என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    காதலில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உள்ளத்தை உலுக்கும் வகையில் சித்தரித்த படம் பாலசந்தரின் "புன்னகை மன்னன்.''
    காதலைப் பற்றிய சில படங்கள், காதல் காவியங்களாக அமைந்துள்ளன. காதலில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உள்ளத்தை உலுக்கும் வகையில் சித்தரித்த படம் பாலசந்தரின் "புன்னகை மன்னன்.''

    1986-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி வெளியான "புன்னகை மன்னன்'' படத்தில், கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

    கமலஹாசனும், ரேகாவும் காதலர்கள். காதல் நிறைவேறாததால், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். காட்டுப்பகுதியில் நடந்து செல்வார்கள். அழகிய நீர்வீழ்ச்சியையும், இயற்கை எழிலையும் கடைசி முறையாக ரசித்துவிட்டு மலை உச்சியில் இருந்து குதிப்பார்கள். இதில், ரேகா மலைப்பாறையில் விழுந்து இறந்து போவார். கமலஹாசன், மரக்கிளையில் மாட்டிக் கொண்டு, உயிர் தப்புவார்.

    படத்தின் தொடக்கக் காட்சியே பிரமாதமாக அமைந்திருந்தது. தற்கொலை செய்யும் காதல் ஜோடி, கடைசி நிமிடத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை தத்ரூபமாக -நெஞ்சைத் தொடும் விதத்தில் காட்டியிருந்தார், பாலசந்தர்.

    படத்தில் ரேவதியும் சிறப்பாக நடித்திருந்தார். படம் எல்லா அம்சங்களிலும் சிறப்பாக அமைந்து, பெரிய வெற்றி பெற்றது. இதன் பிறகு மனதில் உறுதிவேண்டும் (1987), உன்னால் முடியும் தம்பி (1988), புதுப்புது அர்த்தங்கள் (1989) ஆகிய படங்களை பாலசந்தர் எடுத்தார்.

    "மனதில் உறுதி வேண்டும்'' படத்தில் விவாகரத்து பிரச்சினையை அலசியிருந்தார். கதாநாயகியாக சுகாசினி நன்கு நடித்திருந்தார்.

    "உன்னால் முடியும் தம்பி'' படத்தில், ஜெமினிகணேசன் அப்பாவாகவும், கமலஹாசன் மகனாகவும் நடித்தனர். ஜெமினிகணேசன், ஒரு இசை மேதை. கமலஹாசனும் இசைக் கலைஞனாக வேண்டும் என்று ஜெமினி விரும்புவார். ஆனால் கமல் அதை ஏற்கமாட்டார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்படும் மோதல் நன்கு சித்தரிக்கப்பட்ட போதிலும், படம் பெரிதாக ஓடவில்லை.

    ரகுமானும், சித்தாராவும் ஜோடியாக நடித்த படம் "புதுப்புது அர்த்தங்கள்'' (1989).

    1990-ல் "ரெயில் சிநேகம்'', "ஒரு வீடு இரு வாசல்'' ஆகிய படங்கள் பாலசந்தர் தயாரிப்பில் வெளிவந்தன.

    பேசும் படங்கள் வெளிவந்த தொடக்க காலத்தில், ஒரே படத்தில் இரண்டு மூன்று கதைகள் இடம் பெற்றது உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த "நவீன விக்ரமாதித்தன்'' படத்தில், "புத்திமான் பலவான்'' என்ற இன்னொரு கதையும் இணைந்திருந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "சௌ-சௌ'' என்ற படத்தில் 3 கதைகள் இடம் பெற்றன.

    அதுபோல், பாலசந்தரின் "ஒரு வீடு இரு வாசல்'' படத்தில் இரு கதைகள் இடம் பெற்றிருந்தன. படத்தின் முடிவில், இரண்டு கதைகளுக்கும் ஒரு இணைப்பு கொடுத்திருந்தார், டைரக்டர்.

    1991-ல் கோவை செழியன் தயாரித்த "அழகன்'' படத்தை டைரக்ட் செய்தார், பாலசந்தர்.

    ஓட்டல் நடத்தும் மம்முட்டியை 3 பெண்கள் (பானுபிரியா, கீதா, மதுபாலா) காதலிப்பதுதான் கதையின் மையம்.

    கதாபாத்திரங்களை நன்கு வடிவமைத்து, படத்தை மிகப்பிரமாதமாக உருவாக்கியிருந்தார், பாலசந்தர். குறிப்பாக, மம்முட்டியும், பானுபிரியாவும் விடிய விடிய டெலிபோனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்ட, புதுவிதமாக காட்சியை எடுத்திருந்தார்.

    ஒரே ஒரு டெலிவிஷன் சேனல் ("தூர்தர்ஷன்'') மட்டும் இயங்கி வந்த காலக்கட்டம் அது. இரவு 10 மணியுடன் நிகழ்ச்சிகள் முடிவடைந்து விடும். அப்போது மம்முட்டியும், பானுபிரியாவும் பேச ஆரம்பிப்பார்கள். பின்னணியில் "சங்கீத ஸ்வரங்கள்'' என்ற அருமையான பாட்டு ஒலிக்கும்.

    காலை 6 மணிக்கு தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். அதுவரை இருவரும் பேசிக்கொண்டே இருப்பார்கள்! அப்போது இருவரின் நடிப்பும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக பானுபிரியாவின் முகபாவங்களும், விதம் விதமான சிரிப்புகளும்.... அவர் நடிப்பின் சிகரத்துக்கே சென்றுவிட்டார் என்று சொல்லலாம்.

    பாலசந்தரின் சிறந்த படங்களில் ஒன்று "அழகன்.''

    நடிகை கவுதமி நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்பாள் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    திருவண்ணாமலை:

    நடிகை கவுதமி நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்பாள் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் நவக்கிரகங்களை சுற்றி வந்து நெய் விளக்கேற்றி வழிபட்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இது குறித்து கவுதமியிடம் கேட்டபோது, வெகு நாட்களாக ‘‘அண்ணாமலையார் சன்னதிக்கு வர வேண்டும் என்று நினைத்து இருந்தேன். தற்போது தான் அதற்கான கால சூழ்நிலை அமைந்தது’’ என்றார்.

    பின்னர் அவர் அவங்கிருந்து புறப்பட்டு காரில் கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமங்களுக்கு சென்று வழிபட்டார். தொடர்ந்து கிரிவலம் சென்றார்.

    என்.பி.இஸ்மாயில் இயக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி மற்றும் புதுமுக நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாங்க வாங்க’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
    மெசேஜ் சொல்லும் ஏராளமான தமிழ் படங்கள் வந்திருந்தாலும், தற்கால சூழலுக்கு ஏற்ப சமூக வலைத்தள மோகத்தினால் போலி நட்புகளை நம்பி வாழ்வைத் தொலைக்கும் வாலிபர்களின் நிலை, சென்டிமென்ட், நகைச்சுவை, திரில்லர் கலந்த கலவையாக வந்திருக்கிறது ‘வாங்க வாங்க’.

    இயக்குனர் ஆக முயற்சி செய்யும் அப்புக்குட்டி, நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனிடம் கதை சொல்ல வருகிறார். அந்த கதையே ‘வாங்க வாங்க’ திரைக்கதையாக வெள்ளித்திரையில் விரிகிறது.

    நிவேதிதா, மதுசந்தா ஆகிய இருவரும் பேஸ்புக் மூலம், தொடர்பில் இருக்கும் குறிப்பிட்ட சில ஆண் நண்பர்களை வலையில் வீழ்த்தி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது வாடிக்கை. இவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்குள் பேய் இருக்கிறது. இந்த பேயானது, இவர்களை பார்க்க இரவு நேரங்களில் தனியாக வரும் ஆண் நண்பர்களை பயமுறுத்துவதும் தொடர்கிறது.

    இந்த பேயிடம் முதலில் சிக்குவது கராத்தே ராஜா தான். சட்டவிரோத பணப் பரிமாற்ற தொழில் செய்யும் கராத்தே ராஜா, மிகப்பெரிய தொகையுடன் வரும்போது, தனது பேஸ்புக் தோழி மதுசந்தாவை பார்க்க வருகிறார். ஆனால் வந்த இடத்தில் பேய் தாக்கி காணாமல் போகிறார். பணத்தை கொடுத்து அனுப்பிய நபரோ, கராத்தே ராஜாவை தேடுவதற்கு விக்கி, ஹனிபா ஆகியோரை அனுப்புகிறார்.

    இதேபோல் பேஸ்புக் தொடர்பு பழக்கத்தில் நிவேதிதாவின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வரும்போது அவரை பேய் அடித்துக் கொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் பேய் இல்லை என்பதும், பெண்கள் இருவரும் திட்டமிட்டே கொலை செய்ததும் தெரிகிறது.

    குறிப்பிட்ட வாலிபர்களை மட்டும் வீட்டிற்கு வரவழைத்து இவர்கள் கொலை செய்வது ஏன்? அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினை என்ன? என்பதே மீதி கதை.

    பவர்ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி இருவருக்கும் கதைசொல்லும் கதாபாத்திரம் என்பதால் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. மெசேஜ் சொல்லும் படம் என்பதால் கதாநாயகர்கள் என தனியாக யாருக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. அந்த வேலையை புதுமுகங்களான விக்கி, ஹனிபா, ராஜேஷ் மோகன், கராத்தே ராஜா, பாபு ஆகியோர் பகிர்ந்து செய்துள்ளனர்.

    விக்கியும், ஹனிபாவும் சட்டவிரோதமாக பணப் பரிமற்றம் செய்யும் நபர்களாக, கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பெண்களை தந்திரமாக வலையில் வீழ்த்தும் கேரக்டரில் கராத்தே ராஜா தனக்குரிய பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.

    இடைவேளைக்கு பிறகு வந்தாலும் ஸ்ரேயாஸ்ரீ, ஒரு மலைவாழ் பெண் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காதல், சென்டிமென்ட் இரண்டிலும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார்.

    பேஸ்புக்கில் நண்பர்களை வசியம் செய்யும் கதாபாத்திரங்களான நிவேதிதா, மதுசந்தா இருவரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக இறுதிக்காட்சியில் பணத்தாசை பிடித்த பெண்ணாக தன்னை காட்டிக்கொள்ளும் நிவேதிதா, நடிப்பில் பாராட்டு பெறுகிறார்.

    கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என ஒட்டுமொத்த வேலையையும் செய்துள்ள என்.பி.இஸ்மாயில், சமூக கருத்தினை, ‘வாங்க வாங்க’ என்று அழைத்து சொன்னதற்கு முதலில் பாராட்டு தெரிவிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் போலி நட்பினால் ஏற்படும் பின்விளைவுகள், மோசடி பெண்களை நம்பி வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள் என சமூகம் சார்ந்த பிரச்சனைகளை படம்பிடித்து காட்டியிருப்பது சிறப்பு.

    மெசேஜ் சொல்லும் படமாக இருந்தாலும், அதில் திரில்லர், சென்டிமென்ட் மற்றும் கதைப்பின்னல்களை வைத்து திரைக் கதையை நகர்த்தியிருக்கிறார். சி.பி.சிவன், பகவதி பாலாவின் ஒளிப்பதிவும் ராஜேஷ் மோகனின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘வாங்க வாங்க’ - பொறுமையா பாருங்க.
    ‘வந்தா மல’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சாம் டிராஜ் அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் இணைந்துள்ளார். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்...
    ‘வந்தா மல’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் டி ராஜ். தற்போது வி.இசட் துரை இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கும் மேலும் 2 படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார்.

    பட தயாரிப்பிலும் ஆன்லைன் வீடியோ சேவையிலும் அமெரிக்காவை சேர்ந்த ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனம் பிரபலமாக உள்ளது. அந்த நிறுவன நிர்வாகிகள் சமீபத்தில் இசையமைப்பாளர் சாம் டி ராஜை சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது ஸ்டுடியோவில் சந்தித்தனர். அப்போது அந்த அமெரிக்க நிறுவனத்துடன் சாம் டி.ராஜும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


    ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனம் அடுத்த மாதம் இந்தியாவில் தனது முதல் கிளையை மும்பையில் திறக்க திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் வீடியோ சேவையில் பிரபலமான இந்த நிறுவனம் ஏற்கனவே ஷாருக்கானின் ‘ரெட் சில்லிஸ் எண்டர்டைன்மென்ட்’ மற்றும் ‘ரிலையன்ஸ் ஜியோ’வுடன் இணைந்து செயல்பட உள்ளது.
    நடிகை நயன்தாராவுக்காக உருவாக்கப்பட்ட கதையில் அவர் நடிக்க மறுத்து விட்டார். இப்போது அந்த வேடத்தில் அமலாபால் நடிக்கிறார். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்...
    விவாகரத்து பெற்ற பிறகு அமலாபால் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘வடசென்னை’ இதை தொடர்ந்து ‘திருட்டுபயலே-2’ மற்றும் மலையாள படங்களில் ‘பிசி’யாக நடித்து வருகிறார்.

    அடுத்து மலையாளத்தில் வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். சித்திக் இயக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.



    இத்துடன் மற்றொரு புதிய படத்திலும் அமலாபால் நடிக்கிறார். இது நகர பின்னணியில் நடக்கும் அட்வேஞ்சர் கதை. நாயகியை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. நயன்தாராவுக்காக உருவாக்கப்பட்ட இந்த கதையில் அவர் நடிக்க மறுத்து விட்டார். இப்போது அந்த வேடத்தில் அமலாபால் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்குகிறார்.
    குறைந்த விலையில் சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ததன் மூலம் தியேட்டர்களில் இனி கூட்டம் அலை மோதும் என்று ஆர்.கே. கூறியுள்ளார். அது என்ன திட்டம் என்பதை பார்ப்போம்...
    ஆர்.கே., நீத்து சந்திரா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’. சாஜிகைலாஸ் இயக்கி உள்ள இதில் நாசர், இனியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இசை அமைத்துள்ளார்.

    இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய நாசர்... “நான் 500 படங்களை கடக்கப் போகிறேன்.

    இன்று தயாரிப்பாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவமானப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள். இதற்கு ஆர்.கே.யின் குறைந்த விலையில் டிக்கெட் வழங்கும் திட்டம் ஒரு தீர்வாக இருக்கும். சினிமாவை காக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது” என்றார்.

    ஆர்.கே. பேசும்போது....

    “அதிக விலைக்கு சினிமா டிக்கெட் விற்கப்படுவதால் பலர் குடும்பத்துடன் சினிமாவுக்கு செல்வதில்லை. எனவே குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வினியோகிக்க ‘ஹிட்பாக்ஸ்’ திட்டம் கொண்டு வந்திருக்கிறேன். இதற்காக ஆயிரம் வினியோகஸ்தர்களை உருவாக்கி இருக்கிறேன்.

    இந்த ‘ஹிட்பாக்ஸ்’ திட்டம் மூலம் 8 கோடி பேர் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள். 4 வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடும். தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். இந்த திட்டத்தின்படி ரூ.300 மதிப்புள்ள டிக்கெட்டை ரூ.100க்கு கொடுக்கிறோம். 3 டிக்கெட் வாங்கினால் 2 பேரை இலவசமாக கூட்டி வரலாம். 1 லட்சம் டிக்கெட் விற்றால் அவர்கள் 5 லட்சம் சம்பாதிப்பார்கள்” என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் கேயார், ஏ.எம்.ரத்தினம், ஏ.எல்.அழகப்பன், கதிரேசன் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.
    கூகுளை பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டதாக இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடித்த ‘துருவங்கள் பதினாறு’ 75 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

    இந்த படத்தின் 75-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது.

    “கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் ‘நரகாசூரன்’ படத்தை நான் தயாரிக்கிறேன்” என்றார். கார்த்திக் நரேன் பேசும்போது...

    “என்னுடைய பூர்வீகம் ஊட்டி. கோவையில் வசிக்கிறோம். நடுத்தர குடும்பம். சினிமா ஆசையில் சென்னை வந்தேன். ‘ஜில் ஜங் ஜக்’ சூரஜ் வைத்தியிடம் சில மாதங்கள் உதவி இயக்குனராக வேலை செய்தேன். பிறகு, இந்த கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடினேன். இருபத்தியொரு வயது பையனான என்னை நம்பி சில கோடிகளை கொடுக்க யாரும் தயாராக இல்லை.


    என்னை யாரும் நம்பவில்லை என்று அப்பாவிடம் போய் சொன்னேன். நான் உன்னை நம்புகிறேன் என்று சொல்லி, இந்த படத்தை தயாரித்தார். சினிமா பற்றி எனக்கு அதிகம் தெரியாது. கூகுள் பார்த்துதான் கற்றுக் கொண்டேன்.

    ரகுமான் என்னை நம்பி நடிக்க சம்மதித்தார். இப்போது, பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறோம். சின்ன பையன், புது டீம் என நினைக்காமல் மணிரத்னம், பிரமாண்ட இயக்குனர் ‌ஷங்கர் பாராட்டினார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரகுமான் என பலர் சப்போர்ட் செய்தாங்க”என்றார்.

    நிகழ்ச்சியில் நடிகர் ரகுமான் படக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கேரளாவில் பெண்கள் பாதுகாப்புக்கு நடிகை மஞ்சு வாரியர் ஒரு யோசனையை தெரிவித்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...
    சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் சித்ரவதை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கேரளாவில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுந்தது இல்லை. இங்கு பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

    இதனால் கேரள காவல் துறை பெண்களை பாதுகாக்க ‘பிங்க் ரோந்து’ என்ற போலீஸ் பிரிவை தொடங்கி உள்ளது. இதற்கு பெண்கள் தகவல் கொடுத்தால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த பெண்ணுக்கு மகளிர் போலீசார் வந்து உதவுவார்கள்.

    இந்த தகவலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக மஞ்சு வாரியார் நடித்த 2 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் நள்ளிரவு நேரத்தில் ஆள் இல்லாத ரோட்டில் தனியாக பெண்கள் நடந்து செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதை தொடர்ந்து பேசும் மஞ்சுவாரியார்...


    இது போல் பெண்கள் தனியாக நடந்து வரவேண்டியது இருந்தால், வி‌ஷமிகள் தொல்லை ஏற்பட்டால், கல்லூரி மாணவிகள் ஈவ்டீசிங்குக்கு ஆளானால், அல்லது வேறு விதத்தில் உங்களுக்கு பிரச்சனை என்று தெரிந்தால் உடனே ‘பிங்க்’ போலீஸ் ரோந்து பிரிவுக்கு (1515) போன் செய்யுங்கள். அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் இடத்துக்கு மகளிர் போலீசார் பறந்து வருவார்கள்” என்று குறிப்பிடுகிறார். இந்த வீடியோ கேரளாவில் பிரபலமாகி வருகிறது.
    காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கானை நியமிக்க விரும்புவதாக அம்மாநில முதல்மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் நேற்று மும்பையில் நிகழ்சிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்மந்திரி மெகபூபா முப்தி பங்கேற்றார். அப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முப்தியிடம், ”காஷ்மீர் சுற்றுலா தூதராக பாலிவுட் நடிகர்களை பயன்படுத்த விருப்பமா? ”என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , ”நடிகைகள் அலியாபட் மற்றும் கான் சகோதர்கள் ( ஆமீர் கான், ஷாருக் கான், சல்மான் கான்) ஆகியோர்களை நியமிக்க யோசனை இருக்கிறது” என பதிலளித்தார். ”ஒருவரை மட்டும் நியமிக்க வேண்டுமானால் யாரை தேர்வு செய்வீர்கள்?” எனக் கேட்டதற்கு ,” சல்மான் கான் தான் என்னுடைய தேர்வாக இருக்கும்” எனப் பதிலளித்தார்.

    கடந்தாண்டு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதி புர்கான் வாணி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு இன்று வரை இயல்பு நிலை திரும்பவில்லை. எனவே, அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால், இது போன்று நடிகர்களை சுற்றுலா தூதர்களாக நியமிக்கும் பட்சத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் காஷ்மீர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ‘விவேகம்’ படத்தில் அஜித்குமார் ஹாலிவுட் அதிரடி கதாநாயகர்கள்போல் வருகிறார். அவரது புதிய தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
    அஜித்குமார் நடித்து வரும் ‘விவேகம்’ அவரது 57-வது படமாக வெளிவர இருக்கிறது. அதிரடி கதையம்சத்துடன் திகில் படமாக தயாராகிறது. இந்த படத்தை சிவா டைரக்டு செய்து வருகிறார். இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என்ற இரண்டு படங்களை இயக்கி வெளியிட்டார். இந்த படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தன. இதனால், ‘விவேகம்’ படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள்.

    தாதா, போலீஸ் அதிகாரி ஆகிய கதாபாத்திரங்களில் அஜித் மாறி மாறி நடித்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. மங்காத்தா படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்தார். வீரம், வேதாளம் படங்களில் தாதா வேடம் ஏற்றார். தற்போது விவேகம் படத்தில் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு மாறி இருக்கிறார். உளவுத்துறை அதிகாரியாக அவர் வருகிறார்.


    ‘விவேகம்’ படத்தில் அஜித்குமார் தோற்றம்.

    இதன் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் பல்கேரியாவில் தொடங்கியது. ஹெலிகாப்டர்கள், வெளிநாட்டு நடிகர்களை வைத்து 60 சதவீத படப்பிடிப்பை அங்கு முடித்து விட்டு சென்னை திரும்பினார்கள். தற்போது கடைசி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் மீண்டும் பல்கேரியா புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் விவேகம் படத்தில் அஜித்குமாரின் அதிரடி தோற்றம் வெளியாகி இருக்கிறது. வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அவர் மீண்டு வந்து ரத்தக்களறியுடன் நிற்பதுபோல் இந்த தோற்றம் இருக்கிறது. ஹாலிவுட் நடிகர்களைப் போல் இந்த தோற்றம் உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விவேகம் படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல்ஹாசன் மகள் அக்‌ஷராஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.
    ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான சார்ஜாவில் உள்ள மிகப் பிரபலமான கிரிக்கெட் மைதானத்தில் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இங்கு வாழும் இந்திய மக்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
    துபாய்:

    ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

    'ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் இவர் நிலைநாட்டினார்.

    இவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான 'ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து' வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ள 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மான் அமெரிக்காவில் கடந்த ஆண்டு ‘இன்ட்டிமேட்’ என்ற இசை சுற்றுலா மேற்கொண்டிருந்தார்.

    அங்குள்ள முக்கிய பெருநகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அந்த நிகழ்ச்சிகளுக்கு அமெரிக்க மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
    பின்னர், பிரிட்டன் நாட்டிலும் தனது ‘இன்ட்டிமேட்’  இசை சுற்றுலாவை மேற்கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி லண்டன் நகரிலும், 24-ம் தேதி பிர்மிங்ஹம் நகரிலும், 29-ம் தேதி லீட்ஸ் நகரிலும், 30-ம் தேதி மான்செஸ்ட்டர் நகரிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் ’இன்ட்டிமேட்’ இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதையடுத்து, மார்ச் 17-ம் தேதி சார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் அமரும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்சிக்காக 5000 திர்ஹம் முதல் 2 லட்சம் திர்ஹம் வரை கட்டணம் கொண்ட டிக்கெட்களுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

    சில நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை பெருக்கும் நோக்கத்தில் சலுகை கட்டணத்தில் டிக்கெட்களை விற்றன. ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் இங்கு அவரது இசை நிகழ்ச்சி நடைபெறுவதால் டிக்கெட்டுகளை பெற இங்கு வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மக்கள் பேரார்வம் காட்டினர்.

    நேற்றிரவு நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பிரபலமான பாடல்களை மிகப்பெரிய இசைக்குழுவினருடன் பிரபல பின்னணி பாடகர்-பாடகியர் பாடி, ரசிகர்களை மகிழ்வித்தனர்.
    சினிமாவில் கேவலமான டைரக்டர்கள் சிலர் உள்ளனர். உடைகளை குறைத்து ஆபாசமாக நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார்கள் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகை பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி வருமாறு:-

    “நான் உலக அழகி பட்டம் வென்று சினிமாவுக்கு வந்தேன். ஆரம்பத்தில் இங்கு கசப்பான அனுபவங்களே கிடைத்தன. டைரக்டர்களில் கேவலமானவர்களும் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன்.

    ஒரு படத்தில் என்னை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடங்கினார்கள். இரண்டு நாட்கள் அதில் நடித்தேன். மூன்றாவது நாள் டைரக்டர் என்னிடம் வந்து, “என்ன உடை அணிந்து இருக்கிறாய்?, இப்படி நடித்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். உடம்பு முழுவதும் தெரிகிற மாதிரி உடை அணிந்து ஆபாசமாக நடித்தால்தான் பார்ப்பார்கள். நான் தைத்து தருகிற குட்டைப்பாவாடையை உடுத்திக்கொண்டு நடிக்க வா” என்று மோசமாக திட்டினார்.

    எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரில் ஏறி வீட்டுக்கு வந்து விட்டேன். அப்போது எனது பொருளாதார நிலைமை மோசமாக இருந்தது. ஆனாலும் தெரிந்தவர்களிடம் உடனடியாக பணம் திரட்டி அந்த படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விட்டு நடிக்க முடியாது என்று கூறி விலகி விட்டேன்.

    சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் எதற்கும் தயாராக இருக்கிறார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இந்த துறையில் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் வருகிறார்கள். அவர்களை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு.



    சில படங்களில் கதைக்கு கவர்ச்சி தேவையாக இருந்தால் அதில் நடிப்பதற்கு நான் ஆட்சேபிப்பது இல்லை. அதை வைத்து நிஜ வாழ்க்கையிலும் படுக்கை அறைக்கு நான் தயாராக இருக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.

    அமெரிக்காவில் இனவெறி தாக்குதல் நடப்பதாக இப்போது பேசுகிறார்கள். நான் சிறு வயதிலேயே இதை சந்தித்து இருக்கிறேன். 8-வது வகுப்பு படித்தபோது அமெரிக்காவில் லோவா பகுதியில் வசித்த எனது சித்தி வீட்டுக்கு பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர். 3 வருடங்கள் அங்கு தங்கி படித்தேன். அப்போது என்னை அமெரிக்கர்கள் கேலி செய்தார்கள்.

    நீ ஏன் இங்கு வந்தாய்? உன் நாட்டுக்கு ஓடிப்போய் விடு என்று மிரட்டினார்கள். எனது காலின் மேல் பகுதியில் இரண்டு மச்சங்கள் இருந்தன. பள்ளி சீருடை அணியும்போது அது வெளியே தெரியும். அந்த மச்சத்தை காட்டி கருப்பி என்று கேலி செய்து என்னை அழ வைத்தார்கள். அதை எப்போதும் என்னால் மறக்க முடியாது.

    இப்போது அவர்கள் கேலி செய்த அதே கால்கள் சம்பந்தப்பட்ட 11 உற்பத்தி பொருட்களுக்கு விளம்பர மாடலாக இருந்து அவற்றின் விற்பனையை உயர்த்தி இருக்கிறேன்”.

    இவ்வாறு பிரிங்கா சோப்ரா கூறினார்.
    ×