என் மலர்
தற்போது விக்னேஷ் சிவன், சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவன், சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார்.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் விக்னேஷ் சிவன் படப்பிடிப்பு நடத்திவரும் நிலையில், அருகில் நடந்த ‘2.ஓ’ படப்பிடிப்பில் இருந்த ரஜினியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே நடந்ததாக கூறப்படுகிறது. ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட விக்னேஷ் சிவன், அவரை சந்தித்தது இறைவன் எனக்கு தந்த ஆஸ்கர் விருது என்று குறிப்பிட்டுள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் மூன்று கெட்டப்புகளில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் ‘மூன்று முகம்’ படத்தில் ரஜினி மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார். அதுபோல், ‘அபூர்வ சகோதர்கள்’ படத்தில் கமல் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார். அஜித்தும் ‘வரலாறு’ படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை விஜய் 3 வேடங்களில் எந்த படத்திலும் நடித்தது கிடையாது. இந்த படத்தில்தான் முதன்முதலாக விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்தார். இப்படமும் ரசிகர்களை கவர்ந்தாலும், மலையாளப் படங்கள் கைவசம் அதிகம் இருந்ததால் மலையாளத்தில் நடித்து வந்தார்.

தற்போது மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான். இவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை விஜய்யின் ‘புலி’, விக்ரமின் ‘இருமுகன்’ ஆகிய படங்களை தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்க இருக்கிறார்.
இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக இருக்கிறது.
இந்தநிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடந்த பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சுருதிஹாசன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நடிகை பாவனாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்து நடிகை சுருதிஹாசன் கூறியதாவது:-
வெளிநாடுகளில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணருகிறார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமையே இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகின்றன.
இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களை சும்மா விடக்கூடாது. அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். தண்டனைகளை கடுமையாக்குவதன் மூலமே இதுபோன்ற பாலியல் குற்றங்களை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுந்தரிபாயின் சொந்த ஊர் மதுரை. 1927-ல் பிறந்தார். சின்ன வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டவர். அப்போது, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "சிந்தாமணி'' படம் வெளிவந்து ஒரு வருடத்துக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் சுந்தரிபாய்க்கு மனப்பாடம். அந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.
இசை மீது சுந்தரிபாய்க்கு இருந்த ஆர்வத்தை கவனித்த அவர் பெற்றோர்கள், முறைப்படி சங்கீதம் கற்றுத்தந்தனர்.
உறவினர் ஒருவர் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக, 1937-ல் "சுகுணசரசா'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்கு கிடைத்தது. நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய் சம்பளத்தில், மூன்று நாட்கள் நடித்தார்.
இதன் பின், ஜெமினி நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு சேர்ந்தார். இதே சமயத்தில்தான், கொத்தமங்கலம் சுப்புவும் ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்தார்.
ஜெமினியின் முதல் படமான "மதனகாமராஜன்'' படத்தில், கொத்தமங்கலம் சுப்புவும், சுந்தரிபாயும் நடித்தனர். அதைத்தொடர்ந்து, காதல் ஏற்பட்டு இருவரும் மணந்து கொண்டனர்.
இதுபற்றி சுந்தரிபாய் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:-
"இது காதல் திருமணம் மட்டுமல்ல. கலப்பு திருமணமும்கூட. என் தாய் மொழி மராத்தி. அவர் தமிழர்.
இதன்பின், ஜெமினி எடுத்த படங்களில் எல்லாம் எனக்கொரு வேடம் தவறாமல் கிடைத்து வந்தது.
1945-ல் ஜெமினி தயாரித்த "கண்ணம்மா என் காதலி'' என்ற படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன். வசனமும், பாடலும் எழுதியதுடன் டைரக்ஷனையும் சுப்புதான் கவனித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக எம்.கே.ராதா நடித்தார்.''
இவ்வாறு சுந்தரிபாய் குறிப்பிட்டுள்ளார்.
1948-ல் ஜெமினியின் பிரமாண்டமான படமான "சந்திரலேகா'' வெளிவந்தது. அதில் முக்கிய வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.
கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரியைக் காப்பாற்றுவதற்காக, "இச்சைகளைத் தீர்க்கும் பச்சை மலைப்பாவை''யாக மாறுவேடத்தில் சென்று, ரஞ்சனை ஏமாற்றும் கட்டத்தில் ரசிகர்களிடம் சபாஷ் பெற்றார்.
சுந்தரிபாய், ஜெமினியில் சேர்ந்தபோது அவரது மாத சம்பளம் 150 ரூபாய். சந்திரலேகாவில் நடித்தபோது, அது 1,500 ரூபாயாக உயர்ந்தது.
ஜெமினியின் வெற்றிப்படமான "சம்சார''த்தில், வில்லி வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.
"வள்ளியின் செல்வன்'' படத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஏறத்தாழ 17 ஆண்டுகள் ஜெமினியில் பணியாற்றினார். ஒப்பந்தம் முடிவடைந்தபின், வெளிப்படங்களிலும் நடித்தார். அவற்றில் பெரும்பாலானவை வில்லி வேடங்கள்.
கே.பாலசந்தர் தயாரித்த "அரங்கேற்றம்'' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
300 படங்கள்
சுந்தரிபாய் நடித்த படங்கள் ஏறத்தாழ 300. சில ஆண்டுகள் உடல் நலம் இல்லாமல் இருந்த சுந்தரிபாய், அண்மையில் காலமானார்.
ராஜதுரை இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நெப்போலியன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘முத்துராமலிங்கம்’. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் பிரியா ஆனந்த், வம்சி கிருஷ்ணா, விவேக், சுமன், பெப்சி விஜயன், சிங்கம் புலி, சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு எதிராக யாகூ சினிமா பைனான்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், முத்துராமலிங்கம் படக்குழு தங்களிடம் 28.55 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகவும், கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வட்டியுடன் சேர்த்து 29 லட்சம் ரூபாயை செலுத்திவிட்டு படத்தை திரையிடும்படி படக்குழுவினருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், முத்துராமலிங்கம் படம், திட்டமிட்டபடி பிப்ரவரி 24-ம் தேதி ரிலீஸ் ஆனது. இதையடுத்து, யாகூ சினிமா பைனான்ஸ் நிறுவனம் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், முத்துராமலிங்கம் படத்தை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், விவகாரத்து பெற்ற அந்த இயக்குனர் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளாராம். படப்பிடிப்பு தளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது நடிகைக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது. செய்தியை கேள்விப்பட்ட உடனேயே கேரவனுக்குள் ஓடிச்சென்று கதவை சாத்திக் கொண்டு கதறி அழுதாராம்.

அப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த பலரும் நடிகைக்கு என்ன ஆனது? என்று பதறிப்போனார்களாம். அவர் எதற்காக அழுகிறார் என்ற விவரங்களும் தெரியாமல் பதற்றத்துடன் இருந்தார்களாம். பின்னர், சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நடிகை, வீங்கிய கண்களுடன் உடனடியாக காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு விட்டாராம்.
தற்போது அவர் இதுதொடர்பாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தனக்கு நேர்ந்த சோதனைகளை பற்றி அவர் கருத்து பதிவும் செய்துள்ளார். அதில், வாழ்க்கையில் சில நேரம் நான் கீழே விழுந்திருக்கிறேன். எனக்கு வருத்தங்களும், தோல்விகளும் ஏற்பட்டுள்ளது. அதை திரும்பி பார்க்க நான் ஒருபோதும் விரும்பவில்லை.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட வருத்தங்கள், தோல்விகளில் இருந்து மீண்டு வருவேன் என்று உறுதியாக நம்பினேன். இப்போதும் அதுபோல தடைகளை தாண்டி எழுந்து வருவேன் என்று குறிப்பிட்டு உள்ளார். நடிகை பாவனாவின் இந்த துணிச்சலான பதிவிற்கு மலையாள நடிகர் பிருதிவிராஜ் உள்பட பலர் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
‘பாகுபலி’ முதல் பாகத்தில் ஒல்லியாக இருந்த அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை அதிகரித்தார். இதனால் குண்டாகி விட்டார். ‘பாகுபலி-2’ படத்திலும் முதல் பாகத்தைப்போல அனுஷ்கா இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி கால அவகாசம் கொடுத்தார்.

படத்தின் மற்ற காட்சிகளை படமாக்கி விட்டு அனுஷ்கா தொடர்பான காட்சிகளை தாமதமாக எடுத்தார். அதற்குள் உடல் எடையை குறைத்து விடுவேன் என்று கூறிய அனுஷ்கா எடையை குறைக்க எடுத்த முயற்சிகள் அவர் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. எனவே வேறு வழியில்லாமல் குண்டு அனுஷ்காவை வைத்தே ‘பாகுபலி-2’-ஐ ராஜமவுலி படமாக்கினார்.

இதில் அவரது உருவத்தை கிராபிக்ஸ் மூலம் ஒல்லி ஆக்கி இருக்கிறார்கள். இதற்கான கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால்தான் ‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் வெளியாக காலதாமதம் ஆகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவும் ஒரு காரணம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கும் ராஜமௌலி, ‘டிரைலர் தாமதத்துக்கு இது மட்டும் காரணம் அல்ல’ என்றும் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடிக்கும் லொள்ளு சபா சாமிநாதன், விஜய் ஆண்டனியின் ‘சலீம்’, தற்போது வெளிவந்துள்ள ‘எமன்’ படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்தார். இதுபற்றி கூறிய அவர்....
“நான் காமெடி வேடங்களில் நடித்த படங்களுக்கு பாராட்டு கிடைத்தது. ஆனால் ‘சலீம்’ படத்தில் என்னை குணசித்திர வேடத்தில் பார்த்தவர்களில் பலர் இனிமேல் இதுபோன்ற படங்களில் நடித்து அடுத்த கட்டத்துக்கு போகவேண்டும் என்று கூறினார்கள்.

இந்த நிலையில், ‘எமன்’ படத்தின் நான்தான் விஜய் ஆண்டனியின் நண்பராக நடிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி பாத்திமா மேடம் கூறி இருக்கிறார். என்னிடமும், என் கணவருக்கு நீங்க தான் சரியான செட்டு என்றார். இந்த படத்தின் இயக்குனர் ஜீவாசங்கர் படம் முழுவதும் நான் இருப்பதாக சொன்னார். அதன்படி நிறைய காட்சிகள் கொடுத்தார்.
இப்போது ‘எமன்’ படத்தில் நான் நடித்துள்ள குணசித்திர வேடத்தை பார்த்துவிட்டு ஏராளமானோர் பாராட்டுகிறார்கள். இந்த பாத்திரம் மனதில் நிற்கிறது என்கிறார்கள். இந்த பாராட்டு மனநிறைவை தருகிறது. இனி காமெடியைவிட குணசித்திர வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்” என்றார்.
‘சார்லி சாப்ளின்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராமனின் மகள். பின்னர் நடன இயக்குனர் ஆனார். இப்போது திரைப்பட இயக்குனராக மாறி இருக்கிறார்.
படம் பற்றி கூறிய காயத்ரி ரகுராம்...
“கவர்ச்சிகரமான சினிமா உலகில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்கும், உலகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய கதை. நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படத்தை இயக்குகிறேன்.

அவர்களுடைய கனவுகளையும், ஆசைகளையும் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சொல்லும் படம். குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதாரண கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை பயணிக்கிறாள். ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே ‘யாதுமாகி நின்றாய்’ படத்தின் கதை” என்றார்.
நிகழ்ச்சியில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மூன்று கட்டமாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துள்ளது. ராஜ்கிரண் கேக் வெட்டி படப்பிடிப்பை முடித்து வைத்தார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதையடுத்து, மீதி பணிகளையும் விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி இப்படம் வெளியாகும் என ஏற்கனெவே அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.








