என் மலர்
நடிகை ரம்யா நம்பீசன் வீட்டில் தஞ்சமடைந்துள்ள பாவனா, குற்றவாளிகள் கைதானதால் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வருவதாக ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார். அவரது முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனா, இச்சம்பவம் பற்றி டைரக்டர் லாலிடம் தகவல் தெரிவித்தார்.
அவர்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு, பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டினையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில்தான் பாவனா கடத்தலில் சுனில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

குற்றவாளிகள் கைதான தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து பாவனா மெல்ல மெல்ல தேறி வந்தார். இந்நிலையில் இன்று நடந்த படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.
பிரித்விராஜ், நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் `ஆடம்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படத்தின் கதாநாயகியான பாவனா அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு படப்பிடிப்புக்கு வந்தார். பாவனா பாலியல் தொல்லை குறித்து ஆரம்பம் முதலே தனது கண்டனங்களை தெரிவித்து வந்த நடிகர் பிரித்விராஜ், இன்று துவங்கிய புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவின் தைரியத்தை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பிரித்விராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது,
எனது வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு பிரச்சனைகளின் போது உறுதுணையாக இருந்தது எனது தைரியம் தான். அந்த தைரியத்தை நான் எனது அம்மா மற்றும் மனைவிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். தண்டவாளத்தில் தடம் புரளும் ரயில் போல சரிந்த எனது வாழ்க்கையை நல்ல நிலைக்கு கொண்டு வர எனது தாயே எனக்கு துணையாக இருந்தார். அதே போல் சுமார் 40 மணிநேர பிரசவ வலியுடன் அறுவைசிகிச்சை செய்து குழந்தை பெற்றெடுத்த எனது மனைவியின் தைரியத்தை ஒப்பிடுகையில், எனது தைரியம் வெற்று என்றும் குறிப்பட்டார்.

அதேபோல் எனது தோழி பாவனா இன்று படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவரது தைரியத்திற்கு பாராட்டுக்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மற்றொரு தைரியமான பெண் பாவனா என்றார்.
ஆரம்ப காலகட்டத்தில் பெண்கள் மீதான வெறுப்பை போதிக்கும் ஒருசில படங்களில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். அந்த வகையான படங்களில் நடித்ததற்காக என்னை மன்னியுங்கள். பெண்களின் சுயமரியாதைக்கு இழுக்கு வரும் படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.
எனவே இங்கு கூடியிருக்கும் அனைவரும் ஒருமுறை எழுந்து பாவனாவின் துணிச்சலுக்கு கைதட்டி பாராட்டுக்களை தெரிவியுங்கள். அவரது துணிச்சல் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலையை சந்திப்பவர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்கட்டும். அவர் மிகவும் துணிச்சல்காரி என்பதை நிரூத்துள்ளார். என் அன்புத்தோழியே உனது வாழ்நாள் ரசிகன் நான்.
இவ்வாறு பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி பேசிய `கெட்ட பையன் சார் இவன்' என்ற வசனத்தை நட்டி நடிக்கும் புதிய படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
பிரபல பாடல்களின் பல பல்லவிகள் படத் தலைப்பாகியுள்ளன. பிரபல நாவல்களின் தலைப்புகளும் படத்தின் பெயராகியுள்ளன. அதே போல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய வசனங்களும் படத் தலைப்பாகி வருகின்றன. 'இது எப்படி இருக்கு', 'என் வழி தனி வழி', 'கதம் கதம்', 'போடா ஆண்டவனே நம்ம பக்கம்' தலைப்புகளைத் தொடர்ந்து 'முள்ளும் மலரும்' படத்தில் சூப்பர் ஸ்டார் பேசிய 'கெட்ட பையன் சார் இந்தக் காளி' என்ற வசனமும் 'கெட்ட பையன் சார் இவன்' என்று படத் தலைப்பாகியுள்ளது.
'சதுரங்க வேட்டை' திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் நட்டிதான் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்-யிடம் 'தாண்டவம்', 'தலைவா', 'சைவம்' போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தீபக் கெட்ட பையன் சார் இவன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மேலும் இவர் 'பயணங்கள் முடிவதில்லை', 'வைதேகி காத்திருந்தாள்', 'அம்மன் கோவில் கிழக்காலே', 'மெல்லத் திறந்தது கதவு', 'ராஜாதி ராஜா' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவரும் நடிகருமான ஆர். சுந்தர்ராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எச்..காஷிஃப் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 6 ஃபேஸ் ஸ்டுடியோஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

இசையமைப்பாளர் பரணி இயக்கும் ‘ஒண்டிக்கட்ட’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
இசையமைப்பாளர் பரணி முதன் முதலாக இயக்குனர் அவதாரம் எடுக்கும் படம் ‘ஒண்டிக்கட்ட’.
பிரண்ட்ஸ் சினி மீடியா பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர்களுடன் தர்மராஜ், கலைராணி, சாமி நாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு-ஆலிவர் டெனி, இசை-பரணி, பாடல்கள்- கபிலன், பரணி, தர்மா, எடிட்டிங் -விதுஜீவா, நடனம்- சிவசங்கர், தினா, ராதிகா, ஸ்டண்ட்-குபேந்திரன், கலை-ராம், எழுத்து, இயக்கம்-பரணி.
படம் பற்றி இயக்குனர் பரணியிடம் கேட்ட போது...
“நான் இசையமைப்பாளராக 40 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளேன். பெரியண்ணா படத்தின் மூலம் அறிமுகமாகி, பார்வை ஒன்றே போதுமே, சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களின் பாடல்கள் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தந்தன. ஒரு நல்ல கதை அமைந்ததால் `ஒண்டிக்கட்ட' படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறேன். ஒரு உண்மைக் கதையை நல்ல திரைக்கதையாக்கி அதை படமாக்கி இருக்கிறோம். தையமுத்து, நல்லதம்பி, பஞ்சவர்ணம் என்ற மூன்று கதாப்பாத்திரங்கள் கதையின் உயிர் நாடி. முல்லை, கோதண்டம் இருவரும் கவுண்டமணி- செந்தில் மாதிரி காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் பாடல்கள் பட்டையை கிளப்பும்” என்றார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘2.0’ படத்தை ரூ.350 கோடிக்கு இயக்குநர் ஷங்கர் ‘இன்சூரன்ஸ்’ செய்துள்ளார். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்ப்போம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘2.0’. இதில் ரஜினி ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடிக்கிறார்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ.400 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இது இந்தியாவில் அதிக செலவில் தயாராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்தை ரூ.350 கோடிக்கு தயாரிப்பு நிறுவனம் இன்சூரன்ஸ் செய்துள்ளது.

படப்பிடிப்பின் போது ஏற்படும் விபத்துக்கள், உயிர் இழப்பு, படப்பிடிப்பு பொருட்கள் சேதம், செட் சேதம் அடைதல் போன்றவற்றுக்கு இந்த இன்சூரன்ஸ் மூலம் இழப்பீடு பெற முடியும். சமீபத்தில் வேறு சில படங்களுக்காக நடந்த படப்பிடிப்பின் போது, தீவிபத்து, உயிர் இழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளன. இது போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டவே இந்த படம் இன்சூரன்சு செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஏராளமான ஹாலிவுட் கலைஞர்கள் பணிபுரிகிறார்கள். பிரமாண்ட கிராபிக்ஸ் பணிகள் வெளிநாடுகளில் நடைபெறுகின்றன. 3டி மற்றும் நவீன தொழில் நுட்பத்துடன் ‘2.0’ படம் தயாராகிறது. இதன் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் செய்தவற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

ஜீவா சங்கர் உருவாக்கி இருக்கும் ‘எமன்’ படம் மூலம், விஜய் ஆண்டனி நிச்சயம் மேலும் உயரத்தை தொடுவார் என்று நடிகர் தியாகராஜன் கூறியுள்ளார். அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் நடித்துள்ள படம் ‘எமன்’. ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை லைக்கா புரொக்ஷன் சார்பில் ராஜு மகாலிங்கம், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இதில் தியாகராஜன் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இது குறித்து கூறிய தியாகராஜன்...

“சில வருட கால இடைவேளைக்கு பிறகு நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறேன். ஒரு சில கதைகளை கேட்ட உடனே அதில் நடித்தாக வேண்டும் என்று தோன்றும். அப்படி கதை கேட்டதும் என் மனதில் தோன்றிய திரைப்படம் தான் ‘எமன்’. இது எதிர்பாராத திருப்புமுனைகளை உள்ளடக்கி, முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. ‘எமன்’. இது திரைப்படத்தில் நான் ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். நல்ல வலுவான கதையம்சமத்தோடு ஜீவா சங்கர் உருவாக்கி இருக்கும் இந்த ‘எமன்’ படம் மூலம், விஜய் ஆண்டனி நிச்சயம் மேலும் உயரத்தை தொடுவார்” என்றார்.

ஜோதிகாவை தொடர்ந்து பாலா படத்தில் பிரபலமான கதாநாயகன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பிரபல நாயகன் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா தற்போது ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது அடுத்த படத்தில் பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ள ஜோதிகா அப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனமும், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.
இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக உருவெடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் `புரூஸ் லீ' படம் மார்ச் 10-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அவர் கைவசம் `அடங்காதே', `4 ஜி', `ஐங்கரன்', `சர்வம் தாள மயம்' உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்நிலையில், பாலா இயக்க உள்ள புதிய படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ளதாக வந்துள்ள புதிய தகவலால் 2017-ல் ஜி.வி.பிரகாஷீக்கு நல்ல திருப்பம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் மார்ச் 1 முதல் துவங்க உள்ள நிலையில், இப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வ செய்திகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவுக்கு வந்தால் அனுசரிக்க வேண்டும் என்று சொன்னதாக நடிகை ரெஜினா கசண்ட்ரா கூறியுள்ளார். அவரது முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
பாவனா பாலியல் தொந்தரவில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி திரைஉலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பல்வேறு கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
‘கண்ட நாள் முதல்’ படம் மூலம் நடிகையானவர் ரெஜினா கசான்ட்ரா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் விரைவில் திரைக்கு வர இருக்கும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நடித்து இருக்கிறார். நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ரெஜினா அளித்த பேட்டி...

“ நான் நடிக்க வந்த புதிதில் என்னிடம் சிலர், சினிமா என்று வந்துவிட்டால் அட்ஜெஸ்மென்ட் உண்டு என்றனர். அப்போது அனுசரித்து போவது என்றால் என்ன என்பது எனக்கு புரியவில்லை.
நடிக்க வந்தால் அனுசரிக்க வேண்டும் என்பதை கேட்டு புரியாமலே அதிர்ச்சி அடைந்தேன். என்றாலும், மோசமானதை எதிர்கொள்ள தயார் ஆனேன். பிரபல நடிகையாக இருப்பதால் எதையும் தடுக்க முடியாது. யார் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களைவிட பெரிய ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்”.
இவ்வாறு கூறினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படமான மகேஷ்பாபு நடித்து வரும் படத்தில் ஜல்லிக்கட்டு குறித்த காட்சியை இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதம் 23-ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படமான இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியிடுகிறார். இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த வேலைகள் தயாராகி வருவதாகவும், டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி குறித்த சிறப்பு காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படமான இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியிடுகிறார். இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த வேலைகள் தயாராகி வருவதாகவும், டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி குறித்த சிறப்பு காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகை ரம்யா நம்பீசன் வீட்டில் தஞ்சமடைந்துள்ள பாவனா, குற்றவாளிகள் கைதானதால் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வருவதாக ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார். அவரது முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனா, இச்சம்பவம் பற்றி டைரக்டர் லாலிடம் தகவல் தெரிவித்தார்.
அவர்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு, பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டினையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில்தான் பாவனா கடத்தலில் சுனில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

நேற்று முன்தினம் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.
குற்றவாளிகள் கைதான தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து பாவனாவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான ரம்யா நம்பீசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாது. சம்பவம் வெளியுலகுக்கு தெரியவந்த பின்னர், அவர் என்னோடு தான் தங்கி இருந்தார். இப்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் என்பதை அறிந்த பின்னர் அவர், மெல்ல மெல்ல தேறி வருகிறார்.
பாதிப்பில் இருந்து முழுமையாக அவர் மீண்டுவர வேண்டும். அவருக்கு மொத்த திரையுலகமும் ஆதரவாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள `வனமகன்' படத்தை சிம்பு, தனுஷ் படங்கள் ரிலீஸ் தேதியிலேயே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
`போகன்' படத்திற்கு பிறகு ஜெயம் ரவி `வனமகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தற்போது `நாய்கள் ஜாக்கிரதை' பட இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் `டிக் டிக் டிக்' படத்தில் நடித்து வருகிறார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்துள்ள படம் `வனமகன்'. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மிக் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில், ஜெயம்ரவியுடன், சாயிஷா சேகல், தம்பிராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கியுள்ள நிலையில், இப்படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழ் புத்தாண்டு ரிலீசாக தனுஷ் இயக்கியுள்ள `பவர்பாண்டி' படமும், லாரன்ஸின் `சிவலிங்கா' படமும் ரிலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிம்புவின் `ஏஏஏ' படமும் அதே நாளில் ரிலீசாகும் என்று கூறப்படும் நிலையில், ஜெயம் ரவியின் `வனமகன்' படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை அறிய காத்திருக்கத் தான் வேண்டும்.

மேடை நாடகங்கள் மூலமே நான் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தேன் என்று நடிகர் சிவகுமார் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்ழக தொடர்பியல் துறையும், மனோ மீடியா கிளப்பும் இணைந்து கரிசல் திரை விழாவை கடந்த 2 நாட்களாக நடத்தின. விழாவில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவ, மாணவிகள் நாட்டுப்புற நடனம், குறும்படம், சிறந்த இளம் பத்திரிகையாளர்களுக்கான போட்டி உள்பட 15-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டியில் முதுகலை பிரிவில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் முதல் பரிசையும், இரண்டாம் பரிசை பாரதியார் பல்கலைக்கழகமும் பெற்றது. இளங்கலை பிரிவில் முதல் பரிசை கலசலிங்கம் கல்லூரியும், இரண்டாம் பரிசை ஜே.ஜே கல்லூரியும் பெற்றன.
இதன் நிறைவு விழா நேற்று மாலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கினார். தொடர்பியல் துறை துணை தலைவர் கோவிந்தராஜூ வரவேற்றார். பதிவாளர் ஜான் டி பிரிட்டோ முன்னிலை வகித்தார்.
விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். இதை தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிவகுமார் பதிலளித்து கூறியதாவது:-
நான் திருநெல்வேலிக்கு 1964-ம் ஆண்டு முதன்முதலில் வந்தேன். இங்கிருந்து 1970-ல் கன்னியாகுமரிக்கு சென்று ஓவியம் வரைந்தேன். மீண்டும் அதே ஆண்டில் கன்னியாகுமரிக்கு சினிமா கதாநாயகனாக நடிக்க சென்றேன். சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் அதிக நாட்டம் இருந்தது. 4 வயதில் மணலில் படம் வரைந்தேன்.

நான் 8-ம் வகுப்பு படிக்கும்போது மனிதனின் முதுகெலும்பு படத்தை பள்ளிக்கூட பாடத்தில் வரைந்தேன். இதை பார்த்த ஆசிரியர் ஓவியத்தில் நாட்டம் இருப்பதை அறிந்து என்னை ஊக்கப்படுத்தினார். பிறகு ஒவியக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.
பத்து மாத குழந்தையாக இருக்கும்போது எனது தந்தை இறந்து விட்டார். எனது தந்தை முகத்தை நான் பார்த்தது இல்லை. 16 வயதில் எனது சகோதரனும் இறந்தார். நான் மிகவும் பின்தங்கிய ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டுமென்று சிவகுமார் கல்வி அறக்கட்டளையை 37 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கினேன்.
தற்போது அகரம் அறக்கட்டளை மூலமாகவும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். ஒரு மாணவன் உயர்ந்தால் அவனது பரம்பரையே உயரும். தினமும் மாணவர்கள் 8 டம்ளர் தண்ணிர் குடிக்க வேண்டும் 7 மணி நேரம் தூங்க வேண்டும்.
மேடை நாடகங்கள் தான் என்னை வளர்த்தது. இந்த நாடகங்களில் நடித்துத்தான் நான் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தேன். நான் சரளமாக பேசுவதற்கும், நடிப்பதற்கும் நாடகத்தில் நடித்ததுதான் காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் சிவகுமார் பதில் அளித்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விவசாயிகளின் ஒப்புதலை பெற்ற பிறகே நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் நியூட்ரினோ திட்டம் குறித்து நடிகர் விவேக் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன் மற்றும் நியூட்ரினோ திட்டங்கள் பொருளாதார மேம்பாட்டிற்காக செய்யப்பட்டாலும் சரி, நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு வந்தாலும் சரி, தமிழகத்தின் விவசாயத்தை பாதிக்கும் வகையிலும், விவசாய மக்களின் ஆதாரமாக விளங்கும் நீர், நிலம், காற்று மாசுபடும் அளவில் இருந்தால், அதை விவசாய பெருமக்களை கலந்து கொண்டு தீர ஆலோசித்து, விவசாய பெருமக்கள் ஒப்புதல் அளித்தால் மட்டும் தான் அவற்றை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

ஏற்கனவே நாம் நீர் வளத்தை வஞ்சித்து இருக்கிறோம். மரங்களை வெட்டியதால் மழை இல்லை. தண்ணீருக்காக நாம் கேரளாவின் முல்லைப்பெரியாறு, ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர், கர்நாடகாவின் காவிரி நீர் ஆகியவற்றையே நம்பி இருக்கிறோம்.
இந்த சூழ்நிலையில், இது போன்ற திட்டங்கள் நாட்டின் நன்மைக்காக இருப்பினும், அந்த பகுதியின் விவசாயத்துக்கு ஊறு விளைவிக்காமல் இருக்க வேண்டும். நாட்டின் சராசரி மழை ஆயிரத்து 200 மில்லி மீட்டர் அதில் தமிழகத்தில் சராசரியாக 921 மில்லி மீட்டர் மழை பெய்யும். பெரும்பாலான ஆண்டுகளில் பருவமழை பொய்த்து போவதால் இதுவும் கிடைக்காது.
காமராஜர் ஆட்சியின் போது பல திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால், அவை எதுவும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் நன்மை விளைவிப்பதாகவே இருந்தது. அது போல எந்த ஒரு திட்டம் என்றாலும் அது தமிழக மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நன்மை தரக்கூடியதாக அமைய வேண்டும்.
பசுமை கலாம் அமைப்பின் மூலம் இதுவரை நான் 28 லட்சத்து 73 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்று கலாம் எனக்கு கட்டளை இட்டு இருக்கிறார். அதை நிறைவேற்றும் பாதையில் பயணிப்பேன்.