என் மலர்
தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘ஈகா’ என்ற பெயரிலும் வெளியாகி பரபரப்பாக ஓடிய படம் 2012-ம் ஆண்டுக்கான சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நடித்த சுதீப் சிறந்த வில்லனாகவும், படத்தை இயக்கிய ராஜமவுலி சிறந்த டைரக்டராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இதே படத்தில் பணியாற்றிய கீரவாணிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும், செந்திலுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதும் கிடைத்துள்ளன. மேலும் சிறந்த பட தொகுப்பாளர், சிறந்த ஆடியோகிராபர், ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சிறந்த கலை இயக்குனருக்கான விருதுகள் என்று மொத்தம் 9 விருதுகளை இந்த படம் பெற்று உள்ளது. கவுதம் மேனன் இயக்கிய ‘ஏதே வெள்ளி போயின்டி மனசு’ படத்தில் நடித்த நானிக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது.

இந்த படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது. 2013-ம் ஆண்டுக்கான சிறந்த படமாக ‘மிர்சி’ தேர்வு செய்யப்பட்டது. இந்த படத்தில் நடித்த பிரபாசுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், அஞ்சலி பட்டீலுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளன. சிறந்த வில்லன் நடிகராக சம்பத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த குணசித்திர நடிகருக்கான விருது பிரகாஷ்ராஜுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டது குறித்து நடிகை சமந்தா கூறும்போது, “ஏதே வெள்ளி போயின்டி மனசு படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை. என்றாலும் அதில் நடித்த எனக்கு விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
இந்த வழக்கில் இரு தரப்பினரும் தனுஷ் பெயரிலான பள்ளி அசல் சான்றிதழ்களை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் ஏற்கனவே பள்ளி மாற்றுச்சான்றிதழை இருதரப்பினரும் தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில், நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மாற்றுச்சான்றிதழில் அவரது உடலில் உள்ள அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை.
இதையடுத்து தனுஷ் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த 28-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் ஆஜரானபோது, அவருடைய உடலில் அங்க மச்ச அடையாளங்களை டாக்டர் கள் குழுவினர் சரிபார்த்தனர். பின்னர் அதுதொடர்பான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய நீதித்துறை பதிவாளருக்கு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேலூர் தம்பதி தரப்பில் வக்கீல் டைட்டஸ் ஆஜராகி, “தனுஷின் பெற்றோர் யார் என்பதை கண்டுபிடிக்க வசதியாக அவருக்கு மரபணு பரிசோதனை செய்யக்கோரி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளோம். அந்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
அப்போது நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் சுவாமிநாதன், “மரபணு பரிசோதனை கேட்கும் மனுவின் மீது மேம்போக்காக உத்தரவிட முடியாது. அந்த குற்றச்சாட்டுக்கு போதுமான முகாந்திரம் இருக்கிறதா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி விரிவாக விவாதிக்க வேண்டும். அப்போது தான் மரபணு பரிசோதனை தேவையா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும்” என்று வாதாடினார்.
இதைத்தொடர்ந்து, மேலூர் தம்பதியின் வக்கீலிடம் “நீங்கள் ஏன் ஆரம்பத்திலேயே மரபணு பரிசோதனை செய்யும்படி கேட்டு மனு தாக்கல் செய்யவில்லை. இவ்வளவு நாட்கள் கழித்து ஏன் கேட்கிறீர்கள்” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர், “தேவையான ஆவணங்களை திரட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால் தான் இப்போது கேட்கிறோம்” என்றார்.
பின்னர் ‘இதுதொடர்பான விவாதத்துக்கு நாங்கள் தயார்’ என்று இருதரப்பு வக்கீல்களும் நீதிபதியிடம் கூறினார்கள்.
அதற்கு நீதிபதி, “நான் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க முடியாது. இனி வேறு நீதிபதி தான் விசாரிப்பார். எனவே அவரிடம் விவாதத்தை நடத்திக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
பின்னர், ‘இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கதிரேசன்-மீனாட்சி தம்பதியினரின் மனுவை மேலூர் கோர்ட்டு விசாரிக்க தடை விதிக்கப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் விசாரணையை 9-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
அதே நேரத்தில் பாதிரியார் இறந்துவிட்டதாக போலீசில் தகவல் தெரிவிக்கிறார் படத்தின் நாயகி மகிமா நம்பியார். அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் காணாமல் போன தொழிலதிபரின் மனைவி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்படுகிறது. எனவே இந்த சம்பவம் குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் அருண் விஜய் மகிமா நம்பியாரிடம் தனது விசாரணையை தொடங்குகிறார்.

இந்த சம்பவம் குறித்து அருண் விஜய் அடிக்கடி மகிமாவை தொடர்பு கொள்வதால் மகிமாவின் பெற்றோர் கடுப்பாகின்றனர். இந்த நேரத்தில் மகிமாவை தனக்கு கல்யாணம் செய்து வைக்கும்படி நாயகன் அருண் விஜய் கேட்க அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கின்றனர். அதனைத்தொடர்ந்து அருண் விஜய்-மகிமா இடையே காதல் மலர்கிறது. அப்போது, கொலை சம்பவம் குறித்த சில முக்கிய தகவல்களை அருண்விஜய்யிடம் மகிமா தெரிவிக்கிறார்.
அதே நேரத்தில் குழந்தை இல்லாமல் தவிக்கும் அருண் விஜய்யின் அண்ணியும், அமித் பார்கவியின் மனைவியுமான அபிநயா கர்ப்பம் தரிக்கிறாள். பின்னர் ஒருநாள் அபிநயா தூக்கு மாட்டி இறக்கிறாள். இந்த வழக்கையும் விசாரிக்கும் அருண் விஜய், தனது விசாரணையில் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து உயிரிழப்பது குறித்த முக்கிய தகவலை கண்டுபிடிக்கிறார். இந்த குற்றத்தின் பின்னணியில் இருப்பது யார்? அந்த குற்றவாளிகளை அருண் விஜய் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது படத்தின் த்ரில்லிங்கான மீதிக்கதை.

அருண் விஜய்யை பொறுத்தவரையில், முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார். படத்தில் விசாரணை காட்சிகளில் மட்டுமல்லாமல், அனைத்து இடத்திலும் தேவையான நடிப்புகளை கொடுத்து, ஆர்ப்பாட்டம் இன்றி அழகாக நடித்திருப்பது சிறப்பு. குறிப்பாக தன்னுடைய அண்ணி உயிரிழப்பு குறித்த வழக்கில் ஒரு போலீஸ் அதிகாரியாக தனது அண்ணனையே விசாரிக்கும் அந்த காட்சியில் முத்திரை பதித்திருக்கிறார்.

மகிமா நம்பியார் படம் முழுக்க அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஒரு சில காட்சிகளில் வந்து செல்லும் நடிகையைப் போல் இல்லாமல், படம் முழுவதும் வலம் வருகிறார். இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படும்படி உள்ளது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் மகிமா, தன்னால் முன்னணி நடிகர்களுடனும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

நடிகர் விஜயகுமார் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது அனுபவ நடிப்பின் முதிர்ச்சியை காட்டியுள்ளார். விசாரணையின் போது அருண் விஜய்யுடன் வரும் தம்பி ராமையா, தனக்குரிய மைண்ட் வாய்ஸ் பாணியில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். குறிப்பாக அரவிந்த் ஆகாஷ் கொலையின் போது அவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படி உள்ளது.
மற்ற படங்களைப் போலவே இந்த படத்திலும் அபிநயா தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தில் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அபிநயாவின் நடிப்பும் அவரது பேச்சும் ரசிக்கும்படி உள்ளது. படத்தில் வில்லன்களாக வரும் வம்சி கிருஷ்ணா மற்றும் அரவிந்த் ஆகாஷ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். இருவருமே தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக அளித்துள்ளனர். சண்டைக் காட்சிகளிலும் சற்றும் பின்வாங்காத அவர்களது நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.

இயக்குநர் அறிவழகன் தனக்குரிய ஸ்டைலில் குற்றம் 23 படத்தை தொய்வு ஏதுமின்றி சிறப்பாக இயக்கியுள்ளார். பெரிய படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் சிறிய அளவிலான பட்ஜெட்டில் இப்படத்தை இயக்கியுள்ள அறிவழகன் இந்த படத்தின் மூலம் தன்னை மீண்டும் திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார்.
படத்தில் இடம்பெறும் எந்த காட்சிகளும் ஒதுக்கும்படி இல்லாமல் அனைத்து காட்சிகளையும் அழகாக, நேர்த்தியாக கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திறம்பட கையாண்டிருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் திருமணமாகி குழந்தையில்லாமல் தவிக்கும் பெண்களின் மனநிலையை தெளிவுபடுத்தியதில் அவர் நின்றிருக்கிறார். குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களை அவர்களின் மாமியார் வார்த்தையால் நோகடிப்பது, அவர்களுக்கு என்னமாதிரியான வலியை கொடுக்கும் என்று அருண்விஜய் பேசும் வசனங்கள் அந்த வேதனையை அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறது. குழந்தை பெற, வசதியான பெண்கள் செய்யும் குற்றச் செயல்களையும் சிறப்பாக காட்டியுள்ளார்.
சாதாரண மெடிக்கல் குற்றப் பின்னணி கொண்ட படங்களைப் போல் இல்லாமல், ஒரு சிறந்த கதைக்களத்துடன் ரசிக்கும்படி சில தகவல்களை கூறி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. படத்தின் இசையைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் படத்தின் கதையை ஒட்டியே பாடல்களை அமைத்துள்ளது சிறப்பு. படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை மிரட்டியிருக்கிறார். கே.எம்.பாஸ்கரின் ஒளிப்பதிவு வித்தியாசமான ஒளியில் அழகாக காட்சிகளை படம்பிடித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘குற்றம் 23’ குறை இல்லை.
இந்த படத்தை பிரபலப்படுத்துவதற்காக ஷாருக்கான் கடந்த மாதம் 24-ந் தேதி மும்பையில் இருந்து டெல்லிக்கு கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். முக்கிய ரெயில் நிலையங்களில் அவர் தனது படத்தை மேம்படுத்தினார். ரெயிலில் இருந்தவாறு ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.

ஷாருக்கானை பார்ப்பதற்காக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அவரது ரசிகர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா ரெயில் நிலையத்தில் ரெயில் சிறிது நேரம் நின்றபோது ஷாருக்கானை பார்க்க அவரது ரசிகர்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலின் போது ஏற்பட்ட பரபரப்பில் மாரடைப்பு ஏற்பட்டு ரெயில் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் கடைகள், பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஜிதேந்திர சோலன்கி என்பவர் ஷாருக்கானுக்கு எதிராக வழக்கு பதியும்படி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். மேலும் ஷாரூக்கானின் `ரயீஸ்' பட ப்ரமோஷனுக்கு அனுமதி அளித்த மேற்கு ரயில்வே கோட்ட இயக்குநர் மீதும் போலீசில் வழக்கு பதிய கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் பிரியங்கா லால், இந்த வழக்கு குறித்த விசாரணையை தீவிரப்படுத்தும் படி ரயில்வே துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை குறித்த முழு அறிக்கையை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
பாலசந்தர் நடத்திய வெற்றி நாடகங்களில் ஒன்று "மெழுகுவர்த்தி.'' ஒரு முறை அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.
நாடகம் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது. அவர் பேசும்போது, "பாலசந்தரைப் போன்ற இளைஞர்கள், திரை உலகில் சேவை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய வாய்ப்பை நான் கண்டிப்பாக பெற்றுத்தருவேன்'' என்றார்.
அப்போது எம்.ஜி.ஆர். நடிக்க "தெய்வத்தாய்'' என்ற படத்தை தயாரிக்க, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. அப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பை பாலசந்தருக்கு வழங்குமாறு வீரப்பனிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படியே, பாலசந்தரை அழைத்து, வசனம் எழுதும் பொறுப்பை ஆர்.எம்.வீ. ஒப்படைத்தார்.
அதுவரை சினிமா பற்றிய எண்ணமே இல்லாமல், தன் சிந்தனை, செயல் அனைத்தையும் நாடகத்துறையிலேயே ஈடுபடுத்தியிருந்த பாலசந்தரின் திரை உலகப்பிரவேசம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. இது, பாலசந்தரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த்திரை உலக வரலாற்றிலும் பெரும்திருப்பு முனையை ஏற்படுத்தியது.
சினிமாவுக்கு வசனம் எழுதுவது என்பது பாலசந்தருக்கு புதிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவம் பற்றி பாலசந்தர் கூறியதாவது:-
"ஒவ்வொரு காட்சிக்கும் நான் எழுதித்தரும் வசனங்களை, படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பாக, கூட்டியோ, குறைத்தோ மாற்றியமைத்து ஆர்.எம்.வீ. அனுப்பி வைப்பார். `நம்முடைய வசனங்கள் இப்படி சிதைக்கப்படுகிறதே' என்று முதலில் நான் வருந்தியது உண்டு.
ஆனால், நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வசனத்தில் இருக்க வேண்டிய மாற்றங்கள் பற்றி பின்னர் தெரிந்து கொண்டேன். ஒரு முறை நான் எழுதியிருந்த ஒரு பாரா வசனத்தை, அப்படியே அடித்து அதை ஒரே ஒரு வாக்கியமாகத் திருத்தி எழுதியிருந்த ஆர்.எமë.வீ.யின் திறமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து ஜனரஞ்சகமான காட்சி அமைப்பு, பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்கிற அளவுக்கு எழுதப்பட்ட வசனங்களை நான் கூர்ந்து கவனித்து வந்தேன்.
இன்னும் சொல்லப்போனால், இந்த ஒரே திரைப்பட அனுபவத்தில் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது ஏராளம்.
அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இன்னமும் எனக்கு பலமாகவும், ஆதாரமாகவும் இருக்கிறதோ என்று கூட இப்போது எண்ணத் தோன்றுகிறது'' என்கிறார், பாலசந்தர்.
"தெய்வத்தாய்'' படம் 1964 ஜுலை 18-ந்தேதி வெளிவந்தது. எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் நடித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கியிருந்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
படம் பெரிய வெற்றி பெற்றது. தான் வசனம் எழுதிய படம் வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், பாலசந்தர். எனினும், `இந்தப் படத்தில் நம்முடைய வேலை அப்படி ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லையே' என்ற எண்ணம்தான் மனதில் மேலோங்கியிருந்தது.
"தெய்வத்தாய்'' படத்தைத் தொடர்ந்து, சில படங்களுக்கு கதை-வசனம் எழுத பாலசந்தருக்கு அழைப்பு வந்தது.
நாடகமாக பெரிய வெற்றி பெற்ற "சர்வர் சுந்தர''த்தை படமாக்க ஏ.வி.எம். நிறுவனம் தீர்மானித்தது. அதன் கதை-வசனத்தை பாலசந்தர் எழுதினார். முத்துராமன், நாகேஷ், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்தனர். கிருஷ்ணன்-பஞ்சு டைரக்ட் செய்தனர். படம் பெரிய வெற்றி பெற்றது.
அடுத்து, இதே ஆண்டில் முக்தா சீனிவாசன் தயாரித்து டைரக்ட் செய்த "பூஜைக்கு வந்த மலர்'' படத்துக்கு பாலசந்தர் வசனம் எழுதினார்.
இதே ஆண்டில் வெளிவந்த "நீலவானம்'' படத்துக்கும் பாலசந்தர் கதை- வசனம் எழுதினார். சிவாஜி கணேசனும், தேவிகாவும் இணைந்து நடித்தனர். தேவிகாவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம்.
இந்த படத்தை டைரக்ட் செய்தவர் பி.மாதவன். "நீலவானம்'' சிறந்த படமாக அமைந்தது. இந்த சமயத்தில், பாலசந்தர் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பு தேடி வந்தது.
பாலிவுட் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் மூத்த நட்சத்திரமான அமிதாப் பச்சன், ஆணும் பெண்ணும் வேறு இல்லை இருவரும் ஒன்றுதான் என பாலின சமத்துவத்தை முன்னெடுக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில், “என்னுடைய மரணத்திற்கு பின்னால், நான் சேர்த்துவைத்த அனைத்து சொத்துக்களும் மகன் அபிஷேக் மற்றும் மகள் ஸ்வேதா நந்தா ஆகியோருக்கு சரிசமமாக பங்கிட்டு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், பாலின சமத்துவத்திற்கு ஆதரவாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதன் கீழ் #genderequality, #WeAreEqual ஆகிய ஹேஷ்டேக்களையும் இணைத்துள்ளார்.

சமீபத்தில் அமிதாப் நடித்து வெளியான ‘பிங்க்’ என்ற திரைப்படம், பெண்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதல்களை குறித்து பேசும் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை கண்டித்து கேரளாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாவனா மீதான பாலியல் கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து கேரளத்தை காப்பதற்கான போராட்டம் என்ற பெயரில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, காங்கிரஸ் மாநில தலைவர் சுதீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
கேரளாவில் பெண்கள் மீதான தாக்குதல்கள், கற்பழிப்புகள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து விட்டது. இதற்கு காரணம் குற்றவாளிகளுக்கு கேரள அரசு துணை போவது தான். நள்ளிரவில் ஒரு பெண் நடந்து செல்வது தான் நமக்கு முழு சுதந்திரம் கிடைத்தற்கான அர்த்தம் என்று காந்தி கூறி உள்ளார்.
ஆனால் கேரளாவில் பகலில் கூட நடமாட முடியாத நிலை உள்ளது. பினராய் ஆளும் கேரளம் கொடும் கிரிமினல்கள், குற்றவாளிகள் ஆளும் கேரளாவாக மாறி உள்ளது. எந்தவொரு இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆளும் மாநில அரசே குற்றவாளிகளுக்கு உறுதுணையாக உள்ளது
இதனால் கிரிமினல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த காங்கிரஸ் கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சியில் உம்மன்சாண்டியின் திறமையான ஆட்சியால் மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருந்தனர். இரவிலும், பகலிலும் பெண்கள் தைரியமாக நடமாடும் நிலை இருந்தது. ஆனால் தற்போது பினராய் விஜயனின் 8 மாத ஆட்சியில் அரசியல் கொலைகள், பெண்கள் மீதான கற்பழிப்புகள் அதிகரித்து விட்டது. வயது வரம்பில்லாமல் பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.
கம்யூனிஸ்டு ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட எந்தவொரு பெண்ணின் வழக்கிலாவது குற்றவாளிகளை கைது செய்தது உண்டா? நாட்டில் முன்னோடியாக நடிகர், நடிகைகள் செயல்பட்டு வருகிறார்கள். மனிதனின் வாழ்க்கையை நடித்து காட்டுவது தான் சினிமா.

சினிமா பார்த்து யாரும் கெட்டுப்போவதில்லை. கேரளாவில் திருமணம் ஆகாத இளம் நடிகையை கடத்தி பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பினராய் விஜயன் செயல்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட அந்த நடிகை துணிச்சலாக தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் வெளியில் கொண்டு வந்துள்ளார். அவர் அந்த பாதிப்பில் இருந்து நிச்சயம் மீண்டு வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.
பின்னர் ராதாரவி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. மூன்று பிரிவுகளாக பிரிந்து விட்டது. இதனால் நான் அக்கட்சியிலிருந்து விலகி தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்து விட்டேன்.
முதல்வர் பதவியை வகிக்க தகுதி இல்லாதவர் பழனிசாமி. அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், உண்ணாவிரத போ ராட்டம் என்றும் அறிவித்து வருகின்றனர்.அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

சாதாரண ஒரு நபர் ஒரு மருத்துவமனையிலிருந்து வெளியேறும் போது அவரின் மருத்துவ அறிக்கையை உடனடியாக மருத்துவமனை அளிக்கிறது. ஆனால் ஒரு முதல்வருக்கு ஏன் அளிக்க வில்லை. இதற்கு எல்லாம் சம்மந்தப்பட்ட மருத்துவமனையும் அரசும் உரிய விளக்கங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்றார். அங்கு ரஜினியை சந்தித்தார். இன்று ரஜினி மனைவி லதாவுக்கு பிறந்த நாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் ரஜினியுடன் சிறிது நேரம் கருணாஸ் பேசிக்கொண்டிருந்தார். ரஜினி வீட்டில் இருந்து வெளியே வந்த அவரை பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்.
அப்போது கருணாஸ் கூறும்போது, ரஜினி சார் மீது எப்போதும் எனக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு. அவரது ‘பாட்ஷா’ படம் நாளை டிஜிட்டல் முறையில் வெளியாகிறது. இதற்கு வாழ்த்து சொல்வதற்காக அவரை சந்தித்தேன்.

எனக்கு எம்.எல்.ஏ சீட் கிடைத்த போது ரஜினி சார் எனக்கு போன் செய்து வாழ்த்தினார். இப்போது வெற்றி பெற்ற பிறகு அந்த மகிழ்ச்சியை தெரிவிப்பதற்காகவும் அவரை சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அரசியல் பற்றி அவரிடம் எதுவும் பேசவில்லை.
டுவிட்டரில் கமல்ஹாசன் தெரிவிக்கும் கருத்து குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சிலர் வேண்டும் என்றே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நான் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்.
இவ்வாறு கருணாஸ் கூறினார்.
காடும் காடு சார்ந்த நல்ல கதை என்பதால் நடிகர் நாசர் சிரமப்பட்டுத் தேதி கொடுத்து நடித்ததாக இப்படத்துக்குப் பாராட்டு வழங்கியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளரைப் பண மோசடி செய்து ஏமாற்றியிருக்கிறார் மோசடி ஆசாமி ஒருவர். இதுகுறித்து தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் ராவ் கூறும்போது,

நான் கன்னடம், தெலுங்கில் சில படங்களைத் தயாரித்திருக்கிறேன். தமிழ்ப் படங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. எனவே தமிழ் திரையுலகில் கால்பதிக்க ஆர்வமாக இருந்தேன். தமிழில் என் முதல் படம் ஏனோ தானோ வென்று இருக்கக்கூடாது, நல்ல கதையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் காத்திருந்தேன். அப்படிப்பட்ட சூழலில் பிரதாப் முரளி வந்து ஒரு கதை சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதையே 'திட்டிவாசல்' என்கிற படமாக எடுக்கத் தயாரானோம்.
நாசர், மாஸ்டர் மகேந்திரன், தனுஷெட்டி நடிப்பில் படத்தை உருவாக்கத் திட்டமிட்டோம். 2015 மிஸ் இந்தியாவான ஈஷா அகர்வாலை இதில் தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். பல பிரச்சினைகளை எல்லாம் மீறி ஒருவழியாக படப்பிடிப்பு தொடங்கி நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் 50 லட்ச ரூபாய் இருந்தால் படத்தை சரியானபடி முடித்துவிடலாம் என்று தோன்றியது. அப்போது இயக்குநர் பிரதாப் முரளி மூலம் சம்சுதீன் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் தனது ரசூல் மார்க்கெட்டிங் என்கிற நிறுவனத்தின் மூலம் பணம் வாங்கிக் கொடுப்பதாக கூறினார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் கம்பெனி மூலம் கமல்ஹாசன் படம், பிரகாஷ்ராஜ் படம் போன்றவற்றுக்குக்கூட ஏற்கெனவே பைனான்ஸ் வாங்கிக் கொடுத்து இருப்பதாகக் கூறினார். எங்களை அப்படி நம்பவும் வைத்தார். ஆரம்பத்தில் நாங்கள் 50 லட்சம் போதும் என்றோம். ஆனால் அவரோ “அவர்கள் பெரிய இடம், அவர்களுக்கு 50 லட்சம் எல்லாம் சாதாரணமான தொகை, கோடிக் கணக்கில்தான் கொடுப்பது வாங்குவது செய்வார்கள். ஒரு கோடி ரூபாய் வேண்டுமானால் வாங்கித் தருகிறேன்'' என்றார்.
சற்றே யோசித்த நாங்கள், பிறகு படவெளியீடு வரை எல்லாவற்றுக்கும் தேவைப்படுமே எனச் சரி என்று கூறினோம். 'அதற்கு நீங்கள் பிராசசிங் கட்டணம் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தரவேண்டும்' என்றார். நீங்கள் கொடுக்க்கப் போகிற பணத்தில் கமிஷனைக் கழித்துக் கொண்டு தரலாமே என்றோம். அவர் ''அந்தக் கமிஷனைத் தந்தால்தான் இந்த வேலையை மேலே நகர்த்த முடியும் ''என்றார்.
எனக்கு அவர் மீது மனதின் ஒரு மூலையில் சந்தேகம் துளிர்த்தாலும் எங்கள் இயக்குநர் பிரதாப் முரளி அவரை நூறு சதவிகிதம் முழுதாக நம்பினார். என்னையும் நம்பும்படி கூறினார். சரியென்றும் ஒப்பந்தம் போட்டோம். 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ப்ளாங்க் செக்காகக் கொடுத்தோம். அது அவரது கம்பெனியில் மறுநாளே பாஸாகி விட்டது.
ஆனால் அவரிடமிருந்து எந்த விஷயமும் நகரவில்லை. ஒருவாரம் ஆனது, ஒருமாதம் ஆனது, போய்க் கேட்டோம் அவரிடம் பேசும்போது பணம் மும்பையிலிருந்து வரும் என்று கூறினார். யார் யாரிடம் எல்லாமோ போனில் இந்தியிலே பேசினார். அவர் பேசிய இந்தி எதிராளி பேசாமலேயே இவரே எல்லாம் பேசியது என்பது புரிந்தது. பிறகு நான் போன் செய்தால் என் போனை எடுப்பதில்லை இயக்குநர் போனை மட்டுமே எடுப்பார்.
ஒருநாள் துபாயிலிருந்து பணம் வரும் என்றும் வெஸ்டர்ன் யூனியனில் பணம் வரும் என்றும் கூறி ஒரு டிரான்ஸாக்ஷன் எண்ணைக் கொடுத்தார் அது போலி என்று பிறகுதான் தெரிந்தது. நம்பிக்கையாக அவர் கூறியதை நம்பி படப்பிடிப்புக்கே போய் விட்டோம். மீண்டும் பேசிய போது, கோவை எஸ் பேங்கில் பணம் போடப்பட்டு விட்டதாக ஒரு டிரான்ஸாக்ஷன் ஐடி கொடுத்தார். போய் விசாரித்தபோது அப்படி எதுவுமில்லை என்றார்கள்.
தாளூரில் பணத்துக்குக் காத்திருந்து 3 நாள் ஆகிவிட்டன. இனியும் அந்த ஆளை நம்புவது வீண் என்று சிரமப்பட்டு வேறு ஏற்பாடு செய்து படப்பிடிப்பைப் முடித்து வந்தோம். படப்பிடிப்பை முடித்து வந்த பிறகு ஒருநாள் போனோம். ஏற்கெனவே அவரிடம் கொடுத்திருந்த என் ப்ளாங்க் காசோலைகள் மூன்றையும் வாங்கி வந்தோம்..
மூன்று மாதங்கள் போனது. மீண்டும் ஒருநாள் சம்சுதீன் இருந்த அலுவலகம் தேடிப் போனோம் மூடியிருந்தது. வீடு தேடிப் போனோம். அது நாலாவது மாடியில் இருக்கும். அதுவும் மூடியிருந்தது. ஆளைக் காணவில்லை. இதுவரை ஆறுமாதமாகி விட்டது.

என்னிடம் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வாங்கி விட்டு ஏமாற்றி விட்டார். இதையே நினைத்து கவலைப்பட்டால் படம் பாதிக்கப்படும் என்று சிரமப்பட்டு பணம் புரட்டி மீதமிருந்த படப்பிடிப்பை முடித்து விட்டோம். நான் கொடுத்த காசோலை ஒரு கணக்கில் போயுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அந்த ஆளை மட்டும் காணவில்லை. அந்த மோசடி ஆளைப் பிடிக்க முடியாதா? அதற்கான சட்டபூர்வமான நடவடிக்கையில் இறங்க இருக்கிறோம்.
எனக்குள்ள கவலை எல்லாம் அந்த மோசடி ஆள் சம்சுதீன் என்பவர் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி இருக்கிறாரோ? என்பதுதான். இப்படி ஏமாந்த கடைசி ஆளாக நான் மட்டுமே இருக்க வேண்டும். இந்த மோசடி ஆளிடம், இவர் போன்ற ஆட்களிடம் யாரும் இனிமேலும் ஏமாறக்கூடாது என்றுதான் இதை வேதனையுடன் ஊடகங்களிடம் கூறுகிறேன்.
தமிழ்ச் சினிமாத் துறையை இதுவரை பெருமையுடன் நினைத்திருந்தேன். இவ்வளவு மோசடிப் பேர்வழிகள், பித்தலாட்டக் காரர்கள் இருக்கிறார்கள் என்று சத்தியமாக எனக்குத் தெரியாது என்று வேதனையுடன் கூறினார்.
நயன்தாரா படமும், விஜய் சேதுபதி படமும் ஒரே நாளில் களத்தில் இறங்கப்போவதையே அப்படி சூசகமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘கவண்’. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டியான் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தை மார்ச்-31ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்தனர். இந்நிலையில், திடீரென்று இப்படம் ரிலீசாகும் அதே தேதியில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரா’ படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிடப்போவதாகவும் தெரிகிறது.
எனவே, ஒரே தேதியில் விஜய் சேதுபதி-நயன்தாரா நடிக்கும் படங்கள் மோதும் நிலை உருவாகியிருக்கிறது.
முதல் படத்திலேயே காட்சிக்கு காட்சி பிரமிப்பு, பிரம்மாண்டம் என அனைத்தையும் புகுத்தி ரசிகர்களை கட்டிப் போட்டி வைத்திருக்கும் ராஜமௌலி, இரண்டாம் பாகத்தை எப்போது வெளியிடுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி உலகம் முழுவதிலும் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதற்கு முன்னார், இங்கிலாந்தில் இந்தியாவின் 70-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

ஏப்ரல் 24-ந் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உலகின் பல திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது. இதில் ‘பாகுபலி 2’ ம் திரையிடப்படவுள்ளது. இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உள்ளிட்ட பல பிரபலங்கள் ‘பாகுபலி-2’ ம் பாகத்தை காணவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எனவே, உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் பார்ப்பதற்கு முன்பாகவே ‘பாகுபலி-2’ படத்தை இந்திய பிரதமர் மோடியும், இங்கிலாந்து ராணியும் இந்த படத்தை பார்த்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி வெளிவரும்வரை காத்திருப்போம்.








