என் மலர்
அஜித் படத்தை திரையிட்டால் அந்த தியேட்டரை தீயிட்டு கொளுத்துவேன் என்று கன்னட நடிகர் ஒருவர் ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
கர்நாடகாவில் தமிழ் படங்கள் டப்பிங் செய்யப்பட்டும், நேரடியாக வெளிவந்தும் பெரிய வசூல் மழையை குவித்தன. இதனால், கன்னட படங்களின் வசூல் பெரிய அளவில் பாதித்தது. எனவே, டப்பிங் படங்களை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என்ற தடை இருந்து வந்தது.
இந்த தடை கடந்த சில தினங்களுக்கு முன்னால் விலகியது. இதைத் தொடர்நது முதல் படமாக கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ என்ற பெயரில் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு இன்று வெளியாகி இருக்கிறது.
கர்நாடகாவில் 60 திரையரங்குகளில் திரையிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தாலும், பெங்களூருவில் மட்டும் இப்படம் எந்த திரையரங்குகளிலும் ரிலீசாகவில்லையாம். போதிய தியேட்டர் கிடைக்காததால் படம் ரீலீசாகவில்லை என்று ஒரு பக்கம் காரணம் கூறுகின்றனர்.

மற்றொரு பக்கம் நடிகரும், அரசியல் பிரமுகருமான ஜக்கேஷ் என்பவர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தை திரையிட்டால் அந்த தியேட்டரை தீயிட்டு கொளுத்துவேன், இதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளதால் பெங்களூரில் இப்படத்தை திரையிடவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜக்கேஷின் இந்த பேச்சு திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ் படங்களை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 11-ந் தேதி போராட்டம் ஒன்றும் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலா இயக்கும் நாச்சியார் படத்தில் ரஜினி பட தயாரிப்பாளர் ஒருவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
இயக்குனர் பாலா தற்போது ஜோதிகா-ஜி.வி.பிரகாஷை வைத்து ‘நாச்சியார்’ படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஈயான் ஸ்டுடியோஸ் மற்றும் பாலாவின் பி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ராக்லைன் வெங்கடேஷ் தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை தயாரித்தவர். பல படங்களுக்கு விநியோகஸ்தராகவும் பணியாற்றியுள்ளார். முதன்முறையாக ‘நாச்சியார்’ படம் மூலம் நடிகராக களமிறங்கியிருக்கிறார்.

‘நாச்சியார்’ படம் செப்டம்பரில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் அடுத்த நடிக்கவிருக்கும் படத்தின் ஒரு சண்டைக்காட்சிக்காக ரூ.35 கோடி வரை செலவிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார் அப்படத்தின் ஹீரோ பிரபாஸ். இப்படத்தின் பணிகள் முடிவடைந்தபிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார் என்றே சொல்லலாம். தற்போது, ‘பாகுபலி-2’ படத்தின் அனைத்துகட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பிரபாஸ் அடுத்ததாகவும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படத்திலேயே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை சுஜித் என்பவர் இயக்கவுள்ளார். படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி என்று முன்பே செய்திகள் வெளியிட்டிருந்தார்கள்.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டும் ரூ.35 கோடி செலவிடப்போவதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ் சினிமாவில் ஒரு சண்டைக் காட்சிக்கு செலவழிக்கப்படும் அதிகபட்ச தொகை இது என்று கூறப்படுகிறது. இதில், நிறைய கார்களை வைத்து சேசிங் காட்சிகளாக உருவாக்கவிருக்கிறாராம். 20 நிமிடம் இந்த காட்சி இடம்பெறுமாம்.
இப்படத்திற்கு சங்கர்-எசான்-லாய் இசையமைக்கிறார்கள். மதி ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் ஆர்ட் பணியை மேற்கொள்கிறார். மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாவதால் மூன்று மொழிகளுக்கும் நன்கு தெரிந்த நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக நாங்கள் ஏன் தியாகம் செய்யவேண்டும் என்று சத்யராஜ், இல.கணேசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் விவசாயிகளும், இளைஞர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த இல.கணேசன், சமீபத்திய பேட்டி ஒன்றில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக தமிழக மக்கள் தியாகம் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.
இவருடைய இந்த சர்ச்சை பேச்சு பலரது மத்தியிலும் பெரிய எதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இல.கணேசனின் இந்த பேச்சு குறித்து சத்யராஜிடம் கேட்டதற்கு அவர் கூறும்போது, “ஹைட்ரோ-கார்பன் திட்டத்துக்காக நாங்கள் உயிரை விட்டு தியாகம் செய்ய வேண்டும்? என்று சொன்னவர்கள் அவர்கள் அந்த தியாகத்தை செய்வார்களா? தியாகம் என்றால் செத்துப் போக சொல்கிறார்களா? மக்களை பாதிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும், அதைப் பற்றி அறிவித்திருந்தாலும், அந்த பகுதியில் வாழும் மக்கள் அந்த திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தால், கண்டிப்பாக அந்த திட்டத்தை கைவிடவேண்டும்.

நான் பெரிய தொழில்நுட்ப வல்லுநர் கிடையாது. ஆனாலும், இதைப்பற்றியெல்லாம் நான் படித்திருக்கிறேன். பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளையும் படித்தேன். அதனுடைய பாதிப்பு என்னவென்று தெரிந்தது. அது கொடுமையான பாதிப்பாக இருக்கிறது. ஆகையால், இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். நெடுவாசலில் போராடும் அனைத்து போராட்டக்காரர்களுக்கும் என்னுடைய முழு ஆதரவு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.

தனுஷ், அனிருத் ஆகியோரின் அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டு மீண்டும் சுசித்ரா சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
கடந்த சில நாட்களாக பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுசித்ரா எதுவும் வாய் திறக்காத நிலையில், அவரது கணவர் கார்த்திக், சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை யாரோ சிலபேர் முடக்கிவிட்டதாகவும், அவர்கள்தான் தகாத பதிவுகளை வெளியிட்டதாகவும், தற்போது சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை திரும்ப பெற்றுவிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
இனிமேல், அவரது டுவிட்டர் கணக்கில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகள் வராது என்று எண்ணியிருந்த வேளையில், திடீரென்று அவரது டுவிட்டர் தளத்தில் தனுஷ்-திரிஷா, அனிருத்-ஆண்ட்ரியா, டிடி, ஹன்சிகா உள்ளிட்டவர்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு, மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இந்த படங்களால் திரையுலக பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த புகைப்படங்களை பதிவு செய்த சிலமணி நேரங்களிலேயே சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து அந்த புகைப்படங்கள் எல்லாம் அகற்றப்பட்டுவிட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்வகையில் சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் மேலும் சில பதிவுகள் வெளிவந்துள்ளது.
அதாவது, நான் இதைப் போன்று மோசமானவற்றை பகிர்வேன் என்று நினைப்பவர்கள் என்னை தொடரவேண்டாம். இதுபோல் அடிக்கடி நடப்பது எனக்கு எரிச்சலாக இருக்கிறது. நான் நடிகர், நடிகைகளுடன் பேசுவதே கிடையாது. அவர்களின் புகைப்படங்கள் எதுவும் என்னிடம் கிடையாது. இதையெல்லாம்விட நான் இப்படி மற்றவர்களை இழிவுபடுத்தும் ஆளும் கிடையாது.

இந்த மாதிரி வேலை செய்துகொண்டிருக்கும் நபரின் ஆசை நான் எனது டுவிட்டர் கணக்கை முடக்கிவிட வேண்டும் என்பதே. என்னை நிஜமாகவே நேசிக்கும் மக்கள் இங்கு இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். எனவே, என்ன செய்யவேண்டும் என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னை உண்மையாக பின்தொடர்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

என்னை வெறுப்பவர்கள் நீங்களாகவே என்னை தொடர்வதை நிறுத்திவிடுங்கள். என்னால் யாருக்கும் தொந்தரவு வேண்டாம். என் கணக்கை முடக்கியவர்களும் என்னை தயவுசெய்து தொடரவேண்டாம். இந்த விஷயத்தில் நான் யாரையும் குற்றம் சொல்லப்போவதில்லை. காவல்துறையிடமும் புகார் செய்யப்போவதில்லை. வெறுப்பவர்கள் தயவுசெய்து என்னை தொடரவேண்டாம் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு விளக்கம் வந்தபோதிலும், இந்த பதிவுகளையும் சுசித்ராதான் பதிவு செய்தாரா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு சுசித்ரா நேரில் வந்து பதில் சொன்னால்தான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி விழும் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

கிருஷ்ணா - சுவாதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘யாக்கை’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
நாயகன் கிருஷ்ணா கோயம்புத்துரில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நாயகி சுவாதியும் அதே கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறாள். அவளை பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார் கிருஷ்ணா. ஒருகட்டத்தில் இருவரும் நட்பாக பழக ஆரம்பிக்க, நாளடைவில் அது காதலாக மாறுகிறது.
சுவாதி படிப்பு மட்டுமில்லாமல், தனது அப்பா நடத்திவரும் ஊனமுற்ற குழந்தைகளின் காப்பகத்திலும் சென்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையை நடத்தி வரும் குரு சோமசுந்தரம், அரிய வகை ரத்தங்கள் உள்ள அனைவரையும் தேடிக்கண்டுபிடித்து, அவர்களை ஏதாவது ஒரு விபத்துக்குள்ளாக்கி, அந்த ரத்தத்தை எடுத்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்து பணம் சம்பாதித்து வருகிறார்.

இதில், சுவாதியின் ரத்தமும் அரிய வகை ரத்தம் என்று அறியும் குரு சோமசுந்தரம், அவளை நோக்கியும் தனது பார்வையை செலுத்துகிறார். இதற்கிடையில், சென்னையில் குரு சோமசுந்தரத்தின் அப்பாவான ராதாரவி மர்மமான முறையில் இறக்கிறார். அவரது கொலை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி பிரகாஷ் ராஜ் கொலைக்கான காரணத்தை தேடுகிறார். ஒருகட்டத்தில் குரு சோமசுந்தரம் அந்த கொலையை செய்திருப்பாரா? என்ற சந்தேகமும் அவருக்கு எழுகிறது. ஆனால், அவர் அந்த கொலையை செய்யவில்லை என்பது தெரியவருகிறது.

அப்படியானால் ராதாரவியை கொன்றது யார்? அவருடைய கொலைக்கு பின்னணி என்பதை பிரகாஷ் ராஜ் கண்டுபிடித்தாரா? குரு சோமசுந்தரத்தால், சுவாதியின் நிலை என்னவாயிற்று? என்பதற்கு பிற்பாதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
கல்லூரி நாயகனாக கிருஷ்ணா துள்ளலான நடிப்பில் அசத்தியிருக்கிறார். சுவாதியுடன் ரொமான்ஸ் காட்சிகளில் எல்லாம் தனது திறமையான நடிப்பில் கவர்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் செண்டிமெண்டாக நடித்து அனைவரையும் அழ வைத்திருக்கிறார்.

சுவாதி படத்தில் ரொம்பவும் அழகாக தெரிகிறார். இவர் கொடுக்கும் ஒவ்வொரு முகபாவணைகளும் அத்தனை அழகு. படத்தில் ரொம்பவும் மெச்சூரிட்டியான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்திருக்கிறார். காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளிடம் இவர் பழகும் காட்சிகள் எல்லாம் அருமை.
விசாரணை அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் அலட்டல் இல்லாத நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். இவருக்கு ஆக்ஷன் என்று எதுவுமே இல்லாவிட்டாலும், அமைதியாக வந்து அசத்தியிருக்கிறார். வில்லனாக வரும் குரு சோமசுந்தரத்தை ‘ஜோக்கர்’-இல் பார்த்து ரசித்த அளவுக்கு இந்த படத்தில் ஏனோ முழுமையாக ரசிக்க முடியவில்லை. கோட் சூட் என இவர் பேசும் ஆங்கில வசனங்கள்கூட ரொம்பவும் செயற்கையாக இருப்பதுபோல் தெரிகிறது. ராதாரவி ஒன்றிரண்டு காட்சிகள் வந்து, தனது நடிப்பை நிறைவு செய்திருக்கிறார்.

இயக்குனர் குழந்தை வேலப்பன் பணத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடும் தனியார் மருத்துவத்துறையின் தகிடுதத்தங்களை படம் பிடித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருக்கிறார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். ஆனால், படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருப்பதால் படம் எதிர்பார்த்த சுவாரஸ்யத்தை கொடுக்கவில்லை. அதேபோல், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, அனைவருக்கும் நன்கு புரியும்படியும் படத்தை கொடுத்திருக்கலாம்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் நிறைவாக இருக்கிறது. சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவு நிறைய காட்சிகள் நமக்கு அழகிய ஓவியமாக தெரிகிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா மேலும் பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘யாக்கை’ நம்பிக்கை இல்லை.

மனைவி, மகளை கொன்று விடுவதாக இந்திப்பட இயக்குனர் மகேஷ் பட்டிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த உத்தரபிரதேச வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பிரபல இந்திப்பட இயக்குனர் மகேஷ் பட். இவர் மும்பை ஜூகுவில் உள்ள தனது வீட்டில் மனைவி சோனி ரஸ்தானுடன் வசித்து வருகிறார். மகேஷ் பட்டுக்கு சஹின் பட், பூஜா பட், அலியா பட் என்ற 3 மகள்கள் உள்ளனர். இதில், அலியா பட் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 26-ந் தேதி அதிகாலை 1 மணியளவில் மகேஷ் பட்டின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று அவர் பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய ஆசாமி தனக்கு ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லையெனில் உங்கள் மனைவி சோனி ரஸ்தான், மகள் அலியா பட் ஆகியோரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். மேலும் அந்த ஆசாமி மகேஷ் பட்டின் செல்போனுக்கு பணம் கேட்டு மிரட்டி குறுந்தகவல்களும் அனுப்பினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் பட், இது குறித்து உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த வழக்கை சிறப்பு பிரிவு போலீசார் கையில் எடுத்தனர். விசாரணையில், மகேஷ் பட்டுக்கு வந்த மிரட்டல் அழைப்பு உத்தர பிரதேசத்தில் இருந்து பேசப்பட்டது தெரியவந்தது. அங்கிருந்து சந்தீப் சாகு (வயது24) என்பவர் தான் மகேஷ் பட்டிடம் பணம் கேட்டு மிரட்டியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் உடனடியாக உத்தரபிரதேசம் சென்று உள்ளூர் போலீசார் உதவியுடன் சந்தீப் சாகுவை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரை விசாரணைக்காக மும்பை அழைத்து வருகின்றனர். இந்த சம்பவம், இந்திப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனர் விஜய் மறு திருமணம் செய்துகொள்ளப்போவதாக வெளிவந்த செய்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவருடைய விளக்கத்தை கீழே விரிவாக பார்ப்போம்.
இயக்குனர் விஜய்யும் நடிகை அமலாபாலும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை ஒரு வருடத்தை முழுதாக நிறைவு செய்யாத நிலையில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து போயினர். சட்டரீதியாகவும் விவகாரத்து பெற்றனர்.

இந்நிலையில், விவகாரத்து பெற்றவுடன், இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், இந்த செய்தியை கேள்விப்பட்ட அமலாபால் கதறி அழுததாகவும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று இயக்குனர் விஜய் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, சமீப நாட்களாக, ஒரு சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்கின்ற ஜோடிக்கப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றது.

இதுபோன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத செய்திகள் என்னை மேலும் மேலும் வருத்தப்பட வைக்கின்றது. என்னுடைய வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு ஆற்றி வரும் ஊடக நண்பர்களிடம், இதுபோன்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற தார்மீக உரிமை எனக்கு இருக்கின்றது என்று நினைக்கின்றேன்.
ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்கவேண்டும் என்பதே என்னுடைய கடமை. அதை முழு மனதோடு நிறைவேற்றுவேன் என்று கூறியுள்ளார்.

சாந்தனு - சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகியுள்ள ‘முப்பரிமாணம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
நாயகன் சாந்தனுவும், நாயகி சிருஷ்டி டாங்கேவும் பொள்ளாச்சியில் சிறு வயதிலேயே பக்கத்து பக்கத்து வீட்டில் ஒன்றாக வளர்ந்து வருகிறார்கள். சாந்தனுவின் அப்பா ஒரு போலீஸ்காரர். நாயகியின் அண்ணன் ரவி பிரகாஷ் ஒரு சாதி வெறியர். ஒருமுறை தனது சாதிக்காரப் பொண்ணு சாதி மாறி திருமணம் செய்துகொண்டதால், காதல் ஜோடியை கொலை செய்கிறார். இதனால், சாந்தனுவின் அப்பா அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.
இதனால், சாந்தனுவின் குடும்பத்துக்கும் சிருஷ்டியின் குடும்பத்துக்கும் பகை ஏற்படுகிறது. சிருஷ்டியின் அப்பா தனது அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு சாந்தனுவின் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி கொடுக்கிறார். ரவி பிரகாஷையும் வெளியே கொண்டு வருகிறார்.

தனியாக பிரிந்த நாயகனும், நாயகியும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். வேறு ஊருக்கு மாற்றலாகி சென்ற சாந்தனுவின் குடும்பம் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொள்ளாச்சிக்கே வருகிறது. பிளஸ் டூ படிக்கும் சிருஷ்டியிடம் தனது நட்பை புதுப்பித்துக் கொள்ள சாந்தனு படாதபாடு படுகிறார். ஒருகட்டத்தில் சாந்தனுவும், சிருஷ்டியும் பழைய நட்பை புதுப்பித்து காதலர்களாகிறார்கள்.
இந்நிலையில், பிளஸ் 2 படிப்பை முடித்த சிருஷ்டி, மருத்துவ படிப்புக்காக சென்னை செல்கிறாள். சென்னைக்கு சென்றாலும் சாந்தனு, அடிக்கடி சிருஷ்டியை சந்தித்து காதலை வளர்த்து வருகிறார். ஒருகட்டத்தில் சிருஷ்டியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. இதற்கு காரணமாக, சாந்தனுவிடம் தனது வீட்டில் தங்களது காதல் விவகாரம் தெரிந்துவிட்டதாகவும், இதனால், இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் கூறுகிறாள்.

அவள்மீது உள்ள அளவு கடந்த காதலால் சாந்தனு, அவளது உயிரை இழக்க விரும்பாமல் காதலை மட்டும் விட்டுக்கொடுத்துவிட்டு, தன்னை வருத்திக் கொள்கிறார். போதைக்கு அடிமையாகி சிருஷ்டி டாங்கேவை மறக்க நினைக்கிறார். ஒருகட்டத்தில் போதைக்கு முழுவதும் அடிமையாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெறுகிறார்.
சிகிச்சை பெற்று வெளியே வரும் நாளில், சிருஷ்டி டாங்கேவுக்கும், நடிகரான ஸ்கந்தா அசோக்குக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது. அப்போது திடீரென்று அந்த திருமணத்தின் உள்ளே புகுந்து, துப்பாக்கி முனையில் சிருஷ்டி டாங்கேவை கடத்திக்கொண்டு கேரளாவுக்கு செல்கிறார் சாந்தனு.

சாந்தனு மீது விருப்பமில்லாத சிருஷ்டி டாங்கேவை அவர் கடத்தி செல்ல காரணம் என்ன? சிருஷ்டி டாங்கே சாந்தனுவை வெறுக்க காரணம் என்ன? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.
சாந்தனு படத்தின் ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக வந்து கலகலப்பாகவும், பிற்பாதியில் மொட்டை போட்டு, வித்தியாசமான கெட்டப்புடன் வில்லத்தனம் கலந்து நடிப்பதாகவும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். சிருஷ்டி டாங்கேவுடான காதல் காட்சிகளில் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்து அசத்தியிருக்கிறார்.
சிருஷ்டி டாங்கேவுக்கு படத்தில் வலுவான கதாபாத்திரம். ஆனால், அந்த கதாபாத்திரத்தை உணராமல் படம் முழுக்க சிரித்துக் கொண்டே வந்து அந்த கதாபாத்திரத்தின் உள்ள வலுவை தவிடு பொடியாக்கியிருக்கிறார். இதனால், இவரது கதாபாத்திரத்தை ரசிக்க முடியாமலேயே போய்விடுகிறது. இருப்பினும், கிளைமாக்ஸ் காட்சியில் செண்டிமென்ட்டாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறார்.

ஸ்கந்தா அசோக் படத்திலும் நடிகனாகவே வந்து, தனது நடிப்பால் அவரது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். சாதி வெறி பிடித்தவராக வரும் ரவி பிரகாஷ் நடிப்பில் அசத்தியிருக்கிறார். படம் முழுக்க ஒரு வித்தியாசமான வில்லனாக இவரை பார்க்க முடிகிறது. தம்பி ராமையா, அப்புக்குட்டி, லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் காமெடிக்கென்று இருந்தாலும் இவர்களது காமெடி பெரிதாக எடுபடவில்லை.
இயக்குனர் அதிரூபன் படத்தின் தலைப்புக்கேற்றவாறு பால்ய வயது நட்பு, அதன்பிறகு ஏற்படும் இளம் வயது காதல், காதல் முறிவுக்கு பிறகு ஏற்படும் பிரச்சினை என முப்பரிமாணங்களில் இப்படத்தை கொடுத்திருக்கிறார். முதல் பாதி காதல், ஊடல் என படம் மெதுவாக சென்றாலும், பிற்பாதியில், அவளை கடத்தியதற்கான காரணங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் இடங்களில் எல்லாம் படம் விறுவிறுப்படைகிறது. இருப்பினும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கிளைமாக்சில் தனது குரு பாலாவின் பாணியை கடைபிடித்து அனைவரையும் கண்கலங்க வைத்துவிடுகிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். திரையுலக பிரபலங்கள் அனைவரும் சேர்ந்து ஆடும் ‘பார்ட்டி சாங்’ பாடல் மட்டும் ரொம்பவும் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் தனது பாணியை பின்பற்றி பாராட்டு பெறுகிறார். ராசாமதியின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் ‘முப்பரிமாணம்’ முயற்சி தேவை

திரைப்படத்துறையினருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சமந்தா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ஆந்திர அரசு சார்பில் சிறந்த தெலுங்கு படங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களாக இந்த விருதுகள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுக்கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு தற்போது அறிவித்து உள்ளது.
தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘ஈகா’ என்ற பெயரிலும் வெளியாகி பரபரப்பாக ஓடிய படம் 2012-ம் ஆண்டுக்கான சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நடித்த சுதீப் சிறந்த வில்லனாகவும், படத்தை இயக்கிய ராஜமவுலி சிறந்த டைரக்டராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இதே படத்தில் பணியாற்றிய கீரவாணிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும், செந்திலுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதும் கிடைத்துள்ளன. மேலும் சிறந்த பட தொகுப்பாளர், சிறந்த ஆடியோகிராபர், ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சிறந்த கலை இயக்குனருக்கான விருதுகள் என்று மொத்தம் 9 விருதுகளை இந்த படம் பெற்று உள்ளது. கவுதம் மேனன் இயக்கிய ‘ஏதே வெள்ளி போயின்டி மனசு’ படத்தில் நடித்த நானிக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது.

இந்த படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது. 2013-ம் ஆண்டுக்கான சிறந்த படமாக ‘மிர்சி’ தேர்வு செய்யப்பட்டது. இந்த படத்தில் நடித்த பிரபாசுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், அஞ்சலி பட்டீலுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளன. சிறந்த வில்லன் நடிகராக சம்பத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த குணசித்திர நடிகருக்கான விருது பிரகாஷ்ராஜுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டது குறித்து நடிகை சமந்தா கூறும்போது, “ஏதே வெள்ளி போயின்டி மனசு படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை. என்றாலும் அதில் நடித்த எனக்கு விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

நடிகர் தனுஷ் மீதான வழக்கை மேலூர் கோர்ட்டு விசாரிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இரு தரப்பினரும் தனுஷ் பெயரிலான பள்ளி அசல் சான்றிதழ்களை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் ஏற்கனவே பள்ளி மாற்றுச்சான்றிதழை இருதரப்பினரும் தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில், நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மாற்றுச்சான்றிதழில் அவரது உடலில் உள்ள அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை.
இதையடுத்து தனுஷ் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த 28-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் ஆஜரானபோது, அவருடைய உடலில் அங்க மச்ச அடையாளங்களை டாக்டர் கள் குழுவினர் சரிபார்த்தனர். பின்னர் அதுதொடர்பான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய நீதித்துறை பதிவாளருக்கு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேலூர் தம்பதி தரப்பில் வக்கீல் டைட்டஸ் ஆஜராகி, “தனுஷின் பெற்றோர் யார் என்பதை கண்டுபிடிக்க வசதியாக அவருக்கு மரபணு பரிசோதனை செய்யக்கோரி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளோம். அந்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
அப்போது நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் சுவாமிநாதன், “மரபணு பரிசோதனை கேட்கும் மனுவின் மீது மேம்போக்காக உத்தரவிட முடியாது. அந்த குற்றச்சாட்டுக்கு போதுமான முகாந்திரம் இருக்கிறதா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி விரிவாக விவாதிக்க வேண்டும். அப்போது தான் மரபணு பரிசோதனை தேவையா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும்” என்று வாதாடினார்.
இதைத்தொடர்ந்து, மேலூர் தம்பதியின் வக்கீலிடம் “நீங்கள் ஏன் ஆரம்பத்திலேயே மரபணு பரிசோதனை செய்யும்படி கேட்டு மனு தாக்கல் செய்யவில்லை. இவ்வளவு நாட்கள் கழித்து ஏன் கேட்கிறீர்கள்” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர், “தேவையான ஆவணங்களை திரட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால் தான் இப்போது கேட்கிறோம்” என்றார்.
பின்னர் ‘இதுதொடர்பான விவாதத்துக்கு நாங்கள் தயார்’ என்று இருதரப்பு வக்கீல்களும் நீதிபதியிடம் கூறினார்கள்.
அதற்கு நீதிபதி, “நான் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க முடியாது. இனி வேறு நீதிபதி தான் விசாரிப்பார். எனவே அவரிடம் விவாதத்தை நடத்திக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
பின்னர், ‘இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கதிரேசன்-மீனாட்சி தம்பதியினரின் மனுவை மேலூர் கோர்ட்டு விசாரிக்க தடை விதிக்கப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் விசாரணையை 9-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்-மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகியுள்ள குற்றம் 23 படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே நேரத்தில் அந்த பாதிரியாரை பார்க்க செல்லும் பெண் காணாமல் போகிறார். காணாமல் போன அந்த பெண்ணின் கணவரான பிரபல தொழிலதிபர் ஒருவர் போலீஸ் கமிஷனரான விஜயகுமாரின் உதவியை நாடுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை துணை ஆணையராக வரும் அருண் விஜய் அந்த பெண் மாயமானது குறித்த தீவிர விசாரணையில் இறங்குகிறார்.
அதே நேரத்தில் பாதிரியார் இறந்துவிட்டதாக போலீசில் தகவல் தெரிவிக்கிறார் படத்தின் நாயகி மகிமா நம்பியார். அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் காணாமல் போன தொழிலதிபரின் மனைவி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்படுகிறது. எனவே இந்த சம்பவம் குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் அருண் விஜய் மகிமா நம்பியாரிடம் தனது விசாரணையை தொடங்குகிறார்.

இந்த சம்பவம் குறித்து அருண் விஜய் அடிக்கடி மகிமாவை தொடர்பு கொள்வதால் மகிமாவின் பெற்றோர் கடுப்பாகின்றனர். இந்த நேரத்தில் மகிமாவை தனக்கு கல்யாணம் செய்து வைக்கும்படி நாயகன் அருண் விஜய் கேட்க அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கின்றனர். அதனைத்தொடர்ந்து அருண் விஜய்-மகிமா இடையே காதல் மலர்கிறது. அப்போது, கொலை சம்பவம் குறித்த சில முக்கிய தகவல்களை அருண்விஜய்யிடம் மகிமா தெரிவிக்கிறார்.
அதே நேரத்தில் குழந்தை இல்லாமல் தவிக்கும் அருண் விஜய்யின் அண்ணியும், அமித் பார்கவியின் மனைவியுமான அபிநயா கர்ப்பம் தரிக்கிறாள். பின்னர் ஒருநாள் அபிநயா தூக்கு மாட்டி இறக்கிறாள். இந்த வழக்கையும் விசாரிக்கும் அருண் விஜய், தனது விசாரணையில் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து உயிரிழப்பது குறித்த முக்கிய தகவலை கண்டுபிடிக்கிறார். இந்த குற்றத்தின் பின்னணியில் இருப்பது யார்? அந்த குற்றவாளிகளை அருண் விஜய் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது படத்தின் த்ரில்லிங்கான மீதிக்கதை.

அருண் விஜய்யை பொறுத்தவரையில், முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார். படத்தில் விசாரணை காட்சிகளில் மட்டுமல்லாமல், அனைத்து இடத்திலும் தேவையான நடிப்புகளை கொடுத்து, ஆர்ப்பாட்டம் இன்றி அழகாக நடித்திருப்பது சிறப்பு. குறிப்பாக தன்னுடைய அண்ணி உயிரிழப்பு குறித்த வழக்கில் ஒரு போலீஸ் அதிகாரியாக தனது அண்ணனையே விசாரிக்கும் அந்த காட்சியில் முத்திரை பதித்திருக்கிறார்.

மகிமா நம்பியார் படம் முழுக்க அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஒரு சில காட்சிகளில் வந்து செல்லும் நடிகையைப் போல் இல்லாமல், படம் முழுவதும் வலம் வருகிறார். இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படும்படி உள்ளது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் மகிமா, தன்னால் முன்னணி நடிகர்களுடனும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

நடிகர் விஜயகுமார் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது அனுபவ நடிப்பின் முதிர்ச்சியை காட்டியுள்ளார். விசாரணையின் போது அருண் விஜய்யுடன் வரும் தம்பி ராமையா, தனக்குரிய மைண்ட் வாய்ஸ் பாணியில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். குறிப்பாக அரவிந்த் ஆகாஷ் கொலையின் போது அவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படி உள்ளது.
மற்ற படங்களைப் போலவே இந்த படத்திலும் அபிநயா தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தில் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அபிநயாவின் நடிப்பும் அவரது பேச்சும் ரசிக்கும்படி உள்ளது. படத்தில் வில்லன்களாக வரும் வம்சி கிருஷ்ணா மற்றும் அரவிந்த் ஆகாஷ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். இருவருமே தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக அளித்துள்ளனர். சண்டைக் காட்சிகளிலும் சற்றும் பின்வாங்காத அவர்களது நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.

இயக்குநர் அறிவழகன் தனக்குரிய ஸ்டைலில் குற்றம் 23 படத்தை தொய்வு ஏதுமின்றி சிறப்பாக இயக்கியுள்ளார். பெரிய படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் சிறிய அளவிலான பட்ஜெட்டில் இப்படத்தை இயக்கியுள்ள அறிவழகன் இந்த படத்தின் மூலம் தன்னை மீண்டும் திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார்.
படத்தில் இடம்பெறும் எந்த காட்சிகளும் ஒதுக்கும்படி இல்லாமல் அனைத்து காட்சிகளையும் அழகாக, நேர்த்தியாக கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திறம்பட கையாண்டிருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் திருமணமாகி குழந்தையில்லாமல் தவிக்கும் பெண்களின் மனநிலையை தெளிவுபடுத்தியதில் அவர் நின்றிருக்கிறார். குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களை அவர்களின் மாமியார் வார்த்தையால் நோகடிப்பது, அவர்களுக்கு என்னமாதிரியான வலியை கொடுக்கும் என்று அருண்விஜய் பேசும் வசனங்கள் அந்த வேதனையை அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறது. குழந்தை பெற, வசதியான பெண்கள் செய்யும் குற்றச் செயல்களையும் சிறப்பாக காட்டியுள்ளார்.
சாதாரண மெடிக்கல் குற்றப் பின்னணி கொண்ட படங்களைப் போல் இல்லாமல், ஒரு சிறந்த கதைக்களத்துடன் ரசிக்கும்படி சில தகவல்களை கூறி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. படத்தின் இசையைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் படத்தின் கதையை ஒட்டியே பாடல்களை அமைத்துள்ளது சிறப்பு. படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை மிரட்டியிருக்கிறார். கே.எம்.பாஸ்கரின் ஒளிப்பதிவு வித்தியாசமான ஒளியில் அழகாக காட்சிகளை படம்பிடித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘குற்றம் 23’ குறை இல்லை.