என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தெகிடி படத்தின் இயக்குனருடன் சிபிராஜ் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    சிபிராஜ் நடிப்பில் தற்போது ‘கட்டப்பாவ காணோம்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அடுத்த மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இப்படத்தை தொடர்ந்து ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘சத்யா’ படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து ‘தெகிடி’ படத்தை இயக்கிய ரமேஷ் இயக்கும் புதிய படத்தில் சிபிராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கியிருப்பதாகவும், விரைவில் இப்படம் சம்பந்தமான கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    சிபிராஜ் தற்போது நடிக்கும் ‘சத்யா’ படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சைமன் இசையமைக்கும் இப்படத்தை நாதாம்பாள் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. 
    நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டதாக பாவனா கார் டிரைவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான முழுசெய்தியை கீழே பார்ப்போம்.
    பாவனா கார் டிரைவர் சுனில் நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார் டிரைவர் சுனில்  தலைமறைவாக இருக்கிறான். அவனைப்பற்றி மலையாள திரைஉலகினர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு  வருகிறார்கள்.

    டிரைவர் சுனில் நடிகை பாவனாவிடம் கார் டிரைவராக பணியாற்றிய போது அவர் மூலம் பல மலையாள நடிகைகளுடன்  பழக்கம் ஏற்பட்டது. அவர்களது நடவடிக்கைகளை கவனித்த சுனில் நடிகைகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டான்.



    அப்போது நடிகை கீர்த்தி சுரேஷ்மீது அவனது பார்வை விழுந்தது. இவர் பழைய நடிகை மேனகாவின் மகள் ஆவார். மேனகா  1980-களில் தமிழில் `ராமாயி வயசுக்கு வந்துட்டா', `சாவித்திரி, கண்ணாடி', ரஜினியுடன் `நெற்றிக்கண்', உள்ளிட்ட படங்களில்  நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார்.

    தற்போது அவரது மகள் கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிகையாக ‘இது என்ன மாயமோ’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து  `ரஜினிமுருகன்', `ரெமோ', `தொடரி', `பைரவா' ஆகிய வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.



    கீர்த்தி சுரேஷ் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் அவரை கடத்தி பணம் பறிக்கலாம் என்று சுனில் திட்டமிட்டான். இதற்காக  கீர்த்தி சரேஷின் கார் டிரைவருடன் சுனில் நட்பு ஏற்படுத்திக்கொண்டு தனது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தான். அதற்கு  அவனும் சம்மதித்தான்.

    கீர்த்தி சுரேஷ் எப்போது தனியாக காரில் போவார் என்று டிரைவர் மூலம் நோட்டமிட்டான். செல் போனில் ‘ஒய்’ என தகவல்  அனுப்பினால் இன்று கடத்தலாம் என்றும், ‘எக்ஸ்’ என்றால் இன்று கடத்து வதற்கான சூழ்நிலை இல்லை என்றும் ரகசிய வார்த்  தைகளை பரிமாறிக் கொள்வது என முடிவு செய்தனர்.

    சம்பவத்தன்று அவசரத்தில் அந்த டிரைவர் ‘ஒய்’ என தவறுதலாக சுனிலுக்கு செல்போனில் தகவல் அனுப்பிவிட்டான் உடனே  சுனில் தனது கும்பலுடன் சென்று கீர்த்தி சுரேஷ் காரை மடக்கு நிறுத்தி உள்ளே ஏறி கடத்திச் சென்றான். ஆனால் அதன் பிறகு  தான் காரில் இருந்தது கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா என தெரியவந்தது. அவரை கடத்தி பயன் இல்லை என்பதால்  விட்டுவிட்டான்.



    குடும்ப கவுரவம் கருதி இது பற்றி மேனகா குடும்பத்தினர் போலீசில் புகார் செய்யவில்லை. தற்போது சுனில் பற்றிய தகவல்கள்  வெளியானதும் அவன் தான் கீர்த்தி சுரேஷை கடத்த திட்டமிட்டவன் என்பதை மேனகாவின் கணவர் சுரேஷ்குமார் அறிந்து  அதிர்ச்சி அடைந்தார். அவர் தான் சுனில் பற்றிய தகவலை தனது நண்பர்கள் மூலம் வெளியிட்டுள்ளார்.
    விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் ’சாமி 2’ வில் பிரபல நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    விக்ரம் தற்போது ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வு சமீபகாலமாக நடைபெற்று வந்தது.

    ‘சாமி’ முதல் பாகத்தில் நடித்த திரிஷாவையே இப்படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யலாமா? என படக்குழுவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். கடைசியில், திரிஷாவையே இப்படத்திலும் நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து தற்போது, அவரையே ஒப்பந்தமும் செய்துள்ளனர்.



    ஹரி ஏற்கெனவே ‘சிங்கம்’ படத்தின் மூன்று பாகங்களிலும் அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகர்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். அதே பாணியை இந்த படத்தின் பாகங்களிலும் பின்பற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக, ‘சாமி’ முதல் பாகத்தில் நடித்த நிறைய நடிகர்கள் இந்த பாகத்திலும் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



    விக்ரம்-திரிஷா ஏற்கெனவே ‘சாமி’, ‘பீமா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். அதேபோல், திரிஷா ஹரியின் இயக்கத்தில் ‘சாமி’, ‘ஆறு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரம் - ஹரி இருவருடனும் மூன்றாவது முறையாக திரிஷா இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து உறவிக்கார பெண்ணான நிஹாரிக்கா விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இதற்கான முழுசெய்தியை கீழே பார்க்கலாம்.
    விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிப்பவர் நிஹாரிக்கா கோனிடேலா. இவர்  சிரஞ்சீவியின் உறவு பெண். இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தை 7 சிஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனமும், அம்மே  நாராயணா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

    தெலுங்கில் நடித்த முதல் படம் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நாயகி நிஹாரிக்கா. இவர் தற்போது, அறிமுக  இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்து வரும் புதிய படத்தில் கதாநாயகியாக  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம், காதல் கலந்த கற்பனை கதை. அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.



    இது பற்றி கூறிய இயக்குனர் ஆறுமுககுமார்..

    “நடிப்பாற்றலால் கதாபாத்திரத்துக்கு உயிர் தர கூடிய ஒரு கதாநாயகியை நாங்கள் தேடி கொண்டு இருந்தோம். அப்போது  நிஹாரிக்காவின் அசத்தலான நடிப்பை பற்றி கேள்விப்பட்டு அவரை எங்கள் படத்தின் கதாநாயகியாக முடிவு செய்தோம்”  என்றார்.
    நடிகை பாவனாவை காரில் கடத்தி தொல்லை அளித்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் செயலாளர் மகனுக்கு தொடர்பு இருப்பதாக பாரதீய ஜனதா நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    தமிழ் மற்றும் மலையாள நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி ஒருகும்பலால் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டார்.

    கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் பாவனா வின் கார் டிரைவர் மார்ட்டின் மற்றும் கோவையில்  பதுங்கி இருந்த கூட்டாளிகள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பாலக்காடு பகுதியில் நேற்று கூலிப்படையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கைதானார். இவர்களை தவிர முக்கிய  குற்றவாளியான சுனில்குமார், விஜேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.



    சுனில்குமார், விஜேஷ் இருவரும் முன் ஜாமீன் கேட்டு கேரள கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர். இவர்களின் மனு  விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை போலீசார் தேடுதல்  வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே இவர்கள் இருவரும் இன்று அல்லது நாளை கோர்ட்டில் சரண் அடைய உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. இதையடுத்து அவர்கள் கோர்ட்டில் சரண் அடையும் முன்பு இருவரையும் கைது செய்து விட போலீசார் தீவிர முயற்சி  மேற்கொண்டுள்ளனர்.

    நடிகை பாவனாவிற்கு நேர்ந்த கொடுமை குறித்து கேரள அரசியல் பிரமுகர்களும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை  வெளியிட்டு வருகிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் கேரள மாநில பொதுச்செயலாளர் ஏ.என். ராதாகிருஷ்ணன் நேற்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.



    கேரள திரையுலகில் மாபியாக்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. திரையுலக மாபியாக்களுக்கு ஆளுங்கட்சியின் முக்கிய  பிரமுகர்கள் அடைக்கலம் கொடுக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி  பாலகிருஷ்ணனின் மகன் பினிஷ், மலையாள சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

    இவருக்கு நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் தொடர்பு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து உண்மையை வெளி  கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநில முன்னாள் மந்திரியும், எம்.எல்.ஏ.வுமான கணேஷ்குமார் மலையாள நடிகராகவும் உள்ளார். பாவனா விவகாரம்  குறித்து இவர் கூறியதாவது:-

    கேரள சினிமாத்துறையில் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.  கொச்சியில் இருந்து இப்பின்னணியில் வரும் படங்களே இதற்கு சாட்சி.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    படுக்கை அறை காட்சியில் நடிக்க தயக்கம் இல்லை என்று பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்க்கலாம்.
    இந்தி நடிகை கங்கனா ரணாவத் ‘ரங்கூன்’ படத்தில் சயிப்அலிகான், ஷாகித்கபூர் ஆகியோருடன் நெருக்கமான காட்சிகளில்  நடித்திருக்கிறார்.

    அரை நிர்வாண காட்சிகளில் என்னால் நடிக்க முடியும் அதற்காக மிகவும் பிகுபண்ண மாட்டேன். ஒரு காட்சியில் மேல் ஆடை  இல்லாமல் நடிக்க வேண்டியது இருந்தது. ஷாகித் என் உடலில் ஒட்டி இருக்கும் அட்டைப் பூச்சிகளை அகற்றுவது போன்ற  காட்சி, துணிச்சலாக நடித்தேன்.



    ஆடை இல்லாமல் முதுகை காட்டும் காட்சியில் எளிதாக நடிப்பேன். டாப்லெஸ் காட்சியிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.

    குத்துப்பாட்டுக்கு ஆபாசமாக ஆடுவது என்னால் முடியாது. ஆனால் நான் குத்துப்பாட்டுக்கு எதிரானவள் அல்ல. ஆனால் படுக்கை  அறை காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என்றார்.

    இதற்கு மேலும் என்ன சொல்ல முடியும். எதையும் மறைக்காமல் நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டார்.
    தனது நற்பணி இயக்கத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டதற்கு கமல் ஆக்ரோஷத்துடன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி, தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழல் வரை கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து விமர்சித்ததற்காக கமல் நற்பணி இயக்கத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்த கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, இனி மக்கள் நீதி நாடு காக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேச வைக்கிறது. தமிழ்நாட்டை கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது. இது எமது பெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது



    நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கைமாறாது. எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி பொதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுள் உள்ளவரை செய்வோம். அவர் பலமுறை வருவர், போவர். நிரந்தரம் நம்நாடு,

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    திருச்சூரில் இருந்து கொச்சி வரை ஓடும் காரில் நடிகை பாவனாவுக்கு 2½ மணி நேரம் நடந்தது என்ன? என்பதை விரிவாக கீழே பார்ப்போம்.
    தமிழ் மற்றும் மலையாள நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி இரவு காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு  ஆளாக்கப்பட்டார்.

    இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. இச்சம்பவம் பற்றி பாவனா போலீசில் புகார் செய்தார். போலீசார்  இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:-

    நடிகை பாவனா திருச்சூர் அருகே பட்டுரைக்கல் என்ற பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அங்கிருந்து கொச்சி,  பனம்பிள்ளி நகருக்கு காரில் புறப்பட்டார். காரை டிரைவர் மார்ட்டின் ஓட்டினார். இரவு 8.30 மணிக்கு நெடுபாச்சேரி விமான  நிலையம் அருகே சென்றபோது, கேட்டரிங் வேன் ஒன்று பாவனா சென்ற கார் மீது மோதியது.



    உடனே மார்ட்டின் காரை நிறுத்தினார். அப்போது 2-வது மற்றும் 3-வது குற்றவாளிகள் காருக்குள் ஏறினர். அவர்கள் பாவனாவின்  வாயை கைகளால் மூடி, சத்தம் போடக்கூடாது என்று எச்சரித்தனர். மேலும் பாவனாவின் செல்போனையும் பறித்துக்  கொண்டனர். களம்பச்சேரி அருகே சென்றபோது காரில் இருந்து 3-வது குற்றவாளி இறங்கிக் கொண்டார்.

    அப்போது 4-வது குற்றவாளி காருக்குள் ஏறினார். அவர், கருப்பு நிற டீசர்ட் அணிந்திருந்தார். அவர்கள் பாவனாவுக்கு பாலியல்  தொல்லை கொடுத்தனர். பாலாரிவட்டம் அருகே சென்றதும், கார் நிறுத்தப்பட்டது. அங்கு 5-வது மற்றும் 6-வது குற்றவாளிகள்  காருக்குள் நுழைந்தனர்.

    அவர்கள் காரை அருகில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்றனர். அந்த வீட்டிற்கு கிரில் கேட் போடப்பட்டிருந்தது. அங்கிருந்து  முக்கிய குற்றவாளி சுனில்குமார் வந்தார். அவர், முகத்தை கைக்குட்டையால் மூடி இருந்தார். டிரைவர் இருக்கையில் அமர்ந்து  காரை ஓட்டத் தொடங்கினார்.



    அங்கிருந்து காக்கநாடு வரை சுனில்குமாரே காரை ஓட்டினார். அப்போதுதான் பாவனாவுக்கு பாலியல் தொல்லை நேர்ந்தது.  அந்த நேரத்தில் சுனில்குமார், பாவனாவை பார்த்து அவர், நடிக்கும் சில படங்களுக்கு ஒழுங்காக ஒத்துழைக்க வேண்டுமென்று  எச்சரித்தார். அப்போது சுனில்குமாரின் முகத்தை மூடியிருந்த கைக்குட்டை அவிழ்ந்தது. இதில்தான் அவர் சுனில்குமார் என்பது  பாவனாவுக்கு தெரியவந்தது.

    அதன் பிறகு அந்த கும்பல் கொச்சி அருகே பாவனாவை இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். திருச்சூரில் இருந்து கொச்சி வரை  சுமார் 2½ மணி நேரம் இந்த கொடுமைகள் பாவனாவுக்கு நேர்ந்துள்ளது. அதன் பிறகு அவர், டைரக்டர் லால் வீட்டிற்கு சென்று  போலீசாருக்கு தகவல் கொடுத்தின்பேரில் சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு வந்தது.

    இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதற்கிடையே பாவனா, பெண் மாஜிஸ்திரேட்டிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    என்னுடைய காரில் அத்துமீறி நுழைந்தவர் என்னை மிரட்டினார். முக்கியமான நபர் ஒருவரின் உத்தரவின்பேரில் இங்கு  வந்துள்ளதாக கூறினார். அவர் கூறுவதை கேட்டு நடக்க வேண்டும். இல்லையேல் கொச்சியில் உள்ள ஒரு பிளாட்டுக்கு  கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்யவும் தயங்க மாட்டோம் என்று கூறினார்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே பாவனா, கடத்தப்பட்ட காரை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் சோதனையிட்டனர்.

    காருக்குள் கிடந்த பொருட்கள் உள்பட பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர  விசாரணை நடந்து வருகிறது.
    விக்ரம் தற்போது ஒரே நேரத்தில் 3 இயக்குநர்களின் இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    கவுதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதில்  விக்ரம் ‘பெப்பர் அன்ட் சால்ட்’ தோற்றத்தில் தாடியுடன் நடிக்கிறார். தெலுங்கு படநாயகி நீதுவர்மா கதாநாயகியாக நடிக்கிறார்.



    அடுத்து விஜய்சந்தர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் தாடி இல்லாத மழித்த முகம், கருப்பு முடியுடன் விக்ரம்  நடிக்கிறார். முதல் முறையாக அவருடைய ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக வருகிறார். இந்த  படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.



    இதைத் தொடர்ந்து மே மாதம் முதல், ஹரியின் இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இதற்கான  ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுவரை ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிக்கும் நடைமுறையை  விக்ரம் கடைபிடித்து வந்தார். இந்த ஆண்டு முதல் முறையாக ஒரே தடவை 3 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
    பாவனா படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்ததாக டிரைவர் சுனில் குறித்த திடுக் தகவல் அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    நடிகை பாவனாவின் கார் டிரைவர் சுனில் பற்றி தினமும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

    நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத் தல் செய்த கார் டிரைவர் சுனிலை கேரள திரைப்படதுறையினர் பல்சர் சுனில்  என்று செல்லமாக அழைப்பார்கள். அந்த அளவுக்கு திரைஉலக பிரபலங்களுக்கு நன்கு பரிட்சயமானவன்.

    மலையாள திரை உலகினருக்கு வெளியில் செல்ல டிரைவர்கள், கார்கள் தேவைப்பட்டால் சுனில் அனுப்பிவைப்பான்.  டிரைவர்களை வேலைக்கும் அனுப்பி வைப்பான், தற்காலிகமாக கார் ஓட்டவும் டிரைவர்களை அனுப்பிவைப்பான். மலையாள  சினிமா துறையில் பல சங்கங்களில் உறுப்பினர் அட்டையும் வைத்திருந்தான். இதனால் அவன் மீது திரை உலகினருக்கு  நம்பிக்கை ஏற்பட்டது.



    இந்த நிலையில் தமிழ்ப் பட வாய்ப்புகள் குறைந்ததால் பாவனா தனது தாயாரோடு சென்னையில் இருந்து கேரளாவுக்கு  குடிபெயர்ந்தார். அங்கு அவரிடம் முதலில் தற்காலிக டிரைவராக சுனில் பணிபுரிந்தான். ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சகஜமாக  பழகியதால் அவன் மீது பாவனாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டு நிரந்தர டிரைவராக வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.

    பாவனா வீட்டுக்குள் எல்லா அறைகளுக்கும் சென்று வரக்கூடிய வகையில் சுனில் பழகினான். பாவனா மூலம் மற்ற  நடிகைகளுடன் சுனில் பழகினான். சுனிலுக்கு அவர் முழு சுதந்திரம் அளித்தது தாயாருக்கு பிடிக்கவில்லை. அடிக்கடி மகளை  எச்சரித்து வந்தார்.

    ஒரு நாள் பாவனா இல்லாத சமயத்தில் அவரது படுக்கை அறைக்குள் சுனில் சென்று ரகசிய கேமரா வைத்தான். இதை தாயார்  பார்த்து விட்டார். உடனே மகளிடம் சொல்லவே சுனிலை வேலையை விட்டு நிறுத்திவிட்டார் பாவனா.



    அதன் பிறகு பிரபல தமிழ்நடிகையின் முன்னாள் கணவரும் மலையாள நடிகருமான ஒருவரிடம், சுனில் வேலைக்கு சேர்ந்தான்.  அங்கும் நடிகரின் தற்போதைய மனைவியான நடன நடிகையுடன் நெருங்கிப் பழகி அவரது வீட்டிலும் ரகசிய கேமரா வைத்த  போது சுனில் மாட்டிக்கொண்டான். இதனால் அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்டான்.

    இதனால் விரக்தி அடைந்த சுனில் தவறான பாதையில் சென்று தற்போது பாவனா கடத்தலில் சிக்கி தேடப்படும்  குற்றவாளியாகிவிட்டான்.
    சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் வசந்த் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்
    சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் ஒரு பாடல், இரண்டு சண்டைக் காட்சிகள் ஆகியவற்றை படமாக்கியுள்ளனர்.

    இந்நிலையில், இப்படத்தில் விஜய் வசந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் வசந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘சென்னை 600 028 II)', ‘அச்சமின்றி’ ஆகிய படங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் வசந்த் எந்தமாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.



    ‘வேலைக்காரன்’ படத்திற்காக சென்னையில் ரூ.5 கோடி செலவில் சேரி ஒன்றை ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் நிறுவியுள்ளார். அதில், 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மேலும், 20 நாட்கள் சென்னையில் உள்ள முக்கியமான குடிசை பகுதிகளில் சென்று படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் முடித்துவிட்டு படக்குழுவினர் 35 நாட்கள் மலேசியாவில் சென்று படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். அங்குள்ள மிகப்பெரிய பேக்டரிகளில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ‘வேலைக்காரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர்கள் தினத்தில் வெளியிடவுள்ளனர். இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார்.
    விஜய்யின் போக்கிரி பட ஸ்டைலில் சந்தானம் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    காமெடியனாக இருந்து ஹீரோவாக களமிறங்கியுள்ள சந்தானம் கைவசம் தற்போது ‘சர்வர் சுந்தரம்’, ‘ ஓடி ஓடி உழைக்கணும்’, ‘சக்க போடு போடு ராஜா‘ ‘மன்னவன் வந்தானடி’  ஆகிய படங்கள் உள்ளன. இதில், ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் சந்தானம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதுவும் போக்கிரி ஸ்டைலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    அதாவது ‘போக்கிரி’ படத்தில் விஜய், முதலில் போக்கிரியாக இருந்து ஒவ்வொரு ரவுடிகளிடம் சகஜமாக பழகி, கடைசியில் மெயின் வில்லனை பிடிப்பார். அதேபோல், இந்த படத்தில் சந்தானம், முதலில் தான் போலீஸ் என்பதை காட்டிக் கொள்ளாமல், ரவுடிகளை கடைசியில் எப்படி வீழ்த்துகிறார் என்பதுபோல் கதையை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



    இப்படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ‘அனேகன்’ படத்தின் நாயகி அமைரா தஸ்தூர் இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். வாசன் விசுவல் வென்சுவர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. 
    ×