என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    பாலா இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த படத்திற்கான தலைப்பை போஸ்டருன் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ‘தாரை தப்பட்டை’ படத்திற்கு பிறகு பாலா, ஜோதிகாவை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. பாலா தன்னுடைய சொந்த தயாரிப்பிலேயே இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், தற்போது இப்படத்திற்கான தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இப்படத்திற்கு ‘நாச்சியார்’ என்று தலைப்பிட்டுள்ளனர். ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் இருவரும் இருக்கும்படி ஒரு போஸ்டரும், ஜோதிகா மட்டும் இருக்கும் ஒரு போஸ்டரும் வெளியாகியுள்ளது.



    பாலா தன்னுடைய படங்களில் அடித்தட்டு மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக காட்டக்கூடியவர். அந்த வரிசையில் தனது ஒவ்வொரு படங்களிலும் நடிக்கும் நடிகர், நடிகைகளை அவர்களின் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாற்றிக் காட்டுவார். அந்த வரிசையில் இந்த படத்திலும் ஜி.வி.பிரகாஷை ரொம்பவும் அழுக்காக காட்டியுள்ளார்.

    ஜோதிகா நெற்றியில் திருநீறு பட்டை அணிந்துகொண்டு குழந்தையை குளிப்பாட்டியபடி இருக்கிறார். அருகில் ஜி.வி.பிரகாஷ் கையில் விலங்கிடப்பட்டு பனியன், கால்சட்டையுடன் அமர்ந்திருப்பதுபடி ஒரு போஸ்டர் வெளியாகியிருக்கிறது. மற்றொரு போஸ்டரில் ஜோதிகா கையில் துணியைச் சுற்றி, அதன்மேல் முள்கம்பியை சுற்றுவதுபோன்று ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

    பாலா படம் வெளிவரும்வரை அந்த படத்தின் கதையை யாரும் யூகிக்க முடியாது. அதேபோல்தான், இந்த படத்தின் கதையையும் யாராலும் யூகிக்கமுடியவில்லை. இந்த போஸ்டர்கள் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது.

    இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    மறைந்த மாண்டலின் ஸ்ரீனிவாசுக்கு தேவிஸ்ரீ பிரசாத் சிறப்பு அஞ்சலி செலுத்தவுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    இன்று பல்வேறு மொழிகளில் கொடிகட்டி பறக்கும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு இசை ஆர்வம் ஊட்டியது மறைந்த இசை மாமேதை மாண்டலின் ஸ்ரீனிவாஸ்தான்.  கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த மாண்டலின் ஸ்ரீனிவாசுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் விதமாக தேவிஸ்ரீ பிரசாத் ஒரு பாடல் ஒன்றை வெளியிடவுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, ‘மாண்டலின்’ ஸ்ரீனிவாஸ் என்னுடைய குரு. அவருடைய நினைவாக "குருவே நமஹ" என்ற இசை ஆல்பத்தை வெளியிட இருக்கிறேன். அவருடைய திறமையையும் புகழையும் ஒரு பாட்டில் அடக்கிவிட முடியாது. இந்த பாடலை அவரது பிறந்த நாளான இன்று வெளியிட உள்ளேன்.



    இன்று அவரது சகோதரர் மாண்டலின் ராஜேஷ் உட்பட பிரபல இசை மேதைகளான உஸ்தாத் அம்ஜத் அலி கான், டிரம்ஸ் சிவமணி ஆகியோர் கலந்து கொள்ளும் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. அவர்களோடு நானும் இணைந்து இசை வழங்க உள்ளேன் என்றார்.

    தேவிஸ்ரீ பிரசாத் அவரது குருவுக்காக இந்த பாடலை வெளியிடுவது அவரது குரு பக்தியை பறைசாற்றுகிறது.
    இளம் பாடலாசிரியர் ஒருவர் ‘மஸ்காரா’ பாடலில் குத்தாட்டம் போட்ட அஸ்மிதாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த சலீம் படத்தில் ‘மஸ்காரா போட்டு அசத்துறியே’ என்ற பாடலில் குத்தாட்டம் போட்டவர் அஸ்மிதா. இவர் தற்போது புதுமுகங்கள் சபா, லுப்னா அமீர், ஆடுகளம் நரேன், பிளாக் பாண்டி, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘கேக்கிறான் மேய்க்கிறான்’ படத்திலும் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார்.

    இப்படத்தில் ‘புத்தனுக்கு போதிமரம், எனக்கு நீதான் போதை மரம்’ என்று தொடங்கும் இந்த பாடலில் அஸ்மிதா நடனமாடியதும் படமாக்கப்பட்டது. இந்நிலையில், தணிக்கை குழு இந்த பாடலை பார்த்து, பாடலில் இருந்த ‘புத்தனுக்கு போதி மரம்’ என்ற வரியை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இதையடுத்து, இசையமைப்பாளரும், இயக்குனரும் சேர்ந்து அந்த வரியை ‘மாமனுக்கு அத்தை மரம்’ என்று அந்த பாடலின் முதல் வரியை மாற்றி பதிவு செய்திருக்கிறார்கள்.



    இது இந்த பாடலை எழுதிய முருகன் மந்திரத்திற்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறதாம். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘புத்தனுக்கு போதி மரம்’ என்ற வரி, ‘மாமனுக்கு அத்தை மரம்’ என்று மாறியதில் வருத்தம்தான். ஒருவேளை என் வரிகளைவிட ‘மஸ்காரா’ அஸ்மிதா போட்ட ஆட்டம்தான் வரியை மாற்ற காரணமாக இருந்திருக்குமோ? என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்தளவுக்கு அஸ்மிதாவை ஆட்டம் போட வைத்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் போஸ்.

    இந்த பாடலில் புத்தன் இல்லாத குறையை ‘எங்கேயும் நான் இருப்பேன்’ படத்தில் இசையமைப்பாளர் ராம் இசையில், நான் எழுதி, விஜய் யேசுதாஸ் பாடியுள்ள ‘காற்றோடு தீபம் ஆடுதே’ பாடல் தீர்த்து வைத்துவிட்டது. மிக மென்மையான மெலடியான ‘காற்றோடு தீபம் ஆடுதே’  பாடலில், ஒரு சரணத்தில்... “பூக்கள் இல்லை என்றால் வாசம் இல்லையா? புத்தன் இல்லை என்றால் ஆசை இல்லையா? என்று எழுதி இருப்பதில் மகிழ்ச்சி என்றார், முருகன் மந்திரம். 
    அதிமுக கட்சியில் நீண்ட காலமாக இருந்து வந்த நடிகர் ராதாரவி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    சென்னை:

    நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி, ஒருகாலத்தில் திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் நீண்ட காலமாக இருந்து வந்தார். 2002-2006 காலகட்டத்தில் சைதாப்பேட்டை அதிமுக சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தார்.

    ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்துள்ளதால் திமுகவுக்கு செல்ல உள்ளதாக சமீபத்தில் நடந்த வாகை சந்திரசேகர் மகள் திருமணத்தில் கலந்து கொண்டபோது ராதாரவி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னையில் செயல் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ராதாரவி இன்று திமுகவில் இணைந்துள்ளார்.



    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

    திமுகவில் சேர்ந்ததில் மகிழ்ச்சி. நீண்ட காலமாகவே இது குறித்து நான் எனது கருத்தினை தெரிவித்து வந்தேன். வாகை சந்திர சேகரிடமும் இதுகுறித்து கலந்து ஆலோசித்து வந்தேன். என்னுடைய தாயின் துக்கத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக இருந்தார். தாயின் நினைவு நாளில் திமுகவில் சேர்ந்துள்ளேன். என்னுடைய தாய் கழகத்தில் மீண்டும் வந்துவிட்டேன்.

    நாளை தங்கச் சாலையில் நடைபெறும் திமுக கூட்டத்தில் எனது கருத்தினை விரிவாக பேச உள்ளேன். தற்போது எதிர்கட்சியாக இருக்கும் திமுக வருங்காலத்தில் ஆளும் கட்சியாக மாறும். எதிர்காலத்தில் திமுக மட்டும் தான் இருக்கும். தமிழகத்தில் தகுதியுள்ள தலைவர் யாரும் இல்லை, தளபதியால் மட்டுமே நல்ல தலைவராக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்
    சூர்யாவும், மாதவனும் ஆர்யா நடிக்கும் ‘கடம்பன்’ படத்திற்காக இணைந்துள்ளார்கள். அது எதற்கு? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஆர்யா நடித்து வரும் புதிய படம் ‘கடம்பன்’. இப்படத்தில் ஆர்யா மலைவாழ் மக்கள் கூட்டத்தில் உள்ளவராக நடிக்கிறார். இப்படத்திற்காக தனது உடற்கட்டை கட்டுமஸ்தாக உருவாக்கி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை வருகிற மார்ச் 2-ந் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, இந்த டிரைலரை நடிகர் சூர்யாவும், மாதவனும் இணைந்து வெளியிடவுள்ளனர். மார்ச் 2-ந் தேதி மாலை 5 மணிக்கு இந்த டிரைலர் வெளியிடப்படுகிறது.


    ‘கடம்பன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்துள்ளார். ‘மஞ்சப்பை‘ இயக்குனர் ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார். அடர்ந்த காடுகளுக்குள் படமாகியிருக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தனது 88-வது தயாரிப்பாக தயாரித்துள்ளது.

    மகன் என உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக நடிகர் தனுஷ் இன்று மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார். அப்போது நீதிபதி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்..
    மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு பொய்யானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே இரு தரப்பினரிடமும் உள்ள நடிகர் தனுசின் பள்ளி மாற்று சான்றிதழ்களை தாக்கல் செய்யுமாறு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இருதரப்பினரும் சான்றிதழ்களை தாக்கல் செய்தனர். நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழ்களில் அங்க மச்சம் அடையாளம் குறிப்பிடவில்லை என எதிர்தரப்பினர் வாதிட்டனர்.



    இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த 24-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் தனுசின் அங்க அடையாளம் காண இன்று (28-ந்தேதி) ஆஜராகுமாறு நடிகர் தனுசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று காலை 9.45 மணி அளவில் நடிகர் தனுஷ் தனது வக்கீல்களுடன் மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு வந்தார். தனுசின் பெற்றோரான கஸ்தூரிராஜா, விஜயலட்சுமி ஆகியோரும் ஐகோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மேலூர் தம்பதி கூறிய தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்த்து இன்று மாலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. பதிவாளர் அறையில் தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்க்கும்போது அரசு மருத்துவர் ஒருவர் உடன் இருக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை மார்ச் 2-ந் தேதி ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.

    முன்னதாக நடிகர் தனுஷ் கோர்ட்டில் ஆஜராவதை யொட்டி அவரது ரசிகர்கள் கோர்ட்டு முன்பு திரண்டிருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் நடைபெறும் போராட்டம் வெற்றி பெறும் என்று இயக்குனர் தங்கர்பச்சான் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து அப்பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் அதில் பங்கேற்றார். மேலும் நல்லாண்டார்கொல்லையில் எரிவாயு எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய், தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவு எண்ணெய், கோட்டைக்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் ஆகியவற்றை பார்வையிட்டார். நல்லாண்டார்கொல்லையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தங்கர்பச்சான் பேசியதாவது:-

    நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான். அதனால் தான் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளேன். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக சோதனை நடந்த போது 2 ஆயிரம் அடி ஆழம் வரை மண்ணில் தோண்டினர். அதில் நிலக்கரி இருப்பதை உறுதி செய்தபின்னர் அந்த பகுதி பொதுமக்களை வெளியேற்றினர். 1956-ம் ஆண்டு அங்கிருந்து பலர் வெளியேறி வெளியூர்களில் அகதிகளாக தங்கினர். எனது உறவினர்களும் பாதிக்கப்பட்டனர்.



    நிலக்கரி சுரங்கத்திற்காக நிலம் கொடுத்தவர்களில் பலருக்கு இதுவரை நிவாரணம் கொடுக்கவில்லை. வேலை வாய்ப்பு வழங்கவில்லை. இன்று 3-ம் தலைமுறையாகி விட்டது. நெய்வேலியில் 4-ம் சுரங்கத்தையும் திறந்து விட்டனர். அந்த பகுதியை சுற்றி விவசாயம் வீணாகி போனது. ஜெயங்கொண்டத்தில் அனல் மின் திட்டம் தொடங்க நிலம் கையகப்படுத்தப்பட்டது. 17 ஆண்டுகள் ஆகியும் திட்டம் தொடங்கப்படவில்லை. நிலத்தை கொடுத்த குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. அந்த பகுதி பாலைவனமாக காட்சியளிக்கிறது. சொந்த கிராமங்களை விட்டு பலர் வெளியூர் சென்றனர். நானும் எனது கிராமத்தை விட்டு சென்னை சென்றதில் எனக்கும் குற்ற உணர்ச்சி உள்ளது.

    எதற்காக இந்த விவரங்களை சொல்கிறேன் என்றால், இங்கு நடைபெறும் போராட்டம் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. தமிழக மக்களின் பிரச்சினை. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள மாணவர்கள், இளைஞர்கள் உங்களை கைவிட மாட்டார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்தி வெற்றிக்கொண்டதை போல இந்த போராட்டத்திலும் மாணவர்கள், இளைஞர்கள் உறுதியாக இருப்பார்கள். நெடுவாசல் போராட்டம் வெற்றி பெறும். ஊரை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம். நிலத்தை யார் கேட்டாலும் கொடுக்காதீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஓட்டிவந்த கார் இன்று ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், கோச்சடையான் படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

    இந்நிலையில், இன்று காலை சவுந்தர்யா ஓட்டி வந்த கார், ஆழ்வார்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதியது. கார் மோதியதில் ஆட்டோவுக்குள் தூங்கிக்கொண்டிருந்த மணி என்பவர் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆட்டோவும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.



    ஆட்டோ மீது கார் மோதிய சம்பவம் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் உடனே அந்த இடத்தில் கூட ஆரம்பித்தனர். காரை ஓட்டி வந்தது ரஜினியின் மகள் சவுந்தர்யா என்றதும், மேலும் பரபரப்பு கூடியது. நிலைமையை உணர்ந்த சவுந்தர்யா உடனடியாக தனுஷுக்கு போன் செய்து, நடந்த விஷயத்தை அவருககு எடுத்துக் கூறியுள்ளார்.

    உடனே, அங்கு பிரச்சினை செய்தவர்களிடம் தனுஷ் போனிலேயே  சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டியதாக கூறப்படுகிறது.

    தனுஷ் தரப்பிலிருந்து ஆட்டோ சேதத்திற்குண்டான பொருட்செலவையும், டிரைவரின் சிகிச்சைக்குண்டான பணத்தையும் தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட பிறகே, சவுந்தர்யா மீது எந்த வழக்கும் இல்லாமல் இந்த பிரச்சினை முடிவடைந்ததாக கூறப்படுகிறது. 
    ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் போது பிரபல இந்தி நடிகர் ஓம்புரிக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின்போது மறைந்த பிரபல திரையுலக பிரமுகர்கள் - ஆலிவுட் படஉலகின் மறைந்த உறுப்பினர்களுக்கு தொகுப்பு இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம். அந்தவகையில் கடந்த ஓராண்டில் மறைந்த பிரபல திரையுலக பிரமுகர்களுக்கு லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 89-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.



    இதில் கடந்த மாதம் மரணம் அடைந்த பிரபல இந்தி நடிகர் ஓம்புரி மற்றும் கேரி பிஷர், பிரின்ஸ், ஜீனே வில்டர், மிச்சல் சிமினோ உள்ளிட்டோர் அடங்குவர். இந்த நிகழ்ச்சியில், கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல பாடகியும், பாடல் ஆசிரியையுமான சாரா பாரெலீஸ் கலந்து கொண்டு ஓம்புரிக்கு இசை அஞ்சலி செலுத்தினார். இதற்கு இந்தி திரையுலக பிரமுகர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    ஈஸ்ட் இஸ் ஈஸ்ட், காந்தி, சிட்டி ஆப் ஜாய், உல்ப் உள்ளிட்ட மேற்கத்திய படங்களில் நடித்தவர் ஓம்புரி என்பது நினைவு கூரத்தக்கது.
    “கதாநாயகிகள் இடையே போட்டி, பொறாமை இல்லை. அனைவரும் நட்பாகவே பழகி வருகிறோம்” என்று நடிகை தமன்னா கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகை தமன்னா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:-

    “கதாநாயகிகள் மத்தியில் போட்டி இருக்கிறது என்றும், ஒருவருக்கொருவர் முறைத்துக்கொண்டு திரிகிறார்கள் என்றும் கிசுகிசுக்கள் வருகின்றன. ஒரு நடிகைக்கு வந்த பட வாய்ப்பை இன்னொரு நடிகை தட்டிப்பறிக்கிறார் என்றும் பேசுகிறார்கள். திரைக்கு முன்னால்தான் நடிகைகளை ரசிகர்கள் போட்டியாளர்களாக பார்க்க முடியும். ஆனால் திரைக்கு பின்னால் அவர்கள் வாழ்க்கை முறையே வேறு.

    ஒவ்வொரு நடிகையும் போனில் ஒருவரையொருவர் அக்கறையோடு நலம் விசாரித்துக் கொள்வார்கள். படங்கள் நன்றாக ஓடினால் அதில் நடித்த நடிகைக்கு வாழ்த்து சொல்லி பாராட்டுவார்கள். தோல்வி அடைந்தால் ஆறுதல் சொல்வார்கள். கதாநாயகிகள் இடையே நல்ல உறவு இருக்கிறது. யாரையும் போட்டியாக நினைப்பது இல்லை.



    எனக்கு நடிகைகளில் பலர் நெருங்கிய தோழிகளாக இருக்கிறார்கள். அதில் முதன்மையானவர் அனுஷ்கா. நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் திரையுலகில் யாரையும் தெரியாமல் கஷ்டப்பட்டேன். அப்போது அனுஷ்கா, என்னை விட சீனியர் நடிகையாக இருந்தும் கொஞ்சம் கூட கர்வம் பார்க்காமல் என்னோடு பழகினார். சினிமா உலகம் பற்றியும் இங்கு யாரிடம் எப்படி நடக்க வேண்டும் என்றும் அவர்தான் எனக்கு சொல்லி கொடுத்தார்.

    நடிகையாக இருப்பவர் ‘காஷ்ட்யூம் டிசைனர்’ ஒருவரை நிரந்தரமாக வைத்துக்கொண்டு ஆடை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட எனக்கு இல்லாமல் இருந்தது. அதையும் அனுஷ்காவே சொல்லி கொடுத்தார். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு உதவியாக இருந்தார். நடிகை காஜல் அகர்வாலும் எனக்கு தோழிதான். இருவரும் சினிமாவில் ஒன்றாகவே பயணத்தை ஆரம்பித்து 10 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறோம்.

    எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பிரமாதமாக நடித்து விடும் திறைமைசாலியாக காஜல் அகர்வால் இருக்கிறார். என் பார்வையிலேயே பெரிய கதாநாயகியாக வளர்ந்த சமந்தாவுடனும் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. அவர் திறமையானவர். புத்திசாலி. சினிமாவில் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு திருப்பி கொடுக்கும் நோக்கோடு சமூக சேவை பணிகள் செய்து வரும் அவரது நல்ல மனதை பாராட்ட வேண்டும்”

    இவ்வாறு தமன்னா கூறினார்
    இந்தியா-இங்கிலாந்து 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழாவை இங்கிலாந்த ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கிவைக்கிறார். இந்த நிகழச்சியில் இந்தியா சார்பில் ஜேட்லி, கமல், கபில்தேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்பு
    லண்டன்:

    இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழாவை இன்று மாலை இங்கிலாந்து ராணி இராண்டாம்  எலிசபெத் துவக்கி வைக்கிறார். லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த கலாச்சார விழாவை  ராணி துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உலகநாயகன் கமல்ஹாசன்,  சுரேஷ் கோபி, கிரிக்கெட் பிரபலம் கபில் தேவ், பாடகரும் நடிகருமான குர்தாஸ் மன், ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் ஆரோரா,  மணீஷ் மல்கோத்ரா மற்றும் அனோஷ்கா ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.



    இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், பிரதமர் மோடி தனது பெயரை முன்மொழிந்ததை மிகப் பெரும் கவுரவமாகக்  கருதுகிறேன் என்றார். இந்தியா-இங்கிலாந்து இடையேயான வரலாற்றை, கலாச்சார விழாவாக கொண்டாடும் இந்த தருணம்  மிகச்சிறந்தது. இந்தியாவில் உள்ள பல மொழிகளை இணைக்கும் பாலமாக ஆங்கிலம் இருப்பது சிறப்பான ஒன்று என்றும் கமல்  தெரிவித்தார்.

    இந்தியா-இங்கிலாந்த இடையே நடைபெறும் இந்த கலாச்சார அணிவகுப்பு விழாக்கள் மேன்மேலும் தொடர வேண்டும் என்று இந்திய  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார்.



    மேலும் இருநாடுகளின் ஒற்றுமைக்கு ஆதரமாக வரும் ஜுன் மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையே சிறப்பு கிரிக்கெட் போட்டியை  தொடங்கி வைக்க இங்கிலாந்துக்கான, இந்தியாவின் உயர் கமிஷனர் ஒய்.கே.சின்ஹா விடுத்த அழைப்பை கபில்தேவ் ஏற்றார்.

    இந்த கலாச்சார விழாவில் 90 வயதான இங்கிலாந்து ராணி, டியூக் ஆப் எடின்பர்க், இளவரசர் பிலிப், மற்றும் பேரன் இளவரசர்  வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    மேலும் முக்கிய அதிகாரிகளுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் கலாச்சார  அணிவகுப்பில் இந்தியாவின் கலாச்சார நடனங்கள், பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    எம்.ஜி.ஆர். தயாரித்து டைரக்ட் செய்த "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் அறிமுகமானவர் லதா. எம்.ஜி.ஆருடன் 16 படங்களில் இணைந்து நடித்தார்.
    எம்.ஜி.ஆர். தயாரித்து டைரக்ட் செய்த "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் அறிமுகமானவர் லதா. எம்.ஜி.ஆருடன் 16 படங்களில் இணைந்து நடித்தார்.

    "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் 3 கதாநாயகிகள். மஞ்சுளா, சந்திரகலா, லதா ஆகிய மூவரில் மஞ்சுளா எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரனில் அறிமுகம் ஆனவர். சந்திரகலா, சிவாஜி நடித்த "பிராப்தம்'' படத்தின் மூலம் பட உலகில் காலடி எடுத்து வைத்தார்.

    பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த லதா, "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்தது எப்படி?

    லதாவே கூறுகிறார்:-

    "என் தாயார் லீலாராணி, சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் கான்வென்டில் படித்தவர். என் தந்தை ராமநாதபுரம் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் சுதேச சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டு, ஆட்சிப்பொறுப்பை மத்திய அரசே ஏற்றது. அந்தக் காலக்கட்டத்தில், ராஜாஜி மந்திரிசபையிலும், காமராஜர் மந்திரிசபையிலும் என் தந்தை அமைச்சர் பதவி வகித்தார்.

    என் பெரியம்மா கமலா கோட்னீஸ், இந்திப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

    எனக்கு ஒரு அக்கா; 3 தம்பிகள்; ஒரு தங்கை. என் அக்காவும், நானும் சென்னை ஹோலிகிராஸ் கான்வென்டில் படித்தோம்.

    நான்கு வயதிலேயே, எனக்கு நடனம் மீது ஆர்வம் வந்துவிட்டது. வீட்டில் ரேடியோவில் கேட்கும் பாட்டுக்கு நானாக ஆடுவேன். பெரியம்மா நடிகையாக இருந்ததால், நான் நடனம் ஆடுவதை அவர் உற்சாகப்படுத்தனார்.

    பெரியம்மா அதோடு நின்று விடாமல், பிரபல நடனக் கலைஞர் வழுவூர் ராமையா பிள்ளையிடம் முறைப்படி நான் நடனம் கற்க ஏற்பாடு செய்தார். பெரியம்மா வீடு, அப்போது தி.நகரில் இருந்தது. அங்குதான் மாஸ்டர் வந்து எனக்கு நடனம் கற்றுத் தருவார்.

    சினிமாவில் எனக்கு அப்போது பிடித்த ஒரே நடிகை பத்மினி. அவர் நடனம் என்றால் எனக்கு உயிர். பத்மினி நடித்த படம் பார்த்தால், அன்று முழுக்க படத்தில் அவர் ஆடியபடியே ஆட வீட்டில் முயன்று கொண்டிருப்பேன்.

    என் அக்காவுக்கு நடனம் என்றால் ஆகாது. மாஸ்டரை பார்த்ததும் ஓட்டம் பிடித்து விடுவாள்!

    நடனத்தில் தேர்ந்ததும், பள்ளி விழாக்களில் நடனம் ஆடத் தொடங்கினேன். நடனத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதல் பரிசை பெறும் மாணவியாக இருந்ததால், பள்ளியிலும் எனக்கு நல்ல பெயர். அந்த அளவுக்கு எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக இருப்பேன்.

    அக்கா எனக்கு நேர் எதிர். எந்த நேரமும் அரட்டைதான். இதனால் படிப்பில் பின்தங்கிப்போன அக்கா, தேர்வில் பெயிலாகி என் வகுப்பிலேயே வந்து சேர்ந்து கொண்டார். நான் முன் பெஞ்சில் அமைதியின் வடிவாகவும், அக்கா பின்பெஞ்சில் அரட்டைத் திலகமாகவும்

    அறியப்பட்டோம்.சினிமாவுக்குப் போன அனுபவம்

    அம்மா எங்களிடம் பாசம் காட்டிய அளவுக்கு கண்டிப்பாகவும் இருந்தார். பள்ளியில் எங்காவது சுற்றுலா அழைத்துச் சென்றால்கூட பாதுகாப்பு கருதி அம்மாவும் எங்களுடன் வந்திருக்கிறார்.

    ஒருமுறை பள்ளியில் `ஹெர்குலிஸ்' என்ற ஆங்கிலப்படம் பார்க்க அழைத்துச் சென்றார்கள். படம்தானே என்று அம்மாவிடம் சொல்லவில்லை. எங்களைக் காணாமல் தேடித் தவித்த அம்மாவுக்கு, அப்புறம்தான் நாங்கள் பள்ளியில் இருந்து படம் பார்க்கப்போன விஷயம் தெரிந்திருக்கிறது. வீட்டுக்குப் போனதும் அம்மா அடி பின்னிவிட்டார். அம்மாவுக்கு தகவல் தெரிவிக்காமல் படம் பார்க்கப் போனதால் ஏற்பட்ட கோபம், அம்மாவை ஆத்திரத்தின் உச்சிக்குக் கொண்டுபோய் விட்டது. எங்களை எப்படி கண்டிப்பாக வளர்த்திருக்கிறார்கள் என்பதற்காக இதைச் சொல்ல

    வந்தேன்.பத்தாவது படிக்கும்போது `கதக்' நடனமும் கற்றுக்கொண்டேன். கிருஷ்ணகுமார் மாஸ்டர்தான் கற்றுக்கொடுத்தார். நடனப் பள்ளியில் தேறியபோது, ராமராவ் கல்யாண மண்டபத்தில் நடனமாடினேன். பரதம், கதக்  ஆடியதோடு வெரைட்டியாக சில நடன வகைகளையும் ஆடிக்காட்டினேன்.

    நடனம் சிறப்பாக நடந்து முடிந்தது. அத்தோடு அதை மறந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன்.

    ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த நேரத்தில் டெலிபோன் ஒலித்தது. நான்தான் எடுத்துப் பேசினேன். எதிர் முனையில் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் பேசினார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், "சினிமாவில் நடிப்பாயா?'' என்று கேட்டார்.

    நான், `நடிப்பதாக இல்லை' என்று சொல்லி, போனை வைத்து விட்டேன்.

    அப்போது எங்கள் வீடு அடையாறு போட் கிளப்பில் இருந்தது.

    மறுநாள் மாலை நான் பள்ளிக்கு போய்விட்டு வீடு திரும்பியபோது, பிளைமவுத் காரில் வந்து இறங்கினார், மனோகர்.

    வந்தவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். அம்மாவிடம் "எம்.ஜி.ஆர். தனது படத்தில் உங்கள் மகளை அறிமுகப்படுத்த விரும்புகிறார்'' என்று சொன்னார். அம்மா முகத்தில் அதிர்ச்சி.
    ×