என் மலர்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்துள்ள படம் `வனமகன்'. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மிக் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில், ஜெயம்ரவியுடன், சாயிஷா சேகல், தம்பிராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கியுள்ள நிலையில், இப்படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழ் புத்தாண்டு ரிலீசாக தனுஷ் இயக்கியுள்ள `பவர்பாண்டி' படமும், லாரன்ஸின் `சிவலிங்கா' படமும் ரிலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிம்புவின் `ஏஏஏ' படமும் அதே நாளில் ரிலீசாகும் என்று கூறப்படும் நிலையில், ஜெயம் ரவியின் `வனமகன்' படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை அறிய காத்திருக்கத் தான் வேண்டும்.
இந்த போட்டியில் முதுகலை பிரிவில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் முதல் பரிசையும், இரண்டாம் பரிசை பாரதியார் பல்கலைக்கழகமும் பெற்றது. இளங்கலை பிரிவில் முதல் பரிசை கலசலிங்கம் கல்லூரியும், இரண்டாம் பரிசை ஜே.ஜே கல்லூரியும் பெற்றன.
இதன் நிறைவு விழா நேற்று மாலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கினார். தொடர்பியல் துறை துணை தலைவர் கோவிந்தராஜூ வரவேற்றார். பதிவாளர் ஜான் டி பிரிட்டோ முன்னிலை வகித்தார்.
விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். இதை தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிவகுமார் பதிலளித்து கூறியதாவது:-
நான் திருநெல்வேலிக்கு 1964-ம் ஆண்டு முதன்முதலில் வந்தேன். இங்கிருந்து 1970-ல் கன்னியாகுமரிக்கு சென்று ஓவியம் வரைந்தேன். மீண்டும் அதே ஆண்டில் கன்னியாகுமரிக்கு சினிமா கதாநாயகனாக நடிக்க சென்றேன். சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் அதிக நாட்டம் இருந்தது. 4 வயதில் மணலில் படம் வரைந்தேன்.

நான் 8-ம் வகுப்பு படிக்கும்போது மனிதனின் முதுகெலும்பு படத்தை பள்ளிக்கூட பாடத்தில் வரைந்தேன். இதை பார்த்த ஆசிரியர் ஓவியத்தில் நாட்டம் இருப்பதை அறிந்து என்னை ஊக்கப்படுத்தினார். பிறகு ஒவியக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.
பத்து மாத குழந்தையாக இருக்கும்போது எனது தந்தை இறந்து விட்டார். எனது தந்தை முகத்தை நான் பார்த்தது இல்லை. 16 வயதில் எனது சகோதரனும் இறந்தார். நான் மிகவும் பின்தங்கிய ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டுமென்று சிவகுமார் கல்வி அறக்கட்டளையை 37 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கினேன்.
தற்போது அகரம் அறக்கட்டளை மூலமாகவும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். ஒரு மாணவன் உயர்ந்தால் அவனது பரம்பரையே உயரும். தினமும் மாணவர்கள் 8 டம்ளர் தண்ணிர் குடிக்க வேண்டும் 7 மணி நேரம் தூங்க வேண்டும்.
மேடை நாடகங்கள் தான் என்னை வளர்த்தது. இந்த நாடகங்களில் நடித்துத்தான் நான் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தேன். நான் சரளமாக பேசுவதற்கும், நடிப்பதற்கும் நாடகத்தில் நடித்ததுதான் காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் சிவகுமார் பதில் அளித்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஹைட்ரோ கார்பன் மற்றும் நியூட்ரினோ திட்டங்கள் பொருளாதார மேம்பாட்டிற்காக செய்யப்பட்டாலும் சரி, நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு வந்தாலும் சரி, தமிழகத்தின் விவசாயத்தை பாதிக்கும் வகையிலும், விவசாய மக்களின் ஆதாரமாக விளங்கும் நீர், நிலம், காற்று மாசுபடும் அளவில் இருந்தால், அதை விவசாய பெருமக்களை கலந்து கொண்டு தீர ஆலோசித்து, விவசாய பெருமக்கள் ஒப்புதல் அளித்தால் மட்டும் தான் அவற்றை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

ஏற்கனவே நாம் நீர் வளத்தை வஞ்சித்து இருக்கிறோம். மரங்களை வெட்டியதால் மழை இல்லை. தண்ணீருக்காக நாம் கேரளாவின் முல்லைப்பெரியாறு, ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர், கர்நாடகாவின் காவிரி நீர் ஆகியவற்றையே நம்பி இருக்கிறோம்.
இந்த சூழ்நிலையில், இது போன்ற திட்டங்கள் நாட்டின் நன்மைக்காக இருப்பினும், அந்த பகுதியின் விவசாயத்துக்கு ஊறு விளைவிக்காமல் இருக்க வேண்டும். நாட்டின் சராசரி மழை ஆயிரத்து 200 மில்லி மீட்டர் அதில் தமிழகத்தில் சராசரியாக 921 மில்லி மீட்டர் மழை பெய்யும். பெரும்பாலான ஆண்டுகளில் பருவமழை பொய்த்து போவதால் இதுவும் கிடைக்காது.
காமராஜர் ஆட்சியின் போது பல திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால், அவை எதுவும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் நன்மை விளைவிப்பதாகவே இருந்தது. அது போல எந்த ஒரு திட்டம் என்றாலும் அது தமிழக மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நன்மை தரக்கூடியதாக அமைய வேண்டும்.
பசுமை கலாம் அமைப்பின் மூலம் இதுவரை நான் 28 லட்சத்து 73 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்று கலாம் எனக்கு கட்டளை இட்டு இருக்கிறார். அதை நிறைவேற்றும் பாதையில் பயணிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஒரு கும்பல் காருடன் அவரை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தனர். அதை செல்போனிலும் படம் பிடித்தனர். இது தொடர்பாக பாவனா போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் இக்கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் சுனில்குமார் என்ற பல்சர் சுனில் மற்றும் அவரது கூட்டாளி விஜேஷ் என்பது தெரியவந்தது.

இருவரையும் போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் எர்ணாகுளம் கோர்ட்டில் சரண் அடைய சென்றனர். அப்போது கோர்ட்டுக்கு மதிய உணவு இடைவேளை விடப்பட்டதால், சுனில்குமாரையும் அவரது நண்பர் விஜேசையும் போலீசார் கோர்ட்டு வளாகத்தில் வைத்து அதிரடியாக பிடித்தனர்.
பின்னர் அவர்களை ஆலுவா போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது சுனில் போலீசாரிடம் கூறியதாவது:-
இந்த சம்பவத்தில் முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை. பணம் பறிக்கவே பாவனாவை கடத்தினோம். அவர், போலீசில் புகார் செய்யமாட்டார் என்று நினைத்தோம்.

ஆனால் நாங்கள் நினைத்ததற்கு மாறாக அவர், போலீசில் புகார் செய்துவிட்டார். எனவேதான் நாங்கள் தலைமறைவானோம். காருக்குள் பாவனாவை மிரட்டி சித்ரவதை செய்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்தோம். போலீசார் தேடுவதை அறிந்ததும் அந்த செல்போனை கழிவுநீர் ஓடையில் வீசி விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதான சுனில்குமார், விஜேஷ் இருவரும் போலீசாரிடம் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்று போலீசார் நம்பவில்லை. எனவே அவர்கள் சுனில்குமார், விஜேஷ் இருவரையும் தனித்தனி அறைகளில் வைத்து விசாரித்தனர்.

இதுபோல இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பாவனாவின் டிரைவர் மார்ட்டின் கூலிப்படையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில், சுனில்குமார் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தது. சுனில்குமார் மலையாள திரையுலக பிரபலங்களுடன் நெருக்கமாக இருந்தவர். இதனால் நடிகைகள் பற்றியும், அவர்களிடம் புழங்கும் பணம் குறித்தும் அவருக்கு அனைத்து தகவல்களும் தெரியும்.
அதன் அடிப்படையில் நடிகைகள் தனியாக இருப்பதை அறிந்து அவர்களை கடத்தி, பணம் பறித்துள்ளார்.
பணம் கொடுக்க மறுப்பவர்களை ஆபாச படம் எடுத்தும் மிரட்டி உள்ளார். குடும்ப மானம், சமூகத்தில் அவப்பெயர் ஏற்படும் என்பதற்காக இந்த சம்பவங்களை பலரும் வெளியில் சொல்லாமல் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துள்ளனர். பணம் கொடுத்த பலரும் போலீசாரிடம் இதுவரை புகார் செய்யவில்லை.
சுனில்குமாரின் கூட்டாளிகளை தனியாக விசாரித்தபோது இந்த தகவல்களை போலீசார் தெரிந்து கொண்டனர்.

சுனில்குமார் எந்தெந்த நடிகைகளை மிரட்டினார்? யார்-யாரை ஆபாச படம் எடுத்தார்? என்ற தகவல்கள் அனைத்தும் அவரது செல்போனில் உள்ளது. அந்த செல்போனைத்தான் கழிவு நீர் ஓடையில் வீசி விட்டதாக சுனில்குமார் கூறி உள்ளார். அவர் தெரிவித்தது உண்மைதானா? என்பதை அறிந்து கொள்ள நேற்று போலீசார் அவரை அழைத்துச் சென்று திருச்சூர் முதல் கொச்சி வரையிலான சாலையில் உள்ள கழிவுநீர் ஓடைகளை சோதனை செய்தனர். அதில், செல்போன் கிடைக்கவில்லை.
எனவே சுனில்குமார் போலீசாரை ஏமாற்ற பொய் சொல்கிறார் என்று முடிவு செய்தனர்.
சுனில்குமாருக்கு ஒரு காதலி இருக்கிறார். அவரது தோழி ஒருவர் பெண் தொழில்அதிபராக உள்ளார். அவருக்கும், நடிகைகளை கடத்தி பணம் பறிக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
அந்த தொழில் அதிபரை கண்டுபிடித்து விசாரணை நடத்தவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் கைது செய்யப் பட்ட சுனில்குமார், விஜேஷ் இருவரையும் போலீசார் ஆலுவா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சுனில்குமார், விஜேஷ் இருவரும் காக்க நாடு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். சுனில்குமார், விஜேஷ் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் போலீசாரின் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் கருதுகிறார்கள். எனவே அவர்கள் இருவரையும் 10 நாள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கேட்டு இன்று ஆலுவா கோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்கிறார்கள்.
"மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம். ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்!
எஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.
4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும் சோதனைதான்!
"ரத்தக்கண்ணீர்'' படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்!
10 முறை படம் எடுத்தும் காட்சி "ஓகே'' ஆகவில்லை.
நேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். "ஒன் மோர் டேக்'' என்றேன்.
சுப்பையாவோ, "சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே'' என்றார்.
நான் விடவில்லை. "அண்ணே! இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்!'' என்றேன்.
ஆனால் சுப்பையா, தன் "விக்''கை கழற்றி எறிந்தார். "பிரேக்'' என்று கூறிவிட்டார்.
படப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் "பிரேக்'' என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.
"மிஸ்டர் சுப்பையா! `பிரேக்' சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்!'' என்றேன்.
சுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறவில்லை.
நான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப்படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.
அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.
இரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.
பிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, "நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்' என்று நீங்கள் சொன்னது தவறு'' என்றார்.
ஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.
"வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது? தயவு செய்து நடிக்க வாருங்கள்'' என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
நான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.
அப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, "சுந்தர்ராஜா! நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே!'' என்றார்.
சிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.
சிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.
படம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.
மூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.
சிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.
மீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.
அவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.
நான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். "முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா?'' என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.
மீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை
சுற்றியது."கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது'' என்று கிருஷ்ணன் - பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.
பட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்? படம் நின்று போனது.
சிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.
மனோரஞ்சிதம் வெளிவராமல் போனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது? இதுதான் விதி!''
இவ்வாறு மணிசேகரன் கூறினார்.

முன்னதாக சிபிராஜ் நடித்த `நாய்கள் ஜாக்கிரதை' படத்தில் நாய் முக்கிய கதாபாத்திரமாக இருந்தது போல இந்த படத்தில் ஒரு மீன், கதையின் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.
ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. மார்ச் 17-ஆம் தேதி திரைக்கு வரும் என்று புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சிபிராஜ் தற்போது, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் `சத்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து தெகிடி பட இயக்குநர் ரமேஷுடன் புதிய படத்தில் இணைய உள்ளார்.
விவசாயிகள் பயன்படுத்தும் நெல்களத்தில் பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமலும் பாதுகாப்பில்லாமல் முள் புதர்களாக இருந்த சீமக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த இடங்களை சுத்தம் செய்து மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர்.

நடிகர் விஷால் அவர்களுடன் சேர்ந்து நடிகர் செளந்தர்ராஜா, ஹரி உள்ளிட்டோர் அந்த பகுதியை சேர்ந்த ரங்கநாயகி, காளிதாஸ், ரமேஷ், மற்றும் அண்ணாமலை பல்கலைகழக துணை வேந்தர் மணியன், கல்வி இயக்குனர் மணிவண்ணன், கிராமத்துறை தலைவர் தேசிகன், பாலமுருகன் இவர்களுடன் NSS மாணவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள், கடலூர் மாவட்ட நாடக சங்க உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், விஷால் நற்பணி இயக்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு இந்த சமுக பணியில் ஈடுபட்டனர்.

`குற்றம் 23' படம் குறித்து படத்தின் இயக்குநர் அறிவழகன் தெரிவித்ததாவது,
'என்னை அறிந்தால்' படத்தில் சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட அருண் விஜயை, 'குற்றம் 23' படம் மூலம் சட்டத்தை பாதுகாக்கும் ஒரு காவல்துறை அதிகாரியாக ரசிகர்கள் ரசிக்கும் வகையில் உருவாக்கியுள்ளதாக அறிவழகன் கூறினார். போலீஸ் அதிகாரியாக தன்னுடைய கதாபாத்திரம் கனகச்சிதமாக உருவாக அருண் விஜய் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய், அவருடைய வேடம் மிக சரியாக அமைய பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவரை காரில் கடத்திய கும்பல் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு அதனை செல்போனிலும் படம் பிடித்தனர். இதுபற்றி பாவனா கொடுத்த புகாரின் பேரில் கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் கோவையில்இருந்து 2 பேரும் பாலக்காட்டில் இருந்து மணிகண்டன் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், விஜேஷ் இருவரும் தலைமறைவாக இருந்தனர். இவர்கள் கோர்ட்டில் சரண் அடையலாம் என்று போலீசாருக்கு ரகசியதகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் எர்ணாகுளம் கோர்ட்டு முன்பு மாறு வேடத்தில் சுற்றி வந்தனர்.

நேற்று மதியம் 12.50 மணிக்கு சுனில்குமாரும், விஜேசும் தமிழக பதிவு எண் கொண்ட பல்சர் பைக்கில் எர்ணாகுளம் கோர்ட்டுக்கு வந்தனர். அங்கு கூடுதல் முதன்மை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைய சென்றனர்.
அப்போது நீதிபதி மதிய உணவுக்காக வெளியே சென்று விட்டார். இதனால் சரண் அடைய முடியாமல் காத்திருந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சுனில்குமாருடன் விஜேசும் பிடிபட்டார். இருவரையும் போலீசார் ஆலுவா போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் நடிகை பாவனா கடத்தல் சம்பவம் மற்றும் இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது பற்றி விசாரித்தனர்.
இதற்கு சுனில்குமார் பதில் அளிக்க மறுத்தார். போலீசார் அவரிடம் ஏற்கனவே கைதானவர்கள் சம்பவம் பற்றியும் அதில், சுனில்குமாரின் பங்கு பற்றியும் தெளிவாக கூறி விட்டனர். எனவே நீயும் உண்மையை தெரிவித்து விடு என்று எச்சரித்தனர்.
போலீசார் கூறியதை கேட்டதும் சுனில்குமார் பதறிப்போனார். அதன் பிறகு அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
நடிகை பாவனாவிடம் ஏராளமாக பணம் இருந்தது எனக்கு தெரியும். அந்த பணத்தை பறிக்க திட்டமிட் டேன். இதற்காகவே நண்பர்களுடன் சேர்ந்து அவரை கடத்தி பணம் பறிக்க முடிவு செய்தேன். சம்பவத்தன்று நண்பர்களுடன் அவரை கடத்தினேன். காருக்குள் வைத்து அவரை மிரட்டினோம். பணம் தராவிட்டால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டுமென்று எச்சரித்தோம். ஆனால் அவர் எங்களிடம் முரண்டு பிடித்தார்.
அவரை வழிக்கு கொண்டு வர பாலியல் தொல்லை கொடுத்தோம். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை. நானும் வேறு பிரமுகர்களுக்காக இதை செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சுனில்குமாரின் வாக்கு மூலத்தை போலீசார் நம்பவில்லை. அவர், எதையோ மறைக்கிறார் என்று எண்ணினர்.
நீங்கள் பாவனாவிடம் இச்சைக்கு அடிபணிய வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு மறுத்தால் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு சென்று அங்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்வோம் என்றும் அதனை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுவோம் எனவும் மிரட்டியதாக ஏற்கனவே இந்த வழக்கில் கைதான மணிகண்டன் எங்களிடம் கூறி உள்ளார். ஆனால் நீங்கள் இதுபற்றி எதுவும் கூறவில்லையே? என்றனர். அதற்கு சுனில்குமார் பதில் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தார்.

இதையடுத்து போலீசார் நேற்றைய விசாரணையை முடித்துக்கொண்டனர். அவரை இன்று எர்ணா குளம் கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள். பின்னர் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
அப்போது பாவனா வழக்கில் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் பற்றிய விவரம் தெரியவரும் என்று போலீசார் நம்புகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
பின்னர் விஜய் ஆண்டனியை வைத்தே அவர்கள் இருவரையும் தீர்த்துகட்டுகிறார். அதன்மூலம் தியாகராஜனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் தந்தையை கொன்ற ஆளுங்கட்சி அமைச்சரான அருள்ஜோதி, விஜய் ஆண்டனியையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். இதற்கிடையில், விஜய் ஆண்டனியின் தோழியான மியா ஜார்ஜுக்கு அருள்ஜோதியின் மகன் தொல்லை கொடுக்கிறார்.
இதிலிருந்து தப்பிக்க அரசியலில் நுழையும் விஜய் ஆண்டனி, அவருக்கு எதிரான தடைகளை தகர்த்து, சூழ்ச்சிகளை எவ்வாறு முறியடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

அரசியல்வாதியாக வரும் விஜய் ஆண்டனி அந்த வேடத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்தாலும் படத்தின் காதல் காட்சிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவரது மற்ற காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் காதல் காட்சிகளில் அவரை ரசிக்க முடியவில்லை. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
மியா ஜார்ஜுக்கு பெரிய அளவில் நடிப்பு இல்லை என்றாலும், மியா வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக மியா ஒரு பாடலுக்கு சிறப்பாக நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அரசியல்வாதியாக வரும் தியாகராஜன் அந்த இடத்திற்கு தேவையானவற்றை சிறப்பாக கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அரசியல்வாதியின் அத்தனை அம்சங்களும் அவருக்கு சரியாக பொருந்தியிருக்கின்றன. சிறப்பான நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

அரசியலில் புதுமையை கொண்டுவர முயற்சி செய்திருக்கும் இயக்குநர் ஜுவா சங்கர் அரசியல் சூழ்ச்சிகளை உருவாக்கியுள்ள காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் பார்வையாளர்களுக்கு சளிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் திரைக்கதைகளில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் படத்திற்கு வலுகொடுத்திருக்கின்றன. எனினும் பாடல்கள் வேகத்தடையாக அமைந்தது திரைக்கதையில் மைனஸ். படத்தில் ஒரு சில முக்கிய காட்சிகள் நம்பகத்தன்மைக்கு ஏற்றதாக உள்ளது. வசனங்கள் படத்திற்கு மேலும் பலத்தை கூட்டிருக்கிறது.

படத்தின் பின்னணி இசையில் மிரட்டிய விஜய் ஆண்டனி பாடல்களை கோட்டைவிட்டிருக்கிறார். பாடல்கள் விரும்பி பார்க்கும் படி இல்லை என்றாலும், "என் மேல கைவைச்சா காலி" பாடலும் அதன் வரிகளும் ரசிகர்களால் கவரும்படி உள்ளது. அமைச்சராக வரும் அருள் ஜோதி ரசிகர்களின் மனதில் நின்றிருக்கிறார். திருநெல்வேலி வட்டார பேச்சில் அவர் கலக்கியிருக்கிறார். மேலும் சார்லி, சங்கிலி முருகன், லொள்ளு சபா சுவாமிநாதன், மாரிமுத்து ஆகியோரும் கதைக்கு ஏற்ப தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக அளித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவில் இயக்குனர் ஜீவா சங்கர் நிறைவைத் தந்துள்ளார். வீரசெந்தில் ராஜின் படத்தொகுப்பு பணிகளும் சிறப்பாக உள்ளது.
மொத்தத்தில் `எமன்' வென்றான்.
இந்நிலையில், இப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை சிவராத்திரி தினமான இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக படக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பிரபாஸ்-அனுஷ்கா இணைந்து வில்லை நீட்டி விடுவது போன்ற ஒரு போஸ்டரை `பாகுபலி' படக்குழு வெளியிட்டிருந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அந்த போஸ்டரை தொடர்ந்து அடுத்த போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் பிரபாஸ் யானை துதிக்கையின் மீது ஏறுவது போன்ற புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது.
நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில் இளைய மகன்தான் கௌதம் கார்த்திக். ஒருநாள் கௌதம் கார்த்திக் ரோட்டில் நடந்துபோய்க் கொண்டிருக்கும்போது நாயகி பிரியா ஆனந்தை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள்மீது இவருக்கு ஈர்ப்பு வந்துவிடுகிறது. அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரும் நெருக்கமாகி, காதலர்களாகிறார்கள்.

இவர்களது காதலுக்கு இரண்டுபேர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கிறது. ஆனால், நாயகிக்கு திருமணமாகாத ஒரு அக்கா, அதேபோல் நாயகனுக்கு திருமணமாகாத ஒரு அண்ணன் இருப்பது இவர்களுடைய திருமணம் உடனே நடைபெற தடையாக இருக்கிறது. எனவே, பெரியவர்கள் அனைவரும் நாயகியின் அக்காவுக்கும், நாயகனின் அண்ணனுக்கும் திருமணம் பேசி முடிக்கின்றனர்.
இந்நிலையில், பக்கத்து ஊரில் சிலம்பம் போட்டி நடைபெறப்போவதாக அறிவிப்பு வருகிறது. அந்த போட்டிக்கு சென்றால் ஏதாவது பிரச்சினை வரும் என்பதற்காக தன்னுடைய கிராமத்தில் இருந்து யாரும் அந்த சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ளக்கூடாது என்று நெப்போலியன் கட்டளையிடுகிறார். ஆனால், கௌதமோ அவரது பேச்சை மீறி, தனது நண்பர்களுடன் அந்த ஊரில் நடக்கும் சிலம்பம் போட்டிக்கு போக தயாராகிறார்.

கௌதம் கார்த்திக் தங்கள் ஊருக்கு சிலம்பம் ஆடவருவதை அறியும் பெப்சி விஜயன், கௌதம் வரும் வழியிலேயே ஆட்களை வைத்து அவனை விரட்டிவிட நினைக்கிறார். அப்போது நடக்கும் சண்டையில் கௌதம் கார்த்திக் சிலபேரை தாக்கிவிடுகிறார். இதில் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்படுகிறார்கள். இது போலீசுக்கு செல்ல, பயந்துபோன நெப்போலியன், கௌதம் கார்த்திக்கை தலைமறைவாக சொல்கிறார். கௌதம் கார்த்திக்கும் தலைமறைவாகிறார்.
கௌதமை தேடி வரும் போலீஸ், அவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதை அறிந்ததும், நெப்போலியனை அவமானப்படுத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்வதால் வெகுண்டெழும் கௌதம் கார்த்திக், தனது அப்பாவை அவமானப்படுத்திய போலீசாரின் கையை வெட்டி விடுகிறார். இதன்பிறகு, இந்த பிரச்சினை பெரிய அளவில் செல்ல, இதை பற்றி விசாரிப்பதற்காக போலீஸ் அதிகாரி வம்சி கிருஷ்ணா ஊருக்குள் வருகிறார்.

ஆனால், அதற்குள் அந்த ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் தலைமறைவாகிறார்கள். இறுதியில், கௌதம் கார்த்திக், நெப்போலியன் கொலை குற்றத்தில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் முத்துராமலிங்கம் என்ற வீரத்திருமகனின் பெயருடன் வலம்வரும் கௌதம் கார்த்திக், அதற்குண்டான தோற்றத்தில் அசர வைக்கிறார். ஆனால், இவருடைய நடிப்பில்தான் வீரம் எடுபடவில்லை. படத்தில் இவரது கதாபாத்திரம் மாஸாக இருப்பதால், இவருடைய குழந்தை முகத்தில் மாஸ் நடிகருக்குடான நடிப்பை வெளிக்கொண்டு வரமுடியவில்லை. இருப்பினும், சண்டைக் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார்.
படத்திற்கு பெரிய பலம் நெப்போலியனின் தோற்றமும், அவருடைய வீரமான நடிப்பும்தான். திரையில் இவரை பார்த்தவுடனேயே கண்டிப்பாக நம்மை ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை நமக்குள் வந்துவிடுகிறது. பிரியா ஆனந்த் பள்ளி மாணவியாக கச்சிதமாக வந்து போயிருக்கிறார். வழக்கமான கதாநாயகிபோல் இல்லாமல் இப்படத்தில் இவருக்கு நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வலுவான கதாபாத்திரம்தான். அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். விஜி சந்திரசேகர் வழக்கம்போல் வீரப்பெண்மணியாக வந்து நம்மை கவர்கிறார்.

முதல்பாதியை கலகலப்பாக கொண்டு செல்ல சிங்கம் புலியின் காமெடி மிகப்பெரிய உதவி செய்திருக்கிறது. பிற்பாதியில் காமெடிக்கு விவேக் வந்தாலும், அவருடைய ஒருசில காமெடிகள்தான் ரசிக்க தோன்றுகிறது. போலீஸ் அதிகாரியாக வரும் வம்சி கிருஷ்ணா, மற்றொரு ஊர் தலைவராக வரும் பெப்சி விஜயன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் ராஜதுரை ஒரு சமூகம் சார்ந்தவர்களின் வீரத்தை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்திருக்கிறார். படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் வீரத்துடன் வெகுண்டெழுவதுபோல் வருவதால் கொஞ்சம் டல்லடிக்கிறது. வசனங்கள் படத்திற்கு பலமாக இருந்தாலும், அதை ஒருசில கதாபாத்திரங்கள் பேசும் தொனி அந்த வசனத்தின் மீதுள்ள பலத்தை சீர்குலைத்துவிடுகிறது.
இசைஞானி இளையராஜா இசையில் பாடல்களில் கிராமத்து மணம் தவழ்கிறது. பின்னணி இசையிலும் தான் ராஜா என்பதை நிரூபித்திருக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில் கிராமத்து அழகை அழகாக படம்பிடித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘முத்துராமலிங்கம்’ வலுவில்லை.








