என் மலர்
நடிகை ஒருவர் இயக்குனர் ஒருவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அந்த நடிகை, இயக்குனர் பற்றிய விவரங்களை கீழே விரிவாக பார்ப்போம்.
நாட்டாமை தம்பிக்கு டீச்சராக வந்த இரண்டெழுத்து நடிகைக்கு தற்போது சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு இல்லை. இதனால், கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். கணவர் வந்த வரவு நடிகைக்கு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி, தற்போது ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகைக்கு அப்படத்தின் இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த படத்தின் இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் ரொம்பவும் கடுமையாக நடந்து கொள்வாராம். இவரை நெருங்கவே அவரது உதவியாளர்கள் பயந்து நடுங்கும் சமயத்தில், துணை நடிகைகளிடமும் இவர் அத்துமீறி நடந்துகொள்வாராம்.
தனக்கு ஒத்துழைக்காத துணை நடிகைகளை படத்தில் இருந்து தூக்கி விடுவேன் என்றும் மிரட்டுவாராம். வாய்ப்பு நழுவிப் போகிறதே என்று நினைக்கும் துணை நடிகைகள் இவரது டார்ச்சருக்கு அடிபணிந்து போய்விடுகிறாரார்களாம். இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த இயக்குனர், டீச்சர் நடிகையிடம் தனது கைவரிசையை காட்டியிருக்கிறார்.
ஆனால், மற்றவர்களைப்போல் டீச்சர் நடிகை அடங்கிப் போய்விடவில்லையாம். தனக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குனரை படப்பிடிப்பு தளத்தில் அனைவர் முன்னிலையிலும் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டாராம். படப்பிடிப்பு தளத்தில் கண்டிப்பான இயக்குனராக வலம்வந்த இயக்குனருக்கு, நடிகையின் பளார் அறை மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாம்.
இதைத் தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு குழு இயக்குனரை அழைத்து கண்டித்தும் உள்ளதாம். இனிமேல், இதுபோன்ற பிரச்சினைகள் வந்தால் படத்தில் இருந்து தூக்கிவிடுவதாகவும் தயாரிப்பாளர் தரப்பு அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இயக்குனர் தற்போது பெட்டிக்குள் அடைபட்ட பாம்பாக அடங்கிப் போயிருக்கிறாராம்.

தனுஷ் ஒரே நேரத்தில் அவர் நடித்த 3 படங்களின் 2-ம் பாகங்களில் நடிக்கவுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
ஒரு காலத்தில் ஆங்கில படங்களில் மட்டுமே ஒரு படத்தின் பல பாகங்கள் வெளியாகி வந்தன. இப்போது தமிழ் படங்களிலும் ஒருமுறை வெற்றி பெற்ற படம் பல பாகங்களாக தயாராகி வருகின்றன. சூர்யா நடித்த ‘சிங்கம்‘ படம் மூன்று பாகமாக வெளிவந்து வெற்றிநடை போட்டது. ‘சென்னை-28’, ‘பசங்க’ உள்ளிட்ட படங்களும் இரண்டு பாகங்களாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ (வி.ஐ.பி), ‘மாரி’, ‘கொடி‘ ஆகிய படங்களும் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கிறது. இதில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் பாலாஜி மோகனே இயக்கவுள்ளார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதேபோல், துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான ‘கொடி’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகளும் தொடங்கப்பட உள்ளது.
இப்படியாக ‘விஐபி-2’, ‘மாரி-2’, ‘கொடி-2’ என்று மூன்று படங்களின் இரண்டாம் பாகங்களில் தனுஷ் ஒரே நேரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ‘பவர் பாண்டி’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் நடித்து வருகிறார்.

விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘பொல்லாதவன்’ பாணியில் உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து விக்ரம், கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், இதற்கிடையில் விஜய் சந்தர் இயக்கத்திலும் விக்ரம் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பின்னி மில்லில் விமான நிலையம் போன்று செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதை என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு கார்களின் கதவுகளை உடைத்து அதை திருடும் கும்பல்களை மையப்படுத்திய கதைதான் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்த ‘பொல்லாதவன்’ படத்தில் இதுபோன்று பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்குகளை திருடிச் சென்று அதை வேறு மாநிலத்திற்கு கொண்டு போய் விற்கும் கும்பலை பற்றிய கதையாக வெளிவந்தது. அதேபோல், இந்த படமும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இவருடைய 13 நாள் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கவுதம் மேனன், விஜய் சந்தர் படங்களை முடித்துவிட்டு ஜுன் மாதத்தில் ஹரியுடன் ‘சாமி-2’ படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய நிலங்களில் மீத்தேன் எடுப்பதற்கு போராட்டம் வலுக்கும் நிலையில், அதற்கு ஜி.வி.பிரகாஷ் மாற்று வழி கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
ஏற்கெனவே, நடிகர் கமல்ஹாசன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தார். அந்த வரிசையில் தற்போது ஜி.வி.பிரகாஷும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, நெல் விளையும் பூமியில்தான் மீத்தேன் எடுக்கமுடியுமா என்ன? ஆய்வுப்படி குப்பைக் கிடங்கு, இரசாயன ஆலை கழிவு, சாணம், விவசாயக் கழிவு, உலுத்துப் போன மரங்கள், ஈசல் புற்று, எறும்பு புற்று இவற்றின் மூலம் 85 சதவீதம் மீத்தேன் எடுக்கலாம். ஆனால் 12 விழுக்காடு மீத்தேன் தரும் விளைநிலங்களை குறிவைப்பது ஏன் எதற்காக? என்று கேள்வி கேட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் ஏற்கெனவே, தமிழகத்தில் மாபெரும் போராட்டமாக உருவெடுத்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். ஜல்லிக்கட்டு வேண்டும் என்று நடைபெற்ற போராட்டங்களில் நேரடியாக கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டலுக்கு மாற்றப்பட்ட ரஜினியின் ‘பாட்ஷா’ ஜப்பானில் சப்-டைட்டிலுடன் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
1995-ஆம் ஆண்டு ரஜினி-நக்மா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘பாட்ஷா’. ரஜினி பட வரிசையில் மிகப்பெரிய மாஸாக அமைந்த இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் ரஜினி ஆட்டோ டிரைவர், டான் என்ற இரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் தற்போது டிஜிட்டலில் மாற்றப்பட்டு, மீண்டும் வெளியாக தயாராக இருக்கிறது. வருகிற மார்ச் 3-ந் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தை ஜப்பானிலும் வெளியிட முடிவு செய்திருந்தனர். ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவருடைய எந்தவொரு படம் வெளியானாலும் ஜப்பானிலும் சப்-டைட்டிலுடன் வெளியிடப்படும்.

அந்த வரிசையில், தற்போது டிஜிட்டலில் மாற்றப்பட்ட ‘பாட்ஷா’ படம் ஜப்பானில் திரையிடப்பட்டுள்ளது. கடந்த பிப்.26-ந் தேதி ஜப்பானில் இப்படம் சப்-டைட்டிலுடன் ரீலீசாகியுள்ளது. ரஜினியின் புதிய படத்திற்கு கிடைக்கும் அளவுக்கு இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்துள்ளது.

கவிஞர் வைரமுத்து சமூக வலைத்தளத்தில் தனது பெயரில் வெளிவந்த கவிதைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
கவிஞர் வைரமுத்து, எந்தவொரு விஷயம் என்றாலும் நேரிடையாக பத்திரிகையாளர்களை அழைத்து நேருக்கு நேர் தைரியமாக சொல்லக்கூடிய கலைஞர். ஆனால், அவருடைய பெயரில் ஒரு புதுக்கவிதை ஒன்று இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ‘இது யாரோட இந்தியா’ என்ற பெயரில் வரும் அந்த கவிதையில், பாவானா, அம்பானி தொடங்கி, அரசியல்வாதிகள், கல்வி, இயற்கை அழிப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கியுள்ளன.
வைரமுத்துவின் அணுகுண்டு கவிதை என்ற பெயரில் உலாவிய இந்த கவிதை தன்னுடையது அல்ல என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘இது யாரோட இந்தியா’ என்ற தலைப்பில் என் பெயரிட்டு சில வரிகள் சமூக ஊடகங்களில் உலா வருவதாக என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை என்மீது அன்பு கொண்ட அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கமல் பெயரில் ஒரு வாட்சப் கவிதை வெளியாகி இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. வைரமுத்து பெயரில் வெளிவந்த கவிதை கீழே....
பாவனா-வுக்கு
பாவாடை கிழிந்தால்
பாராளுமன்றம் வரை எதிரொலிக்கிறது
நந்தினி
ஹாசினி-களுக்கு
கருவறுக்கப்பட்டாலும்
அது கிணற்றுக்குள்ளே மூடி மறைக்கப்படுகிறது …!!!
அம்பானி, அதானி
மல்லையா கடன் வாங்கினால்
அது தள்ளுபடி செய்யப்படுகிறது
இராமையா
மூக்கையா இராமசாமி-கள்
கடன் வாங்கினால்
தடியடி நடத்தி வசூலிக்கப்படுகிறது..!!!
அரசியல்வாதிகள்
ஆற்றுமணலை கொள்ளையடித்தால்
சுங்கச்சாவடிகள் சுதந்திரமாக திறக்கப்படுகிறது
அன்றாட காய்சிகள்
மாட்டு வண்டியில்
மணல் எடுத்தால்
மாட்டு வண்டிகள் சூறையாடப்படுகிறது..!
கல்வியை தொழிலாக்கி
அதை காசுக்கு விற்று
பணம் பார்க்கும் கபோதிகளுக்கு
கல்வி தந்தையென பட்டம் அளிக்கப்படுகிறது
தேர்விலே
பக்கத்தில் இருப்பவனை பார்த்து
காப்பி அடித்தால் மாணவனுக்கு
மூன்றாண்டு தேர்வெழுத தடைவிதிக்கிறது..!
போலி நாயகனுக்கும்
அரசியல் வாதிகளுக்கும்
சட்டத்தில் பல விதிவிலக்குகள் அளிக்கப்படுகிறது
சாமானியனுக்கோ சட்டம்
தன் கடமையை செய்கிறது..!
இயற்கையை அழிப்பவன்
இறைவனென போற்றப்படுகிறான்
இயற்கையை காக்க போராடுபவன்
தேசதுரோகியென தூற்றப்படுகிறான்.
ஆக இது யாரோட இந்தியா..
இதுதான் இந்தியாவெனில் யாருக்கு வேணும் இந்த இந்தியா..?

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது லா லா லேண்டிற்கு தவறுதலாக அறிவிக்கப்பட்டது. இதனால் விழா அரங்கில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த துணை நடிகர், அனிமேஷன் படம், இசைத் தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு முதலில் அறிவிக்கப்பட்டது. இறுதியாக சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது.
அப்போது, சிறந்த திரைப்படத்துக்கான விருதை அறிவித்தவர் ‘லா லா லேண்ட்’ படம் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வானதாக மேடையில் அறிவித்தார். இதையடுத்து, ‘லா லா லேண்ட்’ படக்குழுவினர் மேடைக்கு வந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, நடுவர் குழுவை சேர்ந்த ஒருவர் திடீரென குறுக்கிட்டு, மைக்கில் பேசிக் கொண்டிருந்தவரை தடுத்து நிறுத்தி சிறந்த படத்திற்கான விருது தவறுதலாக அறிவிக்கப்பட்டு விட்டதாக கூறினார்.
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘மூன் லைட்’ படம்தான் வென்றுள்ளது என்றும் தெரிவித்தார். இதனால் ‘லா லா லேண்ட்’ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த அறிவிப்பை ‘மூன் லைட்’ குழுவினர் நம்பவில்லை. ஆனால், நடுவர் குழுவை சேர்ந்தவர், திரும்பவும் இது ஜோக் அல்ல நிஜம் தான் என்று தெரிவித்து, அறிவிப்பு தாளினை பிரித்தும் காட்டினர். பின்னர், ‘மூன் லைட்’ படக்குழுவினர் மேடையில் வந்து தங்களுக்கான விருதை பெற்றுக்கொண்டனர். இதனால் சற்று நேரம் விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், 2015-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வழங்கும் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வி, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச்க்கு பதிலாக கொலம்பியா நாட்டை சேர்ந்த அரியட்னா குடியர்ரெஸை தவறுதலாக அறிவித்திருந்தார். அரியட்னா குடியர்ரெஸுக்கு கீரிடம் எல்லாம் அணிவித்த பிறகே, இந்த தவறை விழாக்குழுவினர் அறிந்தனர். இதனால், வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே பிரபஞ்ச அழகியாக அரியட்னா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் நடுவர்கள் எவ்வாறு அறிவிப்புகளை தவறுதலாக தெரிவிக்க முடியும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிட்டே நிகழ்த்தப்படுகிறதா? என்ற ஐயமும் எழுகிறது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு நமீதா ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நமீதா, அதைத் தொடர்ந்து ‘ஏய்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘பில்லா’ ஆகிய படங்களால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் படவாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்த சமயத்தில், உடல் எடையில் கவனம் செலுத்தாத நமீதா உடல் பெருத்து பருமன் ஆனார்.
இதனால், இவருக்கு கதாநாயகி வாய்ப்புகளைவிட, குத்துப்பாடலுக்கு ஆட வரும் வாய்ப்புகள் அதிகமானது. ஒருகட்டத்தில் அதுவும் குறைந்துபோக, சினிமாவில் இருந்து ஒதுங்கி, தனது உடல் எடையில் கவனம் செலுத்த தொடங்கினார். சிறிய இடைவெளிக்கு பிறகு, பழைய நமீதாவாக திரும்பி வந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
தற்போது பரத் நடிப்பில் உருவாகி வரும் ‘பொட்டு’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நமீதா நடித்து வருகிறார். தனது ரசிகர்களை செல்லமாக ‘மச்சான்ஸ்’ என்று அழைக்கும் நமீதா, தற்போது பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தொடர்ந்து படிக்கும்போது, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை பழச்சாறு, இளநீர் அல்லது தண்ணீர் குடியுங்கள். இது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும்’ என்று கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து நகைச்சுவை படம் எடுக்க ஆசை இருப்பதாக நடிகரும், டைரக்டருமான வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அது குறித்த செய்தியை பார்ப்போம்....
ஈரோட்டில் நடந்த ஒரு விழாவில் நடிகரும், டைரக்டருமான வெங்கட் பிரபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நடிகை பாவனாவுக்கு நடந்த பலாத்கார சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவம் திரைப்பட துறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதற்காக அவமானப்பட வேண்டும். சிறுமிகளுக்கும் கூட இந்த கொடூர சம்பவம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
என் தந்தை போல் (கங்கைஅமரன்) எனக்கு இசை துறையில் ஆர்வம் இல்லை. நான் சிறு வயதில் இருந்தே டைரக்டராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். கடவுள் அருளால் அது நடந்து விட்டது. என் தம்பி பிரேம்ஜி இசையமைப்பாளராக வர வேண்டும் என்று தான் எங்கள் குடும்பத்தினர் ஆசை.

எனக்கு அரசியல் தெரியாது. அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை உள்ளது. ரஜினிக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம். வாய்ப்பு கிடைத்தால் அவரை வைத்து நகைச்சுவை படம் பண்ணுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

படங்கள் தொடர் வெற்றியால் ஏழுமலையானை தரிசனம் செய்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார். இதுகுறித்து மேலும் விரிவாக பார்க்கலாம்...
நடிகை கீர்த்தி சுரேஷ் சனிக்கிழமை இரவு அவரது குடும்பதினருடன் திருப்பதி வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கிய அவர் நேற்று ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.
வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்கள் வழங்கினர். கோவிலில் நடிகை கீர்த்தி சுரேசை கண்டு இளைஞர்கள், பெண்கள் குரல் எழுப்பியடி கையசைத்தனர். அவர்களை பார்த்து சிரித்தபடி கீர்த்தி சுரேஷ் சென்றார்.

அவர் கூறுகையில்:- தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். சமீபத்தில் நான் நடித்து வெளிவந்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. இதற்கான நேர்த்தி கடனாக ஏழுமலையானை தரிசனம் செய்தேன். தரிசனம் நன்றாக இருந்தது என்றார்.

89-வது ஆஸ்கர் விருதுகள் வென்ற படங்களின் முழு விவரங்களை புகைப்படங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை கீழே பார்ப்போம்..
89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார். இந்த விருதுகள் வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆஸ்கர் பட்டியலில் நிறைய படங்கள் பரிந்துரையில் இருந்தன.
இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்ற படங்களின் முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்பதை கீழே பார்ப்போம்.

- கவுர ஆஸ்கர் விருது - ஜாக்கிசான்
- சிறந்த திரைப்படம் - மூன் லைட்

- சிறந்த நடிகர் - கேசி அப்லெக் (மான்செஸ்டர் பை தி சீ)

- சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்)

- சிறந்த இயக்குனர் - டேமியன் சாசெல்லி (லா லா லேண்ட்)

- சிறந்த துணை நடிகர் - மஹேர்சலா அலி (மூன் லைட்)
- சிறந்த துணை நடிகை - வயோலா டேவிஸ் (பென்சஸ்)

- சிறந்த திரைக்கதை - மான்செஸ்டர் பை தி சீ

- சிறந்த திரைக்கதை தழுவல் - மூன்லைட்
- சிறந்த அனிமேஷன் படம் - ஷுதோப்பியா
- சிறந்த வெளிநாட்டு மொழிப்படம் - தி சேல்ஸ்மேன் (ஈரான்)
- சிறந்த முழு நீள ஆவணப்படம் - எஸ்ரா எடில்மேன், கரோலின் வாட்டர்லோ (ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா)
- சிறந்த குறும் ஆவணப்படம் - தி ஒயிட் ஹெல்மெட்ஸ்
- சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - சிங்
- சிறந்த அனிமேஷன் குறும்படம் - பைபர்

- சிறந்த இசை - லாலா லேண்ட்

- சிறந்த பாடல் - லாலா லேண்ட்
- சிறந்த சவுண்ட் எடிட்டிங் - அரைவல்
- சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - ஹாக்ஸாவ் ரிட்ஜ்

Best sound mixing for 'Hacksaw Ridge'
- சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - லாலா லேண்ட்
- சிறந்த ஒளிப்பதிவு - லா லா லேண்ட்

- சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - கொலின் அட்வுட் (பேன்டாஸ்டிக் பீஸ்ட் அன்ட் வேர் டு பைன்ட்)
- சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - அலிசாண்ட்ரோ, ஜியார்ஜியோ, கிறிஸ்டோபர் நெல்சன் (சூசைட் ஸ்குவாட்)
- சிறந்த எடிட்டிங் - ஹாக்ஸாவ் ரிட்ஜ்

- சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் - ஜங்கிள் புக்

புதிய கட்சி தொடங்கிய இளைஞர்கள் நல்லகண்ணு, சகாயம் போன்றவர்களிடம் ஆலோசனை பெறுவது நலம் என்று நடிகர் விவேக் அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இணைந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் திடீரென்று புதிய கட்சி ஒன்றை தொடங்கினார்கள். அந்த கட்சிக்கு ‘என் தேசம் என் உரிமை’ என்ற பெயரை சூட்டியுள்ளனர். அவர்கள் தொடங்கிய கட்சிக்கு இளைஞர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கட்சியின் உறுப்பினரை சேர்க்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கட்சி தொடங்கிய முதல் நாளிலேயே அவர்கள் கட்சியின் பிரத்தியேக இணையதளம் மூலம் 6 லட்சம் பேர் இணைந்திருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்களுக்கு நடிகர் விவேக் ஒரு அறிவுரை வழங்கி இருக்கிறார். அவருடைய ‘டுவிட்டர்’ கணக்கு பக்கத்தில் கட்சி தொடங்கி இருக்கும் இளைஞர்களுக்காக பதிவு செய்து இருக்கும் கருத்துகள் வருமாறு:-
‘இளைஞர்கள் இணையும் அமைப்பு வரவேற்கத்தக்க பிரமிப்பு, ஆயினும் பெருங்கட்சிகளுக்கு இணையான கட்டுமானம் இல்லாததால் நல்ல கண்ணு, சகாயம் போன்ற சமூகத் தூயவர்களிடம் ஆசியும், ஆலோசனையும் பெறுவது நலம்’.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.