என் மலர்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘புரூஸ்லீ’ படம் எப்படியிருக்கிறது என்பதை கிழே விரிவாக பார்ப்போம்.
நாயகன் ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். ஆனால், புரூஸ்லி படம் பார்க்கும்போது மட்டும் ஆக்ரோஷமாக இருக்கிறார் என்றதும், அவரது அம்மா இவருக்கு புரூஸ்லி என்று பெயர் வைத்து அழைக்கிறார். புரூஸ்லி என்ற பெயர் வைத்ததும் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக சுற்றித்திரியும் ஜி.வி.பிரகாஷ் ஒரு ரவுடியிடம் மாட்டி அடிவாங்கிய பிறகு, எந்த பிரச்சினையிலும் மூக்கை நுழைக்காமல் அமைதியான வழியில் செல்கிறார்.
இந்நிலையில், நாயகி கீர்த்தி கர்பந்தாவும் ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருகிறார்கள். அதேநேரத்தில், பிரபல தாதாவாக வலம்வரும் முனீஸ்காந்த், அமைச்சரான மன்சூர் அலிகானை கொலை செய்கிறார். அதை ஜி.வி.பிரகாஷ், நாயகி கீர்த்தி கர்பந்தா, ஜி.வி.பிரகாஷின் நண்பரான பாலசரவணன் மூன்று பேரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துவிடுகின்றனர்.

இதனால் முனீஸ்காந்த்தால் அவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள்? என்பதே மீதிக்கதை.
ஜி.வி.பிரகாஷ் இதுவரையிலான படங்களில் எப்படி நடித்தாரோ, அதிலிருந்து கொஞ்சம்கூட மாறாமல் அப்படியே இந்த படத்திலும் நடித்திருக்கிறார். அவரது நடிப்பினால் இதுவரை சற்று அதிருப்தியில் இருந்தவர்களுக்கு, இந்த படத்தைப் பார்த்ததும் கோபம் எகிறும் என்பது நிச்சயம். அந்த அளவிற்கு, காமெடி என்ற பெயரில் இவர் செய்யும் சேட்டைகள் சிரிப்பை வரவழைக்கவில்லை.

நாயகி கீர்த்தி கர்பந்தாவுக்கு முதல் படம் என்றாலும், ஏற்கெனவே தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நாயகிபோலவே தெரிகிறார். மிகவும் அழகாக இருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருக்கிறார். கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் இவருடைய நடிப்பு படத்தில் எடுபடாமல் போய்விட்டது. சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம்

பாலசரவணன் காமெடிக்கென்று வந்தாலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றும் நடித்திருக்கிறார். படம் முழுக்க ஜி.வி.பிரகாஷ் கூடவே வந்தாலும், படத்தில் இவர் செய்யும் ஒருசில காமெடிகளைத்தான் ரசிக்க முடிகிறது. மற்றபடி நிறைய காட்சிகள் சிரிப்பை வரவழைக்கவே இல்லை.
சமீபகாலமாக நடிப்பில் முத்திரை பதித்து வரும் முனீஸ்காந்தை இந்த படத்தில் வெறுமனே உட்கார வைத்தே வேலை வாங்கியிருக்கிறார்கள். நடிப்பதற்கான வாய்ப்பு கொஞ்சம்தான். மன்சூர் அலிகான் ஒரு காட்சியில் வந்தாலும் தனது தனித்துவமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் வழக்கமான காமெடியில் ரசிக்க வைக்கிறார்.

இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் தன் படத்திற்கு உலகப் புகழ்பெற்ற ‘புரூஸ்லி’ என்ற தலைப்பை வைத்துவிட்டு, சண்டையில் கவனம் செலுத்தவில்லை. அதேநேரத்தில் நகைச்சுவையிலும் கவனம் செலுத்தவில்லை. காமெடி படம் என்று சொல்லிவிட்டு எந்த இடத்திலும் காமெடி வராததுபோலவே படமாக்கியிருந்தால் எந்தளவுக்கு கோபம் வருமோ, அதுதான் இந்த படத்தை பார்க்கும்போதும் வருகிறது.
நடிப்பில் கவனம் செலுத்தாத ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையில் ரொம்பவும் கவனம் செலுத்தி கைதட்டல் பெறுகிறார். அதேபோல், பாடல்களிலும் இவர் அதிக கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இவரது கேமரா காட்சிகளை ரொம்பவும் கலர்புல்லாக அமைத்திருக்கிறது. இவ்வளவு நல்ல டெக்னீசியன்களை வைத்துக்கொண்டு படத்தை சொதப்பியிருப்பதுதான் ரொம்பவும் வருத்தத்திற்குரிய ஒன்று.
மொத்தத்தில் ‘புரூஸ்லி’ கோமாளி.

‘பாகுபலி 2’ டிரைலர் 24 மணி நேரத்தில் 5 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
‘பாகுபலி-2’ டிரைலர் நேற்று இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இது ‘யுடியூப்’பில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய 4 மொழிகளையும் சேர்த்து 5 கோடி பேர் கண்டுகளித்துள்ளனர்.
‘பாகுபலி-2’ டிரைலர் 4 மொழிகளிலும் லட்சக்கணக்கான லைக்குகளையும், ஆயிரத்துக்கும் அதிகமான கமெண்டுகளும் பதிவாகியுள்ளது. இது இந்திய திரை உலகின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஏற்கெனவே, இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ‘Raees' படம்தான் 24 மணி நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பேர் கண்டுகளித்தது சாதனையாக இருந்தது.

அந்த சாதனையை தற்போது ‘பாகுபலி-2’ முறியடித்துள்ளது. தொடர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது பல கோடியை கடக்கும் என்று எதிர்பர்க்கப்படுகிறது. இப்படத்தை எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ளார். பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சசிகுமார் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஹன்சிகா ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
சசிகுமார் அடுத்ததாக ‘குட்டிபுலி’ படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு ‘கொடி வீரன்’ என்று தலைப்பு வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் கதாநாயகி தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை அறிமுக நாயகிகள், ஒன்றிரண்டு படங்களில் நடித்த நாயகிகள்தான் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஆனால், முதன்முறையாக ஒரு பிரபல ஹீரோயினுடன் ஜோடி சேர்ந்து சசிகுமார் நடிக்கவுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வானதும் அடுத்தக்கட்டமாக விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இந்த மாத இறுதியில் கிட்டத்தட்ட படப்பிடிப்பை தொடங்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமாரே தயாரிக்கிறார்.

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘கன்னா பின்னா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
நாயகி அஞ்சலி ராவ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இருந்து வருகிறார். இவரைப்போலவே சினிமாவில் கேமரா மேன், இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு அவரது நண்பர்களுடம் உடனிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், நாயகி ஒரு தயாரிப்பாளரை பார்த்து கதை சொல்வதற்காக செல்கிறார். அப்போது, அந்த தயாரிப்பாளர், ஆக்ஷன், செண்டிமெண்ட் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடியான ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள், படம் பண்ணலாம் என்று கேட்கிறார். நாயகியும் தன்னிடம் ‘கன்னா பின்னா’ என்ற தலைப்பில் ஒரு காமெடி இருப்பதாக அவரிடம் கூறுகிறார்.

தலைப்பிலேயே மயங்கிப்போன தயாரிப்பாளர் மேற்கொண்டு அவரிடம் எந்த கதையும் கேட்காமல், அட்வான்ஸ் தொகையாக ரூ.5 லட்சத்தை கொடுத்துவிட்டு, அவரை ஒப்பந்தம் செய்கிறார். வீட்டுக்கு திரும்பிய நாயகி, தனது நண்பர்களிடம் நடந்ததை சொல்கிறாள். கதையே இல்லாமல் கதை இருப்பதாக பொய் சொல்லி தயாரிப்பாளரிடம் பணம் வாங்கிவிட்டு வந்திருப்பதாக நாயகி ஒரு குண்டை போடுகிறார்.

இருப்பினும், தயாரிப்பாளர் கொடுத்த தேதிக்குள் ஒரு காமெடி கதையை தயார் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மூன்றுபேரும் கதையை தேடி புறப்படுகிறார்கள். அப்போது, நாயகன் தியா நாயரை சந்திக்கிறார்கள். பஸ் ஸ்டாண்டில் சாக்லேட் கொடுத்து பெண்களை தன்னை காதலிக்கும்படி கெஞ்சும் நாயகனை பார்த்ததும் அவனை சுற்றிவந்தால் ஒரு காமெடி கதை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவனை பின்தொடர முடிவு செய்கிறார்கள்.
இறுதியில் அவர்களுக்கு நல்ல கதை கிடைத்து, படம் எடுத்தார்களா? நாயகனின் குடும்பம் எவ்வளவு சிறந்தது. நாயகனைச் சுற்றி எந்தமாதிரியான சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறுகிறது? என்பதை நகைச்சுவையுடன் சொல்ல கடுமையாக முயற்சி செய்திருக்கும் படம்தான் ‘கன்னா பின்னா’.

இப்படத்தின் நாயகன் தியா நாயர்தான் இயக்குனரும்கூட. படம் முழுக்க அவர் வெகுளித்தனத்துடனயே நடித்திருக்கிறார். எந்தளவுக்கு வெகுளித்தனம் என்றால், பேஸ்புக் கணக்கை தொடங்குவதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்யக்கூடிய அளவுக்கு வெகுளியான ஆள். வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு பொருந்தக்கூடிய உடலமைப்பை வைத்துக்கொண்டு கோமாளித்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்க்கும்போது ஏனோ ரசிக்க முடியவில்லை.
அதேபோல் நாயகி அஞ்சலி ராவ், படத்தை பார்ப்பவர்களின் வேதனை தெரியாமல், அடிக்கடி வந்து சிரித்து பார்ப்பவர்களை மேலும் வெறுப்பேற்றியிருக்கிறார். வில்லனாக வரும் சிவாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடலமைப்பு இருந்தும், இவருடைய நடிப்புக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லாதது வருத்தம். இனிவரும் படங்களில் தனக்கு பொருந்தக்கூடிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தால் சிறப்பாக இருக்கும்.

நாயகனின் நண்பர்களாக வருபவர்கள், நாயகியின் நண்பர்களாக வருபவர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும் நிறைய கதாபாத்திரங்களும் ஜிம்மில் ஓர்க் அவுட் பண்ணியவர்கள் போல கட்டுமஸ்தான உடம்புடனே வருகிறார்கள். அந்த உடம்பை வைத்துவிட்டு காமெடி பண்ணுவதுபோல் நடிக்க முற்படும்போது அது எடுபடாமல் போய்விடுகிறது. இயக்குனர் தியா நாயர் படத்தின் தலைப்புக்கேற்றவாறு கன்னா பின்னாவென்று படத்தை எடுத்து வைத்திருக்கிறார்.
ரோஷன் சேதுராமன் இசையில் ‘லிங்கரி மிட்டாய்’ பாடல் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அதை படமாக்கியவிதம் பாடலை கெடுத்துவிட்டதுபோல் தெரிகிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெரால்டு ராஜமாணிக்கத்தின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘கன்னா பின்னா’ கண்ணை மூடித்தான் பார்க்கணும்.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு நடித்த அஸ்வின் தாத்தா கெட்டப்புக்குண்டான டீசர் நாளை வெளியாகவுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தி ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார். அந்த மூன்று வேடங்களுக்கும் ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா ஆகியோர் நடித்து வருகின்றனர். இன்னொரு நடிகையின் பெயரை படக்குழுவினர் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றனர்.
சிம்பு மூன்று வேடங்களில் இரண்டு வேடங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது, மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா ஆகிய கதாபாத்திரங்களின் கெட்டப்புகள் வெளிவந்துள்ளது. மதுரை மைக்கேல் கதாபாத்திரத்தில் 80-களில் உள்ள கெட்டப்புகளில் நடித்துள்ளார். அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தில் நரைத்த முடியும், வயதான தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதில், மைக்கேல் கதாபாத்திரத்திற்குண்டான டீசர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல், அஸ்வின் தாத்தா கெட்டப்பில் வெளிவந்த போஸ்டர்களும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், அஸ்வின் தாத்தா கெட்டப்புக்குண்டான டீசரை நாளை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த டீசர் பூர்த்திசெய்யும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வாஸ்து மீனை மையமாக வைத்து வெளிவந்துள்ள ‘கட்டப்பாவ காணோம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
சிறுவயதில் இருந்தே ராசியில்லாத பையன் என்ற அடைமொழியோடு வளர்ந்து வருகிறார் நாயகன் சிபிராஜ். இவருடைய அப்பா சித்ரா லட்சுமண் பல தொழில்களை செய்தும் நஷ்மடைந்து கடைசியில் ஜோசியராக மாறிவிடுகிறார். இந்நிலையில், சிபிராஜ் ஒருநாள் நாயகி ஐஸ்வர்யாவை கிளப்பில் பார்க்கிறார்.
இருவரும் ஒருவருக்கொருவர் பேசி நெருக்கமாகிறார்கள். ஐஸ்வர்யா தன்னிடம் தான் ராசியில்லாத பையன் என்று கூறும் சிபிராஜுடைய அப்பாவித்தனம் பிடித்துப்போக, அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா. ஒருகட்டத்தில் இருவரும் காதலர்களாகிறார்கள்.

திருமணம் செய்ய ஆசைப்படும் இவர்களுக்கு ஜோசியத்தின் மீது நம்பிக்கையுள்ள சித்ரா லட்சுமணனோ ரெண்டுபேருக்கும் ராசி சரியில்லை என்று திருமணத்துக்கு தடை போடுகிறார். இருப்பினும், அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இரண்டுபேரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். தனியாக வீடு பிடித்து குடியும் போகிறார்கள்.
இந்நிலையில், மிகப்பெரிய தாதாவான மைம் கோபியும் ஜோசியத்தின் மீது நம்பிக்கையுடையவராக இருக்கிறார். இவர் கட்டப்பா என்று வாஸ்து மீனை வளர்த்து வருகிறார். அதனால்தான் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அந்த மீனை யோகி பாபு திருடிச் சென்றுவிடுகிறார். திருடிச் சென்றவர் அந்த மீனை தண்ணி லாரியில் போட்டுவிடுகிறார். கடைசியில் அந்த மீன், வளர்ப்பு மீன்கள் கடை வைத்திருக்கும் லிவிங்ஸ்டன் வசம் சென்றுவிடுகிறது. ஏர்ஹோஸ்டசான சாந்தினி, தனது சிறுவயது தோழனான சிபிராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அந்த வாஸ்து மீனை வாங்கிக் கொண்டு, சிபிக்கு பரிசாக கொடுக்கிறாள். அதேநேரத்தில், காணாமல் போன வாஸ்து மீனை திருடியவனை தனது ஆட்களை விட்டு தேடி வருகிறார் மைம் கோபி.
இறுதியில், அந்த வாஸ்து மீன் மைம் கோபியின் கைக்கு கிடைத்ததா? சிறு வயதில் இருந்தே ராசியில்லாத பையன் என்று வளர்ந்த சிபிராஜ் கையில் கிடைத்த வாஸ்து மீன் அவருக்கு ராசியை கொடுத்ததா? வாஸ்து மீன் தனது கைக்கு வந்தபிறகு சிபிராஜின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிபிராஜ் இப்படத்தில் ஹீரோயிசம் காட்டாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். படத்தில் இவருக்கு ஆக்ஷன் காட்சிகளே கிடையாது. முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் கூடிய கதாபாத்திரம். அதிலும், கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ற நடிப்பை மட்டும் கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் பெண்ணாக வருகிறார். இந்த படத்தில் மதுபானங்கள் குடிப்பதுபோன்றெல்லாம் துணிச்சலாக நடித்திருக்கிறார். படத்தில் இவருடைய கதாபாத்திரம்கூட துணிச்சல்மிக்கதுதான். அதே துணிச்சலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். அதேநேரத்தில் படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும் பேசி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

காளி வெங்கட் படத்தின் காமெடிக்கு ரொம்பவும் உதவியிருக்கிறார். சர்ப்ரைஸ் ஷீலாவாக வரும் சாந்தினி கலகலப்பான பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். மைம் கோபி ரெண்டு, மூன்று காட்சிகள் வந்தாலும் வில்லத்தனத்தில் மிரட்டிவிட்டு போயிருக்கிறார். யோகி பாபுவுக்கும் ஒரு சில காட்சிகள்தான். இருப்பினும், அவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு கொடுக்கிறது.
சித்ரா லட்சுமணன், களவாணி திருமுருகன், டிடெக்டிவாக வரும் சரவணன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.
இயக்குனர் மணி சேயோன் தனது முதல்படத்திலேயே மூடநம்பிக்கையை கதைக்கருவாக வைத்துக் கொண்டு அதில் வெற்றிபெற முயற்சி செய்திருக்கிறார். வாஸ்து மீன் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு அதைச் சுற்றி நடக்கும் கதையை நகைச்சுவையோடு கொண்டுபோய் ரசிக்க வைத்திருக்கிறார். இருப்பினும், படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இருப்பதால் குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது. அதையெல்லாம் கொஞ்சம் தவிர்த்திருந்தால் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இது இருந்திருக்கும் என்பது மட்டும் உண்மை.

ஆனந்த் ஜீவாவின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறது. வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளில் எல்லாம் தேவையான ஒளியில் படமாக்கி கைதட்டல் பெறுகிறார். பாடல் காட்சிகள் குளுமை இருக்கிறது. சந்தோஷ் குமார் தயாநிதியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘கட்டப்பாவ காணோம்’ காமெடி கலாட்டா.

தமிழ் பட உலகில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்கள் அதிகமாக தயாராகி வருகின்றன. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
தமிழ் திரையுலகம் ஆரம்பத்தில் இருந்து கதாநாயகர்கள் பிடியில் இருந்து வந்து இருக்கிறது. அவர்களை மனதில் வைத்தே இயக்குனர்கள் கதைகளை உருவாக்குவது, நடிகர்கள் மார்க்கெட்டை வைத்து விநியோகஸ்தர்கள் படங்களின் விலையை நிர்ணயிப்பது, திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வது என்றெல்லாம் இருந்தன.
ஆனால் சமீபகாலங்களில் கதாநாயகிகளை மையப்படுத்தி குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதால் பட உலகில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. நயன்தாரா, ஜோதிகா, தமன்னா, அனுஷ்கா, திரிஷா உள்ளிட்ட சிலரது நடிப்பில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் தயாராகி இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் திரைக்கு வர இருக்கின்றன.
இதன்மூலம் தமிழ் பட உலகம் கதாநாயகிகள் ஆதிக்கத்துக்குள் வருகிறது. கதை, கதாபாத்திரம், சந்தைபடுத்துதலில் கதாநாயகர்களுக்கு பெரும் போட்டியாக அவர்கள் மாறி இருக்கிறார்கள்.

36 வயதினிலே படத்துக்கு பிறகு ஜோதிகா, குற்றம் கடிதல் படம் மூலம் பிரபலமான பிரம்மா இயக்கும் மகளிர் மட்டும், பாலா இயக்கும் நாச்சியார் ஆகிய இரண்டு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இவை இரண்டுமே கதாநாயகர்கள் இல்லாமல் நாயகியை மையப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்கள். நாச்சியார் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக வருகிறார். இந்த படத்தில் ஜோதிகாவின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

நயன்தாரா திரைக்கு வந்து 14 வருடங்கள் ஆகிறது. இதுவரை 58 படங்களில் நடித்து விட்டார். தற்போது கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையம்சம் உள்ள டோரா, அறம், கொலையுதிர் காலம் உள்பட 6 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். டோரா படவேலைகள் முடிவடைந்து இந்த மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.
கொலையுதிர் காலம், ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படத்தின் கருவை மையமாக வைத்து தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. வாய் பேச முடியாத, காது கேட்காத ஒரு இளம்பெண் சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக்கொள்வதும், அவனிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதும் ‘ஹஷ்’ படத்தின் கதை. பெயரிடப்படாத திரில்லர் படமொன்றில் பத்திரிகையாளராகவும் அவர் நடிக்கிறார்.

திரிஷா சினிமாவில் அறிமுகமாகி 17 வருடங்கள் ஆகிறது. இதுவரை 56 படங்களில் நடித்து விட்டார். தற்போது சதுரங்க வேட்டை-2, மோகினி, கர்ஜனை, 1818 ஆகிய கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். மோகினி படப்பிடிப்பு முடிந்து விட்டது. கர்ஜனை படம் இந்தியில் அனுஷ்கா சர்மா நடித்து வெற்றிகரமாக ஓடிய என்.எச்.10 படத்தின் தமிழ் பதிப்பு ஆகும். 1818 படம் மும்பையில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை மையப்படுத்தி தயாராகிறது.

தமன்னா 12 வருடங்களில் 51 படங்களில் நடித்து விட்டார். அவர் நடிப்பில் பாகுபலி இரண்டாம் பாகம் பலத்த எதிர்பார்ப்போடு திரைக்கு வர இருக்கிறது. குயின் உள்பட மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அனுஷ்கா இதுவரை 45 படங்களில் நடித்து விட்டார். பாகுபலி-2, பாக்மதி உள்பட 4 படங்களில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார்.

ரஜினியுடன் இரண்டாவது முறையாக பாலிவுட் பிரபல நடிகை ஒருவர் ஜோடி சேரவுள்ளார். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
ரஜினியின் நடிப்பில் 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு 99 சதவீதம் படங்களில் பாலிவுட் நடிகைகள்தான் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். எந்திரன் படத்தில் ஐஸ்வர்யராய், கோச்சடையானில் தீபிகா படுகோனே, லிங்காவில் சோனாக்ஷி சின்ஹா, கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே என பாலிவுட் ஹீரோயின்களின் ஆதிக்கம்தான் அதிகமாக காணப்படுகிறது.
அந்த வரிசையில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பாலிவுட் ஹீரோயினை ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் வித்யாபாலனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக செய்திகள் வெளியானது. தற்போது, மற்றொரு பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனேவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தீபிகா படுகோனே ஏற்கெனவே ரஜினி நடிப்பில் வெளிவந்த அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி நடிப்பில் உருவாகவிருக்கும் அந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கவிருக்கிறார். தனுஷ் தனது வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

தனது கார் ஏறி காயம் அடைந்த நபரை நடிகர் ஷாருக்கான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
பிரபல இந்தி நடிகை அலியாபட் மும்பையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் இந்தி நடிகர் ஷாருக்கானும் கலந்து கொண்டார். அவர் தனது சொகுசு காரில் விருந்து நடந்த இடத்துக்கு வந்தார். ஷாருக்கானை பத்திரிகை போட்டோகிராபர்கள் பலர் படம் பிடிக்க போட்டிபோட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு போட்டோகிராபர் கால் மீது ஷாருக்கானின் கார் டயர் ஏறி இறங்கியது. இதில் அவர் வலியால் துடித்தார்.
ஷாருக்கான் உடனடியாக காரை விட்டு இறங்கி காயம் அடைந்த பத்திரிகை போட்டோகிராபரை தனது காரில் ஏற்றினார். அவரை தனது பாதுகாவலர்களுடன் அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

நக்சலைட்டு தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அக்ஷய் குமார் தலா ரூ.9 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார். இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
சத்தீஸ்கார் மாநிலம் சுக்மா பகுதியில் சமீபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நக்சலைட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர்.
இதைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் அவர்களது குடும்பத்தினருக்கு நடிகர் அக்ஷய் குமார் தலா ரூ.9 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார்.
இது அக்ஷய் குமாரின் தேசப்பற்றையும், நாட்டின் மீதான பக்தியையும் பறைசாற்றுவதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மார்பக புற்றுநோய் ஏற்பட்டால், பெண்கள் தர்மச்சங்கடத்துக்கு ஆளாக வேண்டாம் என்று நடிகர் அமிதாப்பசன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
பெண்களை சமீப நாட்களாக மிகவும் அச்சுறுத்தி வரும் வியாதி, மார்பக புற்றுநோய். இதனால், பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செல்போன் செயலி ஒன்றை மும்பையில் தனியார் நிறுவனம் வடிவமைத்தது.
இதனை 74 வயது நடிகர் அமிதாப்பச்சன் தொடங்கி வைத்தார்.
பின்னர், நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:-
சமுதாயத்தில் மார்பக புற்றுநோய் உணர்வுப்பூர்வமான பிரச்சினையாக மாறிவிட்டது. இந்த நோய் ஏற்பட்டால், பெண்கள் தர்மச்சங்கடத்துக்கு ஆளாக கூடாது. பிற வியாதிகளை போல், இதற்கும் சிகிச்சை பெறலாம். நோய் வந்தால் யாரும் சங்கடப்படவோ அல்லது உணர்ச்சிவயப்படவோ கூடாது.

நாம் அனைவரும் மனிதர்கள் தான். எல்லா வகையான வியாதிகளும் நம்மை எளிதில் தாக்க கூடியவை.
பல்வேறு சுகாதார திட்டங்களுக்கு நான் தூதராக செயல்பட்டு வருகிறேன். நோய்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் குறைவான அறிவே இருக்கிறது. நோய்களை பற்றிய தவறான கருத்துகளுடன் அவர்கள் வாழ்கிறார்கள். தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த செயலி, மார்பக புற்றுநோய் குறித்து சாமானிய மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும்.
நோய் பற்றிய அறிவை பெறுவது பெரிய வேலை. வியாதிகளால் பாதிக்கப்படும் நபர்கள், சில சமயங்களில் டாக்டர்களின் ஆலோசனை வேண்டாம் என்று கருதுகின்றனர். அப்படியே டாக்டரை ஆலோசிப்பது என்றாலும், மிகவும் காலதாமதமாகவே செல்கின்றனர். சரியான தருணத்தில் ஆலோசனை பெறுவது நல்ல பயன் அளிக்கும்.
இவ்வாறு அமிதாப்பச்சன் தெரிவித்தார்.

பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் பத்மாவதி படப்பிடிப்பு தளத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சூறையாடினர். இந்த சம்பவத்திற்கு இயக்குனர் ராஜ மவுலி, கரண் ஜோகர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் வரலாற்று படம் ‘பத்மாவதி’. இதில், நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இதையொட்டி, கோலாப்பூர் மாவட்டம் மசாய் பத்தார் பகுதியில் தளம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சம்பவத்தன்று அதிகாலை 1 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள், படப்பிடிப்பு தளத்துக்கு தீ வைத்து சூறையாடினர்.
இதற்கு இயக்குனர் ராஜ மவுலி, தயாரிப்பாளர் கரண் ஜோகர் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி மும்பையில் நேற்று நடைபெற்ற ‘பாகுபலி-2’ டிரெய்லர் வெளியீட்டு விழாவின்போது, கரண் ஜோகர் பேசியதாவது:-

ஒரு இயக்குனராக, மனிதநேயமுள்ளவனாக, நமது மதிப்புமிக்க, அற்புதமான நாட்டின் குடிமகனாக இந்த சம்பவம் என்னை மிகவும் வருத்தம் அடையச் செய்கிறது. என்னுடைய ஆதரவு, சிந்தனை மற்றும் எண்ணம் ஆகியவை சஞ்சய் லீலா பன்சாலியுடன் இருக்கும். இதுபோன்ற ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம், மற்றொரு தயாரிப்பாளருக்கு ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்படும் என நம்புகிறோம்.
இவ்வாறு கரண் ஜோகர் தெரிவித்தார்.
இயக்குனர் ராஜ மவுலி பேசுகையில், “கருத்து சுதந்திரம் என்பது நமது அடிப்படை உரிமை. ஒரு கலைஞனாக தன்னுடைய கனவை வெளிப்படுத்த சஞ்சய் லீலா பன்சாலிக்கு சுதந்திரம் இருக்கிறது” என்றார்.