என் மலர்
“நடிகை பாவனாவைப்போல் நான் பாலியல் தொல்லையை அனுபவிக்க நேர்ந்து இருந்தால், செக்ஸ் வெறியர்களை கொலை செய்து இருப்பேன்” என்று நடிகை ரகுல்பிரீத் சிங் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
தடையற தாக்க, என்னமோ ஏதோ, புத்தகம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த ரகுல்பிரீத் சிங், கேரளாவில் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் தொல்லைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-
“நடிகை பாவனாவுக்கு ஓடும் காரில் நடந்துள்ள பாலியல் கொடுமையை கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இது ஒரு வெட்கம்கெட்ட செயல். பெண்மையின் புனிதத்தை போற்றி மகளிர் தினம், அன்னையர் தினம் என்றெல்லாம் நிறைய விழாக்கள் எடுக்கப்படுகின்றன. இன்னொரு புறம் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற பாலியல் வக்கிரமங்களும் நடந்து கொண்டு இருக்கின்றன.
இதனால் பெண்களுக்கு மரியாதை செய்து நடத்தப்படும் விழாக்களுக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகிறது. பெண்கள் மீது பாலியல் வக்கிரமங்களை ஏவுகிறவர்கள் மனிதராகவே இருக்க முடியாது. நடிகை பாவனா இடத்தில் நான் இருந்து எனக்கு பாலியல் பலாத்கார கொடுமைகள் நடந்து இருந்தால் அந்த செக்ஸ் வெறியர்களை சும்மா விட்டு இருக்க மாட்டேன். அவர்களை கொலை செய்து இருப்பேன்.

நான் அத்லெடிக் வீராங்கனை. உடற்பயிற்சிகள் செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறேன். படப்பிடிப்பில் ஓய்வு கிடைத்தால் உடனே உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று விடுவேன். எனவே என்னிடம் யார் வாலாட்டினாலும் தப்பிக்க முடியாது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தபோது எனது அனுமதி இல்லாமல் ஒருவர் என்னை போட்டோ எடுத்தார். அதை பார்த்ததும் எனக்கு கோபம் வந்தது. அவரிடம் சண்டை போட்டேன். அந்த இளைஞரை அடிக்கவும் செய்தேன்.
நான் வெளியே செல்லும்போதெல்லாம் எனது அம்மா, “ஜாக்கிரதையாக போ” என்று எச்சரிக்கை செய்து வழியனுப்பி வைப்பார். அப்போது அவர் சொல்வது எனக்கு சாதாரணமாகவே தெரிந்தது. என்னுடன் காரில் டிரைவர் இருக்கிறார், ஊழியர் இருக்கிறார். எனவே என்ன நடந்து விடும் என்று நினைத்தேன். ஆனால் பாவனாவுக்கு நடந்த சம்பவத்துக்கு பிறகு யாரை நம்புவது என்று புரியவில்லை.”
இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.

பாவனா மானபங்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இணையதளம் மீது விவேக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
'சித்திரம் பேசுதடி', 'வெயில்', 'ஜெயம் கொண்டான்', 'அசல்' ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து பிரபல கதாநாயகியாக இருந்த பாவனாவை டிரைவர்கள் உள்ளிட்ட 6 பேர் காரில் கடத்தி மானபங்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் தொடர்பு உள்ள குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாவனாவை மானபங்க படுத்தியவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கவேண்டும் என்று பல்வேறு சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக் பாவனாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும். இலகுவாக இணையத்தில் கிடைக்கும் போர்ன், இதுபோன்ற வக்கிரங்களுக்கு வாசல் திறக்கிறது என்று குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். மேலும், பாவனா நாங்கள் உன்னோடு இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கண் தெரியாத இளம் பாடகி ஒருவருக்கு ஜி.வி.பிரகாஷ் வாய்ப்பு வழங்கியுள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
தற்போது கோலிவுட்டுக்கு பல திறமை வாய்ந்த இளம் கலைஞர்கள் அறிமுகமாகி வருகின்றனர். அதிலும், சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் திறமையை வெளிக்காட்டும் பலரும் தங்களது அடுத்த அடியை கோலிவுட்டில்தான் பதிக்கிறார்கள்.
அந்த வரிசையில், சமூக வலைத்தளங்களில் தனது அழகான குரலை வெளிப்படுத்தியிருந்த ஜோதி என்ற கண் தெரியாத இளம் பாடகிக்கு ஜி.வி.பிரகாஷ் தனது இசையில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். ஜோதி, பேஸ்புக் இணையதளத்தில் தனது குரலில் பாடல்களை பாடி வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்து வியந்துபோன ஜி.வி.பிரகாஷ், அடுத்ததான தான் நடிக்கும் அடங்காதே படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். இந்த பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்று முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நாகார்ஜுன் மகன் நடிகர் அகில் திருமணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுன், நடிகை அமலா தம்பதியின் மகன் அகில். நாகார்ஜுனின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் காதல் மலர்ந்து, இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
அகிலும், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜி.வி.கே.ரெட்டியின் பேத்தி ஸ்ரேயா பூபாலை காதலித்தார். ஸ்ரேயா பூபால் பேஷன் டிசைனராக இருக்கிறார். இவர்கள் காதலுக்கு, இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து, திருமணத்துக்கும் ஏற்பாடு செய்தார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் அகில், ஸ்ரேயா பூபால் நிச்சயதார்த்தம் நடந்தது. மே மாதம் இத்தாலியில் இவர்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இதற்காக ஐதராபாத்தில் இருந்து 700 விருந்தினர்களை அழைத்துச்செல்ல திட்டமிட்டனர். அவர்களுக்கான விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது.
இத்தாலியில் இவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல்களில் அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது இந்த திருமணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விருந்தினர்கள் ஒவ்வொருவரிடமும் திருமண வீட்டார் தொடர்பு கொண்டு திருமணம் நின்றுபோனதாகவும், இத்தாலி புறப்பட தயாராக வேண்டாம் என்றும் கூறி வருகிறார்கள். திருமணம் ரத்தானதற்கான காரணம் தெரியவில்லை. இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

`கபாலி', `பில்லா' படங்களின் வழியில் சிவகார்த்திகேயன் நடிக்கும் `வேலைக்காரன்' படமும் படமாக்கப்பட உள்ளது. இதுபற்றிய முழுசெய்தியை கீழே பார்ப்போம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் `வேலைக்காரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடித்த `ரெமோ' பட வெற்றியை தொடர்ந்து 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் `வேலைக்காரன்' படத்தையும் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் `வேலைக்காரன்' படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் 35 நாட்கள் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. அங்குள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இதற்கு முன்னதாக ரஜினியின் `கபாலி', அஜித் நடித்த `பில்லா', விக்ரமின் `இருமுகன்', விஜய்யின் `குருவி' உள்ளிட்ட பல படங்கள் மலேசியாவில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உழைப்பாளர் தினமான மே 1-ஆம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று நடிகை பாவனா அறிவித்து உள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
சித்திரம் பேசுதடி, வெயில், ஜெயம் கொண்டான், அசல் ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து பிரபல கதாநாயகியாக இருந்த பாவனாவை டிரைவர்கள் உள்ளிட்ட 6 பேர் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்பு உள்ள குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாவனா கடத்தலில் பிடிபட்டவர்களின் செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டபோது ஒரு பிரபல நடிகரும், அரசியல்வாதியின் மகன்கள் இரண்டு பேரும் அடிக்கடி அவர்களிடம் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தில் இந்த கடத்தலுக்காக ரூ.50 லட்சம் பேரம் நடந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது. நடிகர் திலீப் பெயரும் இதில் அடிபட்டது. ஆனால் அவர் பாவனா கடத்தலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தேவை இல்லாமல் தனது பெயரை இதில் இழுத்து இருப்பதாவும் மறுத்து இருக்கிறார்.
பாவனாவுக்கும், திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. திலீப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தபோது குடும்ப வாழ்க்கையில் தனக்கு நேர்ந்த சங்கடங்களை பாவனாவிடம் மஞ்சு வாரியர் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. பாவனா இந்த பிரச்சினையை முக்கிய நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவித்து மஞ்சுவாரியருக்கு நியாயம் கிடைக்க போராடினார்.

அதன்பிறகு சிலரது தூண்டுதலால் மலையாள பட உலகில் இருந்து பாவனா ஓரம் கட்டப்பட்டார். 2014-ம் ஆண்டில் இருந்து ஒரு வருடம் அவருக்கு மலையாள பட வாய்ப்புகளே இல்லை. இதனால் கன்னட பட உலகுக்கு சென்று அங்கு படங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். அப்போதுதான் பாவனாவுக்கும் கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
தற்போது பாவனாவுக்கு மலையாள படங்களில் நடிக்க மீண்டும் வாய்ப்புகள் வந்துள்ளன. பிருதிவிராஜ் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில்தான் கடத்தல், பாலியல் தொல்லைகளை பாவனா சந்திக்க நேர்ந்துள்ளது. பாவனாவை ஆபாசமாக வீடியோ படம் எடுத்தவர்கள் அதை வெளியிடாமல் இருக்க ரூ.30 லட்சம் பணம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் சிறு சிறு வேலைகள் செய்த நபர்களும் இந்த கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று பாவனா அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து நடிகர் பிருதிவிராஜ் கூறும்போது, “பாவனாவும் நானும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளோம். தற்போது பாவனா, தன்னிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைப்பது வரை கேமரா முன்னால் வரமாட்டேன் என்று கூறிவிட்டார்” என்றார்.

இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி-ரித்திகா சிங் இணைந்து நடிக்க உள்ள படத்தில் பிரபல நடிகை ஒருவரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த நடிகை யார் என்பதை கீழே பார்ப்போம்.
மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிப்பில் பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 20 வருடங்களுக்குப் முன்பு வெளியான `புதையல்' படத்திற்கு பிறகு, இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி மீண்டும் நடித்து வருகிறார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி உள்ளிட்ட 3 நாயகிகள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு `வணங்காமுடி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் படக்குழு அதனை மறுத்துள்ளது.
முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட் OAK, சுந்தர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கிய நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சிம்ரன் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய டி. இமான் இசையமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், சிவா யாதவ் கலையையும் மேற்கொள்கின்றனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வரும் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `விஜய் 63' படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. `விஜய் 62' படத்தில் யாருடன் இணைய உள்ளார் என்பதை கீழே பார்ப்போம்.
`துப்பாக்கி', `கத்தி' வெற்றிப் படங்களுக்கு பிறகு விஜய் மீண்டும் ஏ.ஆர்முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. `பைரவா' படத்திற்கு பிறகு விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்பாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு ஏ.ஆர்.முருகதாசுடன் இணைவார் என்று கூறப்படும் நிலையில், விஜய்-யின் 62-ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவில்லை என்ற தகவல் பரவி வருகிறது. மாறாக விஜய்யின் 63-வது படத்தை முருகதாஸ் இயக்குவார் என்றும் மற்றொரு தகவல் வந்த வண்ணம் உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணையும் அடுத்த படத்தின் வேலைகள் தீவிரவமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் தனது அடுத்த படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நடிக்க விருப்பமாக உள்ளாராம்.
இதற்கு முன்னதாக விஜய் `சுறா', `வேலாயுதம்' என்ற இரு அதிரடி படங்களுக்கு இடையே `காவலன்' என்ற முற்றிலும் மாறுபட்ட காதல் கதையில் நடித்தார். பின்னர் `வேலாயுதம்', துப்பாக்கி ஆகிய இரு மாஸ் படங்களுக்கு இடையே `நண்பன்' என்ற கிளாசிக் படத்தில் நடித்தார். பின்னர் `கத்தி', `தெறி' ஆகிய இரு அதிரடி வெற்றிப் படங்களுக்கு நடுவே `புலி' என்ற மாறுபட்ட கற்பனைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், தற்போது அட்லியுடன் இணைந்துள்ள விஜய் அடுத்தாக கதாபாத்திரத்தில் முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். மேலும் அதற்கான பேச்சுவாரத்தையில் ஈடுபட்டுள்ளாராம். சரியான கதை அமைந்தால் அந்த படத்தை விரைவில் முடித்து பின்னர், முருகதாஸ் இயக்கத்தில் தனது 63-வது படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இதற்காக இயக்குநர் செல்வராகவனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருதாகவும் கூறப்படுகிறது. விஜய்க்கு ஏற்ற வலுவான கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட கதை கிடைத்தால் `விஜய் 62' படத்தை செல்வராகவன் இயக்கலாம் என்று செய்திகள் உலாவி வருகின்றன. அதன் பின்னர் `விஜய் 63' படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு காத்திருக்கத் தான் வேண்டும்.

டைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 2ஷி ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.

பாலசந்தரிடம் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கோவி.மணிசேகரன் கூறுகிறார்:
"விஜயதசமி அன்று இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன். `அரங்கேற்றம்' படம்தான் எனக்கும் ஆரம்ப அரங்கேற்றம்.
அவரது சிந்தனை நான்கு திசைகளிலும் சிறகடிக்கும். சிந்தனை அளவுக்கு அவரிடம் சினமும் குடிபுகுந்திருந்தது. ஆயினும் முரட்டுக்கோபம் அல்ல; முன்கோபம்.
எவருக்கும் `அது இது' என்று எடுத்துச் சொல்லமாட்டார். புத்தி உள்ளவன் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் அந்த குருகுலத்து ஏணிப்படிகளை எண்ணலானேன். நானே யோசிப்பேன்; நானே ஆய்வேன்; நானே புரிந்து கொள்வேன்.
அரங்கேற்றம் டைட்டிலில் ஒரு குடுகுடுப்பைக்காரன் `நல்ல காலம் வருது, நல்ல காலம் வருது' என்று குடுகுடுப்பையைக் குலுக்குவான். அவன் உருவத்தின் மீது என் பெயர் வரும். துணை டைரக்ஷன் - கோவி.மணிசேகரன் என்று! ஆம்; தனி டைட்டில் கார்டுதான்!
இப்படி தனி டைட்டில் போட்டது குறித்து எங்கள் குழுவில் பிரச்சினை எழுந்தது. குரு கே.பாலசந்தர் சொன்னார்: "அவர் இலக்கிய சாம்ராட் விருது பெற்றவர். நான் அவரை இறக்கி மதித்தால், அவருடைய வாசகர்கள் என்னை இறக்கி மதிப்பிடுவார்கள். எனவே இதுதான் அறம்.''
அவரது பதில், பலருக்கு இரும்பைக் காய்ச்சி இறக்கியது போலிருந்தது. அன்று முதலே, என் மீது சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டது.
இந்திப்படம் செய்கிற போதுகூட, பாலசந்தர் என்னை இறக்கிப் பார்த்ததில்லை. அவருக்கு எழும் இலக்கிய ஐயங்களை நான் அண்ணாந்து வழங்கியதில்லை; அடிபணிந்து வழங்கியிருக்கிறேன்.
இருமுறை அவர் என்னை கோபித்துக் கொண்டிருக்கிறார்.
ஒன்று: வசனத்தாளில் திருத்தப்பட்ட வசனங்களை வரிசையாக எழுதத் தவறியது.
மற்றொன்று: மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, கன்னடத்தில் அதிகமாகப் பேசப்பட்ட கலை நுணுக்கங்கள் நிறைந்த படம் அருகேயுள்ள ஒரு திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன். துணைக்கு வர யாரும் இல்லை. ஒரு துணை நடிகையும் அந்தப் படத்தைப் பார்க்கத் துடித்தாள்.
இயக்குனருக்கு எங்கே தெரியப்போகிறது என்று நினைத்து படத்துக்குப்போனோமë. திரும்பி வரும்போதுதான் தெரிந்தது, கருகருவென ஆசான் காத்திருந்தது!
நடிகையோ ஓடி ஒளிந்து கொண்டாள். நான் அகப்பட்டுக்கொண்டேன். கே.பி.யின் கண்களில் கோபம். என்னை ஏசிவிட்டு, பிறகு ஒரு குழந்தைக்குக் கூறுவது போல் சொன்னார்:
"கோவி! நீங்கள் பிரபல எழுத்தாளர். அவளோ நடிகை. நாளை இது பத்திரிகைகளில் வந்தால் எவருடைய பெயர் எப்படிக் கெடும் யோசித்தீர்களா?''
இவ்வாறு பாலசந்தர் கூறியதும், நான் தலை குனிந்தேன். தவறுக்காக மன்னிப்பு கேட்டேன்.
பாலசந்தரிடம் 2ஷி ஆண்டுகள் பணியாற்றினேன். அவரிடம் இருந்து விடைபெறும் நேரம் வந்தது. கண்ணீருடன் விடைபெற்றேன். அவர் கண்களும் கலங்கின.''
இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.
"பாலசந்தரிடம் இருந்து ஏன் விலகினீர்கள்?'' என்று கேட்டதற்கு மணிசேகரன் சொன்னார்:
"சினிமா துணை டைரக்டராக பணியாற்றியபோது, எனக்கு கிடைத்த வருமானம் குறைவு. அதற்குமுன் புத்தகம் எழுதுவதன் மூலம்தான் வாழ்க்கை நடந்தது. சினிமாவில் பணியாற்றியபோது, மனைவியின் நகைகளை விற்று குடும்பம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
"திரைத்தொழில் கற்று என்ன சாதித்து விடப்போகிறீர்கள்?'' என்று என் அன்பு மனையாள் கண்ணீருடன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.
தவிரவும், பாலசந்தரின் முக்கிய உதவியாளராக விளங்கிய அனந்துடன் எனக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது.
இத்தகைய காரணங்களால், நான் பிரிய நேர்ந்தது'' என்று கூறிய மணிசேகரன், தொடர்ந்து சொன்னார்:
இந்த சமயத்தில், என் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
நான் எழுதிய "தென்னங்கீற்று'' என்ற நாவல், புத்தகமாக வெளிவந்தது. அதைப் பாராட்டி, "இந்து'' நாளிதழில் விமர்சனம் வெளியாகியிருந்தது.
பெங்களூரைச் சேர்ந்த பாபாதேசாய் என்ற படத்தயாரிப்பாளர், அந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு, அதைப் படமாக்க விரும்பி, என்னைத் தேடி வந்தார்.
"இந்து பத்திரிகையில் விமர்சனம் படித்தேன். கதை முழுவதையும் சொல்லுங்கள்'' என்று கூறினார். எனக்கே புரியாத எதிர்பாராத அதிர்ச்சி.
நான் கதையை ஆங்கிலத்தில் சொன்னேன். பாலசந்தர் பட்டறையில் இருந்ததால், சினிமாவுக்கு ஏற்றபடி கதை சொல்லப் பழகியிருந்தேன். பட அதிபரை கவரும் விதத்தில் கதையைச் சொல்லி கலக்கினேன்.
கதையைக் கேட்டதும் அவர் கண்களில் நீர் மல்கியது. "இக்கதையை கன்னடத்தில் படமாக எடுக்கிறேன். கதைக்கு என்ன விலை?'' என்று கேட்டார்.
வெறும் கதையை விற்பதற்கா 2ஷி ஆண்டுகள் திரைத்தவம் செய்தேன்!
"தமிழில் எடுப்பதானால், கதையைத் தருகிறேன். அதுவும் வசனத்தை நானே எழுதி, டைரக்ட் செய்ய வேண்டும்'' என்று கூறி, பாலசந்தரிடம் பணியாற்றியது பற்றி விவரித்தேன்.
பாலசந்தர் பெயரைச் சொன்னதும், பாபாதேசாய் மகிழ்ந்து போனார். "தமிழிலும், கன்னடத்திலும் எடுப்போம். ஒரே நேரத்தில் இரு மொழிகளில் எடுக்க உங்களால் முடியுமா?'' என்று கேட்டார்.
"ஏன் முடியாது?'' என்று திருப்பிக் கேட்டேன்.
"அப்படியென்றால் ஆகட்டும். திரைக்கதை எழுதத் தொடங்கலாம்'' என்று கூறிவிட்டு, முறைப்படி ஒப்பந்தம் போட்டு, அட்வான்சும் வழங்கினார்.''

பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தேர்வாகியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் உரிமை மீட்பு அணி சார்பில் தலைவர் பதவிக்கு இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரும், சம்மேளன முன்னணி அணி சார்பில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவில் தலைவராக சம்மேள முன்னணி சார்பில் போட்டியிட்ட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தேர்வானார். செயலாளராக உரிமை மீட்பு அணி சார்பில் போட்டியிட்ட ஏ.சண்முகம் தேர்வாகியுள்ளார். மேலும், பொருளாளராக உரிமை மீட்பு அணி சார்பில் போட்டியிட்ட சுவாமிநாதன் தேர்வாகியுள்ளார்.

இவர்களுடன் இணைச் செயலாளர்களாக ராஜா, சபரிகிரீஷன், ரமணபாபு, தனபால், செந்தில்குமார் மற்றும் துணைத் தலைவர்களாக சந்திரன், ஸ்ரீப்ரியா, ஷோபி பவுல்ராஜ், அரசகுமார் (அனல் அரசு), ஸ்ரீதர் ஆகியோரும் தேர்வு பெற்றுள்ளனர்.
இவர்கள் பதவியேற்கும் விழா நாளை மாலை 6 மணி அளவில் சென்னையிலுள்ள ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெறவிருக்கிறது.
23 சங்கங்களை சேர்ந்த தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு மட்டுமே வாக்குரிமை உள்ளதால் அந்த சங்கங்களைச் சேர்ந்த 69 பேர் மட்டுமே ஓட்டு போட்டு நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர். தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் நடத்தி கொடுத்தார்.
இந்த தேர்தலில் தனிப்பட்ட ஒரு அணிக்கே வெற்றிவாய்ப்பு கிடைக்காமல் இரு அணிகளை சேர்ந்தவர்களும் நிர்வாக பொறுப்பிற்கு வந்துள்ளதை பெப்சி உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.
இப்படி, இரு அணிகளை சேர்ந்தவர்களும் பொறுப்புக்கு வரும்போது, எந்த போட்டியும் இன்றி அவர்கள் ஒன்றிணைந்து தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவர் என்பதற்காகவே இந்த தேர்தலில் சரிசமமாக வெற்றி வாய்ப்பு கிடைக்க வாக்களித்ததாக பெப்சி உறுப்பினர்கள் கூறினர்.

தனுஷை பற்றி பின்னணி பாடகி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் நிறைய பதிவுகளை டுவிட் செய்துள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
பாடகி சுசித்ராவின் தொடர் டுவிட்டுகளால் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பின்னணி பாடகியான சுசித்ரா, ’ஆயுத எழுத்து’ உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்திலும் நடித்துள்ளார். நடிகர் கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 20-ந் தேதி இவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் காயம்பட்ட தனது கையின் புகைப்படத்தை பதிவு செய்து, ‘இது தனுஷ் கூட்டத்தின் மோசமான ஆட்களால் ஆன காயம். மன்னியுங்கள். நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

சுசித்ராவின் இந்த டுவிட் பலரது மத்தியிலும் பெரும் கேள்விகளை எழுப்பியது. உண்மையிலேயே சுசித்ராதான் டுவிட் செய்கிறாரா? அல்லது அவரது டுவிட்டர் கணக்கு சமூகவிரோதிகளால் முடக்கப்பட்டு, அவர்கள் செய்யும் சதி வேலையா? என்பன போன்ற கேள்விகள் எழுந்தது.
ஆனால், அடுத்த டுவிட்டில், ‘இது சுசிதான், நான் மீண்டும் வந்துவிட்டேன். நான் பாதுகாப்பாக உள்ளேன். தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டை பற்றி அனைவரிடமும் கூற தயாராக உள்ளேன்’ என்று குறிப்பிட்டார். இன்னும் சில டுவிட்டில் தனுஷை பற்றி புகழ்ந்தும் கூறியுள்ளார். அதாவது ‘தனுஷ் நீங்கள் கடவுள். உங்கள் காலை காட்டுங்கள் என்று கூறியிருக்கிறார். மேலும், ’தனுஷ் என்னிடமிருந்து தள்ளியே இருங்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த டுவிட்டுகளையெல்லாம் நான்தான் பதிவு செய்தேன் என்று செல்வி படம் ஒன்றையும் பதிவேற்றி உறுதி செய்துள்ளார். இந்த பதிவுகளையெல்லாம் சுசித்ராதான் பதிவு செய்தாரா? என்ற ஐயம் எழுந்துள்ள நிலையில், அவர் எதற்காக இதை செய்கிறார்? அவருக்கு என்ன ஆயிற்று? என்ற ஒரு கேள்வியும் இன்னொரு பக்கம் எழுந்துள்ளது. இதற்கெல்லாம், சுசித்ரா கூடிய விரைவில் நேரில் வந்து எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்று நம்புவோமாக....

சோனியா அகர்வால் 5 மொழிகளில் உருவாகும் திகில் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்துமொழிகளில் ‘அகல்யா’ என்கிற திகில் படம் தயாராக உள்ளது. இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார் இயக்குனர் ஷிஜின்லால். மலையாளத்தில் நிறைய விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் உள்ள இவர் ‘அகல்யா’ படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்த திரில்லர் படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் கதாநாயகன் இல்லை என்பது ஒரு ஹைலைட்டான விஷயம். இதுதவிர இன்னொரு தென்னிந்திய சினிமா பிரபலம் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார். அது யாரென்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர் ஷிஜின்லால்.

கதை, திரைக்கதை, வசனத்தை சிபின் ஷா என்பவர் எழுதியுள்ளார். வழக்கமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நாம் பார்க்கும் ஹாரர் படங்களை போல இல்லாமல், ஹாலிவுட் பாணியில் மிரட்டலான ஹாரர் படமாக இது உருவாக இருக்கிறது. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தனது நல்லாசியுடன் இந்தப் படத்தை துவக்கி வைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பூஜை இன்று ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் படத்தின் நாயகி சோனியா அகர்வால், நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ஹாலிவுட்டில் இருந்து வி.எப்.எக்ஸ் மற்றும் படத்தொகுப்பு கலைஞர்கள் டீம் இந்தப்படத்தில் பணியாற்ற இருக்கின்றனர்.

படத்திற்கு சுரேஷ் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஆனந்தகுட்டனின் சீடர் ஆவார். ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகும் இந்தப் படம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது.