என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள 'எமன்' படத்தின் படக்குழு அளித்துள்ள பேட்டியை கீழே பார்ப்போம்.
    ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் 'எமன்'. இப்படத்தை, 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' சார்பில் ராஜு மகாலிங்கமும், 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்' சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனியும் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படத்தில் தியாகராஜன், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் போது வெளியாக உள்ள 'எமன்' படம் குறித்து படக்குழு தெரிவித்ததாவது,

    இயக்குநர் ஜீவா சங்கர்: 'எமன்' படம் தற்போதைய அரசியல் கண்ணோட்டத்தை மையமாகக் கொண்டு உருவான கதை அல்ல. இப்படத்தின் கதையை பல ஆண்டுக்கு முன்பே தான் எழுதிவிட்டதாக கூறிய ஜீவா சங்கர், ஒருவன் தான் செய்யும் செயல்களுக்கான கர்ம வினைகளை அதே பிறவியிலேயே அனுபவிப்பான் என்பதை முக்கிய கருவாகக் கொண்டு உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் தியாகராஜனை மனதில் கொண்டே கதை எழுதியாகவும் ஜீவா சங்கர் தெரிவித்தார். இப்படத்திற்கான கதை, வசனங்கள் அனைத்தும் முன்பே எழுதப்பட்டிருந்தாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மக்களை திருப்திபடுத்தும் படியாக 'எமன்' இருக்கும். பிச்சைக்காரன் படத்தில் 500, 1000 ரூபாய் ஒழிப்பு வசனம், தற்போதைய சூழலுக்கு ஏற்ப அமைந்தது போல் 'எமன்' படமும், அதன் வசனங்களும் பெரிய அளவில் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

    விஜய் ஆண்டனி: இப்படத்திற்காக தான் யாரையும் பின்பற்றவில்லை. கதைக்கு தேவையானதை இயக்குநர் கேட்டதால் அதற்கேற்ப நடித்துள்ளேன் என்றார்.

    தியாகராஜன்: எதிர்மறையான கதாபாத்திரம் என்பதால் கதையின் வலு குறையக்கூடாது. எனவே இயக்குநர் தன்னை எவ்வாறு சித்தரித்துள்ளாரோ அதற்கு ஏற்றவாறு தன்னை உருமாற்றியதாக தியாகராஜன் தெரிவித்தார்.

    மியா ஜார்ஜ்: இப்படத்திற்கான கதை சொல்வதற்கு முன்பே ஜீவா சங்கர், விஜய் ஆண்டனி கூட்டணியில் நடிக்க தான் ஒப்பு கொண்டேன். `அமரகாவியம்' படத்திற்கு பிறகு ஜீவா சங்கர் இயக்கத்தில் நடித்திருப்பது நல்ல அனுபவம் என்றார். இப்படத்தில் "என் மேல கைவச்சா காலி" என்ற பாடலுக்கு தான் குத்தாட்டம் போட்டிருப்பதாகவும் மியா கூறினார்.

    பிப்ரவரி 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 'எமன்' படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    தன்னுடைய குடும்பத்துக்காக பெரிய நடிகரின் படங்களில் நடிக்க ஒரு நடிகை மறுத்துள்ளார். அது யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    காட்டுக்கே ராஜாவான நடிகர், சில்லென்று காதலித்த நடிகையை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிகையை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கண்டிஷனோடுதான் திருமணம் செய்துகொண்டார். ஆனால், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தனது மனைவியை மீண்டும் சினிமாவில் நடிக்க ஒப்புதல் வழங்கினார் காட்டு ராஜா நடிகர்.

    கணவரின் ஒப்புதலுடன் மீண்டும் சினிமாவுக்குள் பிரவேசம் செய்த நடிகைக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து வாய்ப்புகளும் அவருக்கு குவியத் தொடங்கியது. இந்நிலையில்தான், தளபதி நடிகரின் புதிய படத்தில் சில்லென்ற நடிகை நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி நடிகருடன் சேர்ந்து நடிப்பதில் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தார் அந்த நடிகை.



    ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென நடிகை அந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். காரணம் கேட்டபோது, அது, இது என்று சொல்லி மழுப்பினார். இந்நிலையில், நடிகை தற்போது அந்த படத்திலிருந்து விலகியதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

    அதாவது, மறுபடியும் நடிகை சினிமாவில் நடிக்க நுழையும்போது, யாருடனும் ஜோடியாக டூயட் பாடுவதோ, ஒட்டி உரசி நடிப்பதோ கூடாது என்ற கண்டிஷனோடுதான் அவரது காதல் கணவர் நடிக்க ஒப்புதல் வழங்கினாராம். அதை ஒப்புக்கொண்டே நடிகையும் சினிமாவில் மறு பிரவேசம் செய்துள்ளாராம்.

    ஆனால், தளபதி நடிகரின் படத்தில் நடிகருடன் சேர்ந்து டூயட் பாடுவதுபோல் எல்லாம் காட்சிகள் இருப்பதால்தான் அப்படத்தில் நடிகை நடிக்க குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பவே அதிலிருந்து அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
    பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ், மலையாள பட உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் பாவனா. அவரை சில சமூக விரோதிகள் பாலியல் பலாத்காரம் செய்த செயலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

    இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கேரள அரசும், காவல்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். திரைப்படத் துறையில் நடைபெறும் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எப்போதும் ஒத்துழைப்பு அளிக்கும்.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    வேதாளம் படத்தின் போது செய்யாததை விவேகம் படத்திற்காக செய்ய உள்ளதாக இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
    `சிறுத்தை' சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் படம் `விவேகம்'. `வீரம்',  `வேதாளம்' படத்திற்கு பின்னர் சிவாவுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும்  பல்கேரியாவின் பிரபல ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான `விவேகம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் சிவா தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழச்சியில்  மாணவர்கள் கேள்விக்கு சில ஸ்வாரஸ்யமான தகவல்களை தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது,

    `விவேகம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும்  பல்கேரியா செல்ல உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக அஜித் நடித்த `வேதாளம்' படத்தின் டீசரை மட்டுமே வெளியிட்டோம்.

    `விவேகம்' படத்தில் இரண்டு மாறுபட்ட வேடத்தில் அஜித் நடித்துள்ளதாக சிவா கூறினார். ஆனால் `விவேகம்' படத்தில்  அஜித்தின் ஒரு வேடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், மற்றொரு வேடத்தின் போஸ்டர் விரைவில்  வெளியிடப்படும் என்றார். மேலும் சரியான இடைவெளியில் `விவேகம்' படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி  ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்றும் சிவா கூறினார்.

    மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதால் தல ரசிகர்கள் விரும்பும் வகையில் படத்தின் திரைக்கதைக்காக மிகவும்  மெனக்கிட்டதாக சிவா தெரிவித்தார். மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் கட்டுக்கோப்பான உடல் விஎப்எக்ஸ் மூலம்  உருவாக்கப்பட்டதாக வந்த தகவலை மறுத்த சிவா, அந்த உடற்கட்டுக்காக அஜித் கடுமையாக உழைத்ததாக தெரிவித்தார்.

    `விவேகம்' படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர்.
    பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் வற்புறுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    “நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஒட்டுமொத்த பெண் இனத்துக்கு எதிரான வக்கிரம செயல். பெண் இனம் மனிதாபிமானமற்ற ஆண்களால் தவறாக நடத்தப்படுவதை எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து காரில் பயணம் செய்த பாவனாவை டிரைவர் உதவியுடன் சிலர் கடத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் மலையாள நடிகர் சங்கத்தினருடன் தொடர்பு கொண்டு பேசினோம்.

    குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேரள முதல் மந்திரிக்கும் காவல்துறைக்கும் நடிகர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பினோம். பாவனாவை கடத்தியது பணத்துக்காகவா? முன்விரோதம் காரணமாகவா? பழிவாங்கும் நோக்கிலா? என்பதை போலீசார் விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும். குற்றவாளிகள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த சம்பவத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள நவீன தொழில் நுட்பங்கள் அதிகமாக இருக்கிறது. அவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பயணத்திலும் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். வாடகை காரில் பயணம் செய்யும் பெண்கள் அந்த டிரைவரின் அனைத்து பின்னணியையும் அறிந்து கொள்ள வேண்டும்.

    நடிகைகள் இரவு நேரத்தில் படப்பிடிப்புகளை முடித்து விட்டு விமான நிலையத்துக்கு 4 மணிநேரம் காரில் பயணம் செய்து வரவேண்டி இருக்கிறது. அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எண்ணூரில் ஒரு சிறுமிக்கு நேர்ந்துள்ள கொடுமையும் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் தொடர்புள்ள குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.”

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழ்நாடு மாநில பளு தூக்கும் போட்டியில், வெண்கல பதக்கத்தை வென்ற ரம்யா இந்தியாவிற்காக பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்ப்போம்.
    ஐந்தாவது தமிழ்நாடு மாநில பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றதன் மூலம் தேசிய அளவிலான  போட்டியில் பங்கேற்க நடிகை ரம்யா தகுதி பெற்றுள்ளார். தொகுப்பாளினி, நடிகை என்ற அடையாளங்கள் ரம்யாவிற்கு ஒருபுறம்  இருக்க, தற்போது பளு தூக்கும் போட்டியிலும் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கிறார்.

    இதுகுறித்து ரம்யா கூறியதாவது,

    பல முன்னணி வீர்கள் பங்கேற்ற இந்த பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம்  இல்லை. அத்தகைய வீரர்களோடு போட்டியில் கலந்து கொள்வதன் மூலம், நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். 27.5 கிலோ  பளு தூக்கும் பிரிவில் ஆரம்பித்து, 32.5 கிலோ பிரிவிற்கு முன்னேறி, தற்போது 35 கிலோ பிரிவில் பங்கேற்றுள்ளேன்.
     
    போட்டி சற்று கடினமாக இருந்தாலும், என்னுடைய விடா முயற்சியால் தற்போது மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில்  வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறினார்.

    தன்னுடைய நாட்டிற்காக விளையாடுவதற்காக, தான் கடினமான பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் ரம்யா கூறினார்.
    ராதாமோகன் இயக்கத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாதவராக நடிக்கும் அருள்நிதி நடிக்க உள்ளார். இப்படம் குறித்து சில முக்கிய தகவல்களை கீழே பார்ப்போம்.
    தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களுள் ஒருவர் அருள்நிதி தமிழரசன். அவர் நடிப்பில்  வெளிவந்த `மவுன குரு', `டிமான்டி காலனி', `நாலு போலீசும் நல்ல இருந்த ஊரும்', `ஆறாது சினம்' உள்ளிட்ட படங்கள் தமிழ்  சினிமாவில் அருள்நிதிக்கு ஒரு முக்கிய இடத்தை பெற்றுத்தந்தது.

    இந்நிலையில் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் ஒப்பந்தமாகியுள்ள அருள்நிதி, ராதாமோகன் இயக்கத்தில் மற்றொரு  படத்திலும் நடிக்க உள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ராதா மோகன் இயக்கும் அந்த படத்திற்கு `பிருந்தாவனம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ராதாமோகன் `மொழி',  `பயணம்' உள்ளிட்ட இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தது.

    முன்னதாக ராதாமோகன் இயக்கத்தில் வெளியான `மொழி' படத்தில் ஜோதிகா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக  நடித்திருந்த நிலையில், `பிருந்தாவனம்' படத்தில் அருள்நிதி காது கேட்காத, வாய் பேச முடியாத நபராக நடிக்க உள்ளதாக  அவரே குறிப்பிட்டுள்ளார். அருள்நிதியின் புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
    நடிகர் விஜயகுமார் குடும்பம் பெரியது. அவருக்கு 5 மகள்கள்; ஒரு மகன்.
    நடிகர் விஜயகுமார் குடும்பம் பெரியது. அவருக்கு 5 மகள்கள்; ஒரு மகன்.

    விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.

    விஜயகுமார் நடிகராகப் புகழ் பெற்ற பிறகு, அவர் காதலித்து மணந்தவர் நடிகை மஞ்சுளா.

    விஜயகுமார் -மஞ்சுளா தம்பதிகளுக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என்று 3 மகள்கள்.

    ஸ்ரீதேவி தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். மற்ற 5 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    தனது குடும்பம் பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அப்பா வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். `கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வந்து வெள்ளாளரானார்' என்றொரு பாடல் உண்டு. இந்த வழியில் வந்த சமூகம் எங்களுடையது. பட்டுக்கோட்டையை சுற்றிலும் உள்ள 32 கிராமங்களில் எங்கள் சமூகத்தவர்தான் இருக்கிறார்கள். இந்த தொகுதியில் போட்டியிடும் எம்.எல்.ஏ.யின் வெற்றி இந்த 32 கிராமங்களில் உள்ளவர்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

    இந்த சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தில் இருந்தே திருமணம் நடந்தது. மனைவி முத்துக்கண்ணு நான் நடிக்க வரும் முன்னரே எனக்கு மனைவி ஆனவர். என் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர்.

    கலையுலகுக்கு வந்த பிறகு எனக்கு மனைவியான மஞ்சுளா, பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். மனைவியர் இருவருமே சொந்த சகோதரிகள் போல் அன்பு செலுத்துகிறார்கள்.

    மஞ்சுளா பற்றி சொல்ல வேண்டும். திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி என முன்னணி கலைஞர்களுக்கு ஜோடியாக நடித்தவர். ஆந்திராவில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் போன்ற சூப்பர் ஸ்டார்களுடனும் கதாநாயகியாக நடித்தவர். இவர் கலை மூலம் வெளிப்பட்டாலும் இவரது பூர்வீகம் மற்ற துறைகளில் பிரபலமானவர்களைக் கொண்டிருக்கிறது.

    மஞ்சுளாவின் கொள்ளுத்தாத்தா சர் டி.பி.முத்துசாமி அய்யர் சென்னை ஐகோர்ட்டின் முதல் நீதிபதியாக பணியாற்றியவர். அதை நினைவுபடுத்தும் வகையில் சென்னை ஐகோர்ட்டில் அவருக்கு மார்பளவு சிலை வைத்து மரியாதை செய்திருக்கிறார்கள்.

    மஞ்சுளாவின் தாத்தா சர்.டி.ஏகாம்பரம் அய்யர், தமிழ்நாட்டின் முதல் வருமான வரி ஆணையராக இருந்தவர். அப்பா பானிராவ் ரெயில்வேயில் ஐ.ஜி.யாக இருந்தவர். இவர் ஆற்றிய பணி குறித்து இப்போதும் தென்னக ரெயில்வேயில் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.

    மூத்த மகள் கவிதா திருமணமாகி கணவர் ரவிசங்கருடன் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இருக்கிறாள்.

    அடுத்த மகள் டாக்டர் அனிதாவின் கணவர் கோகுலகிருஷ்ணா. இவர்கள் துபாயில் இருக்கிறார்கள்.

    அடுத்தடுத்த மகள்கள் வனிதாவும், பிரீதாவும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களை மணந்து கொண்டிருக்கிறார்கள்.

    வனிதா மணந்து கொண்ட ஆகாஷ், நடிகர். பிரீதாவின் கணவர் ஹரி, சினிமா டைரக்டர்.

    மகன் அருண் விஜய்க்கு கடந்த ஆண்டு திருமணமானது. மனைவி பெயர் ஆர்த்தி.

    பிள்ளைகள் திருமண விஷயத்தில் நான் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' என்ற கண்ணோட்டத்தில் நடந்து கொண்டேன். ஜாதி மத பேதமின்றி ஒரு இந்தியனாக இருந்து காட்டவேண்டும் என்பது என் முடிவான எண்ணம். கலைத்துறைக்குள் வந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, `என்னை ரசிக்கிற நேசிக்கிற இத்தனை மக்களும் என்னை சொந்தம் கொண்டாடியபோதே, `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' சிந்தனைக்குள் வந்துவிட்டேன்.

    கோடிக்கணக்கில் நான் சம்பாதிக்காவிட்டாலும், கோடிக்கணக்கான ரசிகர் இதயங்களில் இருக்கிறேன். ஒரு கலைஞனான எனக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும்? இந்த வகையில் என்னை கலை மூலம் அடையாளம் காட்டிய கலைத்தாய்க்கும் என் நன்றி.

    என்னை இந்த பூமிக்குத் தந்த என் பெற்றோரையும் நான் கொண்டாடி மகிழ்கிறேன். அப்பா எம்.என்.ரெங்கசாமி என் தன்னம்பிக்கைக்கு ஆணிவேராக இருந்தார். அவர் மட்டும் எனது சினிமா கனவுக்கு உயிர் கொடுக்காதிருந்தால், `நிச்சயம் நீ ஜெயிப்பாய்' என்று வாழ்த்தி சென்னைக்கு அனுப்பாதிருந்தால், பஞ்சாட்சரம் என்ற பெயருடன் கிராமத்தில் சாதாரண பிரஜையாகத்தானே இருந்திருப்பேன்.

    இந்த வகையில் கலை மூலம் என்னை உலகறியச் செய்த அப்பாவுக்கு எங்கள் ஊரில் 1995-ம் ஆண்டு ஒரு சிலை எழுப்பியிருக்கிறேன். அப்பா ரைஸ் மில் நடத்திய இடத்தில் தம்பி சக்திவேல் `எம்.என்.ஆர்' என்ற பெயரில் ஒரு திருமண மண்டபம் கட்டியிருக்கிறார். ரைஸ் மில் இருந்த இடத்தில் என் பங்குக்கான பகுதியில் அப்பாவுக்கு சிலை வைத்திருக்கிறேன்.

    என் தாயாருக்கும் சிலை வைக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். அப்பா  95 வயதிலும், அம்மா 90 வயதிலும் இறைவனடி சேர்ந்தார்கள். அது உலகப்பிரகாரம். என் இதயப் பிரகாரம் எப்போதும் என்னுடன் சிலையாக மட்டுமின்றி நிலையாகவும் இருந்து கொண்டிருப்பார்கள்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.

    பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்களிடம் எவ்வாறு பேச வேண்டும்? என ஆண்களுக்கு சொல்லிக்கொடுக்குமாறு நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகை பாவனாவை காரில் கடத்தி அவரை பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நானும் பாலியல் தொந்தரவை அனுபவித்தவள் தான் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ஒரு பெரிய தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியுடனான கூட்டம் முடிந்தபிறகு அவர் என்னிடம் வெளியே போகலாமா? என்று கேட்டார். நான் வேலை விஷயமாகவா? எனக் கேட்டபோது இல்லை இது வேறு விஷயம் என கூறினார். நான் கோபத்துடன் இங்கிருந்து கிளம்புங்கள் எனக் கூறியபோது அவ்வளவு தானா? என சிரித்துக்கொண்டே அங்கிருந்து வெளியேறினார்.

    இந்த விஷயம் குறித்து கேள்விப்படுபவர்கள் சினிமா துறை இப்படித்தான் என தெரிந்து தானே அங்கு வருகிறீர்கள். பின்னர் ஏன் இப்பொழுது இதுகுறித்து கூறுகிறீர்கள் எனக் கேட்பர். நான் ஒரு நடிகை. திரையில் கவர்ச்சியாக நடிப்பதால் என்னை மோசமாக நடத்த வேண்டும் என்பது அர்த்தமல்ல. இது என்னுடைய வாழ்க்கை. பாலியல் தொந்தரவுகளை சகித்துக்கொண்டு தான் சினிமா துறையில் இருக்க வேண்டும் என்ற வாதம் சரியானதல்ல.

    பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் எனக் கூறுவதை விட்டுவிட்டு பெண்களை எப்படி நடத்த வேண்டும்? அவர்களிடம் எவ்வாறு பேச வேண்டும் என ஆண்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.

    திரையுலகில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் பெண்களை அவமானப்படுத்துவது நிகழ்ந்து வருகிறது. பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. நம் கல்வி தகுந்த பாடங்களைக் கற்றுத்தரவில்லை. இதைப் பற்றிப் பேசப் பயப்படும் எல்லாப் பெண்களுக்குமாக நான் இங்கு இதைப் பற்றிப் பேசுகிறேன்.

    இப்போது இதைப் பற்றிப் பேசாவிட்டால் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கனவாகவே இருக்கும். சமூகத்தில் இருந்து பாலியல் வன்முறை என்கிற வார்த்தையை நீக்க முடியாமல் போய்விடும். நான் அமைதியாக இருக்கப் போவதில்லை. என் எல்லா சகோதரிகள், நண்பர்களும் இதுபற்றி பேசவேண்டும் என்று விருப்பப்படுகிறேன்''.

    இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
    இயக்குனர் பாலாவின் புதிய படத்தில் நடிகை ஜோதிகா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    பிரம்மா இயக்கத்தில் மகளிர் மட்டும் படத்தில் நடித்து வரும் ஜோதிகா அடுத்ததாக இயக்குனர் பாலாவின் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.இப்படத்தை ஈஓஎன் ஸ்டுடியோஸ் (EON Studios) என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் பி ஸ்டுடியோஸ் (B Studios) நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.

    இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பிரபல நாயகன் யார்? என்ற விவரம் இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் துவங்கும் இப்படத்தினை பற்றிய விரிவான செய்திகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    சூர்யாவை வைத்து 'நந்தா', 'பிதாமகன்' போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த பாலா இப்படத்தின் மூலம் முதன்முறையாக ஜோதிகாவை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகை பாவனாவை மானபங்கம் செய்த விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்திருக்கிறார்.
    புது டெல்லி:

    தமிழ், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா.இவர் கடந்த 17-ந்தேதி இரவு படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பினார். அத்தானி என்ற இடம் அருகே வந்தபோது  இவரது கார் மீது இன்னொரு கார் மோதியது. இதனால் நடிகை பாவனா சென்ற காரை, டிரைவர் நிறுத்தினார்.

    அப்போது இன்னொரு காரில் வந்த 5 பேர் கும்பல் பாவனா காருக்குள் நுழைந்தனர். அவர்கள் ஓடும் காருக்குள் 2 மணி நேரம்  பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். அதனை செல்போனிலும் படம் எடுத்துக் கொண்டனர்.

    அதன்பிறகு கொச்சி அருகே காரை நிறுத்தி அந்த கும்பல் கீழே இறங்கிக் கொண்டனர். பின்னால் வந்த இன்னொரு காரில் ஏறி  அந்த கும்பல் தப்பிச் சென்றது. இந்த சம்பவம் பற்றி நடிகை பாவனா, டைரக்டரும், நடிகருமான லாலிடம் தெரிவித்தார். அவர்  போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகராவுக்கு தகவல் கொடுத்தார்.

    அவரது உத்தரவின் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் நடிகர் லால் வீட்டுக்கு விரைந்துச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த நடிகை பாவனாவிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.மேலும் பாவனா கொடுத்த புகாரின் பேரில் அவரது கார் டிரைவர் மார்ட்டின் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 7 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகை பாவனா கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

    இதுகுறித்து வெங்கய்யா நாயுடு கூறுகையில் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முன்னுதாரணமாக தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்றார்.
    நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள முதல்வருக்கு விஷால் கடிதம் எழுதியுள்ளார்.
    சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    இந்த படத்தில் நடிக்கும் விஷால் பிச்சாவரத்தில் தங்கி உள்ளார். இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் தொடர்புடைய  குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பாவனா போல்  பல பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன் கொடுமைகள் வெளியில் தெரிவது இல்லை.

    அப்படியே தெரிந்தாலும் சரியான நடவடிக்கை இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் குட்டச், பேட்டச் சொல்லி வளர்க்க  வேண்டும், அரசும் மாணவர் களுக்கு செக்ஸ் கல்வியை பாடமாக கொண்டுவந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கடந்த சில ஆண்டுகளாக பெண் களுக்கு எதிராக வன் கொடுமைகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க கடுமையான  சட்டம் கொண்டு வந்து தண்டனை வழங்க வேண்டும்.

    இப்போது தமிழகத்தில் உள்ள நிலையை பார்க்கும் போது டி.வி.யை பாக்கவே வெறுப்பாக உள்ளது. யார் வந்தாலும்  பிரச்சினையில்லை. வந்த வர்கள் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தலில் ஒரு பைசா கூட வாங்காமல் வாக்களிப்  பார்கள். இந்த தேர்தலில் சிலர் காசு வாங்கியதால் இப்போது நடக்கும் சம்பவத் திற்கு குற்ற உணர்ச்சியுடன் கூனிகுறுகி  நிர்கிறார்கள்.

    விவசாயிகளின் கடன் களையும், ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க வாங்கிய கடன்களையும் ரத்து செய்யவேண்டும்.

    விவசாயிகளின் வாழ்வாதரத்தை அழிக்கும் சீமைகருவேலமரங்களை முற்றிலும் அழிக்க உறுது ணையாக இருப்பேன். பல  இடங்களில் நண்பர்கள், ரசிகர்கள் உதவியுடன் அழித்து வருகிறேன்.

    சிதம்பரம் பகுதியில் இதனை அழிக்க விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்களை கொண்டு ஏற்பாடு செய்துள்ளேன்.

    விவசாயிகளின் வாழ்வில் உள்ள குறைபாடு களை உணர்வு பூர்வமாக அறிய விரைவில் தஞ் சையில் 5 ஏக்கர் நிலம் வாங்கி  விவசாயம் செய்து விவசாயிகளின் கடன்களுக்கு முற்றுபுள்ளி வைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×