என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாவனா மானபங்கம்: குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சட்ட மசோதா கொண்டுவரப்படும் - வெங்கய்யா நாயுடு
    X

    பாவனா மானபங்கம்: குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சட்ட மசோதா கொண்டுவரப்படும் - வெங்கய்யா நாயுடு

    நடிகை பாவனாவை மானபங்கம் செய்த விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்திருக்கிறார்.
    புது டெல்லி:

    தமிழ், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா.இவர் கடந்த 17-ந்தேதி இரவு படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பினார். அத்தானி என்ற இடம் அருகே வந்தபோது  இவரது கார் மீது இன்னொரு கார் மோதியது. இதனால் நடிகை பாவனா சென்ற காரை, டிரைவர் நிறுத்தினார்.

    அப்போது இன்னொரு காரில் வந்த 5 பேர் கும்பல் பாவனா காருக்குள் நுழைந்தனர். அவர்கள் ஓடும் காருக்குள் 2 மணி நேரம்  பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். அதனை செல்போனிலும் படம் எடுத்துக் கொண்டனர்.

    அதன்பிறகு கொச்சி அருகே காரை நிறுத்தி அந்த கும்பல் கீழே இறங்கிக் கொண்டனர். பின்னால் வந்த இன்னொரு காரில் ஏறி  அந்த கும்பல் தப்பிச் சென்றது. இந்த சம்பவம் பற்றி நடிகை பாவனா, டைரக்டரும், நடிகருமான லாலிடம் தெரிவித்தார். அவர்  போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகராவுக்கு தகவல் கொடுத்தார்.

    அவரது உத்தரவின் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் நடிகர் லால் வீட்டுக்கு விரைந்துச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த நடிகை பாவனாவிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.மேலும் பாவனா கொடுத்த புகாரின் பேரில் அவரது கார் டிரைவர் மார்ட்டின் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 7 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகை பாவனா கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

    இதுகுறித்து வெங்கய்யா நாயுடு கூறுகையில் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முன்னுதாரணமாக தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்றார்.
    Next Story
    ×