என் மலர்
ராக்கெட்டுக்களை தூக்கிப்போட்டுவிட்டு நதிகளை இணையுங்கள் என்று முன்னாள் நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்க்கலாம்.
நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முன்வர வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். காவிரி விவகாரம் பற்றி எரிகிறது. இந்த விவகாரம் குறித்து சிவக்குமார் அறிவுப்பூர்வமாக சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.
சிவக்குமாரின் கருத்து:
தமிழ்நாடு முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் ஜனங்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர் கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது என்ன?
கர்நாடகாவில் மிச்சமிருக்கும் காவிரி நீரைத்தான் நமக்கு கொடுக்கிறார்கள். முல்லை பெரியாறு பக்கம் பார்த்தால் நீர்பிடிப்பு ஏரியாக்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், அணை கேரளாவில் இருக்கிறது. 10 அடி தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு அவர்கள் விடமாட்டேன் என்கிறார்கள். பாலாற்றில் வெறும் மணல்தான் இருக்கிறது. கண்டலேறுவில் குடிதண்ணீருக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இதற்கெல்லாம் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. கங்கை காவிரி இணைப்புதான் அது. கங்கையாற்றிலும், யமுனையாற்றிலும் இருந்து 60 சதவீதம் தண்ணீர் வீணாக போகிறது. அந்த தண்ணீரை தெற்கு நோக்கி திருப்பினால் கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும். அதற்கு பலகோடி செலவாகும் என்று சொல்கிறார்கள்.
செவ்வாய் கிரகத்துக்கு பலகோடிகள் செலவழித்து ராக்கெட் அனுப்பியிருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது இப்போது நாட்டுக்கு முக்கியமா? மக்களுக்கு அடிப்படை தேவை தண்ணீர். அந்த தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு 10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பலாம்.
தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொண்டு வந்து காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட எல்லா கிளை நதிகளிலும் தண்ணீர் பாய்ந்தோடினால், ஆறு, குளம் எல்லாம் நிரம்பி விவசாயம் செழிக்கும். இதற்கு இந்தியாவின் பிரதமர்தான் வழிவகுக்கவேண்டும். தமிழக மக்கள் சார்பில் அதை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சிவக்குமார்.
இது சிவக்குமார் என்ற தனி நபரின் பேச்சு அல்ல.. ஒட்டுமொத்த அப்பாவித் தமிழ் மக்களின் ஏக்கமும் இதுதான். அரசியல்வாதிகள் எந்த லாபமும் பார்க்காமல் மக்களுக்காக இதைச் செய்ய முன் வருவார்களா..?
என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமுதாய சூழ்நிலையை சொல்லும் படமான `கவண்' படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
கல்பாத்தி எஸ்.அகோரம் வழங்கும் ஏ.ஜி.எஸ். எண்டர்டைன் மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கவண்’. கடந்த ஆண்டு ‘அனேகன்’, ‘தனிஒருவன்’ ஆகிய வெற்றிப்படங்களை வழங்கிய ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்த ஆண்டு தயாரித்து வழங்கும் முதல் படம் இது.
பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவரஇருக்கிறது. இந்த படம் இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ற படமாக உருவாகியிருக்கிறது. சவால், காதல், அவமானம், மீண்டெழுதல், கொண்டாட்டம் என ஒரு சுவாரசிய சினிமாவிற்கான அனைத்து லட்சணங்களையும் உள்ளட க்கிய படமாக ‘கவண்’ அமைந்திருக்கிறது.
விஜய்சேதுபதி ‘கவண்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் கவண் படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
விஜய்சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்திருக்கிறார். பாண்டியராஜன், விக்ராந்த், ‘அயன்’ ஆகாஷ், போஸ்வெங்கட், ‘நண்டு’ ஜகன், பவர் ஸ்டார் உள்பட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் கே.வி. ஆனந்த், சுபா, கபிலன் வைரமுத்து ஆகியோர் இணைந்து கவண் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- அபிநந்தன் ராமானுஜம், இசை- ‘ஹிப் ஹாப்’ தமிழா.
அருண்ராஜா காமராஜ் எழுதி டி.ஆர். பாடிய ‘ஹேப்பி நியூ இயர்’ பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.
கலை-கிரண், படத்தொகுப்பு- ஆண்டனி,தயாரிப்பு- கல்பாத்தி எஸ்.அகோரம்,கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்திஎஸ்.சுரேஷ்.

சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் பெண் இயக்குநர் ஒருவருடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இயக்குநர் யார் என்பதை கீழே பார்ப்போம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் கடந்த 1987-ஆம் ஆண்டு வெளியான `வேலைக்காரன்' படத்தலைப்பை மோகன் ராஜா இப்படத்திற்காக கைப்பற்றியுள்ளார். சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17-ஆம் தேதி அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இப்படத்தின் தலைப்பு படக்குழு வெளியிட்டது.
சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் தனது படத்திற்கு ரஜினியின் படத்தலைப்பபை கைப்பற்றியுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இப்படத்திற்கு பிறகு, பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிக்க உள்ளார். அதே நேரத்தில் `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.
அதனைத்தொடர்ந்து, `இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக சிவகார்த்திகேயன்-இயக்குநர் சுதா இடையே நடத்தப்பட்ட பேச்சுவாரத்தையில் இருவரும் இணைய உள்ளது உறுதியாகியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்யின் எளிமை பார்த்து தான் வியந்ததாக நியூசிலாந்து மாடல் ஒருவர் தெரிவித்துள்ளார். அது யார் என்பதை கீழே பார்ப்போம்.
தமிழ்த் திரைப் படங்களில் பிற மாநிலத்திலிருந்து பல்வேறு மொழிகளிலிருந்து நடிக்க வந்து நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார்கள். இந்நிலையில், கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி கங்காரு தேசத்திலிருந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இலங்கைத் தமிழனரான அவரது பெயர் சபிஜே.
சர்வதேச மாடலான இவர் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்த இவர் சர்வதேச மியூசிக் வீடியோக்களில் நடித்திருக்கிறார்.
இதில் சபிஜே அளித்த பேட்டி வருமாறு,
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று போனாலும் எனக்கு தமிழ் உணர்வு உண்டு. தமிழ் மக்கள் எல்லாரும என் உடன் பிறந்தவர்களாகவே உணர்கிறேன் அதனால் தமிழ்நாடு, மக்கள் மீது எனக்கு தனி அன்பு உண்டு.
அங்கே பிரபல மாடலாக இருந்தாலும் தமிழில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டேன் இங்குள்ள எல்லா நடிகர்களின் படங்களும் பார்ப்பேன். குறிப்பாக விஜய் பிடிக்கும். அதேபோல சினிமாவில் போராடி ஜெயித்த விஜய்சேதுபதியும் பிடிக்கும் என்று கூறினார்.
ஒரு நாள் விஜய்யை 'பைரவா' படப்பிடிப்பில் சந்தித்தேன். அவ்வளவு எளிமையாக இருந்தார். ஆச்சரியப் பட்டேன். அதுவரை அவரது சாதாரண ரசிகையாக இருந்த நான், அவரைச் சந்தித்த பின்னால் பரம ரசிகையாக மாறிவிட்டேன்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்தான் இந்தியா வந்தேன். இங்கு வந்து எல்லாருடனும் பேசியபின் என் பேச்சுத்தமிழ் மேலும் வளர்ந்து இருப்பதை உணர்கிறேன்.
'றெக்க' படப்பிடிப்புக்கு ஒரு நாள் போனேன். நடிகர் விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்துக் கொண்டேன். அதைப் பார்த்த அந்தப் படத்தின் கேமராமேன் தினேஷ், தான் பணியாற்றும் அடுத்த படத்துக்கு என்னைப் பரிந்துரை செய்து இருக்கிறார் அப்படி வந்த வாய்ப்புதான் நான் நடிக்கும் புதிய படம். இயக்குநர் எம்.ஏ.பாலாவின் 'காதல் நகரம்' படம். மோசஸ் இயக்கத்தில் 'ஸ்ட்ரீட் பைட்டர்' என்கிற தமிழ் டெலிபிலிமிலும் நடித்துள்ளேன்.
படப்பிடிப்பு பார்க்க வந்தேன் இப்படி ஒரு பட வாய்ப்பே கிடைத்துவிட்டது. அதில் எனக்குப் பெயர் சொல்லும் படியான அறிமுகம் கிடைக்கும் என நம்புகிறேன். 'ஏனிந்த மயக்கம்' இயக்கிய இயக்குநர் சக்தி வசந்த் பிரபு என் நண்பர்தான். அவர் இயக்கும் அடுத்த படத்தில் என்னை நடிக்க வைப்பதாக கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கமல்ஹாசன் நடித்து வரும் அடுத்த படமான `சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது என்னவிதமான சிக்கல் என்பதை கீழே பார்ப்போம்.
`விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவலை நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதில் `விஸ்வரூபம் 2' படத்தின் தடையாக இருந்த முக்கிய பிரச்சனைகள் நீங்கிவிட்டதாகவும், தொழிநுட்ப மற்றும் சட்டரீதியான சவால்களை மட்டுமே சமாளிக்க வேண்டி உள்ளது. எனவே படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் துவங்கி 6 மாதத்தில் படம் திரைக்கு வரும் என்று கமல் தெரிவித்திருந்தார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான `விஸ்வரூபம்' படத்திற்கு பிறகு கமல் நடிப்பில் `உத்தமவில்லன்', `தூங்காவனம்' உள்ளிட்ட இரு படங்கள் வெளியாகிய நிலையில், விஸ்வரூபம் படத்தின் அடுத்தகட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கமல் `சபாஷ் நாயுடு' படத்தின் பணிகளை தொடங்கினார். படப்பிடிப்பு தொடங்கிய 4 நாட்களில் படத்தின் உண்மையான இயக்குநரான டிகே ராஜுவ்குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இயக்குநரான கமல்ஹாசன் அப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை இயக்கினார்.
அதன் பின்னர் கால் எலும்புமுறிவு காரணமாக சிகிச்சை பெற்ற கமல் அதில் இருந்து மீண்டு `சபாஷ் நாயுடு' படத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில், `சபாஷ் நாயுடு' படத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் உள்ளிட்டோரின் தேதிகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் விதித்துள்ள விசா நடவடிக்கையால் விசா கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே 2 மாதங்களுக்கு பிறகு தொடங்கவிருந்த `சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு அடுத்த 7 வாரத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.

நடிகர் விஜயகுமாருக்கு ஒரே ஆண் வாரிசு அருண்குமார். சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அதனால் "எம்.பி.ஏ.'' படிக்க அமெரிக்காவுக்கு போக இருந்த திட்டத்தை கைவிட்டு, முழுநேர நடிகராகி விட்டார், அருண்குமார்.
மகன் அருண்குமார் சினிமாவுக்கு வந்தது பற்றி விஜயகுமார் கூறியதாவது:-
"அருண்குமார் படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்துக் கொண்டிருந்தார். அவரது பள்ளி வாழ்க்கையே, பல பள்ளிகளில் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் நாடு விட்டு நாடும் தொடர்ந்தது.
ஆரம்பப் படிப்பு சென்னை டான்போஸ்கோவில் தொடங்கியது. அதன் பிறகு `சோ'வின் சகோதரர் நடத்தி வரும் "லா சாட்டலின்'' பள்ளி. அதன் பின்னர் அமெரிக்காவில்
2 வருடம் என உலகம் சுற்றியது. நான் நடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் 2 வருடம் ரெஸ்டாரெண்ட் நடத்திய நேரத்தில், அருண் 2 வருடமும் அமெரிக்காவில் படித்தார். அதன் பிறகு சென்னை வந்தபோது மறுபடியும் `லா சாட்டலின்' பள்ளியில் படிப்பு.
அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்குத்தான் பெற்றோர்களின் டிரான்ஸ்பரை பொறுத்து, இப்படி ஊர்ஊராய் பள்ளிகளில் மாறி மாறி படிக்க வேண்டியிருக்கும். அருணுக்கும் இந்த மாதிரியான அனுபவம் கிடைத்தது.
பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகு கூட, அருணுக்குள் சினிமா ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. அந்த வாய்ப்பை தேடி வந்து ஏற்படுத்திக் கொடுத்தவர் தயாரிப்பாளர் `அன்பாலயா' பிரபாகரன்.
அருண் "பி.காம்.'' இரண்டாம் ஆண்டு படிப்பை தொடர்ந்த நேரத்தில் `அன்பாலயா' பிரபாகரன், என்னை வந்து சந்தித்தார். அவரது படத்தில் நான் நடிப்பது தொடர்பாகத்தான் பேச வந்திருக்கிறார் என்று எண்ணினேன். அவரோ வந்ததும் வராததுமாக, "ஒரு நல்ல லவ் ஸ்டோரி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். உங்க மகன் அருணை ஹீரோவாக அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்'' என்றார்.
எனக்கு அதிர்ச்சி. சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் எந்த எண்ணமும் இல்லாத மகனுக்குள் வலுக்கட்டாயமாக சினிமாவை திணிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால் அவரிடம், "பையன் பி.காம். முடித்து விட்டு, அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்க இருக்கிறான். அதனால் சினிமா வேண்டாமே'' என்று தவிர்க்கப்பார்த்தேன்.
ஆனால் நடந்ததை தனது அம்மா மூலம் தெரிந்து கொண்ட அருண், "நான் நடிக்கிறேன். தயாரிப்பாளர் கிட்ட `சரி'ன்னு சொல்லும்படி அப்பாகிட்ட சொல்லுங்க'' என்று கூறியிருக்கிறார்.
மகனின் விருப்பம் அதுவென தெரிந்த பிறகு தடைபோட விரும்பவில்லை. அதோடு லவ் ஸ்டோரி, ஏ.ஆர்.ரகுமான் இசை என்று தயாரிப்பாளர் பிரமாண்டம் காட்டி விட்டுப் போவதால், "சரி; நடிக்கட்டும்'' என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் படத் தயாரிப்பு தாமதித்துக் கொண்டே போனது. தயாரிப்பாளரைக் கேட்டால், "ஏ.ஆர்.ரகுமான் 3 பாட்டுக்கு டிïன் தந்துவிட்டார். இன்னும் 2 பாட்டுக்கு டிïன் தந்து விட்டால் படத்தை முழு வீச்சில் தொடங்கி முடிக்க ஏதுவாக இருக்கும்'' என்று சொன்னார்.
எனக்கு நம்பிக்கை குறைந்தது. அவசரப்பட்டு சரி சொல்லிவிட்டோமோ என்று கூட நினைத்தேன்.
இந்த நிலையில் திடுமென ஒரு நாள் வந்து நின்றார், தயாரிப்பாளர். ரகுமான் இசை தாமதமாவதால் வேறு ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறேன். சுந்தர் சி. இயக்குகிறார். படத்துக்கு "முறை மாப்பிள்ளை'' என்று பெயர் வைத்திருக்கிறேன். முதலில் அருண் இந்தப் படத்தில் நடிக்கட்டும். அடுத்து ரகுமான் பாட்டை முடித்துக் கொடுத்ததும் `லவ் ஸ்டோரி' எடுக்கலாம்'' என்றார்.
சரி! நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து சினிமாவுக்குள் அருண் காலெடுத்து வைத்தாயிற்று. இனி பின்வாங்கினால் சரியாக இருக்காது. நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்றபடி "முறை மாப்பிள்ளை'' படத்துக்கு அருணை ஹீரோவாக்க சம்மதித்தேன்.
படத்தின் பூஜை ஏவி.எம். ஸ்டூடியோ பிள்ளையார் கோவிலில் நடந்தது. நண்பர் ரஜினி வந்து அருணுக்கு பொட்டு வைத்து வாழ்த்தி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அப்போது அவர், "என் இனிய நண்பர் விஜயகுமாரின் மகன் அருண் சினிமாவுக்கு வருவதை வாழ்த்துகிறேன். அவர் நல்லா வரவேண்டும். நல்லா வருவார்'' என்று வாழ்த்தினார்.
அவர் வாழ்த்து பலித்தது. "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் அருண் நிலையான ஹீரோ ஆனார். தொடர்ந்து "பிரியம்'', "காத்திருந்த காதல்'', "கங்கா கவுரி'', "துள்ளித்திரிந்த காலம்'', "கண்ணால் பேசவா'', "அன்புடன்'', "பாண்டவர் பூமி'', "முத்தம்'', "இயற்கை'', "ஜனனம்'', "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது'' என தொடர்ந்து இப்போது ரிலீசான "தவம்'' வரை நடிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்போதும் "வேதா'', "துணிச்சல்'' என திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் படங்களும் உண்டு.''
இப்படிச் சொன்ன விஜயகுமார், நடிகர் அர்ஜ×ன், அருணை வைத்து தயாரித்த "தவம்'' படம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து
கொண்டார்.
"அர்ஜ×ன் சார் என்னிடம் அடிக்கடி அருண் பற்றி கேட்பார். "நன்றாக நடிக்கவும் செய்கிறார். `பைட்'டும் சூப்பரா போடறார். பிறகு ஏன் விஜய், அஜித் மாதிரி இன்னும் அருண் பேசப்படவில்லை?'' என்று கவலை தெரிவிப்பார்.
"எல்லாத்துக்குமே நேரம்னு ஒண்ணு இருக்கே'' என்பேன் நான்.
ஒருநாள் திடுமென என்னை சந்தித்த அர்ஜ×ன், "அருண் விஷயத்தில் நீங்கள் சொன்ன `நேரம்' இப்போது வந்து விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். நான் அருணை ஹீரோவாகப்போட்டு ஒரு படம் தயாரிக்கிறேன். `தவம்' என்பது படத்துக்கு பெயர்'' என்றார்.
எனக்கு ஆனந்த அதிர்ச்சி. தமிழ் சினிமாவில் ஒரு முதல் தர நடிகர்; `ஆக்ஷன் கிங்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் மாதிரி ஹீரோக்கள் தொடர்ந்து படம் எடுத்து தங்களை வளர்த்துக் கொள்ளவே நினைப்பார்கள். மாறுபட்டு என் மகனை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்கப்போகிறேன் என்று சொல்கிறாரே! இப்படியும் ஒரு அபூர்வ மனிதரா?'' என்ற வியப்புதான் ஆனந்த
அதிர்ச்சியாகியிருந்தது.சொன்னபடியே `தவம்' படத்தை தயாரித்து ரிலீஸ் பண்ணி அருணுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுத்த தயாரிப்பாளராகவும் எனக்குள் நிலைத்து விட்டார்.
படத்தில் அருணை வித்தியாசமான கதைக் களத்தில் நடிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தற்கொலைக்கு முயலும் கதாநாயகியை, "எங்கே என் கண்ணைப் பார்த்து சொல்லு'' என்று அருண் கேட்கிறபோது, அருணின் அப்பா, ஒரு நடிகர் என்பதையெல்லாம் நான் மறந்து ஒரு ரசிகனாக அந்தக் காட்சியில் அருணின் நடிப்போடு ஒன்றிவிட்டேன்.
அருண்குமார் இந்தப்படம் முதல் `அருண் விஜய்' என்று, பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். புதிய பெயரில் வெற்றியும் அவரோடு கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை.
அர்ஜ×ன் என் மகன் அருண் விஜய்யை ஹீரோவாக்கியது என்னை ரொம்பவே நெகிழ்ச்சியாக்கி விட்டது. இதன் விளைவு `தவம்' பட பாடல் கேசட்டு வெளியீட்டு விழாவின்போது என்னில் எதிரொலித்தது. அந்த விழாவில், "இனி நானும் வருஷம் 2 படம் தயாரிப்பேன். அதில் ஒரு படத்தில் அருண் விஜய் நடிப்பார். அடுத்த ஆண்டு முதல் தயாரிப்பு தொடங்கும்'' என்று கூறினேன். சொன்னபடி அடுத்த ஆண்டு படத்தயாரிப்பு தொடர்பான வேலைகளை இப்போதே தொடங்கி விட்டேன்.
அருண் விஜய்யிடம் நான் அடிக்கடி சொல்லும் வாசகம்: "எப்போதும் `பிரஷ்' ஆகவே இரு! எந்தப்படம் பண்ணினாலும் அதை முதல் படமாக நினைத்து சிரத்தையோடு பண்ணு! உழைப்பு இருக்கிறது; தொழில் அக்கறை இருக்கிறது. இதோடு முழு ஈடுபாடும் கலந்து கொள்ளும்போது வெற்றியும் உன்னுடன் பின்னிப் பிணைந்திருக்கும்'' என்பதுதான்.
சினிமா மீதான அவரது `தவம்' தொடர்ந்து நல்லவிதமாகவே கைகூடும் என்பது அவரது அப்பாவாக என் நம்பிக்கை.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

ரஜினி நடிக்கும் ‘2.ஓ‘ படத்துக்காக ரூ.20 கோடி செலவில் பிரம்மாண்ட அரங்கு ஒன்றை அமைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
ரஜினி தற்போது ஷங்கர் இயக்கும் பிரம்மாண்ட படமான 2.ஓ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் முதலில் ரூ.350 கோடி என கணக்கிடப்பட்டு தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது ரூ.450 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்காக சென்னை அருகே பிரம்மாண்ட அரங்கு அமைத்து படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அரங்குக்கு மட்டுமே ரூ.20 கோடி வரை செலவு செய்துள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
இப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. ரஜினியுடன் எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

சட்டசபையில் நடந்த நிகழ்வுகளுக்கு குஷ்பு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதை கீழே விரிவாக பார்ப்போம்.
தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வராக சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான குஷ்பு தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நான் இன்றைக்குத்தான் நம்ம சென்னைக்கு வந்தேன். நான் ஊருக்கு போய்விட்டு வருவதற்குள் தமிழ்நாடு மாபியா கேங்கிடம் சிக்கிக் கொண்டதே என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, இதை நினைத்து என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. தமிழ்நாட்டின் இப்போதை நிலை மிகவும் வருத்தத்தை கொடுத்துள்ளது. இன்றைய காலை சந்தோஷமாக அமையவில்லை என்று கூறினார்.
குஷ்பு அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாளராக இருந்து நடிகராக உருவாகியிருக்கிற பாலா நடிப்பில் வெளிவந்துள்ள ‘கண்டேன் காதல் கொண்டேன்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
கல்லூரியில் படித்து வரும் நாயகன் பாலா ஒருநாள் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது கிங்ஸ் மோகனை சிலபேர் அடிக்க துரத்திக் கொண்டு வருகின்றனர். அப்போது, அவர்களிடமிருந்து கிங்ஸ் மோகனை காப்பாற்றி, எதற்காக அவர்கள் உன்னை அடிக்க வந்தனர் என்று கேட்கிறார் நாயகன்.
பெண்களை ஒருதலையாக காதலித்து, அவர்கள் பின்னாலேயே சுற்றி வருவதாலேயே தன்னை இப்படி ஆட்கள் அடிக்க வருவதாக அவன் கூறுகிறான். அவனுக்கு காதலிப்பதற்கு நாயகன் சில ஆலோசனைகள் கொடுக்கிறார். அதை பார்த்து வியந்துபோன கிங்ஸ் மோகன், நாயகனிடம் நட்பை ஏற்படுத்திக்கொண்டு அவன்கூடவே சுற்றி வருகிறான். நாயகன் சொல்லும் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்கிறான்.
ஒருநாள் இருவரும் நாயகியை பார்க்கிறார்கள். நாயகிக்கு நாயகனை பார்த்தவுடனேயே பிடித்துப்போய்விடுகிறது. அவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். ஒருகட்டத்தில் நாயகனுக்கும் அவள் மீது காதல் வருகிறது. இந்நிலையில், பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவளான நாயகியின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது.
இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கொடைக்கானலுக்கு செல்கிறார்கள். அங்கு சென்று பதிவு திருமணம் செய்துகொள்ள நினைக்கும் பட்சத்தில், 15 நாட்கள் கழித்துதான் அவர்கள் பதிவு திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த 15 நாட்களுக்குள் இருவருக்கும் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் இரண்டு பேருக்கும் மனக்கசப்புகளும் வருகிறது.
இதையெல்லாம் மீறி இவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் பாலா ஏற்கெனவே சின்னத்திரையில் தொகுப்பாளராக பார்த்தவர்தான். தற்போது பெரிய திரையில் நடிகராக புரமோஷன் ஆகியிருக்கிறார். நாயகனுக்குண்டான அம்சங்கள் இருந்தாலும், நடிப்பில் இன்னும் கொஞ்சம் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை.
நாயகி அஸ்வினிக்கு வழக்கம்போல் தமிழ் சினிமாவில் வந்துபோகின்ற கதாநாயகி வேடம்தான் என்றாலும் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகனின் நண்பனாக வரும் கிங்ஸ் மோகன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு. வேறு எந்த கதாபாத்திரங்களும் சொல்லும்படி எதுவும் இல்லை.
இயக்குனர் வெங்கட் ஜி.சாமி குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை மட்டுமே ஒரு காதல் கதையை எடுக்க முனைந்திருக்கிறார். முன்பாதி கலகலப்பாக நகர்ந்தாலும், பிற்பாதி இழுஇழுவென இழுக்கிறது. முன்பாதியில் காட்டிய கவனத்தை பிற்பாதியில் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
நாகா தத்தாவின் இசையில் பாடல்கள் எல்லாம் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் தேவைக்கேற்றார்போல் அமைத்திருக்கிறார். சுரேஷ் தேவனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘கண்டேன் காதல் கொண்டேன்’ ஒருமுறை காணலாம்.

தமிழக சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்வு குறித்து சித்தார்த் கடுமையான கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
தமிழக அரசியலில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து நடிகர்கள் கமல், சூர்யா, அரவிந்த் சாமி உள்பட பலர் ஆவேசமான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த்தும் கடுமையான வார்த்தைகளால் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்னும் எண்ணமே இப்போது அனைவரின் மனதிலும் உள்ளது. குழந்தைகளும் சட்டசபையில் என்ன நடக்கிறது என கேட்டு பார்த்து தெரிந்துக் கொள்ளட்டும். இந்த நாட்கள் ஜனநாயகத்தில் வெட்கக்கேடானது.
சசிகலாவுக்கு ஜெயிலில் ஒரு லேப்டாப் கொடுங்கள். இதனால், 4 ஆண்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய கும்பல் போக்குவரத்து செலவு மிச்சமாகும். நமது உணவில் இன்னும் அதிகமான உப்பைப் போட வேண்டிய நேரமிது" என்று கூறியுள்ளார்.

நான் கோபக்காரன் என்பதால் அரசியலுக்கு வர எனக்கு தகுதியில்லை என்று நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடைபெற்ற சம்பவம் மற்றும் மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் கூறியதாவது:-
ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட பின்னர் சசிகலாவின் குடும்பம் என்னும் கிரிமினல் கூட்டத்தாரால் இந்த மாநிலத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
நான் கூறுவது உண்மை என்பது நீதிமன்றத்தால் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட குற்றம்சாட்டப்பட்டவர்தான்.
தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தில் வேண்டுமானால் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றிருக்கலாம்; ஆனால், தெருக்களில் உள்ள உணர்ச்சி கொந்தளிப்பு வேறு எதையோ குறிப்பிடுகிறது.
நமது சட்டசபையை நாம் தூய்மைப்படுத்த வேண்டும். மக்கள் தங்களின் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியலுக்கு வர நான் தகுதியற்றவன் என்றும் இந்த பேட்டியின்போது குறிப்பிட்ட கமல்ஹாசன், நான் மிகவும் கோபக்காரன். கோபக்காரர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை, எதையும் நடுநிலையாக அணுகும் அரசியல்வாதிகள் தான் இன்று நமக்கு தேவை. தற்போது நானும் கோபமாக இருக்கிறேன், மக்களும் கோபமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்வுகள் குறித்து நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சரவையின் பெரும்பான்மையை நேற்று சட்டசபையில் நிரூபித்து தனது ஆட்சியை பலப்படுத்தியுள்ளார். இந்த சட்டசபைக்குள் நேற்று நடந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபைக்குள் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களின் அமளி, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டது என நேற்று தமிழக அரசியலில் பெரும் சூறாவளியே தாக்கியது எனலாம்.
நேற்று தமிழக அரசியலில் தொடர்ந்து நடந்த இந்த சம்பவங்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் கமல், சூர்யா ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், தற்போது அரவிந்த்சாமியும் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறும்போது, என்னைப் பொறுத்தவரை தற்போதுள்ள சூழ்நிலையில் மறுதேர்தல் மட்டுமே ஒரே தீர்வு. இது ஒன்றும் மக்களின் தீர்ப்பு அல்ல" என்று தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி.