என் மலர்
‘பவர் பாண்டி’ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கும் டி.வி. பெண் தொகுப்பாளருக்கு தனுஷ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அந்த தொகுபாளினி யார் என்பதை கீழே பார்க்கலாம்.
தனுஷ் இயக்கும் படம் ‘பவர்பாண்டி’.ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கும் இதில் இளம் வயது ராஜ்கிரணாக தனுஷ் நடிக்கிறார். வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தை தனுஷ் திறமையாக இயக்குவதை பார்த்து அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் டி.டி. என்கிற திவ்ய தர்ஷினி இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இதற்கான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் அவருடைய நடிப்பை பார்த்து வியந்த தனுஷ், அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘திவ்யதர்ஷினியின் கவுரவ வேடம் படமாக்கப்பட்டது. அவர் நடித்த விதத்தை பார்த்து மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தேன். அருமை டி.டி.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள திவ்ய தர்ஷினி, ‘நன்றி சார். முகத்தில் மட்டும் தான் நம்பிக்கை. உள்ளே இதயம், லிவர், கிட்னி எல்லாம் டப்பா டான்ஸ்சிங் சார்’ என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கபாலி படத்தில் ரஜினி மகளாக நடித்த தன்ஷிகா அடுத்து தெலுங்கிலும் அறிமுகம் ஆகிறார்.
தன்ஷிகா ‘கபாலி’யில் ரஜினி மகளாக நடித்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது ‘விழித்திரு’, ‘காத்தாடி’, ‘களக்கூத்து’, ‘ராணி’, ‘உரு’ படங்களில் நடித்து வருகிறார்.
‘விழித்திரு’ படத்தில் விதார்த் ஜோடியாகவும், ‘உரு’ படத்தில் கலையரசன் ஜோடியாகவும் நடிக்கிறார். இவர் நடித்த ‘ராணி’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இது மலேசியாவில் நடக்கும் கதை. அங்கு காணாமல் போகும் தனது கணவரை தேடி கண்டு பிடிக்கும் விமான பணிப்பெண்ணாக நடிக்கிறார். இது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை.
தமிழில் பிசியாக இருக்கும் தன்ஷிகா அடுத்து தெலுங்கிலும் அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கில் அவர் நடிக்கும் இந்த படத்தை கவுதம் மேனனிடம் உதவியாளராக இருந்த ரமணா என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதுவும் ‘ராணி’ படம் போன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. இதன் மூலம் தன்ஷிகா தெலுங்கிலும் அழுத்தமாக கால் பதிப்பார் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.

ஜாக்கிசான் எனது நண்பராகிவிட்டதாக ‘அனேகன்’ பட நாயகி அமைரா தஸ்தூர் தெரிவித்துள்ளார். அவரது முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
‘அனேகன்’ படம் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் அமிராதஸ்தூர். இந்த படத்தில் தனுசுடன் நடித்தார்.
தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வந்த இவர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு சந்தானம் ஜோடியாக ‘ஓடி ஓடி உழைக்கணும்‘ படத்தில் நடித்து வருகிறார். இது பற்றி கூறிய அமிரா தஸ்தூர்....
“ ஜாக்கிசானின் ‘குங்பு யோகா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடிக்க கால அவகாசம் தேவைப்பட்டது. இதனால், வேறுபடங்களை ஓப்புக்கொள்ள முடியவில்லை. எனவே இடைவெளி ஏற்பட்டுவிட்டது.
‘குங்பு யோகா’ படத்தில் நடித்தது அருமையான அனுபவம். ஜாக்கிசான் பெரிய சூப்பர் ஸ்டார் போல நடந்து கொள்ளவில்லை. படப்பிடிப்பின் போது எனக்கு நண்பர் ஆகிவிட்டார்.
தற்போது சந்தானம் படத்தில் அவருடைய ஜோடியாக நடிக்கிறேன். இதில் எந்த வித பிரச்சினையும் இல்லை. அவர் மிகவும் ஜாலியான மனிதர். இவருடைய முந்தய படம் சூப்பர்ஹிட் ஆனது. அவர் மக்களை சிரிக்க வைக்கிறார். நன்றாக வேலை பார்க்கும் யாருடனும் நான் நடிப்பேன்.
தனுஷ் கேமேராவுக்கு முன்பு வந்தால், கண் இமைக்கும் நேரத்தில் கதாபாத்திரமாக மாறி விடுவார். அந்த திறமையை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
தனுஷ் நிறைய புத்தகங்கள் படிப்பார். ‘அனேகன்’ படப்பிடிப்பின் போது வாரம் ஒரு புத்தகத்துடன் அவரை பார்த்திருக்கிறேன். பார்க்கத்தான் தனுஷ் அமைதியாக இருப்பார். ஆனால் அவருக்கு எல்லா விஷயங்களும் தெரியும்” என்றார்.

தொகுதிக்கு வரும் எம்எல்ஏக்களை வரவேற்பு அளிப்பது தொடர்பாக நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் கருத்து வெளியிட்ட நிலையில் அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய லீக் கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் பிர்தவ்ஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக மக்களை தூண்டும் விதத்தில் கருத்து வெளியிட்டு இருக்கிறார். இது மக்களை வன்முறைக்கு அழைத்து செல்லும்.
விரும்பிய அரசு அமையவில்லை என்பதனால் வன்முறைக்கு மக்களை தூண்டுவது சட்டப்படி குற்றம். கமலஹாசனின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை பயன்படுத்தி தொகுதி மக்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் எம்.எல்.ஏக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு கமலஹாசனே பொறுப்பு ஏற்கவேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஜய் - அமலாபால் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்பட உள்ளது. அவர்களின் விவாகரத்து வழக்கு குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
'சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலாபால். கேரளாவை சேர்ந்த இவரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் விஜயும் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணத்துக்குப் பின்னரும் அமலாபால் தொடர்ந்து நடித்ததால், அதற்கு விஜயின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து விஜயும், அமலாபாலும் சுமுகமாக பிரிவது என்று முடிவு செய்தனர். அதன்படி, இருவரும் சென்னை குடும்பநல கோர்ட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதி பூங்குழலி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் - அமலாபால் இருவரும் நேரில் ஆஜராகி, ஒருமனதாக பிரிவதாக கூறி பிரமாண பத்திரங்களை தனித்தனியாக தாக்கல் செய்தனர். இதனை அடுத்து வழக்கின் தீர்ப்பை நாளை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்தில் சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்செலுடன் சேர்ந்து நிற்கும் படங்கள் வெளியாகின. இருவரும் காதலிப்பதாகவும் சமூகவலைத் தளங்களில் செய்தி பரவியது.
காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக மைக்கேல் மும்பை வந்தார். அவருடன் சுருதிஹாசன் படங்கள் எடுத்துக் கொண்டார். என்று தகவல்கள் வெளியாகின. இத்தாலி நாட்டவரான மைக்கேல், லண்டனில் பிறந்து வளர்ந்தவர். லண்டனை சேர்ந்த டீப்டைவிங் மென் நாடக குழு நடிகர். ஒருமுறை சுருதிஹாசன், லண்டனுக்கு ராக் இசை குழுவுடன் பாட சென்றார். அப்போது அவருக்கு மைக்கேல் அறிமுகமானார்.
சுருதிஹாசன் விரைவில் லண்டனில் தனது இசை குழு மூலம் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அது குறித்து பேசுவதற்காக மைக்கேல் கார்செல் மும்பை வந்தார். அவரை சுருதிஹாசன் விமான நிலையம் சென்று வரவேற்றார். இருவரும் நடந்து வந்த, சேர்ந்து நின்ற படங்கள் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன.
மும்பை வந்த அவரிடம் விரைவில் லண்டனில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து பேசியுள்ளார். சில தினங்கள் அவர் மும்பையில் தங்கிவிட்டு சென்றதால், இருவருக்கும் காதல் என்ற செய்தி பூதாகரமாகிவிட்டது.
இது குறித்து சுருதிஹாசன் அளித்த பேட்டியில் ‘‘மைக்கேலும் நானும் நல்ல நண்பர்கள். அவ்வளவு தான். நட்பை தாண்டி எங்களுக்குள் எதுவும் இல்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை’’ என்று கூறி உள்ளார்.

நடிகை பாவனாவை கடத்த ரூ.30 லட்சம் பேரம் பேசியதாக முக்கிய குற்றவாளியின் செல்போனில் பேசிய 6 சினிமா பிரபலங்களை விசாரிக்க பெண் ஏ.டி.ஜி.பி. நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
தமிழ், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா.
இவர் கடந்த 17-ந்தேதி இரவு படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பினார். அத்தானி என்ற இடம் அருகே வந்தபோது இவரது கார் மீது இன்னொரு கார் மோதியது. இதனால் நடிகை பாவனா சென்ற காரை, டிரைவர் நிறுத்தினார்.
அப்போது இன்னொரு காரில் வந்த 5 பேர் கும்பல் பாவனா காருக்குள் நுழைந் தனர். அவர்கள் ஓடும் காருக் குள் 2 மணி நேரம் பாவனா வுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். அதனை செல்போனிலும் படம் எடுத்துக் கொண்டனர்.
அதன்பிறகு கொச்சி அருகே காரை நிறுத்தி அந்த கும்பல் கீழே இறங்கிக் கொண்டனர். பின்னால் வந்த இன்னொரு காரில் ஏறி அந்த கும்பல் தப்பிச் சென்றது. இந்த சம்பவம் பற்றி நடிகை பாவனா, டைரக்டரும், நடிகருமான லாலிடம் தெரிவித்தார். அவர் போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகராவுக்கு தகவல் கொடுத்தார்.
அவரது உத்தரவின் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் நடிகர் லால் வீட்டுக்கு விரைந்துச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த நடிகை பாவனாவிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
மேலும் பாவனா கொடுத்த புகாரின் பேரில் அவரது கார் டிரைவர் மார்ட்டின் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் பாவனா கடத்தப்பட்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் சுனில் என்ற பல்சர் சுனில் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
சுனில் சினிமா பிரபலங்களுக்கு கார் டிரைவர்கள் ஏற்பாடு செய்து கொடுப்பவர். இவர் மீது கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. எனவே அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அவரது செல்போன் நம்பர் மூலம் அவர் இருக்கும் இடத்தை அடையாளம் காணும் பணியும் நடந்தது.
அப்போது இச்சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்குச் சென்ற கேரள போலீசார் இருவரையும் கைது செய்து கேரளா அழைத்து வந்தனர். அவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் நடிகை பாவனாவை கடத்தினால் தங்களுக்கு ரூ.30 லட்சம் பணம் தருவதாக பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் சுனில் தெரிவித்தார். இதனால் இச்சம்வத்தில் ஈடுபட்டோம்.
ஆனால் சுனில் கூறியபடி பணம் தரவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் நாங்கள் வழக்கில் இருந்து தப்பிக்க நாங்களும் தலை மறைவானோம் என்ற னர்.
இதையடுத்து குற்றவாளிக ளின் செல்போன் எண்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் சம்பவம் நடந்த நாளில் சுனிலின் செல்போனுக்கு 60-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் மலை யாள திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தயாரிப் பாளர்கள், நடிகர்கள் 6 பேரின் எண்களும் இருந்தன.
இவர்கள் எதற்காக சம்பவ நாளில் குற்றவாளிகளை தொடர்பு கொண்டு பேசினர். பாவனாவை பழிவாங்கும் நோக்கில் அவரை கடத்தச் சொன்னார்களா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே நடிகை பாவனாவுக்கு நேர்ந்த கொடுமை பற்றிய தகவல் வெளியானதும் மலையாள திரையுலகம் கடும் கண்டனம் தெரிவித்தது. அரசியல் கட்சிகளும், அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் உத்தரவின் பேரில் போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகரா இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஏ.டி.ஜி.பி. சந்தியாவை நியமித்தார். இவர் கேரள சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திறமையாக துப்பு துலக்கி உண்மை குற்றவாளிகளை கைது செய்தவர் ஆவார்.
ஏ.டி.ஜி.பி. சந்தியா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டதும் அவர், டி.ஜி.பி. லோக்நாத் பெகராவுடன் சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
மேலும் சம்பவம் நடந்த அத்தானி முதல் கொச்சி நகர எல்லை வரையிலான சாலைகளில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்தனர்.
இந்த விசாரணையில் வழக்கு பற்றிய மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர பக்தனான ராகவா லாரன்ஸ் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எதற்காக அழைப்பு விடுத்தார் என்பதை கீழே பார்க்கலாம்.
உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயின் பாசம் அதிகம். நமக்கு எத்தனையோ உறவுகள் இருந்தாலும்தாயின் அன்புக்கு ஈடு ஏதும் இல்லை. 10 மாதங்கள் சுமந்து குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் படும் கஷ்டங்கள் ஏராளம். அந்த பாசத்திற்கு எதையும் ஈடாக்க முடியாது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அது என்னவென்றால், தனது தாய்க்கு அவர் கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர பக்தனான ராகவா லாரன்ஸ், தனது அம்மாவின் கோவில் திறப்பு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள லாரன்ஸ்,
"எனது அம்மாவுக்கு கட்டிய கோவிலை விரைவில் திறக்க உள்ளதாகவும், அதற்கு நண்பர்கள், ரசிகர்கள் அனைவரது வாழ்த்துக்களும் தேவை என்றும் கூறிய லாரன்ஸ், அம்மா கோவில் திறப்பு விழாவுக்கு தலைவர் ரஜினியை நேரில் சந்தித்து அழைத்ததாக புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்".
தற்போயை சூழலில் ரஜினி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், தனது ரசிகனும் தன்னிடம் நெருக்கமானவருமான லாரன்சின் அம்மா கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். லாரன்சின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.

அரசியல் நிலவரம் பற்றி விமர்சனம் கூறி வரும் கமல், அரசியலில் குதிப்பாரா அல்லது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்று இருவரது ரசிகர்களும் எதிர்பார்த்து வரும் நிலையில் தொடர்ந்த மவுனம் நீடித்து வருகிறது.
எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு பிறகு ரஜினியும், கமலும் தமிழ் திரைஉலகில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக திகழ்ந்து வருகிறார்கள்.
இவர்களில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற கோஷம் நீண்ட காலமாகவே அவரது ரசிகர்கள் மத்தியில் பிரதானமாக இருந்து வருகிறது.
“தலைவா வா... தமிழகத்துக்கு தலைமையேற்க வா” என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் ஒட்டி வருகிறார்கள். ஆனால் ரஜினியின் மனதில் என்னவோ, அரசியல் ஆசை மட்டும் ஓட்டாமலேயே இருந்து வருகிறது.
1996-ம் ஆண்டு மூப்பனார் தனிக்கட்சி தொடங்கிய போதே ரஜினிகாந்துக்கு அரசியல் வலை விரிக்கப்பட்டது. அப்போது அவர் அதில் சிக்கவில்லை. தற்போது பா.ஜனதா கட்சி அந்த வலையை கையில் எடுத்து ரஜினிகாந்தை நோக்கி வீசி இருக்கிறது.
ஆனால் அவர் சிக்காமலேயே நழுவி வருகிறார். இதனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்கிற கேள்வி மதில் மேல் பூனையாகவே தொடர்ந்து வருகிறது.
அதே நேரத்தில் நடிகர் கமல்ஹாசனோ, எப்போதுமே அரசியல் களத்தில் இருந்து விலகியே இருந்து வந்துள்ளார். ஆனால் சமீப காலமாக கமலின் அரசியல் விமர்சனங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொங்கி எழுந்த மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து கமல் தெரிவித்த கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்றது. மாணவர்களின் போராட்டகளத்துக்கு நடிகர்கள், யாரும் செல்ல வேண்டாம். அது மாணவர்களின் போராட்டமாக மட்டுமே இருக்கட்டும் என்று கூறியதுடன், கடைசி வரை மாணவர்களின் போராட்டகளத்துக்கு செல்லாமலேயே கமல் தவிர்த்து விட்டார்.
இதன் பின்னர் தொடர்ச்சியாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அரசியல் தொடர்பான கமலின் இந்த கருத்துக்கள் பொதுமக்களை மட்டுமின்றி, அரசியல்வாதிகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கமலின் கருத்துக்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இப்படி அனைவராலும் கமலின் கருத்துக்கள் ஆர்வமுடன் கவனிக்கப்பட்டு வருகின்றன.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு
முதல் - அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஓ.பன்னீர் செல்வம் தான் மிரட்டப்பட்ட தாகவும், அதன் காரணமாகவே ராஜினாமா செய்தேன் என்றும் தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதற்கு ஆதரவு தெரிவித்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டு இருந்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதையும் கமல் விமர்சித்து இருந்தார். இப்படி தமிழக அரசியலின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கமல் காரசாரமாகவே விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு கமல் அளித்த பேட்டியில் தமிழக சட்டசபைக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் சட்டசபையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருப்பதை மறைமுகமாக சாடியுள்ளார் கமல். மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள் தேர்தல் முடிந்ததும் ஆளே மாறி விடுகிறார்கள். இது சார்ந்த கோபம் மக்களிடம் அதிகரித்துள்ளது.
சட்டப்பேரவையை சுத்தம் செய்ய மறுதேர்தல் நடத்த வேண்டும். மறுதேர்தல் என்பது மக்களுக்கு செலவு வைக்கக்கூடிய ஒன்றுதான். தரையில் பாலை கொட்டி விட்டோம். அதனை சுத்தம் செய்து விட்டு மீண்டும் பால் கரக்க வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது என்று கூறி இருக்கிறார்.
அரசியலுக்கு வர எனக்கு பயமாக இருக்கிறது. என்னை போன்ற கோபக்கார அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு வேண்டாம் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.
அரசியல் களத்தில் இது போன்று காரசாரமான விமர்சனங்களை கமல் இதற்கு முன்பு எப்போதுமே வைத்ததில்லை. தற்போது தான் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
கமலின் பேட்டியில், அரசியலுக்கு வர பயமாக இருக்கிறது என்றுதான் கூறி இருக்கிறார். வரமாட்டேன் என்று தெரிவிக்கவில்லை. எனவே கமல் அரசியலில் குதிப்பாரா? என்கிற கேள்வி அனைவரது மனதிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் கமலின் கருத்துக்கள் கார சார விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போதை அரசியல் சூழல் பற்றி ரஜினிகாந்த் எந்த விதமான கருத்துக்களையும் பதிவிடாமல் மவுனம் காத்து வருகிறார்.
அதே நேரத்தில் அவரது ரசிகர்களோ, ரஜினி அரசியலுக்கு வருவதற்கு இதுவே சரியான நேரம் என்று கூறி மீண்டும் போஸ்டர்களை ஒட்டி அழைப்பு விடுத்து வருகிறார்கள். ஆனால் எப்போதும் போலவே ரஜினியின் மவுனம் நீடித்துக் கொண்டே செல்கிறது.

பாலியல் புகாரை வாபஸ்பெற கூறியதால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் பாவனா தவித்து வருகிறார். அவருக்கு தஞ்சம் கொடுத்த நடிகர் லால் உருக்கமான பேட்டி அளித்தார். அவரது பேட்டியை கீழே பார்ப்போம்.
பிரபல நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
தன்னை கொடுமைப்படுத்திய கும்பல் தப்பிச் சென்றபிறகு நடிகை பாவனா அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு கார் மூலம் பிரபல மலையாள நடிகரும் டைரக்டருமான லாலின் வீட்டிற்கு சென்று அவரது உதவியை தான் முதலில் நாடினார். இவர் பாவனாவுக்கு உறவினர் ஆவார்.
நடிகர் லால் தமிழில் `சண்டைக்கோழி', `தீபாவளி' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். `தீபாவளி' படத்தில் நடிகை பாவனாவுக்கு அவர் தந்தையாக நடித்திருந்தார்.
தனது உதவியை பாவனா நாடியது பற்றி நடிகர் லால் கூறியதாவது:-
நடிகை பாவனா சம்பவம் நடந்த அன்று இரவு எனது வீட்டிற்கு வந்து தனக்கு நடந்த கொடுமைப்பற்றி கூறியபோது அதிர்ந்து போனேன். இதுபற்றி போலீஸ் டி.ஜி.பி.யை தொடர்பு கொண்டு புகார் செய்தேன். அவர் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளை எனது வீட்டிற்கு அனுப்பி நடவடிக்கை எடுத்தார்.
மறுநாள் இந்த சம்பவம் பற்றி ஊடகங்களில் தகவல் வெளியானது. இதனால் பாவனா மிகவும் மனவேதனை அடைந்தார். புகாரை வாபஸ் வாங்கி விடலாம் என்றுகூட நினைத்தார். காரணம் அந்தளவுக்கு அவர் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் இருந்தார்.
அவரிடம் போலீஸ் டி.ஜி.பி. இதுபோல 3 சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் யாரும் புகார் கொடுக்கவில்லை. இந்த புகார் மூலம் உங்களுக்கு சிக்கல் வராமல் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.
இதன்பிறகே அவர் சமாதானமடைந்தார். டி.ஜி.பி.யிடம் இதில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று கூறினேன். மேலும் பாவனாவுக்கு முழு பாதுகாப்பு அளிக்கவும் கேட்டுக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அமளி ஏற்பட்டதை தொடர்ந்து கவர்னருக்கு ஈமெயில் அனுப்பி கமல் ரசிகர்கள் புதுக்கோட்டையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டசபையில் நடந்த கேலி கூத்துகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள், கமல் ரசிகர்கள் கவர்னருக்கு ஈ மெயில் மூலம் தகவல் அனுப்பி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 29-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் சட்டசபை அ.தி.மு.க. குழு தலைவராகவும் தேர்வானார். இதில் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க.வினர் பலர் தனி அமைப்புகளை உருவாக்கினர்.
தொடர்ந்து முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா, எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டது உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்தன. இதனை தொடர்ந்து 7-ந்தேதி முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கினார்.
இதற்கு அ.தி.மு.க.வினர் மட்டுமல்லாமல் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பும் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் 10 பேர் எம்.பி.க்கள் 12 பேர் ஆகியோர் ஆதரவும் கிட்டியது.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ததால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க முடிவு செய்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் கவர்னரிடம் கொடுக்கப்பட்டு சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது.
இதில் எதிர்கட்சிகள் இல்லாத சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சட்டசபையில் நடந்த கேலிகூத்து தற்போது தமிழக மக்களிடையே விவாதகளமாக மாறி உள்ளது.
இதற்கு நடிகர் கமல் உள்ளிட்ட பலர் கவர்னர் மாளிகைக்கு தங்களின் வேதனைகளை ஈ-மெயிலாக அனுப்புங்கள் என்று டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பலர் கவர்னர் மாளிகைக்கு ஈ-மெயில் மூலம் தங்களின் கருத்துக்களை அனுப்ப தொடங்கியுள்ளனர். கமல் வேண்டுகோளை ஏற்று கமல் நற்பணி இயக்கத்தினர் பலரும் இ-மெயில் அனுப்பும் பணியை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் ஈ-மெயில் அனுப்பி வருகின்றனர். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாவனாவுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து மல்லுவுட் நடிகர், நடிகைகள் நேற்று மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பாவனா. இவர் தமிழில் 'தீபாவளி', 'சித்திரம் பேசுதடி', 'அசல்', 'ஜெயம் கொண்டான்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவர், நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு நடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மர்ம கும்பல் ஒன்று இவரது காரை வழிமறித்து, காரில் ஏறி அவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக செய்திகள் வெளிவந்தது.
இதுதொடர்பாக, பாவனாவின் கார் டிரைவர் உள்பட 7 பேரை கேரளா போலீசார் நேற்று கைது செய்தனர். முன்னணி நடிகைக்கு நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், மல்லுவுட் சார்பில் நடிகர், நடிகைகள் இணைந்து கேரள மாநிலம் கொச்சியில் நேற்று மாலை மௌனப் போராட்டத்தில் பங்கேற்றனர்.