என் மலர்
`பாகுபலி-2' படத்தின் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக பாகுபலியின் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள `பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், `பாகுபலி-2' படத்தின் டிரைலரை படக்குழு நேற்று ரிலீஸ் செய்தது.
குறிப்பாக `பாகுபலி' முதல் பாகத்தின் முடிவில் பாகுபலியை கட்டப்பா கொல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அதற்கான விடை அதன் அடுத்த பாகத்தில் தான் இருப்பதால் `பாகுபலி-2' மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் `பாகுபலி-2' படத்தில், அதன் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், `பாகுபலி-2' படம் வெளியாவதற்கு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பு பாகுபலியின் முதல் பாகத்தை மீண்டும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக ராஜமவுலி தெரிவித்துள்ளார். அவ்வாறு ரிலீஸ் செய்வதன் மூலம் படத்தின் தொடர்ச்சியை மக்கள் கண்டுகளிக்கலாம் என்று கூறினார். படத்தின் டிரெய்லர் வெளியானதையடுத்து, பிரபாஸ் மற்றும் ராணா படத்தை திரையரங்குகளில் காண ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப குறைபாடு காரணமாக படத்தின் டிரெய்லர் முன்கூட்டியே வெளியானதாக கூறிய ராஜமவுலி, சொன்ன நேரத்திற்கு முன்பே டிரெய்லர் ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் மகிழ்ச்சியே அடைந்துள்ளதாக கூறினார்.
ராணா கூறும் போது, டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

மேலும் பாகுபலியின் முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை வசூலித்ததாகவும் அவர் கூறினார். எனவே பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாக உள்ள `பாகுபலி-2' படம் அதீத வசூலை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

டைரக்டர் கே.பாலசந்தரின் படங்கள் பலவற்றை, பேரறிஞர் அண்ணா பார்த்து பாராட்டியுள்ளார். அவர் மறைவதற்கு முன் பார்த்த படம் "எதிர்நீச்சல்.''

அண்ணா மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் கொண்டவர் பாலசந்தர். சிறு வயதில் இருந்தே, அண்ணாவின் நாடகங்களுக்கும், படங்களுக்கும் அவர் ரசிகர்.
இதுபற்றி பாலசந்தர் எழுதியிருப்பதாவது:-
"அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் மாணவனாக இருந்த சமயம். அப்பொழுது அண்ணாவின் சொற்பொழிவுகளை நான் கேட்டேன். தி.மு.கழகம் கூடத் தோன்றியிராத நேரம் அது. பொதுக்கூட்டங்களிலும், மாணவர் கூட்டங்களிலும் அண்ணாவின் பேச்சைக் கேட்க நேர்ந்தபோதெல்லாம், இவர் நிச்சயம் ஒரு பெரிய தலைவராக வரப்போகிறார் என்று நான் கருதுவேன்.
அதே நேரத்தில் அண்ணா தீட்டிய "வேலைக்காரி'' நாடகமும் மேடையேறி மிகவும் பரபரப்பாக மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்தது. "வேலைக்காரி'' நாடகத்தை நானும் ஆவலுடன் சென்று பார்த்தேன்.
என் உள்ளத்தில் நாடகச் சிந்தனை வளர்வதற்கு இந்த நாடகம்தான் முக்கிய காரணம். அதற்கு முன்னால் நான் நாடகங்களில் சிறிய அளவில் பங்கு கொண்டிருந்தேன். "வேலைக்காரி'' நாடகத்தைப் பார்த்த பிறகு என் முயற்சியில் புது வேகமும், மெருகும் ஏற்பட்டன. "வேலைக்காரி''யில் சீர்திருத்த பாணியில் அமைந்த கதைக்கரு, வசன நடையில் காணப்பட்ட புதுமை. கதையுடன் ஒன்றிக் கலந்த உயரிய நகைச்சுவை ஆகியவை மின்னலைச் சொடுக்கிவிட்ட மாதிரி அமைந்திருந்தன.
அண்ணாவின் அரசியல் எழுச்சியையும், கலையுலக எழுச்சியையும் தள்ளி நின்று ரசித்த பல்லாயிரக்கணக்கான பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
அடுத்து "நல்லதம்பி'' படம் பார்த்தேன். தன் புதுமைக் கருத்துக்களால் சிரிப்போடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்த கலைவாணரும், அண்ணாவும் சேர்ந்து அளித்த அந்தப் படமும் சொல்லப்பட்ட கருத்தும் என்னைப் பிரமிக்க வைத்தன.
அதில் ஒரு காட்சி வருகிறது. தாயையும், மகளையும் காண ஒருவர் அவர்களது குடிசைக்கு வருகிறார். ஆனாலும், இருவரையும் சேர்ந்தாற்போல் காண முடிவதில்லை, அவரால். ஒருவர் வீட்டிற்குள் போனபின்தான் ஒருவர் வரமுடியும் என்ற நிலை. அதற்குக் காரணம், அவர்கள் இருவருக்கும் சேர்த்து ஒரே சேலைதான் வீட்டிலிருந்தது!
இதற்குமேல் வறுமையின் கொடுமையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்ட யாராலும் முடியாது. இந்தக் காட்சியை இவ்விதம் படமெடுத்த டைரக்டர்கள் கிருஷ்ணன், பஞ்சுவானாலும் இக்காட்சியை அமைத்த கலைவாணராக இருந்தாலும், வசனம் தீட்டிய அண்ணாவாக இருந்தாலும், பார்ப்பவர்களின் நெஞ்சங்களில் பசுமரத்தாணி பதிந்தது போல் "நல்லதம்பி'' படத்தில் வந்த இக்காட்சி என் மனதில் பதிந்து விட்டது. பின்னர் படத்துறைக்கு வந்த எனக்கு, இந்த "நல்லதம்பி'' படக்காட்சியே முன்னோடியாக இருந்தது.
1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி பாரத நாடு, சுதந்திரத் திருநாடாக ஆகியது. அந்த ஆகஸ்டு 15-ம் நாளை, சுதந்திரத் திருநாளாகக் கொண்டாட வேண்டாம் என்று பெரியார் ஈ.வெ.ரா. கருத்து தெரிவித்தார்.
ஆனால், முற்போக்கு கருத்துக்களைக் கொண்ட அண்ணாவோ "நாடு விடுதலையடையும் நாளைக் கொண்டாடத்தான் வேண்டும்'' என்று பெரியாருக்கு எதிரான கருத்தைப் பிரகடனப்படுத்திப் பேசினார்; எழுதினார்.
அந்த ஒரு நிகழ்ச்சியால் அதுவரை மாநிலத் தலைவராக மட்டுமே இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் மதிப்பு தேசிய அளவில் வளர்ந்து விட்டது. அவர் மீது என் தனிப்பட்ட மதிப்பும் மேலும் உயர்ந்தது.
சென்னையில் அண்ணா அவர்களை சந்திக்கும் வாய்ப்பை எங்கள் நாடகக் குழுவின் மூலம் பெற்றேன். என்னுடைய நாடகமான மேஜர் சந்திரகாந்தை அண்ணா பார்த்தார். அதன் விழா ஒன்றிற்குத் தலைமை தாங்கி என் நாடகத்தைப் பாராட்டிப் பேசிய அந்நாள் என் வாழ்வில் ஒரு பொன்னாள். தொடர்ந்து என் நாடகங்கள் அனைத்திற்கும் அண்ணாவை அழைத்திருந்தேன். ஆரம்பம் முதல் இறுதி வரை அமர்ந்து பார்த்திருக்கிறார்கள்.
என்னுடைய நாடகங்களை ஐம்பதாவது, எழுபத்தைந்தாவது, நூறாவது நாடகம் வரை நடந்து சபாக்களில் அவை விழாக்களாக நடக்கும் பொழுதெல்லாம் அண்ணா தலைமை தாங்குவதை ஆவலோடு எதிர் நோக்குவேன். நாடக ஆசிரியரான என்னை மட்டுமல்ல, நாடகத்தில் பங்கு பெறும் கலைஞர்களையும், அவர்கள் ஏற்று நடிக்கும் கேரக்டர், நடிப்பு இவற்றையெல்லாம் விமர்சித்து, பாராட்டிப் பேசுவார். ஒப்புக்குத் தலைமை தாங்காமல் நாடகங்களை முழுவதும் ரசித்துப் பார்த்து அதைப் பாராட்டிப் பேசும் விதம், விமர்சிக்கும் விதம் அண்ணாவின் தனிச்சிறப்பாகும். நேற்றுதான் நடந்தது போல இவை எல்லாம் என் மனக்கண்ணில் அழகிய காட்சிகளாகத் தெரிகின்றன.
இன்னொரு மகத்தான நிகழ்ச்சி. "தாமரை நெஞ்சம்'' படத்தை இயக்கி முடித்துவிட்டேன். அவருக்கும் திரையிட்டுக் காண்பிக்க விரும்பினேன். என் நண்பரான இராம.அரங்கண்ணலுடன் அண்ணா வீட்டிற்குச் சென்றேன். படம் பார்க்க அழைத்தோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
"தாமரை நெஞ்சம்'' படத்தை அவருக்காக விசேடமாக கலைவாணர் அரங்கில் திரையிட்டுக் காண்பித்தோம். படத்தைப் பார்த்துவிட்டு அண்ணா தரப்போகும் தீர்ப்புக்காகக் காத்திருந்தேன். தனக்கே உரித்தான புன்முறுவலுடன் ஒரே ஒரு வாக்கியத்தைக் கூறிவிட்டு அண்ணா காரில் ஏறிப் போய்விட்டார்.
அவர்கள் சொன்ன அந்த ஒரு வாக்கியம். "ஒரு காவியத்தைப் பார்த்த திருப்தி இன்று எனக்கிருக்கிறது.''
அந்த ஒரு பாராட்டு என்னை எங்கேயோ சிறகடித்துப் பறக்க வைத்துவிட்டது. பூரித்துப் போனேன். அவருக்குத்தான் எத்தனை பெரிய பரந்த உள்ளம்!
"எதிர்நீச்சல்'' படம் தயாராகி விட்டது. கால வெள்ளத்தில் எதிர்நீச்சல் அடித்து பல வெற்றிப் படிகளைத் தாண்டியவரான அந்தப் பேரறிஞரை எதிர்நீச்சல் படத்தைக் காணச்செய்யவும் பேரவாக் கொண்டோம். அப்பொழுது அவர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். தவிர, அமெரிக்கா சென்று புற்று நோய்க்காக சிகிச்சை செய்து கொண்டு தாயகம் திரும்பியிருந்த நேரம். நண்பர் அரங்கண்ணலுடன் சென்று நுங்கம்பாக்கம் அவென்ï ரோடிலுள்ள இல்லத்தில் அண்ணாவை சந்தித்தோம்.
அவரிடம், "நீங்கள் எதிர்நீச்சல் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்று பணிவுடன் கேட்டுக்கொண்டேன். பைல்களைப் புரட்டிக்கொண்டே, "ம்... பார்த்துடுவோமே'' என்று பதில் அளித்தார்.
சற்று தயங்கியபடியே, "இன்றுள்ள உடல் நிலையில் உங்களால் படம் பார்க்க வர இயலுமா?'' என்று என் சந்தேகத்தை மெல்லக் கேட்டேன். "நிச்சயமாக வருகிறேன்!'' என்றார் அண்ணா.
கற்பகம் ஸ்டூடியோவில் படத்தைத் திரையிட உடனே ஏற்பாடு செய்யப்பட்டது. அன்று பொங்கல் திருநாள். கலைவாணர் என்.எஸ்.கே. சிலையை வாணி மகால் அருகே திறந்து வைத்த அன்றே "எதிர்நீச்சல்'' படத்தைப் பார்க்கவும் வந்திருந்தார்.
கலைவாணர் சிலை திறப்பு விழாதான் அண்ணா சென்னையில் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி. அவர் பார்த்த கடைசித் தமிழ்ப்படம் எதிர்நீச்சல்.
அண்ணா இன்று நம்மிடையே இல்லை. ஆனால் இப்போதும் நான் ஒவ்வொரு புதுப்படத்தை எடுத்து முடிக்கும் பொழுதும், `இப்படத்தைப் பார்த்து அபிப்ராயம் சொல்ல அண்ணா இல்லையே' என்ற ஏக்கம் என் நெஞ்சைப் பெரும் சுமையாக அழுத்துவதுண்டு. என் கலையுலக வாழ்க்கையில் நான் மறக்க முடியாத அளவுக்கு அப்படியொரு தனியிடத்தைப் பிடித்திருந்தவர், அவர்.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

பாகுபலி 2 படம் முதன்முறையாக ஐமேக்ஸ் என்ற பிரம்மாண்ட வீடியோ வடிவில் வெளிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
‘பாகுபலி’ முதல்பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தின் டிரைலர் இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த டிரைலர் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இப்படத்தின் வியாபாரம் ரிலீசுக்கு முன்பே ரூ.500 கோடியை எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை இந்தியா முழுக்க ஸ்டார் குழுமம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், எவ்வளவு தொகைக்கு வாங்கியுள்ளது என்பதை குறிப்பிடவில்லை.

இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ‘ஐமேக்ஸ்’ எனப்படும் பிரம்மாண்டமான வீடியோ வடிவில் வெளியாகவிருக்கிறது. ஏற்கெனவே இந்திய படங்களில் ‘தூம் 3’, ‘பாங்க் பாங்க்’ ஆகிய இந்தி படங்கள்தான் ‘ஐமேக்ஸ்’ வீடியோ வடிவில் வெளியாகியிருக்கிறது. தென்னிந்திய மொழிகளில் உருவாகும் ஒரு படம் ஐமேக்ஸ் வீடியோ வடிவில் வெளிவருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் நடிகையான கே.ஆர்.இந்திரா இன்று சென்னையில் காலமானார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெய கீதாவின் தாயாரும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கே.ஆர்.இந்திரா இன்று காலமானார். அவருக்கு வயது 65. இவர் ‘கொஞ்சும் குமாரி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே படத்தில் தான் பழம்பெரும் நடிகையான மனோரமாவும் அறிமுகமானார்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தில் நடிகர் நம்பியாருக்கு ஜோடியாக நடித்தார். ‘ஹலோ Mr.ஜமீன்தார்’ படத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு ஜோடியாக நடித்த அனுராதா, ‘கந்தன் கருணை’, ‘சிந்து பைரவி’ ரஜினிகாந்த் நடித்த ‘மன்னன்’, ‘பணக்காரன்’ உள்ளிட்ட 250-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடித்த கடைசி படம் ‘கிரிவலம்’. இப்படத்தில் இவர் நடிகர் ரிச்சர்டின் பாட்டியாக நடித்துள்ளார். இவருடைய தந்தை கே.எஸ்.ராமசாமி. பிரபல கர்நாடக பாடகர் மற்றும் நாடக நடிகர். நடிகர் சங்க உறுப்பினரான கே.ஆர். இந்திரா அவர்களின் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பாக நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா, ஹேமச்சந்திரன் ஆகியோர் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கே.ஆர்.இந்திராவின் இறுதிச்சடங்கு நாளை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தியாவிலேயே ஏ.ஆர்.ரகுமான் புதுமையான ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது.
இசையில் புதுமை வெளிகொண்டு வருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரகுமான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைப்படமாக. ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி 'தி இஸ் இட்' என்ற பெயரில் இசைத்திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அமெரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
YM மூவிஸுடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள 'ஒன் ஹார்ட்' இசைத் திரைப்படம் பிப்ரவரி 5-ம் நாள் கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. 'ஒன் ஹார்ட்' இசை படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தியதாகவும், மிகவும் ரசித்து பார்த்ததாகவும் கூறினர்.

'ஒன் ஹார்ட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைத் திரைப்படத்தில் அமெரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹமான் தலைமையிலான இசை சுற்றுபயணம், இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்யேக பேட்டிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
திரையுலகில் தனது 25ம் ஆண்டில் அடியேடுத்து வைப்பதின் நினைவாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். வெகுநாட்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை துறையை சார்ந்தவர்களுக்கு உதவிட ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கனவு இருந்தது.
‘ஒன் ஹார்ட் முயுசிஷியன்ஸ் பவுண்டேஷன்’ எனும் தன்னார்வ அமைப்பு இசைத்துறை சேர்ந்தவர்களுக்கு உதவி புரிய தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் ஏ.ஆர்.ரகுமான் ‘ஒன் ஹார்ட்’ படம் முலம் கிடைக்கும் அனைத்து வருவாயையும் இசைத்துறையினருக்கு ‘ஒன் ஹார்ட் முயுசிக் பவுண்டேஷன்’ நிறுவனத்தின் நலத்திட்ட உதவிகள் புரிய அன்பளிப்பாக அளிக்கின்றார்.
ஜீமா (GIMA - GLOBAL INDIAN MUSIC ACADEMY AWARDS) நிறுவனம் ஒன் ஹார்ட் முயுசிஷியன்ஸ் பவுண்டேஷனை நிர்வாகித்து நலத்திட்ட உதவிகளை முன்னின்று இயக்கவுள்ளது. இதன் மூலம் தனது நீண்ட கால கனவை ஏ.ஆர்.ரகுமான் நிறைவேற்றவுள்ளார். உலகெங்கும் ஏப்ரல் மாதம் ‘ஒன் ஹார்ட்’ இசைத்திரைப்படம் வெளியாகின்றது.

வங்கிகளில் பணபரிவர்த்தனைகளுக்கு இருக்கும் குளறுபடியை தவிர்க்க நடிகர் ஆரி புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
வங்கிக் கிளைகளில் ஒரு மாதத்தில் 4 இலவச ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, ஒவ்வொரு டெபாசிட்டுக்கும், திரும்ப எடுக்கும் தொகைக்கும் ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று சில தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. மேலும், அரசு வங்கிகளிலும் குறிப்பிட்ட தொகையை இருப்பாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றும், அந்த இருப்பு தொகை குறைந்துவிட்டால், குறிப்பிட்ட தொகை அபாரதாமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் இந்த குளறுபடிகளினால் சாமான்ய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வாக நடிகர் ஆரி மாற்றுவழியை மக்களிடத்தில் பரப்பி வருகிறார். வங்கிகளுக்கு பதிலாக அஞ்சலகங்களில் அனைத்துவகை பயன்பாடுகளும் கொண்ட கணக்கை துவக்கும் மாற்று வழியை மக்களிடையே வலியுறுத்தியிருக்கிறார். வலியுறுத்தியது மட்டுமில்லாமல் அஞ்சலகத்தில் தனது பெயரில் கணக்கு ஒன்றையும் துவக்கியுள்ளார்.

இதன்மூலம், ரூ.1000-க்கு மேல் வங்கிகளில் கையிருப்பு வைத்திருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் நிலையில், அஞ்சலங்களில் ரூ.100 கொடுத்து, நமது பெயரில் கணக்கு ஒன்றை தொடங்கிவிடலாம். கையிருப்பு ரூ.50 இருந்தாலே போதுமானது. வங்கியில் என்னென்ன சேவைகள் இருக்கிறதோ? அது அத்தனையும் அஞ்சலக சேவைகளிலும் வருகிறது.
வங்கிகளைப் போலவே பாஸ்புக், ஏடிஎம் கார்டும் கொடுத்துவிடுகிறார்கள். இந்த ஏடிஎம்-ஐ வைத்து அனைத்து வங்களின் ஏடிஎம்-களிலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளாலாம். இதற்காக எந்த கட்டணமும் கிடையாது.

இதுகுறித்து ஆரி கூறும்போது, அஞ்சலகங்களில் 50 ரூபாய் கையிருப்பில் அனைத்து வகை பயன்பாடுகளும் கொண்ட கணக்கை துவக்கும் மாற்று வழியை மக்களிடத்தில் பரப்புவதில் ஒரு தமிழனாய் இந்த விழிப்புணர்வு புரட்சியை மாணவச் சகோதர சகோதரிகளுடன் இணைந்து ஆரம்பித்ததில் நான் பெருமை கொள்கிறேன்.
இந்தச் செய்தியை விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவோம். நாம் மாறினால் மாற்றங்கள் உருவாகும். மக்களிடமும் மாற்றத்தை உருவாக்குவோம். தமிழனாய் நான் உருவாக்கிய இந்த மாற்றம் இந்தியா முழுவதும் உருவாக வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.
இதற்கு ஒத்துழைப்பு தந்த மாணவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கும், அனைத்து தொலைக்காட்சிளுக்கும், இணையதள நண்பர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நயன்தாரா இடத்தில் தமன்னா இருப்பதாகவும், அவருக்கு வில்லனாக பிரபுதேவா இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
நயன்தாராவும், பிரபுதேவாவும் காதலர்களாகி திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்துபோனார்கள். இந்நிலையில், தற்போது சினிமாவில் பிசியான நடிகையாகிவிட்ட நயன்தாரா தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
அப்படி நயன்தாரா நடித்து வருடம் படங்களில் ஒன்றுதான் ‘கொலையுதிர்காலம்’. இப்படத்தை ‘பில்லா-2’, ‘உன்னைப்போல் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இப்படத்தை இந்தியிலும் ரீமேக் செய்யவிருக்கின்றனர்.

இந்தி ரீமேக்கை சக்ரி டோலட்டியே இயக்கவிருக்கிறார். ஆனால், தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அப்படத்தின் வில்லனாக பிரபுதேவா நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது. பிரபுதேவா சமீபகாலமாக இயக்கும் பணியை விட்டுவிட்டு நடிகர், தயாரிப்பாள் என களறமிங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிற ‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ராணா டகுபதி ஆகியோர் நடிப்பில் ரொம்பவும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் பாகுபலி-2 படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை பூர்த்தி செய்திருக்கிறதா? என்பதை பார்ப்போம்.
டிரைலரின் தொடக்கத்திலேயே பாகுபலி மக்கள் மத்தியில் கிரீடத்தின் மீது தனது ரத்தத்தால் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளும்படியான காட்சி அமைந்திருக்கிறது. அந்த காட்சியைத் தொடர்ந்து ரத்தம் படிந்த ஒரு பெண்ணின் கை, ரம்யாகிருஷ்ணனின் காலை தொடுவது, ரத்தம் படிந்த கத்தி படியின் மீது ஏற்றிச் செல்வது என்று இரண்டாம் பாகத்தில் நிறைய ரத்தமும், போரும் இருப்பதை உணர்த்துகிறது.

அனுஷ்காவின் வாள் வீச்சை இந்த டிரைலரில் அழகாக காட்டியிருக்கிறார்கள். இதற்கு முன் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த ‘ருத்ரமாதேவி’ படத்தில் அவருடைய வாள் வீச்சு ரொம்பவும் செயற்கையாக இருந்தது என்ற பெயர் இருந்தது. ஆனால், இந்த படத்தில் வாள் வீச்சுக்கு ரொம்பவும் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.

ஒரு கை செயலிழந்தவராக வந்த நாசர், ஒரு தூணை தூளாக்கும் காட்சிகள் எல்லாம், அவருக்குள்ளும் ஒரு வீரன் ஒளிந்திருக்கிறான் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ரம்யா கிருஷ்ணன் குழந்தையை தனது தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு பாகுபலி என்று உரக்க கூறும் காட்சி உண்மையிலேயே நமக்குள்ளும் ஒரு வெறியை தூண்டி விடுகிறது.

அரண்மனை காட்சிகள், போர்க் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாய் இருக்கின்றன. முந்தைய பாகத்தைவிட இந்த பாகம் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருப்பதுபோலவே டிரைலரில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், ஒருசில காட்சிகளால் படத்தில் தொய்வு இருக்கும் என்று நினைக்கும்படியும் சில காட்சிகளை காட்டியிருக்கிறார்கள்.

முதல்பாதியில், தமன்னாவுடன், பிரபாஸ் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்தன. இந்த பாகத்தில் அனுஷ்காவுடன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள்தான் படத்தின் விறுவிறுப்புக்கு தடைபோடுமோ? என்ற அச்சம் இருக்கிறது. அனுஷ்கா அரசியாக மட்டும் இல்லாமல், போர் வீராங்கனை போலவும் இந்த டிரைலரில் காட்டியிருக்கிறார்கள்.
இந்த டிரைலரில் குறைசொல்ல வேண்டியது பின்னணி இசைதான். சாதாரண ஒரு கமர்ஷியல் படத்துக்கு போடப்படும் பின்னணி இசையைப்போல் கொடுத்து, ரசிக்க வேண்டிய விஷயங்களை ரசிக்கவிடாமல் செய்துவிடுகிறது. அதேபோல், நிறைய காட்சிகள் இதுவெல்லாம் கிராபிக்ஸ்தான் என்பதை அப்பட்டமாக சுட்டிக்காட்டியிருக்கிறது. குறிப்பாக, யானை சிலைக்கு கீழே ஓடும் ஆற்றில் ஒரு படகு நிற்பதுபோன்ற காட்சிகளில் எல்லாம் கிராபிக்ஸ் அழகாக தெரிகிறது.

அதேபோல், போரின்போது, பிரபாஸ் பிரமாண்ட போர் கருவியின் மேல் நடந்துவந்து சண்டை போடும் காட்சிகள் எல்லாம் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. முந்தைய பாகத்தில் பலமே அதில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தும், அது தெரியாமல் ரொம்பவும் நேர்த்தியாக, தத்ரூமாக அமைத்திருந்ததுதான். ஆனால், இரண்டாம் பாகத்தில் அதில் எல்லாம் குறைகள் இருக்குமோ? என்ற அச்சம் நிலவியிருக்கிறது.

மகாபாரதம் பற்றி இழிவான தகவல்களை நடிகர் கமல்ஹாசன் பரப்பி வருவதாக இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில செயலாளர் வீரமாணிக்கம் சிவா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் கருத்து என்ற போர்வையில் ஊடகங்களின் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தமிழக மக்கள் பற்றியும், குறிப்பாக இந்துகள் பற்றியும் அவதூறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

இந்துகள் தெய்வ நூலாக போற்றி வணங்கி வரும் மகாபாரதம் பற்றி இழிவான தகவல்களை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். அவரது கருத்து தேசிய ஒருமைப்பாட்டுக்கும், இந்திய இறையாண்மைக்கும் எதிரானதாக உள்ளது. அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

சினிமா துறையை காப்பாற்றவே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று நடிகர் விஷால் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடர்பாக ஆதரவு திரட்டுவதற்காக நடிகர் விஷால் கோவை வந்தார். அவருடன் இயக்குனர்கள் மிஷ்கின், எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் உதயா, நந்தா ஆகியோரும் வந்திருந்தனர்.
பின்னர், நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-
சினிமா துறையை காப்பாற்றவே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக எதுவுமே நடக்கவில்லை. பட தயாரிப்பு தொழிலில் நடிகர்கள், இயக்குனர்களும் உள்ளனர். சில பட தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் வெளியிட முடியவில்லை. சில படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது இல்லை. பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகளின் பட்டியலை விஷால் வெளியிட்ட போது எடுத்த படம்.
இதில் நிறையபேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது உள்ளது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற 100 சதவீத வாய்ப்புகள் எங்களது அணிக்கு உள்ளது.
தயாரிப்பாளர் சங்க தேர்தல் சம்பந்தமாக நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவை கேட்க உள்ளோம். தமிழக அரசியல் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான துணிச்சலான கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் கூறி வருவது பாராட்டுதலுக்குரியது.
இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.
பின்னர், நடிகர் விஷாலும் மற்றவர்களும் தங்களது அணி சார்பில் போட்டியிடும் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டனர்.

தனித்தன்மை, வித்தியாசமான கதை களத்துடன் வரும் தரமான படங்களை ரசிகர்கள் வரவேற்கிறார்கள் என்று பட விழாவில் நடிகர் சூர்யா பேசினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
விஜய் மில்டன் இயக்கத்தில் பரத், ராஜகுமாரன், சுபிக்ஷா, ராதிகா பிரஷித்தா ஆகியோர் நடித்துள்ள படம் கடுகு. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு பேசியதாவது:-
“சென்னையில் புது வீடு கட்டி இருக்கிறேன். அதில் நான், அப்பா, அம்மா, கார்த்தி உள்பட குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வசிக்க இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அனைத்தும் சினிமா கொடுத்தது.
இங்கு இருக்கிற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் சினிமாவால்தான் வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. எல்லாம் கொடுத்த சினிமாவுக்கு திருப்பி செய்ய வேண்டும் என்பதற்காகவும், நான் நடிக்காத நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொண்டு செல்வதற்காகவும் 2டி பட நிறுவனத்தை தொடங்கினேன்.

முதலில் படம் எடுப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்து, பசங்க-2, 36 வயதினிலே, 24 ஆகிய படங்களை தயாரித்தோம். எப்போதுமே சிறு பட்ஜெட் படங்களில்தான் நல்ல விஷயங்கள் இருக்கும். நானும் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து உயர்ந்து இருந்தாலும் மீண்டும் அதற்குள் செல்ல முடியாது. ஆனாலும் என் பட நிறுவனம் மூலம் நல்ல கதையம்சம் உள்ள படங்களை திரைக்கு கொண்டு வர அவர்களுடன் கைகோர்த்து இருக்கிறேன்.
கடுகு படம் பார்த்தேன். பிடித்து இருந்தது. நல்ல படம். எனவே அதை வாங்கி வெளியிட முடிவு செய்தேன். தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையே பாலமாக இருக்க விரும்புகிறேன். இந்த படம் ஒரு புது முயற்சி. நடிகர்-நடிகைகள் அனைவரும் புதிய பரிமாணத்தில் தெரிவார்கள். கதாபாத்திரத்தை முன்வைத்து கதை சொல்வது எனக்கு பிடிக்கும். அதில் ஈர்ப்பும் வரும். அப்படித்தான் நந்தா படத்தில் நடித்தேன்.
தனித்தன்மையுடன் வித்தியாசமான கதையம்சத்தில் வரும் படங்களை ரசிகர்கள் வரவேற்கிறார்கள். சிறிய படம். பெரிய படம் என்று பார்க்காமல் எழுந்து நின்று கைதட்டுவார்கள். அந்த வகையில் கடுகு படத்தையும் வரவேற்பார்கள். உங்களுக்கு உங்களை பிடித்தால்தான் மற்றவர்களுக்கும் பிடிக்கும். அதுதான் கடுகு படத்தின் கதை”.
இவ்வாறு சூர்யா பேசினார்.

கோலாப்பூரில் நடிகை தீபிகா படுகோனே நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளம் தீ வைத்து சூறையாடப்பட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே, நடிகர்கள் ரன்வீர் சிங், ஷாகித் கபூர், விவேக் ஓபராய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் ஒரு இந்திப்படம் எடுக்கப்படுகிறது. இது ஒரு வரலாற்றுப்படம். இதில் நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடிக்கிறார்.
இந்த படத்துக்காக கோலாப்பூர் மாவட்டம் மசாய் பத்தார் என்ற இடத்தில் தளம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணிக்கு அந்த படப்பிடிப்பு தளத்திற்குள், அடையாளம் தெரியாத 15 முதல் 20 பேர் நுழைந்து சூறையாடினர். அத்துடன் நடிகர், நடிகைகளின் உடைகளையும், குதிரைகளுக்கு வைக்கப்பட்டிருந்த தீவனத்தையும் தீயிட்டுக்கொளுத்தினர்.

கோலாப்பூரில் படப்பிடிப்பு தளம் தீவைத்து சூறையாடப்பட்டு கிடப்பதை படத்தில் காணலாம்.
அவர்களில் 2 பேரை படப்பிடிப்பு குழுவினர் பிடித்தனர். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், படப்பிடிப்பு குழுவினரை தாக்கி அவர்களை தப்ப வைத்தனர். படப்பிடிப்பு குழுவினரின் வாகனங்களுக்கும் அந்த கும்பல் தீ வைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தை தொடர்ந்து அந்த கும்பலினர் தப்பிவிட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த கோலாப்பூர் சரக ஐ.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்து பேசினர்.

இதனிடையே, சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய மந்திரி தீபக் கேசர்கர், “இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்குமாறு திரைப்பட தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறோம். போலீசார் வழக்குப்பதிவு செய்ததும், இந்த சம்பவம் குறித்து உள்துறை விசாரணைக்கு உத்தரவிடும்” என்றார்.