என் மலர்
விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தில் துணை இயக்குநராக நடிக்க உள்ளார். இப்படத்தின் முழுதகவலை கீழே பார்க்கலாம்.
விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான `மாவீரன் கிட்டு' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷ்ணு முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஷ்ணு, முருகானந்தம் இயக்கத்தில் `கதாநாயகன்' மற்றும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், `முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் உடன் மீண்டும் இணைய இணைகிறார். சைக்கோ த்ரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் துணை இயக்குநராக நடிக்கும் விஷ்ணு பல இன்னல்களை சந்திக்கிறார். மேலும் ஒரு சம்பவம் குறித்த முக்கிய துப்புதுலக்க வேண்டிய வேலையிலும் ஈடுபடுகிறார். முன்னதாக கிடைத்த தகவலின் படி சுசான் ஜார்ஜ் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இரவு நேரத்தில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை அசஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஸ்கைலார்க் என்டர்டெயின்ட்மண்ட் தயாரிக்கிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நடிகை பாவனா கடத்தலில் எனக்கு தொடர்பு இல்லை என்று நடிகர் திலீப்பை தொடர்ந்து சித்தார்த் பரதனும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதும் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு யார் காரணம், என்று ஆள் ஆளுக்கு கருத்து சொல்ல தொடங்கினர். அப்போது நடிகர் திலீப்புக்கும் பாவனாவுக்கும் ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்தது. மஞ்சுவாரியாரை திலீப் விவாகரத்து செய்ய பாவனா தான் காரணம் என்று கூறப்பட்டதையும் சிலர் சுட்டிக் காட்டினர்.
இதுபோல மலையாளத்தில் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு திலீப்தான் காரணமென்று பாவனா ஏற்கனவே குற்றம் சாட்டியதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்தது. இதன் காரணமாக பாவனா கடத்தலுக்கு திலீப் காரணம் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியது.

இதை திலீப் மறுத்தார். சமூக ஊடகங்கள் பிரச்சினையை திசை திருப்ப முயல்வதாகவும், போலீசார் விசாரணையை சரியான கோணத்தில் எடுத்து செல்ல வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் பிரபல மலையாள டைரக்டர் பரதன் - நடிகை கே.பி.ஏ.சி. லலிதாவின் மகனுமான சித்தார்த் பரதனுக்கு பாவனா கடத்தலில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. போலீசார் அவரது வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதாகவும், அங்கிருந்து குற்றவாளி ஒருவரை கைது செய்ததாகவும் கூறப்பட்டது.
இதனை சித்தார்த் பரதன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாவனா கடத்தலில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இது பொய்யான செய்தி. இத்தகைய செய்திகள்தான் வேகமாக பரவுகிறது. பாவனா கடத்தலுக்கு காரணம் என்ன? இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பதை கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் என்னை வேண்டுமென்றே இழுத்து எனது பெயரையும், குடும்பத்தின் புகழையும் கெடுக்க சிலர் நினைக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சித்தார்த் பரதனின் தாயார் பிரபல நடிகை கே.பி.ஏ.சி. லலிதா கூறியதாவது:-
எங்கள் குடும்பத்தின் புகழை கெடுக்க வேண்டுமென்றே சிலர் இத்தகைய புரளிகளை கிளப்பி விடுகிறார்கள். என் மகனுக்கு இந்த சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை. அவர், தவறு செய்யவில்லை.
அவர் ஏதாவது குற்றம் செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் பொதுமக்களே அவரை தண்டிக்கட்டும்.

நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சுனில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
நடிகை பாவனா கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான சுனில் என்ற பல்சர் சுனில் தலைமறைவாக இருந்தார். அவர் இன்று எர்ணாகுளம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
பிரபல நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 17-ந்தேதி இவர் திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டு கார் மூலம் கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த காரை டிரைவர் மார்ட்டின் என்பவர் ஓட்டினார். பாவனாவின் காரை ஒரு கும்பல் வழிமறித்தது. அந்த கும்பலை சேர்ந்த பிரபல ரவுடி சுனில் உள்பட 5 பேர் காரில் ஏறி நடிகை பாவனாவிடம் பாலியல் கொடுமை செய்து அதை செல்போனிலும் படம்பிடித்தனர்.
நடிகை பாவனா டைரக்டர் லால் உதவியுடன் இதை போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார். போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக டிரைவர் மார்ட்டினை கைது செய்தனர். மேலும் கோவையில் பதுங்கி இருந்த சுனிலின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான சுனில் அவரது கூட்டாளிகள் மணிகண்டன், விஜேஷ் ஆகிய 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுனில் கொச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நயன்தாரா இடத்தை அமலாபால் பிடித்துள்ளதாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவியுள்ளது. அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
மலையாள இயக்குனரான சித்திக், தான் மலையாளத்தில் இயக்கிய வெற்றிப்படங்களை தமிழிலும் ரீமேக் செய்து இங்கேயும் வெற்றி கண்டவர். அந்த வரிசையில் மலையாளத்தில் மம்முட்டி-நயன்தாரா நடிப்பில் சித்திக் இயக்கிய ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தையும் தமிழில் ரீமேக் செய்து இயக்கவிருக்கிறார்.
மலையாளத்தில் மம்முட்டி நடித்த கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில அமலாபால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், மலையாளத்தில் பேபி அனிகா நடித்த கதாபாத்திரத்தில் மீனாவின் மகள் நைனிகா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரவிந்த் சாமி தற்போது ‘சதுரங்க வேட்டை’, ‘நரகாசுரன்’, ‘வணங்காமுடி’ உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார். இப்படங்களை முடித்த பிறகு சித்திக் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்திக் தமிழில், ‘ப்ரெண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கவர்.

இயக்குனர் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கும் `அச்சமில்லை அச்சமில்லை' படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
இயக்குனர் அமீர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’.
இயக்குனர் அமீரின் உதவியாளர் முத்து கோபால் இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். நாயகி சாந்தினி தமிழரசன். இவர்களுடன் ஹரீஷ் ஜாலே, தருஷி, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், எம்.முனிஸ் ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் அமீர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு - அருண்குமார், இசை - விவ்யுரி குமார், பாடல்கள் - சினேகன், படத்தொகுப்பு - ஆதியப்பன் சிவா, தயாரிப்பு - இயக்குனர் அமீர், இயக்கம்- முத்து கோபால்.
படம் குறித்து இயக்குனர் முத்து கோபால் கூறும் போது...
“இந்த படத்தின் கதை பிடித்து இருந்ததால் நானே இயக்கி கதாநாயகனாக நடிக்க விரும்பினேன். எனது ஆசையை நிறைவேற்ற, அப்பா நிலத்தை விற்று பணம் எனக்கு கொடுத்தார். என்றாலும் பண தட்டுப்பாடு ஏற்பட்டது.

உடனே அமீர் சாரை சந்தித்தேன் அவர் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார். படத்தை பார்த்து விட்டு ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று பெயர் வைக்கலாம் என்றார். இதற்கு கே.பாலச்சந்தர் குடும்பத்தினரிடம் அமீர்சார் முறைப்படி அனுமதி பெற்று தந்தார். இதில் அவர் விவசாயியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகி கல்லூரி மாணவியாகவும், நான் வக்கீலாகவும் நடித்திருக்கிறோம்” என்றார்.
அமீர் பேசும் போது, “இது கோவை,திருப்பூர், சேலம் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறை பற்றிய படம். சமூக பிரச்சினைகளை துணிச்சலாக சொல்லும் படம். எனவே, இதை நான் தயாரிக்க ஒப்புக் கொண்டேன். நிறைய சமூக கருத்துக்கள் இதில் இடம் பெற்றுள்ளன” என்று கூறினார்.

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள `கவண்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியை கீழே பார்ப்போம்.
கடந்த விஜய் சேதுபதி நடிப்பில் அதிகளவிலான படங்கள் வெளியாகின. வெள்ளிக்கிழமை என்றாலே விஜய் சேதுபதி படம் ரிலீஸ் இருக்கிறதா என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் வெளியாகின. 2017 தொடங்கி 2 மாதங்கள் முடிந்தும் விஜய் சேதுபதி நடிப்பில் எந்த படமும் ரிலீசாகவில்லை.
இந்நிலையில், இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘கவண்’.

இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ற படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். விஜய்சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார். பாண்டியராஜன், விக்ராந்த், ‘அயன்’ ஆகாஷ், போஸ் வெங்கட், ‘நண்டு’ ஜகன், பவர் ஸ்டார் உள்பட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஜி.எஸ். எண்டர்டைன் மெண்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் இப்படத்தை தயாரித்துள்ளளார். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை முன்னதாகவே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் சென்சார் மட்டுமே பாக்கி இருப்பதால் படத்தை மார்ச் 31-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் ஒரு பள்ளி விழாவில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களை பற்றி பேசியுள்ளார். அவர் பேசிய விவரங்களை கீழே விரிவாக பார்ப்போம்.
நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம் மாவட்டம் பிச்சாரவத்தில் நடந்து வருகிறது. பிச்சாவாரத்தில் உள்ள பள்ளி விழாவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஷால் மற்றும் பிரசன்னாவும் கலந்து கொண்டனர்.
இவர்களோடு ஆபர் தொண்டு நிறுவன தலைவி நடிகை பூங்கோதையும் கலந்துகொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கமும் , ஆபர் தொண்டு நிறுவனமும் இனைந்து எம்.ஜி.ஆர் நகர் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி செய்தனர். இந்த விழாவில் விஷால் மாணவர்களுக்கு காலணிகள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வழங்கிய பின் பேசினார்.

அவர் பேசும்போது, ஒவ்வொரு முறை ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது அங்கே நாம் எதற்காக போகிறோம், என்ன செய்ய போகிறோம், நாம் அங்கு செல்வதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்க போகிறது என்பதை அலசி பார்த்துதான் எல்லா நிகழ்ச்சிக்கும் நான் செல்கிறேன்.
நான் இங்கு இருந்து கிளம்பியவுடன் எனக்கு அணிவித்த இந்த சால்வைகளை எல்லாம் விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் இன்னும் ஒரு குழந்தையை படிக்க வைக்க போகிறேன். எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் சால்வை அணிவிப்பது. முதலில் மாணவர்களாகிய நீங்கள் தான் இந்த மேடையில் அமர வேண்டும். நான் உங்கள் இடத்தில் அமர்ந்து பேச வேண்டும். உங்களுக்கு தான் இந்த மேடை. நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை இங்கே நின்று பேசுவதற்கு.

நான் இந்த கிராம மக்களுக்கு மட்டுமல்ல காதால் கேட்கும் விஷயங்களுக்கும், கண்ணால் பார்க்கும் விஷயங்களுக்கும் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறேன். நான் உதவி செய்வது பெரிய விஷயம் அல்ல இந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி வயதான பெண்மணி ஒருவருக்கு உதவி செய்துள்ளார். இது மிகப்பெரிய ஒரு விஷயமாகும்.
நான் வளர்ந்து இந்த நிலைக்கு வந்த பிறகு தான் அனைவருக்கும் உதவி செய்கிறேன். நான் நல்ல நிலைக்கு வர நீங்கள் தான் காரணம், நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி என் படத்தை பார்ப்பதனால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ள இந்த சமூகத்துக்கு ஏதாவது நாம் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் உதவி வருகிறேன்.
என்னை பாராட்டுவதை விட எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டுள்ள இந்த மாணவியை பாராட்டுவது தான் சரியாக இருக்கும் என்றார் விஷால்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படத்தில் மகேஷ் பாபு இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
‘கத்தி’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் மகேஷ் பாபு போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தில் மகேஷ் பாபு இரட்டை வேடத்தில் நடிப்பதாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து செய்திகள் வந்துள்ளது. மேலும், இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாகவும், அவருக்கு தம்பியாக நடிகர் பரத் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது.

இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காவிட்டாலும், ‘சம்பவாமி’ என்ற தலைப்பை படக்குழுவினர் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகியாக ப்ரணிதி சோப்ரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ ஆட்சி நடப்பதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதை கண்டித்து தி.மு.க. சார்பில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தென்சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் ஆலந்தூரில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நானும் தி.மு.க.வில் உறுப்பினர்தான். இது ஒரு கட்சியின் பிரச்சினை கிடையாது. தமிழகத்தின் பிரச்சினை. அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அப்பா தெளிவாக அறிக்கை வெளியிட்டிருந்தார். நானும் மக்களோடு மக்களாக உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளத்தான் சென்றேன்.
கட்சியில் எனக்கு பதவி எல்லாம் கொடுக்கவில்லை. தேர்தலில் போட்டியிட சீட் கேட்பேன் என்று சொல்லவில்லை. கலைஞரின் பேரன், மு.க.ஸ்டாலினின் மகன் என்பதால் முக்கியத்துவம் கொடுத்துவிடுகிறார்கள். வலுக்கட்டாயமாக இழுத்து மேடையில் அமர வைத்துவிட்டார்கள்.

நிறைய மாணவர்கள், பெண்கள் பேசியதை கேட்டேன். இந்த ஆட்சியின் மீது அவர்களுக்கு இருக்கும் அதிருப்தியை உணர்ந்தேன். உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரப்போகிறது. அதில் மக்களின் உணர்வு வெளிப்படும்.
தற்போதைய ஆட்சி சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து என்னிடம் கருத்து கேட்கிறீர்கள். அதற்கெல்லாம் கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை.

ஒரு பார்வையாளனாக கேட்டால், அரசின் மீது அதிருப்தியில் உள்ளேன். சிறையில் இருந்து கொண்டு ஒருவர் ரிமோட் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
சினிமாவில் நடிப்பதால் நிறைய மக்களோடு பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. நான் மட்டுமல்ல ஒட்டு மொத்த மக்களும் இந்த ஆட்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.
கூவத்தூரில் நடந்த காமெடியை அனைவருமே பார்த்தோம். நானும் தேர்தலில் வாக்களித்துள்ளேன். அந்த உரிமையில் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இவோக் தயாரிப்பில் பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் `படைவீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்... அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் `படைவீரன்'.
பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அம்ரிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கின்றார். இப்படத்தை தனா என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இயக்குனர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் `கல்லூரி' அகில், கலையரசன், இயக்குநர் விஜய்பாலாஜி, இயக்குநர் மனோஜ் குமார், நித்தீஷ், இயக்குநர் கவிதா பாரதி, கன்யா பாரதி, `தெய்வம் தந்த வீடு' நிஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

`கடல்', `ஓ காதல் கண்மணி' படங்களில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த தனா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ராஜவேல் மோகன் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கார்த்திக் ராஜா இசைமைக்கிறார்.
இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் `படைவீரன்' படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் அர்விந்த்சாமி இன்று வெளியிட்டார். இவோக் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மதிவாணன் இப்படத்தை தயாரிக்கிறார்.

“நடிகை பாவனாவைப்போல் நான் பாலியல் தொல்லையை அனுபவிக்க நேர்ந்து இருந்தால், செக்ஸ் வெறியர்களை கொலை செய்து இருப்பேன்” என்று நடிகை ரகுல்பிரீத் சிங் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
தடையற தாக்க, என்னமோ ஏதோ, புத்தகம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த ரகுல்பிரீத் சிங், கேரளாவில் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் தொல்லைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-
“நடிகை பாவனாவுக்கு ஓடும் காரில் நடந்துள்ள பாலியல் கொடுமையை கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இது ஒரு வெட்கம்கெட்ட செயல். பெண்மையின் புனிதத்தை போற்றி மகளிர் தினம், அன்னையர் தினம் என்றெல்லாம் நிறைய விழாக்கள் எடுக்கப்படுகின்றன. இன்னொரு புறம் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற பாலியல் வக்கிரமங்களும் நடந்து கொண்டு இருக்கின்றன.
இதனால் பெண்களுக்கு மரியாதை செய்து நடத்தப்படும் விழாக்களுக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகிறது. பெண்கள் மீது பாலியல் வக்கிரமங்களை ஏவுகிறவர்கள் மனிதராகவே இருக்க முடியாது. நடிகை பாவனா இடத்தில் நான் இருந்து எனக்கு பாலியல் பலாத்கார கொடுமைகள் நடந்து இருந்தால் அந்த செக்ஸ் வெறியர்களை சும்மா விட்டு இருக்க மாட்டேன். அவர்களை கொலை செய்து இருப்பேன்.

நான் அத்லெடிக் வீராங்கனை. உடற்பயிற்சிகள் செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறேன். படப்பிடிப்பில் ஓய்வு கிடைத்தால் உடனே உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று விடுவேன். எனவே என்னிடம் யார் வாலாட்டினாலும் தப்பிக்க முடியாது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தபோது எனது அனுமதி இல்லாமல் ஒருவர் என்னை போட்டோ எடுத்தார். அதை பார்த்ததும் எனக்கு கோபம் வந்தது. அவரிடம் சண்டை போட்டேன். அந்த இளைஞரை அடிக்கவும் செய்தேன்.
நான் வெளியே செல்லும்போதெல்லாம் எனது அம்மா, “ஜாக்கிரதையாக போ” என்று எச்சரிக்கை செய்து வழியனுப்பி வைப்பார். அப்போது அவர் சொல்வது எனக்கு சாதாரணமாகவே தெரிந்தது. என்னுடன் காரில் டிரைவர் இருக்கிறார், ஊழியர் இருக்கிறார். எனவே என்ன நடந்து விடும் என்று நினைத்தேன். ஆனால் பாவனாவுக்கு நடந்த சம்பவத்துக்கு பிறகு யாரை நம்புவது என்று புரியவில்லை.”
இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.

பாவனா மானபங்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இணையதளம் மீது விவேக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
'சித்திரம் பேசுதடி', 'வெயில்', 'ஜெயம் கொண்டான்', 'அசல்' ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து பிரபல கதாநாயகியாக இருந்த பாவனாவை டிரைவர்கள் உள்ளிட்ட 6 பேர் காரில் கடத்தி மானபங்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் தொடர்பு உள்ள குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாவனாவை மானபங்க படுத்தியவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கவேண்டும் என்று பல்வேறு சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக் பாவனாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும். இலகுவாக இணையத்தில் கிடைக்கும் போர்ன், இதுபோன்ற வக்கிரங்களுக்கு வாசல் திறக்கிறது என்று குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். மேலும், பாவனா நாங்கள் உன்னோடு இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.