என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தற்கொலை செய்துகொண்ட விவசாயி ஒருவரின் குடும்பத்துக்கு ராகவா லாரன்ஸ் உதவி செய்ய முன்வந்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பு மட்டுமில்லாமல் பல்வேறு சமூக நலன்களிலும் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இருதய ஆபரேஷன், கல்வி என பல வகையிலும் ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார்.

    இந்நிலையில், இன்று விவசாய சங்கத்தை சேர்ந்த சில விவசாயிகள் ராகவா லாரன்ஸை சந்தித்து, விவசாயிகள் தற்கொலை பற்றி பேசியுள்ளனர். அப்போது, மயிலாடுதுறையை சேர்ந்த கண்ணதாசன் என்ற விவசாயி, ரெயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை கேட்டதும், ராகவா லாரன்சுக்கு மிகுந்த வேதனையை கொடுத்ததாம்.



    தற்கொலை செய்துகொண்ட விவசாயி கண்ணதாசன், ஆதரவற்ற அவரது குடும்பம்


    அவருடைய குடும்பத்துக்கு ராகவா லாரன்ஸ் உதவ முன்வந்துள்ளார். மேலும், அவர்களுக்கு உதவ முன்வருபவர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, விவசாயிகளுக்காக நாம் இருக்கிறோம் என்பதை காட்டவேண்டும். விவசாயிகள் இல்லாமல் நாம் இல்லை. அவங்க சேத்துல கால் வச்சாத்தான், நாம சோத்துல கை வைக்க முடியும் என்றார்.

    மேலும், K.கண்ணதாசன், நெ.1, ஆலங்குடி, ஆலங்குடி (அஞ்சல்), மயிலாடுதுறை (தாலுக்கா), நாகப்பட்டினம் (மாவட்டம்). இதுதான் அந்த விவசாயியின் முகவரி என்று இதனையும் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 
    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மாநில அரசியல் நிகழ்வுகளை ரத்தின சுருக்கமாக சித்தரித்து, நடிகர் கமல்ஹாசன் பெயரால் இணையதளத்தில் உலாவரும் நேர்த்தியான, கருத்தாழம் மிக்க அற்புத வரிகளால் இயற்றப்பட்ட கவிதை பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மாநில அரசியல் நிகழ்வுகளை ரத்தின சுருக்கமாக சித்தரித்து, நடிகர் கமல்ஹாசன் பெயரால் இணையதளத்தில் உலாவரும் நேர்த்தியான, கருத்தாழம் மிக்க அற்புத வரிகளால் இயற்றப்பட்ட கவிதை பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நடிகர் கமல்ஹாசன், அடுத்தடுத்து மாநிலத்தின் அரசியல் நிகழ்வுகள் தொடர்பாகவும், எதிர்பாராத திருப்புமுனைகளை சந்தித்துவரும் தமிழக ஆட்சியைப் பற்றியும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்துள்ளார்.



    சில பேட்டிகளிலும் தனது மனதுக்கு சரி என்று தோன்றுவதை வெளிப்படையாக தெரிவித்தும் வரும் கமல்ஹாசன் பெயரால் தற்போது வெளியாகியுள்ள ஒரு கவிதை இணையவாசிகள் இடையே பரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    மன்னர்கள் ஆட்சிக் காலத்தின்போது மக்களின் மனநிலைக்கு மாறாக அரசு நடத்தும் ஆட்சியாளர்களை தட்டிக்கேட்டு, குத்திக்காட்டி, திருத்தும் வகையில் பண்டைக்கால தமிழ் புலவர்கள் தங்களது கவித்திறனை ஒரு போராயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய கவிதை வடிவத்தை ‘அறக்கவி’ ‘ஆசுக்கவி’ என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது.

    ‘அறம்’ எனப்படும் நீதி, நியாயம் மற்றும் தர்மத்தை ஆட்சியாளர்கள் மதிக்காமல் மீறும்போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் சில புலவர்கள் இதுபோன்ற அறக்கவிதைகளை இயற்றி ஆட்சியாளர்களை அகற்றும் புரட்சியாளர்களாக மக்களை மாற்றிய நிகழ்வுகள் வரலாற்றில் பரவலாக காணக் கிடக்கின்றது.

    அவ்வாறு, தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் நிலவரம் தொடர்பாக வெகு துல்லியமாகவும் ரத்தின சுருக்கமாகவும் அழகிய தமிழ்நடையில், சந்தம் நழுவாத சிந்தாக இயற்றப்பட்ட ஒரு கவிதை தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, வைரலாக பரவியும் வருகிறது.



    ‘சிங்கமில்லாக் காடு’ ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை’ என்ற தலைப்புகளுடன், ‘நடிகர் கமல்ஹாசன் எழுதிய கவிதை’ என்ற அறிமுகத்துடன் பலரது பகிர்வாக உலாவரும் அந்த அற்புதப் படைப்பின் வைர (டைனமைட்) வரிகள் இதோ..:-

    செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
    ஜெயமாய்க் காட்டை ஆண்டது
    மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
    மர்மமாய் அதுவும் மாண்டது

    உடனிருந்த கள்ள நரியொன்றின்
    உள்ளத்தில் ஆசையோ மூண்டது
    புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
    புதிய வேடம் பூண்டது!

    வேரில் ஊற்றிய வெந்நீராய்
    வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்
    திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
    தியான நாடகம் போட்டது!

    ஊரில் உள்ள உத்தமர்கள்
    ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
    தேரில் தன்னை ஏற்றிடவே
    திருடர்கள் துணையைக் கேட்டது!

    அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
    தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
    விழியில் தீபம் ஏற்றியே
    வித்தைக் காட்டத் தொடங்கியது!

    நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
    சொத்தை வாங்கிய வழக்கினது
    திருத்தி எழுதிய தீர்ப்பாலே
    நரியின் கனவோ முடங்கியது!

    காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
    அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
    அவரவர் வேலையை மறந்துவிட்டு
    அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!

    காசை வாங்கி வாக்களித்த
    கானகத்து உயிர்களெல்லாம்
    ஆசை வெறுத்த மனத்துடனே
    அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!

    இவ்வாறு அந்த கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சமூகக் கோபம், கண்ணதாசனின் உவமைநயம், வாலியின் சொல்லாட்சி ஆகியவை ஒருசேர உள்ளடங்கிய இந்தக் கவிதையை படிக்கும் கமல்ஹாசனின் ரசிகர்கள் அவர் கவிதைத்துறையையும் விட்டுவைக்கவில்லை என்ற மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் கிடக்கின்றனர்.

    அதேவேளையில், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் திருடர்கள், நரி, ஓநாய், திருடர்கள், அடிமைகள் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளதை அறிந்து ஆவேசப்படுகின்றனர்.

    இந்நிலையில், இந்த கவிதைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து பதிவிட்டுள்ள அவர், ‘நீள் கவிதை என் பெயரில் உலாவருகிறது. தவறு செய்தால் ஒப்புக்கொள்வேன். அந்தத் தப்பு எனதல்ல. செய்தவர் துணிந்து மன்னிப்புக் கேட்கவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



    கருத்தாழம் மிக்க இந்த கவிதை திருவிழா கூட்டத்தில் காணாமல் போன ‘அனாதை குழந்தை’ போல் தற்போது ஆகிவிட்டாலும், இணையத்தில் மறுபதிவுகளும், மறுபகிர்வுகளும் மென்மேலும் வைரலாகி கொண்டே வருவது, குறிப்பிடத்தக்கது.
    ஈழத்து இளம் கவிஞர் ஒருவர் சர்வதேச ஊடகங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    இசையின் இப்போதைய உச்சமான வடிவம் சொல்லிசை. வார்த்தைகளை இசையுடன் இணைத்து வேகமுடன் ஆனால் அதிக அர்த்தத்துடன் கருத்து ஆழத்துடன் வெளிப்படுத்தும் ஒரு முறை. உலகம் முழுதும் இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு இசை முறை இது.

    ஈழத்தில் பிறந்து தற்போது டென்மார்க்கில் வாழ்ந்து வரும் இளம் சொல்லிசை கலைஞன் டேரியல் தன்னுடைய புதிய படைப்புகளை இப்போது சர்வதேச முன்ணணி ஊடகங்களில் வெளியிட்டு புதிய வீச்சு ஒன்றை உருவாக்கி கொண்டிருக்கிறார். மிகவும் சிறந்த சர்வதேச இசை நிறுவனமான நொய்ஜி நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச முன்னணி ஊடகங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

    இவருடைய தற்போதைய புதிய பாடலான மருந்து என்பது நவீனமுறையில் படமாக்கப்பட்டு இதுவரைகால எடிட்டிங் முறையில் காணப்படாத அழகிய முறையில் சேர்க்கப்பட்டு இப்போது யூடியுப்பில் வெளியிடப்பட்டுள்ளது. உலகம் மீதான எங்களின் கரிசனையை, மனித உணர்வுகள் மீதான எமது தேடலை புதிய சொற்களில் இசையாக்கும் இந்த இளைஞனையும் அவரது முயற்சியையும் இனிவரும் காலங்களில் அனைத்து ஊடகங்களும் வெளியிடும் என்று நம்புவோமாக..

    ரஜினி படத்தில் மீண்டும் ஒரு பாலிவுட் நடிகை நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    சமீபகாலமாக ரஜினி நடித்துவரும் படங்களில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகிறார். ‘லிங்கா’ படத்தில் சோனாக்ஷி சின்ஹா நடித்தார். அதைத் தொடர்ந்து ‘கோச்சடையான்’ படத்தில் தீபிகா படுகோனே, ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே என பாலிவுட் நடிகைகள் நடித்து வந்தனர்.



    இந்த வரிசையில், ரஜினி அடுத்தாக பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் ‘த டர்டி பிக்சர்‘, ‘கஹானி’ ஆகிய படங்கள் மூலம் தனிக்கவனம் பெற்ற வித்யாபாலன், இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.



    ரஜினி - பா.ரஞ்சித் இணையும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார். மேலும், இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. ரஜினி தற்போது ‘2.ஓ’ படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், இப்படம் முடிந்த பிறகு பா.ரஞ்சித் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷாலின் மனுவை நிராகரிக்க கோரிய வழக்கை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரனை நியமித்து, சென்னை ஐகோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது.

    இந்த தேர்தலில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் விஷால் உட்பட பலர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு  மனுக்களையும் அவர்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி நீதிபதி ராஜேஸ்வரன் ஏற்றுக்  கொண்டார்.

    இந்த நிலையில், ‘நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் ஏற்றுக்  கொண்டது சட்டப்படி செல்லாது.

    தயாரிப்பாளர் சங்க விதி, பிரிவு 20-ன்படி, வேறு ஒரு சங்கத்தில் நிர்வாகியாக இருப்பவர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தின்  நிர்வாகிகள் தேர்தலுக்கு போட்டியிட முடியாது என்று கூறியுள்ளது.



    எனவே, இந்த வேட்பு மனுவை நிராகரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர் கேயார், சென்னை  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘விஷால் தாக்கல்  செய்துள்ள வேட்புமனுவை தமிழ்திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கத்தின் விதி களுக்கு உட்பட்டு தான் தேர்தல் அதிகாரியாக  நீதிபதி ராஜேஸ்வரன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

    இதில் எந்த விதிமுறை களும் மீறப்படவில்லை. வேட்புமனுவை ஏற்றுக் கொண்டது சரியான முடிவு தான். எனவே, இந்த  வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
    5 வருடம் கழித்து ‘சிங்கம்-4’ படம் தயாராகும் என்று இயக்குனர் ஹரி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். அவரது முழுபேட்டியை கீழே பார்க்கலாம்.
    ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சிங்கம்’ படம் 2010-ல் வெளியானது. 2013-ல் ‘சிங்கம்-2’, 2017-ல் ‘சிங்கம்-3’ வந்து  ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே இதற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

    அடுத்து ‘சிங்கம்-4’ எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், சமீபத்தில் ‘சிங்கம்-3’  தெலுங்கு பட வெற்றி விழாவில் ஹரி வெளியிட்ட தகவல்....

    இன்னும் 5 அல்லது 6 வருடங்கள் கழித்து தான் சிங்கம் படத்தின் 4-வது பாகத்தை எடுக்க இருக்கிறோம். நான் அடுத்து விக்ரம்  நடிக்கும் ‘சாமி’ படத்தின் 2-வது பாகத்தை இயக்க இருக்கிறேன். அந்த படம் முடிந்ததும் மீண்டும் சூர்யா நடிக்க இருக்கும்  மற்றொரு படத்தை இயக்குவேன். அந்த படமும், அதில் சூர்யாவின் பாத்திரமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.



    ஹரியின் இந்த அறிவிப்பால் ‘சாமி-2’ படத்தின் மீதும் சூர்யாவின் அடுத்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    வி.கே.பி.டி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பள்ளி பருவத்திலே’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    வி.கே.பி.டி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பள்ளி பருவத்திலே’.

    இந்த படத்தில் இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா  அறிமுகமாகிறார். இவர் கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர்களுடன் கே.எஸ்.ரவி குமார், ஊர்வசி,  தம்பிராமய்யா, கஞ்சாகருப்பு, ஜி.கே.ரெட்டி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு- வினோத்குமார், இசை-விஜய் நாராயணன், இவர் இளையராஜா, ஏ.ஆர்.ரகு மான் ஆகியோரிடம் உதவியாளராக  இருந்தவர்.பாடல்கள் - வைரமுத்து, வாசுகோகிலா, எம்.ஜி. சாரதா, கலை- ஜான்பிரிட்டோ,எடிட்டிங்-சுரஷ்அர்ஷ், நடனம்- தினா,  ஸ்டண்ட் -சுப்ரீம்சுந்தர், தயாரிப்பு- டி.வேலு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் வாசுதேவ் பாஸ்கர். இவர் படம் பற்றி  கூறும்போது...

    “நிஜ சம்பவங்களின் தொகுப்பே கதையாக உருவாக்கப் பட்டுள்ளது. தஞ்சையில் உள்ள ஆம்பளாபட்டு என்ற கிராமத்தில் நான்  படித்த பள்ளிக் கூடத்தில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்ய மானது. இங்கு படித்த பலர் உயர்ந்த நிலையில் இருக் கிறார்கள்.  இதற்கு காரணமான ஆசிரியர் சாரங்கன் கதாப்பாத்திரத்தை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றிருக்கிறார். ஊர்வசி பாத்திரமும் பேசப்படும்.



    இன்றைய கால கட்டத்தில் அழிந்து வரும் விவசாயத்தை காக்கும் பொருட்டு படப்பிடிப்பு நடைபெறும் தஞ்சை மாவட்டத்தில்,  விவசாயிகளுக்கு 100 பசு மாடுகளை தானமாக கொடுக்க உள்ளோம். தொடக்க விழா நடைபெற்ற பிப்ரவரி 12 முதல் படப்பிடிப்பு  முடிவடை வதற்குள் 100 மாடுகளை வழங்குவோம்.

    ‘பள்ளி பருவத்திலே’ கிராமத்து காமெடி படமாக உருவாகிறது” என்றார்.
    பவர் ஸ்டார் சீனிவாசன் தான் முதலமைச்சராவதற்கு ரசிகர்கள் விரும்புவதாக கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது ‘சிரிக்க விடலாமா’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை காவியன் என்பவர் இயக்கியுள்ளார். நிதின் சத்யா, மகாநதி சங்கர், சந்தான பாரதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.



    இதில் பங்கேற்று பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, இன்று முதலமைச்சராவதற்கு எவ்வளவு கஷ்டம், எவ்வளவு அடிதடி, எவ்வளவு சண்டையெல்லாம் நடக்கிறது. இப்படியெல்லாம் நடக்கும்போது நானும் ஒரு படத்தில் முதலமைச்சராக நடித்திருக்கிறேன். பாக்யராஜ் சாருடன் அந்த படத்தில் நான் நடித்தேன். எல்லோருக்கும் முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். நான் அந்த படத்தின்மூலம் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன். இப்படித்தான், நிஜத்தில் சாதிக்க முடியாததை நாங்கள் சினிமாவில் சாதித்துக் கொண்டு இருக்கிறோம்.



    இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் என்னுடைய ரசிகர் என்று சொல்லிக்கொண்டார். எல்லோரும் முதலமைச்சர் ஆவதாக சொல்லிக் கொள்கிறார்கள். நீங்களும் முதலமைச்சராக ஆகவேண்டியதுதானே என்று கேட்டார். என்னை ஒரு கட்சி ஆரம்பிக்குமாறும் அவர் கேட்டார். கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்றால் பணம் அதிகமாக தேவைப்படுமே என்று சொன்னேன். அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தது, என்னுடைய குடும்பத்தில் ஒரு சகோதரியை இழந்தது போன்று நினைக்கிறேன். அவர் என்றைக்கு பீச்சில் படுத்தாரோ, அன்று முதல் இப்பொழுது வரைக்கும் அந்த பீச்சில் ஒரே கலவரமும், சண்டை, சச்சரவு என இருந்துகொண்டே இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    பிரபல நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி  நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    கடந்த 17-ந்தேதி இவர் திருச்சூரில் நடந்த படப்பிடிப் பில் கலந்துகொண்டு விட்டு கார் மூலம் கொச்சி நோக்கி சென்று  கொண்டிருந்தார். அந்த காரை டிரைவர் மார்ட்டின் என்பவர் ஓட்டினார். பாவனாவின் காரை ஒரு கும்பல் வழிமறித்தது. அந்த  கும்பலை சேர்ந்த பிரபல ரவுடி சுனில் உள்பட 5 பேர் காரில் ஏறி நடிகை பாவனாவிடம் பாலியல் கொடுமை செய்து அதை  செல்போனிலும் படம்பிடித்தனர்.

    டிரைவர் உள்பட 3 பேர் கைது

    நடிகை பாவனா டைரக்டர் லால் உதவியுடன் இதை போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார். போலீசார்  அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக டிரைவர் மார்ட்டினை கைது செய்தனர். மேலும்  கோவையில் பதுங்கி இருந்த சுனிலின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்தனர்.

    முக்கிய குற்றவாளியான சுனில் அவரது கூட்டாளிகள் மணிகண்டன், விஜேஷ் ஆகிய 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர  வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

    இந்த வழக்கில் துப்பு துலக்க போலீஸ் ஏ.டி.ஜி.பி. சந்தியா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் உடனடியாக  விசாரணையை தொடங்கினார். நடிகை பாவனா ஓடும் காரில் கொடுமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு  காமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    போலீசாரின் தீவிர விசாரணையை தொடர்ந்து சுனிலின் கூட்டாளியான மணிகண்டன் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளார். அவரை  பாலக்காட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மூலம் தலைமறைவாக உள்ள சுனில் மற்றும் விஜேஷ்  ஆகியோரை கைது செய்ய போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் சுனில் தனது செல்போனை முன் ஜாமீன் தாக்கல் செய்த வக்கீலிடம் கொடுத்திருந்தார். அதை வக்கீல்  கோர்ட்டில் ஒப்படைத்தார். அந்த செல் போனை போலீசார் பெற்று சைபர்கிரைம் போலீசார் மூலம் விசாரணை நடத்த முடிவு  செய்து உள்ளனர்.

    அந்த செல்போன் மூலம் சுனில் பிரபல நடிகர் மற்றும் சில தயாரிப்பாளர்கள் பலரிடமும் பேசி உள்ளார். அவரிடமும் பலர்  தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அதுபற்றியும் விசாரித்து துப்புதுலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டி.ஜி.பி.

    இந்த சம்பவம் தொடர் பாக கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா கூறியதாவது:-

    கேரளாவில் பெண் களுக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்கி வருகிறார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு டிரைவரை  மட்டும் நம்பி நடிகையை சினிமா தயாரிப்பாளர் அனுப்பியிருக்ககூடாது. பாதுகாப்புக்கு ஆட்களை அனுப்பி இருக்கலாம்.  பாவனாவை கடத்திய முக்கிய குற்றவாளியான சுனில் சிக்கும்போது அவரை யாராவது தூண்டி இதனை செய்தார்களா? என்பது  தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    இதற்கிடையில் முதல்- மந்திரி பினராய் விஜயன், கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன்  ஆகியோர் நடிகை பாவனாவிடம் செல் போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய அவர்கள்  இந்த சம்பவத்தில் அரசு விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் என்றும் யாரும் தப்பமுடியாது என்றும்  தெரிவித்தனர்.
    எலும்பில்லாத, பகட்டான முட்டாள் என்று கூறுவதா? சுப்பிரமணியசாமிக்கு கமல்ஹாசன் பதில் தெரிவித்துள்ளார். இருவரது கருத்து பரிமாற்றத்தை கீழே பார்க்கலாம்.
    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதுபற்றி கருத்து தெரிவித்த பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, ‘தமிழ் பொறுக்கிகள்’ என்று கூறினார்.

    இதற்கு கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறினார்.

    உடனே சுப்பிரமணியசாமி டுவிட்டரில் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து கருத்தை வெளியிட்டார்.

    அதற்கு கமல்ஹாசன் டுவிட்டரில் பதில் தெரிவித்தார். தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து கமல்ஹாசன் கருத்து  தெரிவித்து வருகிறார்.

    இதை எதிர்த்தும் சுப்பிரமணியசாமி டுவிட்டரில் திட்டி கருத்து தெரிவித்து வருகிறார். இருவருக்கும் டுவிட்டரில் வார்த்தை  மோதல் நீடித்து வருகிறது.



    இந்த நிலையில் சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்தில், ‘எலும்பில்லாத, பகட்டான முட்டாள்  கமல்ஹாசனை எதிர்ப்பேன்’ என்று கூறி இருந்தார். இதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்து உள்ளார்.

    அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இதுகுறித்து விவாதிக்கக் கூடிய எலும்பு என்னிடம் இருக்கிறது. அது போதும். தமிழர்களை  பொறுக்கி என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

    இதற்காக நான் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. மக்கள் தெரிவிப்பார்கள். என் பதிலில் முரட்டுத்தனம் இருக்காது.

    மோசமான அரசியல் பரிமாற்றங்களில் என்னை விட அவருக்கு அனுபவம் அதிகம். அவருக்கு வேண்டுமானால் உணவில்  எலும்பு இல்லாதது பிடிக்கலாம். எனக்கு அப்படி அல்ல. உங்கள் உணவை ரசித்து சாப்பிடுங்கள் சார் என்று கிண்டல் செய்யும்  வகையில் பதில் கூறியுள்ளார்.

    கமல்ஹாசனை விமர்சித்ததற்கு திரையுலக பிரபலங்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இதையடுத்து சுப்பிரமணியசாமி டுவிட்டரில் இருந்து தனது கருத்தை நீக்கி உள்ளார்.
    சிம்புவும் அனிருத்தும் சந்தானத்துக்காக தங்களது தொழிலையே மாற்றிக் கொண்டுள்ளனர். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    சிம்பு தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், பாடகர், எழுத்தாளர் என பன்முகமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் இசையமைப்பாளராகவும் உருமாறியிருக்கிறார். சந்தானம் நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் இவர் இசையமைப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.

    இப்படத்தின் பாடல் பதிவில் பிசியாக இருக்கும் சிம்பு, சமீபத்தில் ஒரு பாடலுக்கு அனிருத்தை பாட வைத்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிம்புவும், அனிருத்தும் ஏற்கெனவே நிறைய படங்களில் பாடல் பாடியுள்ளனர்.



    ஆனால், சிம்பு இசையமைப்பில் அனிருத் பாடுகிறார் என்பதை பார்க்கும்போது புதுமையாக இருக்கிறது. அந்த பாடல் ரொம்பவும் அழகாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சிறப்பான பாடல் பாடிக்கொடுத்த அனிருத்துக்கு சிம்பு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

    சிம்புவும்-அனிருத்தும் ஏற்கெனவே ’பீப் பாடல்’ பிரச்சினையில் சிக்கி ரொம்பவும் அவஸ்தைபட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

    நடிகை பாவனா கடத்தலில் தன்னை தொடர்புபடுத்துவதாக நடிகர் திலீப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி இரவில் ஓடும் காரில் ஒரு கும்பலால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்.

    நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின்  செல்போன் அழைப்புகளை போலீசார் சோதனை செய்தபோது, அவர்கள் மலையாள திரையுலகின் முன்னணி பிரமுகர்கள்,  தயாரிப்பாளர் மற்றும் பிரபல நடிகர் ஒருவருடன் பேசி இருப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவியது. அதில் நடிகர் திலீப்பும், அவரது முதல் மனைவி மஞ்சுவாரியரும்  பிரிவதற்கு நடிகை பாவனா தான் காரணம் என்றும், இதன் காரணமாக பாவனாவுக்கும் திலீப்புக்கும் இடையே மனக் கசப்பு  ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் எதிரொலியாக நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை 2-வது திருமணம் செய்தபோது  பாவனாவுக்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை. மேலும் பாவனா தனக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததற்கு நடிகர்  திலீப் காரணம் என்று நேரிடையாகவே குற்றம்சாட்டி இருந்தார்.



    இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதல் காரணமாக இப்போது பாவனா கடத்தப்பட்டு இருக்கலாம் எனவும்  சமூக ஊடங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டன.

    இதற்கு திலீப் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கேரளாவில் இப்படி யொரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. யாருக்கும் இப்படியொரு நிலை ஏற்படக்கூடாது.

    இந்த விவகாரம் தொடர் பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அது சரியான கோணத்தில் செல்கிறது.  போலீசாரின் விசாரணையை திசை திருப்பும் முயற்சிகளில் ஊடகங்கள் ஈடுபடக்கூடாது.

    போலீசாரும் சமூக ஊடகங்கள் தவறான கருத்துக்களை பதிவு செய்யக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபோல தென்னிந்திய நடிகர், நடிகைகள் பலரும் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்களின்  கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

    இதில், நடிகை அமலாபால், அவரது பேஸ்புக்கில் கூறி இருப்பதாவது:-



    நடிகை பாவனா, தனக்கு நேர்ந்த கொடுமையை மூடி மறைக்காமல் தைரியமாக போலீசில் புகார் செய்துள்ளார். அவரது  தைரியத்திற்கும், கடினமான இந்த முடிவை மேற்கொண்ட தற்கும் முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாவனா மற்ற நடிகர், நடிகைகளுக்கு உதாரணமாக மாறி உள்ளார். உறுதியுடன் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது,  கண்டிப்பாக வெற்றிபெற முடியும். குற்றம் செய்தவர்களையும், அவர்களின் குடும்பத்தையும் அனைவரின் முன்பும் நிறுத்த  முடியும். இவ்வாறு செய்வதின் மூலம் தவறான செயலில் ஈடுபடுபவர்கள் தயங்குவார்கள்.

    நடிகை பிரியாமணி:- இச்சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஒரு நடிகைக்கு இப்படியொரு சம்பவம்  நடக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. எந்த பெண்ணுக்கும் இது நடக்கக் கூடாது. படப் பிடிப்புக்காக நடிகைகள் கண்ட கண்ட  நேரத்தில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. நடிகை பாவனாவுக்கு நேர்ந்த துயரத்தை அறிந்து எனக்கு சொல்ல முடியாத  அளவுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

    கன்னட நடிகை ராதிகா பண்டிட்:- கதாநாயகிகளுக்கு கார்கள்தான் பாதுகாப்பாக இருந்து வந்தது. படப்பிடிப்பின் இடைவெளியில்  ஓய்வு எடுக்க, டச்-அப் செய்ய கார்களை பயன்படுத்தி வந்தோம். பாவனாவுக்கு நேர்ந்தது பற்றி தெரிய வந்ததும், பயமாக  உள்ளது.
    ×