என் மலர்
ஓடும் காருக்குள் பாவனாவை அந்த கும்பல் பாலியல் தொல்லை கொடுத்து அதனை செல்போனிலும் பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக பாவனா கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின், பிரபல ரவுடி மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகள் சலீம், பிரதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.
2 நாட்களுக்கு முன்பு கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட சுனில்குமாரும் அவரது நண்பர் விஜேசும் கைதானார்கள்.
இதற்கிடையே இந்த வழக்கில் முதலில் கைதான மார்ட்டின், மணிகண்டன், சலீம், பிரதீஷ் ஆகியோரை பாவனா அடையாளம் காட்ட போலீசார் ஏற்பாடு செய்தனர். காக்கநாடு ஜெயிலில் நேற்று குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

25 பேருடன் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் மார்ட்டின், மணிகண்டன், சலீம், பிரதீஷ் ஆகியோரை பாவனா அடையாளம் காட்டினார். இதனை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.
கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சுனில்குமார், விஜேஷ் இருவரையும் 10 நாள் போலீஸ் காவலில் எடுக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதையடுத்து இருவரும் நேற்று போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். மார்ச் 8-ந்தேதிவரை போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம்.
எனவே போலீசார் நேற்றே சுனில்குமார், விஜேஷ் இருவரிடமும் விசாரணையை தொடங்கினர்.
இதில் சம்பவம் நடந்த அன்று சுனில்குமார், கொச்சியை அடுத்த பொன்னுருட்டியில் உள்ள நண்பர் வீட்டிற்கு நள்ளிரவில் சென்றது தெரியவந்தது. நண்பர் வீட்டின் மதில் சுவரை ஏறி குதித்து சுனில் வீட்டிற்குள் சென்றுள்ளார். இது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு அதிரடியாக சென்று சோதனை செய்தனர். அங்கு 3 செல்போன்கள், 3 சிம்கார்டுகள், ஒரு ஐபேடு, ஒரு மெமரிகார்டு, ஒரு பென்டிரைவ் ஆகியவை கிடைத்தது. அதனை போலீசார் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
சுனில்குமாரும், விஜேசும் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து பதுங்கி இருந்த இடங்களுக்கும் அவர்களை அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, இன்று அதிகாலையிலேயே சுனில்குமாரும், விஜேசும் கோவை மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் பதுங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் அவர்கள் தங்கி இருந்த போது விட்டுச்சென்ற தடயங்களையும் போலீசார் சேகரித்தனர். குறிப்பாக சுனில்குமார் தொலைத்து விட்டதாக கூறிய செல்போனை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.இதற்காக சுனில்குமாரின் காதலியை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குற்றவாளிகள் கைதானதை தொடர்ந்து நடிகை பாவனா, இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக அவரது தோழிகள் தெரிவித்தனர். மேலும் அவர், நடித்து முடிக்க வேண்டிய படப்பிடிப்புகளில் தொடர்ந்து நடிக்க வேண்டு மென்று பாவனாவின் நண்பர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அவர், நேற்று நடிகர் பிரிதிவிராஜின் படப்பிடிப்பில் பங்கேற்றார். அவருக்கு சக நடிகர்கள், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.
விசாலமான நடிகரும், உயரமான பாடகி நடிகையும் தற்போது ஒரு படத்தில் சேர்ந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கையில், திடீரென இரண்டு சேர்ந்து கோயிலுக்கு சென்று மாலையும் கழுத்துமாக நின்று எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இதையடுத்து, இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் பரவியது. இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது, இருவரும் கோயிலில் தரிசிக்கவே சென்றதாகவும், அப்போது கோவில் நிர்வாகிகள் இவர்களுக்கு மாலை அணிவித்தாகவும் கூறுகிறார்கள்.
நடிகை ஏற்கெனவே இசையமைப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிரபலமானவர். அதேபோல், நடிகரும் லட்சுமிகரமான நடிகையுடன் சேர்ந்து வாழ்வதாக கிசுகிசுக்கப்பட்டவர். இருவரும் திருமணம் செய்துகொண்டதாக வெளிவந்த செய்தியை அறிந்ததும் கோலிவுட் வட்டாரமே கொஞ்சம் அதிர்ந்துதான் போனதாம்.
ரொம்பவும் பழமையான இந்த திரையரங்கம் இப்போது புதுப்பிக்கவுள்ளனர். இந்த திரையரங்கில் சமீபத்தில் வெளியான சிங்கம்-3 படத்தோடு திரையரங்கை மூடிவிட்டு திரையரங்கை புதுப்பிக்க உள்ளார்களாம். புத்தம் புதிதாக இருக்கைகள், உள்புற அலங்காரம், 4K Barco புரொஜெக்டர், புதிய திரை என அனைத்தையும் மாற்றவிருக்கிறார்களாம். அதோடு புதிய உணவகம் ஒன்றையும் நிறுவ உள்ளார்களாம்.

திரையரங்கம் முழுவதுமாக தயாராக 1 மாதத்திற்கும் மேலாக ஆகக்கூடும் என்பதால், இந்த தியேட்டரை அஜித்தின் ‘விவேகம்’ படம் ரிலீசின் போது திரையரங்கை திறக்க இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்திருக்கிறது.
இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடகத்துறையில் இருந்து கே.பாக்யராஜ் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி, தனது இயல்பான நடிபினால் ரசிகர்களை கவர்ந்து தனி முத்திரை பதித்தவர் சிட்டிபாபு என்ற தவக்களை.

அவர் எதிர்பாராதவிதமாக காலமானதை அறிந்து மிகவும் வேதனையடைகிறோம். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும், நடிகர் சமூகத்துக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்ப்பத்தாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி பெற பிராத்திக்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
அந்த வரிசையில், அரவிந்த்சாமி அடுத்ததாக நடிக்கவிருக்கவிருக்கும் ‘நரகாசுரன்’ என்ற படத்தை கவுதம் மேனன் தயாரிப்பதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் தன்னுடைய பக்கம் ஈர்த்த இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவிருக்கிறார்.

அரவிந்த்சாமி தற்போது ‘சதுரங்க வேட்டை-2’, ‘வணங்காமுடி’, மலையாளத்தில் வெற்றிகண்ட ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ பட ரீமேக் ஆகிய படங்கள் கைவசம் உள்ளது. இப்படங்களின் ஊடே ‘நரகாசுரன்’ படத்திலும் நடித்து முடிக்கவுள்ளார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் கூறும்போது, திருமணத்திற்கு பிறகு தனது இசை பயணத்தை தொடரவேண்டாம் என்று சந்தோஷ் கூறினார். பள்ளி ஒன்றில் இசை ஆசிரியராக பணியாற்றுமாறும் கூறுகிறார். முதலில் எனக்கு எல்லாவிதத்திலும் ஆதரவாக இருப்பதாக சொன்ன சந்தோஷ் தற்போது எனது லட்சியத்துக்கே தடை போடுகிறார்.

நிச்சயதார்த்தத்தின்போது சந்தோஷ் என்னுடைய வீட்டில் என்னுடன் வாழ்வதாக சொன்னார். ஆனால், இப்போதோ அவருடைய உறவினர்கள் வீட்டில்தான் வாழவேண்டும் என்று கூறுகிறார். ஆகையால், இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. திருச்சூரில் எங்களுடைய திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், தற்போது இந்த திருமணம் நிறுத்தப்பட்டு விட்டது. இது முற்றிலும் நான் எடுத்த முடிவு. என்னை யாரும் எதற்காகவும் கட்டாயப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
விஜயலட்சுமியின் இந்த முடிவு திரையுலகிலும், சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது காந்த குரலால் அனைவர் மனதையும் ஆட்கொண்ட வைக்கம் விஜயலட்சுமி கண்பார்வை அற்றவராக இருந்தாலும், சாதிப்பதற்கு ஊனம் தடையில்லை என்பதை நிரூபித்து காட்டியவர்.

இத்தனை திறமையும், கலை ஆர்வமும் கொண்ட விஜயலட்சுமிக்கு தக்க துணை கிடைத்துவிட்டதாய் அனைவரும் மகிழ்ந்திருந்த இந்த தருணத்தில் அவருடைய அந்த அறிவிப்பு கண்டிப்பாக அனைவருக்கும் சோகத்தைத்தான் கொடுக்கும்.
1983 ஆம் ஆண்டு ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.பாக்கியராஜின் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ’முந்தானை முடிச்சு’ படத்தைப் பார்த்திருப்பவர்கள் அதில் கதாநாயகி நடித்திருந்த ஊர்வசியையும் அவருடன் இணைந்து நடித்திருந்த மூன்று பொடியன்களையும் நிச்சயம் மறந்திருக்கமாட்டார்கள். இப்பொடியன்களை விலக்கி வைத்துவிட்டு அப்படத்தை நிச்சயமாக எவராலும் ரசித்திருக்கமுடியாது. அவ்வாறு ஒரு வெற்றிக் கூட்டணியாக படம் முழுக்க கலாய்த்தவர்கள் இச்சிறுவர்கள்.

அவர்களில் குறிப்பிடத்தக்கவர்தான் தவக்களை என்ற சிறுவன். படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘தவக்களை’. அந்தக் கதாபாத்திரத்தின் பெயரே பின்னாளில் அவருக்கு நிலைத்துவிட்டது. அத்துடன் ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேல் ஓஹோவென படங்களில் கொடிகட்டி பறந்தவர் இந்த தவக்களை. பார்ப்பதற்குத்தான் பொடியன். ஆனால் 1983-லியே இச்சிறுவனின் வயது 13.

இவரது தாய் மொழி தெலுங்கு. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணிக் கலைஞர்களுடன் நடித்துள்ளான். இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், நவாபேட்டை. இவருக்கு நன்றாக நடனமாட வரும். நடிகை அனுராதாவின் தந்தை கிருஷ்ணகுமாரிடம் நடனம் கற்றிருக்கிறார்.

தாயின் பெயர் சுப்புலட்சுமி, தந்தை பெயர் விஜயகுமார். இவரும் ஒரு நடிகர். ‘முந்தானை முடிச்சு’ படத்தில் நடிக்க வருவதற்கு முன்னரே தமிழ், தெலுங்கு மொழிகளில் குரூப் டான்சில் சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். ‘பயணங்கள் முடிவதில்லை’ தமிழில் சிட்டிபாபுவை ஓரளவிற்கு அடையாளம் காண வைத்த படம்.
‘பொய் சாட்சி’ படத்தின் துணை நடிகர் முகவராக இவரது தந்தை இருந்த காரணத்தால் ஒருநாள் அருணாசலம் ஸ்டுடியோவிற்கு படப்பிடிப்பின்போது தந்தையுடன் சென்றிருக்கிறார். அப்போது நடிகர் குள்ள மணிதான் இவனை நடிகர் பாக்கியராஜிடம் சென்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இயக்குநர் கே.பாக்கியராஜ் சென்னையில் தான் எப்போதோ பார்த்த இச்சிறுவனை ஞாபகத்திற்குக் கொண்டு வந்து ‘முந்தானை முடிச்சு’ படத்திற்குத் தேர்வு செய்து, ஏவி.எம்.மிற்கு அழைத்துச் சென்றார். கோபிச்செட்டிப் பாளையத்திற்கும் அழைத்துச் சென்றார். படம் வெளிவந்த பின் பையன் ஏகத்துக்கும் பிஸியாகிவிட்டான். ‘முந்தானை முடிச்சு’ ஆரம்ப, அறிமுக, பாராட்டு விழாக்களில் பங்கேற்றான். ஒரே வருடத்தில் பல மேடைகளைப் பார்த்து பெரிய ஆளாகிவிட்டான்.

தமிழ்ப் படங்களில் நடிக்கத் துவங்கும் முன்பே இவர் ‘நேனு மா அவிடே’ [1981] போன்ற சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். மேலும், தமிழில் ‘ஆண் பாவம்’, ‘ஓசை’, ‘என் இரத்தத்தின் இரத்தமே’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தங்கமடி தங்கம்’, ‘நாலு பேருக்கு நன்றி‘, ‘பொண்ணு பிடிச்சிருக்கு‘, ‘நேரம் நல்ல நேரம்‘, ‘ஆத்தோர ஆத்தா‘, ‘மணந்தால் மஹாதேவன்‘ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த தவக்களையின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.
இவரது கருத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. இந்நிலையில், தற்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் கூறும்போது, பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும். எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வெற்றியும், இயற்கையை அழிப்பது மற்றும் ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதில் இருந்தே தொடங்குகிறது. தமிழக மக்களே விழிப்புணர்வுடன் இருங்கள்.

விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் மாணவர்களுக்கு எனது பாராட்டுக்கள். நீங்கள் அமைதியை கடைப்பிடியுங்கள். அதேநேரத்தில் விவசாயிகளுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் குரல் எழுப்புங்கள். உங்களைவிட பெரியவர்கள் உங்களை சமமாக மதிப்பதை உணருங்கள். ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு பாராட்டுக்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது ரஜினி ரசிகர்களில் ஒருவர் ரஜினியின் சிலை ஒன்றையும் அவர்களுக்கு பரிசாக அளிக்க கொண்டு வந்திருந்தார். ‘படையப்பா’ ரஜினி ஸ்டைலில் அந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. ரஜினியின் பிறந்தநாள், அவரது மண நாளை ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஏமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்நிலையில், முத்தையா தனது நான்காவது படமாக மீண்டும் சசிகுமாரை வைத்து இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘கொடி வீரன்’ என்ற தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற மார்ச் 25-ந் தேதி சிவகங்கையில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது.

‘மருது’ படத்திற்கு பிறகு முத்தையா, சூர்யாவை வைத்து அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. அப்படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அப்படம் தொடங்காமலேயே போய்விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
"மனோரஞ்சிதம்'' திரைப்படம் வெளிவராமல் போனதால் மணிசேகரன் மனம் வருந்தினார் என்றாலும், சினிமா மோகம் அவரை
விடவில்லை.
கீதையை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய "யாகசாலை'' என்ற நாவலை சொந்தமாக படமாக்க எண்ணினார். 1,200 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல் இது.
"இலக்கிய உலகில் பேரும் புகழுமாக இருக்கிறீர்கள். சினிமா நமக்குத் தேவையா?'' என்று மனைவி சொன்னதை அவர் கேட்கவில்லை.
வேகமாக வசனங்களை எழுதி முடித்தார்.
இவருடைய நாவல்களில் மனதைப் பறிகொடுத்து, இவருக்கு நண்பரானவர் ஜெமினிகணேசன். அவருக்கு படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுக்கத் தீர்மானித்தார்.
இதன்பின் நடந்தது பற்றி மணிசேகரன் கூறியதாவது:-
"யாகசாலை நாவலைப் படித்துப் பாராட்டியவர், எம்.ஜி.ஆர். நான் அந்த நாவலைப் படமாக்கப்போகிறேன் என்பதை அறிந்து `இது புரட்சிகரமான நாவல். படமாக வந்தால், நாவலின் ஜீவன் கெட்டுப்போகும். படமாக்கும் முயற்சியைக் கைவிடுங்கள் என்று கூறினார்.
நான் கேட்கவில்லை. அதாவது, என் விதி, அவர் அறிவுரையைக் கேட்க மறுத்து விட்டது!
படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தன.
இந்தப் படத்தின் கதாநாயகி, நல்ல குடும்பத்தில் பிறந்து, விதி வசத்தால் கற்பை இழக்க, பிறகு அதுவே தொழிலாய் போய்விட, கடைசியில் நோய்வாய்படுகிறாள்.
இந்தக் காலக்கட்டத்தில் "சிவப்பு ரோஜாக்கள்'' படத்தில் அறிமுகமாகியிருந்த வடிவுக்கரசிக்கு, கதாநாயகி வேடம் கொடுத்தேன்.
படத்தில் இரு கதாநாயகர்கள். ஒருவர், கீதையில் வரும் கண்ணன் பாத்திரத்துக்கு ஒப்பானவர். அந்தக் கண்ணன் தேர் ஓட்டினான். இந்த கண்ணன் குதிரை ஓட்டுபவன். இந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர் அமையவில்லை. பலபேரை பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை.
இன்று திரை உலகிலும், அரசியலிலும் விஸ்வரூபம் எடுத்துள்ள விஜயகாந்த், அப்போதுதான் திரைப்பட உலகுக்கு வந்திருந்தார். அவரை என்னுடைய `கண்ணன்' கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்த நேரத்தில், விதி விளையாடியது.
என் கையில் போதிய பணம் இல்லை. படப்பிடிப்புக்கு செல்ல, மேலும் ரூ.30 ஆயிரம் தேவைப்பட்டது. அப்போது ஒரு புதுமுக நடிகர் என்னிடம் வந்தார். நல்ல கதாபாத்திரம் கொடுத்தால் ரூ.30 ஆயிரம் `பைனான்ஸ்' செய்வதாகக் கூறினார். இதனால் நான் விஜயகாந்தை இழக்க நேரிட்டது. அன்று நான் அவரை பயன்படுத்தி இருந்தால், ஒரு சரித்திரத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தவனாக இருந்திருப்பேன். விதியின் சதியால், அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போயிற்று.
படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் வெளிப்புறக் காட்சிகளை எடுக்கத் தீர்மானித்தேன். மதராந்தகத்தின் அருகேயுள்ள கோட்டைக்காடு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஒய்.ஜி.மகேந்திரன், கே.நட்ராஜ், டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தனர்.
மேற்கொண்டு, ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டபோது, மீண்டும் பணமுடை ஏற்பட்டது. அப்போது, இப்ராகிம் என்ற தயாரிப்பாளர் என்னை நாடி வந்தார். என்னுடைய "அகிலா'' என்ற நாவல், நடிகை சுஜாதாவுக்கு மிகவும் பிடித்தமானதாகும். அவர் சொல்லி, அக்கதையை என்னுடைய இயக்கத்தில் படமாக்க விரும்பி, இப்ராகிம் வந்திருந்தார்.
வெளிப்படங்களுக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதை அவரிடம் தெரிவித்து, "வேண்டுமானால் கதையை வாங்கிக் கொண்டு, நீங்களே தயாரியுங்கள். கூடுதலோ, குறைவோ, ஒரு தொகையை தவணை முறையில் கொடுக்காமல் மொத்தமாக கொடுத்துவிடவேண்டும்'' என்று தெரிவித்தேன்.
அதன்படி அவர்கள் ஒரே `செக்' கொடுத்தார்கள். அந்தத் தொகை, "யாகசாலை'' படத்தை தொடர்ந்து உருவாக்க உதவியது.
யாகசாலை தயாராகிக் கொண்டிருந்தபோதே, "அகிலா'' கதை "மீண்டும் பல்லவி'' என்ற பெயரில் படமாக வெளிவந்தது. `கதை: கோவி.மணிசேகரன்' என்று டைட்டிலில் போட்டார்கள்.
"யாகசாலை'' 95 சதவீதம் முடிந்து விட்டது. ஜெமினிகணேசன் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் பாக்கி. இந்த நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவருடைய சம்மதத்தைப் பெற்று அந்தப் பாத்திரத்தில் பூரணம் விஸ்வநாதனை நடிக்க வைத்தேன். அவரும் நன்றாக நடித்தார்.
படம் ரிலீஸ் தேதியை நெருங்கியபோது, ஒரு கடன்காரர் வந்து மென்னியைப் பிடித்தார். படத்தை, "அவுட்ரைட்'' முறையில் நான் விற்று விட்டதால், படம் வெளியான பின்னர் பணம் வராது என்று அவர் நினைத்து விட்டார் போலும்!
வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த நிலத்தை விற்று, கடனை அடைத்தேன்.
"யாகசாலை'' ரிலீஸ் ஆகியது. நான்கே நாளில் ரிசல்ட் தெரிந்து விட்டது. படம் "அவுட்!'' சென்னை எமரால்டு தியேட்டரில் மட்டும் நான்கு வாரம் ஓடியது.
அன்றே சினிமாவுக்கு தலைமுழுகத் தீர்மானித்தேன். ஒரு சனிக்கிழமையன்று, எண்ணை வாங்கி வரச்செய்து, தலைமுழுகினேன்!
என்னிடம் புகழ்வாய்ந்த - உறுதியான பேனா இருந்ததால், என் வாழ்க்கை தப்பியது. இல்லையென்றால், `நடுத்தெரு நாராயணன்' ஆகியிருப்பேன். நான் வணங்கும் சக்தி என்னைக் காப்பாற்றினாள்.
தொடர்ந்து இலக்கியப்பணிகளில் ஈடுபட்டேன்.
சென்னை தொலைக்காட்சிக்கு, புதுமுகங்களை வைத்து நான் தயாரித்த "ஊஞ்சல் ஊர்வலம்'' என்ற தொடர், பெரிய வெற்றி பெற்றது.
அதன் பிறகு திரிசூலி, அக்னிப் பரீட்சை முதலான தொடர்களும் வெற்றி பெற்றன.
பெரிய திரையில் வெற்றி பெறாமல் போன நான், சின்னத்திரையில் வெற்றி கண்டேன்.
சினிமாவில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் கவனம் செலுத்தியதால், 3,571 பாடல்கள் கொண்ட "கோவி.ராமாயண''த்தை என்னால் எழுத முடிந்தது.
நான் விதி பற்றி பல முறை குறிப்பிட்டேன். நமக்கு நல்ல வாய்ப்பு வரும்போது, விதி குறுக்கிட்டு கெடுத்து விடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்வேன்.
இந்நாளைய இணையற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1973-ல் சினிமா உலகில் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்த சிவாஜிராவ். நான் பாலசந்தரிடம் பயிற்சி பெற்றுவிட்டு, சினிமா தயாரிக்கலாம் என்று இருந்த நேரம்.
ரஜினியுடன் நடிப்பு பயின்ற கோபால் என்ற நண்பர், ரஜினிக்கு வாய்ப்பு கேட்டு வந்தார். படம் தொடங்கும்போது நிச்சயம் அவர் இடம் பெறுவார் என்று கூறினேன்.
ரஜினி என் வீட்டுக்கு வருவார். சிகரெட் வித்தைகளை பிள்ளைகளிடம் காட்டி மகிழ்விப்பார்.
இதற்கிடையே ரஜினி, "அபூர்வராகங்கள்'' படத்தில் அறிமுகம் ஆகிவிட்டார். ஏராளமான படங்களுக்கு ஒப்பந்தம் ஆனார்.
"தென்னங்கீற்று'' படம் ஆரம்பம் ஆனதும், ரஜினியிடம் பேசினேன். "குரு! இருபது நாட்களுக்கு என்னை விட்டு விடுங்கள். அப்புறம் ஒரு வாரம் பெங்களூர் வந்து உங்கள் மனதைக் குளிரச் செய்கிறேன்'' என்றார்.
ஆனால், படத் தயாரிப்பாளரோ இதற்கு சம்மதிக்கவில்லை. ஏற்கனவே, மற்ற நடிகர் - நடிகைகளிடம் பெற்ற `கால்ஷீட்'படி உடனே படத்தைத் தொடங்க வேண்டும் என்றார். இதனால் என் படத்தில் ரஜினி இடம் பெறவில்லை. இதை விதி என்று சொல்லாமல், வேறு எப்படி சொல்வது?
சினிமா உலகில் நுழைந்து விடவேண்டும் என்ற ஆசை கொண்ட இளைஞர்களும், இளம் நங்கையர்களும் ஏராளம். அவர்களுக்கு ஒன்று
சொல்வேன்:`சினிமா என்பது பல ரசவாத வித்தைக் தெரிந்த ஒரு அழகான மாயமோகினி. அந்த மோகினியிடம் சென்றால், மீள்வது அரிது. அந்த மோகினியின் வித்தையில் பாதியேனும் தெரிந்தவர்கள் தப்பித்து திரும்பி வரலாம்; அல்லது மோகினியை அடிமைப்படுத்தி, அவளைக் காதலிக்கச் செய்யலாம். அந்த வித்தை தெரியாதவர்கள் நுழைந்து விட்டால், அந்த மோகினி நம் ரத்தத்தை உறிஞ்சி, சக்கையாகத்தான்
துப்புவாள்!''இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.
மணிசேகரன் - சரசுவதி தம்பதிகளுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்ற மூன்று மகன்கள். பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்று ஐந்து மகள்கள்.
மூத்த மகன் அம்பிகாபதி, இளம் வயதில் காலமாகிவிட்டார். மற்ற 7 பேரும் படித்து, பட்டம் பெற்றவர்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
அவர்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு, பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டினையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில்தான் பாவனா கடத்தலில் சுனில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

குற்றவாளிகள் கைதான தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து பாவனா மெல்ல மெல்ல தேறி வந்தார். இந்நிலையில் இன்று நடந்த படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.
பிரித்விராஜ், நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் `ஆடம்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படத்தின் கதாநாயகியான பாவனா அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு படப்பிடிப்புக்கு வந்தார். பாவனா பாலியல் தொல்லை குறித்து ஆரம்பம் முதலே தனது கண்டனங்களை தெரிவித்து வந்த நடிகர் பிரித்விராஜ், இன்று துவங்கிய புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவின் தைரியத்தை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பிரித்விராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது,
எனது வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு பிரச்சனைகளின் போது உறுதுணையாக இருந்தது எனது தைரியம் தான். அந்த தைரியத்தை நான் எனது அம்மா மற்றும் மனைவிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். தண்டவாளத்தில் தடம் புரளும் ரயில் போல சரிந்த எனது வாழ்க்கையை நல்ல நிலைக்கு கொண்டு வர எனது தாயே எனக்கு துணையாக இருந்தார். அதே போல் சுமார் 40 மணிநேர பிரசவ வலியுடன் அறுவைசிகிச்சை செய்து குழந்தை பெற்றெடுத்த எனது மனைவியின் தைரியத்தை ஒப்பிடுகையில், எனது தைரியம் வெற்று என்றும் குறிப்பட்டார்.

அதேபோல் எனது தோழி பாவனா இன்று படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவரது தைரியத்திற்கு பாராட்டுக்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மற்றொரு தைரியமான பெண் பாவனா என்றார்.
ஆரம்ப காலகட்டத்தில் பெண்கள் மீதான வெறுப்பை போதிக்கும் ஒருசில படங்களில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். அந்த வகையான படங்களில் நடித்ததற்காக என்னை மன்னியுங்கள். பெண்களின் சுயமரியாதைக்கு இழுக்கு வரும் படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.
எனவே இங்கு கூடியிருக்கும் அனைவரும் ஒருமுறை எழுந்து பாவனாவின் துணிச்சலுக்கு கைதட்டி பாராட்டுக்களை தெரிவியுங்கள். அவரது துணிச்சல் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலையை சந்திப்பவர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்கட்டும். அவர் மிகவும் துணிச்சல்காரி என்பதை நிரூத்துள்ளார். என் அன்புத்தோழியே உனது வாழ்நாள் ரசிகன் நான்.
இவ்வாறு பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.








