என் மலர்
பாவனாவுக்கு நடந்த பாலியல் தொல்லையால் நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அனுஷ்கா, காஜல் அகர்வால் உள்ளிட்ட கதாநாயகிகள் காரில் தனியாக பயணம் செய்ய பயப்படுகின்றனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
தமிழ், மலையாளம், கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் பாவனாவை டிரைவர்கள் உள்ளிட்ட சிலர் காரில் கடத்தி இரண்டு மணி நேரம் காருக்குள்ளேயே வைத்து பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி வீடியோ படம் எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர்-நடிகைகள் வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்த கடத்தலில் பாவனாவின் தற்போதைய டிரைவர் மார்ட்டின், முன்னாள் டிரைவர் சுனில்குமார் என்ற பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மார்ட்டினை உடனடியாக போலீசார் கைது செய்தனர். கண்ணூரை சேர்ந்த பிரதீப், சலீம் ஆகிய மேலும் இரண்டு பேர் கோவையில் பதுங்கி இருந்தபோது பிடிபட்டனர். முக்கிய குற்றவாளியான சுனில்குமார் நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் வர அந்த இடத்தை போலீசார் முற்றுகையிட்டனர். ஆனால் அங்கிருந்து அவர் தப்பி விட்டார்.

சுனில்குமார் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து செய்து ரவுடியாக வலம் வந்த பழைய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. இவர் மீது அடிதடி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் போலீஸ் நிலையத்தில் பதிவாகி உள்ளன. சில நடிகர்களுக்கு போதை பொருட்களையும் சப்ளை செய்து வந்துள்ளார். ஏற்கனவே முன்னாள் கதாநாயகியும் கீர்த்தி சுரேசின் தாயாருமான மேனகா உள்பட 3 நடிகைகளை அவர் கடத்த முயன்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.
கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது சுனில்குமார் தங்களிடம் பாவனாவை கடத்தினால் தனக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும் என்றும் அதில் ரூ.30 லட்சத்தை உங்களுக்கு பிரித்து தருகிறேன் என்றும் கூறினார். ஆனால் அவர் சொன்னபடி எங்களுக்கு பணம் தரவில்லை என்று தெரிவித்து உள்ளனர். பாவனாவை கடத்தியபோது சுனில்குமார் போனுக்கு பிரபல நடிகர் ஒருவரும், அரசியல்வாதியின் மகன்கள் இரண்டு பேரும் அடிக்கடி பேசி உள்ளனர்.
இதனால் அவர்களுக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருக்குமோ என்று போலீசாரின் சந்தேகப்பார்வை திரும்பி இருக்கிறது. அவர்களிடம் ரகசிய விசாரணை நடந்து வருகிறது. பாவனாவை மிரட்டும் நோக்கத்திலேயே இந்த கடத்தல் நடந்ததாகவும், ஆனால் எதிர்பாராமல் அது பாலியல் துன்புறுத்தலாக மாறிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

பாவனாவுக்கு நேர்ந்த இந்த கொடுமையால் நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அனுஷ்கா, காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர். நயன்தாரா டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம், வேலைக்காரன் ஆகிய படங்களிலும், திரிஷா மோகினி, சதுரங்க வேட்டை-2, கர்ஜனை, 1818 ஆகிய படங்களிலும், அனுஷ்கா பாகுபலி இரண்டாம் பாகம், பாக்மதி படங்களிலும், காஜல் அகர்வால் விவேகம் மற்றும் நீனே ராஜா, நானே மந்திரி என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஹன்சிகாவும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
இவர்கள், படப்பிடிப்புகளை முடித்து விட்டு விமான நிலையங்களுக்கும், ஓட்டல்களுக்கும் டிரைவர்களுடன் தனியாக காரில் பயணப்பட அச்சப்படுகின்றனர். இதனால் இந்த நடிகைகளுக்கு பாதுகாப்பாக தெரிந்த நபர்களை அதே கார்களில் தயாரிப்பாளர்கள் அனுப்பிவைக்கிறார்கள். வாடகை கார்களில் நடிகைகளை அனுப்புவதை தவிர்த்து படகம்பெனி கார்களிலேயே அவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசும் கதையான ஜூலியும் நாலு பேரும் படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
கதையின் முக்கிய சாராம்சம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசுகிறது. அமெரிக்காவில் கடத்தப்படும் இடது காதில் மூன்று அதிர்ஷ்ட மச்சங்களை கொண்ட “ஜூலி” என்கிற அதிர்ஷ்ட நாயை மையமாக வைத்து கதை நகர்கிறது.
இப்படத்தில் பிரபல டிவி புகழ் அமுதவாணன், சதீஷ்.ஆர்.வி. ஜார்ஜ் விஜய், யோகானந்த், அல்யா மனாசா, யோதீஷ் சிவன், பில்லி முரளி, மகாநதி ஷங்கர், மாறன், வெங்கட் ராவ், ஹோமாய், சாண்டி மாஸ்டர், ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் - எஸ்.பிரேம் குமார்(காவ்யா சினிமாஸ்), இணை தயாரிப்பாளர் - என். சுவேதா தேவி(ரீச் மீடியா சொலூசன்ஸ்), இயக்குநர் - சதீஸ்.ஆர்.வி., புகைப்பட இயக்குநர் - பாஸ்கர், இணை இயக்குநர் - யோதீஷ் சிவன், இசை - ரகு ஷரவன் குமார், எடிட்டிங் - வி.ஏ. மழை தாசன். கலை - சிட்டி பாபு

இப்படம் குறித்து இயக்குநர் தெரிவித்ததாவது, நாய் கடத்தல் கும்பலின் தலைவனான வில்லன் மூலமாக ஜூலி என்கிற நாய் இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபருக்கு விற்கப்படுகிறது.
மறுபுறம், தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் 3 இளைஞர்களும் சென்னையில் வசித்து வரும் ரஜினியின் தீவிர ரசிகராக ஆட்டோ ஓட்டும் மாணிக்கம் எனும் இளைஞரும், நண்பர்களாகின்றனர்.
வேலை தேடிவந்த மூவரும் சென்னையில் ஒரு கன்சல்டன்சியிடம் பணத்தை பறிகொடுக்கின்றனர். விட்ட பணத்தை குறுக்கு வழியிலாவது சென்னையிலேயே சம்பாதிக்க எண்ணி, “ஜூலி நாயை” வாங்கிய தொழிலதிபரின் மகளிடமிருந்து அதை கடத்துகின்றனர்.

கோடிக்கணக்கில் மதிப்புள்ள கடத்தப்பட்ட நாயை தேடி ஒருபுறம் தொழிலதிபர் இவர்களை துரத்த, நாயை வேறு ஒரு நாட்டு நபருக்கு விற்பதற்காக, நாயை தேடி வில்லனும் அவனது ஆட்களும் நால்வரையும் துரத்த, அதே சமயத்தில் ஜூலி என்ற பெண் ஒருவர் காணாமல் போக, குழப்பத்தில் போலீஸும் இவர்களை துரத்த, நால்வரும் செய்யும் கலாட்டாக்களை நகைச்சுவையாக எடுத்துச்செல்கிறது, இப்படம்.
அதிர்ஷ்ட நாய் ஜூலி யாரிடம் சேர்கிறது என்பதும், எல்லோரிடமிருந்தும் எப்படி நால்வரும் தப்பிக்கிறார்கள்?, விட்ட பணத்தை அடைந்தார்களா? இல்லையா? என்பதையும் பரபரப்புடன் அமைந்த படத்தின் இறுதிக்கட்டங்கள் எடுத்துச்செல்கிறது.
இவ்வாறு தெரிவித்தார்.

தனது கணவர் சிங்கமாக சீறியதை தொடர்ந்து தற்போது ஜோதிகாவும் பெண் சிங்கமாக உருவெடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா நடிப்பில் தற்போது ‘மகளிர் மட்டும்’ படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில், அடுத்ததாக பாலா இயக்கத்திலும் ஜோதிகா நடிக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது. பாலா அடித்தட்டு மக்களின் வாழ்வியலை தனது படங்களின் மூலம் பிரதிபலித்து வருபவர் அந்த வரிசையில், இந்த படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்பது பலருக்கும் பெரிய கேள்வியாக எழுந்து வந்தது.
இந்நிலையில், இப்படத்தில் ஜோதிகா எந்தமாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே ஜோதிகாவின் கணவரான சூர்யா, சிங்கம் 1, 2, 3 என மூன்று பாகங்களிலும் போலீஸ் அதிகாரியாக நடித்து வரவேற்பை பெற்றுள்ளார். அந்த வரிசையில் இந்த படம் மூலம் ஜோதிகாவும் பெண் சிங்கமாக உருவெடுக்கப் போவது அனைவருக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள புரூஸ் லீ படம் மீண்டும் தள்ளிப்போனது. இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. புதிய ரிலீஸ் தேதியை கீழே பார்ப்போம்.
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகனாக அவதாரம் எடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள `புரூஸ் லீ' படம் பொங்கலில் திரைக்கு வரவிருந்தது. அதேநேரத்தில் விஜய் நடித்த `பைரவா' படமும் திரைக்கு வந்ததால் பொங்கல் ரேஸில் இருந்த `புரூஸ் லீ', `புரியாத புதிர்' உள்ளிட்ட படங்கள் பின்வாங்கியது.
அதனைத்தொடர்ந்து, `புரூஸ் லீ' படத்தை மார்ச் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படம் மீண்டும் தள்ளிப்போனது. படத்தின் அதிகாரப்பூர்வ புதிய ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் அறிவித்துள்ளது. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தில் ஜி.வி-க்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தா நடித்துள்ளார். பால சரவணன், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
அதேநாளில், சுதீப் கிஷான், ஸ்ரீ மற்றும் ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள மாநகரம் படமும், கிருஷ்ணா - ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள பண்டிகை படமும் அதே நாளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

103 வயது பழம்பெரும் டைரக்டர் ஆண்டனி மித்ரதாஸ் சென்னையில் மரணம் அடைந்தார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
103 வயது பழம்பெரும் டைரக்டர் ஆண்டனி மித்ரதாஸ் சென்னையில் மரணம் அடைந்தார். இவர் சென்னை மேற்கு அண்ணாநகர் டி.வி.எஸ்.காலனியில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு தூங்கிக்கொண்டு இருந்தபோது கட்டிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. உடனடியாக அவரை சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஆண்டனி மித்ரதாஸ் மரணம் அடைந்தார். இவர் 1913-ம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை அருளானந்தம் முதல் உலகப்போரில் கலந்து கொண்டவர். ஆண்டனி மித்ரதாஸும் இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்தவர். 1941-ம் ஆண்டு தனது முதல் படமான ‘தயாளன்’ படத்தை ஆண்டனி மித்ரதாஸ் டைரக்டு செய்தார். இதில் பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோர் இணைந்து நடித்தனர். அதன்பிறகு டி.ஆர்.துரைராஜ் அறிமுகமான ‘பிழைக்கும் வழி’ என்ற நகைச்சுவை படத்தை டைரக்டு செய்தார்.
பிரேம் நசீர் நடித்த பால்யசகி, அவகாசி, திக்குறிச்சி சுகுமாரன் நடித்த அரிச்சந்திரா ஆகிய மலையாள படங்களையும் டைரக்டு செய்துள்ளார். தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகாமி’ படத்தை கடைசியாக டைரக்டு செய்தார். மரணம் அடைந்த ஆண்டனி மித்ரதாஸுக்கு எலிசபெத் என்ற மனைவியும் உஷா என்ற மகளும் உள்ளனர். ஆண்டனி மித்ரதாஸ் உடல் தானம் செய்து இருந்ததால் இறுதி சடங்குகளுக்கு பிறகு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் அவரது உடலை எடுத்து சென்றனர்.

நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தமிழ்நாட்டில் பதுங்கி இருக்கலாம் என கருதி, கேரள போலீசார் தமிழ்நாட்டுக்கு வந்து தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.
பிரபல நடிகை பாவனா, கடந்த 17-ந் தேதி கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு சொகுசு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு கும்பலினால் கடத்தப்பட்டு, 2 மணி நேரம் காரிலேயே பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்.
இந்த விவகாரம், கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை பாவனாவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த கேரள படவுலகமும் அணி திரண்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை பாவனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் உறுதி அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகை பாவனா பயணம் செய்த காரின் டிரைவர் மார்ட்டின் மற்றும் வடிவேல் சலிம், பிரதீப் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அலுவாவில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.
நடிகை பாவனாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், அவர் பயணம் செய்த காரில் இருந்து, அவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார் என்பதற்கு ஆதாரமான தடயங்களை தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றினர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகிற புல்சார் சுனி, வி.பி. விகீஷ் ஆகியோர் இன்னும் போலீசிடம் சிக்கவில்லை. அவர்களை கைது செய்வதற்கான முயற்சியில் கேரள போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் புல்சார் சுனி, வி.பி. விகீஷ், மணிகண்டன் ஆகிய 3 பேரும் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றில் அவர்கள், தாங்கள் இந்த வழக்கில் தவறாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் ஏதுமறியாத அப்பாவிகள் என்றும் கூறி உள்ளனர்.
அந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது அந்த மனுக்கள் மீதான விசாரணை அடுத்த மாதம் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் இதற்கிடையே போலீசாரால் தேடப்பட்டு வந்த மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு பாலக்காட்டில் பிடிபட்டார். அவரிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. பாவனா கடத்தி, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதில் பெரிய அளவுக்கு சதியும் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் குற்றவாளி கடவுளாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சட்டம் மற்றும் கலாசார துறை மந்திரி ஏ.கே. பாலன், கோழிக்கோட்டில் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்.
மேலும் அவர், “இங்கே பட உலகில் சில மோசமான போக்குகள் நிலவுகின்றன. அவற்றை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சி எடுக்கப்படும். இந்த விவகாரத்தில், பட உலகினரின் உதவி நாடப்படும். அத்தகைய போக்குகளில் ஒன்றுதான் நடிகை மீதான பாலியல் தாக்குதல். இந்த சதியின் பின்னணியில் இருந்தவர்களை வெளியே கொண்டு வரவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.
இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தமிழ்நாட்டில் பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் காரணமாக கேரள போலீஸ் படைகள் தமிழ்நாட்டுக்கு விரைந்து, தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று நடிகை சினேகா தெரிவித்து உள்ளார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
நடிகை சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய துறையில் பணியாற்றும் சக கலைஞர்களான பாவனா மற்றும் வரலட்சுமி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள் எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்து இருக்கிறது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன் என்பதனை உறுதிபடுத்திக்கொள்கிறேன். எந்தவித பயமின்றி நடந்ததை வெளிப்படையாக தெரிவித்த அவர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்.
பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் சமுதாயத்தில் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்கள் அதனை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். அதற்கு முக்கிய காரணம், எங்கே இந்த சமுதாயம் இத்தகைய செயல்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்களையே காரணம் காட்டி விடுமோ? என்ற பயம்தான்.

தார்மீக போதனையாளர்கள் என்று கூறிக்கொண்டு வலம் வரும் ஒரு சிலர் பெண்கள் இவ்வாறுதான் உடை அணிய வேண்டும், இந்த இடங்களுக்கு மட்டும்தான் செல்ல வேண்டும் என்று கோட்பாடுகள் விதித்து அதன் அடிப்படையில்தான் பெண்களின் குணங்களை யூகிக்கின்றனர். தங்களுக்கு என்ன நடக்கிறது? என்பதை கூட தெரிந்து கொள்ள இயலாத பச்சிளம் குழந்தைகளிடம் இத்தகைய தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுபவர்களை, அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்?
தாய் நாடு என்று பெண்மையை போற்றும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆண் தெய்வங்களுக்கு இணையாக பெண் தெய்வங்களை வணங்கும் நாட்டில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆனால் இப்போது பெண்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்ந்த காலங்கள் அழிந்து விட்டது. இது நம் நாட்டுக்கு ஏற்பட்ட பெரிய அவமானம்.
அந்த நிலைமையை மாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. பெண்களுக்கு தங்களின் மரியாதையை பெற்றுத்தர நாம் குரல் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு அம்மாவாக என் மகனுக்கு பெண்களை மதிக்கவும் மரியாதை கொடுக்கவும் சொல்லித்தருவேன் என உறுதி மொழி எடுக்கிறேன்.
இவ்வாறு சினேகா கூறியுள்ளார்.

பின்னணி நடன பெண்களின் அவலத்தை சொல்ல வரும் யாதுமாகி நின்றாய் படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
தாமரை போன்ற நடனப்பெண் இருபதாண்டு காலமாக அவள் வாழ்நாளில் சந்தித்த மற்றும் பயணித்த பல்வேறு நபர்களின் கதையை சொல்கிறது `யாதுமாகி நின்றாய்'.
பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார். எனினும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது `யாதுமாகி நின்றாய்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் வஸந்த் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

கதை, திரைக்கதை, இயக்கம் - காயத்ரி ரகுராம், தயாரிப்பாளர் - கிரிஜா ரகுராம், இசையமைப்பாளர் - அஸ்வின் விநாயகமூர்த்தி மற்றும் அச்சு, பாலாசிரியர் - கபிலன், அச்சு
இந்த படம் சாதரண, பின்னணியில் நடனமாடும் பெண்களின் மனதினுள் இருக்கும் கனவுகளையும், ஆசைகளையும் சொல்லும் முதல் தமிழ் படமாகும்.
ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மைய கதையாக கொண்ட படம் தான் `யாதுமாகி நின்றாய்'. பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை கதைகளை அடிப்படையாக கொண்ட இப்படத்தை காயத்ரி ரகுராம் இயக்குகிறார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதரண கனவுகளோடும், ஆசைகளோடும் தனது வாழ்க்கையில் பயணிக்கிறாள். ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களையும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே படத்தின் கதையாக காயத்ரி ரகுராம் எடுத்து வருகிறார்.

வெற்றிப்பட இயக்குநருடன் நடிகர் தனுஷ் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த இயக்குநர் யார்? என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.
கடந்த ஆண்டு தீபாவளி ரிலீசாக வெளியான `கொடி' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷ் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து கலக்கியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் அரசியல்வாதியாகவும் தனுஷ் மிரட்டியிருந்தார். இந்நிலையில், `கொடி' படத்தை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்க உள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தனுஷுக்கு வரிசையாக படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கிறது. `எனை நோக்கி பாயும் தோட்டா', `வடசென்னை', `வேலையில்லா பட்டதாரி 2', `மாரி 2' உள்ளிட்ட படங்களும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படமும், ஒரு ஹாலிவுட் படமும் இந்த ஆண்டில் ரிலீசாக உள்ளன.
மேலும் தனுஷ் இயக்கி வரும் `பவர்பாண்டி' படம் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள பெயரிடப்படாத படமும் இந்த ஆண்டே வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தனுஷ் - துரைசெந்தில்குமார் இடையே நல்ல நட்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. முன்னதாக துரைசெந்தில்குமார் இயக்கத்தில் வெளியான `எதிர்நீச்சல்', `காக்கி சட்டை' ஆகிய இருபடங்களையும் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் தலைப்பில் தயாரித்திருந்தார். அதன்பின்னர் `கொடி' படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தனுஷின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. எனவே இந்த ஆண்டில் தனுஷ் தனது ரசிகர்களுக்கு தொடர் விருந்து அளிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

இலக்கிய உலகில் பெரும் சாதனையாளரான கோவி.மணிசேகரன், டைரக்டர் கே.பாலசந்தரிடம் உதவியாளராகச் சேர்ந்து, சினிமா நுட்பங்களைக் கற்றறிந்தார்.

1,000-க்கு மேற்பட்ட சிறுகதைகள்; 200 நாவல்கள்; 10 ஆயிரம் கவிதைகள்; 10 நாடகங்கள் எழுதியவர் கோவி.மணிசேகரன்.
இவரது சொந்த ஊர் வேலூர். தந்தை கோவிந்தன். தாயார் பட்டம்மாள்.
இவருக்கு இலக்கிய ஆர்வம் ஏற்படுவதற்கு முன்பே உதயமானது, சினிமா ஆசை.
சேலம் மாடர்ன் தியேட்டர்சார் நடத்திய "சண்டமாருதம்'' என்ற சினிமா பத்திரிகையில் இவர் பணியாற்றியபோது, சினிமா ஆசை அதிகரித்தது. அப்போது, இப்பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியவர் கண்ணதாசன்.
தவிரவும், அந்தக் கால சூப்பர் ஸ்டார்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.ï.சின்னப்பா ஆகியோர் பாடிய பாடல்களை அப்படியே பாடக்கூடிய அளவுக்கு இசை ஞானமும், குரல் வளமும் பெற்றிருந்தார், மணிசேகரன்.
(பிற்காலத்தில் முறைப்படி இசை பயின்று, பட்டம் பெற்றார்)
இந்தக் காலக்கட்டத்தில், கலைஞர் மு.கருணாநிதி கதை - வசனத்தில் உருவான "மந்திரிகுமாரி'' வெளிவந்தது.
அந்த வசனங்களைக் கேட்டதும், "தமிழில் இப்படியும் எழுத முடியுமா!'' என்று பிரமித்தார். அதுபோல் தானும் வசனகர்த்தா ஆகவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
24 வயதானபோது, டி.எஸ்.பாலையா கூட்டுறவோடு எம்.எல்.பதி தயாரித்த "நல்லகாலம்'' என்ற படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா.
வசனம் எழுதுவதற்கு, கோவி.மணிசேகரனுக்கு கொடுக்கப்பட்ட அட் வான்ஸ் 101 ரூபாய். அதற்கு பிறகு பணம் எதுவும் கிடைக்கவில்லை. காரணம் - படம் சரியாக ஓடவில்லை!
இதன் பிறகு, 1958-ல் ஜெமினிகணேசன், அஞ்சலிதேவி நடிக்க, அசோகா பிக்சர்ஸ் தயாரித்த "பூலோக ரம்பை'' படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதினார். இசை அமைத்தவர் சி.என்.பாண்டுரங்கம். கோவி.மணிசேகரனுக்குக் கிடைத்த தொகை ரூ.1,000. அக்காலத்தில் இது பெரிய தொகை.
மணிசேகரன் எழுதிய பாடல்களை ஏ.எம்.ராஜாவும், ராதா - ஜெயலட்சுமியும் பாடினார்கள். இதில் ஒரு சுவையான தகவல் என்னவென்றால், வேலூரில் நரசிம்மலு நாயுடு என்ற சங்கீத வித்துவானிடம் ஏ.எம்.ராஜாவும், கோவி.மணிசேகரனும் ஒன்றாக இசை பயின்றவர்கள்!
இதற்கிடையே, பத்திரிகைகளில் கதை - கட்டுரைகள், தொடர்கதைகள் எழுதி, பெரும் புகழ் பெற்றார். "இலக்கிய சாம்ராட்'' முதலான பட்டங்களைப் பெற்றார்.
இலக்கியத்தில் பெரும் வெற்றி கண்ட போதிலும், உள்ளத்தின் அடியில் சினிமா ஆசையும் கனன்று கொண்டிருந்தது.
1969-ல் "நான்கு திசைகள்'' என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். அடுத்த ஆண்டு "ஜாதிமல்லி'' என்ற நாடகம் மேடை ஏறியது.
இரண்டு நாடகங்களுக்கும் இசை அமைத்தவர்: இளையராஜா.
இடையிடையே, சில பட அதிபர்கள் கோவி.மணிசேகரனை அழைத்து, சினிமாவுக்கு கதை கேட்டார்கள்.
சினிமாவுக்கு கதை சொல்வது என்பது தனிக்கலை. கதையை நன்றாக எழுதத் தெரிந்த எழுத்தாளர்களுக்கு, கதை சொல்லத் தெரியாது. இந்த நìயதிப்படியே, மணிசேகரனின் கதைகள் சினிமா அதிபர்களிடம் "ஓகே'' பெறமுடியவில்லை.
தீவிரமாக சிந்தித்த மணிசேகரன், ஒரு குருவின் மூலம் சினிமா கலையை கற்றறிய முடிவு செய்தார்.
அவர் தேர்வு செய்த குரு - இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்!
இதுபற்றி கோவி.மணிசேகரன் கூறுகிறார்:-
"யாரிடம் உதவியாளராக சேருவது என்று ஒரு மாதம் வரை ஓயாமல் சிந்தித்தேன்.
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நாடகங்களை நடத்தி வந்த காலம் முதல், அவரை ஓரளவு அறிவேன். அவரிடம் உதவியாளராகச் சேர முயற்சி செய்தால் என்ன?
அவருடைய திரைப்படங்களுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. திரை அறிஞர் அவர். "வெள்ளி விழா'' படம் வெளியாகி இருந்த நேரம் அது. அடுத்து "அரங்கேற்றம்'' படம் பண்ணப்போவதாக அறிந்தேன். நமக்கும் இது அரங்கேற்றமாக இருக்கட்டுமே!
சாதிக்க முடிந்தால் சாதிப்போம். இயலாது போனால், இலக்கியங்களைப் படைப்போம் என்று எண்ணினேன்.
ஓர் ஆயுத பூஜைக்கு முந்திய நாள், இயக்குனர் சிகரத்தை சந்தித்தேன்.
என்னைக் கண்டதும், "வாங்க, மணிசேகரன்! ஏது, இந்தப்பக்கம்?'' என்றார்.
"இமயமலையைப் பார்க்க, பரங்கிமலை வந்திருக்கிறது!'' என்றேன்.
அவருக்குப் புரியவில்லை. "பரங்கிமலையா? நீங்களா?'' என்றார். "திரை உலகைப் பொறுத்தமட்டில் நான் பரங்கிமலைதான். அதைவிடச் சின்னமலையை நான் அறிந்ததில்லை!'' என்றேன்.
அவர் கொஞ்ச நேரம் என்னை உற்றுப் பார்த்தார்.
"திரைக்கலை நுணுக்கம் பயில, ஆசானைத் தேடி னேன். உங்களிடம் வந்திருக்கிறேன்'' என்றேன்.
"நீங்கள் பெரிய இலக்கியவாதி. என்னிடம்...'' என்று அவர் இழுக்க, நான் இடைமறித்து, "இது விஷயத்தில் உங்கள் முன் நான் `ஏ.பி.சி.டி' மாணவன்'' என்று இதமாகச் சொன்னேன், ஆங்கிலத்தில்.
அவர் கை விரலில் சுழன்று கொண்டிருந்த சாவிக்கொத்து, நழுவி விழுந்தது. அதுவாக விழுந்ததோ அல்லது அவராகவே நழுவ விட்டாரோ என்னவோ! நான் உடனே அதை எடுத்து, அவரிடம் பணிவுடன் கொடுத்தேன். மீண்டும் ஒரு கணம் என்னை நோக்கியவர், "விஜயதசமியன்று நீங்கள் என்னிடம் விஜயம் செய்யலாம்'' என்றார்.
நாளை மறுநாள் விஜயதசமி. நாடி நரம்புகள் வீணை போல் நாதம் எழுப்ப, நான் எழுந்தேன்; வணங்கினேன்; விடைபெற்றேன்.''

இயக்குனர் விஜய் நடிகை அமலாபால் தம்பதி மனமொத்துப் பிரிய குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
'சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலாபால். கேரளாவை சேர்ந்த இவரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் விஜயும் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
திருமணத்துக்குப் பின்னரும் அமலாபால் தொடர்ந்து நடித்ததால், அதற்கு விஜய்யின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுதான் காரணம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து விஜய்யும், அமலாபாலும் சுமூகமாகப் பிரிவது என்று முடிவு செய்தனர். அதன்படி, இருவரும் சென்னை குடும்பநல கோர்ட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதி பூங்குழலி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் - அமலாபால் இருவரும் நேரில் ஆஜராகி, ஒருமனதாக பிரிவதாக கூறி பிரமாண பத்திரங்களை தனித்தனியாக தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பிரிவு முடிவில் இருவரும் உறுதியாக இருந்ததால் முதன்மை குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து அமலாபால்- விஜய் இருவரும் சட்டப்படி இன்று பிரிந்தனர்

தற்கொலை செய்துகொண்ட விவசாயி ஒருவரின் குடும்பத்துக்கு ராகவா லாரன்ஸ் உதவி செய்ய முன்வந்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பு மட்டுமில்லாமல் பல்வேறு சமூக நலன்களிலும் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இருதய ஆபரேஷன், கல்வி என பல வகையிலும் ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று விவசாய சங்கத்தை சேர்ந்த சில விவசாயிகள் ராகவா லாரன்ஸை சந்தித்து, விவசாயிகள் தற்கொலை பற்றி பேசியுள்ளனர். அப்போது, மயிலாடுதுறையை சேர்ந்த கண்ணதாசன் என்ற விவசாயி, ரெயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை கேட்டதும், ராகவா லாரன்சுக்கு மிகுந்த வேதனையை கொடுத்ததாம்.

தற்கொலை செய்துகொண்ட விவசாயி கண்ணதாசன், ஆதரவற்ற அவரது குடும்பம்
அவருடைய குடும்பத்துக்கு ராகவா லாரன்ஸ் உதவ முன்வந்துள்ளார். மேலும், அவர்களுக்கு உதவ முன்வருபவர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, விவசாயிகளுக்காக நாம் இருக்கிறோம் என்பதை காட்டவேண்டும். விவசாயிகள் இல்லாமல் நாம் இல்லை. அவங்க சேத்துல கால் வச்சாத்தான், நாம சோத்துல கை வைக்க முடியும் என்றார்.
மேலும், K.கண்ணதாசன், நெ.1, ஆலங்குடி, ஆலங்குடி (அஞ்சல்), மயிலாடுதுறை (தாலுக்கா), நாகப்பட்டினம் (மாவட்டம்). இதுதான் அந்த விவசாயியின் முகவரி என்று இதனையும் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.