என் மலர்
‘நெடுஞ்சாலை’ படத்தின் நாயகன் ஆரியின் தாயார் திடீர் மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஆரி. இவரது சொந்த ஊர் பழனி ஆகும். சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் வந்து குடியேறி படங்களில் நடித்து வருகிறார். இவரது பெற்றோர் பழனியில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஆரியின் தாயார் முத்துலட்சுமி இன்று அதிகாலை 3 மணியளவில் புதுக்கோட்டையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பழனிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு, அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வு நாளை காலை பழனியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆரி, தற்போது திண்டிவனம் அருகே படப்பிடிப்பில் இருந்துள்ளார். தன்னுடைய அம்மா இறந்த செய்தி கேட்டதும் நேராக பழனி விரைந்துள்ளார். ஆரியின் தாயார் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நாகார்ஜுன் இளைய மகன் திருமணம் ரத்தானதால் அதிர்ச்சியில் இருக்கும் சமந்தா தனது திருமணத்தை விரைவாக நடத்த அவசரம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனுக்கு நாக சைதன்யா, அகில் என்று இரண்டு மகன்கள். இவர்கள் இருவருமே தெலுங்கில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அகிலுக்கும் ஐதராபாத்தில் தொழில் அதிபராக இருக்கும் ஜி.வி.கே. ரெட்டியின் பேத்தியும் பேஷன் டிசைனருமான ஸ்ரேயா பூபாலுக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலை இரு வீட்டு பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு திருமண நிச்சயதார்த்தத்தையும் முடித்தார்கள்.
இத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 700 பேரை அழைத்து செல்வதற்காக விமான டிக்கெட்டுகள், இத்தாலியில் நட்சத்திர ஓட்டலில் அறைகள் போன்றவற்றை முன்பதிவு செய்தனர். இந்த நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலிக்கும் தகவல் வெளியாகி அவர்கள் திருமண நிச்சயதார்த்தத்தையும் தடபுடலாக நடத்தி முடித்தார்கள்.

முதலில் அகில் திருமணத்தை நடத்துவது என்றும், அதன்பிறகு சில மாதங்கள் கழித்து சமந்தா, நாக சைதன்யா திருமணத்தை ஐதராபாத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்தார்கள். ஆனால் தற்போது அகில்-ஸ்ரேயா திருமணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை விருந்தினர்களிடம் போனில் தெரிவித்து இத்தாலி பயணத்துக்கு தயாராக வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். திருமணம் நின்றதற்கான காரணம் தெரியவில்லை.
அகில்-ஸ்ரேயா பூபால் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலேயே திருமணம் நின்றுபோனதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது. இது நடிகை சமந்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது திருமணத்தை திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே நடத்தி விட அவர் அவசரம் காட்டுவதாகவும், இதுகுறித்து நாகார்ஜுன் மற்றும் நாகசைதன்யாவிடம் அவர் வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
சமந்தா விருப்பப்படியே முன்கூட்டி திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்து விட்டனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவை போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில் அவருக்கு கட்டப்பட்டு வரும் மணிமண்டபம் மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாத தொடக்கத்திலோ திறக்கப்படும் என்று தெரிகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தமிழ்திரை உலகில் இவர் விட்டுச் சென்றிருக்கும் வெற்றிடத்தை எந்தக் காலத்திலும் யாராலும் நிரப்பமுடியாது. அந்த அளவுக்கு நடிப்புலகில் நவரசங்களையும் கொட்டியவர் அவர். திரை உலகில் 1952-ம் ஆண்டு கால் பதித்த சிவாஜி கணேசன் ஏற்காத வேடங்களே இல்லை. ஜூலை 21, 2001-ம் ஆண்டு மறைந்த அவர் 288 படங்களில் நடித்துள்ளார்.
அவரது நினைவை போற்றும் வகையில் மெரினா கடற்கரையில் கம்பீரமான சிவாஜி சிலை நிறுவப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் சிவாஜிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இதன் பின்னர் மெரினா கடற்கரையில் சிவாஜி சிலை தனி அடையாளமாகவே மாறிப்போனது.

இந்நிலையில் சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து சிவாஜி சிலையை அதற்றுவதற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு பதில் அளித்து அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டி முடித்த பின்னர் மெரினாவில் உள்ள சிவாஜி சிலையை அகற்றி அங்கு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு கோர்ட்டும் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் அடையாறில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில், 28 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான முறையில் மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.
சிவாஜி கணேசனின் நினைவை போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில் அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து மணி மண்டபத்துக்காக 3 விதமான வரை படங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றை ஜெயலலிதாவும், சிவாஜி கணேசன் குடும்பத்தினரும் தேர்வு செய்தனர்.
இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி மணி மண்டபம் கட்டும் பணி தொடங்கியது.
இதன் பின்னர் கடந்த 3 மாதங்களாக மணிமண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மணிமண்டபத்தில் பிரதான பெரிய கலசம் உள்ளிட்ட 4 கலசங்களும், 4 நுழைவு வாயில்களும் அமைக்கப்பட உள்ளன.
மணிமண்டபத்தின் உட்புறச் சுவர்களில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட உள்ளன. வெளிப்புறத்தில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மணிமண்டபத்தின் மேற்கூறை பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மணிமண்டபத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணியும் நடந்து வருகிறது. கழிவறை வசதியும் செய்யப்படுகிறது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்படும் இப்பணிகள் அனைத்தும் முடிவடைய இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிமண்டப கட்டுமான பணி முடிந்ததும் மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாத தொடக்கத்திலோ மணிமண்டபம் திறக்கப்படும் என்று தெரிகிறது.
அப்போது மெரினாவில் உள்ள சிவாஜி சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. இந்த மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் அறிய புகைப்படங்கள் மற்றும் அவரை பற்றிய தகவல்களும் இடம்பெற உள்ளது.

கோவி.மணிசேகரன் எழுதிய "தென்னங்கீற்று'' என்ற நாவல், அவருடைய டைரக்ஷனில் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாகியது. இந்தப்படம் கன்னடத்தில் வெற்றி பெற, தமிழில் தோல்வி அடைந்தது.

"தென்னங்கீற்று'' கதையின் நாயகி பெயர் வசுமதி. இருபத்தெட்டு வயது வரை பூப்படையாத பெண் அவள்.
ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, கோவி.மணிசேகரன் இந்த நாவலை எழுதியிருந்தார்.
தமிழ்ப் படத்துக்கு கதாநாயகியாக சுஜாதாவும், கதாநாயகனாக விஜயகுமாரும் ஒப்பந்தம் ஆனார்கள்.
கன்னடப்படத்துக்கு "நிரீக்ஷே'' (எதிர்பாராதது) என்று பெயரிடப்பட்டது. அப்போது கன்னடத்தில் மிகப்பிரபலமாக இருந்த கல்பனா, (கன்னட) மஞ்சுளா ஆகியோர் கன்னடப்படத்துக்கு ஒப்பந்தம் ஆனார்கள். தமிழில் இரண்டாவது கதாநாயகியாக (டாக்டர் வேடத்தில்) நடிக்கவும் கல்பனா சம்மதித்தார்.
கன்னடப் படவுலகில் நெம்பர் 1 இசை அமைப்பாளராக விளங்கிய ஜி.கே.வெங்கடேஷ், இரு படங்களுக்கு இசை அமைத்தார்.
"தென்னங்கீற்று'' படப்பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. மணிசேகரன் கேட்டுக்கொண்டதன் பேரில், கே.பாலசந்தர் இந்த படப்பூஜையில் கலந்து கொண்டு, கேமராவை முடுக்கி வைத்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் படத்தை இயக்கப் போகிறேன் என்று கோவி.மணிசேகரன் சொன்னதும், "என்ன கோவி! முதன் முதலாக டைரக்ட் செய்யப் போகிறீர்கள். எதற்கு இந்த விஷப்பரீட்சை?'' என்று கேட்டார்.
"ஒரு சோதனைதான்!'' என்றார், மணிசேகரன்.
"அதற்கில்லை. நானும் தென்னங்கீற்று நாவலைப் படித்திருக்கிறேன். படம் எடுக்க முடியுமா என்று பலநாள் யோசித்து, `முடியாது' என்று கைவிட்டேன். ஒரு பெண் பருவம் அடையவில்லை என்று, 13,000 அடி வரை எப்படி சொல்லப்போகிறீர்கள்? கத்தி மேல் நடப்பது போன்ற இந்தக் கதையை, ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாரிக்கிறீர்கள். இது விஷப்பரீட்சை. ஜாக்கிரதையாக இருங்கள்'' என்று
எச்சரித்தார்.படப்பிடிப்பை, இரு மொழிகளிலும், ஏக காலத்தில் வேகமாக நடத்தி, குறிப்பிட்ட காலத்தில் முடித்தார், மணிசேகரன்.
படத்தை வாங்க, விநியோகஸ்தர்கள் ஈபோல் மொய்த்தனர். இரு மொழிகளிலும் பட அதிபருக்கு கொள்ளை லாபம்.
"தென்னங்கீற்று'' 4-7-1975-ல் ரிலீஸ் ஆயிற்று. அதே சமயத்தில் கன்னடப்படமும் கர்நாடகத்தில் வெளியாயிற்று.
கன்னடப்படம் 75 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. தமிழ்ப்படம் 4 வாரம்தான்!
கதையின் மையக்கருத்தை பெண்கள் ஏற்காததால், தமிழ்ப்படம் பெண்களை கவரவில்லை. ஆனால், கர்நாடக ரசிகர்கள், புதுமையை ஏற்றுக்கொண்டார்கள்.
"தென்னங்கீற்று'' படத்தைப் பார்த்த டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், "இது விருதுக்கு உரிய படம். அனுப்பி வைக்கலாம்'' என்று யோசனை சொன்னார்.
அவர் கூறியபடியே, "தென்னங்கீற்று'' தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் சங்க விருதைப் பெற்றது. கன்னட "நிரீக்ஷே'', கர்நாடக அரசின் விருதைப் பெற்றது.
பட அதிபர் பாபாதேசாய் புத்திசாலி. நிறைய லாபத்தை சம்பாதித்தவர், மீண்டும் படம் எடுப்பதில்லை என்று முடிவு செய்து, வேறு வியாபாரத்துக்கு போய்விட்டார்.
"தென்னங்கீற்று'' படம் தயாராகி முடிந்திருந்தபோது, அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் தர பல பட அதிபர்கள் கோவி.மணிசேகரன் வீட்டுக்கு படையெடுத்தனர். அவற்றை மணிசேகரன் ஏற்கவில்லை. "படம் வரட்டும்; பிறகு பார்ப்போம்'' என்று கூறிவிட்டார்.
படம் வெளிவந்து, சரிவர ஓடாததால், அந்தப் பட அதிபர்களில் ஒருவர்கூட மணிசேகரனைத் தேடி வரவில்லை. மூலைக்கு ஒருவராக ஓடி மறைந்துவிட்டனர்!
"இலக்கியத் துறையில் வெற்றி மேல் வெற்றி பெற்றோம். கலைத்துறையில் மட்டும் ஏனிந்த தோல்வி?'' என்று எண்ணி வருந்தினார், மணிசேகரன்.
`இனி திரைப்படத்துறையே வேண்டாம்' என்று தீர்மானித்து, மீண்டும் இலக்கியப்பணியில் ஈடுபட்டார். பாதியில் நின்றிருந்த "யாகசாலை'' என்ற நாவலை எழுதி முடித்தார்.
இந்த சமயத்தில், சிவகாசியில் காலண்டர் வியாபாரம் செய்து வந்த சிதம்பரம் என்ற தொழில் அதிபர், மணிசேகரனை
சந்தித்தார்."தென்னங்கீற்று'' படத்தால் ஈர்க்கப்பட்டவர் அவர்.
மணிசேகரனிடம் சிதம்பரம் சொன்னார்:
"மணிசேகரன் அய்யா! தென்னங்கீற்றில், வயதுக்கு வராத ஒரு பெண்ணை கதாநாயகியாகப் படைத்தது பெரிதல்ல. அவள் வயதுக்கு வந்து விட்டாள் என்பதை உணர்த்த, திரையில் ரத்தச் சிதறலைக் காட்டினீர்களே... ஆ! அது அற்புதம். அதில் மயங்கியே, உங்களை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறேன்'' என்றார்.
மணிசேகரன், தனது "யாகசாலை'', "மனோரஞ்சிதம்'' ஆகிய கதைகளைச் சொன்னார். "மனோரஞ்சிதம்'' அவருக்குப் பிடித்துப்போயிற்று. அதை படமாக்குவதாகச் சொன்னார்.
பட வேலைகள் தொடங்கின. டைரக்டர் துரையால் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட சுமித்ராதான் கதாநாயகி. விஜயகுமார் கதாநாயகன். மற்றும் எஸ்.வி.சுப்பையா, மனோரமா, தேங்காய் சீனிவாசன், புதுமுகம் எம்.எஸ்.வசந்தி, எம்.என்.ராஜம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
திரைக்கதை, வசனத்தை எழுதி முடித்தார், மணிசேகரன்.
"மனோரஞ்சிதம்'' படத்தொடக்க விழா அமர்க்களமாக நடந்தது. விழாவுக்கு வந்த அனைவருக்கும் மனோரஞ்சித மலர்
வழங்கப்பட்டது!

நடிகைகள் சிலபேர் கார் ஓட்ட பயிற்சி எடுத்து வருகிறார்களாம். அது எதற்காக என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
மூன்றெழுத்து நடிகை சமீபத்தில் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது சில சமூக விரோதிகளால் மானபங்கபடுத்தப்பட்ட செய்தி சினிமா உலகில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது எனலாம். மூன்றெழுத்து நடிகை வெளியிட்ட இந்த அதிர்ச்சி தகவலையடுத்து, தொடர்ந்து பல நடிகைகளும் தங்களுக்கு அதுபோல் நடந்துள்ளதாக வெளியிட்டு வரும் செய்தி, மேலும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதனால், நடிகைகள் பலரும் படப்பிடிப்பு தளத்திலிருந்து அனுப்பப்படும் கார்களில் பயணிக்க ரொம்பவுமே தயக்கம் காட்டுகிறார்களாம். மேலும், தாங்களே கார்களை இயக்குவது என்று சில நடிகைகள் முடிவு செய்துள்ளார்களாம். நடிகைகள் அனைவரும் யாரை நம்புவது என்று முழி பிதுங்கி நிற்கிறார்களாம்.
கார் ஓட்டத்தெரியாத நடிகைகள் தற்போது கார் ஓட்டுவதற்கு பயிற்சி எடுக்கவும் முடிவு செய்திருக்கிறார்களாம். ஆனால், அங்கேயும் ஏதாவது நடந்துவிடுமா? என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறதாம். இதனால், ஒருசில நடிகைகள் தனக்கு நெருக்கமானவர்களை கார் ஓட்டுநர்களாக நியமித்துக் கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான ஒரு அணியும், ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் அவர்களை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
இந்நிலையில், இன்று நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் பிலிம் சேம்பர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தேர்தல் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் 27.02.2017 அன்று வரை உறுப்பினர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் புகார் கொடுக்கலாம். 28.02.2017-ல் புகார்களுக்கு பதில் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாபஸ் பெற கடைசி நாள் 01.03.2017. ஏப்ரல் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உட்லண்ட்ஸ் திரையரங்கில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும். அன்று இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மூத்த தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். விஷால் அணி சார்பாக பிரகாஷ்ராஜ், ஆர்.பார்த்திபன், K.E.ஞானவேல்ராஜா, பாண்டிராஜ், SR.பிரபு, AL உதயா மற்றும் ராதாகிருஷ்ணன், கேயார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கபாலி படம் முதல் கடைசியாக வெளிவந்த சி-3 படம் வரை தயாரிப்பாளர்கள் அனைவரும் போலியாக வெற்றியை கொண்டாடி வருவதாக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் 7 முன்னணி நடிகர்களுக்கு விநியோகஸ்தர்கள் ‘ரெட் கார்டு’ போட்டுவிட்டதாகவும், அந்த 7 நடிகர்களின் படங்களை இனிமேல் அவர்கள் வாங்கமாட்டார்கள் என்றும் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வேகமாக பரவியது.
அதாவது, ரஜினி நடித்த ‘கபாலி’, கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’, விஷால் நடித்த ‘கத்தி சண்டை’, தனுஷ் நடித்த ‘கொடி’, சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’, விஜய் நடித்த ‘பைரவா’, சூர்யா நடித்த ‘சி3’ ஆகிய படங்களை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு அந்த படங்கள் பெரிய நஷ்டத்தை கொடுத்தால் அந்த நடிகர்களின் படங்களை விநியோகஸ்தர்கள் வாங்க தடை விதித்துவிட்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து பிரபல விநியோகஸ்தரும், விநியோகஸ்தர் சங்க நிர்வாகியுமான திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘கபாலி’ முதல் ‘சிங்கம் 3’ வரை வெளிவந்த முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் எல்லாமே மிகப்பெரிய வெற்றியடைந்ததாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். உண்மையிலேயே இந்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியடைந்ததா? என்பதை அவர்கள் மனசாட்சியுடன் சொல்லவேண்டும்.

நீங்கள் விளம்பரத்தின் மூலமாக பொதுமக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால், திரைத்துறையில் இருக்கிறவர்களுக்கு விநியோகஸ்தர்கள் யாரும் இந்த படங்களால் ஒன்றுமே சம்பாதிக்கவில்லை என்பது தெரியும். அப்படியிருக்கும்போது, நீங்கள் எதை வைத்து வெற்றி என்று குறிப்பிடுகிறீர்கள். ஒரு படத்தின் வெற்றிவிழாவை படம் வெளியான 2-வது நாளே கொண்டாடுகிறீர்கள். எதை வைத்து வெற்றிவிழா கொண்டாடுகிறீர்கள்.

எம்.ஜி.ஆர். - சிவாஜி காலத்தில் கடைபிடித்த நடைமுறையை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா? அந்த காலத்தில் விநியோகஸ்தர்கள் முதற்கொண்டு லாபம் அடைந்தார்கள். விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைத்ததால்தான் 50 ஆண்டு காலமாக திரைத்துறை உயிரோடு இருந்தது. ஆனால், இந்த கடைசி 10 ஆண்டுகள் தமிழ் சினிமா மரண படுக்கைக்கு சென்றுவிட்டது. இதற்கு காரணம் நடிகர்கள்தான்.

வெற்றிவிழாவை கொண்டாடும் நடிகர்கள் விநியோகஸ்தர்களை அழைத்து அவர்களுடைய படத்திற்கு லாபம் கிடைத்ததா? என்று கேட்டுவிட்டு அதை கொண்டாடியிருந்தால் நாங்கள் சந்தோஷப்படுவோம். ஒரு நடிகர் அவருடைய படம் வெற்றியடைந்ததற்கு அனைவருக்கும் தங்க சங்கிலி கொடுக்கிறார். மற்றொரு நடிகர் இயக்குனருக்கு கார் பரிசளிக்கிறார். ஆனால், அந்த படங்களை வாங்கிய விநியோகஸ்தர் காரை விற்றுக்கொண்டிருக்கிறார்.

திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் பொய் கணக்கு காட்டுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள விநியோகஸ்தர்கள் அனைவரும் பொய்யானவர்கள், நீங்கள் மட்டும் உண்மையானவர்களா? நீங்கள் விநியோகஸ்தர்களிடம் வசூலை பற்றி கேட்கவேண்டியதில்லை. நீங்கள் திரையிட்ட திரையரங்குகளுக்கு சென்று உங்கள் படத்தின் வசூலை பற்றிக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்லுட்டும் அந்த படத்தின் வசூலை. அதன்பிறகு நீங்கள் சொல்லுங்கள் அந்த படம் எத்தனை கோடி கிளப்பில் சேர்ந்துவிட்டது என்று.

அடுத்த படத்திற்கு நடிகரின் கால்ஷீட் தேவை என்பதற்காக நீங்களாக மேடை போட்டு பேசி, நடிகரை உச்சி குளிர வைத்து, அவரிடம் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி ஏன் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் சில நடிகர்களுக்கு ரெட் கார்டு போட்டதாக ஒரு செய்தி உலாவி வருகிறது. நாங்கள் யாருக்கும் ரெட் கார்டு போடவில்லை. போடவேண்டிய தேவையும் இல்லை.
நேற்று நடந்த விநியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில், மேலேசொன்ன 7 நடிகர்களின் படங்களால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அனைவரும் கடிதம் கொடுத்திருந்தார்கள். அவர்கள் இனிமேல், அந்த முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கப்போவதில்லை என்று கூறியிருந்தார்கள். அந்த நடிகர்களுக்கு ரெட் கார்டு போடவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், சங்கத்தின் சார்பில் யாருக்கும் ரெட் கார்டு கொடுக்கமுடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டோம்.
விநியோகஸ்தர்களாகிய நீங்கள் இனிமேல் அவர்களது படங்களை வாங்கப்போவதில்லை என்று கூறியிருப்பதால், இனிமேல், அந்த முன்னணி நடிகர்களே இனிமேல் நேரடியாக படத்தை விநியோகம் செய்யட்டும். அதன்மூலம், அவர்களுடைய படத்தின் வசூலை அவர்களே நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு கூறிக்கொண்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

பாவனாவை கடத்திய குற்றவாளி தொடர்பு கொண்ட முக்கிய பிரமுகர் யார் என்பது குறித்து மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தை கீழே பார்க்கலாம்.
தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா.
தற்போது இவர் மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின்பு கடந்த 17-ந்தேதி இரவு காரில் கொச்சிக்கு திரும்பினார்.
அப்போது இவரது கார் மீது இன்னொரு வேன் மோதியது. வேனில் இருந்து இறங்கிய கும்பல் பாவனா காருக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனை செல்போனில் படமும் எடுத்தனர். கார் கொச்சி அருகே சென்றதும் அந்த கும்பல் காரில் இருந்து இறங்கி தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி நடிகை பாவனா, மலையாள டைரக்டர் லாலிடம் தெரிவித்தார். அவர் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கொச்சி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கோவையில் பதுங்கி இருந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் பாலக்காடு பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டன் என்பவரும் பிடிபட்டார்.
மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரை கொச்சிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
கேரள திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு கார் டிரைவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கும் சுனில் குமாருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அவர் கூறும் செயல்களை நான் செய்து முடிப்பேன். அதற்கு அவர், பணம் கொடுப்பார்.

கடந்த 16-ந்தேதி இதுபோல ஒரு வேலை இருப்பதாக கூறினார். மறுநாள் 17-ந்தேதி திருச்சூர் வரும்படியும் தெரிவித்தார். என்ன வேலை என்பதை சுனில்குமார் கூற வில்லை. 17-ந்தேதி அங்கு போன பின்புதான் நடிகை பாவனாவை கடத்துவதுதான் வேலை என்பதை தெரிந்து கொண்டேன்.
நாங்கள் பாவனாவை கடத்தியதும் சுனில்குமாருக்கு தெரிவித்தோம். அவர், வழியில் காரை நிறுத்தி ஏறிக் கொண்டார். அவர்தான் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு அவரை மிரட்டவும் செய்தார். பாவனா கடத்தப்பட்டதும் சுனில்குமார் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு செல்போனில் பேசியதோடு, குறுந்தகவலும் அனுப்பினார்.
அந்த நபர் யார்? என்பது எனக்கு தெரியாது. நாங்கள் பாவனாவுடன் காரில் சுமார் 2 மணி நேரம் இருந்தோம். இந்த கடத்தல் வேலை முடிந்ததும், நாங்கள் காரில் இருந்து இறங்கி கொண்டோம். மறுநாள் சுனில்குமாரை சந்தித்தோம். ஆனால் அவர், கடத்தலுக் கான பணம் தரவில்லை. மாறாக இந்த சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு சென்றதை தெரிவித்தார்.எனவே நாங்கள் தலைமறைவாகி விட்டோம். ஆனால் போலீசார் என்னை பாலக்காடு பகுதியில் வைத்து பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
மணிகண்டன் உடனடி யாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக் கப்பட்டார். அவரை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மணிகண்டன் கூறிய தகவல்கள் உண்மைதானா? என்பதை கண்டறியும் பணி யும் நடக்கிறது.
இதற்காக மணிகண்டன் மற்றும் சுனில்குமாரின் செல்போன் எண்களை வைத்து சம்பவம் நடந்த நாளில் அவர்கள் யார்? யாரிடம் பேசினார்கள். என்னென்ன குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டது என்பதை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போலீசாரின் விசாரணை தீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்த சம்பவத்தில் அரசியல் பிரமுகர் மற்றும் பிரபல நடிகருக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த நடிகர் மற்றும் அரசியல் பிரமுகரிடம் சாதாரண உடையில் சென்று விசாரணை நடத்தினர்.
அவர்களின் வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிடைத்த தகவல்களை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். விரைவில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அப்போது சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பதை தெரிந்து கொள்ளலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் தான் தெரிவிக்காத கருத்துக்களை சிலர் அவதூறாக பரப்புவதாக கூறி நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
சென்னை:
முதல்வரை மக்கள் தேர்வு செய்ய தேவையில்லை, சட்டமன்ற உறுப்பினர்களே முதல்வரை தேர்வு செய்வார்கள் என சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்னர், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகர் கருணாஸ் கூறியதாக, ஒரு செய்தி வேகமாக பரவி வந்தது. இதையடுத்து, கருணாஸை விமர்சித்து அதிகம் பேர் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி வெளியிட்டவர்கள் மீது புகார் செய்வதற்காக கருணாஸ் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்தார்.
புகாரளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கருணாஸ், “முதல்வர் தேர்வு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், நான் கூறாத கருத்தை கூறியதாக சில பேர் சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பரப்பி வருகின்றனர். நான் ஒரு சமூகத்தை சார்ந்த இயக்கம் நடத்தி வந்தாலும், அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கிறேன்.
நான் சட்டமன்ற உறுப்பினரானது எனது சமூகத்தில் உள்ளவர்களுக்கே பிடிக்கவில்லை. எனக்கு வாக்களித்த 75,000 மக்களுக்காக நான் உண்மையாக பணியாற்றி வருகிறேன். இனி எந்த கருத்தை நான் தெரிவிப்பதாக இருந்தாலும், வெளிப்படையாகவே தெரிவிப்பேன். எனவே, சமூக வலைதளங்களில் நான் கூறியதாக ஏதேனும் கருத்து வந்தால் அதை பொது மக்கள் நம்ப வேண்டாம்.” எனக் கூறினார்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட விரிசலின் போது சசிகலாவின் ஆதரவாளராக நின்றவர் கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தில் துணை இயக்குநராக நடிக்க உள்ளார். இப்படத்தின் முழுதகவலை கீழே பார்க்கலாம்.
விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான `மாவீரன் கிட்டு' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷ்ணு முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஷ்ணு, முருகானந்தம் இயக்கத்தில் `கதாநாயகன்' மற்றும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், `முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் உடன் மீண்டும் இணைய இணைகிறார். சைக்கோ த்ரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் துணை இயக்குநராக நடிக்கும் விஷ்ணு பல இன்னல்களை சந்திக்கிறார். மேலும் ஒரு சம்பவம் குறித்த முக்கிய துப்புதுலக்க வேண்டிய வேலையிலும் ஈடுபடுகிறார். முன்னதாக கிடைத்த தகவலின் படி சுசான் ஜார்ஜ் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இரவு நேரத்தில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை அசஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஸ்கைலார்க் என்டர்டெயின்ட்மண்ட் தயாரிக்கிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நடிகை பாவனா கடத்தலில் எனக்கு தொடர்பு இல்லை என்று நடிகர் திலீப்பை தொடர்ந்து சித்தார்த் பரதனும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதும் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு யார் காரணம், என்று ஆள் ஆளுக்கு கருத்து சொல்ல தொடங்கினர். அப்போது நடிகர் திலீப்புக்கும் பாவனாவுக்கும் ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்தது. மஞ்சுவாரியாரை திலீப் விவாகரத்து செய்ய பாவனா தான் காரணம் என்று கூறப்பட்டதையும் சிலர் சுட்டிக் காட்டினர்.
இதுபோல மலையாளத்தில் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு திலீப்தான் காரணமென்று பாவனா ஏற்கனவே குற்றம் சாட்டியதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்தது. இதன் காரணமாக பாவனா கடத்தலுக்கு திலீப் காரணம் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியது.

இதை திலீப் மறுத்தார். சமூக ஊடகங்கள் பிரச்சினையை திசை திருப்ப முயல்வதாகவும், போலீசார் விசாரணையை சரியான கோணத்தில் எடுத்து செல்ல வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் பிரபல மலையாள டைரக்டர் பரதன் - நடிகை கே.பி.ஏ.சி. லலிதாவின் மகனுமான சித்தார்த் பரதனுக்கு பாவனா கடத்தலில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. போலீசார் அவரது வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதாகவும், அங்கிருந்து குற்றவாளி ஒருவரை கைது செய்ததாகவும் கூறப்பட்டது.
இதனை சித்தார்த் பரதன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாவனா கடத்தலில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இது பொய்யான செய்தி. இத்தகைய செய்திகள்தான் வேகமாக பரவுகிறது. பாவனா கடத்தலுக்கு காரணம் என்ன? இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பதை கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் என்னை வேண்டுமென்றே இழுத்து எனது பெயரையும், குடும்பத்தின் புகழையும் கெடுக்க சிலர் நினைக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சித்தார்த் பரதனின் தாயார் பிரபல நடிகை கே.பி.ஏ.சி. லலிதா கூறியதாவது:-
எங்கள் குடும்பத்தின் புகழை கெடுக்க வேண்டுமென்றே சிலர் இத்தகைய புரளிகளை கிளப்பி விடுகிறார்கள். என் மகனுக்கு இந்த சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை. அவர், தவறு செய்யவில்லை.
அவர் ஏதாவது குற்றம் செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் பொதுமக்களே அவரை தண்டிக்கட்டும்.

நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சுனில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
நடிகை பாவனா கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான சுனில் என்ற பல்சர் சுனில் தலைமறைவாக இருந்தார். அவர் இன்று எர்ணாகுளம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
பிரபல நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 17-ந்தேதி இவர் திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டு கார் மூலம் கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த காரை டிரைவர் மார்ட்டின் என்பவர் ஓட்டினார். பாவனாவின் காரை ஒரு கும்பல் வழிமறித்தது. அந்த கும்பலை சேர்ந்த பிரபல ரவுடி சுனில் உள்பட 5 பேர் காரில் ஏறி நடிகை பாவனாவிடம் பாலியல் கொடுமை செய்து அதை செல்போனிலும் படம்பிடித்தனர்.
நடிகை பாவனா டைரக்டர் லால் உதவியுடன் இதை போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார். போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக டிரைவர் மார்ட்டினை கைது செய்தனர். மேலும் கோவையில் பதுங்கி இருந்த சுனிலின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான சுனில் அவரது கூட்டாளிகள் மணிகண்டன், விஜேஷ் ஆகிய 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுனில் கொச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.