என் மலர்
செய்திகள்

எனது சொத்துக்கள் சமமாக பங்கிடப்படும்: பாலின சமத்துவத்துக்கு ஆதரவாக அமிதாப் பச்சன் குரல்
பாலின சமத்துவத்தின் அடிப்படையில் தன்னுடைய சொத்துக்களை தனது மகன் மற்றும் மகள் இருவருக்கும் சரிசமமாக பங்கிட்டுக் கொடுக்க இருப்பதாக பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
மும்பை:
பாலிவுட் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் மூத்த நட்சத்திரமான அமிதாப் பச்சன், ஆணும் பெண்ணும் வேறு இல்லை இருவரும் ஒன்றுதான் என பாலின சமத்துவத்தை முன்னெடுக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில், “என்னுடைய மரணத்திற்கு பின்னால், நான் சேர்த்துவைத்த அனைத்து சொத்துக்களும் மகன் அபிஷேக் மற்றும் மகள் ஸ்வேதா நந்தா ஆகியோருக்கு சரிசமமாக பங்கிட்டு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், பாலின சமத்துவத்திற்கு ஆதரவாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதன் கீழ் #genderequality, #WeAreEqual ஆகிய ஹேஷ்டேக்களையும் இணைத்துள்ளார்.

சமீபத்தில் அமிதாப் நடித்து வெளியான ‘பிங்க்’ என்ற திரைப்படம், பெண்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதல்களை குறித்து பேசும் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story