னணி கதாநாயகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இயக்குநர் சுரேஷ் குமார்.
"ஒரு முற்றிலும் தனித்துவமான கதை களத்தோடு தான் நான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அப்படி இருந்து நான் உருவாக்கி இருக்கும் கதை தான் இந்த 'நகல்'. ஒரு பெண்ணின் அமானுஷிய அனுபவங்களை மையமாக கொண்டு தான் எங்களின் 'நகல்' படத்தின் கதை நகரும். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருப்பதால், 'நகல்' படத்தின் கதையை எழுதுவதற்கு சற்று சவாலாகவே இருந்தது.
தனித்துவமான முயற்சியில் முழுக்க முழுக்க திகில் அனுபவங்களை கொடுக்கும் ஒரு திரைப்படமாக 'நகல்' இருந்தாலும், ரசிகர்களை உற்சாகப்படுத்த கூடிய எல்லா சிறப்பம்சங்களையும் நான் இந்த கதையில் உள்ளடக்கி இருக்கின்றேன். தற்போது படத்தின் கதாநாயகியை தேர்வு செய்யும் பொருட்டு, சில முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. என்று உற்சாகமாக கூறுகிறார் 'நகல்' படத்தின் இயக்குநர் சுரேஷ் எஸ் குமார்.

தொடர்ந்து 3 ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த விஜயகுமார், ``அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
தொடர்ந்து 3 ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த விஜயகுமார், ``அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இதன் மூலம் திரை உலகில் தனது 2-வது ரவுண்டை வெற்றிகரமாகத் தொடங்கினார், விஜயகுமார்.
``கதாநாயகனாக நடித்த நீங்கள் வில்லனாக நடிக்கத்தான் வேண்டுமா?'' என்று மதுரை ரசிகர்கள் கேட்டதால், படங்களில் நடிப்பதை நிறுத்தினார், விஜயகுமார். ஆனால், ஒரு திறமையான நடிகர் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருப்பதை தவிர்க்கும் விதத்தில் மீண்டும் அவரை `அக்னி நட்சத்திரம்' படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார், மணிரத்னம்.
ஒரு அப்பாவின் இரண்டு மனைவிகளுக்கு பிறந்த 2 மகன்களும் ஒருவரை மற்றவர் சந்திக்கும் போதெல்லாம் அக்னி நட்சத்திரமாக உரசிக் கொள்வார்கள். இந்த 2 மகன்களின் உணர்வுகளையும் அன்பால் கட்டுப்படுத்தும் அப்பா கேரக்டரில் விஜயகுமார் பிரமாதப்படுத்தியிருந்தார்.
இந்த படத்தில் நடிக்க நேர்ந்த அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-
சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்ததும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மஞ்சுளா பெயரில் ஒரு சைவ உணவகம் தொடங்கி நடத்தினோம். மூன்று வருடங்களுக்குள் மிகச்சிறந்த உணவகமாக அது வளர்ந்து வந்த நேரத்தில் சென்னைக்கு ஒரு வேலையாக வரவேண்டியிருந்தது. இங்கே வந்தபோதுதான் மீண்டும் படத்தில் நடிக்கும் அழைப்பு தேடி வந்து விட்டது.
``பட அதிபர், ஜீ.வி. என் நண்பர். அவர் தனது தம்பி மணிரத்னம் இயக்கத்தில் `நாயகன்' படத்தை எடுத்தபோதே அந்தப் படம் விஷயமாக பேசிக் கொண்டிருப்போம். நாயகன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, படத்தின் ஒட்டுமொத்த டீமும் புகழ் பெற்றது.
இதே யூனிட் அடுத்த `அக்னி நட்சத்திரம்' படத்தை ஆரம்பிக்கும்போது, ஒட்டுமொத்த கதையையும் தூக்கி நிறுத்தும் அந்த `அப்பா' கேரக்டரில் யாரைப் போடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். டைரக்டர் கே.சுபாஷ் அப்போது மணிரத்னத்திடம் அசோசியேட் இயக்குனராக இருந்தார். அவர் ஒருநாள் என்னை இந்தப் பட விஷயமாக சந்தித்து பேசினார்.
``படத்தின் முதுகெலும்பாக விளங்கக் கூடிய அந்த அப்பா கேரக்டரில் நடிகர் திலகம் சிவாஜி சாரை போடலாமா என்று யோசித்தோம். சிவாஜி சார் நடிக்கும்போது அவருக்கே உரிய அற்புத நடிப்பாற்றல் வெளிப்பட்டு படத்தையும் தாண்டி அவர்தான் நிற்பார். இந்தப் படத்தை பொறுத்தவரையில், படம் பேசப்படும். அதே நேரத்தில் அந்த அப்பா கேரக்டரும் பேசப்பட வேண்டும். `அப்படி ஒரு அப்பா'வுக்கு யோசித்ததில் எங்களுக்கு சட்டென நினைவுக்கு வந்தவர் நீங்கள்தான். எனவே மறுக்காமல் நீங்கள் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
நான் அவரிடம், ``நான் நடிப்பில் இருந்து விடுபட்டு 3 வருஷம் ஆகி விட்டது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறேன்'' என்று சொன்னேன்.
அவரோ விடவில்லை. ``சார்! எங்களுக்காக இந்த ஒரு படத்தில் மட்டுமாவது நடியுங்கள். இந்த கேரக்டருக்கு உங்களைத் தவிர வேறு யாரையும் எங்களால் யோசிக்க முடியவில்லை'' என்றார், விடாப்பிடியாக.
சினிமாவில் வழக்கமாக இரண்டு பெண்டாட்டிக்காரர் கதை என்றால், இரண்டு பெண்டாட்டிகளுக்கு இடையே மாட்டிக் கொள்ளும் கணவர் கேரக்டரை நகைச்சுவையாகவே சித்தரிப்பார்கள். மனைவியர் என்ன சொன்னாலும் அதற்கு `ஆமாம்... ஆமாம்' சொல்கிற கணவராக இவர்கள் ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள்.
ஆனால் மணிரத்னம் என்னிடம் அந்த அப்பா கேரக்டரை விவரித்தபோது நிஜமாகவே பிரமிப்பு ஏற்பட்டது. `இந்த கேரக்டரையா விட இருந்தோம்?' என்கிற சிந்தனையை இந்த கேரக்டர் எனக்குள் ஏற்படுத்தி விட்டது.
படம் ரிலீசான போது, என்னைப் பாராட்டாதவர் கள் இல்லை. குறிப்பாக அந்த அப்பா கேரக்டரில் நடிக்கவில்லை; `வாழ்ந்த மாதிரி' இருக்கிறது என்று பாராட்டியவர்கள் அதிகம். இந்த படத்துக்குப் பிறகு நான் மீண்டும் படங்களில் பிஸியாகி விட்டேன்.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
டைரக்டர் அவினாசிமணி இயக்கத்தில் `ஜானகி சபதம்' என்ற படத்தில் நடிகை கே.ஆர்.விஜயா ஜோடியாக விஜயகுமார் நடித்தார்.
அந்தப் படத்தில் அவினாசிமணியின் உதவி யாளராக ஓடியாடி வேலைபார்த்த இளைஞரை விஜயகுமாருக்கு ரொம்பவே பிடித்துப் போயிற்று. சினிமாவில் இப்படி அக்கறையாய் தொழில் செய்யும் இளைஞர்கள்தான் பின்னாளில் தங்கள் திறமை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் சிகரம் தொடுவார்கள்.
விஜயகுமார் இப்படி வியந்து பார்த்த அந்த உதவி இயக்குனர் வேறு யாருமல்ல; பாரதிராஜாதான்!
பாரதிராஜாவுடன் அந்தப் படத்தில் விஜயகுமாருக்கு வித்தியாசமான ஒரு அனுபவம் கிடைத்தது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:
``ஜானகி சபதம் படத்தில் எனக்கும், நிர்மலாவுக்கும் ஒரு பாடல் காட்சி. இந்த பாடல் காட்சியை படமாக்கும் பொறுப்பை டைரக்டர் அவினாசிமணி, பாரதிராஜாவிடம் ஒப்படைத்திருந்தார். பாடல் காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பு, பாரதிராஜா என்னிடம் ``இந்தப் பாடலை இந்த மாதிரியான சூழ்நிலையில் எடுத்தால் பிரமாதமாக இருக்கும்'' என்றார்.
எதிர்காலத்தில் அவர் பெரிய இயக்குனராக வருவார் என்பதை அப்போதே தெரிந்து கொண்டேன்.

வேலையில்லா பட்டதாரி படத்தை சவுந்தர்யா ரஜினி இயக்குவதை பார்த்து விவேக் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் என்ன பேசினார் என்பதை கீழே பார்ப்போம்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முந்தைய பாகத்தில் நடித்த தனுஷ், அமலாபால், சமுத்திரகனி, விவேக் உள்ளிட்டோர் தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்கள். இப்படத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாகி வருகிறது. தற்போது தனுஷ் மற்றும் விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் சவுந்தர்யாவின் இயக்குனர் திறமையை பார்த்து வியந்து, அவர் குறித்து விவேக் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், சவுந்தர்யா சுறுசுறுப்பாகவும், வேகமாகவும், உன்னிப்பாக கவனித்து விரைந்து முடிக்கக்கூடிய திறமையுடன் இருக்கிறார். அவரது கூர்மையான கண்கள் இமைத்துக் கொண்டே இருக்கிறது. கைகள் ஸ்டைலாக அங்கும் இங்கும் செல்கிறது. அவரது அப்பாவைப் போல் இவர் மீதும் நம்பிக்கை ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.
இதற்கு சவுந்தர்யா ரஜினிகாந்த், உங்களைப் போன்ற மூத்த அனுபவமுள்ள கலைஞர்களிடமிருந்து பாராட்டு வருவது எனக்கு மிகப்பெரிய விஷயம். உங்களுக்கு மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.

விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘கடுகு’ படத்துக்காக நடிகர் சூர்யா பெரிய உதவி ஒன்றை செய்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
‘கோலி சோடா’ என்ற படத்தை இயக்கி வெற்றிக்கொடி நாட்டிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், தற்போது தேவயானியின் கணவரான இயக்குனர் ராஜகுமாரனை ஹீரோவாக வைத்து ‘கடுகு’ என்ற படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் நடிகர் பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை விஜய் மில்டனின் ‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். எஸ்.என்.அருணகிரி இசையமைத்துள்ள இப்படத்துக்கு விஜய் மில்டனே ஒளிப்பதிவை கவனித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டாலும், படம் வியாபாரம் ஆகாமலேயே இருந்து வந்தது. அதனால், சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்த விஜய் மில்டனுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் ‘கடுகு’ படத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் சூர்யாவை சந்தித்த விஜய் மில்டன், தன்னுடைய ‘கடுகு’ படத்தை வெளியிட முன்வருமாறு அவரை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் ‘கடுகு’ படத்தை தன்னுடைய ‘2டி என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் சூர்யா வெளியிட முன்வந்துள்ளார். இதுவரை தயாரிப்பு பணியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சூர்யா, முதன்முதலாக ‘கடுகு’ படத்தின் மூலம் விநியோகஸ்த உரிமையை வாங்கி வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய படத்துக்கு முன்கூட்டியே தலைப்பு வைக்கக்கூடாது என்று நடிகர் ஒருவர் முரண்டு பிடிக்கிறாராம். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
முன்பெல்லாம் ஒரு படத்துக்கு தலைப்பு தேர்வு செய்தபிறகுதான் அந்த படத்தின் படப்பிடிப்பையே தொடங்குவது என கோலிவுட்டில் ஒரு சம்பிரதாயமாக இருந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் தலைப்பு தேர்வு செய்யாமலேயே படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
அப்படி தொடங்கும் படங்களின் தலைப்பாக அந்த நடிகருக்கு அது எத்தனையாவது படம் என்ற எண்ணிக்கையையும் அந்த நடிகரின் பெயரையும் இணைத்தே அழைத்து வருகிறார்கள். இதை தற்போது இரண்டு முக நடிகரும் பின்பற்ற முடிவு செய்திருக்கிறாராம்.
பொதுமாக இரண்டு முக நடிகர் ஒப்பந்தமாகும் படங்கள் அனைத்துக்கும் முன்கூட்டியே தலைப்பு வைக்கப்பட்டு விடும். இதனால், அவருடைய படம் எந்த பரபரப்பும் இல்லாமல் உருவாகி, அது சத்தம் இல்லாமலேயே வெளிவந்து, நடிகரின் மார்க்கெட்டை பின்னு தள்ளி வருகிறதாம்.
இதை கருத்தில் கொண்ட இரண்டு முக நடிகர், இனிமேல், முன்னணி நடிகர்களைப் போலவே தன்னுடைய படத்துக்கும் தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பை தொடங்கி, அவர்களைப் போலவே தன்னுடைய படத்துக்கும் என்னுடைய பெயரை வைத்து ரசிகர்கள் அழைக்கட்டும் என்று விருப்பப் படுகிறாராம். இதனால், தானும் சினிமாவில் இருப்பதாக ரசிகர்கள் மனதில் பதியும் என்றும், தன்னுடைய படத்துக்கும் புரோமாஷன் கிடைக்கும் என்றும் நடிகர் நினைக்கிறாராம்.

நடிகர் ஒருவரை ரஜினி கலாய்த்த சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. அந்த நடிகர் யார்? அவர் எதற்காக அப்படி கலாய்த்தார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
சமீபகாலமாக வெளியான சில படங்களில் தும்பை பூவைப்போன்ற நரைத்த தலையுடன், ஆனால் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய ஒருவரை டாக்டராக, போலீஸ் அதிகாரியாக, தொழிலதிபராக, கதாநாயகியின் தந்தையாக என பல பரிமாணங்களில் பார்த்து இருப்பீர்கள். அப்படி ஒருவர் உங்களை கவனம் ஈர்த்து இருந்தால் நிச்சயம் அந்த நபர் அசோக் பாண்டியனாகத்தான் இருப்பார்.
இன்று குணச்சித்திர துணை காதாபாத்திரத்திற்கான தேடலில் உள்ள பல இயக்குனர்களும் தங்களது படத்திற்கான நடிகர்கள் பட்டியலில் இவரது பெயரை ஆரம்பத்திலேயே டிக் பண்ணி வைத்து விடுகின்றனர். அந்த அளவுக்கு அசோக் பாண்டியன் குறுகிய கால அளவில் திரையுலகில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
சினிமா ஆசை யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதிலும் வரலாம். அதனால் மதுரையை சேர்ந்த அசோக் பாண்டியனுக்கு 2012-ல், தான் மிலிட்டரியில் இருந்து ஓய்வுபெற்றபோது தோன்றியதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. 2000-ல் கார்கில் போரில் பங்குபெற்று, அதன்பின்னர் ஓய்வுபெற்று ஊர் திரும்பிய அசோக் பாண்டியன் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் பத்து வருடங்களுக்கு மேலாக உடற்கல்வி ஆசிரியாக பணியாற்றி வந்துள்ளார்.
2012-ல் முதன்முதலில் இவருக்குள் இருந்த நடிகனை கண்டுபிடித்து தான் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்கை’ படம் மூலமாக அவருக்கு வாய்ப்பளித்தது இயக்குனர் சேரன் தான். அந்த வாய்ப்பு கிடைத்ததே சுவாரஸ்யம் தான் என்கிறார் அசோக் பாண்டியன்.
காரணம் தனது நண்பர்களான விஷ்வந்த் மற்றும் ‘பசங்க’ சிவக்குமார் ஆகியோர் சேரன் அலுவலகத்திற்கு வாய்ப்பு கேட்டு சென்றபோது அவர்களுடன் பேச்சுத்துணைக்காக சென்றவர்தான் அசோக் பாண்டியன். ஆனால் வாய்ப்பு கிடைத்தது என்னவோ சும்மா டைம் பாசுக்காக அவர்களுடன் சென்ற இவருக்குத்தான். அப்படித்தான் எதிர்பாராமல் தொடங்கியது இவரது சினிமா பயணம்.
அதன்பின் இந்த நான்கு வருடங்களில் ‘கொடி’, ‘மாவீரன் கிட்டு’, ‘ரஜினி முருகன்’, ‘புறம்போக்கு’, ‘கத்தி’, ‘சிங்கம்-2’, ‘பூஜை’, ‘நான் தான் பாலா’ உள்ளிட்ட 52 படங்களில் நடித்திருக்கிறார் என்றால் நிச்சயம் அது சாதனை தான். இதுதவிர தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்துவிட்டார். அதில் ஒன்று சமீபத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ரீ-என்ட்ரி ஆக வெளியான ‘கைதி நம்பர் 150’. இதுதவிர 25-க்கும் குறையாத விளம்பரப்படங்களிலும் நடித்துள்ளார் அசோக் பாண்டியன்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் ‘2.ஓ’, ‘கடம்பன்’, ‘காதல் காலம்’, ‘காஞ்சாரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அசோக் பாண்டியன். ஷங்கர் டைரக்சனில் ‘2.ஓ’ படத்தில் நான்கு நாட்கள் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பொன்னான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது தான் ஹைலைட். முதல்நாள் காலையிலேயே ரஜினிக்கும் இவருக்கும் தான் முதல் ஷாட்டே. தலைவருடன் நடிக்கப்போகிறோம் என்கிற பதட்டம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் நடித்த அசோக் பாண்டியன் வசனத்தில் மட்டும் கொஞ்சம் ஸ்பீட் கூட்டிவிட்டாராம்.
அந்த ஷாட் முடிந்ததும் அருகில் வந்த ஷங்கர், ‘‘எல்லாம் ஒகே சார்.. டயலாக் ஸ்பீட் மட்டும் கொஞ்சம் குறைச்சுக்குங்க என சொல்ல, அருகில் இருந்த ரஜினி சிரித்துக்கொண்டே ‘நம்ம பக்கத்துல இருந்தாலே ஸ்பீட் வந்துருதுல்ல” என ஜாலியாக கூறி அசோக் பாண்டியனை உற்சாகப்படுத்தினாராம். அடுத்த ஷாட்டில் காட்சி ஓகே ஆக, “ரெண்டாவது டேக்கிலேயே ஷங்கர் கிட்ட ஒகே வாங்குன ஆளு நீங்களாத்தான் இருக்கும்” என பாராட்டவும் செய்தாராம் ரஜினி.
தற்போது நடித்துள்ள ‘காதல் காலம்’ படத்தில், கதையின் திருப்பத்திற்கு காரணமான முக்கியமான கதாநாயகனின் தந்தை கேரக்டரில் நடித்திருக்கிறாராம். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை நான்கு நாட்கள் படமாக்கினார்களாம். அந்த நான்கு நாட்களும் தயாரிப்பாளர் ஸ்பாட்டிலேயே இருந்து இவர் நாயகியின் அப்பாவாக நடித்த காட்சிகளை பார்த்து ரசித்தாராம்.
அசோக் பாண்டியனின் அடுத்த இலக்கு பிரதான வில்லன் வேடத்தில் நடித்து ஒரு கலக்கு கலக்குவது தானாம். அதற்கான வாய்ப்பும் சூழலும் விரைவிலேயே கிடைப்பதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன என்று கூறும் அசோக் பாண்டியனை அப்படிப்பட்ட சில கதைகளில் நடிக்க கேட்டுள்ளார்களாம்.
விரைவில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் கேரக்டரில் எதிர்பார்க்கலாம் என்கிறார் அசோக் பாண்டியன் நம்பிக்கையாக.

ஜெய்யும் அஞ்சலியும் காதல் ஜோடிகளாகிவிட்டதாக பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் காதல் ஜோடியாக நடித்த ஜெய் - அஞ்சலி, நிஜத்திலும் காதலர்களாக மாறிவிட்டதாக அவ்வப்போது கோலிவுட்டில் ஒரு செய்தி வெளிவந்து, அதன்பிறகு அப்படியே அடங்கிப் போய்விடும். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு மீண்டும் இவர்கள் காதலர்களாகவிட்டார்களோ? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அதாவது, ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டீசரில் தோசை சுடுவதை வைத்து மூன்று பெண்கள் உரையாடிக் கொண்டுவருவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதை வைத்து படத்திற்கு புரோமோஷன் செய்வதற்காக நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களது வீட்டில் தோசை சுட்டு, அவர்களது மனைவிக்கு மற்றும் நெருக்கமானவர்களுக்கு கொடுப்பதுபோல் புகைப்படம் எடுத்து, அதை டுவிட்டரில் பதிவு செய்து வந்தார்கள்.
நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகாவுக்கு தோசை சுட்டுக் கொடுப்பதுபோன்ற புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில், நடிகர் ஜெய்யும் தனக்கு நெருக்கமான ஒருவருக்கு தோசை சுட்டுக் கொடுத்து, அதை இணையதளத்தில் வெளியிட்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளார்.
அவர் தோசை சுட்டுக் கொடுத்தது வேறு யாருக்குமல்ல, இவருடைய காதலியாக பேசப்பட்டு வரும் நடிகை அஞ்சலிக்குத்தான். இவர் தோசை சுடுவது போல் இருக்கும் புகைப்படம் ஒரு வீட்டில் இருப்பதுபோல் தெரிகிறது. எனவே, இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்களோ என்ற கேள்வியை கோலிவுட் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.
இன்னொரு பக்கம், இருவரும் தற்போது ‘பலூன்’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். எனவே, அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலிக்காக, ஜெய் சுட்டுக் கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து, இவர்கள் இருவரும் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் ‘எஸ்3’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீஸ் கமிஷனர் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை பற்றி துப்பு துலக்குவதற்கு ஆந்திர அரசு, தமிழக போலீஸின் உதவியை நாடுகிறது. எனவே, இந்த கொலையை பற்றி விசாரணை செய்வதற்காக தமிழக அரசு சார்பில் சூர்யா நியமிக்கப்படுகிறார்.
இதற்காக விசாகப்பட்டினம் வரும் சூர்யாவை விமான நிலையத்தில் இருந்தே அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பின்தொடர்கிறார் ஸ்ருதிஹாசன். அதேசமயம் சூர்யா, கமிஷனரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்குகிறார்.
ஒருகட்டத்தில் போலீஸ் கமிஷனர் கொலையில் பெரிய முக்கிய புள்ளிகளின் தொடர்பு இருப்பது சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அதாவது, வெளிநாட்டிலிருக்கும் வெளிநாட்டு கழிவுகளை இந்தியாவுக்குள் கொண்டுவந்து, ஒரு மர்ம கும்பல் அதை எரிக்கும்போது, காற்று மாசுபட்டு நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், அந்த கும்பல் வெளிநாட்டில் காலாவதியான மருந்துகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை விற்பனை செய்வதையும் அறிகிறார். இந்த கும்பலை பிடிக்க முயற்சி எடுத்த கமிஷனர் அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டதும் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. மேலும், இந்த கும்பலுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் புள்ளிகளும், பெரிய பண முதலைகளும் இருப்பது தெரிய வருகிறது.
இதையெல்லாம் தனது போலீஸ் மூளையால் சூர்யா கண்டுபிடித்து, சட்டத்தின் முன் அவர்களை எப்படி தண்டித்ததார்? சூர்யாவை தொடர்ந்து பின்தொடரும் ஸ்ருதிஹாசனின் பின்னணி என்ன? என்பதை மிகவும் விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.
‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக ‘எஸ்-3’ படம் வெளிவந்திருக்கிறது. கடந்த இரண்டு பாகத்திலும் துரை சிங்கமாக சீறிப் பாய்ந்த சூர்யா, இந்த படத்திலும் தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறார். படத்தில் எதிரிகளிடம் ஆக்ரோஷமாக இவர் பேசும் வசனங்களில் எல்லாம் அனல் தெறிக்கிறது. படத்தின் பெரும்பகுதியை இவரே ஆக்கிமிரத்திருக்கிறார். எனவே, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் வழக்கம்போல் இல்லாமல் இப்படத்தில் பொறுப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அனுஷ்காவுக்கு முந்தைய பாகங்களைப் போல் இப்படத்தில் ஒன்றிரண்டு காட்சிகள் வந்து போவது மாதிரியான கதாபாத்திரம்.
படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் மிகவும் வேகமாக நகர்வதால் சூரியின் காமெடியை யோசித்து சிரிப்பதற்கே நேரம் இல்லாமல் போகிறது. இவருடன் வரும் ரோபோ சங்கருக்கும் இந்த படத்தில் சிறப்பான காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம். அதை உணர்ந்து அவர் சிறப்பாக செய்திருக்கிறார். பாடகர் கிரிஷ் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அரசியல்வாதியாக வரும் சரத் சக்சேனா பார்வையாலேயே மிரட்டுகிறார். இளம் வில்லனாக வரும் தாகூர் அனூப் சிங் தமிழுக்கு புதிது என்றாலும், தனது கதாபாத்திரத்தை அழுத்தமான நடிப்பால் அழகாக பதிவு செய்திருக்கிறார். முந்தைய பாகங்களில் நடித்த ராதாரவி, யுவராணி, நாசர், விஜயகுமார் ஆகியோரும் தங்களது அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் கொடுத்திருக்கிறார்கள்.
முந்தைய பாகங்களைப் போலவே இந்த பாகத்தையும் இயக்குனர் ஹரி, பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு போயிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காட்சிகளின் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த வேகம் ஒருகட்டத்தில் சலிப்படைய செய்துவிடுகிறது.
கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். வி.டி.விஜயன், டி.எஸ்.ஜாய் ஆகியோர் படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் வேகத்தை சற்று குறைத்து ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் ரசிப்பதற்கு நேரம் கொடுத்திருக்கலாம். பிரியனின் ஒளிப்பதிவில் சண்டை காட்சியில் கேமரா சுழன்று விளையாடியிருக்கிறது. பாடல் காட்சிகளிலும் இவரது கேமரா பளிச்சிடுகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பார்க்கவும், ரசிக்கவும் வைக்கிறது. பின்னணி இசையில் வழக்கம்போல் ஆக்ஷன் படத்திற்குண்டான வேகத்தையும், விறுவிறுப்பையும் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘எஸ்3’ வேகம்.

நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.

விஜயகுமார், அப்போது மிகவும் `பிசி'யான நட்சத்திரம். இரவும் பகலுமாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சில நாட்கள் வீட்டுக்கே போக முடியாத அளவுக்கு ஸ்டூடியோவிலேயே குட்டித் தூக்கம் போட்டு விட்டு, அடுத்த படப்பிடிப்புக்கு போய் விடுவார்.
சொந்த ஊரில் இருந்து மனைவி முத்துக்கண்ணுவை அழைத்து வந்து விட்டார். 1970-ல் மகள் கவிதா, 1973-ல் அடுத்த மகள் அனிதா, 1976-ல் மகன் அருண்குமார் என மூன்று வாரிசுகள்.
1976-ல் ஏ.பீம்சிங் டைரக்ஷனில் ``உன்னிடம் மயங்குகிறேன்' படத்தில் நடித்த போதுதான் நடிகை மஞ்சுளாவையும் திருமணம் செய்து கொண்டார். அந்தப் படத்தில் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஜோடியாக நடித்தார். படப்பிடிப்பு இடைவேளையில் அவர்கள் பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராமல் நிகழ்ந்தது அந்த கல்யாணத் திருப்பம்.
அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்.
``தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் சகோதரர்தான் ``உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தின் தயாரிப்பாளர். இவர் ஏற்கனவே ``ஆசை 60 நாள்'' படத்தை தயாரித்தவர். ``உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தின் கதாநாயகியாக மஞ்சுளாவை `புக்' செய்திருந்தார். நான் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன்.
மஞ்சுளா அப்போது தெலுங்கிலும் பிரபலமாக இருந்தார். தெலுங்கின் முன்னணி நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ், சோபன்பாபு என மாற்றி மாற்றி நடித்துக் கொண்டிருந்தார். தமிழில் இந்தப் படத்தில் நடித்தபோது `லஞ்ச் பிரேக்'கில், சின்னச்சின்ன இடைவேளைகளில் ஏதாவது பேசிக்கொண்டிருப்போம். பேச்சு பொதுவாக இருக்கும். பல நேரங்களில் சுவராசியமாக எங்கள் உரையாடல் போய்க் கொண்டிருக்கும்.
இப்படித்தான் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென மஞ்சுளாவிடம், ``மஞ்சு! உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீங்க என்ன சொல்கிறீங்க?'' என்று கேட்டு விட்டேன்.
எதிர்பாராத அந்தக் கேள்வியில், மஞ்சுளாவும் திடுக்கிட்டுப் போனது அவரது முகபாவத்தில் தெரிந்தது.
பொதுவாகவே, உள்மனதின் ஆழத்தில் நம்மையும் அறியாமல் சில விஷயங்கள் புதையுண்டு போயிருக்கும். மஞ்சுளாவிடம் பேசிப்பழக ஆரம்பித்த இந்த சில நாட்களில் அவரைப் பற்றி எண்ணங்கள் காதலாக மாறியிருந்தன.
அதுதான் சட்டென வார்த்தைகளில் வெளிப்பட்டு விட்டது.
என் கேள்விக்கு பதிலை மஞ்சுளாவின் அதிர்ச்சி முகமே எனக்கு சொல்லிவிட்டது. அவர் பதிலாகக் கூட எதுவும் சொல்லவில்லை.
மறுநாள் எனக்கு மதியம் 2 மணிக்குத்தான் படப்பிடிப்பு. செட்டுக்கு வந்தபோது அங்கே மஞ்சுளா ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். காட்சியை முடித்து விட்டு வந்தவரிடம் ``நேற்று நான் சொன்னதை யோசித்தீர்களா? பதில் ஒன்றும் சொல்ல வில்லையே'' என்றேன் மறுபடியும்.
இப்போது மஞ்சுளாவின் முகம் எனக்கு பதில் சொல்லத் தயங்கும் `தர்மசங்கடமான' நிலையை உணர்த்தியது. மெதுவாக என்னைப் பார்த்தவர், ``யோசித்து சொல்கிறேன்'' என்றார். பிறகு அவரே, ``இந்த விஷயத்தில் நானாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்பா- அம்மாவிடமும் கலந்து பேச வேண்டும்'' என்றார்.
அடுத்தடுத்து வந்த இரண்டொரு நாட்களில் மஞ்சுளாவின் பெற்றோரை சந்தித்தேன். அவர்களோ, ``எங்கள் பெண் விருப்பம் எதுவோ, அதுவே எங்கள் விருப்பமும். உங்கள் விருப்பம் பற்றி மஞ்சுளா எங்களிடம் சொன்னாள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசியது எங்களுக்கும் பிடித்திருக்கிறது. எனவே திருமண விஷயத்தில் எங்களுக்கும் சம்மதமே'' என்றனர்.
திருமணத்தை எளிமையாக நடத்தினோம். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார் மஞ்சுளா.
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
படங்களில் நடிப்பது தொடர்ந்தாலும், ஒரே மாதிரியான கதைகள் விஜயகுமாரை சற்று யோசிக்க வைத்தது. அதனால் வித்தியாசமான கதைகளைத் தேட ஆரம்பித்தார்.
இந்த சமயத்தில் வில்லனாக நடிக்கவும் அழைப்புக்கள் வந்தன. கதாநாயகனாக ரஜினி நடிப்பில் முன்னணியில் இருந்த நேரத்தில் அவரது படங்களில் கூட வில்லனாக? நடித்தார், விஜயகுமார்.
தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜியின் ``சவால்'', ``தியாகி'' போன்ற படங்களிலும் வில்லனாக நடிப்பதைத் தொடர்ந்தார்.
இப்படி வில்லன் நடிப்பில் பிஸியாக இருந்த நேரத்தில் மதுரையில் நடந்த ஒரு விழாவுக்கு விஜயகுமார் போனார். அப்போது சில ரசிகர்கள் அவரிடம், ``ஹீரோவாக நடித்து எங்களை சந்தோஷப்படுத்திய நீங்கள், இப்போது வில்லனாக நடிப்பது எங்களுக்கு வேதனை தருகிறது'' என்று சொல்ல, ரசிகர்களின் ஒட்டுமொத்த உணர்வாக அதை எடுத்துக் கொண்டு நடிப்பதையே நிறுத்தி விட்டார், விஜயகுமார்.
மூன்றாண்டுகள் இந்த நிலை நீடித்தது. மறுபடியும் விஜயகுமார் நடிக்க ஆரம்பித்தது குணசித்ர வேடங்களில்.
அதற்கான வாய்ப்பு, `ஜீ.வி.' பட நிறுவனம் மூலம் வந்தது.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி முடிவு குறித்து நடிகர்-நடிகைகள் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சென்னை:
ஜல்லிக்கட்டுக்கு உரிமை கோரி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பொங்கி எழுந்து போராடியது வரலாற்றுப் பதிவாக மாறியது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளை பணிய வைத்தனர்.
அந்த பரபரப்பு ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியிருந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் நேற்றிரவு கூறிய குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலை மீண்டும் உலுக்கும் வகையில் மாறியுள்ளது. அவரது குற்றச்சாட்டுக்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்களை பெரும்பாலானவர்கள் ஆதரித்து தகவல்களை பரவவிட்டுள்ளனர். இதன் காரணமாக சமூக ஊடகங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், அடுக்கடுக்காக பல கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார். அவை வருமாறு:-
"நிம்மதியாய் உறங்கு தமிழகமே... அவர்கள் நமக்கு முன்னால் விழித்து விடுவார்கள். சில வருடங்களுக்கு முன்பு பிப்ரவரி 7-ந் தேதி எனக்கு பிரச்சினைகள் (விஸ்வரூபம் பட சர்ச்சை) ஏற்பட்டன. மக்களின் அன்பு மட்டும் இருந்தால், எந்த சூழ்ச்சியில் இருந்தும் மீண்டு வெற்றி பெறலாம்.
பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்து சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவதை விடுத்து நாம் குற்றமற்ற கடமை செய்வோம் முடியுமா?.
தமிழ்நாட்டை தனிநாடாக பிரிக்க வேண்டாம். தமிழ்நாட்டுக்காக இந்தியா அகிம்சை வழியில் போராடும். யாரும் இறக்க மாட்டார்கள். ஆனால் அறியாதவர்கள் உயிரோடு மீள்வார்கள்.
சத்யராஜ்... பெரியார் பெரியார்னு வாய் கிழிய பேசும் நாம் இந்த நேரத்துல ஒரு டப்மாஷாவது போட வேண்டாமா? நாம் முதலில் மனிதர்கள். பிறகுதான் நடிகர்கள்.
மாதவன்... நீங்களும் தமிழக பிரச்சினை குறித்து பேசுங்கள். மோசமான அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்கும் நேரம். அதிருப்தியை சத்தமாக சொல்லுங்கள்".
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் ஆர்யா, டுவிட்டர் பக்கத்தில், "ஓ.பன்னீர்செல்வம் சரியான நேரத்தில் சிறப்பாக துணிச்சலாக பேசி இருக்கிறார். பாராட்டுகள்"என்று கூறியுள்ளார்.
நடிகர் சித்தார்த் கூறும்போது, "மெரினாவில் ஓ.பி.எஸ். தமிழக அரசியல் உண்மையாகவே கேம் ஆப் த்ரோன்ஸ் மற்றும் ஹவுஸ் ஆப் கார்ட்ஸ் சீரியல்களைப்போலவே இருக்கிறது"என்று கூறியுள்ளார்.
நடிகர் எஸ்.வி.சேகர், "அ.தி.மு.கவில் ஓர் ஆண் மகன். ஒரு பொருளாளர் நீக்கத்தில் பிறந்ததுதான் அ.தி.மு.க. எனும் கட்சி. வரலாறு திரும்புகிறது"என்று கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் இமான், "தமிழக அரசியலில் நம்பிக்கை துளிர்விட்டு இருக்கிறது. இதுதான் சிறந்த வழி. சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்து சரியான பேச்சு. நீதி நிலை நாட்டப்பட்டு இருக்கிறது"என்று கூறியுள்ளார்.
நடிகர் அருள்நிதி, "தமிழக மக்களுக்கு உண்மையை தெரிவித்து நேர்மையாக நடந்து இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். தைரியமான பேச்சு"என்று கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு, "ஒரு நாயகன் உதயமாகிறான்"என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டு உள்ளார்.
நடிகை கவுதமி, "இதற்காகத்தான் அம்மா, ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுத்தார். தன் மனசாட்சிப்படி நடக்கும் தைரியம் கொண்டவர். தன்மீது அம்மா வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார்"என்று கூறியிருக்கிறார்.
நடிகர் மன்சூர் அலிகான் கூறும்போது, "ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரிஜினல் பன்னீர்செல்வம் ஆகி இருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கிண்டல்களை எதிர்கொண்டவர் அவர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பதிவான சி.சி.டி.வி கேமரா காட்சிகளை 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்களை உடைக்கும் போராட்டத்தை நடத்துவேன்"என்று கூறியுள்ளார்.
திருப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த இசையமைப்பாளர்-டைரக்டர் கங்கை அமரன் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன். என் சொத்துகளை அபகரிக்க உடந்தையாக இருந்தவர். இவர் ஆட்சியில் அமருவது நியாயமா? ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளிக்கொண்டு வரவேண்டும். பன்னீர்செல்வம் உண்மையான ஆம்பளை.
சொத்து குவிப்பு தொடர்பான வழக்கு நிலுவையாக உள்ள சூழலில், எதற்காக முதல்வராக வரவேண்டும் என்று சசிகலா அவசரம் காட்டுகிறார்? எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு சசிகலாவுக்கு இருந்தாலும், மக்களின் ஆதரவு பன்னீர்செல்வத்துக்குத்தான் உள்ளது".
இவ்வாறு கங்கை அமரன் கூறினார்.

இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்து வெற்றி பெற்ற ரித்திகா சிங் தற்போது தாயுடன் சென்னைக்கு வந்து, புதுப்படங்களுக்கான கதை கேட்டு வருகிறார்.
குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகாசிங் இந்தி-தமிழில் மாதவனுடன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படம் வெற்றி பெற்றது. தெலுங்கிலும் இந்த படம் ‘ரீமேக்’ செய்யப்பட்டது.
அதன்பிறகு விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’யில் நடித்தார். தற்போது ராகவா லாரன்சுடன் ‘சிவலிங்கா’ படத்தில் நடித்திருக்கிறார். அரவிந்த் சாமியுடன் ‘வணங்காமுடி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதால் தமிழ் பட உலகு மீது தனிப்பற்று வைத்திருக்கிறார். தமிழ் கற்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். அடுத்து நடிக்கும் தமிழ் படங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனது தாயாருடன் சமீபத்தில் ரித்திகாசிங் சென்னை வந்துள்ளார். அப்போது நடிக்க இருக்கும் படங்கள் பற்றிய கதைகளையும் சென்னையிலேயே கேட்டு இருக்கிறார்.
சில முன்னணி நடிகைகள் கதை கேட்க, டைரக்டர்களை தாங்கள் இருக்கும் இடத்துக்கு வரச்சொல்வது வழக்கம். இந்த நிலையில், ரித்திகாசிங் சென்னை படக் கம்பெனிகளுக்கே தாயாருடன் வந்து கதை கேட்டது தமிழ் பட த.யாரிப்பாளர்கள் இயக்குனர்களிடம் அவருக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.