என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    89-வது ஆஸ்கர் விருதுகள் வென்ற படங்களின் முழு விவரங்களை புகைப்படங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை கீழே பார்ப்போம்..
    89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார். இந்த விருதுகள் வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆஸ்கர் பட்டியலில் நிறைய படங்கள் பரிந்துரையில் இருந்தன.

    இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்ற படங்களின் முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்பதை கீழே பார்ப்போம்.

    • கவுர ஆஸ்கர் விருது - ஜாக்கிசான்
    • சிறந்த திரைப்படம் - மூன் லைட்

     


     

    • சிறந்த நடிகர் - கேசி அப்லெக் (மான்செஸ்டர் பை தி சீ)

     



     

    • சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்)

     



     

    • சிறந்த இயக்குனர் - டேமியன் சாசெல்லி (லா லா லேண்ட்)

     



     

    • சிறந்த துணை நடிகர் - மஹேர்சலா அலி (மூன் லைட்)

     

    • சிறந்த துணை நடிகை - வயோலா டேவிஸ் (பென்சஸ்)

     


     

    • சிறந்த திரைக்கதை - மான்செஸ்டர் பை தி சீ

     


     

    • சிறந்த திரைக்கதை தழுவல் - மூன்லைட்
    • சிறந்த அனிமேஷன் படம் - ஷுதோப்பியா
    • சிறந்த வெளிநாட்டு மொழிப்படம் - தி சேல்ஸ்மேன் (ஈரான்)
    • சிறந்த முழு நீள ஆவணப்படம் - எஸ்ரா எடில்மேன், கரோலின் வாட்டர்லோ (ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா)
    • சிறந்த குறும் ஆவணப்படம் - தி ஒயிட் ஹெல்மெட்ஸ்
    • சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - சிங்
    • சிறந்த அனிமேஷன் குறும்படம் - பைபர்

     


     

    • சிறந்த இசை - லாலா லேண்ட்

     


     

    • சிறந்த பாடல் - லாலா லேண்ட்
    • சிறந்த சவுண்ட் எடிட்டிங் - அரைவல்
    • சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - ஹாக்ஸாவ் ரிட்ஜ்

     

     

    Best sound mixing for 'Hacksaw Ridge'

    • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - லாலா லேண்ட்
    • சிறந்த ஒளிப்பதிவு - லா லா லேண்ட்

     


     

    • சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - கொலின் அட்வுட் (பேன்டாஸ்டிக் பீஸ்ட் அன்ட் வேர் டு பைன்ட்)
    • சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - அலிசாண்ட்ரோ, ஜியார்ஜியோ, கிறிஸ்டோபர் நெல்சன் (சூசைட் ஸ்குவாட்)
    • சிறந்த எடிட்டிங் - ஹாக்ஸாவ் ரிட்ஜ்

     


     

    • சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் - ஜங்கிள் புக்

     


     

    புதிய கட்சி தொடங்கிய இளைஞர்கள் நல்லகண்ணு, சகாயம் போன்றவர்களிடம் ஆலோசனை பெறுவது நலம் என்று நடிகர் விவேக் அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இணைந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் திடீரென்று புதிய கட்சி ஒன்றை தொடங்கினார்கள். அந்த கட்சிக்கு ‘என் தேசம் என் உரிமை’ என்ற பெயரை சூட்டியுள்ளனர். அவர்கள் தொடங்கிய கட்சிக்கு இளைஞர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கட்சியின் உறுப்பினரை சேர்க்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கட்சி தொடங்கிய முதல் நாளிலேயே அவர்கள் கட்சியின் பிரத்தியேக இணையதளம் மூலம் 6 லட்சம் பேர் இணைந்திருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.



    இந்த நிலையில் புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்களுக்கு நடிகர் விவேக் ஒரு அறிவுரை வழங்கி இருக்கிறார். அவருடைய ‘டுவிட்டர்’ கணக்கு பக்கத்தில் கட்சி தொடங்கி இருக்கும் இளைஞர்களுக்காக பதிவு செய்து இருக்கும் கருத்துகள் வருமாறு:-

    ‘இளைஞர்கள் இணையும் அமைப்பு வரவேற்கத்தக்க பிரமிப்பு, ஆயினும் பெருங்கட்சிகளுக்கு இணையான கட்டுமானம் இல்லாததால் நல்ல கண்ணு, சகாயம் போன்ற சமூகத் தூயவர்களிடம் ஆசியும், ஆலோசனையும் பெறுவது நலம்’.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கேரளாவில் கைதான 2 பேரை கோவைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    கேரளாவில் நடிகை பாவனாவை 5 பேர் 17-ந்தேதி காரில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தனர். அதை அவர்கள் செல்போனிலும் படம் பிடித்தனர். பின்னர் அந்த கும்பல் தப்பிச்சென்றது. இது குறித்து கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். விசாரணையில் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கேரளாவை சேர்ந்த ரவுடி சுனில்குமார், அவருடைய நண்பர்கள் விஜீஷ், மணிகண்டன் உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் சுனில்குமார், விஜீஷ் ஆகியோர் 22-ந்தேதி எர்ணாகுளம் கோர்ட்டில் சரணடைய சென்றனர். அதற்கு முன்னதாக அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் கோவை வரதராஜபுரத்தில் உள்ள கண்ணூரை சேர்ந்த சார்லி வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சுனில்குமார், விஜீஷ் ஆகியோரை கோவையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு நேற்று கேரள போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அங்கு சார்லி இல்லை. அவருடன் வேலை செய்யும் திண்டுகல்லை சேர்ந்த அந்தோணிசெல்வம் மட்டும் இருந்தார். பின்னர் அந்த வீடு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கையடக்க கணினி, செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். இதை தொடர்ந்து இருவரையும் கேரளாவுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.


    கோவைக்கு சுனில்குமார், விஜீசை போலீசார் அழைத்து வந்தபோது எடுத்தபடம்.

    இந்த சோதனை தொடர்பாக கேரள போலீசார் கூறியதாவது:-

    எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் சார்லியுடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு விஜீஷ் கோவையில் தங்கி வேலை செய்துள்ளார். இதனால் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இதனிடையே பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேரும் 19-ந்தேதி கோவை வந்து சார்லி வீட்டில் பதுங்கி இருந்தனர்.

    அவர்களின் செல்போன் சிக்னலை அறிந்து நாங்கள் கோவை வருவதற்குள் 21-ந்தேதி அந்த வீட்டில் தங்கி இருந்த அந்தோணி செல்வத்தின் மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு தலைமறைவாகினர். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளில் எர்ணாகுளம் கோர்ட்டில் சரண் அடைய வந்தபோது நாங்கள் கைது செய்தோம்.

    சார்லி வீட்டில் கைப்பற்றப்பட்ட கையடக்க கணினி, செல்போன் யாருடையது என தெரியவில்லை. அதை சோதனை செய்த பிறகு தான் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ இருக்கிறதா? என்பது தெரியவரும். தற்போது தலைமறைவாக இருக்கும் சார்லியை தேடி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்” என்று நடிகை திரிஷா கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகை திரிஷா மோகினி, கர்ஜனை, 1818, சதுரங்க வேட்டை-2, 96, சாமி-2, ஹேய் ஜூட் ஆகிய 7 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இவற்றில் மோகினி, கர்ஜனை ஆகியவை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள்.

    அதிக படங்களில் நடிப்பதால் சந்தோஷத்தில் இருக்கும் திரிஷா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    கேள்வி:- ஒரே நேரத்தில் 7 படங்களில் நடிக்கிறீர்களே எப்படி முடிகிறது?

    பதில்:- இந்த ஆண்டு 10 படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது இலக்காக இருக்கிறது. அதிக படங்களில் ஒரே நேரத்தில் மாறிமாறி நடிப்பது கஷ்டம்தான். ஆனாலும் பரவாயில்லை. ஓய்வில்லாமல் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. நான் தற்போது நடித்து வரும் அனைத்து படங்களுமே நல்ல கதைகள். அதனால் அவற்றை விடுவதற்கு மனமில்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

    கேள்வி:- உங்களை விமர்சிப்பவர்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

    பதில்:- அவர்களைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அவர்கள் அப்படியே இருக்கட்டும். சிலர் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வார்கள். ஆனால் அதை அவர்கள் கடைபிடிக்கமாட்டார்கள். அப்படிபட்டவர்களை பார்க்கும்போது எனக்கு கோபம் வரும். என் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கிறேன். கவலைகள் வரும்போது சிறிது நேரம் அழுவேன். அதன்பிறகு அவை மாயமாக மறைந்து விடும்.

    கேள்வி:- படங்கள் தோல்வியை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்.

    பதில்:- வயிறு நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்கி விடுவேன். தூங்கி எழுந்த பிறகு தோல்வி கொடுத்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு விடுவேன்.



    கேள்வி:- உங்களை பயமுறுத்துகிற விஷயம் ஏதாவது இருக்கிறதா?

    பதில்:- யாராவது தலையணையை வைத்து என் முகத்தை அழுத்தி மூச்சை நிறுத்தி விடுவார்களோ என்று பயமாக இருக்கும்.

    கேள்வி:- இளம்பெண்களுக்கு சொல்லும் அறிவுரை என்ன?

    பதில்:- இளம்பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். உங்கள் கனவுகளை சாதிக்கிற வாழ்க்கையை எதிர்கொள்ள துணிச்சலாக அடியெடுத்து வையுங்கள்.

    கேள்வி:- உங்கள் திருமணத்துக்கு பிறகு நடிப்பீர்களா? வீட்டோடு இருப்பீர்களா?

    பதில்:- இந்த காலத்து பெண்கள் வீட்டையும், வேலையையும் சிறப்பாக கவனித்துக்கொள்கிறார்கள். திறமையான நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள்.

    கேள்வி:- உங்களுக்கு காதலர் இருக்கிறாரா? பொய் சொல்லக்கூடாது.

    பதில்:- சரி பொய் சொல்லவில்லை. காதலர் பற்றி இப்போது எதுவும் பேச விரும்பவில்லை.

    கேள்வி:- கடவுள் உங்கள் முன்னால் வந்தால் என்ன கேட்பீர்கள்?

    பதில்:- எதுவும் கேட்கமாட்டேன். எனக்கு என்ன வேண்டும் என்று கடவுளுக்கு தெரியும்.

    இவ்வாறு திரிஷா கூறினார்.
    சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    89-வது ஆஸ்கார் விருது வழங்கு விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது.


    அதேபோல், சிறந்த அனிமேஷன் விருது ஜூடோபியா படத்துக்கு கிடைத்துள்ளது. தி லையன் கிங் படத்தில் நடித்த சிறுவர் நட்சத்திரம் 
    சுன்னி பவர் ஆஸ்கர் விருதினை தட்டிச் சென்றுள்ளார்.



    மேலும் சில விருதுகள் விவரம்:-

    சிறந்த துணை நடிகர் - மஹேசர்லா அலி

    சிறந்த ஆடை வடிவமைப்பாளர் -  கொலின் அட்வுட் 

    சிறந்த ஆவண குறும்படன் - ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா 

    சிறந்த ஒப்பனை, சிகையலங்கார விருது - சூசைடு ஸ்குவாடு

    சிறந்த சவுண்ட் மிக்ஸிங் விருது - ஹக்ஸா ரிட்ஜ் 

    சிறந்த சவுண்ட் எடிட்டிங் - அரைவல் 

    கவுரவ ஆஸ்கர் விருது - ஜாக்கிசான்

    சிறந்த துணை நடிகை - வியோலா டேவிஸ் தை(பென்சஸ் படம்)

    சிறந்த வெளிநாட்டு மொழி படம் - தி சேல்ஸ்மேன்(ஈரான்)
     
    சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - லா லா லேண்ட்

    ஹாக்ஸா ரிட்ஜ் படம் இதுவரை 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
    “தாய், தந்தையை இழந்து மும்பை வந்தேன்; என்னை இந்திய சினிமா உலகம் தத்து எடுத்தது” என மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் ஷாருக்கான் உருக்கமாக கூறினார்.
    மும்பை, ஜூகுவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், பிரபல சினிமா இயக்குனர் யாஷ் சோப்ரா நினைவு 4-வது தேசிய விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் யாஷ் சோப்ரா நினைவு தேசிய விருது இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், நடிகை ரேகா ஆகியோர் இணைந்து ஷாருக்கானுக்கு வழங்கினர். விழாவில் நடிகர் ஷாருக்கான் பேசியதாவது:- கடந்த 25 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். எனக்கு தெரிந்தது எல்லாம் காலையில் மேக்-அப் போட்டு நடிப்பது மட்டும்தான்.

    நான் மும்பைக்கு வந்தபோது, எனக்கு தாயும் இல்லை. தந்தையும் இல்லை. இருந்த ஒரு சகோதரிக்கோ உடல்நலம் சரியில்லை. அப்போது எனக்கு என்று ஒரு குடும்பமும் இல்லை. ஆனால், இந்திய சினிமா உலகம் இருகரங்களாலும் அரவணைத்து, என்னை தத்து எடுத்துக்கொண்டது.

    ஆனால் இன்றைக்கோ நான் 100 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட குடும்பத்தைப் பெற்றிருக்கிறேன். இதற்காக நான் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    இந்த இரவு என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் என்னைப்பற்றி பேசினார்கள். என்னைப்பற்றிய குறும்படம் காட்டினார்கள். இந்த நேரத்தில் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் வாழ்க்கையில் சந்தித்த எல்லோரும் என்னிடம் காட்டிய அன்பு, அக்கறை, பரிவு, ஊக்கம் என இவை அனைத்தும் இல்லையென்றால், இந்த அளவிற்கு உயர்ந்திருக்க முடியாது.



    பாம் அத்தையைப்பொறுத்தமட்டில் (யாஷ் சோப்ராவின் மனைவி பமீலா) அவர் எனது வளர்ப்புத்தாய் போன்றவர். நான் அவருடன்தான் வளர்ந்தேன். யாஷ் சோப்ராவுடன் வேலை செய்த ஒவ்வொருவரும் அவரது பிள்ளைகளை போன்றவர்கள்தான். அவரது கடைசி படம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் அவருடன் வேலை செய்கிற அதிர்ஷ்டம் எனக்கு வாய்த்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் விருது வழங்குவதில் ஒரு பகுதியாக ஷாருக்கானின் கையில் நடிகை ரேகா தங்கக்காப்பு ஒன்றை அணிவித்து இருந்தார். இது குறித்து ஷாருக்கான் பேசும்போது குறிப்பிடுகையில், “இந்த இரவு என் வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்தது. ஆனால் நடிகை ரேகா எனது கையில் ராக்கி கட்டியதுதான் வருத்தம் அளிக்கிறது” என தமாஷாக கூறினார்.

    இதேபோன்று நடிகை ஜெயப்பிரதா பற்றியும் அவர் குறிப்பிட்டு அனைவரையும் சிரிக்க வைத்தார். அப்போது அவர் நடிகை ஜெயப்பிரதாவை நோக்கி, “என் இளமைக்கால வாழ்வில் நீங்கள் என்னை ஈர்த்திருக்கிறீர்கள். உங்களை நினைத்து வண்ணக்கனவுகள் கண்டிருக்கிறேன். ஆனால் அதை சொல்வதற்கான வாய்ப்புதான் கிடைக்காமல் போய்விட்டது. நீங்கள் ரொம்பவும் அழகாக இருப்பதாக நான் நினைத்தேன். கவர்னர் இங்கே இருப்பதால் இதற்கு மேல் கூறக்கூடாது என கருதுகிறேன்” என கூறி தமாஷ் செய்தார்.
    89-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கவுரவ ஆஸ்கார் விருதினை நடிகர் ஜாக்கிசான் பெற்றுக் கொண்டார்.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 89-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கவுரவ ஆஸ்கார் விருதினை நடிகர் ஜாக்கிசான் பெற்றுக் கொண்டார்.

    நடிகர், இயக்குநர், சண்டைப்பயிற்சி இயக்குநர், தயாரிப்பாளர், தற்காப்பு கலை நிபுணர் என்று பன்முக திறமைக் கொண்ட ஜாக்கிசான், 

    சினிமாவில் 50 ஆண்டுகள் இயங்கி வருகிறார். சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், காமெடி மற்றும் ஆக்‌ஷன் மூலம் உலக அளவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார்.

    இவர் நடித்த போலீஸ் ஸ்டோரி, ரஷ் ஹவர், ரம்பல் இன் த பிராங், பிராஜக்ட் ஏ, ஹார்ட் ஆப் ரேகன், ஹூ ஆம் ஐ உள்ளிட்ட பல படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் குவித்தன. 30–க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டும் செய்துள்ளார்.



    ஹாங்காங்கில் பிறந்த இவருக்கு தற்போது 62 வயது ஆகிறது. தனது 17–வது வயதில் புரூஸ் லீ நடித்த ‘பிஸ்ட் ஆப் பியூரி, என்டர் த டிராகன்’ உள்ளிட்ட படங்களுக்கு சண்டைப்பயிற்சி கலைஞராக பணியாற்றினார். 1970–ஆம் ஆண்டில் இருந்து கதாநாயகனாக நடித்து வருகிறார். 
    நடிகை பாவனா கடத்தலில் சதி நடந்துள்ளதாக கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம் சாட்டி இருக்கிறார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    மலையாளம், தமிழ் உள்ளிட்ட திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் பாவனாவை, மர்ம நபர்கள் சிலர் கடந்த 17-ந்தேதி கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தனர். இந்த கொடூர சம்பவத்தை தங்கள் செல்போனிலும் பதிவு செய்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதில் முக்கிய குற்றவாளியான ‘பல்சர் சுனி’ என்ற சுனில்குமார், அவரது கூட்டாளியான விஜீஷ் ஆகியோரை மார்ச் 5-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஆலுவா கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுப்பிரிவு போலீசார், அவர்கள் மறைந்து இருந்த கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றும் விசாரித்தனர்.

    மேலும் சம்பவத்தை பதிவு செய்த செல்போன்கள், ‘சிம்’ கார்டுகள் உள்ளிட்ட சாட்சியங்களை சேகரிக்கும் பணிகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இந்த கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை சம்பவத்தின் பின்னணியில் ஏதாவது சதி அடங்கியுள்ளதா? என்றும் விசாரிக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.



    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் உள்ளிட்ட மேலும் 4 கைதிகளை அடையாளம் காண ஆலுவா சிறையில் நேற்று முன்தினம் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    இதற்கிடையே பாவனா கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்த போலீசாரை பாராட்டிய முதல்-மந்திரி பினராயி விஜயன், இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்த சதியும் இல்லை என கூறினார்.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ரமேஷ் சென்னிதலா, பாவனா கடத்தலின் பின்னணியில் சதி இருப்பதாக கூறியுள்ளார்.

    கேரளாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துள்ளதை கண்டித்து திரிக்ககரா பகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.டி.தோமஸ் 24 மணி நேர உண்ணாவிரதத்தை நடத்தினார். இதில் கலந்துகொண்ட ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ‘இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்த சதியும் இல்லை என மாநில உள்துறையை கவனிக்கும் முதல்-மந்திரி கூறியுள்ளார். இந்த விசாரணையை முதல்-மந்திரி நாசப்படுத்த முயல்கிறார் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் எதுவும் தேவையில்லை’ என்று தெரிவித்தார்.
    அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது.
    லாஸ்ஏஞ்சல்ஸ்:

    89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது. தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு விருதுகளுக்கான போட்டியில் மூன்லைட், லா லா லேண்டு, ஹேக்சா ட்ஜ், லயன் போன்ற படங்கள் பல பிரிவுகளில் பரிந்துரைப் பட்டியலில் இருக்கின்றன. ஆஸ்கர் விழாவில் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


    சிறந்த ஆஸ்கர் துணை நடிகர் விருது மஹேசர்லா அலிக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை கொலின் அட்வுட் பெற்றுக்கொண்டார். சிறந்த ஒப்பனைக்கான விருது சூசைடு ஸ்வாடு படம் வென்றது.

    சிறந்த ஆவணப் படம் விருதை ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா படம் வென்றது. சிறந்த ஒப்பனை, சிகையலங்கார விருதை சூசைடு ஸ்குவாடு படம் வென்றது.
    "சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.
    "சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.

    புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. தாயார் பர்வதம் அம்மாள்.

    இவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனினும், சொக்கலிங்கம் பிள்ளை தாசில்தாராக வேலை பார்த்ததால், ஊர் ஊராகப் போகவேண்டியிருந்தது.

    இந்நிலையில், கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலிïரில், 1906-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி புதுமைப்பித்தன் பிறந்தார்.

    புதுமைப்பித்தனுக்கு எட்டு வயதானபோது, தாயார் பர்வதம் அம்மாள் காலமானார்.

    அதன்பின், சொக்கலிங்கம் பிள்ளை மறுமணம் செய்து கொண்டார்.

    புதுமைப்பித்தன் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

    சொக்கலிங்கம் பிள்ளை 1918-ல் ஓய்வு பெற்ற பின், சொந்த ஊரான திருநெல்வேலியில் குடியேறினார்.

    புதுமைப்பித்தன், திருநெல்வேலி யோவான் கல்லூரியிலும், பின்னர் இந்துக் கல்லூரியிலும் படித்து 1931-ல் "பி.ஏ'' தேறினார்.

    மகன் அரசாங்க உத்தியோகத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொக்கலிங்கம் பிள்ளை விரும்பினார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    1931 ஜுலை மாதத்தில், புதுமைப்பித்தனுக்கும், திருவனந்தபுரத்தில் மராமத்து இலாகா அதிகாரியாக இருந்த பி.டி.சுப்பிரமணிய பிள்ளையின் மகள் கமலாவுக்கும் திருமணம் நடந்தது.

    புதுமைப்பித்தன் நண்பர்களுடன் இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடுவது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். ஆனால் மகன் வெட்டிப்பொழுது போக்கிக் கொண்டிருப்பதாக சொக்கலிங்கம் பிள்ளை நினைத்தார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன.

    இந்தச் சமயத்தில், கே.சீனிவாசன் "மணிக்கொடி'' என்ற இலக்கியப் பத்திரிகையை சென்னையில் தொடங்கினார். டி.எஸ்.சொக்கலிங்கம், "வ.ரா'' ஆகியோர் அவருக்குத் துணையாக இருந்தனர்.

    "மணிக்கொடி''யில் புதுமைப்பித்தன் கதைகள் எழுதினார். மற்றும் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் "காந்தி'', சங்கு சுப்பிரமணியத்தின் "சுதந்திரச் சங்கு'' ஆகிய பத்திரிகைகளிலும் அவருடைய கதைகள் பிரசுரமாயின.

    புதுமைப்பித்தனின் சிறுகதைகள் புதிய கோணத்தில், தனித்தன்மையுடன் திகழ்வதை "வ.ரா''வும், டி.எஸ்.சொக்கலிங்கமும் பாராட்டி, புதுமைப்பித்தனுக்குக் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார்கள்.

    புதுமைப்பித்தனுக்கு இருந்த இலக்கிய மோகம் அவரைச் சென்னைக்கு இழுத்துச் சென்றது. "மணிக்கொடி''யில் எழுதியதுடன், ராய.சொக்கலிங்கத்தின் "ஊழியன்'' பத்திரிகையில் உதவி ஆசிரியர் பணியையும் கவனித்தார். எனினும், அந்தப்பதவியில் அவர் அதிக காலம்

    நீடிக்கவில்லை."மணிக்கொடி''யில் எழுதி வந்த புதுமைப்பித்தன், பின்னர் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் அழைப்பின் பேரில், "தினமணி'' நாளிதழின் துணை ஆசிரியர் பொறுப்பில் சேர்ந்தார்.

    "தினமணி'' ஆண்டு மலரைத் தயாரிக்கும் பொறுப்பு புதுமைப்பித்தனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு மலர்களைச் சிறந்த இலக்கியப் பெட்டகங்களாகப் புதுமைப்பித்தன் கொண்டு வந்தார். "நாசகாரக்கும்பல்'' போன்ற அவருடைய சிறந்த சிறுகதைகள், "தினமணி'' ஆண்டு மலரில் வெளிவந்தவைதான்.

    1943-ல் டி.எஸ்.சொக்கலிங்கம் "தினமணி''யை விட்டு விலகி, "தினசரி''யைத் தொடங்கினார். புதுமைப்பித்தனும் "தினசரி''யில் சேர்ந்தார். பிறகு சொக்கலிங்கத்துடன் மனத்தாங்கல் ஏற்பட்டு, தினசரியை விட்டு விலகினார்.

    "தினமணி''யில் புதுமைப்பித்தனுடன் பணியாற்றிய சிலர் சினிமாத்துறையில் புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். "இளங்கோவன்'' என்ற புனைப்பெயர் கொண்ட ம.க.தணிகாசலம், சினிமா வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பறந்தார். "மணிக்கொடி'' ஆசிரியராக இருந்த பி.எஸ்.ராமையா சினிமா டைரக்டராக உயர்ந்திருந்தார். "மணிக்கொடி'' துணை ஆசிரியர் கி.ரா. (கி.ராமச்சந்திரன்) ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார்.

    எனவே சினிமா துறையில் நுழைய விரும்பினார், புதுமைப்பித்தன். "காமவல்லி'' என்ற படத்திற்கு வசனம் எழுதினார். அதற்குக் கணிசமான பணமும் கிடைத்தது.

    "அவ்வையார்'' படத்தைத் தயாரிக்க முதன் முதலாக ஜெமினி திட்டமிட்டபோது, கி.ரா.வும், புதுமைப்பித்தனும் சேர்ந்து வசனம் எழுதினார்கள். (பின்னர் கே.பி.சுந்தரம்பாள் நடிக்க, ஜெமினி தயாரித்த அவ்வையார் படத்தில் புதுமைப்பித்தனின் வசனம் இடம் பெறவில்லை)

    1945-ம் ஆண்டைப் பொறுத்தவரை புதுமைப்பித்தனுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. சொந்தத்தில் சினிமாப்படம் எடுக்கத் தீர்மானித்து, தன் தாயார் பெயரில் "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்'' என்ற படக் கம்பெனியையும் தொடங்கினார். குற்றாலக் குறவஞ்சி கதையை "வசந்தவல்லி'' என்ற பெயரில் படமாக்க வேண்டும் என்பது, அவரது திட்டம்.

    இதில், கதாநாயகனாக நாகர்கோவில் மகாதேவன் நடிப்பதாக இருந்தது. மகாதேவனை, சில நண்பர்கள் புதுமைப்பித்தனிடம் அழைத்து வந்தனர். பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்து முடிந்தது.

    "கதாநாயகனுக்கு அட்வான்ஸ் கொடுங்கள்'' என்று ஒருவர் கூற, புதுமைப்பித்தன் தன்னிடம் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அட்வான்சாகக் கொடுத்தார்!

    அதன்பின், சில பத்திரிகைகளில் "வசந்தவல்லி'' பற்றி விளம்பரங்கள் வெளிவந்தன. படம் தயாரிக்கப்படவில்லை.

    அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி, சட்டத்துடன்

    2ஷி ஆண்டு காலம் போராடி, 1947 ஏப்ரலில் விடுதலையானார்.

    அவருடைய மகத்தான வெற்றிப்படங்களான "ஹரிதாஸ்'', "சிவகவி'', "அசோக்குமார்'', "அம்பிகாபதி'' முதலான படங்களுக்கு வசனம் எழுதியவர் இளங்கோவன். அவருடன் மனத்தாங்கல் கொண்டிருந்த பாகவதர், விடுதலைக்குப்பின் சொந்தமாகத் தயாரித்த ''ராஜமுக்தி'' படத்துக்கு வசனம் எழுத புதுமைப்பித்தனை அழைத்தார்.

    படப்பிடிப்பு முழுவதும், புனாவில் அகில இந்தியப் புகழ் பெற்ற பிரபாத் ஸ்டூடியோவில் நடந்தது. புனாவுக்குச் சென்று, அங்கேயே தங்கி வசனம் எழுதினார், புதுமைப்பித்தன்.

    வசனம் எழுதும் பணி முடிவடையும் தருணத்தில், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

    காசநோய் காரணமாக, அவர் உடல் நிலை வரவர மோசம் அடைந்தது. 1948 மே மாதம் முதல் வாரத்தில் மனைவி கமலா தங்கியிருந்த திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்தார். நடக்க முடியாமல் கம்பு ஊன்றி நடக்க வேண்டிய அளவுக்கு, அவர் உடல்நிலை மோசமடைந்திருந்தது.

    "ராஜமுக்தி''க்கு வசனம் எழுதியதில் ஓரளவு பணம் கிடைத்திருந்த போதிலும், முழு நேர எழுத்தாளராக வாழ்ந்த காரணத்தாலும், தந்தையுடன் சுமுக உறவு இல்லாததாலும், புதுமைப்பித்தன் இறுதிக்காலத்தில் வறுமையுடன் போராட வேண்டியிருந்தது.

    மனைவி கமலாவையும், ஒரே மகள் தினகரியையும், தமிழ்  இலக்கிய உலகையும் தவிக்க விட்டு, 30-6-1948 அன்று புதுமைப்பித்தன் காலமானார்.

    புதுமைப்பித்தன் வரலாற்றில் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சி:

    தமிழ் இலக்கியத்துக்கு இணையற்ற சேவை செய்த புதுமைப்பித்தன் வறுமையுடன் போராடி தமது 42-வது வயதில் காலமானார். இதற்கு 20 ஆண்டுகளுக்குப்பின், தமிழக அரசு லாட்டரியில் அவர் மனைவி கமலாவுக்கு ரூ.2 லட்சம் பரிசு கிடைத்தது.

    அந்த சமயத்தில், புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரிக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. "மகள் திருமணத்துக்கு, தந்தை கொடுத்த சீதனமாக இந்த பணத்தைக் கருதுகிறேன்'' என்றார், கமலா விருதாசலம்.

    தினகரி திருமணம் சிறப்பாக நடந்தது. கணவர் பெயர் சொக்கலிங்கம். இவர் என்ஜினீயர்.

    புதுமைப்பித்தன் நூல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.

    புதுமைப்பித்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
    ஓடும் காருக்குள் நடிகை பாவனாவை பாலியல் தொல்லை கொடுத்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.நேற்று அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 4 குற்றவாளிகளை பாவனா அடையாளம் காட்டினார்.
    பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி திருச் சூரில் நடந்த படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பும்போது கடத்தப்பட்டார்.

    ஓடும் காருக்குள் பாவனாவை அந்த கும்பல் பாலியல் தொல்லை கொடுத்து அதனை செல்போனிலும் பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக பாவனா கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின், பிரபல ரவுடி மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகள் சலீம், பிரதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    2 நாட்களுக்கு முன்பு கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட சுனில்குமாரும் அவரது நண்பர் விஜேசும் கைதானார்கள்.

    இதற்கிடையே இந்த வழக்கில் முதலில் கைதான மார்ட்டின், மணிகண்டன், சலீம், பிரதீஷ் ஆகியோரை பாவனா அடையாளம் காட்ட போலீசார் ஏற்பாடு செய்தனர். காக்கநாடு ஜெயிலில் நேற்று குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.


    25 பேருடன் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் மார்ட்டின், மணிகண்டன், சலீம், பிரதீஷ் ஆகியோரை பாவனா அடையாளம் காட்டினார். இதனை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

    கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சுனில்குமார், விஜேஷ் இருவரையும் 10 நாள் போலீஸ் காவலில் எடுக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதையடுத்து இருவரும் நேற்று போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். மார்ச் 8-ந்தேதிவரை போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம்.

    எனவே போலீசார் நேற்றே சுனில்குமார், விஜேஷ் இருவரிடமும் விசாரணையை தொடங்கினர்.

    இதில் சம்பவம் நடந்த அன்று சுனில்குமார், கொச்சியை அடுத்த பொன்னுருட்டியில் உள்ள நண்பர் வீட்டிற்கு நள்ளிரவில் சென்றது தெரியவந்தது. நண்பர் வீட்டின் மதில் சுவரை ஏறி குதித்து சுனில் வீட்டிற்குள் சென்றுள்ளார். இது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு அதிரடியாக சென்று சோதனை செய்தனர். அங்கு 3 செல்போன்கள், 3 சிம்கார்டுகள், ஒரு ஐபேடு, ஒரு மெமரிகார்டு, ஒரு பென்டிரைவ் ஆகியவை கிடைத்தது. அதனை போலீசார் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

    சுனில்குமாரும், விஜேசும் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து பதுங்கி இருந்த இடங்களுக்கும் அவர்களை அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, இன்று அதிகாலையிலேயே சுனில்குமாரும், விஜேசும் கோவை மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் பதுங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

    மேலும் அவர்கள் தங்கி இருந்த போது விட்டுச்சென்ற தடயங்களையும் போலீசார் சேகரித்தனர். குறிப்பாக சுனில்குமார் தொலைத்து விட்டதாக கூறிய செல்போனை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.இதற்காக சுனில்குமாரின் காதலியை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குற்றவாளிகள் கைதானதை தொடர்ந்து நடிகை பாவனா, இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக அவரது தோழிகள் தெரிவித்தனர். மேலும் அவர், நடித்து முடிக்க வேண்டிய படப்பிடிப்புகளில் தொடர்ந்து நடிக்க வேண்டு மென்று பாவனாவின் நண்பர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அவர், நேற்று நடிகர் பிரிதிவிராஜின் படப்பிடிப்பில் பங்கேற்றார். அவருக்கு சக நடிகர்கள், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    விசாலமான நடிகரும் பின்னணி பாடகி நடிகை ஒருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    விசாலமான நடிகரும், உயரமான பாடகி நடிகையும் தற்போது ஒரு படத்தில் சேர்ந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கையில், திடீரென இரண்டு சேர்ந்து கோயிலுக்கு சென்று மாலையும் கழுத்துமாக நின்று எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

    இதையடுத்து, இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் பரவியது. இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது, இருவரும் கோயிலில் தரிசிக்கவே சென்றதாகவும், அப்போது கோவில் நிர்வாகிகள் இவர்களுக்கு மாலை அணிவித்தாகவும் கூறுகிறார்கள்.

    நடிகை ஏற்கெனவே இசையமைப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிரபலமானவர். அதேபோல், நடிகரும் லட்சுமிகரமான நடிகையுடன் சேர்ந்து வாழ்வதாக கிசுகிசுக்கப்பட்டவர். இருவரும் திருமணம் செய்துகொண்டதாக வெளிவந்த செய்தியை அறிந்ததும் கோலிவுட் வட்டாரமே கொஞ்சம் அதிர்ந்துதான் போனதாம்.
    ×